Pages

Showing posts with label கறுப்புப்பண முதலைகள் BLACK MONEY CROCODILES. Show all posts
Showing posts with label கறுப்புப்பண முதலைகள் BLACK MONEY CROCODILES. Show all posts

Sunday, 21 December 2014

கறுப்புப்பண முதலைகள் BLACK MONEY CROCODILES

கறுப்புப்பண முதலைகள்

BLACK MONEY CROCODILES

      

          புதுக்கவிதை
      மதுரை கங்காதரன்

அளவுக்கு மிஞ்சியது
அவ்வளவும் கறுப்புப்பணம்

வெள்ளைப் பணத்தை
பதுக்கிய கறுப்பாடுகள்

ஏழைகளின் வயிற்றில்
அடிக்கும் அரக்கர்கள்

லஞசம் ஊழலில்
கிடைத்த பிரசாதங்கள்

   
வரிகளை கட்டாமல்
ஏமாற்றும் கயவர்கள்

தேசிய வளர்ச்சியில்
தடை போடும் முட்டுக்கட்டைகள்

விலைவாசி எமனோடு
கை கோர்க்கும் சித்திரக்குப்தர்கள்

பொருளாதாரத்தை சீர்குழைக்கும்
சேசத் துரோகிகள்

பணப்பிசாசுகளை உருவாக்கும்
அசுரத் தாய்கள்

   

தன் குடும்ப நலனே நினைத்திடும்
சுயநலவாதிகள்
அரசியலை ஆட்டுவிக்கும்
பொம்மலாட்டக்காரர்கள்

அரசியல்வாதிகளால் காக்கப்படும்
பாதுகாப்புப் பெட்டகஙகள்

உலக நாடுகளுக்கு சவால்விடும்
வில்லன்கள்

   
இருட்டு ராஜ்ஜியத்தில்
முடிசூடா மன்னர்கள்

ஏழைகளது வாழ்க்கையோடு
விளையாடும் விஷப்பாம்புகள்

கறுப்புப் பணத்தை மீட்போம்
பதுக்கியவர்களை சிறைவைப்போம்
 
விலைவாசியை குறைப்போம
ஏழைகளைக் காப்போம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@