Pages

Showing posts with label 28.4.19 திருக்குறளோர் வழிநூலா? தற்குறியே பழிக்காதே! மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts
Showing posts with label 28.4.19 திருக்குறளோர் வழிநூலா? தற்குறியே பழிக்காதே! மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts

Thursday, 2 May 2019

28.4.19 திருக்குறளோர் வழிநூலா? தற்குறியே பழிக்காதே! மாமதுரைக் கவிஞர் பேரவை




திருக்குறளோர் வழிநூலா?
தற்குறியே பழிக்காதே!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன் 

வாழ்க்கை விதியினை இயம்புவதில் உறுதி
வினையும் பயனும் அமைந்துள்ள நியதி
முக்காலத்திற்கும் ஒளி வீசும் பரிதி
முப்பாலுள்ள திருக்குறள் நூலே வாரிதி.

அறிஞர்களுக்கும் நா தடுமாறுமாம் கை கிறுக்குமாம்
அவ்வழியில் ஓர் அறிஞரின் பிதற்றல் நூலாம்
திருக்குறளோர் வேதவழியில் வந்த நூலாம்
தமிழர்களைத் தமிழனே புதைக்கும் படுகுழியாம்.

குறுக்குவழியில் புகழ் சேர்க்க விரும்புவோர்
கும்பிடும் குலக்கடவுளைக் குறை கூறுவார்
வழிவந்த நூல்களைத் திரி(ரு)த்தி எழுதுவார்
வரலாறையே மாற்றி எழுதவும் தயங்கார்.

காக்கை குயில் பேதம் முட்டையிலே தெரியுமா?
கரையும் கூவும் ஒலியாலே இனம் காணலாமே
வாழ்வில் திணிக்கப்பட்ட நூல்களே வேதங்களாகுமே
வாழ்வினைக் கணிக்கப்பட்ட நூலே திருக்குறளாமே.

தமிழர்களுக்குத் தலையாய்த் திருக்குறள் தாங்கும்
தரணியில் மொழிகளுக்குச் சிகரமாய் நிற்கும்
திருக்குறள் விருட்சத்தில் இருந்து வீழ்த்த வித்தே
தாய்த்திருநாட்டில் வேதங்களின் வடிவாய் விரிந்ததே!
*******************









 மேலும் நிகழ்ச்சி தொகுப்பு மின்படங்களைப் பார்க்க கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ...

நன்றி