Pages

Saturday, 21 July 2012

காம்பை தேடும் பூக்கள் - கவிதை

காம்பை தேடும் பூக்கள்  - கவிதை 






காம்பை விட்டு வந்த 
பூக்கள் நாங்கள் !


தென்றல் தீண்டினால் கூட 
துவண்டு விடுகின்றோம்.


வெயிளின் கொடுமை 
அப்பப்பா..கருகி விடுகிறோம்.


ஒட்டிக் கொள்ள 
காம்பு கிடைத்து விட்டால் !!


தென்றல் காற்று 
எங்களுக்கு இனிமையாயிருக்கும் 


வாட வைக்கும் வெயில் வருனினும் 
வாட மாட்டோம்.
மாறாய் பூத்துக் குலுங்குவோம்.


மடித்து விடும் காற்று  அடிப்பினும் 
மடிய மாட்டோம்.
மாறாய் மலர்வோம்.


வெட்டி விடும் மின்னல் வருனினும் 
வீழ மாட்டோம்.
மாறாய் வலிமை பெறுவோம்.


காம்பு! என்போன்ற பூக்களுக்கு 
இரும்பு கம்பி.


காம்பு இருக்கும்வரை 
நாம் உயிரோடு இருப்போம்.


மனிதா! நாம் மலர்வது 
உன்னை மகிழ்விக்க தான்.


உன் மகிழ்ச்சிக்காக  நாங்கள் 
காம்பை இழக்கத் தயார். 


என்னைப் போல நீயும் 
பிறர் மகிழ்ச்சிக்காக வாழ. 




  

கலியுலக கம்ஸன் - கவிதை

கலியுலக கம்ஸன் - கவிதை 





கலியுலக கம்ஸன் 
விலைவாசியை 
அழிப்பதற்கு 
மீண்டும் 
கிருஷ்ணாவதாரம் 
எப்போது?

5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி (5 MINUTES BREATHING EXERCISE)



5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி   

    (5 MINUTES BREATHING EXERCISE ) 



எதற்க்காக இந்த பயிற்சி என்பது பற்றிய விளக்கம் :

இதயம், நுரையீரல், இரத்த  ஓட்டம், சர்க்கரை அளவு, இரத்த  கொதிப்பு, உடல் புத்துணர்ச்சிக்காக பயன் படுவது.



    
மேலே உள்ள முதல் படத்தில் மூச்சு இழுக்கும் போது  எப்படி காற்று நுரையீரல் மூலம் உள்ளே வருகிறது என்பதை காட்டும் படம் 

இரண்டவது படத்தில் மூச்சு வெளியே விடும்  போது  எப்படி காற்று நுரையீரல் மூலம் வெளியே செல்கிறது என்பதை காட்டும் படம் 

ஒருவனுக்கு வயது ஏற ஏறத்தான் உடல் ஆரோக்கியத்தை பற்றிய சிந்தனை வருகின்றது. அப்போது அவன் பல வேலைகள் செய்ய நினைத்தாலும் அவன் உடல் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அப்போது தான் தன உடலை நன்றாக பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது . ஏன் கட்டாயமும் வருகின்றது . அதற்காக சிறந்த வழிகளை தேடுகின்றான். பணம் கொடுத்து பல பயிற்சி செய்கிறான். விளம்பத்தின் கவர்ச்சியை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து பல உடல் பயிற்சி சாதனங்களை வாங்கி பயிற்சியை மேற்கொள்கிறான். அவ்வளவும் அதிகபட்ஷம் ஓரிரு மாதங்கள் வரை தான். அதற்குப் பிறகு அனைத்தும் வீட்டின் ஒரு மூலையில் தூங்கி கிடக்கும். ஏன் ? உடல் பயிற்சி செய்யவில்லை என்று கேட்டால் "நேரமில்லை அல்லது உடல் ஒத்துழைக்கவில்லை " என்ற பதில் தான் வரும். நான் சொல்வது உண்மை தானே!



வயதான பிறகு உடலை பல கோணங்களில் நீட்டி, மடக்கி, வளைத்து , நிமிர்ந்து , உட்கார்ந்து செய்யும் யோகாசனங்கள் இளம் வயதுகாரங்க கூட செய்வதுற்கு கஷ்டமாய் இருக்கும்.அப்படி இருக்கும் போது வயதானவர்கள் எப்படி செய்ய முடியும். அதனாலே தான் பெரியவங்க '5 ல் வளையாதது 50 ல் வளையமா ? ,  என்றும் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ' என்றும் சொல்லியிருக்கிறார்கள். இது உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதாவது சிறிய வயதிலிருந்து கற்றுக் கொடுத்திருந்தால் வயதான பிறகும் உடல் ஒத்துழைப்பு தந்திருக்கும்.அனால் 'சிறிய வயதில் கற்று கொடுப்பதற்கு நேரம் இல்லை தகுந்த ஆட்களும் கிடைக்கவில்லை' என்பது தான் பஹில் வரும். 

ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத  உடலை 'சிலிம்'மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர்.பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உடலின் பலம் 'தம்' மில் தான் இருக்கின்றது. 'தம்' என்றால் புகை பிடிப்பது என்ற அர்த்தம் இல்லை.மூச்சை (காற்றை) பிடித்து வைப்பதில் தான் இருக்கின்றது. எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள். டயரில் காற்று இருக்கும் வண்டிகள் இலேசாகவும் அதிக வேகத்தில் ஓடுவதற்கு  உதவி செய்வது போல உடலில் மூச்சு அடக்கப்படும்போது உடல் இலேசாகவும் , அதிக அளவு சக்தியையும்  கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வேகமாக ஓடுவதற்கு மூச்சை அடக்கிக்கொண்டு நீங்கள் கவனித்திருப்பீர்கள்.அதற்கு மூச்சு பயிற்சி மிகவும் அவசியம்.



இந்த பயிற்சியில் மூச்சை வயிறை  சுருக்கி உள்ளே இழுப்பதால் 'தொப்பை' என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி 'தொப்பை' உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

காற்றை வேக வேகமாக மூக்கின் வழியே சுவாசிப்பதால் காற்று உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் போய்  சேருவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.அதனால் உடல் விரைவில் சோர்வு அடைகிறது.

உதாரணமாக சற்று பருமனானவர்கள் சிறிதளவு வேகமாக நடந்தாலே இளைக்க ஆரம்பித்து சோர்வடைந்து விடுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் இருதயமும் , நுரையீரலும் வேக வேக வேலை செய்து கலைத்து விடுகின்றது.

இதை போக்கத் தான் மூச்சிப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது . இந்த பயிற்சி உடல் புத்துணர்ச்சி தருகிறது.உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் முளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக    எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

பல வழிகளில் புத்துனர்ச்ச்சியை அடையலாம். நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக  மிக எளிதானதும் , எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

பயிற்சியின் போது  பின்பற்ற வேண்டியவை :

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.  

இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக 

1.  ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்  

3.   இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .     

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

 இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

  மூன்றாவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மட்டும்      

 1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது  துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம்  வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

  
         நான்காவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக 

1.    கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.


    ஐந்தாவது பயிற்சி :இடது  துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது  துவாரம் வழியாக 



1.    கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது  துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும்  வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு 

சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து , அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும்.

இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

தினமும்  இந்த பயிற்சியினை செய்யும் போது  புது தெம்பை உணர்வீர்கள்.

தினமும் பயிற்சியினை தவறாது செய்யுங்கள் !
சிறந்த பலன் அடையுங்கள் !

நன்றி .   












Friday, 20 July 2012

e.காதல் - கவிதை

e.காதல் - கவிதை 








வண்ண பூக்களை சுற்றாத 
வண்டுகள் உண்டோ ?


பூவையர்களைச் சுற்றாத 
மண்டுகள் உண்டோ?


வான் நிலவை பாடாத 
கவிஞன் உண்டோ?


காதல் கனவுகளை காணாத 
கண்கள் உண்டோ?


மண்ணையாளும் மன்னவனுக்கு கூட 
மண் குடிசையில் வாழும் பெண் மீது 
காதல்.


மண்ணில் வாழ்ந்த முனிவனுக்கும் கூட 
விண்ணில் இருந்த கன்னியின் மீது 
காதல் 


கண்டம் தாண்டி கூட சாட் செய்து 
கம்பியுட்டர் மூலம் 
காதல்.  


இதற்கு 
நீங்களும் நானும் 
விதி விலக்கா என்ன?


உறவு அனலாய் மாறும்போது 
காதல் உருகி உருக்குலைத்து 
நீராய் , பின் ஆவியாய் மாறி 
காணாமலே செய்து விடும்.


சிலர் 
இன்பத்தை கடனாக வாங்கி 
காதலை அடகு வைக்கிறார்கள் 
'வட்டி' திருமணமாய் வரும்போது 
அசல் காதலையே துறக்கிறார்கள் 


இப்படி 
வரதட்சணைக்காக நெருப்பில் 
வீழ்ந்து அழிந்த காதல்கள் தான் எத்தனை?
சாதி மதத்திற்க்ககாக இதயங்களை 
எரித்த காதல்கள் தான் எத்தனை ?
கெளரவத்திரற்க்காக இளம் பூக்களை 
மண்ணில் புதைத்த காதல்கள் தான் எத்தனை ?


இன்றைய காதல் 
அவன் இவளைப் பார்பான் 
இவள் அவனைப் பார்ப்பாள் 
கண்கள் பேசும் 
மொபைல் மெசேஜ் அனுப்பும் 
கம்பியுட்டரில்  சாட் செய்யும் 
'ஐ லவ் யூ 'என்பார்கள் 
சந்திப்புகள் நிகழும் கைகள் விளையாடும் 
ஆனால் 
திருமணம் வரும் பொது அந்த 
இருமணங்களை எங்கே தேடுவது ?


காமத்தால் வரும் போலி காதல்கள் 
காளான்களாய் போய்விடும் 
உடல் அழகால் உதித்த புனிதமில்லாக் காதல்கள் 
ஊனமாய் இருந்து விடும் 
செல்வத்தால் வளரும் பகட்டு காதல்கள் செத்து மடிந்திடும் 


அன்புமனத்தால் மலர்ந்த தெய்வீக காதல்கள் மட்டுமே 
ஆணி வேறாய் நிலைத்திடுமே. 




நிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை

நிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை  




நல்லதை செய்தால் ஏசும் உலகம் 
பொறாமை பிடித்தவர்கள் 


நல்லதை சொன்னால் கேலிசெய்யும் சுற்றம் 
கையாலாகாதவர்கள் 


நல்லதை நினைத்தால் பைத்தியக்கார பட்டம் 
அறிவிலிகள் 


பண்பட்ட உன் உள்ளம் 
புண்படத் தான் செய்யும் 


கவலை கொள்ளாதே 
அதை நினைப்பதை நிறுத்தாதே 


வெற்றிகள் கண்ணுக்குத் தெரிவதால் 
தோல்விகளை கண்டு துவளாதே 


வெற்றி ஒருவனுக்கே அடிமை இல்லை 
அவன் உனக்கும் அடிமை ஆவான் 


இறுதி வரை போராடு 
அமைதியுடன் போராடு 


வன்முறைக்கு பலன் இருக்கும் 
ஆனால் ஆபத்து நிறைந்திருக்கும்


அன்பு அமைதியாய் இருக்கும் 
ஆனால் வலிமை பெற்றிருக்கும் 


நிரந்தர சந்தோஷத்தை தேடு 
நிறைவுடன் வாழு 


உன் மனம்  எனக்குத்தெரியும் 
என் மனம் உனக்குத் தெரியும் 


நீயும் என்னைப் போல் மனிதன் 
நானும் நீ தான் 


உனக்குள்ள துன்பம் எனக்குத் துன்பம் 
உனக்குள்ள இன்பம் எனக்கு இன்பம் 


உனக்குள்ள சந்தோஷம் எனக்கு சந்தோஷம் 
உனக்குள்ள கஷ்டம் எனக்கு கஷ்டம் 


நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் 
ஏன் உன்னால் முடியாது?


முயற்சி செய்தால் முடியும் ஏனென்றால் 
உன்னைப் போல நானும் மனிதன்.



பொன் வாழ்கையாக மாற்றும் வித்தை - கவிதை

பொன் வாழ்கையாக மாற்றும்  வித்தை - கவிதை 




விதைக்குள்ளே பெரிய மரம் 
உயிருக்குள்ளே உன் உருவம் 


விதையை மரமாகவும் 
மரத்தை விதையாகவும் 
மண்ணால் மாற்ற முடியும்.


மனிதனே!
உன் வாழ்வை பொன்னாகவும் 
மண்ணாகவும் 
மாற்றும் வித்தை 
உன்னிடம் இருக்கிறது.


இடைவிடாது முயற்சி 
அயராது உழைப்பு 
சோர்வில்லா மனம் 
தெளிவான சிந்தனை இருந்ந்தால் 
உன் வாழ்வு மண்ணாக இருந்தாலும் 
பொன்னாக மாறும்.

ஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல் - கவிதை

ஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்  - கவிதை 








பெயர் எழுதிய 
சீட்டுகள் நாங்கள் !
தினமும் 
பூமி குலுக்கல் 
நடத்துகிறது !
தினமும் 
ஆண்டவன் 
சீட்டுகளை எடுக்கிறான் 
தன்னிடம் 
அழைப்பதற்காக !