31.5.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 46
தலைப்பு: இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ?
மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.
இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மன்றத்தின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. ,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன் வரவேற்றார்.ஆலோசகர் வீர ஆதிசிவத் தென்னவன் முன்னிலை வகித்தார்..புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .
கவிஞர் இரா .இரவி தலைமையில் கவிஞர்கள் முனைவர் இரா . வரதராசன் ,கு .கி கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அ.அழகையா, பா..பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,ச .லிங்கம்மாள், செ. அனுராதா, மா ,இதயத்துல்லா ( இளையான்குடி ) சு . பாலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை படித்தனர் .
சிறப்பாக கவிதை பாடிய கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,செ. அனுராதா ஆகியோருக்கு தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூலும் ,கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் முனைவர் இரா வரதராசன் நூலும் பரிசாக வழங்கிநார்கள் .
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர்கள் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********
நன்றி தினமலர் ஜூன் 1 , 2026
இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?
- கவிஞர் இரா. இரவி
*****
உலகின் முதல் மொழியான தமிழும்
உலக மொழியான ஒப்பற்ற ஆங்கிலமும்
இருவிழியாக இருமொழி இருக்க
இன்னல் தரும் மூன்றாம் மொழி எதற்கு?
இந்தியை புகுத்திட சதி செய்கின்றனர்
இந்தியை விரும்பவில்லை தமிழர்கள் !
வேண்டாத மொழியை திணிப்பது ஏனோ?
வீண் வம்புக்கு சண்டைக்கு அழைப்பது ஏனோ?
இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களிடம்
எப்போதும் இருக்கும் அறிந்திடுங்கள்!
வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்
வற்புறுத்தி திணிக்க முயல்வது மடமை!
இருமொழி படிப்பதற்கே இன்னல் வருவோருக்கு
மும்மொழி கொடுப்பது முறையே அன்று !
ஏழைக்குழந்தைகளுக்கு எதற்கு இந்தி
இந்தி படித்தோரே இங்கு வருகின்றனர் பிழைக்க !
மூன்று மொழியை ஏற்றால் தான் நிதி என்பது
முட்டாள்தனமான மூர்க்கத்தனமான கருத்து!
கல்வி நிதியை தராமல் இருப்பது முறையோ?
கண்மூடித்தனமாக திணிப்பது சரியோ?
சர்வாதிகாரப் போக்கினை விடுத்து
சகமாநில உணர்வை மதித்து நடந்திடு!
உடனடியாக கல்விநிதியை விடுவித்திடுக!
உமக்கு அதிகவரி செலுத்தும் தமிழ்நாட்டை மதித்திடுக!
**********
*இரு மொழி இருக்க*
*மும்மொழி எதற்கு* ?
ஒன்றெனச்
சொல்ல
உண்டாவது *ஒற்றுமை* !


இரண்டெனச் சொல்ல
இரண்டாவது **வேற்றுமை!*
*
(2)
(2)வேற்றுமையில் ஒற்றுமை
காண்பது *இந்தியா* !
வீணில் மூன்றாய்
நுழைவது
*இந்தி* யா?(4)
ஒரு வழிப்
*பாதைப்* 

பயணத்தில்
ஒரு குழப்பம் இல்லை!
இரு வழிப்
*பாதைப்* 

பயணத்தில்
வழிகாட்டி வர வேண்டும்!(6)
முந்தி வரும் மும்மொழியால்
பிந்திடும் நாட்டு மொழிகள்!
ஒன்றிருக்க
ஒன்று வந்தால்
என்றுமே குழப்பம் !(8)
*தமிழின் பெருமை* 

பொதிகை மலையில் *பிறந்தவளாம்* !
பூவை பருவம்
*அடைந்தவளாம்!*
கருணை நதியில் *குளித்தவளாம்!*
காவிரி கரையில்
*களித்தவளாம்!*
-உலக
வரைபடம் வரைந்த
நாடெல்லாம் பரவிய தமிழ்
*உரை தமிழ் !*
*உலகத் தமிழ்* !(14)
**தமிழர்*
*பெருமை*

ஒரு தாய் மக்கள்
*நாமென்போம்* !
ஒன்றே எங்கள் *குலமென்போம்* !
உரிமையில் நான்கு
*திசை கொண்டோம்!*
உறவினில் நண்பர்கள்
*பலர் கொண்டோம்* !
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்!- பேசும்
*முத்தமிழ்*
என்னும் *உயிர்*
*கொண்டோம்* !(20)
**நன்றே!* 

*நன்றே* !*
கற்கை *நன்றே* !
-தாய்
-தாய் மொழிக் கல்வி
கற்கை *நன்றே* !

ஒன்றே ஒன்றே

*இருமொழி*
கொள்கை
கொள்கை ஒன்றே

*நன்றே(24)*


சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி*
பெங்களூர்
**29.05.2026*
***************
மாமதுரைக் கவிஞர் பேரவை*
*தலைப்பு: இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?*
தாய்மொழி தமிழே தழைக்கும்
தரணியில் புகழே நிலைக்கும்
ஆங்கிலம் அறிவின் விளக்காம்
அகிலம் திறக்கும் சிறகாம்
இருமொழி போதும் இனிதே
இளந்தளிர் வளரச் சிறப்பே
மும்மொழி சுமையே மிகையே
மூளையை குழப்பும் வினையே
தமிழில் அறிவியல் உண்டு
தரணியாளும் மருத்துவம் உண்டு
அரசியல் ஆன்மிகம் உண்டு
அறிவின் இலக்கியம் உண்டு
தொல்காப்பியம் முதலாம் இலக்கணம்
தொன்மை மொழிக்கோர் அணிகலன்
வள்ளுவம் வாழ்வை வகுக்கும்
வையம் போற்றும் நெறியாம்
கல்வி நம்மாநில உரிமை
காத்தல் தமிழரின் கடமை
மும்மொழிக் கொள்கை சதியே
முன்மொழிந்தால் தடுப்பார் நிதியை
ஒன்றியம் திணிக்கும் மொழியை
உதறி எறிவோம் இழிவை
இருமொழிக் கொள்கை நன்றே
என்றும் வெல்லும் உண்மையே/
------------------------------
மதுரை ந. சுந்தரம் பாண்டி
7200018958*********
இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
வாய் பேசுவதற்குத் தாய்மொழி வேண்டும்
வயிறு நிரப்புவதற்கு ஆங்கிலம் வேண்டும்
வாழ்க்கையை ஓட்ட இருமொழிகள் வேண்டும்
வழக்கத்தில் இல்லாத மும்மொழி ஏன் வேண்டும்?
இருகைகள் போதும் ஓசைகள் எழுப்புவதற்கு
இருகண்கள் போதும் காட்சிகளை ரசிப்பதற்கு
இருமொழியில் செம்மொழித் தகுதி ஒன்று
அந்நிய நாடுகளைச் சமாளிக்க மற்றொன்று
விருப்பமாய் எத்தனை மொழிகளும் படிக்கலாம்
வெறுப்பாய் தெரியாத மொழியை படிக்கலாமா
சிரத்தையோடு இருமொழி படிப்பது நன்றாம்
சிரமத்தோடு மும்மொழியைப் படிப்பது நல்லதா?
இவ்வுலகம் செயற்கை நுண்ணறிவு உலகம்
எம்மொழியிலும் மொழி பெயர்க்கும் காலம்
இருமொழி அறிந்தாலே ஒழுக்கமாய் வாழலாம்
எங்கும் பறக்கலாம் எதையும் சாதிக்கலாம்
வாழ்வுக்கு மூலதனமாக இருமொழியைக் கற்கலாம்
வெற்றுக் கூச்சலுக்காக மும்மொழியைக் கற்பதா?
தேனும் பாலுமாய் தெவிட்டாத இருமொழிகள்
தென்றலைப் புயலாக்கும் மும்மொழி தேவைதானா?
*******
AI Review
*********
*************
















































No comments:
Post a Comment