Pages

Thursday, 13 September 2012

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். THINK NEGATIVE AND ACT POSITIVE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள்.
THINK NEGATIVE AND ACT POSITIVE 



எண்ணம் என்பது உங்களுடன் இருப்பது. செயல் என்பது மற்றவர்களுக்கு கொடுப்பது. ஆக பலவீனமான எண்ணங்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பலத்தை மட்டும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உங்களின் திறமைகளை விரும்பி , மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதன்மூலம் கூட உங்களின் பலவீனம் பலமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.


அதாவது எப்போதும் எதிர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK NEGATIVE). நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள் (ACT POSITIVE). இந்த வார்த்தைகள் உங்களுக்கு முரணாக தெரியலாம். ஏனென்றால் பொதுவாக அனைவரும் கூறிவருவது  எப்போதும் நேர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK POSITIVE).நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள்  (ACT POSITIVE) என்பது தானே. அது ஒருவகையில் உங்களை ஏமாற்றும் செயல். தற்பெருமையும் கூட. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய உண்மையை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். 

                                                        

ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்று எண்ணுகிறான் என்று வைத்துகொள்ளுங்கள். அதை அடைவதற்கு பலவித வழிகளில் முயற்சி செய்கிறான். நன்றாக உழைகிறான் . நல்ல தொழில் செய்கிறான் , ஆனால் இவ்வளவு இருந்தும் அவனால் வெற்றிபெற முடியாமல் தோல்விகளை சந்திக்கிறான். இப்படித்தான் பலருடைய வாழ்வின் நிகழுகிறது. அவனுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது. இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும்? அவனுடைய பலவீனகள் தான் செயலாக மாறியிருக்கின்றன.  

                                     

ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணங்கள் தான் எப்போதும் செயலாக மாறுகின்றது! உங்களிடத்தில் பலவீனமான எண்ணங்கள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை செயலாக விரும்புவீர்களா? அப்படி செய்தாலும் வெற்றி பெறுமா?

ஒரு உதாரணத்தில் மூலம் உங்களுக்கு எளிதாக விளக்குகிறேன். அதாவது உங்களுக்கு நீச்சல் தெரியாது. இருப்பினும் நேர்மறை சிந்தையோடு ஆற்றில் குதிக்கிறீகள். உங்களது நேர்மறை சிந்தனை அங்கு வந்து உங்களுக்கு உதவி செய்யுமா? 

அப்படியில்லாமல் ஆற்றில் குளிக்க ஆசை. ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரியாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? கட்டாயமாக ஆற்றில் இறங்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் பலவீனம் 'நீச்சல் தெரியாதது.' ஆகையால் ஒன்று ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிப்பீர்கள் அல்லது முறையாக நல்லவிதத்தில் நீச்சலை கற்று கொண்டு குதித்தால் உங்கள் ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். அதுவும் இல்லையென்றால் 'லைப் ஜாக்கெட்' அணிந்துகொண்டு நன்கு நீச்சல் தெரிந்த ஒருவரின் துணையோடு உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள் . அதாவது உங்கள் பலவீனமான சிந்தனை தான் பலத்தை சிந்திக்க வைத்து செயபடுத்த உதவி செய்கின்றது.


அதேபோல் சமையல் செய்யத்தெரியாதவர்கள் நேர்மறை சிந்தனையோடு சமையல் செய்தால் ருசியான உணவு கிடைக்குமா?


பள்ளி மாணவன், நான் படித்த கேள்விகள் தான் பரீட்சையில் கேட்க வேண்டுமென்ற நேர்மறை சிந்தனையோடு பரீட்சைக்கு சென்றால் அவன் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் வாங்குவான். அப்படி எண்ணாமல் ஒருவேளை நான் படிக்காத கேள்விகள் வந்துவிட்டால் என்ன செய்வது? ஆகவே எதற்கும் அதையும் படித்து வைப்போம் என்று எண்ணுகின்ற மாணவர்களே சாதனைகள் பல படைக்கின்றனர்.


நாளை மழைபெய்யும் என்று நினைத்தால் என்னாவது. ஒருவேளை மழை பெய்யாவிட்டால்  அதற்க்கு மாற்று வைத்திருப்பவனே வெற்றியடைகிறான்.


எனக்கு தான் பரிசு கிடைக்குமென்று ஒவ்வொருவரும் நினைத்தால் , பரிசு கிடைக்குமா? அதற்கு வாய்ப்பு மிகவும் அரிது. ஏனென்றால் பரிசின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணலாம்.   

எனவே எப்போதும் பலவீனங்களை நினையுங்கள்!


பலமுள்ள செயல்களை செய்யுங்கள்!

உங்களுக்கு எப்போதும் வெற்றி தான்.
       
  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com        

Wednesday, 12 September 2012

அர்த்தமுள்ள பொறுமை உலகையாளும் - YOU CAN RULE THE WORLD


அனுபவ பொன்வரிகள் 



மதுரை கங்காதரன் 

அர்த்தமுள்ள பொறுமை உலகையாளும்.
YOU CAN RULE THE WORLD BY PATIENCE 

மனிதனில் இருக்கும் குணங்களுள் மிகவும் மதிப்பில்லாத பொக்கிஷம் பொறுமை தான். பொறுமையில் இரண்டு வகை உண்டு. அதை எப்படி தெரிந்து கொள்வது? ஏதும் யோசிக்காமல், தெரியாமல் அமைதியாக இருப்பது உங்களுக்கு அது 'பொறுமை ' போல தோன்றும். அந்த பொறுமை உண்மையா? இல்லையா? என்று எளிதாக கண்டுபிக்கலாம். 

முதலாவது வகை பொறுமை :

அப்படிபட்டவர்களிடத்தில் நாம் ஏதேனும் ஒரு காரியம் அல்லது வேலை ஒப்படைக்குபோது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் , வேலையினைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் , யோசிக்காமல் அவசரமோ இல்லையோ உடனே ஏனோதானோவென்று செய்து முடிப்பார்கள். அது தெளிவில்லாமல் அரைகுறையாய் இருக்கும். மேலும் அதை முடிப்பதற்கு வேறு ஒருவரின் உதவி தேவைப்படும்.

இரண்டாவது வகை பொறுமை :


இவர்களிடத்தில் ஒரு காரியம் ஒப்படைக்குபோது , உடனே செய்யாமல் , அந்த வேலை பற்றிய அறிவையும் ,தன்மையையும் தெளிவாக தெரிந்து கொள்வார்கள். உடனே செய்ய வேண்டிய காரியத்தை உடனடியாகவும், பொறுமையுடன் செய்ய வேண்டியதை காத்திருந்து நேரம் கூடிவரும் போது படக்கென்று செய்து முடித்துவிடுவர். நேரம், காலம், இடம், செயல் அறிந்து செய்வதால் அவர்கள் செய்வதால் 100% வெற்றி கட்டாயம் பெறுவார்.


அதாவது கொக்கு ஆற்றில் ஒற்றை காலில் சிலைபோல நிற்கும். ஆனால் சட்டென்று வேகமாக ஓடிச்செல்லும் மீனை தன அழகால் கவ்விவிடும்.

பல்லி, பூச்சியை பிடிப்பது பார்த்திருக்கீர்களா? பூச்சியை அசையாமல் சிலை போல பார்த்துக்கொண்டே இருக்கும். நேரம் பார்த்து கபாளென்று கண் இமைக்கும் நேரத்தில் பிடித்து விடும். 


பொறுமையாய் இருக்கும்போது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாகவே வளர்த்துகொள்கிறார்கள். அவர்களின் சக்தி வானத்தின் உயரம் இருப்பதைக்கூட தங்களுடைய காலடியில் கொண்டு வரும் திறமையும் வல்லமையும் படைத்தவர்கர்.

பொறுமையை கடைபிடிப்பதால் உங்களிக்கு ஏதும் நஷ்டமில்லை. பொறுமையுள்ளவர்களின் எண்ணமானது எப்போதும் ஒரே நிலையாக இருக்கும். எந்த வேலையிலும் ஆழ்ந்து, சிந்தித்து , நிறை குறைகளை அறிந்து வெற்றி நேரத்தில் கனகட்சிதமாக செய்து முடிப்பார். 

அனால் பொறுமையை கடைபிடிக்காமல் இருந்தால் ஒரு வேலையும் உருப்பிடியாக முடிக்கமுடியாது. வேலையின்போது அவர்கள் அடையும் பரபரப்பு , மனகஷ்டம் சுற்றியிருப்பவர்களை நிம்மதியிழக்கச் செய்துவிடுகின்றது. மேலும் ஒரு புதிய பிரச்னையை உருவாக்க வழிவகையும் செய்துவிடுகின்றது. அவர்களின் கஷ்டம் ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து வரும்.

பொறுமையுடன் இருப்பவர்கள் எந்த ஒரு இலக்கையும், எவ்வித தடையுமில்லாமல் தொட்டுவிடும் திறமை படைத்தவர்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கியாளும் சக்தி படைத்தவர்கள். அவர்கள் உணர்வுகளை உள்ளத்தில் புதைத்துவிட்டு காரியத்தில் கண்ணாயிருப்பார்.

ஆனால் பொறுமை இல்லாதவர்கள் தங்களின்  உணர்வு தான் முதலில் நிற்கும். வேலையெல்லாம் பிறகு தான். அதனால் பெரும் துன்பம் அடைந்து எப்போதும் கஷ்டப்படுவான்.

பொறுத்தார் பூமியாள்வார்!

பொறுமை கடலினினும் பெரிது!

பொறுமை ஒருவனின் விலைமதிப்பில்லா பொக்கிஷம்.


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com        

உறவுகளின் பலமும் புரிதலின் அளவும் STRENGTH OF YOUR RELATIONSHIP AND MEASURE OF UNDERSTANDING

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

உறவுகளின் பலமும் புரிதலின் அளவும் 
STRENGTH OF YOUR RELATIONSHIP AND MEASURE OF UNDERSTANDING  




அதெப்படி உறவுகளின் பலமும் , புரிதலும் அளவிடுவது? மிகவும் எளிது. சாதாரணமாக இருவர் பேசிக்கொள்ளும்போது குரலின் சப்தத்தைக் கொண்டு நாம் அவர்களின் புரிதலை அளவிட முடியும். மேலும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றும் அறிந்துகொள்ளலாம்.

அதாவது சாதாரண குரலில் பேசும்போது அவர்களுடைய பேச்சு அந்த இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இலேசில் கேட்காது. மிகவும் கவனித்து கேட்டாலே பாதி தான் கேட்கமுடியும். அதிலிருந்து அவர்கள் இருவரும் ஓரளவு புரிதலுடன் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

சிலர் சிலரிடத்தில் கத்திக் கொண்டு , கோபப்பட்டு நாலு பேருக்கு நன்றாக கேட்கும்படி பேசுவார்கள். இவர்கள் இருவரும் வெகு குறைந்தளவே புரிதல் இருகின்றது என்கிற முடிவுக்கு வரலாம்.


சிலரோ முகத்தை திருப்பிக்கொண்டு ஒற்றை எழுத்தால்  ம் .. அ ... என்று பேசிக்கொள்வார்கள். அவர்களுக்கு சுத்தமாகவே புரிதல் இல்லையென்று சொல்லலாம்.

சிலர் சப்தம் அதிகம் வராமல் கிசு கிசு வென்று பேசிக்கொள்வார்கள். அவர்களின் புரிதல் நன்றாகவே இருக்கின்றது எனலாம்.

சிலருடைய பேச்சு வெறும் காற்று மட்டும் வரும். இதன் மூலம் அவர்களுக்கிடையில் கூடுதல் புரிதல் இருக்கின்றது என்று அர்த்தம்.

வெகு சிலர் கண்கள் , கைஅசைவு தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் புரிதல் தான் புரிதலின் அதிகபட்சமாகும்.


இதில் நீங்கள் யாரிடத்தில் எந்த ரகம்?  



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com      

விமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா - ARE YOU ANGRY ON FACING YOUR CRITICISM

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

விமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா -
ARE YOU ANGRY ON FACING YOUR CRITICISM 


நீங்கள் செய்யும் வேலைகள் , கொடுக்கும் படைப்புகளில் மாற்றங்கள் மற்றும் புதுமைகள் ஏதும் இல்லாமல் இருந்தால் அதற்கு விமர்சனம் இருக்காது. ஆனால் செய்யும் வேலையில் மாற்றங்கள், படைப்பில் புதுமை ஏதேனுமிருந்தால் ஒருவேளை நீங்கள் பலவித விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்.


விமர்சனங்களை கேட்டவுடன் முகம் சிவக்கிறது. பேச்சு கடு கடுவென்று மாறிவிடுகின்றது. அதுவும் அவர்கள் மேலதிகாரியாகவோ , தலைவராகவோ இருந்துவிட்டால் அவர்களுக்கு கீழ் வேலை செயபவர்களின் பாடு திண்டாட்டம் தான்.


அப்படி யாராவது ஏதாவது விமர்சனம் செய்தால் உடனே நாம் உணர்ச்சிவசப் பட்டு அவர்கள் மீது கோபப்பட்டு ஏதேதோ பேசிவிடுகிறோம்.      அந்த மாதிரி கோபத்தை வெளிக்காட்டுபவர்களாக இருந்தால் உங்கள் முன்னேற்றத்தின் எதிகாலம் பெரிய கேள்விக்குறி தான். விமர்சனங்களை கண்டு அசராதீர்கள். துணிவுடன் முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள் . அப்படியில்லாமல் கோபப்பட்டால் உங்களின் புதுமைக்கும், மாற்றான படைப்பிற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.நீங்கள் செய்தது எல்லாம் சரியாகத் தான் இருக்குமென்பதில்லை . அப்படி சொல்லவும் முடியாது. 

நீங்கள் பெறும் விமர்சனத்தில் என்ன உண்மை இருக்கின்றது என்று அலசி ஆராயுங்கள். அது வேண்டுமென்று கோபத்தை வரவழைப்பதற்க்காக பேசப்பட்டதா? அல்லது உண்மையில் தவறு இருக்கின்றதா ? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விமர்சனங்கள் உங்களுடைய எண்ணத்திற்கும் செயலுக்கும் பட்டை தீட்டும் கருவியாகும்.  ஆகவே அது உண்மையென்றால் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு சந்தர்ப்பம். அதில் உண்மையில்லை என்றால் அதை இந்த காதில் வாங்கிக்கொண்டு அந்த காதில் விட்டுவிட்டு தொடர்ந்து உங்கள் வேலையில் , படைப்பில் முழு ஈடுபாட்டுட்டுடன் முன்னைவிட அதிகம் உழையுங்கள். வெற்றி தானாக உங்களைத் தேடிவந்து சேரும்.

நல்ல விமர்சனங்கள்!


நம்மை நல்ல முறையில் செதுக்கும் உளிகள்!


 பலன் ! உங்களின் அழகான வெற்றிச்சிலை தான்!


 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com      

மொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FOR MOBILE PHONE USER'S SERVICE

மொபைல் போன் ( கம்ப்யூட்டர் & லேப்டாப் ) வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக -

FOR MOBILE PHONE USER'S SERVICE

மக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி 


நீங்கள் பலவிதமான மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உபயோகித்துக் கொண்டிருப்பீர்கள். அவைகள் பலவித தினுசில், பலவித வசதிகளுடன் கண் கவரும் பல வண்ணங்களில் பல நாட்டுத் தயாரிப்புகள் வரிசையாக கடைகளில் குறைந்த விலை முதல் அதிக விலை வரை  தாராளமாக கிடைக்கின்றது. தினம் ஒரு மாடல் வந்து இறங்குகின்றது. உங்களுடைய அனுபவத்திலோ அல்லது நீங்கள் கேள்விபட்டதிலோ எந்த மொபைல் போன்கள் குறைந்த விலையில் அதிக வசதி மற்றும் தரம் நிறைந்து நன்றாக உழைகின்றது என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தினால் வீணாக மக்கள் ஏமாறுவதை தவிர்கலாமல்லவா!


அதே நேரத்தில் தேவையான வசதிகள் எவற்றில் உள்ளது என்று இதன் மூலம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா! ஏனென்றால் பலர் மொபைல் போன்கள் வாங்கிய உடன் சில வசதிகளை மட்டும் தான் சரி பார்க்கின்றனர். பிறகு தான் அவகளுக்கு அது குறைந்த தரத்துடன் மற்றும் குறைந்த வசதிகளுடன் உள்ளது என்று. இந்த பகுதியில் நீங்கள் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.


அதே சமயம் மொபைல் போன் சேவைக்கு பலவித நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகைகள் எஸ்.எம்.எஸ் மூலமாகவும், பகட்டு விளம்பரம் மூலமாகவும், நம்முடன் இனிமையாக தொடர்பு கொண்டும் தெரிவிக்கின்றனர். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அதில் விழுந்து பலவிதத்தில் ஏமாறுகின்றனர். அதாவது பலரின் மொபைல்கள் பிறபல மொபைல் சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் கூறும் அறிவுரைப்படி 'ரீ-சார்ஜ் ' செய்யப்பட்டவுடன் காரணமில்லாமல் ரூபாய் 30,50, என்று தங்கள் இஷ்டப்படி பிடுங்கிக் கொள்கின்றனர். அப்படி ஏமாறுகிறவர்கள் வசதி குறைந்தவர்கள். அவற்றை யாரிடத்தில் சொல்வது என்று புரியாமல் திண்டாடுகின்றனர். பலருக்கு தினமும் 'மொய் ' எழுதும் சூழ்நிலைகூட வருகின்றது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் சேவைப் பிரிவில் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் சரியானபடி பதிலளிக்காமல் சுற்றவிடுகிறார்களே அது தான் மிகவும் கொடுமை . அதுவும் அந்த பேச்சு 'ஆட்டோ மேடிக் ' என்பதால் 'அதை செய் இதை செய், அதை அமுக்கு , இதை அமுக்கு ' என்று சொல்லி அதிக பொறுமை சோதித்து, அதிகம் காக்க வைத்து கடைசியில் நாமே துண்டிக்கும் நிலைமைக்கு தள்ளிவிடுகின்றனர். இப்படித் தான் எல்லா நிறுவனங்களும்  தப்பித்துவருகிறார்கள் . இப்படி  எளிதாக பிடுங்கி நிறைய சம்பாதிக்கின்றனர். அந்த மாதிரியான நிறுவனங்களை மக்களுக்கு எச்சரிக்கை செய்து அடையாளம் காட்டுவது தான் இந்த பகுதி. அதேபோல் பில்லில் ஏகப்பட்ட குளறுபடி. நம் கேள்விக்கு சரியாக பதில் சொல்வதில்லை.

அதே சமயத்தில் நன்றாக சேவை நிறுவனங்களையும் அடையாளம் காட்டுங்கள். அவர்களின் எந்தெந்த சேவைகள் பாராட்டிற்க்குரியது என்பது தெரியப் படுத்தினால் அனைவரும் அதில் மாறுவதற்கு உதவி செய்யலாமல்லவா? இப்ப தான் நம்பரை மாற்றாமல் வேறு ஒரு சேவைகளை மாறலாமல்லவா? இந்த சேவை எதற்காகவென்றால் மொபைல் உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் உள்ளவர்கள். அவர்களுக்கு கட்டாயம் இந்த சேவை மிகுந்த உதவி செய்யும்.

எனக்கேற்ப்பட்ட பிரச்சனை :

முதன்முதலில் ஏர்-செல் தான் மொபைல் சேவை பெற்றிருந்தேன். ஒழுங்காக சேவை கொடுத்தவர்கள், கொஞ்சம் நாட்களுக்கு பிறகு நான் ஒவ்வொரு முறை ரீ-சார்ஜ் செய்யும்போதெல்லாம் ரூபாய் 30 என்று காரணமில்லாமல் அடிக்கடி பிடுங்கிக் கொண்டனர். வாடிக்கையாளர் சேவை பிரிவில் சரியான பதிலில்லாததால் அதே நம்பரில் 'ஐடியா' மொபைல் சேவை பெற்றேன். அங்கும் ஒரு தடவை காரணமில்லாமல் ரூபாய் 30 பிடித்தார்கள். உடனே இ .மெயிலில் 'நீங்கள் ரூபாய் மறுபடியும் எனக்கு தராவிட்டால் வேறு ஒரு சேவைக்கு மாறநேரிடும் . நான் ஏற்கனவே ஏர் - செல் இருந்து வந்துள்ளேன் ' என்றவுடன் ரூபாய் 30 திருப்பி தந்ததுடன் மன்னிப்பும் கேட்டார்கள். அதிலிருந்து இதுவரை எந்த ஒரு பிரச்சனை இல்லை.

ஆனால் எனது மற்றொரு சேவைக்காக  நேற்று (11.9.12) டாடா டோகோமோ ஒரு மாத எஸ்.எம்.எஸ் சேவைக்கு ரூபாய் 26 ரீ-சார்ஜ்ம் , டாப்-அப் ரூபாய் 21 கொடுத்து ரூபாய் 17 டாக் டைம் பெற்றேன். ஆனால் ஒவ்வொரு மெசேஜ் க்கும் ரூபாய் 1 எடுத்துக் கொண்டார்கள். மேலும் காரணமில்லாமல் ரூபாய் 15 பிடித்தும் விட்டனர். இப்போது பேசவும் முடியாது. மெசேஜ் அனுப்பவும் முடியாது. வாடிக்கையாளர் சேவை பிரிவில் தொடர்பு கொள்ளும்போது சரியான பதிலில்லை. ஆகவே வேறொரு மொபைல் சேவைக்கு மாறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அவர்கள் பிடித்தது இது முதல் முறையல்ல. பல முறைகள் !

இந்த லட்சனத்தில் இவர்கள் மூலம் மொபைல் வங்கி (Mobile - Bank) சேவை பெற்றால் ஒரே நாளில் அனைத்து ரூபாயும் 'நாமம்' சாத்திவிடுவார்கள்.

அதேபோல் மொபைல் ரேட்டிங்  (Mobile rating) இதன் மூலம் கொடுங்கள்.

அதாவது அவர்களுடைய சேவையின் தரம், டவர் வசதி, சேவையில் வசதிகள், சலுகைகள், வாடிக்கையாளர்களின் அணுகுமுறை, ஏமாற்றுவது, பணத்தை காரணமில்லாமல் திருடுதல் போன்றவைகளை மனதில் கொண்டு 10 மதிப்பெண்ணிற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணை இதன் மூலம் தெரியப்படுத்துங்கள். இது நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய சேவை. மேலும் பெரிய பெயருடைய நிறுவனகளின் சேவையின் லட்சனத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே.

அதாவது:

என்னுடைய ரேட்டிங் :

ஏர் -செல் - 0
டாடா டோகோமோ - 0
ஐடியா - 8

(குறிப்பு - ஆங்கிலத்திலும் தெரிவிக்கலாம்)

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிகவும் நன்றி.

 
   
நன்றி !    

Tuesday, 11 September 2012

தங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது - INVESTMENT IN THE GOLD IS A HIGHLY DANGEROUS ONE.




தங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது -

INVESTMENT IN THE GOLD IS A HIGHLY 
DANGEROUS ONE.

மக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி 


யாணையை எப்போது கையெடுத்து கும்பிடுவார்கள். அது அமைதியாக அசைந்து அசைந்து மெதுவாக யாணைப்பாகனுடன் நடந்து வரும்போது. அதே யாணை மதம் பிடித்து பாகனுக்கு அடங்காமல் போனால், சுற்றியிருப்பவர்களை நல்லவர் கெட்டவர் என்று யாரையும் பார்க்காது கிடைத்தவர்களை துவசம் செய்து  உண்டு இல்லை என்று ஆக்கிவிடுமல்லவா! அந்த நிலைமை தான் தங்க முதலீடுக்கு வந்துள்ளது.


தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3000 க்கும் தாண்டிவிட்டது. இன்னும் தாண்டும்போலத் தெரிகின்றது. அதாவது தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 600 முதல் 700,800 வரை மக்கள் நன்றாகவே வாங்கி, விற்று வந்தனர். ஆனால் விலை ஏற ஏற அதன் மரியாதை இழந்து சற்று மதம் பிடித்து விட்டதாகவே தோன்றுகின்றது. எல்லாவற்றிக்கும் ஒரு அளவுதான். அளவு மிஞ்சினால் அதிக ஆபத்து தானே! ஏறிக்கொண்டிருக்கும் தங்கம் த்டீரென்று கிராம் ஒன்றிற்கு ரூபாய் 1000 க்கு கீழ் வந்தாலும் ஆட்சேபணை இல்லை. அதற்க்கான் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.


தங்கம் எப்போது ஊக வணிகத்தில் (ஆன் - லைன் ) நுழையப்போகின்றது என்கிற பேச்சுகள் தீவிரமாக அடிப்படுமுன்னே வல்லரசு நாடுகள், பெரிய நிறுவனங்கள், வங்கிகள், தனியார் துறைகள் தங்களுடைய அனைத்து முதலீடும் தங்கத்தில் போட்டுவிட்டனர். பல நிறுவனங்கள் உற்பத்தியில் கூட கவனம் செலுத்தாது தங்கத்தில் முதலீடு செய்தனை. (உதாரணம் - 10.9.12 நிலவரப்படி உற்பத்தி பூஜ்யம் நிலைக்கு வந்துவிட்டது) அப்போது அவர்கள் தங்கம் வாங்கிய விலை அதிகபட்சமாக கிராம் ஒன்றுக்கு ரூபாய் 600 தான் இருக்கும். அதில் முதலீடு செய்த அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் தங்கம் எல்லோருமே வாங்குவார்கள். அதுவும் ஒவ்வொரு விஷேசத்திற்க்கும் , பண்டிகை நாட்களிலும், ஆடி மாதம், அட்சய தீர்த்திகை போன்ற நாட்களின் மக்கள் கட்டாயம் தங்கம் வாங்குவார்கள். ஆகையால் தங்கம் விலை பலமடங்கு உயருமென்று. அதாவது ஊக வணிகம் கிட்டத்தட்ட ஏலம் கேட்பது போல. அவர்கள் நினைத்ததுபோல் பன்மடங்கு உயர்ந்தது. அது என்ன அழுகும் பொருளா? இல்லையே!

இது தான் நல்ல சமயமென்று தங்க வியாபாரம் செய்பவர்கள் அதிக விலைக்கு விற்க பார்கின்றனர். அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில் விற்கிரோமோ அவ்வளவு சீக்கிரத்தில் விற்றுவிடத் துடிக்கிறார்கள். அதனால் வங்கிகளும் ஏன் தபால் துறையிலும் இன்னும் பல துறையின் மூலம்  தங்கத்தை விற்று வருகின்றனர். இங்கு ஒரு கேள்வி. தங்கம் பாதுகாப்பானது. அதன் முதலீடு பன்மடங்கு பெருகும் என்பவர்கள் ஏன் போட்டி போட்டுக்கொண்டு விற்கின்றனர். பெரிய நிறுவனங்கள் மக்களிடமிருந்து முன்புபோல அவ்வளவு எளிதாக வாங்குவதில்லை என்பது வேறு விஷயம். அவர்களித்தில் வாங்கிய தங்கங்களே மதிப்பில்  30% முதல் 40% வரை குறைவாகவே வாங்குகின்றனர். 

மக்களிடம் தங்கம் அதிகபட்சமாக 20% இருந்தால் அதிகம் தான். மீதம் 80% பெரிய கையில் தான் இருக்கின்றன. இந்த விலையை கண்டு தங்கம் வைத்திருப்பவர்கள், வாங்கியவர்கள் மிகவும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதி மகிழ்ச்சியடையலாம். பத்திரிகை , மீடியாக்கள் , ஆலோசகர்கள் எல்லாம் எல்லாவற்றையும் மிகைப் படுத்தி 'ஆஹா ஓஹோ ' என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஏனென்றால் அவர்கள் பரபரப்பிற்கு பெயர் போனவர்கள். உண்மை நிலவரத்தை எப்போதும் சொன்னது கிடையாது. விலை அதல பாதாளத்தில் விழும்போது 'கடும் வீழ்ச்சி ' என்று தான் எழுதுவார்கள். ஆமாம், நேற்று நீங்கள் தான் நல்ல முதலீடு என்று சொன்னீர்களே! இப்போது இப்படியாகிவிட்டதே! என்று நீங்கள் தான் புலம்ப வேண்டும். ஏனெனில் நஷ்டம் உங்களுக்குத்தானே. சொன்னவர்கள் எப்போதும் ஜாக்கிரதையாக முதலீடு செய்யாமல் தங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருப்பார்கள்.

இப்போதுள்ள தங்கம் விலை நல்ல விலை. ஆகவே எப்பாடுபட்டாவது உங்களிடம் இருக்கும் தங்கத்தை ஒரு 50% விற்று பணமாக்கப் பாருங்கள். முடியுமா ? முடியவே முடியாது. சரி ஒரு 10% மாவது. முடியாது. அப்படி நீங்கள் விற்க நினைத்தால் உங்கள் முதலீட்டில் மொத்த மதிப்பில்  50% தேறுவது சந்தேகம் தான். அப்படியென்றால் உங்களது 50% முதலீடு நாமம் தான்.

இப்போதே ஒரு சிலர் தாங்கள் விற்கும் தங்கத்தை வாங்குவதற்கு ஆளில்லேயே என்று புலம்புகின்றனர்.! ஒரே நேரத்தில் அனைவரும் விற்க நேர்ந்தால் யார் தான் அதற்கு பணம் தருவார்கள். அப்போது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1000 கூட போகாது. அந்த சூழ்நிலையில் உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

மேலும் தங்கம் விற்க முடியாமல் போனதால் பணத்தேவைக்கு அடகு வைத்து கடன்காரனாகவும், முதலீட்டில் மொத்த மதிப்பில்  60% தான் கொடுக்கிறார்கள். (அவ்வளவு தான் அதன் மதிப்பு). மேலும் அதற்கு நீங்கள் வட்டியும் கட்டவேண்டிய நிலைமை தள்ளிவிடுகின்றது. ஆக பணம் தங்கமாக மாற்றிவிட்டால் , மீண்டும் அதே அளவு பணம் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.

நிகழ்ந்த உதாரணங்கள் இதோ :

கச்சா எண்ணெய் :


கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 30 US$ ஆக இருந்தபோது ஊக வணிகத்தில் நுழைந்தது. அது அடைந்த உச்சி  விலை  140 US$ வரை சென்றது. அதில் போட்டால் லாபம் என்று உசுப்பேத்த பெரிய வங்கிகள் , நிறுவனங்கள் அதில் முதலீடு செய்தன. ஆனால் ஒரு கட்டத்தில் 'டமால் ' என்று விழுந்த அடி 150 ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கி வந்த வங்கிகள் இந்த சரிவினால் இன்றும் எழுந்திருக்க முடியாமல் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கச்சா எண்ணெய் பலருக்கும் அன்றாடம் அதாவது பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பது, மின்சாரம், வாகனம் போன்றவற்றிற்கு அவசியம் தேவை படுவது. அதற்கே இந்த கதி. இந்த வீழ்ச்சி மேலை நாடுகளில் அதிகமாக நடந்தது. அதன் தாக்கம் இங்கு தெரியவில்லை. இன்று ஓரளவு கூடுகிறது. குறைகிறது. இதில் பொது மக்களுக்கு  குறைந்தளவே மறைமுகமாகத் தான் பாதிப்பு ஏற்ப்பட்டது.

ஐ.டி துறை:


அஹோ ஓஹோ என்று பங்கு சந்தையை உச்சத்திற்கு கொண்டுபோனது. பங்கு சந்தை என்னவென்று தெரியா எல்லோரும் நுழைந்து முதலீடு செய்தனர். ஒருகட்டத்தில் அதற்கு நிகழ்ந்த  'மரண அடி ' யானது சில மணிநேரம் பங்கு சந்தை  வர்த்தகம் நிறுத்தும் நிலைமை உண்டாக்கிவிட்டது. பல பங்குளை அடி மாட்டுக்கு விலையில் கூட வாங்குவதற்கு ஆளில்லாமல் போனது. இதில் உயர் நடுத்தர வர்க்கத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

மியுசுவல் பண்டு : 

இதற்கு விளக்கம் தேவையில்லை. அடிபட்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அதற்குள்ள மதிப்பு, மரியாதை இழந்து இதன் வியாபாரமே படுத்துவிட்டது.

ரியல் எஸ்டேட் :


ஓஹோ என்று இருந்த இந்த துறை பல இடங்களில் இப்போது அதன் முதலீடு தூங்கிக்கொண்டியிருக்கின்றது. வாங்குவதற்கு ஆளில்லை. பலர் பில்ட் அப் செய்து தலைகீழாக நின்று பார்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை. லோன் வாங்கி கட்டியவர்கள் அதை திருப்பி கட்டுவதற்கு திண்டாடி வருகின்றனர். இதிலும் பல மேலை நாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கிய அடி இன்னும் ஆறவில்லை. வீடு அனைவருக்கும் தேவையுள்ள ஒன்று. அதற்கே இந்த நிலைமை. இதில் நடுத்தர வர்கத்தினர்களுக்கு கஷ்டம் தான்.

தங்க முதலீடு:

தங்கம் என்ன அவ்வளவு முக்கியமான மனித வாழ்க்கைக்குத் தேவையா? அது இல்லாமல் உயிர் வாழ முடியாதா? அதை உணவாக சாப்பிட முடியுமா? அப்படியிருக்கும்போது ஒருகட்டத்தில் அதன் தேவை மற்றும் வியாபாரம் வெகுவாக குறையப் போகிறது. இதில் எல்லா வர்க்கத்தினரும் கட்டாயம் பாதிப்புக்குள்ளாவார்கள். தங்கம் முதலீடு ஒன்றுக்கு பத்து தடவை யோசித்து செயல்படுங்கள். தேவைக்கு அதிகமாக பணமுள்ளவர்கள் வாங்கலாம்.


நீங்கள் தங்கத்தை கொடுத்து பலசரக்கு சாமான்கள் வாங்க முடியுமா? ஸ்கூல் பீஸ் கட்டமுடியுமா? வங்கியில் கொடுத்து லோன் அடைக்க முடியுமா? பின் எதற்கு  இந்த விலையேற்றம்! மக்களின் பேராசை தான்.

உங்களுக்கு 'மைதாஸ் ' கதை தெரியும். அவன் கேட்ட வரம் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்ற பேராசை. கடைசியில் அவன் உயிர் வாழ சாப்பாடு கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு மீண்டும் பழைய வாழ்க்கை வந்துவிடுவான். அது போல எல்லோரும் தங்கம் தங்கம் என்று முதலீடு செய்தவர்கள் பணமாக மாற்ற நினைக்கும்போது எல்லோரிடத்திலும் தங்கம் இருக்கும். பணமிருக்காது. நிஜ தங்கத்திற்கு இந்த சோதனை என்றால் 'பேப்பர் தங்கம் ' சொல்லவா வேண்டும். அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

ஆக மக்களே உங்கள் பணத்தை தங்கமாக மாற்றி கஷ்டப்படுவதற்கு பதிலாக அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் நிரந்தர வைப்பில் போடுங்கள். உங்கள் முதலீடு கண்டிப்பாக வளரும். பயம் என்றுமில்லை. லோன் கூட குறைந்த வட்டியில் உடனே கிடைக்கும்.

தங்க முதலீடா? சிந்திப்பீர்! தகுந்தபடி செயல் படுவீர். கடைசியாக பணத்திற்கு என்றும் எப்போதுமுள்ள மரியாதை தான்! அதை யாராலும் அழிக்க முடியாது.

நன்றி !

வணக்கம்.!!       
  

Monday, 10 September 2012

ஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WHEN YOU HEAR AMBULANCE SIREN

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

'ஆம்புலன்ஸ் ஒலி' கேட்கிறீர்களா? உடனே பிரார்த்தனை செய்யுங்கள் !
PRAY WHEN YOU HEAR AMBULANCE SIREN


நானும் எனது நண்பரும் கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஆம்புலன்ஸ் வேன் ஓன்று சைரன் ஒலி அலறல் சப்தத்துடன் வேகமாக கடந்து சென்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அனைத்து தரப்பு மக்களும் ஒதுங்கி வழிவிட்டனர். நானும் அந்த வினாடியே ஒதுங்கி நின்று ஒன்றை நினைத்து முனுமுனுத்தேன். இந்த செயலை பார்த்த என் நண்பர் ஆச்சரியத்துடன் 'எதற்க்காக என்னவோ மனதில் முனுமுனுத்தாயே காரணம் என்ன ?' என்று கேட்டான். 

'அது ஒன்றுமில்லை, இப்போது கடந்து சென்ற ஆம்புலன்ஸ் வேனில் உள்ளவர்கள் யாரோ? எவரோ? தெரியாது. ஆனால் ஆபத்தான அவசர சிகிச்சைக்காக யாரையோ கொண்டு செல்கின்றனர். அவர் நல்லபடியாக குணமடைய வேண்டுமென்று சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.  மக்கள் இந்த ஒலியைக் கேட்டவுடன் எவ்வாறு ஒதுங்கி வழி விடுகின்றனரோஅதேபோல் நாம் பிரார்த்தனை செய்வது நல்லது தானே!' என்றேன்.  இதைக்கேட்ட என் நண்பர் 'இந்த காரணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போது முதல் நாம் இதை பின்பற்றபோகிறேன்' என்று கூறும்போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

வழிநெடுகிலும் எத்தனையோ பேர்களை ஆம்புலன்ஸ் கடந்து செல்கின்றது. அவர்களெல்லாம் பிரார்த்தனை செய்யும்போது பலன் நிச்சயம் கிடைக்கும்.


இதுவும் ஒருவகை கூட்டுப்பிரார்த்தனை தான்.

நீங்களும் பின்பற்றலாமே!

 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com