தமிழ்க் கூறும் பக்தி நெறி
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன், மதுரை.
தமிழில் பக்தி நெறி விளைந்த காரணம்
தன்னலமில்லா மனிதச் சேவை பயணம்
எல்லோருக்கும் நல்வாழ்வு தரும் மனம்
எக்காலமும் அன்பு செலுத்தும் எண்ணம்
தொன்று தொட்டு உருவான பல மதங்கள்
தமிழ்நூலில் கிடைத்துள்ள பல பக்தி நெறிகள்
தன்னை மீறிய சக்தியே கடவுளின் அவதாரங்கள்
தர்மத்தை நிலைநாட்டுவதே அதன் நோக்கங்கள்
தன்னிகரில்லாக் கடவுளைக் காண பலவழி
தனியாய்த் தவமிருந்து உணர்வது தனிவழி
தெளிவான மனமுடன் நினைப்பது நல்வழி .
தெய்வத்தைக் கோவிலில் வணங்குவதும் ஒருவழி
அன்பைப் போதிக்கும் புத்தனை வழிபடும் பெளத்தம்
அறம் காட்டும் மகாவீரரைத் தொழும் சைனம்
இலிங்கமே வடிவான சிவனைத் துதிக்கும் சைவம்
அதர்மம் அழிக்கும் அரங்கனை வணங்கும் வைணவம்
ஆசை துறந்தால் ஆன்மிகம் வளரும்
ஆன்மிகம் வளர்ந்தால் பக்தி நெறி பெருகும்.
பக்தி நெறி பெருகினால் பாவங்கள் போகும்
பாவங்கள் போனால் கடவுளை அடையலாம்
இறைவனிடம் நெறியுடன் செலுத்தும் பக்தி
ஈடில்லா இன்பம் பெறும் உத்தி
இம்மையில் துயர் துடைக்கும் சக்தி
மறுமையில் மோட்சம் கிடைக்கும் உறுதி
நன்றி..... வணக்கம்....
No comments:
Post a Comment