Pages

Showing posts with label பாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008. Show all posts
Showing posts with label பாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008. Show all posts

Wednesday, 5 September 2012

பாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008





பாகம் - 9 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 



புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008

பாராட்டுகள் : ((Appreciation)


சிறந்த நிர்வாகம் மேற்கொள்ளும்  அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி பல அரிய சாதனை செய்துள்ளனர்.எந்த ஒரு துறையிலும் அதில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளிகள் தங்களுடைய வேலையை சிறப்பாக, முன்பு விட அதிகமாக, தரமாக செய்தால் அவர்களை தட்டிகொடுத்து மேலும் ஊக்கபடுத்தும் விதமாக மனமகிழ்ந்து பாராட்டுங்கள். அது தான் நீங்கள் தரும் ஊட்டச் சத்தும், மரியாதையுமாகும். அதோடு நில்லாமல் சிறிய சான்றோ அல்லது நினைவு பரிசு கொடுத்தால் மற்றவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும்விதமாக அமையும்.

கூட்டு வேலை : (Team work)


தனி ஒரு மனிதனால் நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும், சரியான நேரத்தில் சரியானபடி செய்ய முடியாது. அதற்கு தேவை கூட்டு வேலை. இதன் மூலம் அனைத்து தொழிலாளருக்கிடையே நல்லுறவு மற்றும் புரிதலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமை வெளிப்பட்டு உற்பத்தித்திறனும் அதிகரிக்க உதவுகிறது. இதை அனைத்து தொழிலாளர்களின் கூட்டங்களின் மூலம் விருத்தி செய்யலாம்.

தரம் : (Quality)


ஒரு நிறுவனத்தின் உயிர் நாடி தரம். தரம் இல்லையேல் நிறுவனம் தரை மட்டமாகிவிடும். உற்பத்தியின் எல்லா நிலைகளிலும் தரத்தை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும். தரத்திற்கு தேவையான சிறந்த ஆய்வுக்கூடமும் தகுதிவாய்ந்தவர்களும் தேவை.

புள்ளிவிவரம் : (Analysis Data)


ஒவ்வொரு துறைகளின் செயல்பாடும் அதன் செயல்திறனும் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால் கட்டாயம் வேலையின் போது கிடைக்கும் பல்வேறு புள்ளிவிவரங்களை பதிவு செய்து ஆராயவேண்டும். மேலும் திறனை அதிகப்படுத்துவதற்கான முறைகளை பல ஆரோக்கிய மாற்றத்தின் வாயிலாக கொண்டுவரவேண்டும். பல நிறுவனங்கள் கணினி மென்பொருள் உதவியினால் பலவிதமான புள்ளிவிவரங்களை உடனடியாக ஆராந்து தகுந்தளவு தரத்தை, உற்பத்தி திறனை அதிகரிக்கின்றனர். 

அபிவிருத்தி : (Improvement)

ஒரு நிறுவனம் வளர வேண்டுமென்றால் சிறந்த நிர்வாகம் வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தகுந்த மாற்றங்களை கொண்டுவரும்போது தரத்திலும், உற்பத்தியிலும், சேவையிலும்  தானாக அபிவிருத்தி உண்டாகிறது.      
                                           
வாய்ப்புகள் (opportunities) :



பலவித பெரிய பிரச்சனைக்குள் வாய்ப்புகள் என்பது சிறு சிறு புள்ளிகள் போல் கட்டாயம் இருக்கும். அதை நாம் நுண்ணிப்பாக கவனித்து பயன் படுத்திக்கொள்ள தவறக்கூடாது.

வெற்றி (Success) :



பலர் வெற்றியை தூங்கிக்கொண்டு கனவில் அனுபவிக்கும்போது வெகு சிலரால் தான் விழித்துக்கொண்டும், முயற்சியுடன் உழைத்துக்கொண்டும் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறனர்.


உந்துசக்தி  (motivation):



உழைப்பின் ஓட்டத்தை சரியான திசையில் தன்னம்பிக்கையுடன் தூண்டிவிடும்போது அபரிவிதமான சக்தி கிடைக்கின்றது.


ஊக்கப்படுத்துதல் :


ஒரேநாளில் ஒருவனை ஊக்கப்படுத்திவிட முடியாது. அது மூளையை  சிறிது சிறிதாக செதுக்குவது போன்றதாகும். அழகான அதிசயமான சிற்ப்பங்கள் ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது.அதாவது உடம்பிற்கு சிறிது சிறிதாக ஊட்டச்சத்து அளிப்பது போன்றதாகும். ஒரே சமயத்தில் அதிகப் படியான ஊட்டச்சத்துகளை உட்கொண்டால் உடம்பால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முறைப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தெலுத்தினால் தான் ஊக்கம் வேலை செய்யும். ஒரேதடவை அதிகமாக ஊக்கப் பயிற்சி கொடுத்தால் அதிகப் படியான சோர்வு ஏற்ப்பட்டு கடைசியில் எழும்ப முடியாதபடி செய்துவிடும் 

மனப்பான்மை அல்லது  மனப்பாங்கு (attitude) :


உனது முகத்தை எப்போதும் சூரியனை நோக்கி ஓர் வெளிச்சத்தை நோக்கி இருந்தால் உன்னால் உன் நிழலை பார்க்கமுடியாது.
அதுபோல் உனது எண்ணத்தை வெற்றியை நோக்கி குவிக்கப்படும் போது தோல்வி என்பது உனக்குத் தெரியாது (வராது).

உன் எதிரே இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் உத்வேகத்துடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுங்கள். ஏனென்றால் அதில் தான் உனது வாழ்க்கை அடங்கியிருக்கின்றது.


மாற்றங்கள் (Changes):

  

உனது தொழில் மற்றும் வாழ்கையின் பயணத்தின்போது வளைவான பாதையின் கடைசியில் உன்னால் பாதை தெரிய முடியாததைப்  பார்த்து அதுவே பாதை முடிந்துவிட்டது என்று எண்ணி அங்கேயே நின்று விடாதே !   நீ வளையாமல் அடம்பிடித்து இருக்காதே! அது உண்மையில் முடிவல்ல! சற்றே வளைத்து பயணித்துப் பார். மேலும் பாதையின் விரிவை பயணித்து மேலும் அனுபவிக்கலாம்.

அதுபோல் மாற்றத்திற்கு பயந்து உனது கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே? 

அதாவது கடலில் ஏற்ப்படும் காற்று மற்றும் அலைகளை அனுசரித்து பயணம் செய்தால் தான் உன் இலக்கை அடைய முடியும்.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள் !

முன்னேற்றம் தானாகத் தேடி வரும்!


பந்தயம் (Challenge ) :

 

அமைதியான கடலில் யார் வேண்டுமானாலும் எந்தவித கஷ்டமில்லாமல் அழகாக பயணம் செய்யலாம். ஆனால் உனது திறமை கடலில் ஏற்ப்படும் சூறாவளி காற்றை சமாளித்து பாதுகாப்புடன் பயணம் செய்வதில் தான் இருக்கின்றது.


துணிச்சல் (Risk) :


புதிய கடல் நாடுகளை காணவேண்டுமென்றால் இப்போது உனக்குத் தெரியும் கடற்கரையை காணாதவாறு தாண்டி பயணம் செய்ய வேண்டும்.

திட்டமிடுதல் (Plan):



எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். திட்டமிடுதல் முதலில் தானே வரவேண்டும். ஏன் கடைசியில் வருகின்றது என்று? ஏனெனில் மேற் கூரியவைகள் அனைத்தும் இருந்தால் தாள் தெளிவான திட்டம். தீட்ட முடியும். அவைகள் இல்லாமல் திட்டம் தீட்டுவது வெறும் பேப்பர் அளவிலே காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

எப்படி திட்டமிடுவது?

* முதலில் தன்னால் அடைய முடிந்த இலக்குவை குறித்துக் கொள்ளுங்கள்.

* எந்தெந்த வழிகளில் அடையலாம் என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.

* அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை தீர்வு காணும் முறையினையும் விவரமாக எழுதுங்கள்.  

* இலக்கை அடைவதற்கு தகுதியான நேர் சிந்தனை உடைய ஆட்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* எப்போது இலக்கை பற்றிய சிந்தனையிலே இருங்கள்.

* செயல்களை செய்யத்தொடங்குகள்.  

* செயல்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் திசை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

* தோல்வி ஏற்ப்பட்டால் மாற்றுப் பாதையில் உடனே செல்வதற்கு தயாராக வைத்திருங்கள்.

* இப்போது உங்கள் திட்டம் வெற்றி தான்.

* மீண்டும் அடுத்த திட்டத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் .

******************************************************************************  


 தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com