Pages

Thursday, 26 July 2012

அதி வேக சமையல் - விஞ்ஞான விளக்கங்களுடன் மற்றும் பயனுள்ள குறிப்புகள்

அதி வேக சமையல் -
 விஞ்ஞான விளக்கங்களுடன் 
 மற்றும் பயனுள்ள குறிப்புகள்



கணவன்மார்களே ! பெற்றோர்களே , பெரியவர்களே சமையல் என்பது எவ்வளவு கஷ்டம். அந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாது எவ்வளவு ருசியாக உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை ஏதம் மூலம் தெரிவித்துக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.   




அறுசுவை விரும்பும் நாக்கிற்கு நாம் திருப்திபடுத்துவது இந்த சமையல் மூலம்  தான். நாக்கிற்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  நம் வாழ்க்கை ஒரு சான் வயிற்ருக்காக தான். அந்த வயிற்ரை திருப்திபடுத்துவது இந்த நாக்கு. இந்த நாக்கை திருப்திபடுத்துவது சமையல்.

சமையல் எதற்காக ?

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் அளவும் , சத்துக்களும் மிகவும் அவசியமானது. நமது உடலுக்கு உணவு தேவைபடும்போது மணியடித்தார் போல  பசி வயிற்ரை கிள்ளுகிறது. ஏனென்றால் வயிற்றில் உள்ள ஒருவித அமிலம் சுரப்பதால், அந்த அமிலம் வயிற்றில் உள்ள உறுப்புகள் மீது படும்போது நமக்கு பசி எடுக்கிறது. அதக்கு அந்த அமிலத்திற்கு இணையான உணவுஅளவை எடுத்துக்கொண்டோமானால் நமது பசி அடங்கிவிடுகிறது. ஒருவேளை நாம் அதை அசேட்டையாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் நாம் 'அல்சர்' என்ற நோய்க்கு தள்ளப்படுவீர்கள்.அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அப்போது கட்டாயம் அமிலதன்மையுள்ள புளி , காரம் போன்ற உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

இதற்க்கு பிறகு, சத்து என்று பார்த்தோமானால், சத்துக்களின் அளவும் மிகவும் கூடினாலும் , மிகவும் குறைந்தாலும் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.அப்போது சத்துக்கள் குறைந்தால் நமது உடல் சோர்வுடனும், தெம்பு இல்லாமலும் காணப்படும். சத்துக்கள் அதிகமானால் நமது உடல் பலவித அசௌரியங்களை எதிர்கொள்ளும். அதாவது மாவு சத்து (புரோட்டீன்), உப்பு சத்து (சால்ட்), சர்ககரை (சுகர்) , கொழுப்பு சத்து (கொலஸ்டிரால்), ஊட்ட சத்துக்கள் ( நுண்னூட்ட சத்துக்கள்) போன்ற சத்துக்களின் அளவை பொறுத்து நமது உடல் அரோக்கியம் அமைகிறது. இந்த சத்துக்களின் அளவை நமது சமையல் மூலம் நிலைபடுத்திக்கொள்ளலாம்.    

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் :

சமையல் செய்வது நாம் சோம்பேறித்தனப்பட்டு அல்லது நேரமின்மை காரணமாக  ஹோட்டலுக்கோ, பாஸ்ட் புட் , மெஸ்சுக்கோ போய் சாப்பிடும் போது எல்லோருக்கும் பொதுவான் உணவுகளைத்தான் பரிமாறுவார்கள். அனால் கொடுக்கின்ற பணத்தை வேஸ்ட் செய்யாமல் இருப்பதற்காக வேறு வழியில்லாமல் சாப்பிட்டு விட்டு மறுநாள் டாக்டர் செலவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேறுவழியே இல்லாதவர்கள் கட்டாயம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். பேட்சி லர்கள், ஊருக்கு செல்பவர்கள் போன்றவர்களிடம் கேட்டால் கதை கதைகதையாய் தங்கள் அனுபவத்தை சொல்வார்கள். ஏன் இதற்காக சீக்கிரம் கூட கல்யாணம் செய்து வைப்பார்கள்.

சில சமயங்களில் கூட்டு குடும்பங்கள் கூட தனிகுடும்பமாதுண்டு. அதாவது கூட்டு குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து சற்று எல்லாமே உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இளசுகளோ அறுசுவையும் வேண்டும் என்று நினைப்பார்கள். முடிவில் கூட்டு குடும்பம் கட்.. கட்.... ஆனால் அவர்களே பெரியவர்களாக மாறும்போது தாங்கள்  செய்த தவறுகளை உணருவார்கள். அதாவது இளமையில் அளவுக்கு அதிகமாக உண்டதால் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறோம் என்று.

ஏன் பலருக்கு சமையல் செய்வது 
பிடிக்கவில்லை ? :




சமையல் பலருக்கு எட்டிகாயாகத்தான் இருக்கின்றது. ஏனென்றால் சோம்பேரித்தனம் தான். அனைத்தும் அங்கங்கே போய்  வாங்கிட்டு வரணும். சுத்தம் பண்ணனும். பத்திரப்படுத்தி வைக்கணும். காய்கறிகள் நறுக்கணும். சரியான் அளவு மற்றும் கவனத்துடன் எல்லா வீட்டு உபயோகப்பொருட்களை கையாள வேண்டும். கவனக்குறைவினால் கை,கால் சூடு படலாம், உடம்பில் சூடான பொருட்கள் தெறிக்கலாம். சில வேளைகளில் மின்சார ஷாக் கூட வாங்க நேரிடும். அனைத்திற்கும் மேலாக  பாதிரங்களையெல்லாம் நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

திட்டமிடாமல் வேலை செய்வதாலும் , எளிய வழிகளை பின்பற்றாததாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாததாலும்  எப்போதும் சமையலறையே கதி என்றிருப்பதாலும் சிலருக்கு சமையறை அலர்ஜியாக மாறிவிடுகின்றது.

மேலும் நாக்கு சுவைக்காக டிசைன் டிசைனாக சமைக்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் ! 

மேற்கூறியதெல்லாம் ஒரு காரணமே கிடையாது. ஏனென்றால் இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் செயல் முறை விளக்கங்களுடன் பாதுக்காப்பாக சமையலறையிலுள்ள பொருட்க்களை எப்படி கையாளுவது முதல் டிசைன் டிசைனாக சமையல் வரை தெளிவாக கிடைக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் அதை பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆக, உங்களுக்கு தினமும் வீட்டில் சுவையாக உணவு கிடைத்துக்கொண்டிருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்தால் நீங்கள் விரும்பும் ருசியான் உணவு கிடைக்கும். உங்களது ஆரோக்கியமும் நன்றாய் இருக்கும். அதற்காக சமைத்து கொடுப்பவர்களை மனதார பாராட்டுங்கள். மேலும் உங்களுக்கு புது சுவை கிடைக்கும்.

எதற்காக வெளியில் சாப்பிடுவதை
 தவிர்க்க வேண்டும்? :




உடல் ஆரோக்கியம் தண்ணீரிலிருந்து ஆரம்பமாகிறது. மினரல் வாட்டர் போதுமானது. ஆனால் வெளியில் சாப்பிடும் இடங்களில் இவைகள் கிடைப்பது கஷ்டம். அப்படி கிடைத்தல் அதிக பணம் செலவாகும். குறைந்தது கொதித்து ஆறிய தண்ணீர் போதும். அதுவும் கிடைக்காது. நீங்கள் இவை இரண்டில் ஒன்றை பின்பற்றினால் மருத்துவ செலவு 80 % குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முன்பெல்லாம் உணவை சேவை மனப்பான்மையோடு வழங்கிவந்தனர். விலைவாசியும் குறைவு தான். அதனால் தரமான உணவு கிடைத்தது. ஆனால் இப்போது லாப நோக்கத்தோடு சில வேளைகளில் ருசிக்காக உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனப் பொருட்களையும் தயங்காமல் சேர்க்கின்றனர். இதனால் ஆரோக்கிய சீர்கேடு சிலகாலம் கழித்து தெரிகின்றது. சிலர் தரமான உணவுகளை தருகிறார்கள். அவர்களை அடையாளம் காண்பது சிரமம் தான். வெளியில் பெரும்பாலும் பகட்டில் கவர்ந்து கலர் கலராக கொடுத்து மயங்குவது உண்மை.  அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை பற்றி கவலைபடுவது கிடையாது. தங்களுக்குத் தேவை லாபம். அந்த நோக்கத்திலே தான் செயல்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களோ அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிடுகின்றனர். அவர்களுடைய என்னமோ ருசியாக இருக்குதா? வயிறு நிறைகின்றதா? என்பதை மட்டும் பார்கின்றனர். அவர்களது அவசரத்தை பணமா க்குகின்றனர். ஏன் கொடுக்கும் பில்லை  கூட சரி பார்க்க தருகிறனர். டிப்ஸ் கொடுத்துவிட்டு சட்டென்று வெளியில் வந்துவிடுகிறனர். யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்? 

இவற்றையெல்லாம்  தவிர்பதற்காக தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்காக, குறைந்த நேரத்தில் சுத்தமாக, சுகாதாரமான முறையில் விஞ்ஞான விளக்கத்துடன் முதன் முறையாக ஒரு முயற்சி. மேலும் நீங்களே திட்டமிட்டு உங்களுக்கு பிடித்த உங்கள் உடலுக்கு ஒத்துப்போகும் உணவை சமைப்பதால் உங்களுடைய நிர்வாகத்திறமை வெளிப்படும். குனித்து நிமிர்ந்து செய்வதால் நீங்கள் உங்களை யறியாமலே உடல் பயிற்சி செய்கிறீர்கள். அதனாலும் நீங்கள் சுறுசுறுப்பை உணருவீர்கள்.

அதிவேக சமையல் ஆரம்பம்:




முதலில் தண்ணீரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்ப்போம். 

விஞ்ஞான விளக்கம் : தண்ணீரை பெரும்பாலும் அவிப்பதர்க்கும், உணவுப்பொருட்களை கரைப்பதற்கும், பல பொருட்களைகொண்டு  சரியான கலவை தயாரிப்பதற்கும் மற்றும் பல வழிகளில் உபயோகப்படுத்தபடுகின்றன.

தண்ணீர் பொதுவாக 25 C முதல் 30 C வரை வெப்பம் இருக்கும். நீங்கள் அதை முதலில் 100 C வரை ( தண்ணீரின் கொத்தி நிலை ) சூடு செய்து அதற்குமேல் சூடுபடுத்த படும்போது தான் அது ஆவியாக மாறுகின்றது. அந்த மாற்றம் தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதிக எரி பொருட்கள் செலவாகிறது. 

சில உதாரணங்களை பார்ப்போம்: 

கவனிக்க : ( முக்கியமான பொருட்கள் மட்டும் .. உப்பு போன்றவை கொடுக்கப்படவில்லை)




1. அரிசி + தண்ணீர்  + வெப்பம்                                 = சோறு 

2. பச்சை காய்கறிகள் + தண்ணீர்  + வெப்பம்   = வேக வைத்த காய்கறிகள்   

3. ரசப்பொடி + தக்காளி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = ரசம் 

4. சாம்பார் பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = சாம்பார் 

5. கொழம்பு பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = கொழம்பு 

6. ரவை + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = உப்புமா     

7. நூடுல்ஸ்    + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = நூடுல்ஸ் 

8. மாவு ஊற்றிய இட்லி கொப்பரை + தண்ணீர் + வெப்பம்   = இட்லி 

9. காபி பொடி + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான காபி 

10. டீ தூள்  + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான டீ போன்றவை ...

மேற்கூறியவற்றில்  தண்ணீர் + வெப்பம் பொதுவாக வருகின்றது.

ஒவ்வொரு முறை தண்ணீரை சூடேற்றி கொண்டிருந்தாள் நேரம் அதிகமாகும்.


ஆகவே நாம் பச்சை தண்ணீருக்கு பதிலாக வெந்நீரை எல்லாவற்றிக்கும் உபயோகித்தால் உங்கள் சமையல் நேரம் பாதியாக குறையும்.


இந்த வெந்நீரை குக்கரின் மூலம் சூடுபடுத்தினால் இன்னும் நேரம் குறையும்.

மீதமுள்ள தண்ணீரை குடிப்பதற்கும் வைத்துக்கொள்ளலாம். 

மேலும் குறைந்த அளவு எரிபொருள் செலவு செவதால் பணம் சிக்கனமகிறது 

சீக்கிரம் சூடாவதால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கிறது.

நீங்களும் முயச்சி செய்து பாருங்கள். அதன மகிமையை உணருவீர்கள்!
உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வீர்.

இன்னும் வரும்.

*********************************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் / போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

Wednesday, 25 July 2012

கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை


கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் சிறுகதை  
மதுரை கங்காதரன் 

குறிப்பு : இக்கதை விருதைமலர் - நடத்தியப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. 
மனிதனின் இப்போது இருக்கும் குணத்தை சிந்திக்க வைக்கும் 
உணர்ச்சி பூர்வமானக் கற்பனைக்  கதை.


இந்த உலகம் அழியபோவதற்கான பல நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பிரபஞ்சத்தில் அதுவும் சூரிய குடும்பத்தில், அதிசயமான பலவகை உயிரினங்கள் அடங்கிய பூமியில், கதைகளில் ஏன்? திரைப்படங்களில் கூட காட்ட முடியாத அளவிற்கு, உண்மையாகவே  மனித இனம் அழியும் காட்சிகள், பார்க்கும் திசைகளிலெல்லாம் தென்பட ஆரம்பித்தன. அவையெல்லாம் கற்பனைக்கு எட்டாத ஒன்றே சொல்ல வேண்டும்.

அது எவ்வாறென்றால் ஒரு தொலைபேசியில் "மகனே!  சீக்கிரம்  வீட்டுக்கு திரும்பி..."  என்றபடி  பாதியிலே பேச்சுப் பரிமாற்றம் தடைபட்டது. அதற்கு  காரணம் அநேகமாக அந்த இடம் தவிடு பொடியாகி சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும்.

உலக நாடுகள் சிலசற்றும் நினைத்துப் பார்க்காதபடி 'போர்' என்கிற போர்வையில் இயற்கைச் சக்திகளை தோற்கடிக்கும்விதமாக மனித சக்திகள் ஒன்றுகூடி, போட்டிபோட்டுக்கொண்டுத் தங்கள் தங்கள் வலிமையினைப் பலவழிகளில் பலதிசைகளில் நிரூபித்துக்கொண்டிருந்தன. அத்தகைய செயல்கள் 'உலக மக்கள் அனைவரையும் அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும் அடையாளம்தான்என்று யாரும்  எண்ணிப்பார்க்கவே இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது இந்த மனித உலகில் அதிகபட்ச அழிவுகளை ஏற்படுத்தும் சக்திமிக்க ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தனர். மனித உயிர்களை துட்சமாக எண்ணித் தங்கள் செல்வம், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம்பணம் மற்றும் ஆயுத பலத்தை நிரூபிக்கவும் 'நான்தான் உலகத் தலைவன்' என்ற தனிமனித சுயநலத்தின் உச்சத்தில், அனைத்து மானுட  தர்மங்களையும் மீறி, அந்த உலகப் போரானது மனிதர்கள்  உட்பட பல உயிரினங்களை எவ்வித வித்தியாசமும் பார்க்காது அழித்துக்கொண்டு இருந்தது.

இதர நாடுகளின் கவனம் முழுவதும் அந்த உலகப் போரின் முடிவை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
                                        
தொலைக்காட்சி, வானொலி, கணினி , கைபேசி , செய்தித்தாள்கள் போன்ற அனைத்து சாதனங்ளிலும் போரின் கோரத்தை நேரடியாகவும் மற்றும் செய்திதாள்கள் மூலமாகவும்  பரபரப்பாக ஒலி, ஒளி வழியாக நேரலையாக செய்திகளைத் தந்து கொண்டிருந்தது.

அதோடு நிற்காமல் இதுவரை நடந்த முதல் இரு உலகப் போரின் போது மனித இனங்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதை கோப்புக்காட்சியிலிருந்து காட்டிக்கொண்டு இருந்ததுஅப்போது பீரங்கிகள், துப்பாக்கிகள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுகுண்டுகள் செய்த 'மனித அழிவு' சாகசங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டிக்கொண்டு இருந்தது. அது உலக மக்களை பயமுறுத்தும்விதமாகவும், உடலை உறையவைக்கும்விதமாகவும் இருந்தது. அழிவிலிருந்து இருமுறை தப்பித்த பூமி, இம்முறையும் தப்பித்துவிடுமா? என்கிற கேள்விக்குறி நாட்டுத்தலைவர்களுக்கிடையே இருந்தது.   

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. அனைவரின் எண்ணங்கள் பலவாறு சிந்தித்ததுநடக்கும் இந்த உலகப் போர் முதல் இரு உலகப் போரைவிடப் பன்மடங்கு மக்கள் இனத்தை அழித்துவிடும் என்கிற அச்சத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.
                           
போர் நடக்கும் நாடுகளைப் பற்றிய 'போர் செய்திகள்' நேரலையாக உலகத்தின் பல நாடுகளுக்குப்  பல மொழிகளில் கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைபேசி மூலம் கதறியபடித் தந்து கொண்டிருந்ததுஅதுவும் சில நேரம்தான் நீடித்தது. அதன் பிறகு அனைத்து வழிகளில் நடந்தச் செய்திப் பரிமாற்றங்கள்  தானாகத் துண்டித்துக்கொண்டன.





இந்த மாதிரி மனத்தை உலுக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்க, நாடே அச்செய்திகளை மட்டும் நுண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ....


அதேவேளையில் யாருமே கணித்திருக்க முடியாதபடி சற்றும் எதிர்பாரதவிதமாக ஒரே    நேரத்தில் இயற்கையும், இதுநாள்வரை தனக்குள் அடக்கி வைத்திருந்த தனது அசுரபலத்தை உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்ட நான்கு திசைகளில் வெவ்வேறு விதத்தில் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

கிழக்குதிசை முழுவதும் என்றுமே இல்லாதவாறு பல இடங்களில் மிகப்பெரிய நீரூற்றுபோல் எரிமலைகளாகக் கக்கியபடி  அங்குள்ள எல்லாவற்றையும் நாசம் செய்து கொண்டிருந்தது.


மேற்கு திசையில் பல மீட்டர் உயரமுள்ள இராட்சச  அலைகள் தொடர்ச்சியாக எழுந்தபடி நாட்டிற்குள் புகுந்து தாக்கி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி தந்து கொண்டிருந்தது.



வடக்கு திசையோ பனி உருகி ஓடுவதும்,  மீதி இடத்தில் சூறாவளி காற்றுவீசி தனது அழிவு வேலையினைச் சரியாகச் செய்யும்விதமாக அங்கே ஒருவரையும் வாழவிடாது துவசம் செய்து கொண்டிருந்தது.


விடுபட்ட தெற்கு திசையில் புயலும், சுனாமி போன்ற பேரலைகளின் தாக்கங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு பல இடங்களை அதன் அகோர பசியினை தீர்த்துக்கொள்ளும் விதமாக மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட பூமியின் எல்லாப் பகுதியிலும் அழிவுக்கான  அடையாளம் தெரிய தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.
தொலைகாட்சி பெட்டியில் 'முக்கிய செய்திகளுக்குப் 'பதிலாக' அவசர செய்திகள்' மற்றும் 'எச்சரிக்கை செய்திகள்' என்றபடி  ஓடிக்கொண்டிருந்தது.
நாட்டு  மக்களுக்கு, உலகத்தின் அனைத்து நாடுகளின் மூலை முடுக்குகள் உட்பட எல்லா பகுதியிலும் அழிவு, அழிவு! என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. "உங்களை நீங்களே காப்பாற்றி"  என்று அந்த எச்சரிக்கை ஒலியும் அரை குறை பேச்சுடன் 'டொப்' என்ற சப்தத்துடன் அதன் ஆயுள் முடிந்து போயிற்று. காரணம்!  அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் போன்ற அனைவரையும் எந்தவித வித்தியாசமும் பாராது எல்லா உயிர் ராசிகளையும் ஒரே நேரத்தில்  பூமிக்குள் புதைந்து போகச் செய்தது.



கைபேசியில்...
"அப்பா! நாங்க இங்கே  நல்லா  இருக்கிறோம். அங்கே நீங்க எப்ப..." சுனாமி போன்ற அலை அந்தக் குரலையும் அடித்துச்சென்றது.




கணினியில்...

"நல்லவேளை இங்கே  ஒன்னும் நடக்கலே! நாங்க பாதுகாப்பாக இருக்கி..." பேச்சுவார்த்தை முழுமையாய் பரிமாறிக்கொள்ளும் முன்னே அப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது.



வானொலியில்..
"பூமியில் பல பகுதிகள் இயற்கை செய்து கொண்டிருக்கும் அழிவோடு, உலகப் போரான அணு ஆயுதப் போரும் நடைபெற்று வருவதால் நீங்கள்..." சுழன்று வீசிய சூறாவளி வானொலி நிலையத்தோடு அங்கு இருந்தனவற்றை ஒன்றுவிடாமல் சூறையாடிக் கடலுக்குள் அடித்துச் சென்றது.



இடையிலுள்ள நிலப்பகுதியில் அணுகுண்டிலிருந்து    வந்த அணுக்கதிர்கள் மக்களையும், தண்ணீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் உயிரோடு சமாதிகட்டும் வேலை துரிதமாக செய்து கொண்டிருந்தது.
நடப்பவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இயற்கையானது இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுபோல் முன்பே திட்டமிட்டபடி ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நடத்திக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், அழிந்த கட்டிடங்கள், அனாதையாய் கிடக்கும் செல்வங்கள், யாருமே சீண்டாத, ஆட்களே இல்லாத பெரிய சின்ன கடைகள், பொறுக்க ஆளில்லாத சாலையில் பரவிக் கிடக்கும் தங்கம், வைரம், பணப்பெட்டிகள் என்று உலகத்தில் இதுவரை காணாத செல்வங்கள் ஒன்றாக அனைத்து இடங்களிலும் பார்க்கின்றவாறு இருந்ததுஇது நாள் வரை ஒளிந்து கிடந்த, புதையலாகக் காக்கப்பட்டவை எல்லாம் இன்று  'அம்போ' என்று அனாதையாய் கேட்பாரற்றுக் கிடந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் வாழ்க்கை இல்லாமல் செய்ததன் அடையாளமாகத் தனது வெற்றியை மெல்லிய காற்று மூலம் இறந்த மக்களைப் பார்த்துக் கொண்டே பறைசாற்றி வலம் வந்துகொண்டிருந்ததுமருந்திற்காவது ஒரு உயிராவது பிழைத்திருக்கின்றதா? என்று வேவு பார்க்க வந்தது சூரியக் கதிர்கள்.
"பூமியாவது அழிவதாவது, வேறு வேலை இருந்தால் பாருங்கள்!"என்று ஆணித்தரமாய் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்இதுநாள் வரை பிரபஞ்சத்தின் அதிசய படைப்பு பூமியைக இருந்தது. அந்த  பூமியின் அதிய படைப்புக்கு கண்ணடி பட்டதற்குப் பரிகாரமாய் அழிவு வேலைகள் கட்சிதமாக நடந்து முடிந்தது. 
இத்தனையும்  நடந்த பின்னரும் அந்த அசுர அழிவையும் தாண்டி ஏதோ ஒரு மூலையில் முக்கல் முனகல் சத்தம் ... ".... ய்..யோ ... அப் ...பா ..."  என்று உடல் சோர்வில், பசி மயக்கத்தால்வரும் சப்தம் கேட்டது. சற்று நெருங்கியபோது அவன் ஒரு இளைஞன்? உயிர் கொண்ட சிலை. அழிவின் சத்தி  தவறுதலாக ஒரு உயிரை விட்டுவைத்தது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய்கனிகளை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னரே, தான் இருக்கும் நிலைமையினைச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி ஆள் அரவமில்லை. ஒருவிதபயம் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் எங்கே? என்ன ஆனார்கள்? தேடி நடந்தான் ... நடந்தான். கண்ணுக்கு எட்டியவரை யாருமில்லை? 'அப்போ நான் மட்டுமா.., உயிருடன் ..!  இந்த உலகில்..!' என்று தனக்குள் பேசியவாறு விடை காண அலைந்தான். தினமும் உண்பது, உறங்குவது, அலைவது என்றபடி நாட்கள் பல கழிந்தன. போக போக நம்பிக்கை இழந்தான். ஆனாலும் ஒரு மூலையில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் அவன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வீண் போகவில்லை. அவன் எண்ணம்.
ஒரு நாள், தூரத்தில் அ..தோ ......ரு ...உருவம் அசைவது தெரிந்தது. அவன் மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமானது. நெருங்க நெருங்க உருவம் சற்று தெளிவாக தெரிந்தது. அந்த உருவமோ இவனைக் கவனித்ததாக தெரியவில்லை. நீளமானத் தலைமுடி, நளினமான நடை, தளர்ந்த உடல்! அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்துக் கொண்டு அதை நோக்கி ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அது, அவள் ஒரு பெண்! 'இவளும் என்னைப் போலவே தப்பித்தவளாகத்தான் இருப்பாள்!' என்பதை உறுதி செய்து கொண்டான்.
'ஒரு வேளை இவளும் என்னைப் போல, இங்கு உயிரோடு யாராவது இருக்கிறார்களா? என்று தேடி அலைந்து, கடைசியில் யாரும் இல்லாததால், தான் உயிரோடு இருந்து எவ்வித பலனும் இல்லை என எண்ணி ... தன் உயிரை மாய்த்துக் கொள்ள.... ..... அப்படி இருக்கவே கூடாது' என்று துடித்தான்.
அவனுக்கு உதவிடும் ஆருயிர்மருந்து இவள்தான் என்று உறுதியோடு நம்பினான். அவளை எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்று நினைத்தவன் அவனுக்குத்தெரிந்த மருத்துவத்தை அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். அவளின் நாடி துடிப்பு இயல்பாக இருந்தாலும், இவனின் நாடி துடிப்பு அதிக வேகத்தில் துடித்தது. ஒருவழியாக இதயத்துடிப்பு இருப்பதை உறுதி செய்த பின்பே இவனின் நாடி சீரானது. சற்றும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.
உதடு வறண்டிருந்தது. உடல் சுண்டியிருந்தது. அதற்கு காரணம், தண்ணீர் தாகம், பசி என ஊகித்தவாறு இரண்டையும் கொண்டு வந்தவன், முதலில் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். உடல் அசைந்தது. வாயில் தண்ணீர் ஊற்றினான். முதலில் தண்ணீர் வெளியே கொட்டியது. அதன்பின்  சிறிது சிறிதாக தண்ணீரையும் உணவையும் விழுங்கினாள். அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. அப்போது யார் இவள்? எங்கிருந்து வந்திருப்பாள்? போன்ற கேள்விகளை அவனேக் கேட்டுக்கொண்டான்.
சற்று கண்களை திறந்து பார்த்தவள், அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. உடம்பு சுறுசுறுப்பானது. சற்று எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் பேசுவதற்கு தெம்பு இல்லாமல் மௌனமாக இருந்தாள்.  கட்டாயம் அப்போது அவள் எண்ணத்தில் அழிவுநேர கூச்சல்கள், அலறல்கள், கோரக்காட்சிகள் ஒரு முறை வந்துபோயிருக்கும்.


மீண்டும் அமைதி காத்தாள். அவன் எண்ணம் போன்றே அவளுக்கும் இருந்தது.
அன்பு காட்ட, ஆதரவு கொடுக்க, உதவி செய்திட ஒரு உயிராவது இருக்கின்றதே என்று இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவனின் எல்லா உதவிகளையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். மீண்டும் மௌனம். இவனுக்காக அவள். அவளுக்காக இவள் என்கிற சூழ்நிலையே அவர்களிடத்தில் நிலவியது.
பகல் இரவுகள் பல கடந்தன. மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்தாள். "எனக்கு தெரிந்தவரை நாம் இருவரும்தான் உலகில் உயிரோடு இருக்கிறோம் போலத் தெரியுது?"
"எனக்கும்   அப்படித்தான் தோன்றுகின்றது" என்றான்.
"இனி நாடு என்பது ஏதுமில்லை, ந்த உலகமே நமதுதான்" என்றாள்.
இந்த பேச்சு நீண்டது. சட்டென்று "அப்படியானால் நாம் மற்றோரு 'ஆதாம், ஏவாள்' அப்படித்தானே " என்றாள்.

"....... ஆமாம் " என்றபோது இருவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
"நமக்கு மீண்டும் ஒரு புது உலகம் படைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கு. இனி நம் பெயர்களும் அந்த 'ஆதாம், ஏவாள்' போல நிலைத்து நிற்கும். இனி நாம்தான் இப்புதிய உலகைப் படைக்கப்போகும் தாய், தந்தை" என்று நினைக்க நினைக்க அவர்களுக்குப் பெருமையாய் இருந்தது. 
"இந்த புது உலகத்தைப் படைக்கும் பெரிய பொறுப்பு நம்மிடம் இப்போது உள்ளது. இனி நம் பரம்பரையினர் உலகத்தை ஆள்வார்கள்!" அவனின் பேச்சு மகிழ்ச்சியைத் தந்தாலும் உடனே மௌனத்தில் ஆழ்தியது.
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"நாம் மற்றோரு ஆதாம் ஏவாள்! ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனாலே அழிந்தது? பொறாமை, போட்டி, கோபம், தீய எண்ணங்கள், பேராசை என்பது என்று நம் இருவருக்கும் நன்றாகத் தெரியும்." வாதங்கள் காரசாரமாக நிகழ்ந்தன.

"உனக்கு புதிய உலகம் படைக்க விருப்பம்தானே?" அவளிடத்தில் கேள்வியை எழுப்பினான்
மௌனம், யோசனை. மீண்டும் மௌனம்.. யோசனை. சட்டென்று "எனக்கு துளிகூட விருப்பமில்லை" என்ற ஒரு குண்டைத் தூக்கி போட்டாள். அவனின் மகிழ்ச்சியான எண்ணம் இடி தாக்கியதுபோல் சுருண்டது. அவனின் கற்பனை உலகம் மெய்யாக உருவாக ஆரம்பிப்பதற்குள் அழிந்ததுபோல உணர்ந்தான்.
"ஏன்?.. ஏன்? இந்த திடீர் மனமாற்றம்" என்ற பல கேள்விகளை அடுக்கினான்.
"ஆம். ஆசையோடு நாம் சந்ததியினரை படைப்போம். அவர்கள் முதலில் பாசமாகத்தான் இருப்பார்கள். பிறகு பாசம் மோசம் செய்யும். ஏமாற்றும். குறிப்பாக பெண் இனத்தை பாடாய்ப்படுத்தும். உறவுகள் பெருகப் பெருக ஒருவருக்கொருவர் போட்டி, பொறமையில் ஆரம்பித்து பின்னர் சண்டையாய் வளரும். இப்போதுள்ள இந்த உலகம் மாதிரிப் பல நாடுகளாய்  மாறி அவர்களுக்குள் மீண்டும் 'நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்' என்கிறப் போட்டியாகமாறும். "கடைசியில் ஒருநாள் இப்போது நடந்ததுபோல் வெகுசீக்கிரமே நாம் படைத்த புது உலகம் அழிந்துபோகும். அந்த காட்சிகள் என் கண்ணுக்குள் தெரிகிறது. அந்த அழிவுக்கு நாமே காரணமாக இருக்கவேண்டுமா?
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"அதற்காக இந்த அற்புத உலகத்தை நாமே அழிக்கலாமா? இந்த நல்ல வாய்ப்பு யாருக்கும் இனி கிட்டாது. உன் முடிவை மாற்றிக்கொணடால் இந்த உலகம் படைக்கப்பட்டதன் பலனை நாம் கொடுக்கலாம்" என்ற அவனின் தேனினும் இனிய வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தது.
"இனி நாம் இருவரும் புதிய உலகத்திற்கு அடியெடுத்துவைக்கும் புண்ணியவான்களாக மாறுவோம். புனிதமான மறு உலகப்பயணத்திற்கு ஆயுத்தமாவோம்"         

"நீ சொல்வது சரிதான். இன்றைய  நமது சுகம், மகிழ்ச்சி நாளை மலரும் நாட்களிலும் நிலைத்து நிற்கும்! என்பதில் சந்தேகமே இல்லை. நாம் நினைத்தபடி புது உலகம் கட்டாயமாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பாகப் பாசமாக உதவியாக நடந்து கொள்வார்கள் என்பது உண்மையில் நடக்கும். நமது பரம்பரை அணுக்களிலிருந்து வரும் மனிதன் அதிசக்தி படைத்த மனிதனாகவே இருப்பான். அவனின் எண்ணங்கள் ஆரம்பத்திலுருந்தே போட்டி பொறாமை விதைகளை அழித்திடவேண்டும். ஆன்மீகப்பாதைக்கு வித்திடவேண்டும்" படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்டான்.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
"சரி. நாம் இந்த உலகுக்கு கடைசி ஆதாம் ஏவாளாக இருப்பதை விட மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இருப்போம். தொடங்கியது எப்படியோ அப்படியே மீண்டும் தொடங்கிடுவோம். நம் அணுக்களில் கலந்திருக்கும் தந்திரம் மற்றும் ஏமாற்றும் குணம் நாம் உருவாக்கும் மனிதனுக்கு இருக்கக் கூடாது. அதனால்.... ? " சற்று நிறுத்தினாள்.
"அதனால்"
"உலகில் அன்பே உருவான மனித இனம் பெருக இன்றிலிருந்து பாடுபடுவோம்" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருத்தபோது இருவர் உடலில் இனம்புரியாத மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தது. உடல் சோர்ந்து, வாடி வதங்கி ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் இருவரும் தரையில் துவண்டுவிழ ஆரம்பித்தனர். தோல்கள் சுருங்கின. உடல் முழுவதும் சூடுபரவ ஆரம்பித்தனர்.
"என்ன நடக்குது? ஒருவேளை அணுகதிர் வீச்சு உடலில் .. உடலில்"
"ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றுது. அப்போ நமது எண்ணம்.. அந்த புது உலகம் .. புது மனிதர்கள் .."
"அதுவும் இந்த அழிவில் அழிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்"
"அப்போ நாம உயிர்வாழ மாட்டோமா?"

" இந்த உலகுக்கு மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இல்லாம கடைசி ஆதாம் ஏவாளாக இருந்து உலகைவிட்டுப் போகிறோம்.. மகிழ்ச்சியாக.."   
***********************

Tuesday, 24 July 2012

பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை



   பெரிய பெரிய ஆசைகள் - 
முதல் பரிசு பெற்ற கவிதை  




மண்ணில் வாழும் மனிதனும் சரி 
விண்ணில் இருக்கும் தேவனும் சரி 
முற்றிலும் துறந்த முனிவனும் சரி 
ஆசையில்லாமல் இருந்தனரா?

ஆசையில் அசை போட்டு 
கற்பனையில் மிதந்து 
காற்றினிலே கோட்டை கட்டுவார்கள் 
சோம்பேறிகள்.

ஆசையையே ருசி பார்த்து 
நிஜவாழ்வில் தின்று ஏப்பமிட்டு 
அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்பவர்கள் 
உழைப்பாளிகள்.

பிறந்த குழந்தை முதல் 
இறக்கும் மனிதன் வரை 
பூமி பிறந்த காலம் முதல் 
அது அழியும் காலம் வரை 
எங்கும் எப்போதும் இருப்பது ஆசை! ஆசை!!

ஆடையில்லாதவன் அரை மனிதன் 
ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல.
ஆசை எளிதில் புகுவது 
ஆசை உலகத்தை ஆட்டி படைக்கிறதே .

நேற்று கற்கால மனிதன் 
இன்று கம்பியூட்டர் மனிதன் 
நாளை ........... மனிதன் !
எல்லாமே ஆசை! ஆசை !!

காந்திஜீக்கு அஹிம்சை மீது ஆசை 
சுதந்திர இந்தியா பிறந்தது 

புத்தனுக்கு ஆசையே துறக்க ஆசை 
மகனாக மாறினார் 

அன்னை தெரசாவுக்கு மக்கள் தொண்டின் மீது ஆசை 
ஏழைகள் வாழ்கின்றனர் 

ஷாஜஹானுக்கு காதல் மீது ஆசை 
உலக அதிசயம் உருவானது 

ஆம்ஸ்டிராங்க்கு விண்ணில் பறக்க ஆசை 
நிலவினில் நடந்தார் 

டென்சிங், ஹிலாரிக்கு வானத்தை தொட ஆசை 
இமயத்தின் முனையை அடைந்தார் 

இவர்களின் பெரிய பெரிய ஆசைகள் 
கால ஏட்டிலே நீங்கா இடம் பிடித்தன 

எனக்கும் பெரிய பெரிய ஆசைகள் உண்டு 
இந்த ஈராயிரத்தொன்றாம் நூற்றாண்டில் !

பாகிஸ்தான், இலங்கையை நண்பர்களாக பார்க்க ஆசை 
இந்து-முஸ்லிம்-சிங்களர் பரம்பரை எதிரிகள் அல்லவே 

தீவிரவாதிகளை நல்லவர்களாக திருத்த ஆசை 
பிறக்கும் அனைவரும் நல்லவர்கள் தானே.

சாதி, மத பிரிவினை சுவரை இடித்திட ஆசை 
எல்லா மனிதனில் இருப்பது ஓருயிர் தானே.

பாமரனை படித்தவனாக்க ஆசை 
அறிவு ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமல்லவே

பூமி செல்வங்களனைத்தும் பொது தானே.

ஏழ்மையை உலகை விட்டு  ஒழித்திட  ஆசை 


தனிக்குடித்தன  நாடுகள் நீக்கி கூட்டு குடும்ப உலகு காண ஆசை 
உலகம் என்பது ஒரே வீடல்லவா!

எயிட்ஸ் மருந்தினை கொடுக்க ஆசை 
முயன்றால் முடியாது ஏதுமில்லையே 

குறுகிய மனப்பான்மை இல்லா  பரந்த மனம் காண ஆசை 
மனிதன் ஒவ்வொருவரும் சுயநலவாதிகள் அல்லவே 

அடாவடித்தனம் , ஊழல் இல்லாத அரசியல் பார்க்க ஆசை 
எல்லோரும் சத்தியத்தை விரும்ம்புவது சகஜம் தானே!

இரு கைகொண்டு சுனாமியை தடுக்க ஆசை 
பூகம்பத்தை காலால் அழுத்தி நிறுத்திட ஆசை.
உடலால் வெள்ளத்தை கரை கட்ட  ஆசை.
உடல் உழைப்பால் பசி, பஞ்சம் நீக்கிட ஆசை.

கடைசியில் எனது பெரிய ஆசை 
என் வாழ்வில் இறைவனை காண ஆசை அவன் 
காற்றில் மறைந்ந்திருந்தாலும் சரி 
சுடராக ஒட்டி கொண்டிருந்தாலும் சரி 
நிலத்தில் புதைந்திருந்தாலும் சரி 
நீரில் கரைந்திருந்தாலும் சரி 
மேகத்தில் ஒளிந்திருந்தாலும் சரி 
எனது ஆசை அவனை தேடி அடைவதே.

***********************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..






Monday, 23 July 2012

பைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை 





(  மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறந்த கவிதைகளுள் ஒன்று.)


பாரதியே! தமிழில் சுதந்திர தாகத்தை தூண்டினாய் 
பாமரன் புரிய பாட்டிலே எளிமை புகுத்தினாய் 


புதுமை பெண்களை கொடுத்து புரட்சி படைத்தாய் 
பார்த்தினீய கலையான நஞ்சு செந்தமிழில் நுழைந்தால் 
பொறுப்பானா ? உன் வழி தமிழன் ! பொசுக்குவான் ?


தமிழா ! பார்த்தினீய  களைக்கு  விலையாகாதே 
தமிழ் பயிரில் கலக்க நினைக்காதே.


இன்று களை  ! நாளை பைந்தமிழிழை அளிக்கும் உலையாக்காதே 
மறக்காதே! பஞ்ச பூதத்தையும் வெல்ல வல்லது தமிழ்!


காற்றில் கலந்து உயிர் சுவாசமாய் இயக்கும் 
அக்னியில் அழியாது  பிரகாசமாய் ஒளிரும் 


நிலத்தில் புதையாது உலக உயிரை காக்கும் 
ஆகாயத்தில்  மறையாது மலையாய் பொழியும் 


நீராய் கொடுத்து பயிர் களை பசுமையாக்கும் 
முறத்தால் புலியை துரத்திய தமிழச்சி பரம்பரை !


இளமை நாகரீக பசப்பு வார்த்தையில் மயங்காதே 
இனிய தமிழன் பண்பாட்டை விற்று விடாதே 


பாரதியே ! உன் ஆயுசு நீண்டிருந்தால் 
பார்தினீயக் களையை கவியால் வேரறுத்து தீயிட்டிருப்பாய்   


செய்வோம் சத்தியத்தை ! துரத்துவோம் பார்தினீ யத்தை   
காத்திடுவோம் தமிழை! போற்றிடுவோம் தமிழன் கலாச்சாரத்தை!


************************************************************************

Saturday, 21 July 2012

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை 






அகில இந்திய தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் மாநில அளவில் நடந்த புது கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது 

புகை பிடிப்பவனே 
கொஞ்சம் நில்.


என்னை ஆசையாய் எடுத்தாய் 
ஆதரவாய் முத்தமிட்டாய் 
அன்பென எண்ணி ஏமாந்தேன் - பிறகு 


தீயிட்டும் பொசுக்கினாய் 
'இறந்து விட்டேன்' என்று எண்ணி.


நானும் பொசுக்குவேன் - உன் 
உடம்பினுள் புகையாக மாறி.


அது மட்டுமா?
சுகத்தைத தந்த நான்- உன் 
சுகத்தை அழிக்கப்போகிறேன் .


ஒரு நாள் உன்னையும் 
'புற்று நோய்' சூட்டால் 
எரித்துச சாம்பலாக்குவேன்.


என் வெள்ளாடையை 
எரித்தாயல்லவா?  உன் 
மனைவிக்கு அந்த வெள்ளாடையை 
பரிசளிப்பேன்.


பௌர்ணமி போல  இருக்கும் 
உன் வாழ்வை  என் 
புகை கொண்டு மூடி 
அமாவாசையாக்குவேன்.


இதெல்லாம் தேவையா? நான் 
என்ன உன் கை பாவையா.?


மனிதா 
என் புகை உயிருக்குப் பகை 
அதை மறந்துவிட்டால் 
வாழ்வை துறந்துவிடுவாய்.!


என்னை முத்தமிட்டவர்கள் 
மாண்டு போவார்கள் 
ஜாக்கிரதை!


'ரெட்' அபாய அறிகுறி 
'சிகரெட்' மரண அறிகுறி.