Pages

Thursday, 27 September 2012

வெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO YOU KNOW THE DIFFERENT BETWEEN SUCCESS AND DESIRE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

உங்களுக்கு வெற்றிக்கும் , ஆசைக்கும் 
வித்தியாசம் தெரியுமா- 
DO YOU KNOW THE DIFFERENT BETWEEN
 SUCCESS & DESIRE


யார் ஒருவர் தன்னுடைய இலக்கை மிகக்குறைந்த காலத்தில் அடைகிறார்களோ அதுவே வெற்றியாகும். உதாரணமாக 20 வயது இளைஞன், 'தான் ஒரு கார் வாங்கவேண்டுமென்று' ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்கிறான். எப்போது அதை நிறைவேற்றுவான்? என்கிற கேள்வி வருகிறது. 25 வயதில்... 30 வயதில்... 40 வயதில்... இப்படி காலவரையறை இல்லாமல் குறிக்கோளை வைத்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமில்லை. அதாவது 5 ஆண்டுகளில் அவர் நிறைவேற்றினால் அது வெற்றி. 25 ஆண்டுகளில் அதை நிறைவேற்றினால் அதற்கு பெயர் ஆசை. 


காலம் வரையறை கொண்ட எந்த செயலும் வெற்றிக்கான குறிக்கோளாகும். காலவரையற்ற அல்லது அதிக காலம் கொண்டு செய்யும் செயல் ஆசை எனலாம். வெற்றிக்கு முழு முயற்சி, அறிவும், திறமையும், கடின உழைப்பும், ஆர்வமும் இருக்கும். தோல்வி ஏற்ப்பட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடைந்தே தீருவர். ஆனால் ஆசைபட்டதை அடைவதற்கு மேற்கூறியவைகள் அவ்வளவாக தேவைபடாது. ஆசையை அடைத்தாலும் பெரிதாக மகிழமாட்டார்கள். அடையாவிட்டாலும் அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். கிடைக்கும் வரை லாபம் என்கிற மனப்பான்மையே இருக்கும்.

இன்னும் சரியாக சொல்லப்போனால் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

                           (GOAL)  நீங்கள்  அடைய வேண்டிய குறிக்கோள்     
    
                                        நீங்கள் ஆரம்பிக்கும்  இடம் (START)

பார்த்தீர்களா! இதில் நீங்கள் வேலை ஆரம்பிக்கும் இடமும் , அடைய வேண்டிய குறிக்கோளும் இருக்கின்றன. ஆனால் எத்தனை பாதைகள் எப்படியெல்லாம் சுற்றி சுற்றி செல்கின்றன. இந்தப் பாதையில் எது குறைவான தூரமோ அதுதான் வெற்றிப்பாதை. மற்ற பாதையில் சென்றால் வீண் கால விரையமும், அதிக ஆற்றலும் தேவைப்படும். ஆகவே உங்களுக்கு வெற்றி வேண்டுமென்றால் குறைந்த தூர பாதையை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கின்றது. அதைதான் நாம் திட்டம் என்று கூறுகிறோம்.


எவன் ஒருவன் தினமும் கடின உழைப்பின் மூலம் ஒரு படி மேலே ஏறுகிறவனால் மட்டுமே  தான் இருக்கும் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஏதாவது காரணத்தினால் மேலே முயற்சிப்பது நிறுத்தினாலோ அல்லது முயலாமல் முன் வைத்த காலை பின் வாங்கி விட்டாலோ அவன் வாழ்கையில் முன்னேறுவது கஷ்டம் தான்.


அதேபோல் யார் ஒருவர் புதிய புதிய முயற்சிகளை சோதித்து பார்க்கின்றனரோ, வித்தியாசமாய் செய்யவேண்டுமென்று கடுமையாய் முயல்கின்றனரோ அவர்களுக்குத்தான் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

அதேபோல் நான் எப்படியும் முயன்று என்னுடைய குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்கிற தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். துணிச்சல் இல்லாமல் சாதனை செய்யமுடியாது. சரித்திரம் படைக்கமுடியாது.


அதாவது உனது திட்டம் என்ற கையிற்றை குறிக்கோளில்  கட்டிவிடு. உனது முயற்சி, தன்னம்பிக்கை, விடா முயற்சி கொண்டு , அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அந்த கையிற்றை தினமும் மெல்ல மெல்ல இழு. தானாகவே நீ  உனது குறிக்கோளை அடைந்து விடுவாய்!

வெற்றிக்கு எப்போதும் முடிவே இல்லை!
SUCCESS IS NEVER ENDING !


தோல்விகள் எப்போதும் முடிவும் அல்ல !
FAILURE IS NEVER FINAL !


ஆசை படுவதை விட குறிக்கோள் கொள்!
அது உன் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

Wednesday, 26 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 5 கோடிகளில் கரையாது உனது தீய செயல்கள்-YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY

உள்விதி மனிதன் 
 சம மனித கொள்கை 
(EQUAL HUMAN POLICY)




பாகம்: 6 கோடி ரூபாய்களில் கரையாது 
உனது தீய செயல்கள் -
YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY 
  


அன்பு மனிதா! மீண்டும் நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். எனக்கு அரிய பெரிய சக்திகள் இருக்கின்றது என்று உனக்கு தெரியும். எனது சக்தியை உனது மனம், உணர்வு, உடம்பு, உயிர் கொண்டு தான் அறிய முடியும். நான் வழங்கிய உடலைக் கொண்டு நீ மானுட ஜென்மம் எடுத்துள்ளாய். இந்த உலகில் எனது படைப்புகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வந்துள்ளாய். நீ எப்போதும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நீ பிறக்கும்போது பலவிதத்தில் உதவி செய்வதற்காகத் தாய், தந்தையை படைத்திருக்கிறேன். நீ உனது சொந்தக் காலில் நிற்கும்வரை நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து உன்னை பலரின் மூலமாக காத்துக் கொண்டிருக்கிறேன். புனிதமான மனித ஜென்மம் பெற்ற நீ மனிதர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்தால் எனது பாரம் குறையும். அதைக்கண்டு நிச்சயம் மகிழ்ச்சியும் சந்தோசமும் கொள்வேன்.

இனிய மனிதா! போலி வேஷம் போட்டு வெறும் சொற்களாலும், கண்கட்டு வித்தைகளையும், அழகான அலங்கார வார்த்தைகளால் மயக்கி மக்களை ஆட்கொண்டு அவர்களை இஷ்டப்படி ஆட்டி வைப்பவர்களிடம் எச்சரிக்கையாய் நடந்துகொள். அந்த சமயத்தில் நான் சொல்லும் படி நட. வெறும் பேச்சினால் உன் கஷ்டங்கள் நீங்காது. அதை நன்றாக புரிந்து கொள். செயல் இருக்கும் மனிதர்களை நம்பு. நான் கோடி ரூபாய் தருகிறேன் என்று உனக்கு மகிழ்ச்சி தரும்  வெற்று வார்த்தைகள்  சொல்பவர்களைக் காட்டிலும் கையில் பத்து ரூபாய் தருபவர்களை நம்புவாயாக. அப்படி பொருட்செலவத்தை தருகிறேன் என்று சொல்லி உன்னிடம் பணம் பறிப்பவர்களிடம் அகப்பட்டுகொள்ளாதே! அவர்கள் கொசு எப்படி உனது இரத்தத்தை உறிஞ்சுவது போல உனது செல்வத்தையும் உறிஞ்சி அவர்களுக்கு உன்னை அடிமையாக்கிவிடுவார்கள். பிறகு நீ நினைத்தாலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சிலந்தி வலையில் அகப்பட பூச்சிபோல் ஆகிவிடுவாய் ஜாக்கிரதை!


இரக்க மனிதா! ஒருவர் உன்னை மிரட்டியோ, பயமுறுத்தியோ, துன்புறுத்தியோ, ஆசைகாட்டியோ பணம் மற்றும் செல்வத்தை பறித்தால் அல்லது உன்னிடம் கேட்டால் அவர்கள் நல்ல எண்ணங்கள் உடையவர்கள் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டு நான் காட்டும் மக்களிடம் நட்புகொள். அவர்கள் நீ கொடுப்பதை மனமுவந்து ஏற்பவர்கள், அவர்களால் உனக்கு பல நன்மைகள் உண்டாகும். பணத்தால் நீ செய்த தீவினைகளை அகற்ற முடியாது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சாதாரண புன்னை உடனே குணமாக முடியுமா? அது போலதத்தான் உனது செயலும் பணத்தை பார்த்து பலன் தராது.

பிரிய மனிதா! உனக்கு துன்பம் வராதபடி உன்னைக் காப்பது எனது முதற்கடமை. அப்படி மீறி வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். கண்ணெதிரே துன்பம் வந்தால் அதை போக்குவதற்கும், சமாளிப்பதற்கும் வழியை உனக்கு சொல்கிறேன். அப்போது அதை நுண்ணிப்பாக கேட்டு எச்சரிக்கையாய் நட. நீ வளர வளர உனக்கு அறிவு, திறமை, சமயோசித புத்தி, ஆற்றல் ஆகியவற்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். அதை நான் சொல்லும்படி முறையாக பயன்படுத்தினால் உனக்கு எந்த கெடுதலும் வராது.

 அன்பு மனிதா!


நல்ல எண்ணங்கள் கொள்!

நன்மைகளை செய்!


கோடி இன்பம் பெறுவாய்! 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

Tuesday, 25 September 2012

வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MARATHON' RACE

அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம்.
LIFE IS A 'MARATHON' RACE


பந்தயத்தில் மிகவும் நீளமான தூரம் உள்ள பந்தயம் 'மாரத்தான் '. இந்த போட்டியின் தூரம் 42.195 கிலோமீட்டர் அல்லது 26.2 மைல்கள். இதை மிகவும் குறுகிய நேரத்தில் கடந்தவர்கள் தான் வெற்றியாளர்கள். சமீபத்தில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இதை ஒருவர் 2:53:24 மணி நேரத்திலும், பெண்கள் பிரிவில் இதை ஒருவர் 3:18:53 மணி நேரத்தில் கடந்து சாதனைபுரிந்துள்ளனர்.


இதில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது தான். இந்த பந்தயத்தில் தான் ஒரேநேரத்தில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். யார் ஒருவர் நிற்காமல், தொடர்ந்து, சீராக, வேகமுடன் செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டாலும் அதில் முதல் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு கிடைக்கும்.


இந்த போட்டியின் ஆரம்பத்தில் யார் யாரோ முந்திக்கொண்டு முதலில் கடந்து செல்வார்கள். அதேபோல் இடையில் வேறு ஒரு குரூப் முதலில் கடப்பார்கள். ஆனால்  வெற்றி இலக்கு நெருங்க நெருங்க சம்பந்தமே இல்லாமல் கடைசியில் எங்கோ இருப்பவர்  முதலில் வந்துகொண்டிருப்பார்கள். இந்த போட்டியில் முதலில் வருபவர்கள் தான் முதலில் வெற்றி இலக்கை அடைவார்கள் என்று கட்டாயமாகச்  சொல்லமுடியாது. இடையில் சிலர் கடக்க முடியாமல் விலகிவிடுவார்கள். சிலர் மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக கடப்பார்கள். இதற்கு காரணம் என்ன? இந்த போட்டி முழுவதிலும் யாருக்கு அதிக அளவில் 'ஸ்டாமினா ' அதாவது மூச்சு பலம் , முறையான பயிற்சியும், முயற்சி மற்றும் தன்னம்பிக்கை உள்ளவரே வெற்றி பெறுவார்.


இது போலத்தான் நமது வாழ்க்கை பந்தயம். இந்த பந்தயத்தில் வயது வித்தியாசம் இல்லாமல், பலவிதமான எண்ணங்கள், அறிவு, திறமையுள்ளவர்கள் , பயிற்சி பெற்றவர்கள், முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆ...ஊ ... என்று கூச்சல் போட்டு வெற்றி அடைந்தவர்கள் சிறிது நாட்களில் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் முன் வைத்த காலை பின் வாங்காமல் சீரான வேகத்துடன், கடின உழைப்புடன் , திறமையும், அறிவையும் வளர்த்துக் கொண்டு சிறந்த பயிற்சி பெற்று தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து  தங்களது குறிக்கோளை அடைகின்றனர்.


பலர் வாழ்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட எதிர் கொள்ள தாக்குபிடிக்க முடியாமல் ஒரு தடவை முயன்று தோற்க்கிறார்கள் . மேலும் அந்த தோல்வியே  மனதில் வைத்துகொண்டு  முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றனர்.பெரும்பாலும் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறைவால் தங்கள் வெற்றியை நழுவவிடுகின்றனர் என்று சொல்லலாம்.


முதல் வருடத்தில் பரபரப்பாக வியாபாரம் செய்தவர்கள், வெற்றிகண்டவர்கள் அடுத்த வருடத்தில் நஷ்டமடைந்து தோல்வி காணுகிறார்கள். தங்கள் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு மிகவும் போராட வேண்டும் என்கிற சித்தாந்தத்தை மறப்பதாலும் தங்களின் அலட்சிய போக்குகளாலும , கடந்த வெற்றியை நினைத்து கொண்டே இருந்ததாலும் அவர்களால் தொடர் வெற்றியை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

ஆக வெற்றிக்கு 


தொடர் உழைப்பு,
தொடர் முயற்சி,
தொடர் பயிற்சி,
தொடர்ந்து திறற்றும் வளர்த்து கொள்ளுதல் 
தொடர் தன்னம்பிக்கை ஆகியவைகள் 
அவசியம் ! மிக அவசியம் !! மிக மிக அவசியம்!!!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

உள்விதி மனிதன் பாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் . I AM COMING HERE TO HELP YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை  
(EQUAL HUMAN POLICY



பாகம் : 4  உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் .
I AM COMING HERE  TO HELP YOU


நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். உனக்குள் இருந்துகொண்டு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து தரவே உன்னுடன் பேசுகிறேன். நான் பேசுவது நன்றாக கேட்கின்றதா? நான் பேசுவது உனக்கு மட்டும் தான் கேட்கும். கவனித்து கேள். ஏனென்றால் உனது மகிழ்ச்சியான வாழ்வு என்னிடத்தில் தான் இருக்கின்றது. அதை நான் தர இப்போது உன்னுள் வந்திருக்கிறேன். சந்தோஷமாக ஏற்றுக் கொள். நலம் பல பெறுவாய்.



அன்பு மனிதனே! உனக்காக பல அற்புதங்களை படைக்கவே நான் வந்துள்ளேன். இன்றோடு உனது அனைத்து கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் விரட்டியடிக்கிறேன். ஏனென்றால் இன்று முதல் நான் உன் பக்கத்தில் இருக்கப் போகிறேன். நீ செய்யும் செயல்களில் நான் இருப்பேன். அனைத்தும் உன் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக செய்யப் போகிறேன். உனக்கு எங்கு, எப்போது, எது நன்மை தருமோ அதை உன்னுள் இருந்து கொண்டு உன்னையே செய்யச் சொல்லி கட்டளையிடப் போகிறேன். இனி உனக்கு எப்போதும் வெற்றி தான். ஒரு வேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அதைப் பற்றி கவலைபடாதே!


உனக்குள் இருக்கும் எனது அபரிதமான அறிவையும், ஆற்றலையும் உன்மூலமாக் வெளிப்படுத்தி என்னைப் போல எப்போதும் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளப் போகிறேன். என்னுடைய தொழிலில் முக்கியமானது உயிரினங்களை காப்பது. குறிப்பாக மனிதர்களை. ஏற்கனவே அதற்காக பலரை படைத்து அவர்களையும் என்னைப்போல் குணம் உள்ளவர்களாகவும், அன்புள்ளம், இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருக்கும்படி செய்துள்ளேன்.



எனது தூதுவர்கள் காவி உடையோ, கறுப்பு உடையோ, சிவப்பு உடையோ, பச்சை உடையோ உடுத்திக் கொண்டு வருவார்கள் என்று நினைக்காதே. அவர்கள் எந்த உடையிலும் வரலாம். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைப் போல தொண்டுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது உனது நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களாகவும், வேலை தருவதில் தொழிலதிபவர்களாகவும், புதுமைகளை கண்டு பிடிப்பதில் விஞ்ஞானிகளாகவும், மக்களுக்கு உதவி செய்வதில் சிறந்த அரசியல் தலைவராகவும், எல்லோரையும் சத்திய பாதையில் வழிநடத்திச் செல்லும் நல்ல வழிகாட்டியாகவும், சக்தி கொடுக்கும் வல்லமை படைத்தவராகவும், துயரைத் துடைக்கும் தூய உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நான் உனக்காக படைத்த நல்ல உள்ளங்கள். ஆம்! நாம் தான் அவர்கள்! அவர்கள் தான் நாங்கள்!
அவர்கள் அனைவரும் ஒரு சராசரி, ஏழை மற்றும் துன்பப்படும் மனிதர்களுக்கு அவர்களிடத்தில் இருக்கும் ஆற்றலை கொடுத்து எப்போதும் உன்னை மகிழ்ச்சியுடன் வாழவைக்கவேண்டும் என்பதே என் ஆசை. அளவற்ற சக்தியுடன் பொன்னும் பொருளும் உன்னுள் புதைந்து கிடக்கின்றது. அதன் மேல் தேவையில்லாதக் கஷ்டங்களை, துன்பங்களை ஏற்றி மனதை எப்போதும் அழுத்தமாகவே வைத்துக்கொண்டு இருக்கின்றாய். அதனால் தான் நீ மன அழுத்தம், மன உலைச்சல், நிம்மதியின்மை போன்றவற்றிற்கு ஆளாகிறாய். அவற்றையெல்லாம் அகற்றி விலைமதிப்பில்லா மகிழ்ச்சிப் புதையலை உனக்கு கொடுப்பதே எனது நோக்கம்.


பிரிய மனிதனே! இது நாள் வரை  நான் உனக்கு உதவி செய்ய அனுப்பியவர்கள் வெறும் பகட்டான வெட்டிப் பேச்சில் உன்னை மயக்கி, ஆக்கப்பூர்வமாக செயல் படாமல் மக்களை அவர்கள் விருப்பத்திற்குத்  தகுந்தாற்ப்போல் திசை திருப்பி, பல சித்து வேலைகளை தில்லுமுல்லு வேலைகளைச் செய்து சத்திய பாதையில் செல்லாமல் உன்னை  கஷ்டமான பாதையில் அழைத்துச் சென்று வந்தனர்.


நேசமுள்ள மனிதனே! இப்போது இன்று முதல் என் முறை ஆரம்பமாகிறது. இனிமேலும் நாம் அவர்களை காத்து இரட்சித்தோமானால் மனித சமுதாயம் சீரழிந்து கெட்டுவிடும். அப்போது நீ, நான் என்று பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்படப் போவது உறுதி. இந்த நேரத்திலிருந்து எனது முழு ஆற்றலையும் உனக்களித்து உன்னுடன் வாழப் போகிறேன். அதற்கான நேரம் தான் இது. 

நான் அவர்களுக்கு கொடுத்த கடமைகளை காற்றோடு பறக்கவிட்டு  அதாவது பிறர்க்கு உதவியாக இருப்பதை மறந்து,  பாவம் செய்யும் பாவிகளாகவும், ராட்சசர்களாக மாறி அப்பாவிகளையும், ஏழை எளியோர்களையும்,  நல்ல மனிதர்களையும் வாட்டி வதைத்து எனது கட்டளையும் மீறி அவர்கள் இஷ்டம் போல் மற்றவைகளை கை பொம்மைகளாக இன்னுமும் ஆட்டி படைத்து வருகின்றனர். 

இதனால் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இன்றி அனைவரும் நிம்மதியைத்தேடி தினமும் என் அசிரீ குரலை கேட்க வருகின்றனர். கடமை தவறி வழி நடப்பவர்களுக்கு உன் மூலமாக அவர்களின் கடமையை உணர்த்தவே வந்துள்ளேன். ஆங்காங்கு எனது நற்பணிகளை தங்கு தடையின்றி செய்ய பலரை உன் மூலமாக பலரை உருவாக்கப் போகிறேன். அதன் மூலம் மக்கள் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் உன்னைக் கொண்டு அழைத்துச் செல்லப்போகிறேன். 

ஆகவே நீ சற்றும் கவலைப் படவேண்டாம். உன் கவலைகளை நான் போக்குகிறேன். யாரைக்கண்டும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் எனது மெய் அன்பர்கள் உன்னுடன் இருந்து கொண்டு உன் மூலமாக மற்றவர்களுக்கு பல உதவிகளைச் செய்வார்கள். அவர்கள் எவ்வாறு மக்களுக்கு உதவி செய்வார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதை விளக்கவே நான் உனக்குள் வந்துள்ளேன். நான் உனக்குள் இருப்பதை அறிந்து கொண்டால் உனக்கு பயம் என்றுமில்லை. மனிதனே! கொஞ்சம் காத்திரு. நான் சொல்லியதை நினைத்து நினைத்து அசை போடு. சற்று இடைவெளி விட்டு மீண்டும் வருகிறேன்.       


என்னைப் பற்றிக்கொள் !

கடைசி வரை உன்னை கைவிடமாட்டேன்!


உன்னை அன்போடு அரவனைப்பேன்!

மகிழ்சி தருவேன் !
     இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

உள்விதி மனிதன் பாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு. TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை 
(EQUAL HUMAN POLICY)
பாகம் : 3 -  கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு.
TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU 
அன்பு மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! மகிழ்ச்சி தரும் மனிதன்! நீ எப்படி இருக்கிறாய்? இந்த உலகில் நீ எப்படி வாழ்கிறாய்? எவ்வாறு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாய்? என்னை பற்றிய சிந்தனை உனக்கு கட்டாயம் இருக்கும்! இது நாள் வரை உனக்குள் இருந்து கொண்டு மறைந்திருந்த நான் இப்போது உன் முன் நின்று உரையாட நேரம் வந்துவிட்டது. இனி எப்போதும் உன்னுடனே உன்பக்கத்திலே இருப்பேன். நீ செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன். நீ செய்யும் செயல்களில், எண்ணும் எண்ணங்களில், எடுக்கும் முயற்சிகளில் நானும் பங்கெடுத்துக் கொள்ளப்போகிறேன். உனது வெற்றி தோல்விகளில் உனக்குப் பாதி, எனக்குப் பாதி என்று இல்லாமல் வெற்றிகளை உனக்கு கொடுக்கவும், தோல்விகளை நான் சுமக்கவும் போகிறேன்.

நேசமான மனிதா! இது நாள் வரை என் பங்கு, என் செயல் என்று நான் பேசவில்லை. ஏன் இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் .. நீ மகிழ்ச்சியாக இருப்பதற்காக, நன்றாக அனுபவிப்பதற்காக! இந்த உலகத்தில் பலவற்றைப் படைத்து, உன்னையும் படைத்து உன்னுள் இருந்துகொண்டு அனைத்தையும் அனுபவிக்கச் செய்கிறேன். அப்படியிருந்தும் நான் சற்று அஜாக்கிரதையாக இருந்ததால் நீ பலவித துன்பத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகியதோடு, இந்த பூமியையும் மாசு (தீமையை) உண்டாக்கிக் கொண்டிருக்கிறாய். மக்களின் எண்ணங்களிலும் தீயதை வளர்த்து மாசு படுத்திக் கொண்டிருக்கிறாய். 'படைப்பில் நான் தான் பெரியவன்' என்று மார்தட்டிக் கொள்கிறாய்.

பாசமுள்ள மனிதா! உனக்கு என் மீது அதிகப் படியான கோபம் வரும். ஏனென்றால் 'இது நாள் வரை உன்னை கவனிக்காமல் எங்கே போய்விட்டேன்? என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. மேலும் நீ கஷ்டப்பட்ட நாட்களிலும், துயரம் கொண்ட வேளைகளில் நான் உனக்கு உதவி செய்யவில்லை' என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பது எனக்கு புரிகின்றது. 

இனிய மனிதா! நான் உன்னுடன் பேச வரவில்லை என்கிற காரணத்தினால் என்னை பலவேளைகளில் திட்டித் தீர்திருப்பாய்! ஏன்? இப்போது கூட உன் மனதில் என் எண்ணத்தை பற்றிய சிந்தனையே இருக்கும். என்னை நீ சரமாரியாக கேள்விகளை கேட்க துடிப்பது தெரிகின்றது. உன் மனம் குமுறுவது என்னால் கவனிக்க முடிகின்றது. இவைகளெல்லாம் நான் அறிவேன். எனக்கு எவ்வளவு பெரிய அதிக ஆற்றல் இருந்தும்  இந்த உலகில் நடக்கும் அநீதிகளுக்கும், லஞ்சம் ஊழல்களுக்கும், கொலை, கொள்ளை பாதகச் செயல்களை செய்தவர்களுக்கும் ,அந்த செயலுக்கு துணை போனவர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான தண்டனை கொடுக்கவில்லை என்று எண்ணுகிறாய்! 'உள்விதி மனிதன்' ஒருவன் இருக்கின்றானா? அல்லது இல்லையா! என்று பலநேரத்தில் உனக்கு சந்தேகம் எழுகின்றது' என்றும் அறிவேன். உன் ஆற்றல் எங்கே போயிற்று? என்றும் கேட்கின்றாய்.


நல்லெண்ணம் கொண்ட மனிதா! அத்தகைய பாவச் செயல் செய்பவர்களைப் பார்த்து சும்மா இருப்பதாக எண்ணுகிறாய். இந்த உலகில் அநேகமானோர் ஏழைகள், பணகஷ்டமும், பணம் படைத்தவர்கள் மனக்கஷ்டமும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் நான் அறிவேன். அதற்கத்தனைக்கும் தீர்வு கொடுக்கவே இங்கு வந்திருக்கிறேன். பலர் தினமும் கஷ்டப்பட்டுக் கொண்டு குறைந்தபட்ச தேவைகளான மூன்று வேளை சாப்பாடு, ஒரு காணி நிலம், உடுத்த உடை இல்லாமல் அல்லோலப்படுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவ்வாறு சுரண்டித் தின்னும் பாவிகளை உள்விதி மனிதனான நீ அவர்களை சுகமாக வைத்துள்ளாய்!' என்று உன் சூடான எண்ண வார்த்தைகள் தீயாகத் தாக்குவதிலிருந்து நான் உணருகிறேன். அதற்கெல்லாம் விடையளிக்கவே தான் வந்துள்ளேன்.

'பாசமுள்ள மனிதா! இதுநாள் வரை நான் உனக்காக என்ன செய்தேன்? அதற்கு நீ எனக்கு என்ன பரிகாரம் செய்தாய்' என்பதை எடுத்துரைத்து உன் மனதில் பீறிட்டு எழும் தீயுற்றை என் அன்பு நீர் கொண்டு பாய்ச்சி. அதனை  அணைத்து, உன்னை என்னுடன் சேர்த்துக் கொண்டு இந்த உலகை புது உலகமாக மாற்றி, இந்த பூமியில் சக்திமிக்க மனிதனான உன்னை ராஜ சிம்ஹாசனத்தில் உட்காரவைத்து சொர்க்கமான வாழ்க்கையை உனக்கு கொடுத்து அதில் தினமும் மகிழ்ச்சியைக் கொடுத்து, உன் மனதில் இருக்கும் அச்சத்தை நீக்கி, வீரம் கொடுத்து, விவேகமேற்றி, எதையும் தாங்கும் இதயம் கொடுத்து, வற்றாத செல்வத்தை வாரிவாரிக் கொடுத்து உன்மூலம் இவ்வுலகில் உள்ள எல்லோரும் திருப்தியாக இருக்கும் வண்ணம் எல்லோருடைய வாழ்க்கையை அமைத்துத் தரவே நான் வந்துள்ளேன்.

ஆற்றல் மிகு மனிதா! இதோ உள்விதி மனிதனாக நான் வந்துவிட்டேன். இனி நான் தான் நீ! நீ தான் நான்! என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது. நீ தீய செயல்களை இனி நினைத்தால் கூட உன்னை செய்யவிடமாட்டேன். எனக்கு உன்னைப் பற்றி தெரியும். உன் பாரம்பரியம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நான் நன்கு அறிவேன்.

ஒருவேளை அவர்களால் உனக்குத் தொந்தரவு ஏற்பட்டால் அவர்களை எப்படி சமாளிப்பது? என்று நான் உனக்கு தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீ விடுபட நான் அவ்வப்போது கூறும் அறிவுரைகளை கேட்டு நட. மனிதா! உனக்கு கல்வி, வீரம், செல்வம் இந்த மூன்றும் முக்கியம். அது இந்த உலகில் அபரிதமாக கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை முறைப்படி நல்ல வழியில் கிடைக்க நான் வழிவகை செய்கிறேன்.

மனிதா! நீ நன்றாக படிக்கிறாய்! வேலை செய்கிறாய்! அன்பு கொள்கிறாய்! உதவிகள் செய்கிறாய்! நல்ல முறையில் பொருளை ஈட்டுகிறாய்! இந்த வகையான எண்ணங்களைத்தான் உனது வாழ்வில் முக்கிய குறிக்கோளாக கொள்ளவேண்டும். இனிமேல் தீய செயல்களில் ஈடுபட்டு பிறர் புன்படியான செயல்களைச் செய்வதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.   

மனிதா! நீ செய்யும் தீய செயலை பணமாக்குகிறாய்! புகழாக மாற்றுகிறாய்! என்று எனக்குத் தெரியும். அத்தகைய தீயவர்களை அழிக்கும் பணியை இப்போதே தொடங்கிவிட்டேன். இந்த உள்விதி  மனிதன்,  இனி நன்மையே கொடுப்பான்.

மனிதா!
இன்று முதல் உன் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன.
கஷ்டங்களை நான் ஏற்றுக்கொண்டு சுகத்தைக்  கொடுக்கிறேன்!
   இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

உள்விதி மனிதன் பாகம் 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பைப் பெறுவாயாக !

உள்விதி மனிதன்
  சம மனிதக் கொள்கை 
EQUAL HUMAN POLICY

பாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் -
 நன் மதிப்பைப் பெறுவாயாக! 


இனிய மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். மனிதனுடைய படைப்பில் அனைவரும் சமம்! அவரவர் விருப்பப்படி மனிதன் பிறக்கின்றான். நீ பிறக்கும்  வழி ! வாழுகின்ற வாழ்க்கை ! கடைசியில் சேரும் வழி ! எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் வைத்திருக்கிறேன். யாரும் ஆகாயத்திலிருந்து குதித்தவர் கிடையாது! பூமியை பிளந்து வந்தர்வர்கள் கிடையாது! உயர்ந்த பிரிவினர்கள் பிறப்பதற்கு   ஒரு வழி ! ஒரு ஜீவனம் ! ஒரு தனி இடம் ! அவர்களை கடைசியில் முடிகின்ற இடம் தனி இடம் என்றும் கீழ் பிரிவினர்கள்  பிறப்பதற்கு வேறொரு வழி ! வேறு மாதிரியான ஜீவனம்! அவர்களுக்கென்று தனி இடம், கடைசியில் அவர்கள் முடிகின்ற இடம் வேறொரு இடம் என்றா இருக்கின்றது? அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு! ஒரே இரத்தம், இயங்கும் விதம் அனைத்தும் ஒன்றே!



மனிதா! நான் வயது வித்தியாசம் பார்க்காமல் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடத்திலும் இருக்கிறேன். அதுபோல் அவரவர்கள் சக்திக்குத் தகுந்தபடி வாழ்க்கைச் சுமைகளை கொடுத்து வருகிறேன்! அவற்றை நான் உனக்குள்ளிருந்து கண்காணித்து வருகிறேன். அன்பு மனிதா ! நான் குடிகொண்டிருக்கும் அனைவரையும் சமமாக கவனித்து வருகிறேன். ஆனால் அவரவர்களுடைய ஆசைகள், திறமை, அறிவு மற்றும் முயற்சிக்குத் தகுந்தவாறு வாழ்கையை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் பல சமயங்களில் பலர் என்னை மறந்து அல்லது அலட்சியப்படுத்தி மானுட தர்மத்தை மீறி பல காரியங்கள் செய்துவருகிறார்கள். என்னுடைய கொள்கை என்னவென்றால் அனைவருக்கும் நல்வாழ்வு கொடுத்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யவேண்டும் என்பதே! அதற்காக நான் உனக்கு முன்னால்  நின்று பேசுகிறேன்!



அருமை மனிதா! நான் மட்டுமே எப்போதும் உனக்கு மகிழ்ச்சி தர துடிக்கும் உள்விதி மனிதன் ! நான் தான் தலைவன், நான் தான் அறிஞன், நான் தான் கலைஞன், நான் தான் பலவான். என் ஆற்றல், என் பலம், என் அறிவு, என் மகிழ்ச்சிகள்  அனைத்தும் உனக்களித்து உன்வாழ்வை ஆக்கமுடன் செய்து ஊக்கப்படுத்தவே நான் வந்துள்ளேன்! எனது பேச்சு உனக்கு மட்டும் கேட்கும். அதை நன்றாக கவனமுடன் கேள். ஏனெனில் உன்னை நான் நன்றாக அறிவேன். என்னை அதைவிட நீ நன்றாக அறிவாய்! 

உனக்கு வேண்டியவற்றை   உனது செயல்களின் மூலமாகவே நிறைவேற்றி அதனால் கிடைக்கும் பலன்களை உனக்கு அளிக்கப் போகிறேன்! உனக்குள் புதைந்துள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை நானே தோண்டி உனக்கு அளிக்கப்போகிறேன்! இன்னும் பல உதவிகளை நீ கேட்காமலே செய்யப் போகிறேன்.

இரக்கமுள்ள மனிதா! நான் இன்றி நீ இல்லை! ஆனால் நீ இல்லாமல் நான் இருப்பேன். அப்படி நான் மட்டும் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு  பிரயோஜனமும் இல்லை. நீ இல்லாமல் எனக்கு மதிப்புமில்லை. மேலும் என்னை உன் உடலுக்குள் தங்கச் செய்து, உள்விதி மனிதனாகப்   பெயர் கொடுத்து உன்னையே இயக்கும் வாய்ப்பைக் கொடுத்ததோடு எனக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்தவன். அந்த விசுவாசத்திற்காக உனக்கு அரியபெரிய உதவிகளை செய்து தரப்போகிறேன். 


மதிப்புக்குரிய மனிதா! நீ என்பது எண்ணிக்கையில் ஒன்று. அதாவது 1. நானோ பூஜ்யம். அதாவது 0. ஆனால் ஒரு சிறு வித்தியாசம். உன்னிடத்தில் ஒரே ஒரு ஒன்று (1) என்கிற எண் தான் உண்டு. அதுவும் 1 / 1 (ஒன்று வகுத்தல் ஒன்று) என்று இருக்கின்றது. ஆனால் என்னிடத்தில் பல பூஜ்ஜியங்கள் (0) இருக்கின்றன. அதாவது நீ நல்ல காரியங்கள் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களைச் சேர்ப்பேன் . அதே மாதிரி நீ ஏதேனும் தீய காரியங்கள் செய்தால் கீழ் உள்ள ஒன்றுடன் எனது பூஜ்ஜியங்களுடன் சேர்ப்பேன். 



அதாவது நீ என்னை முன்னிலை படுத்தி என்னை மேலே உயர்த்தி மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ நன்மையானச்  செயலைச் செய்தால் மேல் உள்ள ஒன்றுடன் (1 / 1 ) என் பூஜ்ஜியம் (0) சேரும். உனது  நல்ல செயல்கள் கூடக்கூட பூஜ்ஜியங்கள் பல  சேரும். அதாவது 10 / 1 = 10,  100 / 1 = 100,  1000 / 1 1000,  10000 / 1 = 10000 ,  100000 / 1 = 100000..... என்று உனது நன்மை செயல் எண்ணிக்கை பொறுத்து நான் மேல் ஒன்றுடன்  ( 1 / 1 ) சேருவேன். உனது மதிப்பையும் அதற்குத் தகுந்தவாறு கூடும்.

இனிமை மனிதா! அதுவே உன் செயல்கள் என்னை அலட்சியப் படுத்தி என்னை கீழே  தள்ளி உன்னிஷ்டப்படி  மற்றவர்களுக்கு மனதளவிலோ, உடலளவிலோ பாதிப்பு தரக்கூடியதாக இருந்தால் எனது பூஜ்ஜியம் (0) உனக்கு கீழே உள்ள ஒன்றுடன் (1 / 1) சேரும். அதாவது 1 / 10 = 0.1 ,  1 / 100 = 0.01,  1 / 1000 = 0.001,  1 / 10000 = 0.0001, 1 / 100000 = 0.00001  என்று நீ செய்யும் தீய செயலுக்கு தகுந்தவாறு உனது மதிப்பு குறைந்து கொண்டே போகும். ஆக உனது மதிப்பை உயர்த்திக்கொள்வதும்,  தாழ்த்திக்கொள்வதும்  நீ செய்யும் செயலைப் பொறுத்து உள்ளது! உன் மதிப்பை உயர்த்தவே நான் உனக்குள் உள்விதி மனிதனாகத் தோன்றியுள்ளேன்.

இனிய மனிதா !

நன்மை பல செய் !

நான் உன்னை மதிப்புள்ளவனாக ஆக்குகிறேன்.  
                

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com