Pages

Thursday, 23 August 2012

பெருநிறுவன வெற்றிப் பாடங்கள் (Corporate Success Lessons)


              அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
                           மதுரை கங்காதரன்

                          


                 பெருநிறுவன வெற்றிப் பாடங்கள் 
                          (Corporate Success Lessons)

                                   



வெற்றிக்கான தேவைகள் - விளக்கங்கள்


வாய்ப்புகள் (opportunities) :




பலவித பெரிய பிரச்சனைக்குள் வாய்ப்புகள் என்பது சிறு சிறு புள்ளிகள் போல் கட்டாயம் இருக்கும். அதை நாம் நுண்ணிப்பாக கவனித்து பயன் படுத்திக்கொள்ள தவறக்கூடாது.




வெற்றி (Success) :



பலர் வெற்றியை தூங்கிக்கொண்டு கனவில் அனுபவிக்கும்போது வெகு சிலரால் தான் விழித்துக்கொண்டும், முயற்சியுடன் உழைத்துக்கொண்டும் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறனர்.


உந்துசக்தி  (motivation):



உழைப்பின் ஓட்டத்தை சரியான திசையில் தன்னம்பிக்கையுடன் தூண்டிவிடும்போது அபரிவிதமான சக்தி கிடைக்கின்றது.


ஊக்கப்படுத்துதல் :


ஒரேநாளில் ஒருவனை ஊக்கப்படுத்திவிட முடியாது. அது மூளையை  சிறிது சிறிதாக செதுக்குவது போன்றதாகும். அழகான அதிசயமான சிற்ப்பங்கள் ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது.அதாவது உடம்பிற்கு சிறிது சிறிதாக ஊட்டச்சத்து அளிப்பது போன்றதாகும். ஒரே சமயத்தில் அதிகப் படியான ஊட்டச்சத்துகளை உட்கொண்டால் உடம்பால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முறைப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தெலுத்தினால் தான் ஊக்கம் வேலை செய்யும். ஒரேதடவை அதிகமாக ஊக்கப் பயிற்சி கொடுத்தால் அதிகப் படியான சோர்வு ஏற்ப்பட்டு கடைசியில் எழும்ப முடியாதபடி செய்துவிடும் 



மனப்பான்மை அல்லது  மனப்பாங்கு (attitude) :


உனது முகத்தை எப்போதும் சூரியனை நோக்கி ஓர் வெளிச்சத்தை நோக்கி இருந்தால் உன்னால் உன் நிழலை பார்க்கமுடியாது.
அதுபோல் உனது எண்ணத்தை வெற்றியை நோக்கி குவிக்கப்படும் போது தோல்வி என்பது உனக்குத் தெரியாது (வராது).

உன் எதிரே இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் உத்வேகத்துடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுங்கள். ஏனென்றால் அதில் தான் உனது வாழ்க்கை அடங்கியிருக்கின்றது.


மாற்றங்கள் (Changes):

  

உனது தொழில் மற்றும் வாழ்கையின் பயணத்தின்போது வளைவான பாதையின் கடைசியில் உன்னால் பாதை தெரிய முடியாததைப்  பார்த்து அதுவே பாதை முடிந்துவிட்டது என்று எண்ணி அங்கேயே நின்று விடாதே !   நீ வளையாமல் அடம்பிடித்து இருக்காதே! அது உண்மையில் முடிவல்ல! சற்றே வளைத்து பயணித்துப் பார். மேலும் பாதையின் விரிவை பயணித்து மேலும் அனுபவிக்கலாம்.

அதுபோல் மாற்றத்திற்கு பயந்து உனது கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே? 

அதாவது கடலில் ஏற்ப்படும் காற்று மற்றும் அலைகளை அனுசரித்து பயணம் செய்தால் தான் உன் இலக்கை அடைய முடியும்.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள் !

முன்னேற்றம் தானாகத் தேடி வரும்!


பந்தயம் (Challenge ) :

 

அமைதியான கடலில் யார் வேண்டுமானாலும் எந்தவித கஷ்டமில்லாமல் அழகாக பயணம் செய்யலாம். ஆனால் உனது திறமை கடலில் ஏற்ப்படும் சூறாவளி காற்றை சமாளித்து பாதுகாப்புடன் பயணம் செய்வதில் தான் இருக்கின்றது.


துணிச்சல் (Risk) :


புதிய கடல் நாடுகளை காணவேண்டுமென்றால் இப்போது உனக்குத் தெரியும் கடற்கரையை காணாதவாறு தாண்டி பயணம் செய்ய வேண்டும்.

திட்டமிடுதல் (Plan):

எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். திட்டமிடுதல் முதலில் தானே வரவேண்டும். ஏன் கடைசியில் வருகின்றது என்று? ஏனெனில் மேற் கூரியவைகள் அனைத்தும் இருந்தால் தாள் தெளிவான திட்டம். தீட்ட முடியும். அவைகள் இல்லாமல் திட்டம் தீட்டுவது வெறும் பேப்பர் அளவிலே காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

எப்படி திட்டமிடுவது?

* முதலில் தன்னால் அடைய முடிந்த இலக்குவை குறித்துக் கொள்ளுங்கள்.

* எந்தெந்த வழிகளில் அடையலாம் என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.

* அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை தீர்வு காணும் முறையினையும் விவரமாக எழுதுங்கள்.  

* இலக்கை அடைவதற்கு தகுதியான நேர் சிந்தனை உடைய ஆட்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* எப்போது இலக்கை பற்றிய சிந்தனையிலே இருங்கள்.

* செயல்களை செய்யத்தொடங்குகள்.  

* செயல்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் திசை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

* தோல்வி ஏற்ப்பட்டால் மாற்றுப் பாதையில் உடனே செல்வதற்கு தயாராக வைத்திருங்கள்.

* இப்போது உங்கள் திட்டம் வெற்றி தான்.

* மீண்டும் அடுத்த திட்டத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் .

******************************************************************************  


 தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 




பயம் ஒரு தவறான சாட்சி - NO FEAR DURING WORK - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -

               அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
                           மதுரை கங்காதரன்

                                 



                   பயம் ஒரு தவறான சாட்சி 

எந்த ஒரு காரியமும் தோல்வியடைகிறது என்றால் அது 100% பயத்தினால் மட்டுமே. 

                              

பயம் ஒருவனை கோழையாக்குகிறது.
அது தவறான எண்ணங்களினால் திணிக்கப்படுகிறான்.

அதுவே ஆங்கிலத்தில் விரிவாக்கம் செய்தால் 

                               

F = FALSE                       (தவறான)

E = EVIDENCE THAT    (சாட்சி) 

A = APPEAR                   (ஆனால் தெரியும் )

R = REAL                        (அது உண்மை போல்)


               பயத்தை விட்டொழியுங்கள் 

           வெற்றியில் கவனம் வையுங்கள். 
  

தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

வெறி வற்றாமல் இருந்தால் வெற்றி - NEED TRY AND HARD WORK FOR SUCCESS - அனுபவ வாழ்கை பொன் வரிகள்

             அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
                           மதுரை கங்காதரன்

                                       

      வெறி வற்றாமல் இருந்தால் வெற்றி தான் 

ஒரு வேலையில் 'வெற்றி' கிடைக்கும்போது யாருக்குத் தான் மகிழ்ச்சி வராது. ஆனால் அந்த வெற்றி எப்போது கிடைக்கும்?

                                       



விடை அதற்குள் தான் இருக்கின்றது! அதாவது வெற்றிக்குள் 'வெறி' யும் 'வற்றி' யும் இருப்பது கவனியுங்கள்.   
                                                        

    வெறி வற்றிப் போனால் வெற்றி கிடைக்காது. 

இங்கு வெறி என்பது கடின உழைப்பு, விடா முயற்சியாகும். இவைகளை வற்றாமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி தான்.   

                                     



தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

நல்ல வழியை நழுவவிடாதீர்கள் - DO NOT MISS A CHANCE - ANUPAVA VARIKAL


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்


நல்ல வழியை நழுவவிடாதீர்கள் !

ஆங்கிலத்தில் AWAY என்றால் 'விலகி போவது' என்று அர்த்தம். ஆனால் அதையே இப்படி A  WAY என்றால் அதற்கு 'ஒரு வழி' என்று அர்த்தம். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள்?


if you away from the problem, you will miss an opportunity.


அதாவது நீங்கள் பிரச்சனைகளை விட்டு விலகி நின்றால், நீங்கள் ஒரு நல்ல வாய்ப்பை இழக்கிறீகள் என்று அர்த்தம்.


பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்!


நல்ல சந்தர்ப்பங்களை பெறுங்கள்!!
  

தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

நீங்கள் நன்றி சொல்லும் நேரம் - NOW YOUR TIME TO SAY THANKS - புதிய பகுதி அறிமுகம்


நீங்கள் நன்றி சொல்லும் நேரம் 



புதிய பகுதி அறிமுகம் 


இந்த புதிய பகுதியை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதலில் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.


இந்த அவசர உலகில் பலருக்கு மிகச் சில நேரங்களில் தான் கடந்த கால சுகமான, சந்தோஷமான, இக்கட்டான நேரத்தில்  கிடைத்த உதவிகள், அறிவுரைகள்,ஆலோசனைகள், அதிர்ஷ்டவசமான,   தெய்வாதிகமான நிகழ்வுகள் போன்றவை திரும்ப திரும்ப நினைத்து நினைத்து பார்ப்பதற்கு அலாதியாக பிரியப்படுவார்கள்.


அப்படிப்பட்ட பல நிகழ்வுகள் உங்கள் வாழ்கையில் நடந்திருக்கலாம்.அப்போது உங்களுக்கு   பேர்,  ஊர் தெரிந்தோ அல்லது தெரியாத, வயது , சாதி, இன, நாடு  வித்தியாசம் நினைக்காமல் யாராவது எதிர்பாராத சில அல்லது பல உதவிகளை செய்திருக்கலாம்.அப்படிப்பட்ட உதவிகளுக்கு அந்த நேரத்தில் வேகமாக ஏனோ ரொம்ப நன்றி / thanks / thank you very much / thanks sir / இந்த நன்றியை எப்போதும் மறக்கவே மாட்டேன்/ உங்களை ஆயுள்முழுவதுக்கும் மறக்கவே மாட்டேன் / நான் ரொம்பவே கடமை பட்டிருக்கிறேன் என்று பேர்,ஊர் , போன் நம்பர் கூட கேட்க நேரமில்லாமல் சாதரணமாகச் சொல்லி பிரிவதுண்டு.


உண்மையில் அதன் பின்னணியில் மிகப்பெரிய செயல்கள் நடைபெற்றிருக்கும்.அதாவது கல்வியில்  இடம் அல்லது வேலை, நல்ல வேலை வாய்ப்பு, தகுந்த சமயத்தில் பண உதவி, கல்யாண காரியங்கள், வீடு,பயணத்தில் உதவி,உணவு உதவி  சிகிச்சை விஷயம்,உள் அல்லது வெளிநாட்டில் உதவுதல்,வழிகாட்டுதலில் வெற்றி  போன்ற நல்ல  சிறப்பான வாழ்க்கை திருப்புமுனையாக  அமைந்திருக்கும்.


அவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் மிகவும் சுருக்கமாக அப்படிப்பட்ட 'நல்ல உள்ளங்கள்' இந்த கணினி உலகத்திலும் இருக்கிறாகள் என்பதை மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்து நன்றிக்கு பாலமாகவும், செய் நன்றிக்கு மறக்காமல்   இருக்க இன்றே நன்றி தெரிவியுங்கள்.

நன்றி.
                     

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

சிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்


சிரிப்பு கொத்து 

 மதுரை  கங்காதரன் 



அரசியல் கட்சி தலைவர் - தொண்டர் 



"தேர்தலே நிக்கிறதுக்கு உனக்கு 
தகுதி இருக்கு?"

"தலைவரே எனக்கு சுவிஸ் பேங்கிலே 
அக்கவுண்ட் இருக்கே !"

*****************************************



"தேர்தல்லே சீட் கேக்கிறியே இந்த தொகுதிக்கு  என்ன செஞ்சிருக்கே? "

" சும்மா நாலஞ்சு திருட்டு,பத்து கொலை ! "

*********************************************




"தலைவரே எப்படியும் தேர்தலே ஜெயிச்சுடணும்னு 
ஆசப்படுறீங்களே !  அது ஏன்?  "

"என்னேபோல ரௌடிகளுக்கும் , கோடிக்கணக்கான 
ரூபாய் ஊழல் பணம் வச்சிருப்பவனுக்கு இதை  விட 
சேப்டி பிளேஸ் எங்கேயும் கிடைக்காதுல்லே !"

*********************************************



"தலைவரே ! அந்த ரௌடியை ஏன் 
ஜெயிக்கவச்சீங்க ?"

"சட்ட சபையிலே அடிதடிக்கு உதவுமேன்னு தான் "

*********************************************


"தலைவரே ! நீங்க அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சுருக்கிறீங்கன்னு 
எதிர்கடசிகாரங்க ரொம்ப பேசுறாங்களே ! "

"அதுக்கென்ன இந்த தடவை ஜெயிச்ச மொத வேலையா எனக்கு 
'டாக்ட்டர்' பட்டம் தர வைக்கிறேன் !"

**********************************************


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com