Pages

Wednesday, 5 September 2012

கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE


அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் -

HAND AND HOT WATER PRINCIPLE

தத்துவம் எண் : 1 சோதனை :1

ஒரு எளிதான சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு பலவிதமான உண்மைகள் புலப்படும். 


அதாவது ஒரு சட்டியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அது ஆவியாக ஆரம்பிக்கும் வரை  நன்றாக சூடுபடுத்துங்கள். அந்த சுடுதண்ணீரில் உங்களால் ஒரு கையை முழுவதும் உள்ளேவிட்டு சில நிமிடங்கள் வைத்துக்கொள்ள இயலுமா? அல்லது  குறைந்தது ஒரு விரல் நுனியையாவது தொடமுடியுமா? (குறிப்பு : அதை தொட்டுவிட்டு அவதிபட்டால் நான் பொறுப்பல்ல!) கண்டிப்பாக தொடமுடியாது.  அப்படி தொட்டுவிட்டலும் மிகக்குறுகிய நேரத்தில் (வினாடி கணக்கில்) அதன் தன்மையை உணர்ந்து விரலை வெடுக்கென்று எடுத்துவிடுவீர்கள்! அப்படித்தானே. ஏனென்றால் அதன் கடினமான தன்மை உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பாதிப்பு உங்கள் விரல்களுக்கு (கைகளுக்கு) எப்படியிருக்கும்? அதன் விளைவு நன்றாக பார்த்திருப்பீர்கள். கேள்வியும் பட்டியிருப்பீர்கள் !  உங்களுக்கு அது பற்றி நன்றாக தெரியும். அந்த சூழ்நிலை உங்கள் கைகளால் தாங்கமுடியாது என்று, ஆகையால் அத்தகைய பலப்பரீட்சையில் மீண்டும் ஈடுபடமாட்டீர்கள்.

திடீரென்று நிகழும் பாதிப்பு மூலம்  நீங்கள்  பாடத்தை உடனே கற்றுகொண்டுவிடுகிறீர்கள்.

இதற்கு  ஒரு உதாரணம் : 'ஹிரோசீமா & நாகாசாகி ' அணுகுண்டுகளால் எதிர்பாராத தாக்கத்தின் விளைவுகளால் இன்று 'குட்டி ஜப்பான்' பெரிய நாடுகளில் இல்லாத சாதனை செய்து வருகின்றது. 

 

தத்துவம் 2 :  சோதனை : 2


ஒரு சட்டியில் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் சாதாரணமான குளிர்ந்த தண்ணியை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையை முழுவதும் உள்ளேவிடுங்கள் . இந்த முறை மகிழ்ச்சியோடு கையென்ன ? உடல் முழுவதும் கூட மணிக்கணக்கில் உள்ளே நுழைக்க தயாராக இருப்பீர்கள். ஏனென்றால் தினமும் அதை தான் உபயோகிக்கிறீர்கள். அதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று நன்றாக தெரியும். 

இப்போது அந்த சட்டியில் கீழ் ஒரு சூடடடுப்பு மூலம் மிகவும் மெல்ல மெல்ல அந்த குளிர்ந்த தண்ணீரை சூடுபடுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி உணருகிறீர்கள். இளஞ்சூட்டில் உங்கள் கைகள் இதமான இன்பத்தை உணரும். இப்போது உங்களால் மணிக்கணக்கில் கைகளை உள்ளேயே வைத்திருக்க முடியும். ஏனெனில் அந்த சூடு உங்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதனால் கைகளுக்கு பாதிப்பு என்பது இம்மி கூட இருக்காது.

இப்போது தண்ணீரின் சூடு சற்று அதிகமாகிறது. இப்போது அந்த சூட்டை கஷ்டப்பட்டு தாங்கிக் கொள்வீர்கள். இம்முறை குறைந்த அளவு நேரமே உங்களால் தாங்கி கொள்ளமுடியும்.

மறுபடியும் அந்த தண்ணீரை அதிகளவு சூடு படுத்துகிறீர்கள். இப்போது உங்களால் அந்த சூடு தாங்கமுடிவதில்ல. பழக்கப் பட்டதால் அதைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப் பட்டு / அவஸ்தை படும் நிலைமை உங்களுக்கு வந்து நிலைத்து விடுகின்றது.

விழிப்புணர்வு தேவை: 

உங்களுக்கு தெரிகின்றது. உங்கள் சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கின்றது என்று. அப்போதே சுதாரித்து கொண்டு உங்களுக்குள்  'ஏன் சூழ்நிலை மாறுகின்றது?என்று கேட்டதுண்டா? இளம்சூடு ஆரம்பிக்கும்போதே நீங்கள் இந்த சூழ்நிலையில்  இப்படியே இங்கேயே இருந்தால் அதிக சூடு நம்மை பாதித்துவிடும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், அப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உதவிகளை மதிக்காமல் காலம் கடந்து விளித்துகொண்டால் எந்த பயனுமில்லை. கடைசி வரையில் நீங்கள சூடான தண்ணீரில் இருந்து கொண்டு காலம் பூராவும் கஷ்டப்படுவீர்கள்.

சரி ஏன் இந்த உதாரணம்.

சிறிதளவு மக்களே விழித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்கிறனர்.

பலர் இரண்டாவது தத்துவத்தில் தான் இருந்துகொண்டு அவதிபட்டு கொண்டிருக்கின்றனர்.

சில 'காலம் கடந்து உணரும்' எடுத்துக்காட்டுகள்:

1. 'லிவர் ' சேதமடைந்த பிறகு தான் ஒருவன் குடிப்பதை நிறுத்துகிறான்.

2. 'நுரையீரல் ' பழுதடைந்த பின்பு தான் ஒருவன் சிகரெட் குடிப்பதை குறைத்துக் கொள்கிறான்.

3. 'உடல் ஊதி பருமனான' பின்பு தான் உணவு கட்டுப்பாடு பின்பற்றுகிறான்.  

4.  'சர்க்கரை மற்றும் உப்பு' அதிகம்மகும்போது தான் அதனை கட்டுப் படுத்த படாதபாடு படுகிறான்.

5. 'இதய தடிப்பு ' அதிகமான பின்பு தான் 'கொழுப்பு ' உள்ள உணவுப்பதார்த்தங்களை உண்பதை அறவே குறைத்துக் கொள்கிறான்.

6. வயதான பின்பு தான் இளமையின் சுறுசுறுப்பை உணருகிறான்.

7. 'டைவேர்ஸ் ' ஆனா பிறகுதான் குடும்பத்தின் அருமையை உணருகிறான்.

8. வேலை தேடி அலையும்போது தான் பரீட்சையில் வாங்கிய குறைவான் மதிப்பெண்ணை பற்றி யோசிக்கிறான்.

9. நஷ்டமடைந்த பிறகுதான் 'வியாபாரத்தில் லாபம் தரும் வழி 'களை படிக்கிறான்.

10. அனைத்து பணமும் செலவான பின்னே 'சேமிப்பது 'எப்படி என்று தெரிந்து கொள்கிறான்.

11. கஷ்டங்கள் சூழ்நத பிறகு தான் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறான்.

12. விபத்து நடந்த பிறகு தான் 'பாதுகாப்பான பயணம் ' பற்றி படிக்கிறான்.

இப்படி பல ...

இப்போது உலகை இளஞ்சூட்டில் இருந்து வருங்காலத்தில் அதிகமாய் சூடாக்கிவிடும்  நிகழ்வுகள் :

1. 'பட்டினி ' தலை விரித்தாடும் போது  தான் விவசாயம் எப்படியெல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரிவிப்பார்கள் அரசியல்வாதிகள்.

2. 'பஞ்சம் ' நாட்டு மக்களை அதிகம் வாட்டும்போது தான் மழைநீர் சேர்க்க வேண்டும் என்று வாய்கிழிய பேசுவார்கள்.

3. 'சுற்று சூழல் ' மிக மோசமாகும் போது தான் பாலிதீன் பைகள் உபயோகம் செய்வதை தடுப்பார்கள்.

4. 'புவி வெப்பமமயமாதல் ' அதிகரிக்கும்போது தான்  கரும்புகை விடும் வாகனம் மற்றும் தொழில்சாலைகளை ஓட்ட தடை செய்வார்கள்.

5. 'குடிநீர்' பற்றாக்குறை ஏற்ப்படும்போது தான் நதிநீர் இணைப்பது குறித்து விவாதிப்பார்கள்.

6. 'புரட்சி' வெடிக்கும்போது தான் விலைவாசியை பற்றி சிந்தனை செய்வார்கள்.

7. 'தீவிரவாதம்' அதிகமாக மாறும்போது தான் அமைதியை பற்றி விரிவாக பேசுவார்கள்...

நீங்களே சொல்லுங்கள் 'கண் கெட்ட பிறகு படிக்க நினைப்பதில் ' பயனேதுமுண்டா ?

   
 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன்

நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - 
ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?



வெட்டுவதற்கு நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. கத்திரிக்கோல், சுத்தியல், கோடாளி, கத்தி, இரம்பம், அரிவாள் மற்றும் பல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு    வடிவமைப்பில் பலவித அளவில் இருகின்றது. நமது தேவைக்கேற்ப ஆயுதத்தை தேர்தெடுக்க தெரியவேண்டும். அதற்குமுன் ஒவ்வொன்றின் வேலை செய்யும் விதத்தையும், அதை கையாளும் முறையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது  அவசியம். 

பேப்பரை நறுக்குவதற்கு அல்லது வெட்டுவதற்கு கத்திரிக்கோல் பதிலாக கொடாளியை பயன்படுத்தினால் பயன்தருமா? அதனுடைய நோக்கமே பாழாய்ப்   போய்விடும்.


அதேபோல் டாக்டர் ஆபரேஷன் செய்வதற்கு சிறிய கத்தி, சிறிய கத்திரிக்கோல் உபயோகபடுத்துவதற்கு பதிலாக பெரிய கத்தி , கத்திரிக்கோல்  பயன்படுத்தினால் நோயாளி பிழைப்பாரா? அல்லது ஆபரேஷன் தான் வெற்றியடையுமா?   

அதுபோல ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்டவிதமான ஆட்களால் தான் செய்து முடிக்க முடியும். சிறிய வேலைக்கு அதிகம் தகுதியுள்ளவர்களையும், கடினமான வேலைக்கு குறைந்த தகுதியுள்ளவர்களை ஈடுபடுத்தினால் கட்டாயம் வெற்றி கிடைக்காது.

ஆகவே உங்களுடைய இலக்கை அடைய தகுதி , திறமை, அனுபவம் ஆகியோர்களை எங்கெங்கு எப்படி கையாளுகின்றோமோ அதைபொறுத்து தான் நம்முடைய வெற்றி இருக்கும்.


ஆகவே மனிதர்களை திறம் பட நிர்வாகம் செய்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் வெற்றி பரிசு நிச்சயம்.




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

   

Tuesday, 4 September 2012

நீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN ALSO LIVE FREE FROM PROBLEMS

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன்

நீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் !- 
YOU CAN ALSO LIVE FREE FROM PROBLEMS !


பிரச்சனை இல்லாத மனிதன் யார் தான் உலகத்தில் இருக்கிறார்கள்?  ஒருவேளை 'எனக்கு பிரச்சனை ஒன்றுமில்லை ' என்று யாராவது சொன்னால் அது சுத்த பொய் தான் என்பதில்லை. அவர் உண்மையைத் தான் சொல்கிறார். ஏனென்றால் அவர் தனக்கு வரும் எல்லாவித பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு அவ்வப்போது தாமதமில்லாமல் தீர்த்துவருவதால் அவர் பிரச்சனை இல்லாத மனிதராகிறார். அதேபோல் தன்னால் முடியாத பிரச்சனைகளை தகுந்த நபரிடம் தகுந்த நேரத்தில் ஒப்படைத்து அதன் மூலம் தீர்வு காணும் திறமை பெற்றவர். அப்படி நடந்து கொண்டால் உங்கள் பிரச்சனைகளை எளிதாக தீர்த்துவிடலாம். 


அதைவிட்டு விட்டு பிரச்சனை நபர்கள் அனைவரிடமிருந்து நீங்கள் விலகிவிட்டால் உலகில் அனைவருமே தனித்தனி மனிதனாகி விடுவார்கள். ஆகவே நீங்கள் பிரச்சனைகளிருந்து மட்டும் விலகப்பாருங்கள். பிரச்சனைக்குரியவரிடமிருந்து விலக்காதீர்கள் .


அதுபோல பிரச்சினையை எதிர்த்து போராடுபவர்களையும், அதை வாதாடுபவர்களையும் எதிர் கொள்ளுங்கள். ஏனென்றால் அதன் தீர்வு அவர்களிடமிருந்து கூட  கிடைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அவர்களே உங்களது வெற்றிக்கு உதவுபவர்களாகவும்  இருப்பார்கள்.

வாழ்கையே ஒரு பிரச்சனை கடல் தான் 


அதில் நீச்சல் தெரிந்தவர்கள் கஷ்டப்பட்டு நீந்தி கரையேறுகிறார்கள்.

சிலர் சிரமமில்லாமல் படகில் ஏறி கரை சேருகிறார்கள்.


பலர் நீந்த தெரியாமல் மூழ்கி கொண்டிருக்கிறார்கள்.  


மிகப்பலர் நீந்துவதற்கு முயற்சி செய்யாமலே மூழ்கிவிடுகின்றனர்.

ஏராளம் பேர் கடலுக்கு பயந்து கரையிலேயே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்  


ஆகவே நீந்துங்கள் !


வெற்றி காணுங்கள்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


Monday, 3 September 2012

யாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றியில் நீங்கள் எந்த ரகம் )


அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்

யாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN 
(வெற்றியில் நீங்கள் எந்த ரகம் )


வெற்றியை 

எண்ணாதிருப்போர் மிக மிக பலர் 

எண்ணுபவர்கள் மிக பலர் 

சொல்மிக்கோர் சிலர் 

எழுதுபவர்களோ மிகச்சிலர்.

ஆனால் 

செயல்படுத்துபவர் ஓரிருவர் 



அவர்களே வெற்றியாளர்கள்.


வெற்றி அல்லது சாதனை என்பதை பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம் பேர். அவர்களுக்கு வேண்டியது .....


திட்டம் + தன்னம்பிக்கை + விடாமுயற்சி + உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியை பற்றிய அறிவு , அதை அடைய வேண்டுமென்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை .... 

 விடாமுயற்சி + உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியை பற்றிய அறிவோடு அதை பெசிகொண்டிருப்பவர்கள் சிலரே. அவர்களுக்கு தேவையானது..

உழைப்பு + நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றியடைந்தவர்களின் சரித்திரத்தை படித்து அதிலிருந்து பலவற்றை எழுதிக்கொண்டிருப்பவர்கள் மிகச்சிலர். அவர்களுக்கு வேண்டியது ...

 நம்பிக்கை + உந்துசக்தி 

வெற்றி திட்டத்தை தன்னுடைய செயல்மூலம் நடைமுறை படுத்தி சாதனையாளர்களாக மாறியவர்களை கையைவிட்டு எண்ணுமளவிற்கு தான் இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் தேவை...
  
உந்துசக்தி 


இதில் நீங்கள் எந்த ரகத்தில் இருக்கிறீர்கள் ?



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

தவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES MEANS NO TRY


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

தவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - 

NO MISTAKES MEANS NO TRY


சிலர் எப்பவுமே ஜம்பமாய் இப்படி பேசுவார்கள்.முக்கியமாக அலுவலகத்தில்!    'என்னுடைய அனுபவத்தில் இதுநாள் வரை எந்த ஒரு தவறும் செய்ததில்லை' என்று. அதேபோல் வீடுகளில் 'என்னோட குடும்ப வாழ்கையில் ஒரு சின்ன காரியமும் தோற்றதா சரித்திரமில்லை' என்று பீற்றிக்கொள்வார்கள். ஆனால் அதில் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

யார் ஒருவர் தவறே செய்யாதவர்கள் செய்யும் வேலையில் புதுமையோ, புது முயற்சியோ துளிகூட இருக்காது. வாழ்க்கை முழுவதும் எப்போதும் ஒரே மாதிரியான, ஒரே வகையான வேலையைத் தான் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களால் ஒரு பிரயோசனமுமில்லை. அவர்களிடமிருந்து அனுபவத்தையோ புதுமையையோ கற்றுக் கொள்ளமுடியாது.

அதேபோல் ஒருவர்  தவறு செய்கிறானென்றால் அதன் அர்த்தம், அவர்  யாருமே முயற்சி செய்யாத வழியில் அந்த வேலையை செய்ய முயலுபராக இருப்பார். தோல்வி பற்றி கவலை கொள்ளமாட்டார். சிலநேரங்களில் அவரது முயற்சி வெற்றியடைந்து அந்த வேலையை மிக எளிதாக செய்யும் வழியாகவுமிருக்கும். அவருக்கு எந்த வேலை எப்படி செய்யவேண்டும், எப்படி செய்யக்கூடாது என்கிற பல விஷயங்கள் தெரிந்திருக்கும். அவர்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாகவும் இருப்பார்.

உதாரணமாக..


சமையலறையில் நடக்கும் தவறுகள் பலவித சுவைகளை உருவாக்குகிறது.


ஆய்வகத்தில் நடக்கும் தவறுகள் புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக அமைகிறது.


அரசியலில் ஒரு தலைவர் செய்த தவறினால் புது தலைவரை உருவாக்குகிறது.


செய்யும் வேலைகளில் புதுப்புது முறையினை தருகிறது.


ஆகவே தவறுகள் - புது பலன்கள் தரலாம்.
  

  
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 









  

வெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PERSON

அனுபவ பொன் வரிகள்



மதுரை கங்காதரன் 

வெற்றியாளர் என்பவர் யார்
WHO IS A SUCCESSFUL PERSON


வெற்றி என்பது எந்த ஒரு செயலிலும் முதலில் வருவது என்பது அர்த்தம் கிடையாது. வெற்றி என்பது ஒவ்வொரு செயலிலும் முன்பை காட்டிலும் சிறப்பாக, அதிகமாக, தரமாக் செய்வதுதான்.

சில உதாரணங்கள். 


தொழில் நடத்துபவர் : 

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வியாபாரத்தை குறைந்தது 10% மாவது உயர்த்துவது தான் வெற்றி.

வேலை செய்பவர்கள் : 

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய திறமைகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்வது அல்லது புதிதாக சிலவற்றை கற்றுக்கொள்வது வெற்றி.

பள்ளி மாணவன்: 

ஒவ்வொரு பரிட்சையிலும் வாங்கும் மதிப்பெண்கள் சிறிதளவாவது முன்னேற்றம் இருப்பது வெற்றி 

வாழ்க்கை :

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்கையின் தரத்தை, அந்தஸ்தை கூடியவரையில் உயர்த்திக் கொள்வது வெற்றி 

சேவை :

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய சேவையின் மதிப்பை சற்றேனும் உயர்த்திக் கொள்வது வெற்றி.





இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com