Pages

Monday, 10 September 2012

எதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா? WHICH ONE IS MOST VALUED - SPEECH OR ACTION

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

எதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா?

WHICH ONE IS MOST VALUED - SPEECH OR ACTION 


முன்பெல்லாம் தலைவர் கூட்டத்தில்  பேசுகிறார் என்றால் அதை கேட்பவர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இன்று,.. கூட்டத்தை சேர்க்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து, சாப்பாடு போட்டு போக்குவரத்து செலவு செய்தால் தான் பேருக்கு வருவார்கள். ஏன் இந்த மாற்றம். மக்களுக்கு தலைவர்களின் மேல் நம்பிக்கை இல்லை. வெறும் பேச்சில்  'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ' என்று ஏழைகளிடத்தில் எத்தனை வருடம் கூறி  ஏமாற்றுவது. வெறும் வாய்ஜாலம் கேட்பதற்கு யாரும் தயாரில்லை.

உதாரணமாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் வெறும்னே பேசிக்கொண்டே இருந்தால் அந்த திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுமா? கதாநாயகன் என்றால் மிக பெரிய பிரச்சனைகளை தன்னுடைய ஆக்ஸன் அல்லது பரபரப்பான செயலினால் வில்லன்களை அறிவுகொண்டு , பலத்தை கொண்டு எதிர்த்து மக்களுக்காக போராடி ஜெயித்துக் காட்டவேண்டுமென்று தான் அனைவரும் விரும்புவார்கள்.


இப்போதெல்லாம் செயல் செயல் என்று செயலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். செயல இல்லையேல் மதிப்பு இல்லை. நீங்கள் உங்களுக்குள் எத்தனை நல்ல திட்டங்கள், நல்ல எண்ணங்கள் இருந்தாலும் பிரயோஜனம் ஏதுமில்லை. அதில் எவ்வளவு மக்களுக்காக மக்களின் நன்மைக்காக சாதித்து இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.


ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் அதிகமாக பேசும்போது குறைவாகவே சிந்திக்கின்றான் என்று அர்த்தம். தனக்குத்தானே புகழ்ந்து பேசுவதனால் கேட்பவர்களுக்கு எரிச்சல் தான் வரும். உண்மையில் புகழுக்குண்டான செயலை செய்யாதபோது யார் அவரின் பேச்சை கேட்பார்கள். மேலும் அவர் சொல்லியபடி யார் தான் நடப்பார்கள்? மேலும் சொன்னதையே சொல்லி சொல்லி கேட்பவர்களை அலுக்கவைத்தால் நல்லதா? 


ஆகவே பேச்சை குறை. சிந்தனையை வளர்த்து எண்ணங்களை பண்படுத்திக்கொள். ஒரு சிறந்த கொள்கையை உருவாக்கிக் கொள். அதை அடித்தளமாகக் கொண்டு நல்ல திட்டத்தை தீட்டு. அதை அடைவதற்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்து அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக செயல் மூலம் திட்டத்தை செயல்படுத்தினால் உங்களால் எளிதில் வெற்றி பெறமுடியும்.    



செயல் செய்தால் பேசுவதற்கு வேலையில்லை.

செயல் இல்லையேல் நீங்கள் பேசுவதில் அர்த்தமில்லை. 
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

வாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.- THINGS NEVER GET BACK IN YOUR LIFE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

வாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.
THINGS NEVER GET BACK IN YOUR LIFE
BY MADURAI GANGADHARAN 

வாழ்க்கையில் முன்னேறுபவர்கள் மற்றும் முன்னேறிச் செல்பவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்காக காத்திருப்பதில்லை. ஏனென்றால் காலத்தின் அருமையும் மதிப்பும்  அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வீணான பொன்னான நேரங்கள் ஒருபோதும் திரும்ப வருவதில்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.


அதுமட்டுமா எவை எவை வாழ்கையில் திரும்ப வராது என்றும் அவகளுக்கு  அத்துப்படி. அவைகள் 

1. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா 

2. அலட்சியபடுத்திய அல்லது நழுவிய வாய்ப்புகள் 

3. சொன்ன சொற்கள் 

4. உன்னுடைய வயது (காலம் அல்லது நேரம் )



இதை முன்னேற விரும்புகிறவர்கள் நன்றாக மனதில் வைத்திருப்பார்கள். அதேபோல் நீங்கள் முன்னேற நினைப்பவகளா? மற்றவர்களைப் பற்றி கவலைகொள்ளாமல் அல்லது காத்திருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் இடைவிடாது முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டு வெற்றி கொள்ளுங்கள்.

நேற்று - உங்கள் கனவு, திட்டம் மற்றும் எண்ணங்கள் 


இன்று - தன்னம்பிக்கையுடன் உழைப்பும் , முயற்சியும் 

நாளை - வெற்றி உங்களுக்கே !


 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

கோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள் மதுரை கங்காதரன்

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


கோபம்   ஸ்பெஷல்
ANGER SPECIAL 


நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடமும் 60 வினாடிகளின் மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்.

ஒருவர் கோபப்படும்போது அவர் திறமை, மதிப்பு, சந்தோசம், நிம்மதி மற்றும் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடுகிறது. இத்தனையும் இழக்க நீங்கள்  கோபப்படுவது அவசியம் தானா? கோபத்தை கட்டுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் எளிதானது ஓன்று இதோ. உங்களுக்கு முன் சிறிய கண்ணாடி வைத்துக்கொள்ளுங்கள். கோபப்ப்படு முன் அல்லது கோபத்தின்போது உங்கள் முகம் எந்த மாதிரியாக,  சில சமயத்தில் எவ்வளவு கடுமையாக , கொடூரமாக மாறுகின்றது என்பதை தெரிந்து புரிந்து கொள்ளுங்கள். கோபத்திற்கு முன் இருந்த சாந்தமான முகம்   எங்கே போனது? கொடூரமான மிருக குணம் எங்கிருந்து வந்தது. 


கோபத்தினால் உங்களுக்கு நஷ்டம் தான் கிடைக்கும் ஒழிய லாபம் ஒருபோதும் அடையமாட்டீர்கள். அப்படி லாபம் அடையலாமென்றால் இந்நேரம் 'கோபப்படுவது எப்படி ?' 'கோபத்தினால் லாபமடைவது எப்படி?' என்று பலவித தலைப்புகளில் புத்தககங்கள் உலா வந்திருக்கும். அப்படிப்பட்ட புத்தகம் உங்கள் வாழ்நாளில் படித்ததுண்டா? அல்லது யாராவது இதைப்பற்றிய அறிவுரை கூறுகிறார்களா? 

கோபம் உங்களுக்குள் இருக்கும் மாயப் பிசாசு, சைத்தான், அரக்கன், கெட்ட  மனிதன், பேய் இன்னும் பல பெயர்கள். அவைகள் உயிர் வாழ்வது உங்களுக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்கள் மற்றும் சிலரின் செயல்களும் சொற்களும்.


அதில் முன் கோபக்காரர், பின் கோபக்காரர். இப்படியும் சிலர் இருக்கிறாகள். சிலரோ எப்போதும் கோபக்காரர்கள். அவர்களிடம் பணிவாக கேட்டாலும் 'வள் வள் 'என்று எரிந்து விழுவார்கள். கோபப்படுவது தான் தனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் என்று நினைப்பது 100% தவறு. கோபம் உங்களது பலவீனம். உங்களது அறியாமை மற்றும் இயலாமையை வெளிப்படுத்தும் செயல். சிலநேரத்தில் நீங்கள் தப்பித்துக் கொள்ளும் வழி . இத்தகைய செயல்கள் எந்தவிதத்திலும் உங்களுக்கு எப்போதும் உதவே உதவாது.

உங்களுடைய கோபம் மற்றவர்களுக்குச் சில நேரங்களின் சாதகமாகவும், கோபம் காரணமாக பலர் உங்களிடத்தில் பலகாரியங்களை மிக எளிதாக சாதித்து விடலாம். ஏனெனில் நீங்கள் கோபம்கொள்ளும்போது உங்களுடைய சுயசிந்தனை, சுய நினைவு, சுயபுத்தி, சுயமான குணத்தை இழக்கிறீர்கள். உங்களால் கட்டுப்படுத்த முடியாத புதிய குணத்தை உங்களையும் மீறி திடீரென்று தீப்பிடிப்பது போல் வெளிக்காட்டுகிறீர்கள்.உடனே அதை உங்களாலும் மற்றவர்களாலும் அணைப்பது என்பது மிகக் கடினமான காரியம் தான்.

சிலர் உங்களது பலவீனத்தை பயன்படுத்தி 'நீங்கள் ஒரு கஞ்சன் என்று சொல்கிறார்கள்' என்று உசுப்பேற்றிவிட்டால் உடனே உங்களுக்கு 'ரோஷம் ' வந்து கடன் வாங்கியாவது செலவு செய்வீர்கள். உங்களை உசுப்பேற்றியவர்கள் அதனால் மிகுந்த பலன் அடைவார்கள் . ஆனால் உங்களுடைய கடனை  கோபம் வந்து அடைக்குமா ? அல்லது மற்றவர்கள் தான் அடைப்பார்களா ? இது கூட பரவாயில்லை சில சமயத்தில் சொத்துகளைக் கூட  இழக்கிறார்கள். சிலரோ வரம்பு மீறி அடி, உதை ஏன் கொலை செயுமளவிற்க்கும் துணிந்துவிடுகிறார்கள்..

கோபம் எதனால் வருகின்றது? தான் நினைக்கும் அல்லது சொல்லும் வேலைகளை மற்றவர்கள் செய்யாமல் இருக்கும்போதும் , அதன்படி மற்றவர்கள் நடக்காமல் போவதனாலும்  வருகின்றது. இதுவும் ஒருவகை சர்வாதிகாரம் தான்.

ஒரு அதிகாரியின் கோபம் தங்களுக்கு கீழ் இருப்பவர்களை பழிவாங்கப் பயன்படுகிறது. அதனால் அந்த வேலை செய்யும் நிறுவனம் அல்லது துறை மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. மேலும் நஷ்டத்தை தருகிறது.


ஒரு தலைவனின் கோபம் அவருடைய மதிப்பை குறைத்து அவரது முன்னேற்றத்தை சீர்குலையச் செய்துவிடுகின்றது.

ஒரு குடும்ப்பத் தலைவன் / தலைவியின் கோபம் குடும்ப உறவுகளை சின்னபின்னாமாக்கிவிடுகிறது.

ஒரு ஆசிரியர்களின் கோபம் மாணவர்களின் எதிகாலத்தைப் பாழாக்கிவிடுகிறது.

வாடிக்கையாளர்களின் கோபம் வியாபாரத்தை படுக்கவைத்து விடுகிறது.

நாட்டுத் தலைவனின் கோபம் நாட்டு மக்களின் அழிவிற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இப்படி பல நிகழ்ந்த உதாரணத்தை கொடுக்கலாம்.

கோபம் வரும்போது உன்னுடம்பு சூடாகின்றது. முகம் சிவக்கின்றது. இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இருதயம் அதிகமாக துடிக்கின்றது. இரத்தக் கொதிப்பு, தீராத தலைவலி , சர்க்கரை வியாதிக்கு அடித்தளமாக அமைகின்றது.


கோபப்படுவர்க்குமுன் நீங்கள் யாரிடத்தில் என்ன பேசுகிறீர்கள் என்று ஒரு சில வினாடி யோசித்து பேசுங்கள். முதலில் யார் என்ன பேச வந்தாலும் அவர்கள் என்னைப்பற்றி பேசவில்லை. யாரோ ஒருவரைப் பற்றி பேசுகிறார் என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சில சமயங்களில் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் அற்ப விஷயத்திற்காக நீங்கள் வாழ்க்கை முழுவதிற்கும் துன்பப்பட வேண்டியிருக்கும். 


கோபம் வரும்போது என்னென்ன பின் விளைவுகளெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

* ஒருவகையில் கோபத்தால் நீங்கள் செய்யும் பாவத்திற்கு தாய் தந்தையாக மாறுகிறீர்கள்.

* (தாய் தந்தைக்கு) கோபம் வந்தால் வீட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கும்.

* (அதனால்) வீட்டில் துன்பம் வளர ஆரம்பிக்கிறது.

* பொல்லாத செயலுக்கு துணை போகும் ஆபத்தை உருவாக்குகிறது.

* உடலுக்கும், வீட்டிற்கும் சீர்கேடு விளைவிக்கின்றது.

* கோபம் வரும்போது நெருங்கிய உறவுகளை துண்டிக்கும் 'வெட்டு இயந்திரமாக ' மாறிவிடுகின்றது.

* உன் இயல்பான குணத்தை மாற்றி 'பழிக்குப்பழி ' வாங்கும் அரக்கனாக உருமாற்றுகிறது.

* பாசமுள்ளவர்களையும் பகைவர்களாக மாற்றி விடும் வல்லமை கொடுக்கிறது.

* மனிதனின் இரக்க குண கருணையை கருவறுக்கும் அரக்க குணமாக மாற்றுகிறது.

* இது மனிதனின் கீழ்த்தரமான குணத்தை பிரதிபலிக்கின்றது.

* இது எவரையும் ஓன்று சேர்க்காது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஆயுதமாகிறது.

* மரணத்தின் போது எதிர்கொள்ளும் அனைத்து அவஸ்தைகளையும் உடம்பில் கொடுத்து அனுபவிக்கச் செய்துவிடுகிறது .

* கடைசியாக மரணமடையச் செய்து உடன் பிறப்புகளை அலைக்களைக்கச் செய்யும் அசுரவல்லமை கொண்டது.

ஆகையால் கோபம் வரும்போது தனிமையை நாடுங்கள். எதிரில் இருப்பவர்களை உடனே வெளியேற்றிவிடுங்கள். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி உங்களுக்குள்  இருக்கும் கோபத் தீயை அணைத்தபின் சாந்தமாக பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள். நாளடைவில் 'கோபம் எப்படியிருக்கும் '  என்று சொல்கிற நிலைமை வந்துவிடுவீர்கள் . பிறகென்ன இனி உங்களைச்  சுற்றியும்  மகிழ்ச்சி தான். நீங்கள் செய்யும் காரியத்திற்கு அனைவரும் துணையாக இருப்பார்கள். முடிந்தால் தியானம் மற்றும் யோகா செய்யுங்கள். கோபத்தை வென்று வாழ்வில் பல சாதனை படைப்பீர்கள்.

உங்கள் கோப முகம் வெற்றி முகமாக மாறும்.


மிருக குணம் தெய்வ குணமாக மாறும்.


பெருமையும் மதிப்பையும் பெறுவீர்கள்.

  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

Sunday, 9 September 2012

அறிவும் அறிவின் வகைகளும் - WHAT IS AND TYPES OF KNOWLEDGE- அனுபவ பொன்வரிகள்

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

அறிவும் அறிவின் வகைகளும் 
WHAT IS AND TYPES OF KNOWLEDGE


அறிவு என்பதன் அர்த்தம் அறிதல் என்பது. அறியாத , தெரியாத ஒன்றை மற்றொன்றின் மூலமாக தெரிந்து கொள்வது அறிவு. அறிவு , உங்கள் மனதில்  எண்ணங்களாக புதைந்து சிந்தனை மரமாக வளருவது. உழைப்பு மற்றும் முயற்ச்சியினால் அதில் இருக்கும் வெற்றிக்கனியை சுவைக்க வழி செய்வது.


ஆறுவகை அறிவு:

1. அறியாத அறிவு :




எதையுமே அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்யாதவர்கள். ஒருவகையில் அவர்கள் முட்டாள்களே.

2. பார்த்தறிவு :

சில சமயங்களில் பார்த்த நிகழ்சிகளைக் கொண்டு அறிவு பெறுவது.

3.கற்றறிவு :


சிலவற்றை நாம் புத்தகங்களின் மூலமாக, இன்டர்நெட் மூலமாக தெரிந்துகொள்வது.

4. கேட்டறிவு அல்லது சொல்லறிவு:



நாம் அதிகமாக அறிவு பெறுவது இந்த வகையில் தான்.

5. பட்டறிவு:


எதையுமே யாரையும் நம்பாமல் எல்லா காரித்தையும் தாமே செய்து அதன்மூலம் நல்லது கெட்டது பெறுவது. இதற்கு அனுபவ அறிவு என்றும் சொல்லலாம்.

6. பகுத்தறிவு:


எல்லா அறிவின் மூலமாக கிடைப்பதை அக்கு வேறு ஆணிவேராய் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவைப் பெறுவது.


ஆக நம்மைச் சுற்றிலும் பலவகையான அறிவுகள் பலரிடத்திலும் கிடைக்கும். அதில் நல்லவைகளை மட்டும் தெரிந்துகொண்டு வாழ்கையில் பின்பற்றி வந்தால் எந்நாளும் உங்களுக்கு இன்பனாளாகும்.

சுற்றிலும் கவனம் கொள்க!

நல்ல அறிவை பெருக!
   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

Saturday, 8 September 2012

எனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்தியாதி... ARE YOU HAVING SOME SELECTED FAVORITE.

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

எனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்தியாதி...

ARE YOU HAVING SOME SELECTED FAVORITE.



எனக்கு பச்சை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்! அது தான் எனது ராசியான நிறம். அதே போல் எனக்குப் பிடித்த எண் 6 (ஆறு)! எனக்கு பிடித்த உணவு பூரி! எனக்கு பிடித்த நடிகர் ! பிடித்த நடிகை ! பிடித்த தலைவர் ! பிடித்த ஆசிரியர்! எனக்கு பிடித்த ராசிக்கல்! இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. இப்படி நீங்கள் உங்கள் மனதை குறுகிய எண்ணங்களை கொண்டு தயார் படுத்தி கொண்டால் நீங்கள் மிகவும் சிறிய விஷயத்திற்க்கெல்லாம் கவலைபட நேரிடும்.

என் நண்பர் ஒருவர் பஸ் டிக்கெட் வாங்கியவுடன் அதிலிருக்கும் எங்களை கூட்டிப் பார்த்துவிட்டு 'சே, எனக்கு பிடித்த நம்பர் இல்லையே !' என்று கவலை படுவார் . அது மட்டுமா ? வண்டியின் நம்பர் அவனுடைய ராசி நம்பருக்காக அதிகம் விலை கொடுத்து வாங்கினான். கவனக் குறைவினால் சிறு விபத்து நடந்தது என்பது அது ஒரு தனிக் கதை. அப்போது ராசி நம்பர் என்னானது?


ஒரு விருந்திற்கோ , நண்பர் வீட்டிற்கோ செல்கிறீர்கள் ! அன்புடன் உபசரிக்கிறார்கள். ஒருவேளை அங்கு உங்களுக்கு பிடித்த உணவு இல்லையெனில் அவர்கள் எவ்வளவு பாசத்துடன் கவனித்தாலும் உங்கள் மனம் இந்த சிறு சாப்பாடு விஷயத்திற்காக திருப்திபடாது. இப்படி வேண்டா வெறுப்பாக வீட்டினிலோ வெளியிலோ சாப்பிட்டால் அது உடல்நலத்திற்கு உதவுமா! சிலர் ஸ்வீட் என்றால் உயிரை விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டால் பிடித்தது என்னவாகும்! அதேபோல் எல்லாம்.


ஒருவன் 'இண்டர்விவ் 'க்காக நீண்ட நேரம் காத்திருந்தான். பக்கத்தில் இருந்தவர் பொறுமை இழந்து "நீங்கள் எந்த பஸ்க்காக காத்திருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அதற்கு அவர் என் ராசியான எண் 8. அதற்காக நிற்கிறேன். என்றார். கேட்டவரோ தலையிலடித்துக் கொண்டு "அந்த பஸ் இந்தபக்கம் வராது. மேலும் அது நீங்கள் செல்ல நினைக்கும் இடத்திற்குப் போகாது !" என்று விளக்கம் கொடுத்தார். இப்படியிருந்தால் உங்கள் வேலை எப்படி முடியும்? 

நீங்கள் உங்களுக்கு பிடித்த 'ஊதா 'நிற சர்ட் அணிந்துகொண்டு 'இண்டர்விவ் ' செல்கிறீர்கள். அங்கு 'பிங்க்' சர்ட் அணிந்தவர் 'இண்டர்விவ் ' நடத்துகிறார். உடனே உங்களுக்கு பிடிக்காத அந்த நிறத்தை பார்த்தவுடன் உங்கள் மனம் சற்று அதிருப்தியடைகிறது. அதே எண்ணத்துடன் இருந்தால்  அவரின் கேள்விக்கு சரியான பதில் தெரிந்திருந்தாலும் கூட தெளிவாக சொல்லமுடியுமா?

ஆக உங்களுக்கு சில குறிப்பிட்டது பிடித்த காரணத்திற்க்காக மற்ற அனைத்தும் உங்களுக்கு எதிரியாகவே பார்க்கத் தோன்றும். ஆதலால் பலவித நிறங்களை இழக்கிறீர்கள். பல சுவைகள் தெரியாமலே போய்விடுகின்றது. பல தலைவர்களின் நல்ல செயல்கள் தெரிந்து கொள்ளாமலே போய்விடும் ஆபத்து ஏற்படுகின்றது.

உங்களுக்கு பிடித்த படிப்பு, உங்களுடைய குறைவான மதிப்பெண்களால் கிடைக்காமல் போய்விடுகின்றது. அவ்வளவு தான்  என் வாழ்க்கை என்றிருந்தால்  நீங்கள் என்னாவீர்கள். விடாதீர்கள் கிடைத்ததை பிடிக்குமாறு ஏற்றுக்கொண்டு முன்னேறப் பாருங்கள்.

'பெண்களெல்லாம் இப்படித்தான். இவர்களுக்கு இது பிடிக்காது ,வராது . அது பிடிக்காது , வராது. அவர்களுக்கு பிடிக்காது' என்பதெல்லாம் மலையேறிப்போய் எல்லா இடங்களிலும் அவர்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு இணையாக அனைவருக்கும் பிடிக்கும் பல வேலைகளை செய்து சாதனை புரியவில்லைய? அந்த காலத்தில் பெண்களுக்கு பிடிக்காதது இப்போது எப்படி பிடிக்க ஆரம்பித்தது. எல்லாம் மனம் மற்றும் எண்ணங்கள் தான்.
  
எனவே இன்று முதல் உங்களுக்கு எல்லாமே பிடிக்கும். அனைத்தும் எனக்காக படைக்கபட்டிருக்கின்றது. அதை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பேன் என்று விசால மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்வில் என்றும் இனிமை பொங்கும். 
    
  


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

நல்ல நேரம் பார்பவரா? நீங்கள். ARE YOU A MAN OF SEEING GOOD TIME

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

நல்ல நேரம் பார்பவரா? நீங்கள்.
ARE YOU A MAN OF SEEING GOOD TIME


பலர் குறிப்பாக இங்கு ஒரு வேலை செய்வதாக இருந்தால் முதலில் 'நல்ல நேரம் ' எப்போது வருகின்றது என்று 'காலண்டரை ' பார்ப்பார்கள். சிலர் இதை மனப்பாடமே செய்து வைத்திருப்பார்கள். ஆனால் நல்ல செயல்களெல்லாம் நல்ல நேரத்திலும் , கெட்ட செயல்களெல்லாம் கெட்ட நேரத்திலா நடக்கின்றது. உங்களுக்கு வேலை கிடைத்திருக்கும் செய்தி, நல்ல வியாபாரம் நடந்திருக்கும் செய்தி, வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இது போன்றவைகள் கிடைத்த நேரத்தை பார்த்திருக்கிறீர்களா? அவைகளெல்லாம் வரும்போது 'நமக்கு நேரம் நல்ல நேரம்' போலிருக்கு என்று சொல்லிக் கொள்வதில்லையா? 

அதே போல் கெட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கெட்ட நேரத்திலா நடக்கிறது! எது எப்போது கெட்டது நடந்தாலும் நாம் 'இப்போ நேரம் சரியில்லை' போலிருகின்றது என்று நாம் ஆறுதல் அடைவந்துண்டா! ஆக உங்களுடைய நல்ல நேரத்திற்காக செயல்கள் காத்திருக்காது என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

அந்த நல்ல நேரம் அதே நாளில் இருக்கலாம். மறு நாளாயிருக்கலாம். ஏன் மாதங்கள் கூட ஆகலாம்! நல்ல நேரம் எதற்காக பார்க்கிறார்களென்றால் பெரிய காரியங்களின் திட்டங்களை தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் சில நாட்கள் தேவைப்படும். அந்த நாட்களில் அனைவரும் கூடுவதற்கும் தேவைப்படுகிறது.

சிலருக்கு மனதளவில் நல்ல நம்பிக்கையளிப்பதற்கும் அது கட்டாயம் உதவும். எப்படி என்றால் 'டாக்டர் எனக்கு உடம்பு டயடா இருக்கு. என்னான்னு பார்த்து சொல்லுங்க ' என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அதற்கு டாக்டர்,"உடம்புக்கு ஒண்ணுமில்லேப்பா " என்று சொன்னால் நம்பமாட்டார். 

அப்படியா "இந்த சத்து ஊசி போட்டுக்கோ . உடம்பு தெம்பாயிடும் " என்று சொல்லி ஒரு ஊசி வைத்தால் தான் அவருக்கு திருப்தி.

ஒரு நாளில் நல்ல நேரம் 10 முதல் 20% இருப்பதாக வைத்துகொள்வோம். அப்படியென்றால் மீதி நேரத்தில் வருகின்ற வாய்ப்புகளெல்லாம் நீங்கள் தட்டிக்கழிக்கும் நிலை ஏற்ப்படும். அது உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைகற்களாக இருக்கும்.

உலகம் முழுவதும் 24 மணிநேரம் இயங்குகின்றது. இந்தியாவில் பகலென்றால் அமெரிக்காவில் இரவு.அப்போது இங்கு வேலை. அங்கு தூக்கம். இதில் யாருக்கு எது நல்ல நேரம் என்று எப்படி கணிப்பது?

ஒருவன் 'இண்டர்விவ் ' க்காக நல்லநேரத்தில் புறப்பட்டான். பஸ் க்காக நீண்ட நேரம் காத்திருந்தான். அருகில் இருப்பவரிடத்தில் தான் செல்லும் பஸ் விவரத்தை விசாரிக்கின்றான். "அந்த பஸ்சா தம்பி, கொஞ்ச நேரம் முன்னாடி தான் போனது. இனி ஒரு மணிநேரம் பிறகு தான் அந்த பஸ் வரும்." என்று அவர் கூற  அதுவரை 'இண்டர்விவ் ' நடத்துபவர்கள் இவருக்காக காத்திருப்பார்களா?

ஆக பார்கின்ற காரியத்தில் தான் நல்ல நேரம் பார்க்கவேண்டும். சும்மா நிற்பதற்கும், நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நல்லநேரம் பார்க்கத் தொடங்கினால் உங்கள் வாழ்வு சூன்யமாகிவிடும். காரியம் கைகூடி வரும்போததெல்லாம்  நல்ல நேரம் வந்துவிட்டது என்று எண்ணிக்கொள்ளுங்கள்.


ஒரு தாய்க்கு இரு மகன்கள். ஒருவன் அமெரிக்காவில் , மற்றோருவன் சிங்கப்பூரில் ! அவர்களின் அம்மா நல்லநேரம் என்று எந்த நேரத்தை சொல்வாள். அமெரிக்காவின் நேரமோ 11 முதல் 12 மணிநேரத்தை கழிக்கவேண்டும். சிங்கப்பூரின் நேரமோ 2 முதல் 3 நேரத்தை கூட்ட வேண்டும். என்ன தலை சுற்றுகின்றதா? 

உங்களுடைய நல்ல நேரம் மற்றவர்களுக்கு நல்ல நேரமாய் இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆகையால் இன்று முதல் உங்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான். உங்களுக்கு நேரம் கிடைத்து செய்கின்ற எந்த காரியமும் நல்லநேரம் தான்.

இன்று முதல் நீங்கள் ஒரு உறுதி கொள்ளுங்கள்.


நேரத்தை வீணாக்காமல் 
நேரத்தை போற்றுவோமென்று!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com       

Friday, 7 September 2012

மருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் DAUGHTER IN-LAW Vs FATHER IN-LAW (A SHORT STORY)

மருமகள் Vs மாமனார்  (சிறு கதை)
மதுரை கங்காதரன் 

DAUGHTER IN-LAW Vs FATHER IN-LAW 
 (A SHORT STORY)
BY MADURAI GANGADHARAN


"என்ன சங்கர் ! இப்போ வந்து இடி போல அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை சொல்றீங்க! அப்போ... இதுநாள் வரைக்கும் நீங்க என்கிட்டே பேசினது? .. என்னோட பழகினது? எல்லாமே ரொம்ப பேரு காதலிச்சு ஏமாத்துறாங்களே அந்த ரகம் தானா நீங்களும்! நீங்க இந்த மாதிரி அற்ப குணமுள்ளவருன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒருபோதும் இந்த காதலுக்கு ஒத்திருக்கவே மாட்டேன்.இவ்வளவு  கீழ்தரமான எண்ணமுடையவர் தான் என்னுடைய காதலனா? நான் கட்டிக்க போற புருஷனா? நினைச்சு பார்க்கவே என்னோட கல்யாண வாழ்க்கை ரொம்ப பயமா இருக்குதே ! இப்ப என்ன பண்ணுவேன்?" என்று புலம்பினாள் மாலா.

எதிரில் இருந்த சங்கரோ இதற்கு உடனே பதில் சொல்லாமல் சற்று அமைதி காத்து பிறகு அழுத்தமாகவே, " என்ன செய்யுறது மாலா? அப்பாகிட்டே எதிர்த்து பேச முடியல்லே! சின்ன வயசு பழக்கம் இப்பவும் மாறாம அப்படியே இருக்கு. அவரு ஒரே வார்த்தையிலே என்கிட்டே சொல்லிட்டாரு. 'நீ மாலாவை கட்டிக்கணும்னா, கட்டாயம் அவங்க 20 பவுன் நகையும் 50,000 ரூபாய் ரொக்கமும் வரதட்சனையாய் எனக்கு வேண்டுமென்று. அப்பத்தான் இந்த கல்யாணத்தை நடக்கவிடுவேன். இல்லாட்டி உங்க காதல் கல்யாணத்திலே முடியாதுன்னு?' கறாரா சொல்லிட்டாரு. அப்பா பேச்சை என்னாலே தட்ட முடியல்லே! அப்படியிருந்தும் நான் தைரியத்தை வரவழைத்து "அப்பா! நிச்சயதார்த்தம் நடக்கிறப்போ கூட இதை பத்தி பேசலையேப்பா. அப்போ என்ன பேசுனீங்க. கொஞ்சம் நினைச்சு பாருங்க.' பையனுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு ! பொண்ணுக்கு பையனை பிடிச்சிருக்கு ! ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க. என்மகன் சங்கர் இஷ்டப்படி தான் இந்த கல்யாணம் நடக்கும். பையன் விருப்பபடி கட்டுன புடவையோட மாலா எங்களுக்கு மருமகளாக வந்தாப்போதும் ' என்று இதுவரை யாரும் சொல்லாததை நீங்க சபையிலே எல்லோருக்குமுன்னாடி  பகீரங்கமாக சொல்லி எல்லோரையும் ஆச்சரியபடுத்தினீ ங்களே ! இப்போ திடீரென்று பல்டி அடிக்குறீங்களே. நகை விக்கிற விலையிலே பவுனும், ரொக்கமும் எப்படி அவங்க உடனே புரட்டுவாங்க?ன்னு கெஞ்சினேன். உங்க கஷ்டத்தையும் வீட்டு சூழ்நிலையும் சொன்ன பிறகுகூட என்னப்பா தன்னோட முடிவை மாத்திக்கவேயில்லை! அதுக்கு அவரு என்ன பதில் கொடுத்தாரு தெரியுமா? 'நான்  என்ன ஏமாந்தவனா? மூக்கும் முழியுமாய், லட்சனமா, அழகா கைநிறைய சம்பாதிக்கும் பையனை ஒரு பைசா கூட வாங்காம அவளுக்கு கட்டி கொடுக்குறதுக்கு நான் ஒன்னும் இளிச்ச வாயன் கிடையாது' என்று கடுமையாகவே பேசிட்டாரு. இப்போ என்ன பன்றதுன்னு எனக்கு தெரியல்லே! மாலா டியர், தயவுசெய்து எனக்காக எப்படியாச்சும் உங்க வீட்டிலே சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திட சொல்லிடு. நீ தான் என்னோட உயிர். நீயில்லாம எனக்கு வாழ்கையே இல்லை. ப்ளீஸ் !" என்று கெஞ்சினான் சங்கர்.

சட்டென்று ஆத்திரம் பொங்க கோபத்துடன், " எப்படிங்க கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. உடனே பவுனும் நகையும் எப்படி புரட்டமுடியும்? ஜீ ..பூம் ..பா வா? அப்படி சொன்னவுடன் நாம் நினைச்ச பவுனும், நகையும் வந்துறதுக்கு?! உங்களை நம்பினேனே, எல்லாம் என்னோட தலைவிதி! உங்களைப்போய் நல்லவர்ன்னு நினைச்சு காதலிச்சேனே அது தான் நான் வாழ்கையிலே செஞ்ச பெரிய தப்பு! இது போதாதுன்னு உங்க ப்ரண்ட்ஸ்க 'மாலா ! , நீ புடிச்சாலும் புடிச்சே புளியம்கொம்பா புடிச்சுட்டே . சங்கர் போல பையன் கிடைக்கிறதுக்கு நீ நிறைய கொடுத்துவச்சிருக்கணுமாம்!  கொடுத்து வச்சது என்னன்னு இப்போல்லே தெரியுது! இதுல்லாமே 'தங்கமான பையனாம்?' தங்கமில்லே தகரமான பையன்னு இப்போல்லே புரியுது! என்ன என்ன 'வைரமான குணமா? 'வெறும் பாலிஷ் செய்த கூலாங்கல்லுன்னு உண்மை விளங்கிடுச்சி " பட படவென்று மனதில் பட்டதை ஆதங்கத்தோடு பேசிவிட்டு அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடந்தாள் மாலா.

சங்கரும் வேறுவழி தெரியாமல் அமைதியாக அவள் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அசை போட்டவாறே அந்த இடத்தைவிட்டு நகன்றான்.

மாலா வீட்டில்...

"என்னம்மா சொல்றே! இந்த கல்யாணம் வேண்டாமா?"



"ஆமாப்பா , மனசுலே ஒன்னு வச்சிட்டு, செய்றது வேறயா இருக்கிறவர்கிட்டே எப்படி காலம்பூரா குடும்பத்தை நடத்துறது? நீங்களே சொல்லுங்கப்பா? " குமுறினாள் மாலா.

"உன்னோட மனசு படும் கஷ்டம் புரியுதம்மா. ஒரு வகையிலே நானும் பேராசைக்காரன் ! கட்டின புடைவையோட கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டா போதும்ன்னு அதிகமாகவே ஆசைபட்டுட்டேன். அதுவும் எல்லாவிதத்திலேயும் தரமுள்ள பையனை கட்டி கொடுக்க?! இதோ பாரு மாலா ! இந்த கல்யாணம் நடக்கலேன்னா நமக்கு தான் அசிங்கம். சும்மா சொல்லக்கூடாது. பையன்... அவங்கப்பா மேல ரொம்பவே மரியாதை வச்சிருக்கான் போலிருக்கு? அப்பா பேச்சை தட்டாம ஒன்னுவிடாம் உன்கிட்டே  சொன்னானே அதுக்கு பாராட்டியே தீரனும். எப்பாடுபட்டாவது என் தலையை அடமானம் வச்சாவது அவங்களோட எண்ணத்தை பூர்த்தி செய்து இந்த கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்திக்காட்டுறேன். நீ நடந்ததை நினைச்சு கவலைபடாம சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு செய்யுற பெரிய உதவி !" என்று மாலாவிடம் சமாதானம் சொன்னாலும் சங்கரின் வீட்டு கடைசி நேர மிரட்டலும் , திடீர் கோரிக்கையும் மாலாவிற்கு வேதனையுண்டாக்கியது.



சங்கரும் மாலாவும் இருவரும் 'கண்டதும் காதல்' என்று கம்ப்யூட்டர் காதலை போல்  சட்டென்று அவர்கள் இருவரும் பார்த்ததும் பழகிவிடவில்லை. பார்த்தது தான் அதிக நாட்கள். பேசியது மிகவும் கொஞ்சம் தான். அப்படி புரிந்து கொண்டதில்  தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை ! அவர்களின் காதல் பயணம் காதல் விமானத்தில் ஏறி வானத்தில் உல்லாசமாய்  பறக்க நினைக்கும்போது ஆரம்பத்தில் விமானம் எப்படி ஓடுதளம் விட்டு மேலே எழும்பும் போது இருக்கும் பிரச்சினை போல அவர்களது காதலிலும் இருந்தது. முதலில் கஷ்டப்பட்டர்ர்கள். சிரமபட்டார்கள். பிறகு தான் வானத்தில் காதல் பறவைகள் போல் சந்தோஷமாக பறந்துவந்தனர். ஆனால் மறுபடியும் கல்யாணம் என்கிற ஓடு தரையில் பாதுகாப்பாக இறங்குவதற்குள் திடீரென்று அவனது அப்பா செய்த பவுனும் நகையும் கட்டாயம் வேண்டுமென்ற  'ப்ளாக்  மெயில் 'க்கு பணிந்து அவர்களது காதல் விமானம் ஒருவழியாக தரையிலிறங்கியது. இனி இந்த காதல் விமானம் கல்யாண விமானமாக மாறவேண்டியது தான் பாக்கி. அதுவும் சில நாட்களிலே!

ஒருவழியாக மாலாவின் அப்பா கல்யாணத்திற்கு வேண்டிய பவுனும் ரொக்கமுடன் கல்யாண செலவுக்கான பணத்தையும் புரட்டிவிட்டார். இதற்காக பலரிடத்தில் இவரது சுயமரியாதை கூட இழந்தார். அவமானமும் பட்டார். பணம் கொடுத்தவர்கள், 'கல்யாண வயசுலே பொண்ணு ஒன்னு இருக்குன்னு தெரியுமில்லே! கொஞ்சம் கூட சேர்த்து வைக்காம இப்போ பாரு, பணம் பணம்ன்னு நம்மளை போட்டு உயிரெடுக்கின்றீர்களே!' இது போல ஆயிரம் வசவுகள். இதுவெல்லாம் சங்கரின் நல்ல குணத்தில் புதைந்துபோனது.


மாலா தன்னுடைய திருமணப் பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் கூட எல்லோரும் சங்கரை பற்றி புகழ்ந்து பேசாதவரே இல்லையெனலாம். 'இந்த உலகத்தில் அவனைப்போல் ஒரு பையன் யாரும் இருக்கவே மாட்டார்கள். இனிமேலும் பொறக்கவும் மாட்டார்கள் ! பையன்னா அவனைப்போல இருக்கணும்!' இப்படியான பேச்சுகள் கேட்க கேட்க மாலாவுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது. அவளுடைய மனதிலோ 'இவரா நல்லவர்? அவ்வளவும் நடிப்பு! எல்லோரையும் நம்ப வச்சு கடைசியில் கழுத்தை அறுத்தவர்! ம் .. நடந்ததை நான் எப்படி யாரிடம் சொல்வது? எப்படியோ அசிங்க படாம இந்த கல்யாணம் நடந்தா சரிதான்! ' இனிமேல் சங்கரை எக்காரணம் கொண்டும் ஏறெடுத்து  பார்க்ககூடாது. அவனிடத்தில் ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தாள்.

ஆனால் அவளுக்குள் 'அவங்களுக்கு மட்டும் தான் பேசத்தெரியுமோ? கல்யாணம் முடியட்டும். அவனா? இல்லை நானா?ன்னு பார்த்துடுறேன். அவனை உண்டு இலைன்னு ஆக்கிடுறேன். இந்த மாலா கதாநாயகியாக உனது பெண்டாட்டியாக இருக்க மாட்டாள். உங்க குடும்பத்துக்கு ஒரு வில்லியாக மாறிவிட்டாள் ன்னு அனைவருக்கும் தெரிய வைக்கிறேன். என் பூ போல மனசு தாலி கட்டிய பிறகு புயலாக மாறப்போவதை எல்லோரும் முன்னாடி  காட்டுகிறேன். தாலி கட்டின மணமேடையிலே அனைவருக்கும் மத்தியிலே இந்த சங்கர் யாரு? அவங்க குடும்பம் எப்படி பட்டதுன்னு காமிக்கிறேன். கல்யாண நாள்லே தாலி கட்டின மறு நிமிஷமே 'டைவர்ஸ்' செய்து புது சரித்திரம் படைக்கும்  பெண்ணாக பலருக்கும் தெரியவைக்கிறேன். அவள் மனதில் இந்த மாதிரியான எண்ணங்களின் வார்த்தைகள்  தவறு செய்தவரின் நெற்றியில் அடிக்கும் சுத்தியலாய், 360 டிகிரியில் சுழற்றி அடிக்கும் சாட்டையாய் எழுந்தன.

கல்யாண நாளும் வந்தது.



தனது அனைத்துவிதமான குமுறல்களையும், எண்ணங்களையும் அடக்கி கொண்டிருப்பவளென்று அவளுடைய முகத்தில் லேசாக பிரதிபலித்தது. பக்கத்தில் இருந்த சங்கரைப் பார்க்கவே கூச்சப் பட்டாள் . இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். அதுவும் அவனை 'பழிக்குப் பழி' தீர்த்துவிட்டு.இப்படி செய்வது தன் வீட்டிலுள்ளவர்களுக்கும், கல்யாணத்திற்கு வந்திருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை, அவமானத்தை கொடுத்தாலும் 'என்னை பொருத்தமட்டில் எனக்கு மகிழ்ச்சி தான். இவர் போன்ற ஏமாற்றுகாரர்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கட்டும்' என்ற பலத்த சிந்தனைகளோடு தன்னை தயார் படுத்திக்கொண்டு கல்யாண மேடையில் இருப்பு மனிதன் போல அமர்திருந்தாள்.



 "கெட்டி மேளம் ,,,,, கெட்டி மேளம் ..."  நாதஸ்வர மேள தாள மங்கள ஒலி முழக்க அனைவரும் பூக்களை தூவி மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். அனைவரும் எதிர்பார்த்த சுப காரியமான தாலி கட்டுதல் நிகழ்ச்சி முடியும்விதமாக அவள் கழுத்தில் தாலி ஏறியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் பேசும் நேரம் வரப்போகிறது. இந்த மண்டபமே அலறப்போகிறது. யார் யாருக்கு அவமானம் வரப்போகிறதோ? ...

"மாப்பிள்ளையும் பொண்ணும் பெத்தவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கங்க!" இந்த வார்த்தைகளை கேட்டவுடன் கடுகடுத்த முகத்துடன் வேண்டா வெறுப்பாக சங்கரின் கைகளை பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

மாலாவின் பெற்றோர்கள் மனதில்..



'இப்போ தான் எங்களுக்கு நிம்மதி ! ஒரு நல்ல பையனை கட்டி கொடுத்துட்டோம். இனி நமக்கு காலமெல்லாம் கவலையில்லை. இனி அவங்க வாழ்கை சந்தோஷமாக தொடங்கப் போகுது! ' தங்களை நோக்கி வந்த மணமக்களைப் பார்த்து தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்.

அதேவேளையில் சங்கரின் அப்பா தன் மனைவியினிடத்தில் மெல்லிய குரலில் " பார்த்தாயடி பங்கஜம்! என்னோட கடைசி நேர அஸ்திரம்! 20 பவுனும் 50,000 ரூபாய் ரொக்கமும்? அப்படி மிரட்டியிருக்காவிட்டா நமக்கு கிடைச்சிருக்குமா?எல்லாம் நமக்குத்தான். கடைசி காலத்திலே அது நமக்கு நல்லா உதவும்! " ஏதோ  பெரிதாக சாதித்தவர் போல தோரணையாக பேசினார்.

அதற்கு அவளுடைய மனைவியோ," என்னவோ போங்க . நீங்க செய்றது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கலே! எனக்கு மனசே சரியில்லை! ஆசை ஆசையாய் காதலிச்சதுக்காக அவங்ககிட்டே கடைசி நேரத்திலே கொடுத்த வாக்குறுதிக்கு எதிரா பவுனும் நகையும் நீங்க கேட்டது எனக்கு இஷ்டமேயில்லை. இது நீங்க உங்க மகனுக்கு செய்யுற பச்சை துரோகம்! உங்களைப் பத்தி உங்க மகன் எப்படி நினைச்சிருப்பான் 'இந்த மாதிரியான  ஒருஅப்பா கிடைக்க நான் நல்லாவே கொடுத்து வச்சிருகேன்னு. கடைசியில் இப்படி அற்ப மனுஷனாக மாறிட்டீங்களே ' ஆதங்கப்படாள். வயதான காலத்தில் இந்த மனுஷனை நம்பித்தான் வாழனும்மென்று வேறுவழியில்லாமல் பொறுமை காத்தாள்.

மணமேடையை விட்டு மாலா மூன்றடி கூட எடுத்து வைக்கவில்லை. மண்டபமே அலறும்போல் சங்கர் " மாலா ! கொஞ்சம் நில்லு ! " சற்று கடுமையான முகத்தோடு கத்தினான். மாலாவும் இதற்கு முன் சங்கருடைய முகத்தில் இத்தகைய கோபம் கண்டிருக்க மாட்டாள். அந்த காட்சியை கண்டு கொஞ்சம் பயந்து நடுங்கினாள் மாலா! என்ன நடக்க போகிறதோ? என்று எண்ணிக்கொண்டிருந்த மாலா அவனைப்ப் பார்த்தாள். அவளது பார்வை 'நான் என்ன செய்ய வேண்டும்' என்பது போல் இருந்தது.

"உன்னுடைய நகைகளை கழற்று! பணத்தை கையிலே எடு ! " என்று அதட்டினான்.

'இதென்னடா புது குழப்பம். நான் நினைச்சதை விட புதுகதையாய் இருக்கு! ஒரு வேளை இந்த நகையும் பணமும் அவரோட அப்பா முகத்திலே தூக்கி வீசி எறிந்துவிட்டு வா..மாலா நாம தனிக்குடித்தனம் போய்விடலாம். இனிமேல் இவர்களோட வாழவேண்டாம் ன்னு பேசப் போகிறாரோ! ஒரு  வழியில் அதுவும் நல்லது தான் ' என்று மனதில் உதிர்ந்த எண்ணங்களோடு சற்றென்று நகைகளை கழற்றினாள். சங்கரின் இந்த அதிரடியில் அவளுடைய திட்டம் என்னவோ மங்கியது.

இதை எதிர்பார்த்த சங்கரின் அப்பா, "பார்த்தியாடி பங்கஜம் ! நம்ம ப்ளான் படி அந்த பவுனும் நகையும் நம்ம கிட்டே தூக்கி கொடுத்திட்டு 'எங்களை விட்டுடுங்க. உங்களுக்கு தேவை இந்த நகையும் பணமும் தானே. இந்தாங்க. நாங்க வர்றோம்'ன்னு பேசிட்டு போகப் போறாங்க. நீ பார்துட்டேயிரு. எப்படியும் ஒருநாளைக்கு அப்பா மகன் பிரிஞ்சு தான் போகப்போறாங்க!. அது  கொஞ்சம் முன்னாடியே  நடக்கப் போகுது. அப்போ பிரிஞ்சு போகும்போது  இந்த மாதிரி நகை,பணம் கிடைக்குமா? நமக்கு வந்த வரைக்கும் லாபம் !" ஆசையுடன் காத்திருந்தார் சங்கரின் அப்பா..

சங்கரின் அம்மாவுக்கு என்ன நடக்கப் போகிறதோ! என்கிற பயத்தில் இருந்தாள்.

நகையும் பணமும் கையிலெடுத்தவுடன் சங்கரின் முகம் சிறிதளவு சாந்தமாக மாறியது.

நேராக தன்னுடைய மாமனார், மாமியார்ரிடம் சென்றான்.

மிகவும் பணிவான மெல்லிய குரலில் " மாமா ! என்னை மன்னிச்சுடுங்க. அத்தை நீங்களும் தான். நான் உங்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செஞ்சுட்டேன். மாலா மீது நான் வச்சிருக்கும் உண்மையான அன்பையும்  பாசத்தையும் என்னோட அப்பாவின் சுய நலத்திற்காக எனது அறிவை அடகு வச்சுட்டேன். நீங்க இந்த நகையும் பணத்தையும் சேர்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீ ங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். மாலா நீயும்  தான் என்னை மன்னிக்கணும்! இந்த பணம் , நகை யார் யார்கிட்டே கடனா வாங்குனீங்களோ அவங்ககிட்டே திருப்பிகொடுத்து கடன அடைச்சிடுங்க. என்னோட அப்பாவின் வறட்டு பிடிவாதத்திற்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். சபையிலே சொன்ன சொல்லை காப்பாற்றாத பெரியவங்களுக்கு இது ஒரு சரித்திரமா விளங்கட்டும். மாமா ! உங்ககிட்டே நான் வாக்கு கொடுத்தது போல் உங்க பொண்ணை கட்டின புடவையோட அழைச்சுட்டு போய் காலம் பூராவும் ராணி போல அவளை பார்த்துக்குவேன். அவளோட பற்றி இனி யாருக்கும் கவலை வேண்டாம். சுந்தந்திர பறவைகள் போல நாங்க வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழுவோம்." என்று நீண்டு பேச ..

"என்னடா சொல்லுறே? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுடுச்சா? "

"அப்பா.. பைத்தியம் எனக்கில்லை ! உங்களுக்குத் தான்.! நகை , பணம் மேல் பைத்தியம்! இத்தனை நாட்கள் நான் எதுக்காக பொறுத்தேன்னா   நீங்க என்னை பெத்த கடனுக்காக !  உங்கள் சொல்லை மதிக்கிற மகனாக இருக்கணும்கிற ஒரே காராணத்திற்காக ! உங்களுக்கும் ஊருக்கும் நல்ல பையனா  நடந்துக்கனும்ன்னு உங்க பேச்சை தட்டாம உங்க போக்குப்படி ஆடினேன். இப்போ உங்க மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி எனக்கும் தனியாக பொறுப்பு வந்திருச்சு. என்னை நம்பி, என்னோடு  கைபிடுச்சு வரும் மாலாவுக்கு நல்ல புருஷனா, சொன்ன சொல்லுபடி நடந்துகொள்ளும் ஒரு யோக்கியனா இருக்கனும்ன்னு ஆசைபடுறேன். அப்போ தான் எங்க வாழ்கையிலே எப்போது வசந்த காற்று வீசிட்டே இருக்கும்.உங்களோட நான் இருந்தா உங்களோட புத்தி எனக்கு வந்தாலும் வந்துவிடும். மாலாவோ அல்லது அவளை பெத்தவங்க உங்களை மன்னிச்சாலும் என்னாலே உங்களை மன்னிக்கவே முடியாது!" நீண்ட எழுச்சிமிக்க வார்த்தைகள் பேச பேச மாலாவின் புயலாக இருந்த எண்ணங்கள் பூப் போல மலர ஆரம்பித்தது.அவள் மனம்  'இவன் தங்க மகனல்ல. தெய்வ மகன்' என்று சொன்னது.  


 


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com