

8.6.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 47
தலைப்பு: மங்கா தமிழ் பாடு ! மங்கலமாய் விடியும் பாரு !
மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.
மங்கா தமிழ் பாடு ! மங்கலமாய் விடியும் பாரு ! எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மன்றத்தின் ,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. ,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் .பொருளாளர் கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .
முனைவர் இரா. வரதராசன் தலைமையில் கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்,புலவர் முருகுபாரதி , கு .கி கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அஞ்சூரியா க .ஜெயராமன் , சோ .தமிழன்பன் பா..பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,அராபிய கிரிதரன் ,இதயத்துல்லா ( இளையான்குடி ) கவிக்குயில்கள் லிங்கம்மாள், செ. அனுராதாஆகியோர் கவிதை படித்தனர் .
கவிக்குயில் செ.அனுராதா எழுதிய" ஆறுபடையோனும் ஆட்கொண்ட சித்தர்களும் " நூல் வெளியிட்டனர் ,
சிறப்பாக கவிதை பாடிய செ.அனுராதா ,ந .சுந்தரம் பாண்டி ஆகியோருக்கு கவிமாமணி தென்னவன் நினைவு விருது வழங்கினார்கள் .
,
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
*******
நன்றி தினமலர் 29.6.2026
மங்காத தமிழ்பாடு மங்கலமே சேரும் பாரு (27.6.2026)
நாடெல்லாம்சுத்திவாரோம்நாங்களேசாமி
நல்லதமிழ்பாட்டெடுத்துபாடுவோம்சாமி
ஏடெல்லாம்தெரியாதுஏத்துக்கோசாமி
எங்கதமிழ்கொஞ்சுறதபாத்துக்கசாமி
வீடெல்லாம்விறகடுப்புதானுங்கசாமி
விலைகொடுத்துவாங்குறதுவீணுங்கசாமி.
பள்ளிக்கூடம்போகவில்லைநாங்களேசாமி
பாடங்களைபடிக்கவில்லைபோங்களேசாமி
தெள்ளுதமிழ்எங்களுக்கும்தெரியும்சாமி
தேடிவரும்புகழெல்லாம்அறிவோம்சாமி
குள்ளநரிவேடமெல்லாம்ஆகாதுசாமி
கொஞ்சியெம்மைஏமாற்றுதல்வேகாதுசாமி.
ஆனாவன்னாபடிச்சிமெல்லஉயர்வோம்சாமி
அஞ்சாமல்ஆங்கிலமும்பயில்வோம்சாமி
பேனாவச்சுஎழுதிவச்சிபடிப்போம்சாமி
பேசுகிறமொழிரெண்டுபோதுமேசாமி
நானாநீயாபோட்டியெல்லாம்ஆகாதுசாமி
நல்லதமிழ்படிச்சாலேபோதுமேசாமி.
மங்காததமிழ்பேசமாறுங்கசாமி
மாநிலத்தில்எல்லாமொன்னுசேருங்கசாமி
பங்கமிலாபெருமைகூட்டும்பேச்சுதான்சாமி
பாங்கானதமிழெங்கள்மூச்சுதான்சாமி
சங்கமெலாம்எங்களுக்கும்உண்டுதான்சாமி
சாதிசனம்நல்லாருக்கவேண்டுவோம்சாமி.
*முனைவர்இரா. வரதராசன், துணைத்தலைவர் மாமதுரைகவிஞர்பேரவை
(998421 64978)
[ இக்கவிதைஇலக்கணமரபோடுகூடியது.
இதை முழுமையாக நரிக்குறவர் பாடும்சாயலில் இசையோடு பாடலாம் *******
மங்கா தமிழ் பாடு! மங்கலமாய் விடியும் பாரு!!
- கவிஞர் இரா. இரவி!
*****
மாண்புகள் மக்க மங்காத தமிழ் பாடு
மண்ணின் முதல் மொழியாம் தமிழினைப் பாடு!
மற்ற மொழிகளுக்குச் சொற்கள் தந்த தமிழ் பாடு
மற்ற மொழிகளின் தாய்மொழியாம் தமிழ் பாடு!
பல்லாயிரம் ஆண்டுகளாகிய பண்டைத் தமிழ் பாடு
புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நிறைந்த தமிழ் பாடு!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ் பாடு
எண்ணிலடங்காத சொற்களின் அரங்கம் தமிழ் பாடு!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய தமிழ் பாடு
கற்கண்டு சொற்சுவை நிறைந்த நம் தமிழ் பாடு!
காவியங்கள் காப்பியங்கள் படைத்திட்ட தமிழ் பாடு
கண்டவர்கள் வியக்கும் கன்னித் தமிழ் பாடு!
பன்னாட்டு மொழியாம் ஆட்சிமொழியாம் தமிழ் பாடு
பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் பைந்தமிழ் பாடு
ஓலைச்சுவடித் தொடங்கி கணினி வரை சிறந்த தமிழ் பாடு!
உலகெலாம் உணர்ந்திட்ட ஒப்பற்ற தமிழ் பாடு
சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமைமிகு தமிழ் பாடு!
சங்கத்தமிழுக்கு ஈடுஇணை இல்லாத தமிழ் பாடு
சொல்லில் அடங்காத சுவைமிக்க தமிழ் பாடு!
சொக்க வைக்கும் சுந்தரத் தமிழ் பாடு
உலகம் முழுவதும் ஒலித்திடும் ஒப்பற்ற தமிழ் பாடு
உலகத் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழ் பாடு!
பகைவர்களைத் தவிடுபொடியாக்கிடும் தமிழ் பாடு
பகைமையை எதிர்கொண்டு வெல்லும் தமிழ் பாடு!
••••••
*மங்காத் தமிழ் பாடு*
*மங்களமாய் விடியும் பாரு*
-------------------------------
தொன்மை சாற்றும் தாய்மொழி
தோன்றிய காலமறியா சுயம்புமொழி
செம்மையின் நிலத்தின் செம்மொழி
சிறந்திடும் அழகுத்
தமிழ்மொழி
குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் பாலை நிலங்கள்
களவெனும் காதல் நெறிகாட்டும்
கற்பெனும் வாழ்வின் நெறியூட்டும்
சிலம்பொலி சிலப்பதி காரம்
மணிமேகலை மாட்சிமை சாரம்
அகநானூ
றறிவின் நுணுக்கம்
புறநானூ
றுபுகழின் விளக்கம்
குறுந்தொகை குவிந்த இனிமை
சங்கத்தமிழ் தந்த பெருமை
இயலிசை நாடக முத்தமிழ்
இனிமைசேர் முத்துச் செல்வம்
இலக்கணம் கண்ட முதன்மொழி
இலங்கிடும் அறிவின் திறன்மொழி
ஆன்மீக அருளைச் சொன்ன
அறிவியல் உண்மையைச் சொன்ன
வானியல் வழியைச் சொன்ன
மருத்துவ நலத்தைச் சொன்ன
சித்தர்கள் ஞானம் சொன்ன
மங்கையர் மேன்மை சொன்ன
மங்காத் தமிழினைப் பாடு
மங்களமாய் விடியும் பாரு!
மதுரை
ந. சுந்தரம் பாண்டி
********
*மங்காத் தமிழ் பாடு*
*மங்கலமாய் விடியும்* *பாரு*
காலை வரும் கதிரவனில்
கறுப்பு புள்ளி *உண்டு*
மாலை வரும்
மதியதனில்
முயற்கறை
*உண்டு*
ஓடி வரும்
ஆற்றில் நுரை
*உண்டு*
கூடி வரும்
தீயில் புகை
*உண்டு* (4)
தேடி வரும்
காற்றில் கிருமிகள்
*உண்டு*
வீடு வரும்
நெல்லில் பதர்
*_உண்டு_* (6)
ஆண்டுகள்
ஆயிரம் ஆயிரம்
கடந்தாலும்
நீண்ட வரலாறு
தமிழுக்கு
நிச்சயம் *உண்டு*
(8)
மங்காத
பேசு தமிழுக்கு
மறையாத பெருமை *பலவுண்டு*
மாறாத தேசு புகழ் பேரானச் சீரிளமை
செந்தமிழுக்கு
*என்று முண்டு*
(10)
ஐந்திலக்கணம்
ஆய்ந்தறிந்து
கண்ட
*தமிழ் மொழி*
ஐங்காப்பியம்
அணிகலனாய்க்
கொண்ட
*தமிழ்த் தாய்*
தலையதைத்
தாங்கும்
*சீவக சிந்தாமணி*
செவியதில்
சிறக்கும்
*குண்டலகேசி*
கரமதில்
மிளிரும்
*வளையாபதி*
இடையதில்
ஒளிரும்
*மணிமேகலை*
இரு கால்களில்
ஒலிக்கும்
*சிலம்பு*
திருவே தெய்வமே
*தென் தமிழ்த்தாயே*
வாழியவே !

(18)
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி!*
பெங்களூர்
*28.06.2026*
********
மங்கா தமிழ் பாடு
மங்கலமாய் விடியும் பாரு
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
மாதம் ஒருமுறை
மணியம்மை பள்ளியில்
மங்காமல் ஒலிக்கும்
மாமதுரைக் கவியரங்கம்
வளரும் கவிஞர்களை
வரவேற்கும் வாசல்
புதிய கவிஞர்களை
புடம் போடும் பட்டறை
நானூறுக்கு மேல் கவியரங்கம்
நடத்தி சாதனை புரிந்தவர்
தென்னவர் தொடங்கிய
தமிழ்க்கவிதைக்கான இருக்கை
வற்றாத கவிதை ஊற்றாய்
வாரி வாரி அளிப்பவர்
கவிதைகளைக் கேட்பவர்களை
கவிஞர்களாக மாற்றுபவர்
ஆயிரத்தில் ஒருவராய்
ஆசுகவியாய் விளங்கியவர்
மாசில்லாத கவிதைகளை
மங்காது பாடியவர்
பல இடங்களில் கவிதை பாடி
பிரபலமாய் விளங்கியவர்
கவிதை மாமணி பட்டத்துக்கு
கச்சிதமாக பொருந்துபவர்
தூயத் தமிழுக்கு
ஓயாது குரல் கொடுத்தவர்
கம்பீரமான குரலில்
கவிதைகளை அதிரச் செய்பவர்.
மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு
மாதாமாதம் வந்து பாரு
மணியான கவிதைகளைக் கேளு
மங்கலமாய் விடியும் தமிழுக்கு
********
AI Review
********
*****
No comments:
Post a Comment