Pages

Monday, 6 August 2012

உங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் இலட்சாதிபதி


             நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

    உங்கள் பொருட்களை பணமாக பாருங்கள்!   

                               

சிக்கனமும் சேமிப்பும் இரு கண்கள். சிக்கனத்தை  கடைபிடிக்க வேண்டுமென்றால் வீண் ஆடம்பர செலவுகளை கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆடம்பர செலவு என்பது மற்றவர்கள் புகழ்வதற்கும் வெத்து கௌரவத்திற்காகவும் அளவுக்கு மீறி செலவு செய்வது. 

           பீரோவில் எவ்வளவு இருக்கின்றது ?

                              

                               
உங்களது பீரோவில் எவ்வளவு இருக்கின்றது enஎன்று கேட்டால் பணம்,நகைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் அடுக்கியிருக்கும் உடைகளின் மதிப்பை பணமாக பாருங்கள். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருகின்றோமா என்று ஆச்சர்யப்படுவீர்கள். அதனால் உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்வளவு தூரம் பயன் கொடுத்திருக்கின்றது. அது விதையா? அது விதைத்தால் பலன் தருமா என்று  யோசித்துப்பாருங்கள்.

                                  

அதேபோல் நீங்கள் கழிவு செய்யும் பொருட் களையும் கேளிக்கைகளில் செலவுகளை  பணமாக  பார்க்க ஆரம்பியுங்கள்.    

                                  

இன்று முதல் நீங்கள் செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். மற்றவர்களுக்கும் இந்த விதியின் அருமையை கூறுங்கள். உங்கள் சந்ததியினர் கட்டாயம் ஒரு லட்சாதிபதியோ அல்லது ஒரு கோடீஸ்வரராகவோ இருக்கவேண்டுமென்பதே என் ஆசை.

                  பகட்டு செலவை குறையுங்கள்!
                    பணவிதையை விதையுங்கள் !



இனி இன்சூரன்ஸ் பிரிமியம் எப்படி இலகுவாக கட்டுவது என்பது பார்ப்போம்!

அடுத்த பகுதியில்


*****************************************************                                                                           

   
தொடரும் ...     
********************************************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



ஆயிரம் (2000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா ? நீங்களும் இலட்சாதிபதி

           நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

                  ஆயிரம் (2000) ரூபாய் விதை            
                   கேள்விபட்டிருக்கிறீர்களா ? 

                                        

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் காலம் காலமாக உதவியாஇருக்க வேண்டுமல்லவா? அப்படி என்றால் உங்களுக்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் விதை கட்டாயம் தெரிந்தாக வேண்டும். அதற்கு நீங்கள் கேள்விபடாத விதைகளைப்  பார்ப்போம்.

                           

           வீடு அல்லது பிளாட் விதை:

                             

எங்க அப்பா அல்லது தாத்தா எப்போவோ ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கினார். என்னோட காலம் வரைக்கும் நல்லபடியா விற்காமல் பார்த்துகிட்டேன். இப்போ அதோனோட விலை பத்து லட்சத்துக்கும்  மேலே போகுது.                            

                              தங்க விதை:

                          

எங்க அம்மா அல்லது பாட்டி அந்த காலத்திலே தங்கம் ஒரு கிராம் நூறு ரூபாய் வித்தப்போ துணிந்து நூறு பவுன் வாங்கி போட்டாங்க. கஷ்டப்பட்டு காப்பாதினதாலே இப்போ  என் பொண்ணுக்கு அந்த நகைங்களைப்  போட்டு 'ஜாம் ஜாம்'னு கல்யாணத்தை முடிச்சிட்டோம்.

                         டெபாசிட் விதை:

                                 

நான் பிறக்கும்போதே என்னோட அப்பா அரசு வங்கியிலே / தபால் ஆபீஸ்லே   ஒரு லட்சம்  டெபாசிட் போட்டிருக்கிறார். செலவு பண்ணாமே இருத்ததாலே என்னோட பொறியியல் பட்டபடிப்பு     நல்லபடியா முடிச்சுட்டு இப்போ வேலைக்கு போய் கை நிறையா சம்பாதிக்கிறேன்.

இப்போது உங்களுக்கு என்ன விதை வேண்டும்?

                              

இன்றைக்கு வீடு / பிளாட் மற்றும் தங்கத்தின் விலை   தாறுமாறா எகிறி இருக்கின்றது. இனிமேல் அதிலே முதலீடு செய்து ரெண்டு அல்லது ஐந்து மடங்கு ஆகும்னு கனவிலே கூட நினைக்க வேண்டாம். ஏன்னா இப்பவே நிறைய வீடு / பிளாட் விற்க முடியாம தினறுகிறாங்க. அதனாலே இப்போது உங்களுக்கு 1000 / 2000 அல்லது 10,000 ரூபாய் விதை தான் வேண்டும். இல்லாவிட்டால் வீடு / பிளாட் வாங்குங்கள். கூடவே இந்த ரூ 2000 அல்லது 10,000 விதை வாங்குங்கள்.          

நான் செய்யச்சொல்வது மிகவும் எளிதானது ஏன்  கேளி கூட செய்வீர்கள். அதை பற்றி எனக்கு கவலையில்லை. உங்களால் மாதம் ரூபாய் 100 சேமிக்க கட்டாயம் முடியும். ஒரு பத்து மாதம் சேமித்தால் ரூபாய் 100 X 10 =1000 கிடைக்கிறது. இப்போது 1000 ரூபாய் விதை ரெடி. இல்லை நான் ஒரே மாதத்தில் ரூபாய் 1000 ரெடி பண்ணினாலும் சரி தான். குறிப்பாக திருமண நாள் , பிறந்த நாட்களில் இதை பின் பற்றினால் மிகவும் நல்லது.

உங்கள் 1000 ரூபாய் 7 வருடங்களில் (இப்போதைய வங்கியின் அதிகபட்ச வட்டியின் படி) இரு மடங்காகிறது என்று வைத்துக்கொண்டு விதையுங்கள்.     

                                                                                                   
இப்போது அதன் வளர்ச்சி பார்ப்போம்.

ஒரே ஒரு தடவை ரூபாய் 1000 முதலீடு செய்து மறந்துவிடுங்கள். எவ்வளவு தொகை கிடைக்கின்றது என்று பாருங்கள்.         

 வருடங்கள்      முதிர்வு தொகை  
                 0              முதலீடு ரூ 1000  
                 7              2000 (கிடைக்கின்ற தொகை மறு முதலீடு  )
                 14             4000
                 21             8000
                 28           16,000
                 35           32,000
                 42           64,000
                 49         1,28,000
                 56         2,56,000
                 63         5,12,000
                 70        10.24,000 (கிட்டத்தட்ட பத்து லட்சம்)


                      

இந்த ஒரு விதை ரூ 10,000 மாக இருந்தால்   

                  
 வருடங்கள்      முதிர்வு தொகை  

                 0              முதலீடு ரூ 10,000  
                 7              20,000 (கிடைக்கின்ற தொகை மறு முதலீடு  )
                 14             40,000
                 21             80,000
                 28           1,60,000
                 35           3,20,000
                 42           6,40,000
                 49         12,80,000
                 56         25,60,000
                 63         51,20,000
                 70      1,02,40,000 (கிட்டத்தட்ட ஒரு கோடி )

ரூ1000 விதைத்தால் 70  வருடங்களில் நீங்கள் ஒரு   லட்சாதிபதி.   ரூ10,000    விதைத்தால்  70 வருடங்களில் நீங்கள் ஒரு கோடீஸ்வரர். இங்கு தான் நீங்கள் சிரிப்பீர்கள். 70 வருடமா அவ்வளவு எப்படி? அப்போது விலைவாசி எப்படி இருக்கோ? ஒரு  டீ யின் விலை ரூ100 கூட இருக்கலாம். இப்படி நினைப்பவர்கள் / சொல்பவர்கள் சேமிக்காமல் இருக்க சாக்கு போக்கு சொல்பவர்கள். அவர்கள் கட்டாயம் குடும்ப உறுப்பனர்களின் மகிழ்ச்சி அல்லது தங்களது சந்தததியினரை பற்றி கவலைபடாதவர்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி ? உங்களது தாத்தா பாட்டிக்கு வயது கட்டாயம் 60 முதல் 70 க்குள் இருக்குமல்லவா? அப்படி என்றால் உங்கள் கையில் பத்து லட்சமோ அல்லது ஒரு கோடியோ இருக்கின்றதா? ஆனால் லட்சமா? அவ்வளவும் கடன் தான் இருக்கின்றது என்று புலம்புவது எனக்கு கேட்கின்றது அப்படித்தானே?

     இப்போதே ரூ 1000 விதையை விதையுங்கள். 

                                


    பத்து லட்சம் ரூபாய் அறுவடை செய்யுங்கள்.



சேமிக்க சிக்கனம் தேவை. அந்த சிக்கனம் எப்படி வரும்? 

அடுத்த பகுதியில்.....             
                                                        
      





     
தொடரும் ...     
********************************************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Saturday, 4 August 2012

உண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது -நீங்களும் இலட்சாதிபதி


                   நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!



உண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது ?


கீழ்தர மற்றும் நடுதர வர்க்கத்தினர் தங்கள்  வசதிக்கேற்ப 'ஆறு அல்லது ஒரு வருடத்தில் உங்கள் முதலீடு இரண்டு மடங்குகளாக தருகிறோம்'  என்கிற பகட்டு விளம்பரத்தையோ , ஆசை வார்த்தைகளிலோ அல்லது ராஜ உபச்சாரத்தில் மயங்கியோ அல்லது  தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக 'போலி லெட்டர் பேடு ' நிறுவங்களில்  முதலீடு ஏமாறுகிறார்கள். அவர்கள் போட்ட மொத்த முதலீடும்  பேராசையால் இழந்தது தவிக்கின்றனர்.


அந்த மாதிரி கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் திட்டம் முடிவு பெரும் காலத்தில் தாங்கள் ஏமாந்திருக்கிறோம் என்பதை  உணருகிறார்கள். சம்பந்த நபர்கள் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடி ஒளிந்து மறைந்தே போய்விடுகிறனர்.  


அதேபோல் பலர் பங்குகளில் முதலீடு, ஆன்  -லைன் வர்த்தகம், கோல்ட் பாண்டு, மியுச்சுவல் பண்டு போன்ற 100 % அபாயமுள்ளவற்றில் எப்போதும் எட்டி கூட பார்க்ககூடாது. அது கொஞ்சம் கூட பலன் தராது. 


உங்கள் முதலீடு அரசு வங்கியிலோ, அரசு சார்ந்த துறையிலோ, அஞ்சலகங்களிலோ சேமித்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி. வட்டி குறைவாக இருந்தாலும் பலன் என்றும் கிடைக்கும். உங்கள் முதலீடும் வளர்ச்சியும் பாதிக்காது.

பாதுகாப்பான முதலீடு !



ஆயுள் முழுவதும் நிம்மதி 
    

                     
விரைவில்  1000 ரூபாய் எப்படி பல லட்சங்களாய் கொடுக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  

தொடரும் ...     
********************************************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

சேமிப்பினால் ஏற்படும் பலன்கள் - நீங்களும் இலட்சாதிபதி

                   நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!



                     சேமிப்பினால் ஏற்படும் பலன்கள்:



சேமிப்பு என்பது ஓடும் பஸ் போன்றது. அந்த சேமிப்பு  பஸ்ஸில் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டால் நீங்கள் ஓடுவது அவசியமிருக்காது. பஸ் உங்களை கஷ்டமில்லாமல் அழைத்துச் செல்லும். நீங்கள் மேற்கொள்ளும் சேமிப்பின் மதிப்பை பொறுத்து நீங்கள் இடம் வேறுபடும். நீண்ட நாட்கள் சேமித்தால் நீங்கள் இறங்குமிடம் நீண்ட நேரம் கழித்து வரும். அதுவரை அறிபரியாய் ஓடாமல் எந்த ஒரு சிரமமில்லாமல் இருக்கலாம்.குறைந்த நாட்கள் சேமித்தால் சீக்கரமே நீங்கள் இறங்குமிடம் வந்துவிடும். ஒரே ஒரு தடவை பஸ்சில் கஷ்டப்பட்டு ஏறிக்கொள்ளுங்கள். கவலை விடுங்கள். பலனை அனுபவியுங்கள்.

            சேமிப்பு எந்த வழியில் இருக்க 
                              வேண்டும்? :


பலர் சேமிக்க தவறுவதற்கு காரணம், 'பேராசை, பெரும் நஷ்டம்' தான். அதாவது சேமிக்க எண்ணுபவர்கள் தங்கள் முதலீடு பணம் பாதுகாப்பாகவும், வளர்ச்சி இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக கீழ்தரவர்கத்தினர்கள், தங்களின் முதலீடு 0 % அபாயமில்லாமல் அதாவது 100% பாதுகாப்போடு இருக்கும் படி பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. நடுத்தரவர்கத்தினர்கள் அபாயம் : பாதுகாப்பு விகித அளவு எக்காரணத்தை கொண்டும் 10: 90 மேல் தாண்டக்கூடாது.உயர்தரவர்கத்தினர்கள்  அபாயம் : பாதுகாப்பு விகித அளவு எக்காரணத்தை கொண்டும் 25 : 75 மேல் தாண்டக்கூடாது. இப்படி இருந்தால் வாழ்கையில் நிம்மதி 100 % இருக்கும்.

                    
கீழ்தரவர்கத்தினர் : 100 % பாதுகாப்பான சேமிப்பு 


நடுத்தரவர்கத்தினர் : 90 % பாதுகாப்பான சேமிப்பு 


உயர்தரவர்கத்தினர் : 75 % பாதுகாப்பான சேமிப்பு 


*****************************************************

         

தொடரும் ...     

             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

சேமிப்பு எதற்காக வேண்டும் - நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

              நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

                    

                   சேமிப்பு எதற்காக வேண்டும்?  

                             


நமது வாழ்க்கை நாட்கள் மெதுவாக போகின்றதாக எண்ணிக்கொள்ளதீர்கள். அது ஜெட் வேகத்தில் பறப்பதை உணருங்கள். உங்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கை என்னவென்று முழுவதும் தெரியுமுன்னே அல்லது நன்றாக அனுபவிக்கு முன்னே ஓரளவு மகிழ்ச்சியுடன் கழிந்துவிடுகிறது. பிறகு ஏதோ ஒரு வேலை அல்லது நல்ல வேலையில் சேர்ந்த பிறகு தினமும் பர பரவென்று 'வேலை, வேலை' என்பதில் மூழ்கி அந்த எண்ணங்க மாதங்கள் நாட்களாகவே கழிந்து ஓடிவிடுகிறது. 


பிறகு கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்க்கை விரிய விரிய அன்றாட தேவைக்கான செலவுகளை சமாளிப்பதக்குள் முழி பிதுங்கிவிடுகிறது. அவசர தேவைக்கான செலவுகளை சரி செய்ய வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது வீடு, நகைகளை அடைமானம் வைத்து சமாளிக்கின்றனர். அதில் எதிர்கால தேவைக்கு எப்படி எதிர்கொள்வது என்பது பலருக்கு நினைத்துப் பார்க்கவே பயமாய் உணர்கிறார்கள். அதை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் தினமும் வாழையடி வாழையாய் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர். தலைமுறை தலைமுறையாய் விதி என்று எண்ணி சிரமப்பட்டு திண்டாடுகின்றனர். அந்த பரம்பரை கஷ்டத்தை தீர்க்கவே இன்று முதல் சேமிக்க ஆரம்பியுங்கள்.       

                                                                                                                   


                   சம்பாதிக்கும் வழிகள் :



'திரை கடல் ஓடி திரவியம் தேடு' அதாவது கடல் கடந்து வியாபாரம் செய்து பொருட்களை தேடிக்கொள். அது இந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பொருந்தும். வேலைக்காக பலர் சர்வ சாதரணமாய் பல தெரியாத, மொழி புரியாத நாடுகளுக்கு சென்று மாடாய் உழைத்து வீட்டிற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை அனுப்புகிறார்கள். அந்த வீணாக்காமல் நல்ல வழியில் சிக்கனமாக எப்படி , எந்த வழியில் பாதுக்காப்பாக சேமிப்பது என்று இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

                               

உழைத்த பணத்தை நல்ல வழியில் சேமிப்பீர்!

வாழ்கையில் நிம்மதியை தேடிக்கொள்வீர் !                                          

******************************************************

தொடரும் ...     

             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது