Pages

Wednesday 18 September 2024

25.8.2024 கவியரங்கம் 25 - ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஒன்றாக வேண்டும் - பைந்தமிழில் பத்தும் பதினெட்டும்-பைஞ்சுனைப் பூக்கள்

 



25.8.2024


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"ஒன்றிய அரசு மொழிகளில்  தமிழும் ஒன்றாக வேண்டும்" என்ற தலைப்பில் கவியரங்கம் .

தலைமை தலைவர் பேராசிரியர் சக்திவேல், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் "ஒன்றிய அரசு மொழிகளில்  தமிழும் ஒன்றாக வேண்டும்" என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  கவியரங்கம் நடந்தது,

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் கவிஞர் இரா.இரவி  வரவேற்றார். பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  கவியரங்கம் நடந்தது, பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலர் கங்காதரன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர் .
 
முனைவர் இரா .வரதராசன்- எழுதிய  "பைந்தமிழில் பத்தும் பதினெட்டும்" கவிதை நூலும், கவிஞர் பறம்பு நடராசன் அவர்களின் முதல் கவிதை நூலான 'பைஞ்சுனைப்  பூக்கள்'  நூலும் வெளியிடப்பட்டன. நூல்களின் மதிப்புரையை பேராசிரியர் சக்திவேல் வழங்கினார் .
.
கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம்,  இரா .இரவி , கு .கி .கங்காதரன், குறளடியான் , புலவர் மகா .முருகு பாரதி,  ச. லிங்கம்மாள், ஆசிரியை போ .சத்யா, அஷ்வந்திகா, இதயத்துல்லா ( இளையாங்குடி ), அழகையா, புலவர் ஆறுமுகம் , அஞ்சூரியா க .செயராமன், முன்னாள் இராணுவ வீரர்  சமயக்கண்ணு, , பா.பழனி,  முனியாண்டி,  பறம்பு நடராசன் , வீரபாகு, புகைப்படக்கலை ஆசிரியர் சுந்தர கிருஷ்ணன்   ஆகியோர் கவிதை பாடினார்கள் .

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் முனியாண்டி , பறம்பு நடராசன் ,  கவிதாயினி அஷ்வந்திகாஆகியோர் விருது பெற்றனர்.

தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யாவின் மாணவர் ஆசிரியர் தமிழறிஞர் வழங்கிய திருக்குறள் நூல் கவிதை பாடிய அனைத்துக் கவிஞர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கினர்.

பார்வையாளர்களாக பேராசிரியர் அதி வீர பாண்டியன், மோகனக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

துணைத்தலைவர் முனைவர் வரதராஜன்  நன்றி கூறினார்.  

படங்கள் இனியநண்பர் மதுரை உலா  ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்










ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும்

-    கவிஞர் இரா. இரவி


***

தமிழை மேடைகளில் புகழ்ந்து வருகிறீர்கள்
தமிழுக்கு உரிய அங்கீகாரம் தர மறுக்கிறீர்கள்

தமிழுக்கு நிதி ஒதுக்கீடு அதிகம் தாருங்கள்
தமிழ் இருக்கைகள் அயல்நாடுகளில் தொடங்குங்கள்

திருக்குறளை வானளாவ புகழ்ந்து தள்ளுகிறீர்கள்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மறுக்கிறீர்கள்

உலகப்பொதுமறையான ஒப்பற்ற திருக்குறளை
தேசிய நூலாக அறிவிக்க தயக்கம் காட்டுவதேன்


உலகின் முதல்மொழி தமிழே என்றே
உலகமே வழிமொழிந்து வருவதை அறியுங்கள்

கீழடியின் பெருமை உணர்த்துவது தமிழின் பெருமை
கீழடியில் எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன்


பன்மொழி அறிஞர் தேவநேயப் பாவாணர்
பைந்தமிழே உலகின் முதன்மொழி என்றார்

தமிழின் பெருமை சும்மா பேசிப் பயனில்லை
தமிழுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்

இந்தி மொழிக்கு பெரிய வரலாறு இல்லை
இந்தியை பெருமளவில் பயன்படுத்தி வருகிறீர்கள்

தமிழ்மொழியை இந்தியா முழுவதும் படிக்கட்டும்
தமிழின் அருமை பெருமை அறியட்டும் மக்கள்

ஒன்றிய அரசு மொழியாக தமிழை அறிவியுங்கள்
ஒன்றியம் முழுவதும் தமிழைப் படிப்பார்கள்

அனைத்து தகுதிகளும் உள்ள தமிழ்மொழியை
அரசு மொழியாக உடன் அறிவிக்க வேண்டுகிறோம்.

                                        ****************


















                      ஒன்றிய அரசு மொழிகளில்
                           தமிழும் ஆக வேண்டும்   
                                     புதுக்கவிதை 
                                   கு.கி.கங்காதரன் 

பூவின் இதழ்களாய் இணைந்த மாநிலங்கள் 
பூவாய் மலர்ந்த ஒன்றிணைந்த பாரதம் 
அழகாய்ப் பேசிடும் முத்தான மொழிகளில் 
இனிமையாய் ஒலிப்பது நமது செந்தமிழே 

அந்நிய மொழிகளுக்கு ஒதுங்கி வழிவிட்டதால் 
ஓரம் கட்டப்பட்டு நிற்கின்றது அமுதத்தமிழ் 
செம்மொழிகளுள் சிறப்பான  அருந்தமிழை விட்டு 
செம்மறி ஆடுகளாய் பிறமொழிகளை நாடலாமா?

சொந்த ஊரிலும் பெருமை மங்குகிறது 
செல்லும் இடங்களிலும் செம்மை குறைகிறது 
மார்தட்டித் தொன்மை பேசும் தமிழர்கள்
மானத்தோடு வீறுகொண்டு எழுவது எப்போது? 

மங்கலமாய் விளங்கும் நம் அழகுதமிழுக்கு 
மங்களம் பாடுவது எங்ஙனம் அறிவுடைமை 
ஒன்றிய அரசு மொழிகளுக்கு மண்டியிடுவது 
அன்னைத் தமிழை மாய்ப்பது சமமல்லவா?

மொழிகளுள் தலையாய்த் தமிழ் இருக்க 
மற்ற வால் மொழிகள் ஆடலாமா 
தமிழ் தலைநிமிர்ந்து வலம் வர 
ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் 
                              ************



































































































**********************************************


No comments:

Post a Comment