Pages

Showing posts with label இது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்) THIS IS OUR POLITICS (ONLY FOR JOKES). Show all posts
Showing posts with label இது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்) THIS IS OUR POLITICS (ONLY FOR JOKES). Show all posts

Saturday, 29 March 2014

இது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்) THIS IS OUR POLITICS (ONLY FOR JOKES)

இது தாங்க நம்ம அரசியல்! (சிரிக்க மட்டும்)

THIS IS OUR POLITICS ! (ONLY FOR JOKES)

MADURAI GANGADHARAN 

"அந்த ஒலி பெருக்கி அமைப்பாளர்கிட்டே அப்படி என்ன விசேசம் இருக்கு?"

"கூட்டத்திற்கு ஆட்கள் யாருமே வராவிட்டாலும் பரவாயில்லை. அப்பப்போ பின்னணியிலே மக்களோட கைதட்டலும் , விசில் சப்தமும் வர்றமாதிரி செஞ்சு கொடுப்பார் "

*********************************************************************************************************************

"தலைவரே ! நம்ம கட்சி ஆட்சிக்கு வரணும்னா விளம்பரம் கொடுத்தாத் தான் நடக்கும்"

"அப்படி என்ன விளம்பரம் ?"

"பிரபல கட்சியில் சேர்ந்து போட்டியிட கோடீஸ்வரர்களும், நடிகைகளும் உடனடி தேவை"

"???????????"

*********************************************************************************************************************  
 " என்னப்பா, பார்த்து ரொம்ப நாளாச்சு ! என்ன தொழில் செய்றீங்க? 

"கட்சி கூட்டத்திற்கு ஆட்கள் சேர்கிற ஒப்பந்தக்காரராக இருக்கிறேன். என்கிட்டே ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒரு லட்சம் பேர்கள் உறுப்பினராக இருக்காங்க. அப்பப்போ கிடைச்சாலும் ரொம்ப நல்லாவே கிடைக்குது"

"அப்படியா ! நல்லா செஞ்சு முன்னேறுங்க"

******************************************************************************************************************

"என்னப்பா, செய்தித்தாளைப் படிச்சுட்டு ரொம்ப சோகமா இருக்கிறே ?"

" பின்னே என்னங்க ! ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலே லஞ்சம் வாங்க முடியாம பண்ணீட்டாங்க ! அதுக்கு மேலே பணம் வாங்கினா எங்கிருந்து , எப்படி பணம் வந்திச்சுன்னு தேர்தல் ஆணையம் கேட்குமாம் !"

"?????????????????????"

********************************************************************************************************************

" இன்னைக்கு என்னோட வேலை முடிஞ்சிருச்சி ! இனிமே யாராவது வந்தா நாளைக்கு காலாகாலத்திலே வரச்சொல்லுங்க"

"ஏங்க அப்படி?"

"இப்பவே லஞ்சம் ரூபாய் 49,000/= சேர்ந்திருச்சி. அதுக்கு மேலே வாங்கினா தேர்தல் ஆணையம் என்னைய பிடிச்சிடும்?"

*********************************************************************************************************************

"ஏங்க தலைவரு கூட்டத்திலே பேசுறததுக்கு முன்னாடி மூன்று கவரை மாறி மாறி பார்த்துட்டே இருக்கிறாரு"

"அதுவா? அது வந்து .... கட்சி மேலிடம் எப்போ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனாலே முன்னெச்சரிக்கையா இருக்கிறாரு !  தான் பேசப் போற பேப்பருங்க அது !  கட்சியிலே இருந்தா ஒரு பேச்சும், கட்சியை விட்டு நீக்கிட்டா ஒரு பேச்சும், எதிர்கட்சியிலே சேர்வதா இருந்தா ஒரு பேச்சும்ன்னு மூன்று மாதிரி எழுதி வைச்சுருக்கிறார்".  

******************************************************************************************************************

"ஏங்க கூட்டம் அமைப்பாளரை ஒரு சின்னத்த்திரை தொகுப்பாளர்கிட்டே தலைவரு கொடுத்திருக்கிறாரு "

"நடுநடுவே சிரிப்போடு கைத்தட்டலும் வர்ற மாதிரி சரியா பண்ணுவாரு. அதாவது சின்னத்திரையிலே வர்ற மாதிரி"

*******************************************************************************************************************

" ஏங்க நம்மத் தலைவரு எப்ப பார்த்தாலும் எதிர்கட்சி கூட்டத்திற்கு மறுநாள் கூட்டம் போடுறாரு "

"அதுக்குக் காரணம், பந்தல் செலவு மிச்சம், நேற்று கூட்டத்துக்கு வந்தவங்களை சாப்பாடு கொடுத்து அங்கேயே தங்கவச்சு மறுநாள் நடக்க இருக்கும் கூட்டத்திற்கு ஆட்கள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை"

" ??? "

*********************************************************************************************************************

" நாலு பேர் கூட வராத கூட்டத்திலே நம்மத் தலைவரு 'எங்களோட படைபலம் இந்த நிகழ்ச்சி நாளை சின்னதிரையிலே ஒளிபரப்பும்போது பாருங்கன்னு ஏன் சொல்றாரு"

" அதாவது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் போது இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறமாதிரி சேர்த்துவிட்டுருவாங்க. பார்க்கிறவங்களுக்கு மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். முக்கியமா எதிர்கட்சியினருக்கு "

" சும்மா 'பில்ட் அப் 'ன்னு சொல்லு "

*********************************************************************************************************************
  
       நன்றி .... வணக்கம்....