மனிதநேயம் வளர்ப்போம்!
கு.கி.கங்காதரன் மதுரை
குடும்பமோ அக்கறை சீமையில்
குழந்தைகளோ பள்ளி விடுதியில்
பெற்றோர்களோ முதியோர் இல்லத்தில்
பார்த்துக் கொள்வதோ கைபேசித் திரையில்
மனிதநேயம் அற்ற மனம்
மணம் பரப்பாதப் பூமாலை
இரக்கம் இல்லாத இதயம்
இனிமை காணாத இளமை
கருணை இல்லாத கண்கள்
காற்று வீசாதத் தென்றல்
அன்பை காட்டாத பிறவிகள்
அலைகளை எழுப்பாதக் கடல்.
.
மாயா அலைபேசி கையில் வந்தது
மனித உறவுகள் தூரம் போனது
போலி முகங்கள் அசலாய் நடிக்குது
பாசமென நம்பி மோசம் போகுது
உலகமே அவசரமாய் சுற்றுது
உணர்வுகள் அவசரமாய் மாறுது
கண்ணில் தெரியும் உறவுகள் மறையுது
கண்டும் காணாமல் மனம் ஒதுக்குது.
அமைதி நிறைந்த புது உலகம் படைப்போம்
ஆருயிர்கள் வாழ புதுப்பாதை அமைப்போம்
மாசு கட்டுப்படுத்த மரங்களை வளர்ப்போம்
மானுடம் சிறக்க மனிதநேயம் வளர்ப்போம்
****************************