Pages

Wednesday, 3 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலைச் செய்- LEAVE YOUR BAD THINGS - ENSURE GOOD ACTIONS

உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 


பாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டுவிடு- 
காக்கும் செயலைச் செய்துவிடு-
LEAVE YOUR BAD THINGS - 
ENSURE GOOD ACTIONS TO ALL 



மேன்மையான மனிதா! இந்த உலகில் இதுவரை பல உருவங்களில் (கற்காலம் முதல் கணினி காலம் நீங்களாக) மனிதன் ஆண்டு வந்துகொண்டிருக்கின்றான். அப்படி ஆண்டு வந்தவர்கள் பெரும்பாலும் சுயநலக்காரர்களாக இருந்ததோடுமட்டுமில்லாமல் மக்களையும் அவ்வாறு இருக்கச் செய்திடும் அவலம் நடைபெற்று வருகின்றது. இனிமேல் அப்படி நடக்காமல் தடுக்க  நான் ஒரு முட்டுக்கட்டை போடுவதற்கு வந்துள்ளேன். அந்த அகம்பாவம் பிடித்தவர்களால் உலகில் உள்ள மனிதயினம் தினமும் செத்துச்செத்து பிழைக்கும் வாழ்கையை எதிர்கொண்டு அதை சமாளிக்க வழிதெரியாமல் இதுநாள் வரை மனதிற்குள் ஏங்கி தவித்துக் கொண்டுயிருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாததால் நான் இப்போது உன் முன் உள்விதி  மனிதனாக வந்துள்ளேன்.



பிரிய மனிதா! இந்த உலகம் என் கையில் இருப்பதால், மகிழ்ச்சி ஒன்றே மனிதனுக்கு கொடுக்கவேண்டும் என்கிற ஒரே  நோக்கத்தில்  அனைவருக்கும் பொதுவாகப் பலவிதமானப் படைப்புகளை படைத்து இருக்கிறேன். படைத்துக்கொண்டும் வருகின்றேன். உலக மக்களாகிய நீங்கள் எல்லோரும் சேர்ந்து சிந்தித்து படைத்ததை காட்டிலும் அதிகமாக  படைப்புகளை, விந்தையான படைப்புகளையல்லவா நான் படைத்து வருகிறேன். அதை உனக்கு இலவசமாகக் கொடுத்துள்ளேன். அதற்கெல்லாம் எனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறாய்? நீ படைக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விலை அல்லது மதிப்பு வைத்துள்ளாயே, நான் படைத்ததை மாதிரியாக வைத்தல்லவா நீ படைத்து புகழை பெறுகின்றாய்! நான் படைத்ததற்கு மதிப்பு உன்னால் போட முடியுமா? அல்லது அந்த மதிப்பை  உன்னால் சிறிதளவாவது எனக்குத் தரமுடியுமா!

பாசமுள்ள மனிதா! நான் கேட்பதெல்லாம், நான் படைத்த இந்த உலகை சீரும் சிறப்புமாய் கவனித்து, எல்லா மனிதர்களுக்கும்  நான்  படைத்ததை எல்லாம்   மகிழ்ச்சியாய் அனுபவிக்கச் செய்தாலே எனக்கு சந்தோஷம் . இந்த உலகம் செழிப்பதற்கு பல வழிகள்  நான் அருளிய போதிலும் அவைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு , புதிதாக ஏதோ சாதிக்க எண்ணி ஏதேதோ செய்ய ஆரம்பித்திருக்கின்றாய். அது உன்னை அழிவுக்கு வழிவகுக்கும் புதைகுழி!  நீ அந்த புதை குழியில் விழுந்துவிடாமல் உன்னை காப்பாற்றவே அவசரமாக உன்னை சந்திக்க வந்துள்ளேன். இதுநாள் வரை தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ பல தவறுகள் செய்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் உனக்கு நன்மைசெய்யும் விதமாக நான் உனக்குள் உள்விதி  மனிதனாக வந்துள்ளேன். போனது போகட்டும் விட்டுத் தள்ளு. வருவது நன்மையாக இருக்கும்படி நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமேல் உன்னைவிட்டு எப்போதும் பிரியமாட்டேன். உன்னுடனேயே இருந்து உன் நன்மைக்காக பாடுபட்டு உனக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சியை அள்ளித்தரப் போகிறேன். அதை நீ தினந்தோறும் பெற்று இன்பமயமாய் வாழ்ந்து அனுபவிப்பாயாக! மேலும்   மனிதகுலத்தை செழிக்க செய்வதற்கான அத்தனை உதவிகளையும் உனக்குள்ளிருந்து  உன் மூலம் செய்யப் போகிறேன். 


இரக்கமுள்ள மனிதா! இந்த உலகம் அழியாமல் இருப்பதற்கு உன் மூலம் பலசெயல்களை செய்ய ஆயுத்தமாகிவிட்டேன். நான் படைத்த அற்புத உலகை, மனித படைப்பை அவ்வளவு எளிதாக  அழிக்க விடமாட்டேன். எப்படியெல்லாம் உன்னை காக்கவேண்டும் என்று நான் நன்றாக திட்டமிட்டுள்ளேன். உலகம் இன்னும் எத்தனை கோடி வருடம் ஆனாலும் யாராலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க எண்ணியவர்கள் பலரையும்  ஏற்கனவே அழித்துவிட்டேன். இனி அப்படி அழிக்க எண்ணுபவர்களை சிலரே இருப்பதால் அவர்களையும்  எளிதாக உன்வாயிலாக அழித்துவிட்டு உன் பெருவாழ்வுக்கு வழிசெய்து உன்னுடனே காலத்தை கழிக்க வந்துள்ளேன்.

மதிப்புள்ள மனிதனே! நான் மனிதனை வேறுபாடு இல்லாமல் ஆண் , பெண் இனத்தை ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும்  நோக்கத்துடன் ஒரே மாதிரியாகவும், ஒரே சக்தி உடையவர்களாகவும் அல்லவா படைத்தேன். அதை மறந்து சில சுய நல பேராசைக்காரர்கள் பெண் இனத்தை அடிமை படுத்தியல்லவா வைத்திருந்தார்கள்? அவர்களை வளரவிடாமல் இத்தனை காலம் தட்டி தட்டியல்லவா பூட்டி வைத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களின் சுயநலமிக்க  எண்ணங்களை சாதித்துக் கொண்டிருந்தார்கள். இனி அது நடக்காது! அவர்களுக்கும் உரிமை இருக்கின்றது இந்த உலகத்தை அனுபவிக்க. அவர்களின் உதவி இல்லாமல் இனி யாரும் என் படைப்புகளை அனுபவிக்க முடியாது. அவர்களுக்குள் இருக்கும் அதிக சக்தியும், ஆற்றலையும், புத்தி கூர்மையும் இது நாள் வரை பயன்படுத்தாமல் இருந்துவந்தார்கள். இனிமேல் அவர்கள் பலவித செயல்களை  செய்து சாதனை படைப்பார்கள். அதற்கு நான் ஒத்துழைப்பதுபோல் நீயும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி செய்வதால் இந்த உலகம் அழியும் நிலையிலிருந்து விடுபடும். உனது வாழ்வும் சுபிட்ஷம் பெறும் . 



அன்பு மனிதனே! நீ எவ்வளவு பெரிய சுயநலக்காரன், நான் எவ்வளவு பெரிய இரக்கமுள்ளவன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! ஒரு கொசுவை கொன்றால் ஏன்  என்று கேட்பாரில்லை? ஒரு கரப்பான் பூச்சியை சாகடித்தால் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்! அது போல் ஆடு, மாடு, கோழி அப்படித்தானே! ஏனென்றால் ஐந்தறிவுக்கு கீழ் உள்ள ஜீவராசிகளை உன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அறிவையும், பலத்தையும் பெற்றுவிட்டாய். அதோடுமட்டுமில்லாமல் அவைகளை உன்னிஷ்டம் போல் ஆட்டிவைக்கவும் துணிந்துவிட்டாய். அதற்காகவா உனக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுத்தேன்.  அனைத்து ஆற்றல் , அறிவுள்ள நான் உன்னை ஆட்டிவைக்க எத்தனை வினாடிகள் பிடிக்கும்? அதை நான் விரும்பவில்லை! ஆட்டை கடித்து, மாட்டைகடித்து இப்போது என்னையல்லவா கடிக்க எண்ணுகிறாய்! நான் நினைத்தால் நீ தவறு செய்யும் ஒவ்வொரு தடவையும் உன்னை தண்டிக்க முடியும். அப்படிச் செய்தால் நான் கட்டாயம் கொடுங்கோலனாக இருப்பேன். அப்படி பழி வாங்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை. உன்னை உன் வாழ்நாளில் திருத்தி அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் மனிதனாக மாற்றி என்னைப் போன்று உன்னை உருவாக்கவே வந்துள்ளேன். அதற்காக உன் வாழ்நாள் முழுவதிலும் நீ திருந்துவதற்கு பல வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றேன். அதை உதாசீனப்படுத்துவதோடு நீ திருந்த மறுக்கின்றாய்.  நீ திருந்தாமல் மேலும் மேலும் தவறு செய்வதை தடுக்கவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்து உன்னை திருத்தி நல்வழியில் அழைத்துச் செல்லவே இப்போது உன் முன்னே நின்று பேசுகிறேன்.

இனிய மனிதா! விலைபெறாத ஒரு பிச்சைக்காரன் இறந்துவிட்டால் யாரும் கேட்பாரில்லை. ஆனால் ஒரு தலைவன் இறந்துவிட்டால் ஆ...ஊ...என்று வருத்தப்படுகிறாய்! அலட்டிக்கொல்கிறாய்! ஏன்  இந்த பாகுபாடு? சந்தனக்கட்டையில் எரித்தால் சொர்க்கத்திற்கும், மண்ணில் புதைத்தால் நரகத்திற்குமா செல்கிறார்கள்! பகட்டினால், பாசம் போல் வேஷம் போட்டு, ஆடம்பரமாக டாம்...தூம் ....என்று இறப்பதை கொண்டாடினாலும் நான் அனைவரையும் ஒன்றாகவே ஆட்கொள்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்பு மனிதா! ஒரு மனிதன் ஒரு மனிதனை கொலை செய்தால் அவனை சிறையில் தள்ளி சித்திரவதை செய்கிறாய். ஏன்? தூக்கில் கூட போடுகிறாய்! ஆனால் நாடுகளுக்கிடையே நிகழும் போரில் லட்சகணக்கான மக்களை சாகடிக்கும் போது யார் யாரை தண்டிக்கிறார்கள்! இந்த மாதிரி என் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் செயல் இனி நடக்காது! ஏனென்றால் அதில் கெட்ட மனிதர்களோடு நல்லவர்களுமல்லவா சாகின்றனர்! அது போல் இனி நடக்காமல் தடுப்பது எனது குறிக்கோளாகும்.



பிரிய மனிதா! இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு 'நான் என்ன செய்தேன் 'என்று நீ கேட்க விரும்புவது எனக்குத் தெரிகின்றது. ஆனால் நான் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தேன் என்று தப்புக்கணக்கு போடுகிறாய்! அதாவது ஒரு மனிதன் சிறிய தவறு செய்யும்போது தண்டித்தால் நான் கருணைக்கடலாக இருக்கமுடியாது. அவன் தனது தவறுகளை உணர்ந்து திருந்தமாட்டானா என்கிற நப்பாசையால் அவனுக்கு நான் உடனடியாக தண்டனையைக் கொடுக்க விரும்பவில்லை. தவறு செய்வது அவன்  புதைகுழியில் விழுவதற்குச் சமம். மேலும் மேலும் தவறு செய்யும்போது அதல பாதாளத்தில் போய்விடுவதால் அவனைக் காப்பாற்ற யாருமில்லாமல் அவனே அழிந்துபோகின்றான். 

பாசமுள்ள மனிதா! நான் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு காத்தல் தொழிலை உன்னிடம் ஒப்படைத்தது உன்னை என்னைப்போல் மேன்மையான நிலைக்கு உயர்த்துவதுதான் என்னுடைய  நோக்கமாகும். அதைவிட்டு விட்டு 'காத்து ரட்சிக்கிறேன் ' என்பது போல் பாவனை செய்து அவர்களை பலவழிகளில் கொடுமைபடுத்தி, வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கிக் கொண்டு வருவதை இன்றோடு முடிவுக்கு கொண்டுவர எண்ணியுள்ளேன். 


இனிமையான மனிதா! இன்று முதல் இந்த இலட்சியம் கொள். நீ வந்திருப்பது உனது பேராசையை நிறைவேற்ற அல்ல. என் படைப்புகளை காத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் பயணிக்கவே வந்துள்ளாய் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு நான் உனக்கு தந்த அடிப்படை தேவைகளை கொடுத்து உதவு! அதைவிட உனக்கு வேறு வேலை இல்லை. இப்போதே வீண் காரியங்களில் ஈடுபடாமல் மக்களை இரட்சிக்க உடனே புறப்படு. நானும் வருகிறேன்! இல்லையேல் அது போன்றவர்களை நானே அழித்து  என் சக்தியை காட்டி அதை  நிருபிக்க வேண்டியிருக்கும்.

மனிதா அழிவு எண்ணத்தை விட்டுவிடு!


காக்கும் எண்ணத்தை வளர்த்துவிடு!

என் கடமையில் நீ பங்கு கொண்டு 
அனைவருக்கும் மகிழ்ச்சியை  தந்துவிடு!     

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

அக்கரை பச்சை - கடலா - கானல் நீரா- LOOKING OTHER BANK OF THE RIVER GREENER IS A MIRAGE

அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

அக்கரை பச்சை - கடலா - கானல் நீரா-
LOOKING OTHER BANK OF THE RIVER GREENER 
IS A MIRAGE 


மனிதனின் வாழ்கையில் நடைபெறும் நிகழ்சிகள் யாவற்றில்  பலவும் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டு நடைபெறுவதைக் காட்டிலும் , விபத்தில் நடைபெறும் நிகழ்சிகளே அதிகம். அதாவது எதிர்பாராத சம்பவங்களே நிறைந்து இருக்கும். அதனால் நிராசைகள் (நிறைவேறாத ஆசைகள்) எப்போதும் மனதில் இருக்கும். காரணம் , பலர் சுயமாக சிந்திக்கும் மனோபாவம் இல்லாமையும், குறிகோளற்ற வாழ்க்கை வாழ்வதாலும் தான்.


மனிதனின் மனம் எப்படி இருக்கின்றதென்றால் ஒரு ஆசை நிறைவேறிவிட்டால் மற்றொன்றை அடைய தயார் செய்துகொள்ளும். அது அடையாவிட்டாலும் அதைபற்றிய சிந்தனைகளை சிந்திக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக மோட்டார் வாகனம் வாங்க ஆசையுள்ளவன் கஷ்டப்பட்டு அதை வாங்கிவிட்ட உடனேயே கார் வாங்க ஆசைப்பட ஆரம்பிப்பான். மேலும் காரைபற்றிய கனவு, காரை பார்க்கும்போதெல்லாம் வரும். தனது ஆசை நிறைவேறாமல் போனாலும் அதைபற்றிய கனவு காணுவதில் அவனுக்கு அலாதியான இன்பம் கிடைகிறது என்றே சொல்லலாம்.

உடுத்தும் உடையிலும் சரி,  அணியும் அணிகலன்களிலும் சரி, உபயோகிக்கும் பொருட்களிலும் சரி, கட்டிய வீடும் சரி, வாழும் வாழ்க்கையிலும் சரி இருப்பதில் திருப்தி அடையாமல், இல்லாதவற்றிக்கும், மற்றவர்களிடம் இருக்கும் , உபயோகப்படுத்தும் பொருட்களில் அதிக ஆசை இருக்கும். அதாவது தான் இருக்கும் இடத்தின் செழுமையான பச்சை பசுமையினால் திருப்தி அடையாமல் தூரத்தில் இருக்கும் பச்சையினை பற்றியே மனம் ஏங்கும்.


அது தூரத்தில் இருக்கும் மலைக்கு அல்லது கானல் நீருக்கு சமம் என்றே கொள்ளலாம். அதாவது தூரத்தில் இருக்கும் மலையானது நமக்கு  மிருதுவாகவும், வள வளப்பாகவும் தெரியும். ஆனால் அதை நெருங்க நெருங்கத்தான் செழுமையான பச்சை பசுமைக்கிடையில் அங்கே இருக்கும் கரடுமுரடான கற்களும், முட்களும் தென்படும் அல்லது இருப்பதை கவனிக்க முடியும். அதில் இருக்கும் ஆபத்தும் அப்போது தான் தெரியும்.

அதுபோலத்தான் கானல் நீர். பாலைவனத்தில் அதிக வெயில் இருக்குமென்பது எலோருக்கும் தெரியும். அனால் அந்த வெப்பமே சில சமயங்களில் நீர் இருப்பது போல் ஒரு தோற்றத்தைக்கொடுக்கும். ஆனால் நிஜத்தில் அங்கு  நீர் இருக்காது.  அதுபோலத்தான் அக்கரையில் தெரியும் பச்சை.

அதாவது மனிதனின் மனம், மற்றவர்கள் வாழும் வாழ்க்கையில்  தான் அதிக மகிழ்ச்சி உள்ளதாகவும் , தாங்கள் வாழும் தற்போதைய வாழ்க்கை கஷ்டங்கள் உள்ளதாகவும் நினைக்கும்.


மனிதனின் மனம் தூக்கத்தில் தவிர மற்ற நேரத்தில் மாறி மாறி அல்லது அங்கே இங்கே என்று தாவும் குணம் கொண்டது. அதுவும் மற்றவற்றில் அல்லது மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் அதிக அக்கறை கொண்டது. அதற்கு காரணம் ஆசை வார்த்தைகள், ஆடம்பரமான வாழ்க்கை, பகட்டான வேஷம் போன்றவை அந்த கரைக்கு தாவ ஆசைபடும். ஆனால் அதில் எவ்வளவு  தூரம் போலியும் , ஆபத்தும் இருப்பதை அதை அனுபவிக்கும்போது தான் தெரியும். அடைந்துவிட்ட  மனம் இந்த பச்சையை விட (இந்த புதிய வாழ்கையை விட) பழைய அல்லது இதற்குமுன் இருந்த பச்சையே  மேல் என்று உணரும். அதுதான் பட்டு தெரியும் அனுபவம் என கொள்ளலாம்.


ஆகவே நாம் அக்கரையில் தான் பச்சை என்கிற நினைப்பை அகற்றுவோம். அக்கறை இருந்தால் எக்கரையும் பச்சை என்று இதன் மூலம் உங்களுக்கு நன்கு விளங்கும்.

அக்கரை பச்சை என்பது வாழ்கையில் எப்போதும் அக்கறை இல்லாதவர்களுக்கு!


எக்கரையும் பச்சை என்பது வாழ்கையில் என்றும் அக்கறை உள்ளவர்களுக்கு!   

    இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

Tuesday, 2 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 8 படைத்தல், காத்தல், அழித்தல் உன்னிடம்- BIRTH, LIFE DEATH ARE WITHIN YOURS


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 



பாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல்
         இனி உன்னிடம்-
BIRTH, SAFE LIFE AND DEATH 
ARE ALL WITHIN  YOURS


மேன்மையான மனிதா! இது நாள் வரை என்னை அறியாமல் இருந்தாய்! நான்  உனக்குள்    இருந்து    கொண்டு     உனக்காக     எவ்வளவு       நல்ல காரியங்களை செய்துகொண்டு இருக்கிறேன் என்பது இப்போது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

பிரியமான மனிதா! இது நாள் வரை நீ பட்ட கஷ்டங்கள், சந்தித்த ஏமாற்றங்கள், அடைந்த தோல்விகள், எல்லாமே எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ படும் துயரம் அதிகபட்சம் 5% தான். ஆனால் நான் அடையும் துன்பம் 95% என்பதை நான் உனக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உன்னுடன் சேர்ந்து நானும் உன்னுடைய இன்ப துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இனிமேல் நான் எதிர்கொண்டு உனது துன்பத்தை சுத்தமாக நீக்கி, உனக்கு பெருவாழ்வு கொடுக்கவேண்டுமென்று நான் துடிக்கிறேன். எப்படியும் நீ என்னுடனான கோபத்தைப் போக்கி உன்னை சமாதானம் செய்து உனக்குள் இருக்கும் எனது சக்தியை கொண்டு உனக்கு  புதுவாழ்வு கொடுத்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல நான் கடமைபட்டிருக்கிறேன்.



என்னால் உன்னுடைய துன்பங்களை இன்பங்களாக மாற்ற முடியும். இன்பங்களை பேரின்பங்களாக மாற்றமுடியும். என்னிடம் இருக்கும் எல்லாமே உனக்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்.



இரக்கமுள்ள மனிதா! இந்த உலகில் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் இந்த மூன்றும் என்னுடைய செயல்படி தான் நடக்கின்றது. அதையெல்லாம் என் ஒருவனால் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் உன்னைப் படைத்திருக்கிறேன்.

படைத்தல் - தானாகப் படைக்க முடியாது. ஒவ்வொரு அறிவுள்ள உயிரினத்திற்கும் ஒவ்வொரு மாதிரி சூழ்நிலைக்குத் தக்கவாறு அதனுடைய ஆற்றலைப் பொறுத்து சக்தியை கொடுத்திருக்கிறேன். சில உயிரினங்கள் வேகமாக உருவாகும், அதன்படி வேகமாகவும் அழியும். அதேபோல் சில உயிரினங்களுக்கு அதிகப்படியான எண்ணிக்கைகளை உருவாக்கும் தன்மையைத் தந்திருக்கிறேன். ஆனால் எல்லா உயினங்களை விட மனிதனுக்கு நான் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம், மனிதன் ஒருவனால் மட்டுமே அனைவரையும் என்னைப்போல் காக்கும் திறமை பெற்றவன். அதனால் அவனுக்குள் நுழைந்து உள்விதி மனிதனாக இருந்து உனது எண்ணங்களை நல்லவிதத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். 



மதிப்புமிக்க மனிதா! நான் படைக்கும் போது எல்லோருடைய பொது நலன் கருதி உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தரும் பொருட்டும், எனது ஆசை நிறைவேறும் பொருட்டும் உன்னை நல்ல ஆரோக்கியமான, இனிமை நிறைவுடன் இருக்கின்ற ஜீவனையே நான் எப்போதும் படைக்க விரும்புகிறேன். எல்லாப் படைப்புக்குக் காரணம் நானாக இருந்தும், காரியம் அல்லது செயல் நடைபெறும் போது சிலர் நல்ல எண்ணங்களில் முரண்பட்டு அவர்களின் விருப்பபடி தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் மனதில்கொண்டும், பேராசை கொண்டும் வலுவில்லாமல் விதையை விதைக்கிறார்கள் அல்லது பிறப்பிற்கு வித்திடுகிறார்கள். அதனால் தான் மனிதனுடைய எல்லாப்பிறப்பும் சமமாக இல்லாமல், யார் ஒருவர்  அதிக மகிழ்ச்சி கொண்டு என்னிடத்தில் அன்பாக, நம்பிக்கையாக பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கு உயர்வான மதிப்பான பிறப்பும், என்னை அலட்சியபடுத்தி அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட படைப்பில்  சற்று குறைந்த மதிப்பான பிறப்பும் தந்துகொண்டிருக்கிறேன். 

பாசமுள்ள மனிதா! பிறப்பில் அனைவருக்கும் ஒரேமாதிரியாகவே படைக்கிறேன். எப்போதும் பிறந்த குழந்தை ஓடியது கிடையாது. பேசியது கிடையாது. அதேபோல் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி! அந்தந்த வயதிற்குத் தகுந்தாற்போல் அவர்களுக்குத் திறமை மற்றும் ஆற்றலுக்கேற்ற சுமையே தருகிறேன். தாடி, மீசையுடனோ, நீண்ட கூந்தலுடனோ நான் படைத்தது கிடையாது. ஏனென்றால் எனது பிறப்புச் செயலில் அனைவரும் ஒன்றே! அவர்களை நீ நன்கு கவனிக்கும் மற்றும் வழிகாட்டுதல பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகின்றது. அதோடு நான் சொல்லும் நல்ல செயலைத் தட்டாமல் செய்வதே நன்மை தரும். 

நட்புள்ளம் கொண்ட மனிதா! அந்த சிறு சிசுவிடத்திலும் நான் தான் இருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்குள்ள தேவைகள் அழுவதன் மூலமாகத் தான் உன்னிடத்தில் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். சிறிய குழந்தையாய் இருக்கும்போது எனது மகிழ்ச்சியை காண்பிக்க கை, கால்களை அசைத்துச் சிரிக்கிறேன். நீ அக்கறை காட்டும் பொறுத்து நான் அறிவும், ஆற்றலும், மகிழ்ச்சியும் தந்து கொண்டிருக்கின்றேன். ஆரம்பத்திலிருந்து அன்பையும், நேசத்தையும், பாசத்தையும், சத்தியத்தையும் ஊட்டி வளர்க்கும்போது நிச்சயம் அந்த படைப்பும், வாழ்கையும் மகிழ்ச்சியுடன் இருக்கும் என்பதை நீ எப்போதும் நினைவில் கொண்டு செயல்பாடு.

காத்தல் - இந்த உலகில் ஏற்கனவே வாழ்பவர்களுக்கும், இப்போது  பிறக்கும் மனிதனுக்கும்,  இனிமேல் பிறக்கும் மனிதனுக்கும் மற்றும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் அவரவர்களுக்கு தேவையான பங்கான ஆரோக்கியமான வாழ்வு, உடல்நிலை, சத்தான உணவு, மதிப்புள்ள உடை, மகிழ்ச்சி தரும் சூழ்நிலைகளை அனைவருக்கும் சமமாக, பொதுவாக தந்திருக்கிறேன். அப்படி நான் கொடுத்தும் நீ விழிப்புடன் இல்லாததாலும், என் பேச்சை கேட்காததாலும், எனக்குள்ள சக்திக்கு மதிப்புதராமல் என் உதவிகளை நிராகரித்து உன்னுடைய தீய செயல்களில் ஈடுபட்டதினாலும், உனது கடமைகளை உதறித்தள்ளி , கேளிக்கை கூத்து மற்றும் சுயநலம் கருதி பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டதினாலும் உன்னை நல்லபடியாக காக்கும் எனது பங்கு தானாகவே குறைந்து அதுவே உனக்கு துயரமாக மாறியிருப்பதை நீ உணர்ந்து கொள். 



இனிய மனிதா! நல்லவைகளுக்குப் புறம்பான செயல்களை நான் ஒத்துழைக்காததால், எனது நல்ல எண்ணங்களும் மற்றும் செயல்களை உனக்காக செய்ய நீ அனுமதிக்காததாலும், நீயாக ஆணவம் கொண்டு ஒரு முடிவை எடுத்து உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் எனது உதவியில்லாமல், எனது ஆதரவில்லாமல் அவர்களை காப்பாற்ற முடியும் என்கிற ஆணவத்தினால் நீ தினமும் திண்டாடிக்கொண்டும் திணறிக் கொண்டும் இருக்கிறாய் என்பதை என் மனக்கண்ணால் பார்க்கிறேன்.

அன்பு மனிதா! அழித்தல் - முன்பு அழித்தல் என்பது இல்லாமல் அழிதல்- அதாவது தானாகவே வயதாகி ஆற்றல் இழந்து அழிவு இருந்தது. பிறகு நாளடைவில் சுய லாபம், பேராசை மற்றும் அற்ப சந்தோசத்திற்காக உனது சந்தோஷத்தை மட்டுமே மனதில் கொண்டு பலரை கொஞ்சம் கொஞ்சமாக பலவழிகளில் அழிக்கத் துணிந்துவருவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இன்றைய காலகட்டத்தில் அழிவு தானாக வருவது மிகவும் குறைந்து வருகின்றது. மற்றவர்களை அழிக்கும் சட்டத்தை உன் கையில் எடுத்துக்கொண்டு எனது மனசாட்சிக்கு துரோகம் செய்துகொண்டு வருவதை இனி மேலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அந்த அழிக்கும் தீய சக்திகள் சிலவேளைகளில் சில நல்ல ஜீவன்களை சாகடிக்கத் துணிவதை இனிமேல் நடக்காது 



பிரிய மனிதா! ஒரு தனிப்பட்ட மனிதன் தவறு செய்தால் ஒரு ஜீவன் தான் பாதிக்கும். ஒரு குடும்பத்தலைவன் தவறு செய்ததால் அந்த குடும்பமே பாதிப்படையும். ஒரு நாட்டின் தலைவன் தவறு செய்தால் அந்த நாட்டு மக்கள் எல்லோருக்குமே அந்த பாதிப்பு இருக்கும். அதுபோல உலக வல்லரசு நாடுகளின் தவறுக்கு இந்த உலக மக்கள் எல்லோருமே பாதிப்படைவர். இது தான் எனது சட்டம். தர்மமும் கூட. அப்படி தண்டனை வரும்போது நல்ல ஜீவன் எது, தீய ஜீவன் எது என்று வேறுபடுத்தி தண்டனை வழங்க முடியாமல் பல நல்ல ஜீவன்களையும் அழிகின்ற நிலைமை இனி வராது. இனி அழிதல் எனது விருப்பபடி உனது நல்லெண்ணங்களின் படி நடக்கும். அதற்குத் தான் நான் இப்போது உன் முன்னாள் வந்திருக்கிறேன்.  

மென்மையான மனிதா!


மகிழ்ச்சியுடன் படைக்க பாடுபடு!

அனைவரையும் காக்க உறுதி கொள் !

அழிவில்லா பெருவாழ்வுக்கு நான் உதவுகிறேன்!       


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

Monday, 1 October 2012

சகிப்புத்தன்மை ஒரு பெரிய வரப்பிரசாதம் PATIENCE IS A GIFT TO YOU

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

சகிப்புத்தன்மை ஒரு பெரிய வரப்பிரசாதம் 
PATIENCE IS A GIFT TO YOU 


உங்களுக்கு சகிப்புத்தன்மை இருக்கின்றதா? இல்லையா? இருந்தால் நீங்கள் ஒரு அதிஷ்டசாலி. இல்லாவிட்டால் நீங்கள் இப்போதிலிருந்து  அதை கடைபிடியுங்கள். 

எந்த ஒரு காரியமும் கை கூடுவதற்கு சரியான காலமும், நேரமும் வரவேண்டும். அவைகள் வரும் வரை நாம் அவசரப்படாமல் சகித்துத் கொள்ளவேண்டும். சகிப்புத்தன்மை இல்லாமல் போவதற்கு காரணம் என்னவென்றால் நம்மை சூழ்ந்துள்ள சூழ்நிலைகளும் , சுற்றியிருக்கும் மனிதர்களும் நமக்கு உதவி செய்வதற்கு சாதகமாக இல்லை என்றாலோ, நம் கருத்தை  மற்றவர்கள் ஏற்கவில்லை என்றாலோ நமக்கு ஆவேசமும், அகங்காரமும் , எரிச்சலும், கோபமும், பழிவாங்கும் எண்ணமும் வருகின்றன. இதன் காரணமாக நம் கருத்தை ஏற்காதவர்களை வெறுக்கும் மனப்பான்மைக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. அது நமக்கு மிகப்பெரிய ஆபத்த்தில் முடிகின்றது என்பதை  உணராமல் இருந்து வருகிறோம்.


நாளடைவில் அவர்கள் எதிரிகளாக மாறி அவர்களின் கருத்துகளை கேட்காதராகவும், அவர்களின் உணர்சசிகளை மதிக்காதவர்களாகவும், சுதந்திரமான  ஆரோக்கியமான உணர்வுகளை ஏற்றுக் கொள்ளதவர் களாகவும் இருக்கச்செய்கிறது. இவற்றை போக்கவேண்டுமென்றால் நமக்குத் தேவை சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மை நம்மை மறைமுகமாக பலசாலியாக்குகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் நன்றாக யோசித்தோ, ஆலோசித்தோ எதிர்கொண்டு சமாளிக்கிக்க உதவுகின்றது. அதற்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் சேமித்து வைக்க உதவுகின்றது. சகிப்புத்தன்மை இருப்பவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள் பலத்துடன் பாய்வதற்குத் தான் பின்னால் நகர்கிறார்கள். எதையும் சாதிக்கும் துணிவுகொண்டவர்கள். தங்களுடைய உணர்வுகளை கட்டுபடுத்தும் திறமை கொண்டவர்கள். 

சகிப்புத்தன்மை உள்ளவர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்கும் மனஉறுதி கொண்டவர்கள். அவர்கள் தங்களுடைய ஆற்றலையும், அறிவையும் காலம், நேரம் பார்த்து மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு அனைத்து தடைகளையும் மீறி தாங்கள் நினைத்தபடி  வெற்றிகளைக்  குவிக்கும் சாதனையாளர்கள். சகிப்புத்தன்மைக்கு மனக்கட்டுப்பாடு, உணர்வு கட்டுப்பாடு மிக மிக அவசியம். அதை நீங்கள் தியானம் மற்றும் யோகா மூலமும், மன பயிற்சி மூலமாகவும் கண்டிப்பாக பெறமுடியும். மேலும் எதுவும் என்னால் செய்துமுடிக்க முடியும் என்று உங்களை நீங்கள் நம்புங்கள்.

சகிப்புத்தன்மை கொள்வோம்!


உணர்வுகளை கட்டுப்படுத்துவோம்!  

நினைக்கின்ற காரியத்தை சரியானபடி முடிப்போம்!


வெற்றிகள் பல அடைவோம்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

Friday, 28 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் - I AM A POWER MACHINE WITHIN YOU

உள்விதி மனிதன் 
  சம மனித கொள்கை 


பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் 
I AM A POWER MACHINE WITHIN YOU


மேன்மை மனிதா ! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்குள் இருக்கும் எனக்கு என்ன வேலை என்று சொல்கிறேன் கேள்! 

அன்பு மனிதா! உனக்குள் பல சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது கல்வி இயந்திரம், செல்வ சக்தி இயந்திரம், ஞாபக சக்தி இயந்திரம், ஆக்க சக்தி இயந்திரம் , அறிவு சக்தி இயந்திரம், இச்சை சக்தி இயந்திரம், அழிவு சக்தி இயந்திரம், ஆற்றல் சக்தி இயந்திரம், பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பலம் போன்ற சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டுயிருக்கின்றன. அவற்றில் நீ எது விருப்பப்படுகின்றாயோ அதை என்னிடம் சொன்னால் அதை இயக்கி அதன் சக்தியை உனக்கு கொடுப்பது தான் எனது வேலை. அதாவது நீ நினைக்கும் எண்ணங்கள் பலமானதாக இருந்தால் ஆற்றல் மிக்கதாக  நம்பிக்கையுள்ளதாக இருந்தால் அதற்கு ஆற்றல் கொடுத்து செயல் வடிவம் கொடுப்பேன்.


மென்மையான மனிதா! நீ நல்லது நினைக்கும் ஒவ்வொரு செயலையும் அதற்குரிய சக்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்து உன்னை பலவழிகளில் வளர்ச்சியைக் கொடுத்து உன்னை  முன்னோக்கி செல்ல உதவிடுவேன். உனது வாழ்வு எப்போதும் மலரும்.

அதேநேரத்தில் ஏதாவது தீய செயல்களை என்னைச் செய்யத் தூண்டினால் அதை செய்யவிடமாட்டேன். மேலும் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன். அதை நீயாகத் தான் இயக்கவேண்டும். அந்த இயக்கம் பின்னோக்கி இருப்பதோடு அது உன்னை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும். ஆகையால் எக்காரணம் கொண்டும் எனது அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய எண்ணாதே! அது உனக்கு ஆபத்தைக்  கொடுக்கும்.

இனிய மனிதா! பல மனிதர்களை உனது வாழ்க்கையில் சந்தித்திருப்பாய். அதில் மிகமிகச் சிலரே உனது வாழ்க்கையில் அக்கறை கொண்டிருப்பார்கள். பலர் உன்னை துரோகம் செய்ய எண்ணுவார்கள். 'அதை எப்படி நான் தெரிந்து கொள்வது?' என்று என்னிடத்தில் கேட்பது தெரிகின்றது.


அதாவது யார் ஒருவர் உனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் சந்தோஷமாக தொடர்ந்து கொடுக்கிறார்களோ அவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களே உனது குரு. அவர்களே உனது தெய்வம். அவர்களே உனது நண்பர்கள். அவர்களே வழிகாட்டிகள். அவர்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.

மேன்மையான மனிதா! உன் வயதிற்கேற்ப அறிவையும் ஆற்றலையும் கொடுத்து வருகிறேன். அதாவது சிறு வயதில் அறிவு குறைந்தும், ஆற்றல் அதிகமாகவும், வயது ஏற ஏற அறிவு பெருக்கி ஆற்றலையும் பெருக்குகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதில் இரண்டும் சமமாகவும், பிறகு அறிவு அதிகரித்து ஆற்றல் குறைத்தும் , முடிவில் இரண்டும் மிக மிகக்  குறைத்தும் (ஒரு குழந்தையைப் போல) செய்து இருக்கிறேன். 


அதாவது இந்த உலகம் புதுப்புது மனிதர்களால் புதுப்புது விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு தான் உனக்கு புதுப்புது வடிவத்தை, எண்ணங்களை  நான் உனக்கு அளித்துவருகிறேன். உன்னிடத்தில் பல புதுமைகளை உருவாக்கும் சக்தியை அளித்துவருகிறேன். அதை வைத்துக்கொண்டு இந்த பூமியை புதுமையாக்கி இனிமையான முறையில் மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும். ஆனால் அதில் எள்ளளவும் கெடுதல் அல்லது தீயவை இருக்ககூடாது என்பதே எனது இலட்சியம். 

இரக்கமுள்ள மனிதா! உனது அறிவு மற்றும் ஆற்றல் இயந்திரம் கொண்டு பல ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தினால் நீ வெற்றி பல காண்பாய். அன்றி அதை அழிவுப்பாதையில் இயக்கினால் நீ அழிந்து போவாய்!

மதிப்புமிக்க மனிதா! எல்லோரிடத்திலும் நான் அறிவும் ஆற்றலும் கொடுத்திருக்கிறேன். நான் தீமை செய்பவர்களுக்கு எதிரியாகவும், நன்மை செயபவர்களுக்கு நான் நண்பனாகவும் இருந்து வருகிறேன். ஆக என் பேச்சைக் கேட்காமல் என்னை மதியாமல் தீய செயல்களை செய்தால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். நான் நன்மை செய்பவர்களுக்கு 1000 கைகளைத் தந்து உதவி செய்தும், தீமையின்போது முடமாகத் தடுத்தும் வருகிறேன்.

தீமையை நினைகாதே , தீமையை செய்யாதே! நான் உனக்கு நன்மையே நினைக்கச் செய்கிறேன். நன்மையே செய்யச்சொல்கிறேன். என் பின் நீ வந்தால் உன் பின் 1000 பேர்கள் வருவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்.

இனிமை மனிதா! நீ என்னிடத்தில் காட்டும் உண்மையான விசுவாசத்தைப் பொறுத்தும், நல்ல எண்ணங்களை பொறுத்தும் உன் பக்கத்திலே இருப்பேன்.

உன் நல்ல செயல்களை ஊருக்குச் சொல்லலாம்!

ஆனால் தீய செயல்களைச் சொல்லமுடியுமா?           
 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

உங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSIGN YOUR VALUE

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்-
WHO CAN ASSIGN YOUR VALUE



ஒருவரின் மதிப்பு அல்லது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் பதில் மெதுவாக வரும் அல்லது வரவே வராது ! உதாரணமாக இந்த மேஜையின் மதிப்பு என்ன? மௌனம் ! இந்த மோதிரத்தின் மதிப்பு! மௌனம்! இந்த செயினின் மதிப்பு ...மௌனம்! அல்லது உத்தேசமாய் சொல்வார்கள். அன்றாடம் நாம் உபயோகிக்கும் வீட்டு உபயோக சாமான்களின் மதிப்பை கூட ஓரளவு சொல்வதற்கு  வாய்ப்பு இருக்கின்றது. 

ஆனால் அவரவர் வேலை பார்க்கும் தொழில் சம்பந்தப்பட்ட பொருளின் மதிப்பு அவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். (தங்க நகை ஆசாரிக்கு) பொற்கொல்லருக்கு தங்கத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். தச்சருக்கு மரத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். பட்டு துணியின் மகிப்பு ஒரு நெசவாளிக்குத் தெரியும். ஒரு சிலையின் மதிப்பு அதை வடிப்பனுக்குத் தெரியும். சித்திரத்தின் மதிப்பு ஒரு ஓவியனுக்குத் தெரியும். ஒரு மாணவனின் மதிப்பு அவனின் ஆசிரியருக்குத் தெரியும். ஒரு தொழிலாளியின் மதிப்பு அதன் நிர்வாகிக்குத் தெரியும்.

இதை ஒத்துகொள்வீர்களா! இது எப்படி சாத்தியமாகிறது. பல வருட அனுபவத்தால் , பல தடவை அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது நபர்களை அலசி ஆராய்ந்து வந்ததால் அவர்களுக்கு அதன் / அவர்  மதிப்பு தெரிகின்றது.

ஆனால் மனிதனின் மதிப்பை அளவிட முடியுமா?

முடியாது ! ஏனென்றால் பொருளின் மதிப்புக்கும் மனிதனின் மதிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பொருளின் மதிப்பு மாறாது! ஆனால் மனிதனின் மதிப்பு அவர்களை உபயோகிக்கும் விதத்தில் இருக்கின்றது. ஒரு மனிதனை என்னை செய்தால் அவனை பிரகாசிக்க வைக்கலாம் என்பதை அறிந்து கொண்டால் அவனின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி மதிப்பை பல மடங்கு உயர்த்தலாம். 

ஒரு தன்னுடைய சீடர்களிடத்தில் ஒரு இரும்புத் துண்டை கொடுத்து அதன் மதிப்பு எவ்வளவு என்று ஒருவாரத்தில் தெரிவிக்கும்படி கூறினார். 'இதன மதிப்பை தெரிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் எதற்கு? இருப்புக் கடையில் கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் இதில் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கின்றது என்று எண்ணி யோசிக்க ஆரம்பித்தனர்.

ஒரு வாரம் கடந்தது. அவகளிடத்தில் இருக்கும் அந்த இரும்பு சாமானை ஒரு பெட்டியில் வைத்திருந்தனர். குரு, அனைவரிடத்தில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இரும்பு சாமான்களின் மதிப்பை எழுதி வைக்குமாறு சொன்னார். அவரவர் மதிப்பை எழுதி வைத்தனர். கிட்டத்தட்ட அனைவரும் ஒரே மதிப்பையே எழுதியிருந்தனர். ஒரு சிலர் எழுதிய மதிப்பு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
  
             

குரு முதலில் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு உள்ள  பெட்டிகள் அனைத்தையும் திறந்தார். எல்லாமே அவர் கொடுத்த இரும்புத் துண்டு அப்படியே இருந்தது. சரி ! மதிப்பு கூடிய பெட்டியை திறந்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அது ஒரு அழகான சிலை. அதேபோல் ஆணிகள், கத்திகள் , கார்கள், ரோபோ, ஈபில் டவர் என்று  சிலர் வித விதமான பொருட்களை அந்த இரும்புத் துண்டை வைத்து செய்திருந்தனர்.

குரு தொடர்ந்தார்! பார்த்தீர்களா! நான் உங்களுக்கு ஒரே ஒரு சாதாரண இரும்புத் துண்டை கொடுத்தேன். ஆனால் சிலர் மட்டும் தான் அதை நல்லபடியாக யோசித்து அதன் மதிப்பை அதிகமாகியிருக்கிறார்கள். அவர்களே திறமை மற்றும் அறிவாளிகள்.

அதேபோல் நீங்கள் எல்லாம் ஒரு சாதாரணமான  இரும்புத்துண்டு. உங்களை நான் அறிவு பயிற்சி கொடுத்து, ஆற்றல் பயிற்சி கொடுத்து, தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து அழகான வெற்றிச் சிலை செய்வதே எனது குறிக்கோள். நீங்கள் ஒத்துழைத்தால் உங்களை வெற்றி வெற்றி மனிதராக ஆக்குவது எனது பொறுப்பு' என்று முடித்தார்.

ஆகவே 
உங்கள் மதிப்பு சாதாரண இருப்புத் துண்டு அல்ல!


அழகிய வெற்றி சிலை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

Thursday, 27 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 


(EQUAL HUMAN POLICY)
பாகம்: 6  எனக்கு பொன், பொருள் வேண்டாம்-
I DON'T  WANT GOLD AND OTHER THINGS  


இனிய மனிதா! உனது உள்விதி மனிதன் பேசுகிறேன். என்னை தங்கத்தால் சிலை செய்கிறாய்! அவ்வளவு பகட்டுக்கு ஆசைப்பட்டவனா நான்? என்னை பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்கிறாய்! புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்கிறாய்! அவைகளெல்லாம் என்னை குதுகலப்படுத்தும் என்றா நினைக்கிறாய்? எனக்கு தங்கம், வைரம், வைடூரியம், பணத்தால் கொண்டு காணிக்கையினைச் செலுத்துகிறாய்? அவ்வளவு பேராசை பிடித்தவன் என்று கருதுகிறாயா? இன்னும் மேலாக எனக்கு சில உயிர்களை பலி கொடுக்கிறாய்! நான் ஒரு கொடூரக்காரன் என்றா நினைக்கிறாய்?



தவறான பாதையில் நீ நினைக்கும் காரியங்கள் கை கூட வேண்டுமென்று நினைத்து இவைகளெல்லாம் செய்கிறாயா? அதற்கு நான்  ஒருபோதும் துணை போகமாட்டேன்!  உதவியும் செய்யமாட்டேன். நீ மனமுருகி என்னை தினமும் இடைவிடாது நினைத்தாலே போதுமானது. பிறரிடம் பணம் வாங்கி என்னை எளிதில் சிறப்பு வழியில் பார்க்க அனுமதிக்கிறாய்! அதற்கு நான் சம்மதிப்பேனா? நான் என்ன சித்ரவதைப்  பிரியனா? சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை தடவுகிறாயே ! நான் என்ன அலங்காரப் பிரியனா? பலவகை ருசிகொண்ட உணவைப் படைக்கிறாய்! நான் என்ன சாப்பாட்டு ராமனா? என்னை அருகில் பார்ப்பதற்கு ரூபாய் 100 , 1000 வாங்கிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்து பார்க்க வைக்கிறாய்! அப்போது அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றா நினைக்கிறாய்? இவைகளெல்லாம் சிலர் சுயநலம் கருதி பிறரை கஷ்டப்படுத்தும் செயலேயன்றி என்னை மகிழ்விக்கும் செயலே அல்ல. 



இரக்கமுள்ள மனிதா! அனைவரையும் ஒரே மாதிரியாகத் தான் நான் படைத்திருக்கிறேன் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன்! நான் அனைவரிடத்தில் இருக்கிறேன். நீ எவ்வாறு என்னை அன்புடன், தூய மனதுடன், நன்மை செய்யும் எண்ணமுடன் என்னை மதிக்கின்றயோ அல்லது வணங்குகின்றாயோ அதுவே எனக்கு அதிக அளவில் சந்தோஷம் தரும். என்னை பணத்தால், பொன் பொருளால் ஆட்கொள்ள இயலாது. நல்ல மனத்தால் நல்ல எண்ணங்களால் , பிறர்க்கு நன்மை தரும் செயலால் தான் என்னை ஜெயிக்கமுடியும். 

நான் உன்னிடத்தில் பொன், பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றேனா? நான் என்ன ஏழையா ? அல்லது இல்லாதவனா? நான் தானே  நீ அனுபவிக்க எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததை மீண்டும் உன்னிடத்தில் அதை எதிர்பார்ப்பேனா? அவைகள் உனக்கு தான் வேண்டும். அவற்றை நான் அடியோடு விரும்பேன். எனக்குத் தேவை ! பிறரை  அன்போடு நடத்தும் செயல் ஒன்றே!



பிரிய மனிதா! இந்த பொன் பொருளில் எனக்கு ஆசை இருந்திருநதால் நீ இறக்கும்போது உன்னுடனே  நீ தேடிய செல்வங்களை அனைத்தும் கொண்டுவரும்படி செய்து அத்தனையும் உன் மூலமே அப்போதே  வாங்கியிருப்பேன். நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை? நான் படைத்தது அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காவே தான் நீ இறக்கும்போது அவற்றை விட்டுவிட்டு என்னுடன் நீ மட்டும் வரும்படி செய்துள்ளேன். இப்போது புரிகின்றதா?




பொன், பொருள் கொண்டு என்னை அணுகுவதை விட்டுவிட்டு தூய மனம் கொண்டு அணுகினால் அதுவே போதுமானது.
  
  இன்னும் வரும் ....  புதிய ஆன்மீகத் தொடர் 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை     

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com