Pages

Wednesday, 29 August 2012

வெற்றி மற்றும் தோல்வியாளர்களின் குணாதிசியங்கள்-WINNER AND LOSER'S CHARACTERS - LIFE LESSON



அனுபவ பொன் வரிகள்

 


மதுரை கங்காதரன் 

வெற்றி மற்றும் தோல்வியாளர்களின் குணாதிசியங்கள்

அவர்களின் எண்ணங்களும் செயல்களும் 
கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில்  

நீங்கள் 80% அதாவது 16 க்கு மேல் இருந்தால் நீங்கள் கட்டாயம் வெற்றியாளர்களின் பட்டியலில் வருகிறீர்கள். உங்களிடம் அபரிமிதமான திறமைகள் இருக்கின்றன.அதை கொஞ்சம் கூட குறையாமல் தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்களால் பலபேருக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி அவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்க முடியும். அவ்வளவு திறமையும், தன்னம்பிக்கையும் உங்களிடம் உள்ளது.

நீங்கள் 50% அதாவது 10 க்கு மேல் இருந்தால் நீங்கள் வெற்றியை நோக்கி பயணம் செய்கிறீர்கள். உங்களால் நிச்சயம் ஒரு வெற்றியாளனாக வரமுடியும். யாரையும் எதையும் பற்றி கவலைகொள்ளாமல் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.விடா முயற்சி தான் உங்கள் பலம்.அவ்வப்போது பயிற்சி எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.

நீங்கள் 50% கீழ் அதாவது 10 க்கு கீழே இருந்தால் கட்டாயம் உங்களுக்கு உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் தன்னம்பிக்கை, மனஊக்கம் மற்றும் நம்பிக்கை தரும் பயிற்சிகளை தினமும் பெறவேண்டும். உங்களிடம் விடா முயற்சி மிகவும் குறைவாக இருக்கின்றது.ஆகவே எந்த செயலையும் செய்வதற்கு விடாமுயற்சியை மட்டும் மனதில் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயலை செய்ய ஆரம்பியுங்கள்.கட்டாயம் நீங்கள் வெற்றியாளர்கள் பட்டியலில் விரைவில் சேர்ந்துவிடுவீர்கள்.

 Vs  




Thoughts and actions
(எண்ணங்களும் செயல்களும் )
S.N
Winner
 (வெற்றியாளர்)
Looser (தோல்வியாளர்)
1
 இலக்கை அடையக்கூடிய வழிகளோடு திட்டங்கள் இருக்கும் 
 இலக்கே இல்லாமல் வெறும் கனவுகள் நிறைய இருக்கும் 
2
 இவர்களிடம் நேரத்துடன் கூடிய செயல்களின் அட்டவணை இருக்கும் 
இவர்களிடமிருந்து 'நேரமில்லை 'என்ற பதிலும், அவர் செய்யவில்லை,இவர் செய்யவில்லை என்ற சாக்கு போக்குகள் நிறைய இருக்கும். 
3
 எந்த ஒரு கஷ்டமான செயலையும் கூட எளிதாக முடித்து விடுவார்கள்.
இதை இப்படி செய்வேன், அப்படி செய்வேன் என்ற 'வாய்ஜாலம்' காட்டுவார்கள்.
4
எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்த்து வைப்பார்கள்.தீர்க்க முடியாத பிரச்சனைகளை ஆலோசகர்களைக் கொண்டு தீர்த்துவிடுவார்கள். 
எல்லாத் தீர்வுகளிலும் ஏதாவது ஒரு பிரச்னையை கண்டுபிடித்து அதை தீர்க்க விடாமல் தடுப்பார்கள்.
5
பிரச்சனைகளுக்குரிய தீர்வு பக்கம் இருப்பார்கள்.
இவர்கள் பிரச்சனைகளின் பக்கம் தான் இருப்பாகள்.
6
 எந்த ஒரு சிரமமான வேலை கொடுத்தாலும் 'இதை செய்வது கஷ்டம்.ஆனால் முயற்சி செய்து முடித்தே தீருவேன்' என்ற வைராக்கியம் உள்ளவர்கள்.
இவர்களிடம் எளிய வேலை கொடுத்தாலும் 'இதை செய்யாலாம் , ஆனால் முடிப்பது கஷ்டம்' என்பார்ர்கள்.
7
எந்த தவறையும் ஒத்துக் கொள்வார்கள். அதே தவறை மேலும் வரவிடாமல்  பார்த்துக் கொள்வார்கள்.
இவர்களே தவறு செய்தாலும் 'இது என் தவறல்ல' என்று கடைசி வரை வாதாடுவார்கள்.
8
'உங்களுக்காக எந்த வேலையும் செய்ய தயார்' என்று உறுதியளிப்ப்பார்கள். 
'இது என் வேலையில்லை' என்று முகத்திலடித்தாற்ப் போல் பேசுவார்கள்.
9
எந்த வேலை செய்தாலும் 
நல்ல தரத்துடன், லாப நோக்குடன், தொழிலாளர்
களுக்கு உதவும் வண்ணம் செய்வார்கள். 
லாப நஷ்டத்தைப் பற்றி ஆராயாமல் ஏதாவது ஒரு வேலையை செய்பவர்களாக இருப்பார்கள்.
10
லாபம் தரும் வேலை
களை மகிழ்ச்சியுடன், ஆர்வத்துடன் செயவார்கள்.
கஷ்டத்தை மட்டும் பார்த்து அடிக்கடி வேலையில்  சோர்வடைந்து விடுவார்கள். 
11
குழுவில் ஒருவராக் இருந்து கொண்டு அனைவரையும் ஊக்கம் மற்றும்  தன்னம்பிக்கை அளிப்பார்கள். 
தனியாக இருந்தும், வேலைகளை யாரிடத்திலும் பகிர்ந்து தரமாட்டார்கள்.
12
'தன்னுடன் வேலை செய்யும் அனைவருமே வெற்றி பெற வேண்டு மென்று' எண்ணுவார்கள்.
மற்றவர்களை குறை சொல்லி பின்னுக்கு தள்ளி 'தான் மட்டும் வெற்றி பெற' எண்ணுவார்கள்.
13
எல்லா செயல்களிலும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருப்பார்.
எல்லா செயல்களிலும் எதிமறை எண்ணங்கள் கொண்டவராக இருப்பார்.
14
எல்லோருடனும் அனுசரித்து பிறரை கஷ்டபடுத்தாதவராக இருப்பார்கள்  
'நான் சொல்வது தான் சட்டம்' என்று தன்னிச்சையாக முடிவெடுத்து மற்றவர் களுக்கு அதிக கஷ்டம் கொடுப்பார்கள்.
15
வேலைகளில் கடுமையாக வாதாடுவார்கள்.ஆனால் மென்மையாக பேசுவார்கள்.
மென்மையாக வாதாடுவார்கள். பிறர் மனம் புண்படும்படி பேசுவார்கள்.
16
எந்த வேலையும் மதிப்பு மற்றும் அவசரமறிந்து அதற்குதகுந்தார்ப்போல் செயல்படுவார்கள்.
சிறிய பிரச்னையை பெரிதாக்கி தன்னுடைய மதிப்பை இழப்பவர்களாக இருப்பார்கள்.
17
'சரித்திரம் படைக்க வேண்டுமென்ற வெறி ' அவர்கள் மனதில் எப்போதுமிருக்கும்.
சரித்திரத்தை படிக்க கூட விருப்பமில்லாமல் வேண்டாதவற்றை பேசி நேரத்தை வீணாக்குவார்கள்.
18
நுண்ணிப்பாக நிறைய கேட்பார்கள்.ஆழமாக படிப்பார்கள்.குறைவாக பேசுவார்கள்.
நிறைய பேசுவார்கள்.குறைய கேட்பார்கள்.அல்லது கேட்கவே மாட்டார்கள்.
19
புதுமைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு அதன்படி மாற்றம் செய்து புதுமை படைப்பார்கள்.
பழைய பஞ்சாங்கத்தை பேசி பேசியே காலத்தை கழிப்பார்கள். 
20
நிறைய கறப்பார்கள். சூழ்நிலை மற்றும் வேலைக்குத்தக்கவாறு பயிற்சி மூலம் தங்களை தயார் செய்து கொள்வார்கள்.
எதையும் கற்கும் ஆர்வமிலலாதவர்களாகவும்,
பயிற்சியில் அக்கறை இல்லதவர்கள்ளகவும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.   


இப்போது சொல்லுங்கள் நீங்கள் வலது பக்கத்தை சேர்ந்தவரா? இல்லை இடது பக்கத்தை சேர்ந்தவரா?


வெற்றியாளராக மாறுவதற்கு எனது வாழ்த்துக்கள்.

******************************************************************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 





Saturday, 25 August 2012

இருட்டு உலகை ஞான ஒளி கொண்டு விரட்டுங்கள்.- LIGHT THE WORLD WITH YOUR WISDOM

அனுபவ பொன் வரிகள்

 


மதுரை கங்காதரன் 



இருட்டான உலகம் எப்படி இருக்கும். கண்கள் நன்றாக தெரிந்தாலும் குருடனாகத் தான் எல்லோரும் செயல்படுவர்.இந்த குருட்டு உலகத்தில் நாட்டுக்கிடையே போர் , கலவரங்கள், உறவுக்கிடையே தீரா சண்டைகள்,நட்புக்கிடையே விரிசல்கள், குடும்பத்தில் கூச்சல்,குழப்பங்கள், குத்து வெட்டு, அடிதடி,பொய் பித்தலாட்டம், கொலை கொள்ளை,லஞ்சம் ஊழல், ஏறி மிதித்து நசுக்கினாலும் கேட்பாரிலா செயல்கள் , இன்னும் தான் எத்தனை எத்தனை ? யாரோ தவறு செய்கிறான்? செய்தவன் எளிதாக தப்பித்துக் கொள்கிறான். ஆனால் கையில் கிடைத்த தவறே செய்யாதவனுக்கு தண்டனை,இப்படித்தான் தான் இனிமேலும் இருக்கும். இப்படி இருக்கின்ற வேளையில் 'இதிலிருந்து தப்புவதற்கு விமோட்சனம் ' கிடைக்காதா? யாராவது நல்ல உலகிற்கு அழைத்து செல்லமாட்டார்களா? என்று ஒரு ஓரத்தில் ஒளி வருகின்றதா? என்று விழிப்புடன் நாலாப் பக்கங்களும் காதையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்து வருகின்றனர்.


"அதோ ... அதோ...ஒரு ஒளி ! அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.பலரை கூவி கூவி அழைக்கின்றனர். இந்த நல்ல சந்தர்ப்பம் இனி வராது! பின்னால் ஓடிவாருங்கள் !" என்று பலர் சொல்வதை, எப்போதும் கூச்சல் குழப்பத்துடன் இருக்கும் மனிதனுக்கு எங்கே கேட்கும்? 


ஆனால் பார்த்தவர்கள், சுதாரித்தவர்கள் அதன் பின்னே ஓடி ஒளி கொண்ட அருமையான உலகத்திற்கு சென்றனர். சற்று தாமதமாக சுதாரித்தவர்கள் "அடேடே .. நல்ல வாய்ப்பை தவறவிட்டோமே " என்று மறுபடியும் ஓளியை கவனிக்கத் தொடங்கினர். பார்த்த ஒளியின பெருமைகளை பலரிடம் கூறும்போது பலத்த சிரிப்புடன் "ஒளியாவது ! ஒன்னு இருக்கிறதாவது? யாரை ஏமாற்ற பாக்கிறே?" என்று பழையபடி கூச்சல் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் அறிந்தவர்களோ மற்றொரு வாய்ப்புக்காக ஏங்கினர்.

இந்த இருட்டு உலகத்தில் மனித பண்பு வளர்த்து நாட்டுக்கிடையே,உறவுக்கிடையே, நட்புக்கிடையே , குடும்பத்திற்க்கிடையே இரக்கம் ,அன்பு,கருணை,பாசம் என்ற ஒளியைக்கொண்டு முடிந்த மட்டும் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஏழை எளிய மற்றும் நல்ல  உள்ளங்களின் இன்னல்களை அகற்ற உங்களாலான முயற்சியை தினமும் செய்து கொண்டிருங்கள்.அப்போது தான் இங்குள்ள மக்கள் மகிழ்ச்சிய்டன் வாழ்வார்.இந்த உலகம் காப்பாற்றப்படும்.

இருட்டு உலகை ஞான ஒளி கொண்டு விரட்டுங்கள். 


மனித பண்பை மதியுங்கள்.   


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

    

உன்னிடம் இருக்கும் மூலதனம்- KNOW YOUR PERMANENT PROPERTY - அனுபவ பொன் வரிகள்


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 


உன்னிடம் இருக்கும் மூலதனம் 


ஒரு சமயம் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்க்கான ஆயுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. எப்போதுமே நான் நடத்தும் பயிற்சி வகுப்பில் செய்முறை விளக்கம் இருக்கும்.அப்போது தான் எல்லோருக்கும் எளிதாக மனதில் பதியும். அன்றைய தினத்தில் நான் கேட்டபொருள் பெரிய இரம்பம், சுத்தியல், திருப்புளி,கட்டிங் பிளேயர், டிரில்லிங் மெஷின் போன்றவை அனைத்தும் மேஜையில் வைத்து வகுப்பை ஆரம்பித்தேன்.


மேஜையில் உள்ள பொருட்களை பார்த்தவுடன் சற்று முழிப்புடன் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ஒவ்வொன்றும் காட்டி அதன் செயல்பாடுகளை விவரித்தேன். "இந்த இரம்பம் மிகவும் கூர்மையான புற்கள் கொண்டது.எளிதாக கடித்து துப்பிவிடும்.இந்த  சுத்தியலால் ஒரே போடு போட்டால் சுக்கு நூறாகிவிடும்., திருப்புளியால் இலேசாக ஒரு திருகு கதை ஓவர். கட்டிங் பிளேயரால் ஒரு பிடுங்கு கையேடு வந்துவிடும். இந்த  டிரில்லிங் மெஷினால் எதையுமே துளை போட்டுவிடலாம். இதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அறுவை சிகிச்சை பண்ணப் போகிறேன். ஆனால் இரத்தம் வராமல்! அனைவரும் நன்றாக கவனியுங்கள்" என்றேன்..


ஒருவரை கூப்பிட்டு "உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது" என்று கேட்டேன். அதற்க்கு "நூறு ரூபாய் " என்று பதிலளித்தார்.
இதை வைத்துக்கொண்டு பெரிய சாதனை செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு "முடியாது " என்று பதிலளித்தார்.
"ஏன்?"
"அதற்கு நிறைய மூலதனம் வேண்டும் "
"அப்படியா ? உன்னிடம் இருப்பதை கேட்டால் விலைக்குத் தருவாயா? "
"ஒ..தருவேன்"
"சரி" என்று சொல்லியவாறே இரம்பத்தை எடுத்தேன்."நான் உனக்கு பத்தாயிரம் தருகிறேன் உனது வலது கை மட்டும் தருவாயா? "" என்று கேட்டேன்.
உடனே "முடியவே முடியாது. அது இல்லாமல் எந்த வேலையும் செய்ய இயலாது " என்றார்.

"அது போகட்டும் ஐம்பதாயிரம் தருகிறேன்.உனது கண்களை டிரில் போடட்டுமா? "

"நான் மாட்டேன் . கண்கள் இல்லாமல் எதையும் பார்க்க முடியாது".

"சரி ஒரு லட்சம் தருகிறேன். சுத்தியலால் உன் மண்டையை ஒரேபோடு போட்டு சுக்கு நூறாகட்டுமா? "

"நல்லா இருக்கே, அப்படி செய்தால் என் உயிர் போய்விடும். பிறகு என் குடும்பத்தின் நிலைமை என்னாவது? " என்று சற்று ஆத்திரப்பட்டார்.

"உனது ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி " என்று அவரை உட்காரவைத்தேன்.

"இதிலிருந்து தெரிகின்றதா ? உங்களிடம் எவ்வளவு மூலதனம் இருக்கின்றது என்று! உங்களுடைய ஆரோக்கியமான, திடகாத்திரமான உடம்பே உங்களுக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா மூலதனம்.இதை கொண்டு எவ்வளவோ சாதனை செய்யாலாம்." என்று முடித்தேன்.

இப்போது உங்கள் அருமையை உணர்ந்தீர்களா? 

உலகை வெல்ல இப்போதே புறப்படுங்கள்! 


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

      

உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள் - DO YOU WANT TO KNOW YOUR LUCK VALUE



அனுபவ பொன் வரிகள் 
மதுரை கங்காதரன் உங்கள் 

உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள் 

தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றுகொண்டிருக்கும் போது 'முன்னேற்றம் ' பற்றிய தலைப்பு வந்தது. "உங்களில் யாருக்கு முன்னேறும் ஆசை இருக்கின்றது " என்று கேட்டேன். எல்லோரும் கையை உயத்தினார்கள். அப்படியென்றால் "முன்னேறிவிட்டீர்களா ?" என்று மறுபடியும் கேட்டேன். எல்லோரும் மௌனமாகிவிட்டார்கள். "ஏன் இதற்க்கு பதிலில்லை " என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லத் துவங்கினர். அதில் நிறையப் பேர் சொன்ன காரணம் "எனக்கு அதிர்ஷ்டம் இல்லை , நான் எடுக்கும் முயற்சியனைத்தும் எல்லாம் வீண் தான். அதிர்ஷ்டம் ஒத்துழைத்திருநதால் இந்நேரம் நான் ஒரு பெரிய லெவலுக்கு உயந்திருப்பேன்" என்றார். சரி அப்படியென்றால் உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவு எவ்வளவு ? என்று தெரியுமா?  அதற்கும் ஒரு சூத்திரம் இருகின்றது.

என்னிடம் இருக்கும் 6 விதமான கை கடிகாரத்தை மேஜையின்மீது வைத்தேன். அந்த கடிகாரத்திற்கு 1,2,3,4,5 மற்றும் 6 என்று அடையாளமிட்டேன். அப்போது நேரம் சரியாக காலை 10.10 மணி. சிலரை கூப்பிட்டு ஐந்து கடிகாரத்தில் நேரம் எவ்வளவு காட்டுகின்றது? என்று பார்க்கச் சொன்னேன்.எல்லாமே சரியாக 10.10 மணி காட்டுகின்றதை உறுதி செய்தனர். 



சிறிது நேரம் கழிந்தது. கை கடிகாரங்களில்  எந்தெந்த கடிகாரம் என்ன மணி காட்டுகின்றன என்று பார்க்கச்சொன்னேன்."ஐயா! முதல் மூன்று கடிகாரங்கள் பழைய நேரத்தை அதாவது 11.00 மணியைத்தான் காட்டுகின்றன்றன. மீதமுள்ள கடிகாரங்கள் இப்போதுள்ள மணியை 11.30 என்று சரியாக காட்டுகின்றன" என்றனர்.கடிகாரங்கள் ஓடாத காரணத்தை ஆராயச்சொன்னேன்.



அவர்களும் முன் பின் திருப்பி பார்த்து, கை கடிகாரத்தில் பின்னல் இருக்கும் 'கேஸை' கழற்றிய உடனேயே காரணத்தை சொல்லிவிட்டனர்.

"ஐயா! முதல் கடிகாரத்தில் எந்தவிதமான ஓடக்கூடிய பாகங்கள் இல்லை. ஆகையால் ஓடவில்லை. 

இரண்டாவது கடிக்கரத்தில் எல்லா பாகமும் இருகின்றன. ஆனால் முறையாக பராமரிப்பு இல்லாததால் தூசி அடைந்து ஓடவிடாமல் செய்திருக்கின்றன.

மூன்றாவது கை கடிகாரத்தில் எல்லா பாகமும் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடவைக்கக் கூடிய 'செல்' இல்லாததால் ஓடவில்லை " என்று பதிலளித்தனர்.

இதிலிருந்து எனன் தெரிகின்றது. ஓடாத் கடிகாரமும் ஒருநாளைக்கு இரண்டு தடவை மட்டுமே  சரியான நேரத்தை காட்டும். அதற்காக மற்ற நேரங்களில் அது  சரியான நேரம் காட்டாது.

வகுப்பு தொடர்ந்து நடந்தன. மீண்டும் சற்றுநேரம் சென்ற பிறகு மறுபடியும் பார்கச்சொன்னேன். அப்போது நேரம் 1.00 மணி. இப்போது நான்காவது கடிகாரம் 12.45 மணியுடன் நின்று விட்டன. காரணம் ஆராய்ந்து சொன்னனர். "ஐயா நான்காவது கடிகாரம் 'ஆட்டோமேட்டிக்' தானே கி ஏறும் கடிகாரம். அதை நாம் கையில் கட்டிக்கொண்டு, கைகளில் உள்ள அசைவுகளைப் பொருத்து தான் கடிகாரம் ஓடும்.இந்த கடிகாரம் ஓரிரண்டு தடவை இலேசாக ஆட்டியதால் குறைந்த அளவே ஓடியது" என்றனர்.

மீண்டும் பயிற்சி வகுப்பு தொடர்ந்தன. இப்போது மணி 3.00 மணி. கண்ணசைத்துக் காட்டியதும் ஐந்தாவது கடிகாரத்தை பார்த்தனர்.அதில் 2.45 வுடன் நின்றிருந்தது. "ஐயா, இந்த கடிகாரம் கை கீ கொடுக்கும் கடிகாரம். எந்த அளவுக்கு கீ கொடுக்கிறோமோ அந்த அளவு ஓடும்" என்றனர்.

மீண்டும் நேரம் 4.00 மணி. நான் மீண்டும் கையை  சுட்டிக்காட்ட ஆறாவது கடிகாரம் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.ஏனென்றால் அதன் நேரமும் சரியாக 4.00. அதை ஆராய்ந்து "ஐயா, இந்த கடிகாரம் குறைந்தது ஒரு வருடம் வரை சரியான நேரம் காட்டும் .ஏனெனில் அதன் எல்லா பாகமும் 'செல்'லும் நன்றாக் இருக்கின்றது" என்றனர். 

"இதிலிருந்து என்ன தெரிகின்றன" என்று கேட்டேன்.

"ஐயா, கடிகாரத்திற்கேற்ப முடுக்கம் (கீ அல்லது செல் ) நன்றாக பார்த்துக்கொண்டால் எப்போதும் கடிகாரம் ஓடும்." என்றனர்.

பிறகு விளக்கத்துடன் அதிர்ஷ்டத்துக்கான மதிப்பை விவரித்தேன்.

முதல் கடிகாரம் :

சிலர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையும் கற்றுக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வப்படமாட்டார்கள். எந்த வேலையும் கவனத்துடன் செய்ய மாட்டார்கள்.அவர்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் வராது.

இரண்டாவது கடிகாரம்:

சிலர் நன்றாக ஆழ்ந்த அறிவுடன் புரிந்து கொள்ளும் திறமையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட சிறு சிறு தோல்விகளை நினைத்து கவலைப்பட்டு பயம் காரணமாக உழைப்பதற்கு மனமில்லாமல் இருப்பார்கள்.அவர்களுக்கு முறையாக ஊக்கமளிக்கும் பயிற்சியும், தோல்விகளை வெற்றியாக மாற்றும் தன்னம்பிக்கை சக்தியை கொடுத்தால் 'அதிர்ஷ்டம்' அவர்கள் பக்கம் தான்.

மூன்றாவது கடிகாரம்:

சிலருக்கு அறிவு,ஆர்வம் இருக்கும்.அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முயற்சி செய்யும் வழியை சொல்லிக்கொடுக்கும்போது அவர்களது ஆற்றல் வேலை செய்ய துவங்கும். இனியென்ன அதிர்ஷ்டம் தானாகவே அங்கே புகுந்துவிடும்.

நான்காவது கடிக்கரம்:

சிலருக்கு எப்போதுமே ஊக்கபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு எப்போதும் கண்காணித்து ஆர்வம் குறைந்தபோதெல்லாம் ஊக்கம் கொடுத்தால் அதிர்ஷ்டகாற்று அவர்கள் பக்கம் திரும்பும்.

ஐந்தாவது கடிக்கரம்:

சிலருக்கு தன்னம்பிக்கை மற்றும் ஊக்கப் பயிற்சி கொடுக்கும் போது அந்த அதிர்வு அதாவது அதன் செயலின் சக்தி சிறிது நாட்கள் இருக்கும். நாம் காணாது இருந்தால் மீண்டும் அவர்கள் ஆற்றலற்றவர்களாக மாறிவிடுவர். அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் நாம் ஊக்கபயிற்சியளித்து அவர்களின் மனப்பாங்கை மாற்றினால் அதிர்ஷ்டம் அவர்களுக்கு கைகூடிவரும்.

ஆறாவது கடிகாரம் :

ஒரு சிலர் ஒரே தடவை ஊக்கமும், தன்னம்பிக்கை பயிற்சியளித்தால் போதும். அதை வருடக்கணக்கில் அதன் ஆற்றலை குறைத்துக் கொள்ளாதபடி தாங்களே சக்தியை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் இஷ்டப்படி தான் அதிர்ஷ்டம் வேலை செய்யும்.




ஆக அதிர்ஷ்டம் = உழைப்பு +ஊக்கம் + தன்னம்பிக்கை + முயற்சி 
***********************************

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

  

Friday, 24 August 2012

மாற்றத்திற்கு நீங்கள் அடிமையானவர்கள - அனுபவ வரிகள் - ARE YOU SLAVE FOR CHANGE


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -



 மதுரை கங்காதரன்


மாற்றத்திற்கு நீங்கள் அடிமையானவர்களா?


இன்றைய கால கட்டத்தில் மாற்றங்கள் என்பது எப்படி புகை பிடித்தலுக்கும்,மது போதைக்கு அடிமையாவது போல மாற்றங்களுக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். அதையே பெருமையாகவும் பீற்றிக்கொண்டு மற்றவர்களை உசுப்பேற்றி அவர்களையும் அடிமையாக்கும் நிலைமைக்கு தள்ளிக்கொண்டி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மறைமுகமாக நஷ்டமடைந்து தங்களுடைய வாழ்க்கை தரம் குறைந்துகொண்டே போவதை உணரத்தவருகின்றனர். 


மாற்றத்தை பலர் தவறாக புரிந்துகொண்டு அதை ஒரு சமுதாய அந்தஸ்து என்று கருதி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டும், ஏமாந்து கொண்டும் வருகின்றனர். அரசு வங்கிகளும் மற்றும் பல தனியார் வங்கி , நிதி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு  மக்களுக்கு  பொருட்களை வாங்குவதற்கு கடன் வழங்கி ஊக்கப்படுத்தின் மூலம் அவர்களை தங்களுடைய நிரந்தர அடிமையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தினமும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மாற்றங்கள் தேவைதான? என்பதை கீழ்க்கண்டவைகளை படித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள்.

மொபைல் :


நாளுக்கு நாள் வித விதமாக, பலவித பெயர்களில், மாடல்களில், கலர்களில், சைஸ்களில் கடைகளில் வந்து குவிகின்றது. கண்களை கவரும் பகட்டான, பரப்பரப்பான விளம்பரங்கள். அதைப் பார்த்து சிலர் தாங்கள் போன மாதம் வைத்திருக்கும் மொபைல் நன்றாக வேலை செய்திருந்தாலும் அதை ஓரம்கட்டி புதிதாக வேறு மொபைலை வாங்கி மற்றவர்களிடம் காட்டி 'பந்தா' பண்ணுகிறார்கள்.அதனால் யாருக்கு என்ன லாபம்? மாறுபவர்கள், மாற்றுபவர்களுக்கு பணத்தை கொடுத்து பழைய மொபைல் போல ஆனால் சற்று கூடுதல் வசதியுள்ள மொபைல் வேறு கலரில் வாங்கி பணத்தை வீணடித்துகொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன கூத்து என்றால் எந்த மொபைல் போனிலும் 100 % வசதிகளை உபயோகிப்பார்களா? என்றால் 'இல்லை' என்ற பதில் தான் வரும். ஆரம்பத்தில் எப்.எம்.ரேடியோ, வீடியோ, போட்டோ, பாட்டு நெட்டு என்று 'அலப்பரை' செய்தவர்கள் இப்போது பெரும்பாலும் எஸ்.எம்.எஸ் யில் 90% ம் , பேச்சில் 10% ம் மட்டுமே உபயோகிக்கின்றனர். பிறகு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஏன் கூடுதல் வசதிகொண்ட மொபைல் வாங்கவேண்டும்? அதிக பணம் இருக்கின்றதாலா? இதை பயன்படுத்தி மொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை 'ஒன்ஸ் துரோ' அதாவது ஒருமுறை மட்டுமே உபயோகிப்பது. ஏதேனும் ரிப்பேர் ஆகிவிட்டால் தூக்கிப் போட்டுவிட்டு புதுசு வாங்கிவிடச் செய்கின்றனர். இந்த மாற்றம் ஆரோக்கியமான மாற்றமா? இதற்க்கு நாம் ஒத்துழைப்பது எப்படிப் பட்டது?


மோட்டார் பைக்குகள்:


வாங்கி ஓரிரு வருடங்கள் கூட ஆகியிருக்காது. கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்து புது சேஸ் , புது பெயர், புது கலர்ரென்று 'டர்ரு புர்ரு' பறக்க வேண்டும் என்ற ஆசையில் கையில் வைத்திருக்கும் நல்ல பைக்கை பாதி விலைக்கும் குறைவாக விற்று அதிக விலையில் கடனில் மாற்றம் என்ற பெயரில் புது பைக்கை வாங்கினால் யாருக்கு லாபம்? இதன் காரணம் என்று தானோ என்னவோ புதுப் பொருட்கள் முன்பு போல் பத்தாண்டு , இருபதாண்டு என்று உழைக்காமல் சீக்கிரமே சில நாட்களிலே சில உதிரி பாகம் கட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது. பெரும்பாலும் குறைந்த உழைப்புள்ள உதிரி பாகங்களை போட்டு புது தயாரிப்புகளை தயாரித்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால் புதிய வரவுகளை சீக்கிரமே விற்றால் தான் லாபம் கிடைக்கும் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். புதிது என்றும் தரம் குறைந்த பொருளைத் தான் நாம் வாங்குகின்றோம். சில வேளைகளில் பழைய பொருட்களையே புதிதாக்கி காசு அதிகம் பார்க்கின்றனர்.

இது மட்டும் தான? புது கார்கள், கணினிகள், டி.வி, வீட்டு உபயோக சாமான்கள் பலவும் ஏன் சேலைகள், சுடிதார்கள் என்று எதுவும் விட்டு வைக்காமல் மாற்றங்களுக்கேற்ப மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர். 

அது ஒருபுறம் இருக்க சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மாற்றம் என்கிற பெயரில் ஒரே மாதிரியான செய்திகள், படங்கள், பாட்டுகள், சீரியல்கள், புதுமை என்ற பெயரில் உருபிடியில்லாத நிகழ்சிகள் என்று புது புது சேனல் என்ற பெயரில் புது நடிக, நடிகர்களை வைத்துக்கொண்டு மறைமுகமாக பணம் பறிக்கின்றனர். இது மாற்றமா?

இத்தகைய மாற்றம் கல்வியில் கூட விட்டு வைக்கவில்லை. சின்னவனுக்கு இன்ஜினீயரிங் படிப்பா? எனக்கு மட்டும் ஆட்ஸ் படிப்பா? (இவன் படிக்கும் போது  அவ்வளவாக இன்ஜினீயரிங் படிப்பு இல்லை! அதனால் சொந்த தம்பி தங்கை களிடம் பொறாமை கொள்ளலாமா? இதுமட்டுமா? எனக்கு இந்த மொபைல் அவனுக்கு லேட்டஸ்ட் மொபைலா? அல்லது பைக்கா? இன்னும் எத்தனயோ? 


ஆட்சியில் கூட மாற்றம் செய்யப்ப்போகிறோம் என்று பல நாட்டில் (இங்கு உள்பட) தலைவர்களை மாற்றி ஆட்சி பதவியினை கொடுத்தனர். தலைகள் மாறியது தவிர மாற்றம் செய்த மக்களின் வாழ்க்கை தரம் போக போக மோசமாகித்த்தான் வருகின்றன. இப்போது சொல்லுங்கள் மாறச் சொல்பவர்கள் தான் அதிகம் ஆதாயம் அடைகின்றனர். இப்படி மாற்றம் தேவைதான?   

இத்தகைய மாற்றங்கள் குடும்பத்தில் போட்டி, பொறாமையை வளர்த்து குடும்ப உறவுகளை, நட்புகளை சின்னா பின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றது. 

கடைசியாக மாற்றம் என்பது உனது வாழ்க்கை தரத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதாக இருக்கவேண்டும். அது கட்டாயம் ஆரோக்கியமானதாகவும், எவருக்கும் கெடுதல் செய்யாமல் நமது உறவுகளை நீடித்திருக்கும் பாலமாக விளங்கவேண்டும். 

மாற்றத்திற்கு ஒத்துழைப்பீர் !

அது கட்டாயம் 


ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்!
     
***************************************************************************
      

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com