Pages

Saturday, 4 August 2012

வாழ்கையில் நிம்மதிக்கு இன்றே சேமியுங்கள் - நீங்களும் இலட்சாதிபதி

           நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்
வாழ்கையில் நிம்மதிக்கு 


    நிம்மதி தேவையா ? இன்றே சேமியுங்கள் ! 
                                              

நமது வாழ்கையில் கடைசி வரையில் தேவைபடுவது ஆரோக்கியம் தரும் நல்ல உணவு , சுத்தமான உடை, சுகாதாரமான வாழுமிடம். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் வாழ்க்கை நரகமாகி,கடைசி வரையில் நாம் நிம்மதியை தேடி அலைந்துகொண்டே இருக்க வேண்டியது தான். இந்த மூன்றும் நமக்கு வேண்டுமென்றால் கட்டாயம் பணம் வேண்டும். இன்றைய உலகில் உன் கையில் பணம் இல்லை என்றால் நீ தனி மனிதன் தான். சீக்கரமே பித்து பிடித்தவன் போல் ஆகிவிடுவாய்.ஏன், உன் நிழலும் உன்னை மதிக்காது. இங்கு நிழல் என்பது உன்னுடன்   கூட இருப்பவர்கள்.அதாவது அம்மா அப்பா, பெண்டாட்டி பிள்ளைகள் ஆவார்கள்.



அதேபோல் வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது குடும்ப உறுப்பினர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கடமை, ஒருவேளை வேலை இல்லாமல் இருந்தால் அப்போது சமாளிக்கும் திறமை மற்றும் பண பலம் , தனக்கோ அல்லது தன்னை சேர்ந்தவர்கள் நோய்வாய்பட்டால் அதை எதிர் கொள்ளும் தைரியம்,தனக்கோ அல்லது தன்னுடன் இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அதனை எதிர்கொள்ளும் மனோ தைரியம் போன்றவை. இந்த பணம் பல வழிகளில் நிறைவு செய்கிறது.


நாம் அனைவரும் பணத்தை  தோ பொருள்கள் வாங்குவதற்கும்,கேளிக்கைகளில் ஈடு படுவதற்கும் தான் உபயோகமாய் இருக்கின்றது என்கிற கண்ணோட்டத்தில் தான் நாம் பார்க்கிறோம். அந்த பணத்தை ஒரு விதையாய் பாருங்கள். உதாரணமாக விதை நெல்லின் மகிமை உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதாவது ஒரு மூட்டை விதை நெல்லை வைத்து ஒராயிரம் மூட்டை நெல்லை நாம் பெறலாம். அதற்கு தேவை விளைநிலம், விதை நெல், பக்குவமாக பராமரிப்பு, சரியான நேரத்தில் அறுவடை செய்வது. இவைகளே   போதுமானது . 



அதேபோல் பணத்தை அறுவடை செய்ய சிறிய முதலீடு, பாதுகாப்பும், வளர்ச்சியையும் தரும்  திட்டம் மற்றும் இடம் (நிறுவனம் ), முதிர்வு காலம் வரை பொறுமை. பிறகு அந்த முதலீட்டை மீண்டும் முதலீடு செய்வது.இப்படி கடைசி வரையில் பின்பற்றினால் உங்களின் இந்த  சிறிய முதலீடு உங்கள் வாழ்கையில் நிம்மதி  பெற்று தரும் என்பதில் சிறிது கூட சந்தேகம் கொள்ள வேண்டாம்.


இன்றே சேமிப்பீர் !

நிம்மதி அடைவீர் !

******************************************************



தொடரும் ...     

             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

     

Thursday, 2 August 2012

வெற்றி மனிதன் உருவாகும் விதம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



வெற்றி மனிதன் உருவாகும் விதம் 


கரடு முரடான கல்லை செதுக்காமல்           பலர்   வணங்கும்  அழகான சிலை உருவாகாது. 


தங்கத்தை உருக்கி சரியான முறையில் தட்டி  வளைக்காவிட்டால் பலர் விரும்பி அணியும்      நகையாக மாறாது.




வைரத்தை பட்டை தீட்டி ஒளி ஏற்றாவிட்டால் மதிப்புள்ள பொருளாகாது . 


நீ வெற்றி மனிதனாக உருவாக வேண்டு மென்றால் முயற்சி என்கிற வெப்பத்தால் உன்னை உருக்கி, பயிற்சியினால் சரியான அளவில் மனதை தட்டி , எண்ணங்களை வளைத்து, அறிவை பட்டை போல் தீட்டி அனைவரும் போற்றும் அன்பை காட்டி, துயர் துடைக்கும் செயல்கள் பலவற்றை செய்தால் நீ  ஒரு வெற்றி மனிதன் தான்.


கஷ்டம் வருகிறதே என்று கவலைபடாமல் கடுமையாய் உழைத்து முயற்சி செய்தால் நீங்கள்ஒரு வெற்றி மனிதன் தான்.    


*******************************************
இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


முயற்சிக்கான முறையும் வெற்றியின் இரகசியமும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



முயற்சிக்கான முறைகளும் 
வெற்றியின் இரகசியமும் 




வாழ்கையில் மிக உயந்த நிலையில் பல வெற்றி மற்றும் சாதனைகள் புரிந்த ஒருவரிடம் "நீங்கள் இந்த உயந்த கௌரவமிக்க பல  வெற்றியை எவ்வாறு அடைந்தீர்கள் என்பதன் ரகசியத்தை எங்களுக்கு கூற முடியுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே "ஓ ! தாராளமாக !" என்றார். அவரை மெளனமாக பார்த்தேன்.மேலும் அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்ற ஆவல் மற்றும் ஆர்வத்துடன் செவி சாய்த்தேன். ஏனென்றால் அதை நுண்ணிப்பாக கவனித்து அதேபோல் நானும் எனது வாழ்க்கையில் பின்பற்றி பல வெற்றிக் கனிகளை சுவைத்தே தீரவண்டும் என்கிற தனியாத ஆசை கூட அல்ல ! பேராசை கூட சொல்லலாம்.

அவர் தொடர்ந்தார் "அதாவது நான் எனது  இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து முயற்சி  செய்து கொண்டே இருப்பேன். இது  தான் என் வாழ்கையில் நான் அடைந்த வெற்றிக்கான இரகசியம்" என்றார்.




அதைக் கேட்டவுடன் "பூ! இவ்வளவு  தானா ? இந்த எளிமையான வார்த்தைகளை நான் ஏற்கனவே புத்தகங்களில் பலமுறை படித்த விஷயம் தான் , புதிதாக ஒன்றுமில்லையே ! " என்று சிறிது வருத்தப்பட்டேன்.

மீண்டும் அவரே "என்னப்பா ! வெற்றிக்கான இரகசியம் தெரிந்துவிட்டதா?" என்று மறுபடியும் என்னிடத்தில் கேட்டார். நானோ புரிந்த மாதிரி இருக்குது ஆனால் புரியவில்லை என்ற முழிப்புடன் "ஐயா ! நானும் உங்களை போல் இடைவிடாது முயற்சி செய்து வந்தேன் . ஆனால் தோல்வி தான் எனக்கு கிடைத்தது. வெற்றி கிடைக்கவில்லை. நீங்கள் செய்த  முயற்சிக்கும் நான் செய்த  முயற்சிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா? உங்கள்  முயற்சி வெற்றி பெற்றது என்  முயற்சி தோற்றது.அதற்கான காரணம் என்ன?"  என்று கேட்டேன்.

அவரோ "  முயற்சி இரண்டும் ஒன்று தான்.ஆனால் இதற்கு பதில் சொல்லுங்கள்.ஒரு முறை  முயற்சி செய்து தோல்வி அடைந்தீர்கள் மீண்டும் என்ன செய்தீர்கள்? "

"மீண்டும் அதே முயற்சியை தொடர்ந்தேன். மீண்டும் தோல்வி தான் கிடைத்தது".

"இங்கு தான் அனைவரும் தவறு செய்கின்றனர்.நீங்கள் ஒரு முறை அல்லது இரு முறை முயன்று தோல்வி அடைந்தீர்களென்றால் நீங்கள் செய்யும்  முயற்சி முறை அல்லது நீங்கள் செல்லும் பாதையில் தவறு இருக்கின்றது. நீங்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போது தோல்வி அடைந்த முறையையோ அல்லது முன்பு சென்ற பாதையிலேயே  முயற்சி செய்துகொண்டே இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்க்கை முடியும் வரை தோல்வியைத்தான் தழுவுவீர்கள் . வெற்றி கிடைப்பது அரிது தான்." அவரே தொடர்ந்தார். 



உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிக்க ஒரே இழையை வைத்து ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டே வந்திருந்தால் நிச்சயம் நமக்கு மின்சார விளக்கு கிடைத்திருக்காது.அவர் கிட்டத்தட்ட 1000 வகையான இழைகளைக் கொண்டு தொடர்ந்து புது புது முறையில் முயற்சி செய்ததினால் தான் இந்த மகத்தான வெற்றி அவருக்கு கிடைத்திருக்கின்றது.





ஏன், நமது இந்திய சுதந்திரம் பலவழிகளில் முயன்று அதாவது உண்ணாவிரதம், ஒத்துழையாமை, பல போராட்டங்கள், சத்யாகிரகம், சுதேசி இயக்கம் போன்றவையெல்லாம் கையாண்டு கடைசியில் 'அஹிம்சை' வழியில் தான் நாம் சுதந்திரம் அடைந்துள்ளோம்.   



அதாவது நீங்கள் ஒவ்வொரு முறை  முயற்சி செய்யும்போது நீங்கள் செய்த முயச்சியில் ஏதேனும் தவறுதல் இருக்கின்றனவா? என்று ஆராய வேண்டும். அப்படி எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் வேறு  என்ன வழி ? என்று சிந்திக்க வேண்டும். பிறகு  அந்த வழியை எவ்வாறு தேர்வு செய்வது ? எப்படி திட்டமிடுவது ? யாரைக்கொண்டு அடைவது? என்பதை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதி அதை பலமுறை படிக்கவேடும் . அப்படி  படிக்கும் போதே நீங்கள் செய்த தவறுகளும், அதை எப்படி திருத்தி செய்யவேண்டிய முறையினையும் உங்களுக்கு தெளிவாக தெரியும்.

மீண்டும் முயற்சி ?! மீண்டும் ஒருவேளை தோல்வி அடைந்தால் மீண்டும் நீங்கள் செய்த முறை அல்லது பாதையினை சற்று மாற்றி அமைத்து இடைவிடாது முயற்சி செய்யும்போது உங்கள் தோல்வி இருள் மறைந்து வெற்றி ஒளி  படர ஆரம்பிக்கும்.இந்த முயற்சியின் தோல்வி தான் பல துறைகளில்  வெற்றி பெற உதவிடும் படிக்கட்டு.

   
மேலும்  விளையாட்டில், அரசியலில்,கல்வியில், தொழிலில், ஆன்மீகத்தில், அன்றாட வேலைகளில் பலர் இந்த வகையில் தான்  முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்". என்று தனது உரையை முடித்துக்கொண்டார். 

எனக்கு இப்போது வெற்றிக்கான ரகசியம் நன்றாக புரிந்து விட்டது. அவரிடமிருந்து விடை பெற்று எனது முயற்ச்சியை தொடர ஆரம்பித்துவிட்டேன் 



நீங்களும் முயற்சியின் பல  முறைகளை பின்பற்றி வெற்றி பல அடையுங்கள்.  
        
*****************************************

இன்னும் வரும் .... 




இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                              அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு         தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



Wednesday, 1 August 2012

சாதனைக்கான தேவையும் நேரமும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



சாதனைக்கான தேவையும் நேரமும் 



எனக்கு மட்டும் இந்த வசதி அந்த வசதிகள் இருந்திருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்திருப்பேன். அந்த வசதிக்காகவும், நேரத்திக்காகவும்  காத்திருக்கிறேன் என்று பலர் பேச கேட்டிருப்பீர்கள். இன்னும் சிலர் எனக்கு பணவசதி இல்லையே என்று புலம்புவதை பார்த்திருக்கிறோம்.

உண்மையில் சாதனையாளர்கள் தாங்கள் சாதிப்பதற்கு எவையெல்லாம் தேவை என்று நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் கையில் இப்பொழுது என்ன இருக்கின்றதோ (இப்போதுள்ள வசதி) அதை வைத்து எப்படி எதை வைத்து யாரைக்கொண்டு எவ்வாறு நல்ல முறையில் புதிய அரிதான செயல்கள்  செய்வதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

நன்றாக யோசித்துப் பாருங்கள் :


1. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது அப்போதுள்ள மரக்கட்டைகளைக் கொண்டு கப்பல் கட்டி தான் பயணம் செய்து சாதனை படைத்தார் 


2. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போதுள்ள கம்பி இழைகளைக்கொண்டு 'பலப்' பை கண்டுபிடித்தார்.

3. சச்சின்  டெண்டுல்கர் நம்முடைய நாட்டில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்து தான் உலக கிரிக்கெட் உலகில் சாதனை படைத்தார்.



4. அலெக்சாண்டர் கிரஹாம்பெல் அப்போது இருக்கும் கருவிகளைக்கொண்டு தான் டெலிபோன் கருவியினை கண்டுபிடித்தார்.

5. ரைட் சகோதரர்கள் அப்போதுள்ள வசதிகளை கொண்டு தான் விமானம் கண்டுபிடித்தார்.

6. மார்கோனி வானொலி கண்டுபிடிக்கும் போது எனக்கு அந்த வசதி, இந்த வசதி வேண்டும் என்று கூறியதாக சரித்திரம் இல்லை.

7. லூயி பாஸ்டர் மருத்துவ கண்டுபிடிப்பு மிகபெரிய சாதனை.

8. மைக்ரோ சாப்ட் நிறுவனர் , பில் கேட்ஸ் அப்போதுள்ள வசதிகளைக்கொண்டு தான் உலகமே அதிசயிக்கும் வண்ணம் கம்பியூட்டரில் புரட்சி செய்தார்.

9. இந்தியாவின் நோபெல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் அப்போதுள்ள அறிவியல் ஆய்வகத்தை பயன்படுத்தி தான் சாதனை படைத்தார்.



இப்படி இன்னும் பல சாதனையாளர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
              
ஆகவே சாதனை செய்வதற்கு இப்போதுள்ள வசதியும் இந்த நேரமும் தான் சரியான நேரம். இப்போதே புறப்படு ; சாதனை படைக்க.  

END MEANS EFFORTS NEVER DIES

NO MEANS NEXT OPPORTUNITY 

***************************************
இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 





சரியான நேரமும் நன்மையான செயலும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்




சரியான நேரமும் நன்மையான செயலும் 






உன்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஓடுகின்ற கடிகாரங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் சரியான நேரங்கள் காட்ட வேண்டுமென்றல் நீ முதலில் சரியான நேரத்தை வைத்து ஓட வைத்திருக்க வேண்டும்.தவறான நேரம் முதலில் வைத்திருந்தால் என்னதான் கடிகாரம் ஓடினாலும் சரியான நேரம் காட்டது .

அதுபோல உனது செயல்கள் எல்லாம் சரியாக நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டுமென்றால் முதலில் உன் மனதில், எண்ணத்தில் நல்ல எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் .அப்போது தான் நீ செய்யும் செயல்கள் எல்லாம் நன்மை தரும். தீய எண்ணங்கள் வைத்திருந்தால் என்னதான் பல செயல்கள் செய்தாலும் தீமை தான் விளையும். ஜாக்கிரதை !!

*******************************************************************************




இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


ஒரு வரி சட்டம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -



 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்






ஒரு வரி சட்டம் 




ஒருவன் தன கடமையிருந்து தவறுவதும், ஏமாற்றுவதும், தவறான  வழியில் பணம் சேர்பதுவும், பிறரை கஷ்டம் மற்றும் துன்புறுத்துவதும், பிறர் உணர்வை இழிவு படுத்துவதுவும், சுயநலத்திற்காக பிறர் பொருளை அபகரிப்பதுவும், பொய் பேசுவதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.  


*******************************************************************************

இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



எது மெய் ? - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்









எது மெய் ?




மண்ணுலகம் பொய் என்பார்கள் 
வீழ்ந்தவர்கள் 

விண்ணுலகம் பொய் என்பார்கள் 
வாழ்கிற்வர்கள் 

அனால் 
வாழ்கிறவர்கள் என்றாவது ஒருநாள் 
வீழவேண்டும் 
இது தான் மெய் 

******************************************************************************




இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது