Pages

Thursday, 16 August 2012

பாகம் - 2 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -லாபம் தரும் வழிகள்


லாபம் தரும் வழிகள் 

தொழில் நிர்வாக வழிகாட்டி 
பாகம் - 2 

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

 



சென்ற  பாகம் - 1 ல்  வாடிக்கையாளர்களின் திருப்தியின் முக்கியத்துவம் மற்றும் ஒரு நிறுனத்தின் / தொழிலில் இருக்கும் ஊழியர்கள் எவ்வாறு தரம் மிகுந்த பொருட்களை உற்பத்தி செய்து, தங்களின் நேர்த்தியான சேவைகள் மூலம் எவ்வாறு வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இனி பாகம் - 2

நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் விரும்புவது :

                               

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அந்நிறுவனம் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு, வேலை உத்திரவாதம், நிறுவனம் பற்றிய நம்பிக்கை, சரியானபடி நடத்துதல், அவர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள், உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் 'தொழிலாளிகள்  நிறுவனத்தின் ஒரு அங்கம்' என்பதை எப்பவுமே மனதில் கொண்டு அவர்களின் பிறந்த நாள், மணநாள் மற்றும் அவர்களின் குடும்ப விசேஷங்களில் முடிந்த வரை தவறாது பங்குகொண்டு அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். இதன் மூலம்   அவர்களின்  நன்மதிப்பை பெறுவதோடு நிறுவனத்தின் முன்னேற்றத்திக்காக எதையும் செய்யும் மனோபாவமும் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு ஒரு நிறுவனம் நடந்து கொள்ளும்போது உற்பத்தி தானாக உயருவதற்கு வழி பிறப்பதோடு  நிறுனத்தின் வெற்றியும்  உறுதி செய்யப்படுகிறது.

             

இந்த முதலாளி (அதிகாரி) - தொழிலாளி கூட்டு முயற்சியினால்   தொழிலாளிகளும் உற்பத்தியில் கவனம் செலுத்தி தரமிக்க பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து  'நிறுவனத்தில் இலக்கை சாதிக்கவேண்டும்' என்கிற துடிப்பு தானாகவே வரச் செய்துவிடுகிறது. தொழிலாளிகளின் கவனமும் சிதறாமல்,  நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தின் மேல் அதிக கவனமும் அக்கறையும் செலுத்துகின்றனர்.. அதற்காக சில நிறுவனங்களில் வேலைகள்  ஆரம்பிக்கும்போது  தியானம், மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டுத்தான் வேலையில் அமருகிறார்கள். இன்னும் சில நிறுவனங்களில் மெல்லிய வாத்திய இசை ஒலிபரப்புகிறார்கள்.  இதனால் மனமும் எண்ணமும் புத்துணர்ச்சி பெறுவதால் அவர்கள் வீண் கவலை தரும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமலும் கவனச்சிதறல்கள் எற்படாமலும் செய்துவிடுகிறது. தொழிலாளிகளும் அவர்கள் இஷ்டப்பட்டு மகிழ்ச்சியுடன் வேலை செய்வதால் தரம் உயருகின்றது. நல்ல தரமான பொருட்கள் கொடுப்பதால் வாடிக்கையாளர்களின் திருப்தி அதிகரிக்கின்றது. கூடவே  வியாபாரமும் தானாக பெருகுகின்றது.

            

              சரியான உதாரணம் சொல்லவேண்டுமென்றால் 


வரப்பு உயர நீர் உயரும் 
நீர் உயர நெல் உயரும் 
நெல் உயர குடி உயரும் 
குடியுயர கோன் உயரும் 
கோன் உயர்ந்தால் நாடுயரும் 
நாடுயர்ந்தால் உலகு உயரும்.


தொழிலாளிகளை நாம் நன்றாக பார்துக்கொண்டோமானால் தானாகவே நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும். அதைவிட்டுவிட்டு தொழிலாளி குறைந்த அளவு ஊதிய உயர்வு கேட்க்கும்போது 'இந்த தொழிலாளிகளுக்கு நான் அடிபணிவதா?' என்று பெரிய கௌரவ பிரச்சனையாக   எடுத்துக்கொண்டு ' இவர்கள் மிக அதிக சம்பளம் மற்றும் வசதிகள்' கேட்கிறார்கள்'   என்று வெளியே அனுப்பிவிட்டு புதிய தொழிலாளியை கூடுதல் சம்பளத்தில் அமத்தினால் 'உள்ளதும் போச்சுடா' என்று புலம்ப வேண்டியது தான்.

நிறுவனத்தின் முதலாளிகள் மற்றும்
 பெரிய அதிகாரிகளின் நிலை :

கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் முதலாளி பெரும்பாலும் நல்ல சிந்தனையுடனே இருக்கிறார்கள். தங்களது தொழிலாளிகளை நல்லமுறையில் வைத்துக்கொண்டு வியாபாரத்தை பெருக்க வேண்டுமென்று ஆசைபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கீழ் செயல்படும் அதிகாரிகளின் எண்ணப்போக்கு சற்று பின்தங்கியே இருக்கின்றது எனலாம். புதிய எண்ணங்களை புகுத்த விருப்பப்படாமல் அரைத்த மாவையே அரைப்பதுதான் சிறந்த வழி மற்றும் வேலைக்கு பாதுகாப்பானது ' என்று நினைக்கிறார்கள். அதாவது புதிய' முயற்சி செய்து தோல்வியடைந்துவிட்டால் தங்களது பெயர் கெட்டுவிடும் ' என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கின்றது. 

அதேபோல் நிறுவனத்தின் இலட்சியம், கொள்கையை கடைநிலை ஊழியர்கள் வரை தெரிவிக்காமல் தங்களிஷ்டப்படி சில மேலதிகாரிகள் நடந்து நடந்து கொள்கின்றனர். தன்னை மீறி யாரும் முன்னேறக் கூடாது அல்லது மேலே போகக்கூடாது என்றும், தன்னை எதிர்த்துப் பேசக்கூடாது என்றும் ஒரு சர்வதிகாரி போல் நடந்துகொள்கின்றனர். அதையெல்லாம் அறிந்து- ஆராய்வதற்கு நேரமில்லாத முதலாளிகள்/அதிகாரிகள்  தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளின் பேச்சை பெரும்பாலும் நம்பி அதற்குத் தகுந்தாற்ப் போல் செயல்படுகின்றனர். 

இன்னும் சில நிறுவனங்களில் மேலதிகாரிகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவராக இருப்பதாலும், சுயநலத்தோடு செயல்படுததாலும், இன்றைய நடைமுறைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத குணமுள்ளவர்களாகவும், புதிய கருத்திற்கு இடமளிக்காததாலும், தொழிலாளிகளை பலவகைகளில் ஊக்குவித்து அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை கொடுக்கதவர்களாகவும் இருக்கின்றனர். வெகு சிலர் மேற்கூறியதை நன்றாக யோசித்து இன்னும் சிறப்பாக செயல்படுத்தி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் புதிய பெரிய சாதனைகளுடன் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள்  நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் பாலமாக இருந்துகொண்டு பல வெற்றிகளை நிறுவனத்திற்கு பெற்று தருகிறார்கள். அந்த மாதிரியான நிறுவனம் ஐ.எஸ்.ஒ 9001:2008 சர்வதேச  தர நிர்ணய அமைப்பு கொடுக்கும் சான்று பெற்று இருந்தால் உலகளவில் இன்னும் மிகச்சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.

இன்றைய மாறிவரும் சூழ்நிலைகள் :

                             

இன்றைய காலகட்டத்தில் ஒருவனின் சூழ்நிலை, வசதிகள், அத்தியாவசிய தேவைகள், நாகரீக தேவைகள், பகட்டுத்தேவைகள் நொடிப்பொழுதில் மாறிவருகின்றன. நேற்று வரை கேட்பாரற்று கட்டாந்தரையாய் இருந்த நிலம், சில மாத இடைவெளியில் அழகிய பிளாட்டாக மாற்றப்பட்டு , அபார்ட்மென்ட்களை  கட்டி போக்குவரத்து நெரிசல் இடமாக மாறிவருகின்றது. புதிய இடம், புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை. இப்படித்தான் இன்றைய அவசர வளர்ச்சியும், கோலமுமாகும். இத்தனை மாறுதலுக்கும் ஈடுகொடுத்து தங்களை மாற்றிக்கொண்டால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் . மாறுவதற்குத் தயாராக இருக்கும் மனிதர்களால் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றிகாணுகிறார்கள். சாதனையும் சரித்திரமும் படைக்கிறார்கள்.  

  

உதாரணமாக இன்று வரை முகவரி தெரியாத ஒரு மூலையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனால் ஊர், பேர், மொழி தெரியாத இடத்திற்கு இதுநாள் வரை நேரில் பார்த்திராத விமானத்தில் பறந்து சென்று வேலை பார்கிறான், தன்னம்பிக்கையோடு புது வாழ்க்கை ஆரம்பித்து நன்றாக மகிழ்ச்சியோடு இருக்கிறான். கிராம மனிதன் கூட வேலைக்காக தயங்காமல் வேறு மாநிலம் / வெளிநாடு சென்று வருகிறான். வெளிநாடு, அவனை நவ நாகரீக மனிதனாக மாற்றி அவனது நடை , உடை மற்றும் பாவனைகள் முற்றிலும் மாற்றிவிடுகின்றது. இந்த வித மாற்றத்திற்கு நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு 'பத்தாம்பசலி'த்தனமாய் 'இருக்கின்ற இடத்தை விட்டு நகலமாட்டேன்' என்று விடாப்பிடியாய் அடம்பிடித்து இருந்தோமானால் வாழ்கைகையில் அவர்களது முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பு தான்.

ஒருவன் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறினால் காலமெல்லாம் கஷ்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதோடு அவனது நாளைய விடிவு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்? அந்தமாதிரி திடீர் திடீரென்று தொழிலாளிகள் வேறு வேறு வேலைக்கு மாறிவிடுவதால் நிறுவனத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் ஐ.எஸ்.ஒ. 9001:2008 சான்றிதல் பெற்ற நிறுவனத்தில் இத்தகைய பின்னடைவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை.

தொழில் நுணுக்கங்கள், வியாபார போட்டிகள்  மற்றும் அது கிடைக்கும் வலைதளங்களும்:

இன்று கம்பியூட்டரை திறந்து 'இன்டர்நெட்' எனப்படும் வலைதளத்தில் நுழைந்தால் சர்வதேச நிகழ்வுகள், முன்னேற்றங்கள், வியாபாரங்கள், அறிவு நுணுக்கங்கள், பொக்கிஷ நூல்கள், உலகளவில் நடைபெறும் மாற்றங்கள், ஏன் வீட்டு விசேஷங்கள் கூட ஆன்-லைன் மூலம் பார்பதற்கான வசதிகள் பெருகிவிட்டன. அதாவது எல்லா விஷயங்களும் நமக்கு எளிதாகவே கிடைக்கின்றது. 

ஏதாவது ஒரு பொருள் புதிதாக வந்து சந்தையில் நன்றாக விற்கப்படுகின்றது என்றால் உடனே அதேபோல் வேறு பெயரில் அதைவிட குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுகின்றது. அவற்றை சம்மாளிக்க ஐ.எஸ்.ஒ 9001:2008 தரச் சான்று தேவைப்படுகின்றது.

பெயர் பெற்ற கம்பெனிகளின் சில வேளைகளில் சில தயாரிப்புகளை  தரம் குறைந்து தருவது எதனால்? என்பதை உதாரணங்களோடு பார்ப்போம்.

சமீபத்தில் பெயர்பெற்ற டி.வி. நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த குறிப்பிட்ட மாடல்களின் சில மானிட்டர்கள் வெடித்துச் சிதறியதாக பேப்பரில் செய்தியாக வந்தது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்  பிரபல மொபைல் கம்பெனி தயாரித்த மொபைல் போன்களில் சில பேட்டரிகள் வெடித்ததாக டி.வி.யில் காட்டினார்கள்.

இந்த வரிசையில் பிரபல கார் கம்பெனி தயாரித்த சில கார்களின் தரம் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த நிறுவனம் அந்த வகை கார்களை திரும்ப பெற்றுக்கொண்டது.

இது எதனாலென்றால் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் சில உதிரி பாகங்களை உலகத்தின் பல பகுதியிலிருந்து குறைத்த விலையில் வாங்குகின்றனர். அவர்கள் அந்த உதிரி பாகங்களை குறித்த காலத்தில் டெலிவரி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. சிலவேளைகளில் அந்த நிறுவனத்திற்கு ஒரு சில துறையில் ஏதோ சில காரணங்களினால் தாமதங்கள் ஏற்பட்டு விடுகின்றது. அந்த தாமதத்தை ஈடு கொடுப்பதற்கு உற்பத்தி மற்றும் ஆய்வு துறையை வேகப்படுத்துகின்றனர். அப்போது அவசரம் காரணமாக தரத்தினை வேகமாக பார்த்துவிட்டு விற்பனைக்கு அனுப்பிவிடுகின்றனர். அதுவே தரம் குறைந்த பொருட்களை உற்பத்திக்கு வித்திட்டு  வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிவிடுகின்றது. அதனால் சில நஷ்டங்கள் நிறுவனத்திக்கு ஏற்படுகின்றது. அதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் ஆய்வு துறையை இயந்திரமயம் மற்றும் கணினி மயமாக்கி தரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.     

இந்த மாதியான பிரச்சனைகளை ஐ.எஸ்.ஒ 9001:2008 தரச் சான்று பெற்ற நிறுவனங்கள் மிக எளிதாக சமாளிக்கின்றது.    

யார் ஒருவர் தரம் குறைந்த உற்பத்திக்குத் துணை போகாமல் இருக்கின்றனரோ , யார் ஒருவர் ஐ.எஸ்.ஒ 9001:2008ன் தர நிர்ணயத்தைப் பின்பற்றி பொருட்களை தயாரிக்கின்றனரோ அவர்கள் கட்டாயம் வாடிகையாளைகளை திருப்திபடுத்தி தங்களுடைய வியாபாரத்தில் முன்னேற்றம் காணுவார்கள்.

ஐ.எஸ்.ஒ பின்பற்றுவது என்பது
 ஒரு பழக்கம் தான்.

                                  

உதாரணமாக பழக்கமில்லாமல் , சரியான விழிப்புணர்வு இல்லாமல் நாம்  இருகண்களை மூடிக்கொண்டு வேகமாக நடந்தால் நாம் தட்டு தடுமாறி கீழே விழுந்துவிடுவோம். சிலவேளைகளில் காயங்கள் கூட ஏற்பட்டுவிடும். தலையை சுற்றி சாப்பாடு சாப்பிடமுடியுமா? இடது கைகளால் வேகமாக எழுத முடியுமா?

இந்த குறைகளை தீர்ப்பதர்க்காகவே ஐ.எஸ்.ஒ என்கிற சர்வதேச தர நிர்ணய அமைப்பு ஐ.எஸ்.ஒ 9001: 2008 என்கிற குவாலிட்டி மானேஜ்மென்ட் சிஸ்டம் (Quality Management System) என்று உருவாக்கி நம்முடைய கண்களை திறக்கச் செய்து / விழிப்புணர்வு கொடுத்து தடுமாற்றம் இல்லாமல் நடக்கவைக்கின்ற்னர். நேராக சிந்தாமல் சாப்பிட கற்றுகொடுக்கின்றனர். வலதுகையால் வேகமாக எழுத் கற்று கொடுக்கின்றனர். 

இங்கு கண்கள் என்பது குவாலிட்டி பாலிசி (Quality Policy ), குவாலிட்டி மானுவல் (Quality Manual ) , ரிக்கார்டு மற்றும் டாகுமெண்டை (Record & Document ) குறிக்கும். சாப்பிடுதல் என்பது உற்பத்தியை குறிக்கும். வேகமாக எழுதுதல் என்பது தரத்தை குறிக்கும். இதை பழக்கமாக மாற்றிக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். அப்படி மாறிவிட்டால் அனைவருக்கும் வெற்றி தான்.

ஐ.எஸ்.ஒ 9001:9001 ஐ பின் பற்றுவோம் 

கூட்டு முயற்சியால் நிறுவன தேரை இழுப்போம் 
                     

தரத்தை உயர்த்த பாபடுவோம் 

நிறுவனத்தை முன்னேறச் செய்வோம்.

      
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Tuesday, 14 August 2012

பாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்


ஐ . எஸ். ஒ 9001 : 2008 

பாகம் : 1

தொழில் அபிவிருத்தி- ஏற்றுமதி - சிறந்த நிர்வாக வழிகாட்டித் தொடர்   

எத்தனையோ கட்டுரைகள், தொடர்கள் நீங்கள் படித்திருப்பீர்கள். இத்தொடர் இதுவரை வந்திராத முற்றிலும் மாறுபட்ட ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் உபயோகமுள்ள தொடர். ஒவ்வொரு பாகம் படிக்குபோதும்  உங்களுடைய எண்ணமும் செயலும் மேம்படுவதை நன்கு உணருவீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான எவ்வளவோ நல்ல பெரிய விஷயங்களை  இந்த தொடர் மூலம் தெரிந்துகொள்வீர்கள். 

சிறந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால் நினைத்தது நடக்க வேண்டும். நினைத்தது நடக்கவேண்டுமென்றால் நன்றாக சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டுமென்றால் ஒன்று நன்றாக படித்து நல்ல வேலையில் சேரவேண்டும். அல்லது ஏதாவது ஒரு தொழிலை லாபமாக செய்யவேண்டும். இரண்டிற்குமே முறையான பொதுவான தர நிர்வாக வழிவகைகள் தெரிந்திருக்க வேண்டும். இத்தொடர் ஒருவகையில் பயிற்சி அளிப்பதும் கூட. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு பயிற்சி வகுப்பும், பயிற்சி பட்டறையும் அவசரம் அவசரமாகவே நடப்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தொடர் பொறுமையாக மிக எளிதான முறையில் அனைவரும் புரியும்படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னாள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில குறிப்பிட்ட பலசரக்கு கடை, ஜவுளி, நகை, ஹோட்டல், கல்வி நிறுவனமோ    இருக்கும்.அதற்குத் தகுந்தாற்ப் போல் வேலையாட்களும் வாடிக்கையாளர்களும் அப்பகுதியிலேயே  இருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில்   அப்பகுதி வாடிக்கையாளர்கள் திருப்தியுடனோ அல்லது திருப்தி இல்லாமலோ பொருட்களை அல்லது சேவையினை பெறும் சூழ்நிலை இருந்து வந்தது. நாளடைவில் உலகப் பொருளாதார தாரளமயம் வந்த பிறகு வாடிக்கையாளர்கள் சிறந்த தரம், துரித சேவை மற்றும் போட்டி விலையின் காரணமாக பகுதி விட்டு பகுதி சென்று, ஊர் விட்டு ஊர் சென்று , மாநிலம் விட்டு மாநிலம் சென்று ஏன்? நாடு விட்டு நாடு சென்று கூட பொருட்களை வாங்கியோ அல்லது விற்றோ வருகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் பல்வேறு இடங்களிருந்து பல்வேறு ரசனையுடன் , லேடஸ்டாக வந்த வரவுகளை மட்டுமே விரும்பி வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தேவைக்குத் தகுந்தவாறு தொழிலை அல்லது சேவையை மேம்படுத்திக்கொண்டால் / மாற்றிக்கொண்டால் தான்  இந்த போட்டி உலகில் நிலைத்திருக்க முடியும். எல்லாவிதமான வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவது மிகவும் கடினமான காரியம் தான். அவர்களை எவ்வாறு எந்தெந்த வகையில் திருப்தி செய்து தொழிலில் அதிக லாபம் பெறலாம் என்பதே இந்த தொடரின் பிரதான நோக்கமாகும்.

இன்றைய வாடிக்கையாளர்கள் வெறும் தரமான பொருட்களை மட்டும் விரும்புவதில்லை. சிறந்த சேவையுடன் இன்னும் பலவற்றை விரும்புகிறார்கள். உதாரணமாக குளுகுளு வசதி இல்லாவிட்டாலும் காற்றோட்டமான இடம், சிறந்த உபசரிப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், அதிநவீன சேவை இன்னும் பல. இவைகளை அளிப்பது எவ்வாறு சாத்தியம்? தொழிலில் நல்ல அபிவிருத்தி இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் எதிபார்ப்பதைவிட அதிகமாக  திருப்தி அளிக்கவேண்டும். அவைகளையெல்லாம் ஒவ்வொரு பாகத்திலும் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த இரகசியத்தை தெரிந்தவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். ஆனால் தெரியாதவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள்.        



வாடிக்கையாளர்களின் திருப்தியின் அளவைப்  பொறுத்து தான் ஒரு நிறுவனத்தின் வெற்றி  இருக்கின்றது. அதிக திருப்தி - அதிக லாபம். சுருங்கச் சொல்லப் போனால் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தான் ஐஸ்வர்யங்களை வாரித் தரும் கடவுள். ஏனென்றால் ஒரு நிறுவனம் வழங்கும் சேவையினை அல்லது  பொருட்களை  வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் வாங்கிச் சென்றால் தான்  வியாபாரம் பெருகும். வியாபாரம் பெருகினால் பலவித வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்து தரமுடியும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு பல சலுகைகளை வழங்க முடியும் . அதன் மூலம் வாடிக்கையாளர்கள் மூலமாக  நிறுவனம் - ஊழியர்களின் ஒற்றுமை மற்றும் நல்லுறவு மேம்படும். அதன் பலனாக  நிறுவனம் நிர்ணயிக்கும்  எந்த ஒரு இலக்கையும் இலகுவாக அடைய முடியும் .

நாம் ஒரு கடைக்கு பொருட்களை வாங்குவதற்கோ அல்லது ஏதாவது ஒரு சேவையைப் பெற செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் . கடைக்காரரோ அல்லது வேலை செய்பவர்களோ 'நம்மிடம் என்ன வேண்டும்' என்று கேட்காமலோ அல்லது கண்டும் காணாது போல் நடந்து கொண்டால்  எப்படிப்பட்ட வாடிக்கையாளருக்கும் எரிச்சல் வருமா ? வராதா? கட்டாயம் வரும்! எவ்வளவு சீக்கிரம் அடுத்த கடைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றுவிடுவார்கள் இல்லையா! இவ்வாறு  வியாபாரம் செய்தால் கடைக்குச் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி எவ்வளவு பேர் போன நிறுவனமாக இருந்தாலும் சரி  சீக்கிரமே அவர் வியாபாரத்தில் நஷ்டப்படும் நிலைமைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு நிறைய இருக்கின்றது . அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டுமானால் கட்டாயம் வாடிக்கையாளர்களை நன்றாக கவனிக்க அல்லது திருப்திபடுத்த மேல்மட்ட ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பலர் பல்வேறு இடங்களில்  பலவிதமான வியாபாரம் செய்கிறார்கள் . மக்களுக்கு பலவித சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் பலாப் பழத்தில் 'ஈ'  மொய்ப்பது போல் மக்கள் மொய்த்து வருகிறார்கள்.  அப்படிப்பட்ட இடத்திற்கு  குறிப்பாகவோ அல்லது மெனக்கெட்டோ  விஜயம் செய்து தங்களுடைய பவிதமான தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். ஏன்? மற்றவர்களால்  அந்த மாதிரியான சேவையினைக்  கொடுக்க முடிவதில்லை. காரணம், அவர்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வழிமுறைகளை  பற்றி நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுடைய தரமான பொருட்களின் விநியோகம், அன்பான உபசரிப்பு, வாடிக்கயாளர்களின் எல்லாவிதமான குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் செயல், மற்றவர்களைக் காட்டிலும் விலை குறைவு, விஷாலமான வசதியான இடத்தில் அவர்களே பொருட்களை தேர்ந்தெடுக்கும் வசதி, குறித்த நேரத்தில் காத்திருக்க வைக்காத துரித சேவை போன்றவைகளாகும் .

    

உதாரணமாக ஒரு நாள் இருவர் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் கிட்டத்தட்ட பக்கத்துபக்கத்தில் மீன்களைப் பிடிக்கத் துவங்கினர். ஒருவன் தொடர்ந்து மீன்களை பிடித்தபடி இருந்தான். மற்றோருவனால் ஒரு சிறிய மீனைக்கூட பிடிக்க முடியவில்லை. கடைசியில் அவனுக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. பொறுமை இழந்து பக்கத்தில் இருந்தவனிடத்தில் "உன்னால்   எப்படி அதிகமான மீன்களைப் பிடிக்க முடிந்தது?"அதன் காரணத்தைக் கேட்டான். அதற்கு மற்றொருவன் "நீ மீன்களைப் பிடிக்க என்ன செய்தாய் என்று முதலில் சொல். அவற்றிலிருந்து  நீ எங்கு, என்ன தவறு செய்தாய் என்று சொல்கிறேன்" என்றான். 


"நான் தூண்டிலில் அதிகம் மீன்களைக் பிடிக்க விலை உயர்ந்த இனிப்பை சொருகினேன். இருந்தும் ஒரு மீனும் கிடைக்கவில்லை " என்று பதிலளித்தான். அவன் செய்த தவறு இப்போது தெரிந்து கொண்டான்."நண்பா, மீன்களை பிடிக்க வேண்டுமென்றால் மீன்களுக்கு பிடித்த உணவான சிறிய புழுக்கள் இருந்தாலே போதும். விலை உயர்ந்த எந்த உணவு வைத்தாலும் வீண் தான் " என்றான் .  அப்போது தான் அவனுக்கு மீன்களைப் பிடிக்க   எளிமையான ரகசியம்  தெரிந்தது. அப்புறமென்ன தன் நண்பன் சொல்லியவாறு செய்தான். மறுநாளிருந்து அவன் நினைக்கும் அளவிற்கும் அதிகமாக மீன்களை பெற்றான்.

                           

 ஐ . எஸ். ஒ 9001 : 2008 என்பது உலகளாவிய  தர நிர்ணயம் செய்யும் செயல் வடிவமேயாகும். அதில் சொல்லியவாறு  பின்பற்றினால் நிச்சயம் ஒரு நிறுவனத்தின் வியாபாரமோ அல்லது சேவையோ அமோக வெற்றி பெறும். ஏனென்றால் இந்த ஐ.எஸ்.ஒ 9001 என்பது உலகளாவிய  தர நிர்ணய அமைப்பானது  உலகத்தில் உள்ள பல நாட்டைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. அதோடு  அனைத்து நாடுகளுக்கும்  அனைத்து விதமான  வியாபாரம் மற்றும் சேவையளிப்பவர்களுக்கும் பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால்  ஐ.எஸ்.ஒ 9001 அமைப்பு  தொழில் மற்றும் சேவை வித்தியாசம் பாராமல் அனைவரும் பின்பற்றக்கூடிய எளிமையான லாபம் தரும் வழியாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யும் பெரும்பாலோர் இதை பின்பற்றி பெரிய லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.


இன்றைய தினத்தில் பலர் ஏன் வீணாக செலவு செய்து ஐ.எஸ்.ஒ 9001 : 2008 வாங்கவேண்டும். அவற்றை வாங்காமல் வியாபாரம் அபரிவிதமாக  நடத்த ஆசைபடுகிறார்கள். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம்' செய்பவர்கள். அப்படி  நினைத்தால்  அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒரு நிறுவனம் தாங்களே சுய விளம்பரம் செய்து தங்கள் தரம் உயந்ததாக காட்டிகொண்டால் அதை விவரம் தெரியாதவர்கள் தான் ஆரம்பத்தில் நம்புவார்கள். பிறகு நிலையான தரம் மற்றும் சேவை  இல்லாததை உணர்ந்து வேறு கடைக்கு மாறிவிடுவார்கள். ஆனால் ஐ.எஸ்.ஒ 9001:2008 தர நிர்ணய சான்று பெற்ற  நிறுவனமானது அந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்ற அனுபவமிக்கத் தணிக்கையாளர்கள்  அந்த நிறுவனத்திற்க்குச் சென்று அவர்களின் தயாரிப்பு பொருட்களின் தரத்தையும், சேவைகளையும்  தணிக்கை செய்து , ஏதேனும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு குறைவிருந்தாலோ  அல்லது ஐ.எஸ்.ஒ 9001:2008 தர நிர்ணய முறையிலிருந்து விலகியிருந்தாலோ    அதை கண்டுபிடித்து சரி செய்ய அறிவுரை வழங்குவார்கள். ஆகவே அவர்கள் தரும் சான்று வாடிக்கையாளர்களுக்கு முழுநம்பிக்கை தருவதாக அமைகிறது.

ஆனால் இன்றைய நிறுவனங்களின் நிலைமை :


தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வேலைகளில் ஆர்வம் இல்லாதவர்களாகவும், மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், நடைமுறையில் தங்களைச் சுற்றி மாறிவரும் மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தில் நடக்கும் அனைத்துவித உற்பத்தி மற்றும் சேவை செயல்பாடுமுறைகள் உயர்நிலை மேலாண்மை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் பொறுப்பு மற்றும்  அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி முறையாக பயிற்சியும் அளிக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்து துறை நிர்வாக வழிமுறைகள் அந்தந்த மேனுவல் (Manual) மற்றும் டாகுமென்ஸ்  (Documents) மூலம்  தெரிந்துகொள்வதால்  யாரேனும் விடுமுறையில் சென்றாலோ, நிறுவனத்தைவிட்டு விலகிச்சென்றாலோ அந்த பொறுப்பை உடனடியாக யாராவது ஒருவர் பார்க்கலாம். தேவைபட்டால் புதியவர் ஒருவரை நியமிக்கலாம். எல்லாவற்றிக்கும் சிறிது பணம் செலவாகும் என்பது உண்மை. இதை செலவு கோணத்தில் ஒரு நிறுவனம் பார்க்கக்கூடாது. அது நிறுவனத்திற்கு அவசியமானதாக நினைக்க வேண்டும்.

 

எந்த ஒரு முதலாளியும் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் எல்லாத் தொழிலாளிகளும் முக்கியமானவர்கள் என்று எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு தொழிலாளியும் நிறுவனத்தில் ஒரு அங்கம் என்று கருத வேண்டும் . அவர்கள் நன்றாக தொழில் பழகி நேர்த்தியாக  வேலை செய்யும்போது தானாகவே பொருட்களின்  தரம் உயருகிறது. வியாபாரம் அபிவிருத்தியாகிறது. தொழிலாளிகள் நிறுவனத்தின் ஆஸ்தி அல்லது சொத்து என்று நிறுவனத்தலைவர் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு நடத்த வேண்டும். அப்படி நினைக்கும் போது தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் மேல் இருக்கும் விசுவாசம் கூடும். மேலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உணருவார்கள்.   

                         

ஒரு நிறுவனம் பழகிய அனுபவமிக்க தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள, அவர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச சௌரியங்களை அவர்கள் கேட்காமலே செய்து தரவேண்டும். ஏனென்றால் அனுபவமிக்க தொழிலாளி நிறுவனத்தை விட்டு வெளியேறினால் போட்டி நிறுவனத்திற்கு தான் ஆதாயம் அதிகம்.போட்டி நிறுவனத்திற்கு  அனுபமிக்க , தொழில்நுணுக்கம் தெரிந்த தொழிலாளி உடனடியாக  கிடைப்பதால் பொருள் உற்பத்தியிலும் அதன் சேவையிலும் தடைபடாமல் இருப்பதோடு அவற்றின் தரம் உயரும் வாய்ப்பும் கூடுகின்றது. அதனால் வாடிக்கையாளர்கள் முழு மனதிருப்தியுடன் பொருட்களை வாங்கிச் செல்வர். அதன் மூலம் நிறுவனம் பெரிய வளர்ச்சி அடையும் வாய்ப்பு கிடைக்கிறது. 


ஆனால் அனுபமிக்க தொழிலாளியை ஒரு நிறுவனம் இழக்கும்போது அவருக்குபதிலாக மற்றொரு புது தொழிலாளியை நிறுவனம் அமர்த்தவேண்டும். அதற்கு காலவிரயம், பணச் செலவோடு விலகிய தொளிலாளி போல் அனுபவமுள்ள தொழிலாளிகள் கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒரு புதிய தொழிலாளியை வேலைக்கு அமர்த்தினால் அவருக்கு முதலில் பயிற்சி கொடுக்கவேண்டும். அதற்கு பெரும்பாலும் நேரம் அனுமதிப்பதில்லை. அதுவும் காலவிரயம் தான். மேலும் அவருக்கு அந்த புதிய சூழ்நிலை ஒத்துவந்த பிறகே அவர் தனது திறமையை காட்டத் தொடங்குவார்.

          

அதுவரை நிறுவனம்  பொறுமையில்லாமல் புதியவரை  வேலைக்கு அமர்த்தியவுடன் பழைய தொழிலாளியின் திறமை போல் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நடைமுறையில் பலவித காரணங்களால் முக்கியமாக சகதொழிலாளியின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே அவரது முழுத்திறமை காட்ட முடியாதவராகிறார். நிர்வாகம் அவரை  விரைவிலே  'திறமையில்லாதவர் ' என்று முத்திரையை குத்திவிடுகிறது . வேறு வழியில்லாமல் வேறு ஒருவர் வரும் வரை தரமில்லாமல் ஏனோதானோவென்று அந்தவேலை நடைபெறும் சூழ்நிலை ஏற்படுகிறது . ஒருவழியாக அவரும் வெளியேறிவிடுகிறார். மீண்டும் புது தொழிலாளி. அவருக்கு பயிற்சி ..இது தொடர்கதையாகவே நடை பெற்று வருகின்றது. 

                     

கடைசியில் பழைய தொழிலாளியே அதேவேலைக்கு கூடுதல் சம்பளத்தில் அமர்த்தபடுகிறார் . ஆனால் இப்போது அந்த பழைய தொழிலாளி பழைய திறமையைக் காட்டிலும் குறைவாகவே வெளிப்படுத்துகிறார் . ஏனென்றால் நிறுவனத்தின் மேல் அவருக்கிருந்த மரியாதை மற்றும் நம்பிக்கை குறைந்து போகின்றது. நிர்வாகம் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பது தெரியுமாதலால் அவரின் ஏனோதானோ என்கிற மனப்பான்மை வளருவதற்கு நிர்வாகமே காரணமாக அமைந்துவிடுகின்றது. ஒத்துவராதபட்சத்தில் அதை விட அதிக சம்பளத்தில் வேறு இடத்திற்கு வேலைக்கு போகவும் தயாராகிறார். அவர்களால் நிறுவனத்திற்கு அதிக  பிரயோஜனமில்ல்லாமல் போய்விடுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஐ.எஸ்.ஒ 9001:2008 உலக தரச்சான்று வாங்குவது சற்று சிரமமான காரியம்.


தரம் மற்றும் சேவையில் திருப்தி தான் வாடிக்கையாளர்களுக்கு மிகமுக்கியம். இவைகள் தான் வாடிக்கையாளர்களைக் கவரும் எளிய வழி. ஒரு பொருளின் தரம் ஒவ்வொரு பகுதி தயாரிப்பிலும் / நிலையிலும்   அல்லது துறையிலும் செயல்படும் விதத்தில்  இருக்கின்றது. இவைகளனைத்தும் தொழிலாளர்கள் தான்  பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் நிலையிலும் , தயாரிப்பிலும்  ஈடுபடுகிறார்கள். அவ்வாறு  இருக்கும்போது அவர்களின் மனநிலை மிகவும் நிலையானதாகவும் , ரம்மியமானதாகவும், அமைதியாகவும் தொழிலில் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பதைப் பொறுத்துதான் பொருட்களின் தரம் அமைகின்றது. ஒருவேளை அப்போது அந்த தொழிலாளிக்கு வீட்டுப் பிரச்சனை பற்றிய சிந்தனையோ, நிறுவனம் ஒரு ஊழியரை திட்டியதை பற்றிய சிந்தனையோ, சக ஊழியரின் தண்டனை பற்றிய சிந்தனையோ இருந்தால் அவரின்  கவனம் சிதறி அவர் செய்யும் வேலையில் கவனம்  குறைந்து, தரம் தாழ்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அதன் பலனாக நிறுவனம் குறைந்தளவு உற்பத்தி செய்ய நேரிடுகின்றது.போகப்போக கடைசியில் வியாபாரம் மூடும் நிலை நிறுவனத்திற்கு வருகின்றது. இதை மட்டும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிறுவனத் தலைவரோ அல்லது முதலாளியோ தொழிலாளிகளுடன் அனுசரணையாக நடந்துகொண்டால் ஐ.எஸ்.ஒ 9001:2008 உலக தரச்சான்று வாங்குவது மிகவும் எளிது. 

முதலாளி -தொழிலாளி கூட்டுறவு ஓங்குக !


தரமிக்க பொருட்களை உற்பத்தி செய்க !


வாடிக்கையாளர்களை கவர்வதைப் பெருக்குக !


நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்க !

உங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்க! 
வாழ்க தொழிலாளர்கள் ! வாழ்க நிறுவனம் !

                                              

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

      








   












           

Monday, 13 August 2012

அறிவாளியின் மனோதைரியம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்


அறிவாளியின் மனோதைரியம் 



 ஆழ்ந்த அறிவு பெற்றிருப்பவர்கள் , ஒன்றைப்  பற்றி தெரிந்து வைத்திருப்பது அவற்றில் மேல் ஐயமில்லா தெளிவு பெற்றிருப்பவராவார்கள்.

                                     

 யார் ஒருவன்  எந்த சூழ்நிலையிலும் , தனக்கு சாதகமாக இல்லாத பட்சச்தில் கூட 'நான் வெற்றி பெறுவேன் '  என்ற நம்பிக்கை உடையவன் காட்டாயம் வெற்றி பெறுவான்.    

 






தொடரும் ... 
    

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com                         

உங்கள் திறமைகளை மேன்மைபடுத்திக் கொள்ளுங்கள் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்



அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்


உங்கள் திறமைகளை மேன்மைபடுத்திக் கொள்ளுங்கள் 


உலக சாதனையாளர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் சரி, அவர்கள் தங்கள் வெற்றிக்காக எங்கேயும் எதையும் தேடவில்லை. யாரிடத் திலும் கெஞ்சி நின்றிருந்திருக்க மாட்டார்கள் . யாருடைய சிபாரிசுக்காகவும் காத்திருக்கமாட்டார்கள். அதற்காக கவலை கொள்ளவுமில்லை.

                            

அவர்கள் தங்களுடைய திறமைகளை ஆராய்ந்தார்கள். தங்களிடம் விசேஷமான திறமைகளை மேம்படுத்திக் கொண்டார்கள். அதையே விடமுயற்சியோடு கடின உழைப்புகொண்டு தங்களை வெளிக் காட்டிக்கொண்டார்கள்.

தாகூரின் கவிதாகம் நோபல் பெறச்செய்தது .


மகாத்மாவின் இடைவிடாத அஹிம்சை போராட்டம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது.


பில் கேட்சின் கணினி புரட்சி உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார்.


லிங்கனின் முயற்சி அவரை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது.

ராக்பெல்லரின் உழைப்பு 'இரும்பு மனிதன்' என்ற புகழை தந்தது.


ஆகவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் !

உலகை வெல்லுங்கள் !
        

  

நிதானம் வெற்றியைத் தரும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



நிதானம் வெற்றியைத்  தரும் 




இன்றைய காலகட்டத்தில் எல்லாமே எதற்கெடுத்தாலும் அவசரம் அவசரம் தான். அப்படி அவசரமாக செய்த வேலையின் முடிவு பூஜ்யம் தான். அதற்கு காரணம் என்ன ? 

 

சிந்தனையும் செயலும் ஒன்றாக இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றிபெறும். அவசரப்படும்போது சிந்தனை சிதறுகிறது. உடம்பு படபடக்கின்றது. உடலும் மனமும் நிலைத்தன்மையை இழந்து விடுகின்றது.அதன் பிரதிபலிப்பு செயலில் காட்டுகின்றது. உணர்ச்சி வேகம் அனைத்தையும் மிஞ்சி வேறு எதையும் சிந்திக்காதபடியும், கேட்காதபடியும்    செய்து விடுகின்றது. மூளை வேலை செய்வதில்லை.  அப்போதைக்கு ஒப்பேத்தினால் போதும் என்கிற உணர்வே மேலோங்கி நிற்கின்றது. ஆய்வு செய்வதற்கோ, திட்டமிடுவதற்கோ, சுமூகமானமுறையில் தீர்ப்பதற்கு ஆயுத்தமாவதற்கோ நேரமில்லாமல் ஏனோதானோவென்று அரைகுறையாக செயல் நடந்து முடிந்து விடுகின்றது. 

ஆகவே செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், வேலைகளை முறையாக திறமையுள்ள வர்களுக்கு பிரிந்துக்கொடுங்கள். செய்த வேலைகளை ஆய்வு செய்து சரியாக செய்திருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்பவர்களை தட்டிகொடுங்கள். பிறகு நீங்கள் தான் சாதனையாளர்.

   

நிதானம் கொள்ளுங்கள் !


திட்டமிடுங்கள் !        

          

வெற்றி அடையுங்கள் !


  


தொடரும் ...     

******************************
******************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com