Pages

Tuesday, 9 October 2012

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா? DO YOU WANT TO KNOW WHICH RELIGION IS THE BEST ONE


அனுபவப் பொன்வரிகள் 


மதுரை கங்காதரன்  

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா?
DO YOU WANT TO KNOW 
WHICH RELIGION IS THE BEST ONE?



இந்த உலகில் பல மதங்கள் இருக்கின்றன! இந்து மதம், இஸ்லாம் மதம், கிறித்துவ மதம், புத்த மதம், சீக்கய மதம் என்று பலதரப்பட்ட மதங்களை இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். அவற்றில் எந்த மதம் உயர்ந்தது ? என்று சொல்வதற்கு முன் எல்லா மதத்தின் கோட்பாடுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு தான் முடிவு சொல்ல முடியும்.

இதற்கு ஒரு அருமையான உதாரணத்தின் மூலம் புரிய வைக்கலாம். நமது உயிர் வாழ்விற்கு மிகவும் முக்கியமானது உணவு. சிலரிடத்தில் உங்களுக்கு பிடித்தமான உணவு எது என்று கேட்டால் 'அரிசிச் சாப்பாடு ' என்பார்கள். ஒரு சிலருக்கு 'கோதுமைச் சப்பாத்தி ' என்றும், கூழ் என்றும், கஞ்சி என்றும், ரொட்டி, பீசா, இட்லி, தோசை, பொங்கல் என்று வித விதமாகச் சொல்வார்கள். அனால் எல்லாமே பசியை போக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகின்றது. அதாவது அவைகளுடைய செயல் ஒன்று தான். 


இதில் கோதுமைச் சப்பாத்தி சாப்பிடுகின்றவரை அழைத்து, நீங்கள் சாப்பிடுவதைவிட அரிசிச் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும் என்று சொன்னால், அதை மருந்திற்கும் கூட சாப்பிட்டுப் பார்க்காமல் இல்லை..இல்லை சப்பாத்தி தான் ருசி என்கிற பதில் தான் வரும். இப்படி பலரிடத்தில் கேட்டால் அவரவர் விருப்பபடி தான் கூறுவார்கள். 

அதேபோல என் மதம் தான் சிறந்தது என்று சொன்னால் ... உடனே மற்றவர் இல்லை ..இல்லை என் மதம் தான் சிறந்தது என்று பதில் வரும். சில சமயங்களில் வாதங்கள் கூட வரும். இதற்கு காரணம் ஒரு மதத்தில் இருப்பவர்கள் மற்றொரு மதத்தினை பற்றிய நூல்களை படிக்காமல் இருப்பது. அதாவது சப்பாத்தி சாப்பிடுகிறவர், அரிசிச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அவருக்கு உடனே ஒன்று தெரிய வரும். இதுவும் ஒருவகை ருசியுடன் இருக்கிறது. பசியைப் போக்குகிறது என்று!


எந்த ஒரு மதமும் தீயப்பழக்கத்தை அனுமதிப்பதில்லை. மக்களிடம் அன்பை, இரக்கத்தை காட்டச் சொல்கின்றது. கொலை, கொள்ளை போன்றவற்றை செய்யச் சொல்வதில்லை. மக்களிடையே கோபம், போட்டி, பொறாமை ஆகியவற்றை அறவே துறக்கச் சொல்கிறது. மக்கள் போற்றும் எல்லா மதங்களில் உயர்ந்த கருத்துக்களே இருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் மனிதனுக்கு நல்வழி காட்டும் நூலாகவே இருக்கின்றது. அதை பின்பற்றுபவர்கள எல்லோரும் நன் மக்களாகவே திகழ்கின்றனர். அறவழியில், சத்தியத்தைக் கடைபிடித்து  கடமைகளை தவறாமல் பின்பற்றச் சொல்கின்றது. மனிதனை மேன்மைபடுத்துவதற்கு உதவியாக இருக்கின்றது.    

முடிவு ! எல்லா மதங்களும் மனிதனின் நல்வாழ்விற்காக, மகிழ்ச்சி தருவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அனைத்து மதங்களும் சிறப்பு வாய்ந்தவை, பெருமை வாய்ந்தவை, உயர்ந்து நிற்பவை.

மதங்களை போற்றுவோம்,

மனிதர்களை நல்வழி படுத்துவோம். 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Monday, 8 October 2012

சந்தர்ப்ப தேவதையுடன் நேரடி பேட்டி - உங்களுக்காக - FOR YOU - AN INTERVIEW WITH ANGEL OF OPPORTUNITY

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 
சந்தர்ப்ப தேவதையுடன் நேரடி பேட்டி - உங்களுக்காக -
FOR YOU - AN INTERVIEW WITH ANGEL OF OPPORTUNITY  



இதற்கு முன் அதிர்ஷ்ட தேவதையை எப்படி நம் வசப்படுத்திக் கொள்வது என்று பார்த்ததோம். இந்த பகுதியில் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக சந்தர்ப்ப தேவதையுடன் நேரடி பேட்டி எடுப்பதை படித்து பயன் பெறுங்கள். ஏனென்றால் வாழ்கையின் முன்னேற்றத்திற்கு 'சந்தர்ப்பம் ' கிடைக்கவேண்டும். அந்த சந்தர்ப்பம், எங்கு, எப்போது, எப்படி, யாரால் கிடைக்குமென்பதன் தான் இந்த பேட்டி.

எங்களுக்கெல்லாம் எப்போதும் பல உதவிகளை செய்துவரும் சந்தர்ப்ப தேவைதை அவர்களே! வணக்கம். உங்களிடம் முதல் கேள்வி!


1. நீங்கள் (சந்தர்ப்பம்) எப்போதெல்லாம் எங்களுக்கு கிடைப்பீர்கள்?

உங்கள் வாழ்கையில் ஒவ்வொரு மாற்றத்தின்போதும், பிரச்சனைகளை எதிகொள்ளும் போதும், புதிய முயற்சிகொண்டு செயலாற்றுன்போதும் , புதிய பெரிய எண்ணங்களை என்னும்போதும், கற்பனைகள் செய்யும்போதும் உங்களுக்கு வாழ்கையில் முன்னேறும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

2. உங்களை எப்படி அடையாளம் காண்பது?

உங்களுடைய எண்ணங்கள் திட்டங்களாய் மாறி, செயலாக உருவெடுக்கும்போது உங்கள் கண்கள் முன் தோன்றுவேன்.

3. உங்களை நழுவவிடாமல் பற்றிக்கொள்வது எப்போது முடியும்?

அது உங்களது விழிப்புணர்வையும், விடாமுயற்சியையும் பொறுத்து உள்ளது.

4. நீங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்?

உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் இல்லாமல் துன்பப்படுவீர்கள்.

5. உங்களை அடைவதற்காக எங்களுக்கு உதவி செய்வீர்களா?

இதற்கு முன் என்னை பற்றிக்கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் வழிகாட்டலாம். ஆனால் யாருக்குத் தேவையோ அவர்களே என்னை பற்றிக்கொள்ள வேண்டும்.


6. நீங்கள் ஏன் இடதுகால் பெருவிரலில் நிற்கிறீர்கள்?

ஒரு வினாடி கூட வீணாக்காமல் சரியான நேரத்தில் வேகமாக செயல்படத்தான்,

7. விரிந்த நிலையில் உள்ள இரண்டு இறக்கைகள் எதற்கு?

அதிக ஆற்றலுடன் காற்றைவிட வேகமாக பறந்து சென்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உனக்கு வெற்றி கொடுப்பதற்கு.


8. கூர்மையான கத்தி எதற்கு?

உனது அறிவு கூர்மையாக இருப்பதாக காட்டுவதற்கும் , எதிர்த்து வரும் பிரச்சனைகளை அழிப்பதற்கும்.

9. உங்களுக்கு முன்னால் அழகான நீளமான தலைமுடி எதற்கு?

இந்த அழகினால் உனது விருப்பத்தை அதிகப்படுத்தி எளிதில் பற்றிக் கொள்வ்தற்க்காக.

10. பின்னால் தலைமுடி இல்லாமல் இருப்பதேன்?

நொடிப்பொழுதில் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் பின்னால் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்த்துவதற்காக.

11. நீங்கள் யார்?

நான் தான் சந்தர்ப்பம். உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நல்ல நோக்கமுடையவன்.

12. யாருக்காக நீங்கள் வருகிறீர்கள்?

உங்களுக்காக. நீங்கள் உங்களது வாழ்கையில் மேன்மையான இடத்திற்க்குச் செல்ல, வெற்றிகள் பல தந்து புகழை அள்ளித் தருவதற்க்குத் தான்.


நன்றி சந்தர்ப்ப தேவதை அவர்களே!


நன்றி !
உங்கள் எல்லோருக்கும்! என்னை பற்றிக்கொண்டு வாழ்கையில் முன்னேறவேண்டும் . அதற்கு என் வாழ்த்துக்கள்!   

  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com          

Saturday, 6 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 12 எனது லட்சியம், ஜீவன்களைக் காப்பது - MY AIM IS TO SAVE ALL

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 



பாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களைக்  காப்பது - 
MY AIM IS TO SAVE ALL



இனிமையான மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! நீ உனக்குள் தேடிக்கொண்டிருக்கும் ரகசியமான விலைமதிக்க முடியாத எங்கும் கிடைக்காத ஒரு அதிசயமானப் பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். பூமியில் தோன்றிய பெரிய பெரிய ஞானிகள், முனிவர்கள், அறிஞர்கள், மகான்கள் போன்றோர்கள் 'தாங்கள் எதற்காக மனிதப் பிறவி எடுத்துள்ளோம்' என்கிற ரகசியத்தைப் பல ஆண்டுகளாகத் தவமிருந்து அதை அழகான பாடல்கள், கதைகள், மந்திரங்கள், சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவைகள் எப்படி இருக்கிறதென்றால் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியுள்ளார்கள். அதன் அர்த்தம் எளிதில் புரியாது. படிக்கவே கடினமாக இருக்கும். என்னதான் திரும்பத் திரும்ப படித்தாலும், துருவித்துருவி, தோண்டித்தோண்டி ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் அதற்கான உண்மைப்பொருள் அறிவது மிகவும் கடினம் தான். அதிலும் இந்த அவசர உலகத்தில் இதற்கெல்லாம் யோசிப்பது ஏது நேரம்? அதைப்படித்து ஒவ்வொரு வரியையும் விளக்கிச் சொன்னாலும் கேட்பதற்கு பொறுமை இருக்குமா? என்கிற கேள்விக்குறி இருக்கத்தான் செய்கிறது.

பிரிய மனிதா! விஞ்ஞானம் வளர்ச்சியடையாத நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , ரஷ்யா போன்ற நாடுகளை பார்க்க வேண்டுமென்றால் நாமே நடையாகவோ, வண்டியிலோ செல்லவேண்டும். ஆனால் இந்தக் காலம் அப்படியா? உலகமே உங்கள் உள்ளங்கையில்! எந்த நாட்டிற்கும் ஒரு நொடியில் சென்று வந்துவிடலாம். அப்படியிருக்கும்போது ஆன்மீகத்திலும் இருக்கின்ற இடத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வழியைத்தான் காலத்திற்குத் தகுந்தாற்ப் போல் எளிமையாக்கி அதை  உனக்குச் சொல்லவே உனக்குள்ளேயே இருந்து வருகிறேன்.


மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்குள் ஜீவ ஓட்டமாய் ஓடிக்கொண்டிருப்பது, உனது வயிற்று பிழைப்பு மற்றும் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதற்கும், அனைவரும் போற்றும்படி வாழ்வதற்கும், தேடிய செல்வங்களை காப்பதற்கும், நான் படைத்த உலகத்தை நல்லபடியாக இருப்பதற்கும் தான் என்பதை உனக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்று நான் உனக்குள் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். 

அன்புமிக்க மனிதா! உன்னைப் படைத்த நோக்கம் என்னைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ, புகழ்ந்து கொண்டோ இருக்கவேண்டும் என்பதில்லை. என்னைப் பற்றி பேசுவதால், புகழ்வதால் உன்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கில்லை. அப்படி இருந்திருந்தால் உனக்கு ஒரு சாண் வயிற்றை கொடுத்திருக்கமாட்டேன். உனது பிறப்பின் நோக்கம் மனிதர்களை இரக்கம் கொண்டு காப்பதற்கேயன்றி வேறு இல்லை. அப்படியென்றால் என்னைப் பற்றி மட்டும் நினைக்கும் சக்தியை மட்டுமல்லவா கொடுத்திருப்பேன். ஆனால் உனக்கு அனைத்தையும் சிந்திக்கும் சக்தி மற்றும் என்னைப்போல் படைக்கும் ஆற்றலையுமல்லவா கொடுத்துள்ளேன். அதாவது என்னைப் போன்று! என்னை நினைக்கும் பக்தர்களுக்குச் சகலவித செல்வங்களையுமல்லவா கொடுத்திருப்பேன். குறைந்தபட்சம் மனிதன் கஷ்டத்தை அனுபவிக்காமல் காலம் காலமாக எல்லோரும் தவம் செய்துகொண்டே இருக்குமாறு அல்லவா படைத்திருப்பேனே?


பெருமை மிக்க மனிதா! எனது அகராதியில் 'புதுப்பித்தல் ' மற்றும் 'மாறுதல் ' இரண்டும் தவிர்க்க முடியாது! நான் மாற்றுவதினாலும், நீ மாறுவதினாலும் இந்த உலகம் அழியாமல் நிலைத்து இருக்கின்றது. சற்று பயத்துடன் இயங்குகின்றது! இல்லையேல் என்றோ நான் படைத்த இந்த அதிசய உலகம் அழிந்திருக்கும்! 

இரக்கமுள்ள மனிதா! உன்னைப் பல செயற்கரிய வல்ல செயலை செய்வதற்காகவே படைத்துள்ளேன். அவைகளைப் பார்த்து நான் ஆனந்தம் அடைவதற்குப் படைத்துள்ளேன். செயல்களை செய்யாதவர்களை நீ எல்லாம் தெரிந்த தவசிகள் என்கிறாய்! எதையும் செய்யாமல் சதா மௌனமாய் இருக்கும் சாதுக்களை முற்றிலும் துறந்த முனி என்றும் முக்காலமும் அறிந்தவர் என்றும் பல அரிய சக்திகளை கொண்டவர் என்றும் பேசுகின்றாய்.

இனிய மனிதா! மனித சக்தியை மௌனம் காப்பதற்கும், அமைதியாய் இருப்பதற்குமா பயன்படும்? அப்படியென்றால் ஒன்றுமறியாத முட்டாள்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? அதாவது செயலின் மூலம் தான் இருவருக்கும் வித்தியாசம் காணமுடியும். செயல்களைக் கொண்டு தான் எத்தகையவன் என்று தெரிந்துகொள்ள முடியும்.

பாசமுள்ள மனிதா! உன் உடலில் கைகள், கால்கள், கண்கள், வாய், காதுகள் என்று பல்வேறு வேலைசெய்யும் உறுப்புகளை படைத்திருக்கிறேன் எதற்காக? அமைதியாய், மௌனமாய் உட்காரவா? அல்லவே அல்ல. அவைகளைக்கொண்டு நான் பூமியில் படைத்திருக்கும் அனைத்து ஜீவ ராசிகளின் துன்பத்தைப் போக்கவே. நான் அவர்களுக்கு கொடுத்திருக்கும் உண்ண உணவு, உடை, இருப்பிடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை தங்கு தடையின்றி கிடைப்பதற்கு?! மேலும் ஏமாளிகளை ரட்சிப்பதற்கும், ஏமாற்றுபவர்களை உனக்கு அடையாளம் காண்பித்து உன்மூலமாக அவர்களைத் திருத்துவதற்குமல்லவா  உனக்கு என்னுடைய அளவில்லா அறிவையும், அசுரத்தனமான ஆற்றலையும் கொடுத்திருக்கிறேன்!

பெருமையுள்ள மனிதா! உனது உறுப்புகளைக் கொண்டு, அறிவு கொண்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள். அதுதான் என் ஜீவ ஓட்டத்திற்கு உதவியாக இருக்கும். அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடு. எனக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் இந்த உலகில் மனித ஜீவராசிகள் பல்கி பெருகி வருகின்றன. என் ஒருவனால் அவர்களை காப்பது கடினம். ஆனால் நானே பல உருவங்களில் காக்கும் செயலை செய்து வருகிறேன். நோய்களை தீர்ப்பதில் டாக்டராகவும், கல்வி போதிப்பதில் ஆசிரியராகவும், வாழ்கையில் குருவாகவும், தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் இருந்து காத்து வருகிறேன். 

இரக்கமுள்ள மனிதா! யார் ஒருவர் உனக்கு என் ரகசியத்தை, என் வித்தையை கற்று தருவதாகவோ அல்லது பரிகாரமோ செய்யச் சொன்னால் என்னிடம் கேள். அந்த மாதிரி எதாவது செய்தால் உனது அறிவை புதைப்பதற்குச் சமம். அதற்கு நீ அடிமையாகிவிட்டால் நானும் உன்னுடன் சேர்ந்து அடிமையாகி இந்த உலக நலனுக்காக அனைத்து ஜீவன்களையும் காக்கும் கடமை மறந்து மகிமையை இழக்க நேரிடும்.

மதிப்பு மிக்க மனிதா! உனக்குள் இருக்கும் என்னை தினமும் கவனி! எனக்கு வேண்டுபவை நல்ல சிந்தனை, நல்ல செயல்கள், எல்லோருக்கும் நன்மை செய்யும் குணம், எப்போதும் என்னை மறக்காமல் அனைவரையும் காக்கும் செயல்கள் ஆகியவை. 

அருமை மனிதா !


இன்றே புறப்பட்டு!

நானும் வருகிறேன் !


அனைத்து ஜீவன்களை காப்போம்!         

    

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

உள்விதி மனிதன் பாகம் :11 நல்லது எது? தீயது எது? எப்படி தெரிந்து கொள்வது? GOOD AND BAD THINGS?

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை


பாகம் : 11 நல்லது எது? தீயது எது? 
எப்படித்  தெரிந்து கொள்வது?
HOW DO YOU KNOW GOOD AND BAD THINGS?


அன்பு மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். இந்த உலகில் உனக்கு நல்லது எது? தீயது எது? என்பது தெரியாமலோ அல்லது புரியாமலோ அல்லது அறியாமலோ இருக்கும்! அதாவது பிறர்க்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ தீங்கு தரும் எந்த ஒரு செயலும் செய்யத்தகாத செயலே! ஒருவேளை நீ தீய செயலைச் செய்வதற்கு முற்பட்டால் அதன் பலன் உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்தவர்களுக்கோ உனக்கேத் தெரியாமல் நீ நினைத்துக் கூட பார்க்காத சமயத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்குபோது கெடுதலாக முடிவடையும். உன் தவறுக்குத் தக்கவாறு உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்த அனைவர்களுக்கோ உடனேயோ  அல்லது சற்று காலம் தாழ்த்தியோ தக்க தண்டனை கிடைக்கும். ஆகையால் அத்தகைய செயலைச் செய்ய ஒருபோதும் நினைக்காதே!  



அதேபோல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயலை அதாவது மகிழ்ச்சியும், சந்தோஷமும் தரக்கூடிய எந்த செயலும் செய்யக்கூடியவையே. அந்தச் செயலை செய்வதற்கு நான் எப்போதும் துணையாய் இருப்பேன். அதன் மூலம் நான் பெருமையையை புகழை செல்வத்தை மகிழ்ச்சியை உனக்குத் தேடித்தருவேன். 


இனிய மனிதா! இதை கூறும்போது உன்னிடத்தில் புன்சிரிப்பு, ஞான சிரிப்பு உதிர்வது எனக்குத் தெரிகின்றது. ஏனென்றால் இந்த உலகில் எத்தனையோ பேர் பெரிய பெரிய தவறுகள் செய்தும் எந்த ஒரு தண்டனையை அனுபவிக்காமல் இருக்கின்றனரே? அல்லது அதிலிருந்து தப்பித்து  நிம்மதியாக வாழ்கின்றனரே என்ற கேள்வி கேட்பது எனக்குத்  தெரிகின்றது. ஆனால் அவர்கள் தினமும் வினாடிக்கு வினாடி கஷ்டப்படுவது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.



மரியாதையுள்ள மனிதா! தவறு செய்கின்றவர்களின் துயரம் இந்த மனிதக் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தீய செயலை செய்த மனிதனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் உள்ள எனது ஆன்ம ஓட்டம், ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம் மூலம் தக்க சமயத்தில் வெளிக்காட்டும்படி செய்து விடுவேன். அதாவது அவர்களுக்குப் பூலோக அவஸ்தைகளை பலவற்றைக் கொடுத்து அவர்கள் திருந்தும் வரை பலவிதமான தொந்தரவை பலரூபத்தில் கொடுத்துக்கொண்டு பல இம்சைகளுக்கு ஆளாக்கி விடுவேன். அதில் ஏதேனும் பாக்கியோ அல்லது கடனோ வைத்திருந்தால் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கொடுத்து அந்த கடன் தீரும் வரை என்னுடைய தண்டனை தொடரும். ஆகவே தவறு செய்யுமுன் அந்த தவறு உன்னையும், உன்னைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்கிற எண்ணம் இருக்காட்டும். இதை  அவ்வப்போது உனக்கு எச்சரித்துக் கொண்டு இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!



இனிமையான மனிதா! தீய செயலை செய்த மனிதனோ! அல்லது அதன் மூலம் பல சொத்துகளை சேர்த்த பணக்காரனோ என்றைக்குமே நிம்மதியாக இருந்தது கிடையாது. ஏனென்றால் அவர்களுக்குள்ளும் நான் இருப்பதால் அவன் செயல்களை நன்றாக கவனிக்க முடிகின்றது. அதாவது அவனுக்குள் இருக்கும் ஜீவ ஓட்டம் எப்போதும் அதிகமாக இருக்குபடி பார்த்துக் கொள்வேன். அதுவே நான் தண்டனை கொடுத்தது போலவும், மீண்டும் தவறு செய்யாமல் உணருவதற்குமாகும். அப்படிபட்டவன், யாரைப் பார்த்தாலும் பயந்து சாவான். எங்கேயோ ஒரு தவறு நடந்தாலும் அதைக்கண்டு பயப்படுவான். தன்னை சுற்றியுள்ளவர்களையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் நம்ப மறுப்பததை  எனக்கு நன்றாகத் தெரியும். நிம்மதியான தூக்கம் என்பது அவன் வாழ்நாளில் இல்லாமல் போய்விடும் என்று தெரிந்தும் மென்மேலும் தவறு செய்வதினால் அவனுக்கு நானே உள்ளுக்குள் கடுமையான தண்டனை கொடுத்துவருவேன். அவன் சீக்கிரம் திருந்திவிடுவான் என்று உறுதியாக நான் நம்புகிறேன். மீறியும் தவறு செய்வது தொடர்ந்தால் அவனைக் காக்க யாராலும் முடியவே முடியாது. அவனது குடும்பம் வெகு சீக்கிரத்தில் அனாதையாய் கேட்பாரற்று வீதிக்கு வருவது சர்வ நிச்சயம். 



இரக்கமுள்ள மனிதா! தீயவை செய்யும் மனிதனை திருத்துவதற்கு பலவழிகளில் உள்விதி மனிதனாகிய நான் முயற்சி செய்துவருகிறேன். உடனே அவனுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது எனது மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் அவனால் உனக்கு எந்த ஒரு தீயதும் உனக்கு வராமல் காப்பது எனது முழுமுதற்கடமை.

மேன்மையான மனிதா! நான் அதாவது இந்த உள்விதி  மனிதன் இருக்கின்றேனா? இல்லையா? என்பது பற்றி உனக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும். ஏனென்றால் என்னைக் காட்டுவதாக சொல்லி, எனது அறிய செயலை உனக்கு அருளுவதாகச் சொல்லி பலர் பலவழிகளில் பணம் வாங்கிக் கொண்டு அருமையான நேர்மையான மனிதர்களை ஏமாற்றுவதோடு நிற்காமல் அவர்களைக் குறுக்குவழியில் பல தவறுகளை செய்யும்படி தூண்டிவருகிறார்கள். அவர்களை உனக்கு அடையாளம் காட்டி உன்மூலம் அவர்களைத் திருத்துவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றும் வருகிறேன். கூடிய விரைவில் முழு வெற்றி அடைவேன். அப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?



இனிமையான மனிதா! உன் ஒவ்வொரு செயலையும் நான் உன்னிப்புடன் கவனித்து வருகிறேன். அப்படியிருக்கும் போது என்னை பணத்தால், செல்வத்தால் காண்பதற்கு முயற்சி செய்தால் அது வீண் தான். அப்படி காட்டுகிறேன் என்பவன் உண்மையானவன் அல்ல. அவனை நம்பி நீ சேர்த்த செல்வத்தை கொடுத்து ஏமாறாதே! ஏற்கனவே நீ பிறக்கும் போது  உனக்காக கொடுத்த மகிழ்ச்சியின் பங்கை, உனது முன்னோர்கள் தங்கள் அறியாமையினால் இழந்துவிட்டார்கள். நீயாவது இப்போது விழித்துக்கொள். உனக்குரிய அந்த மகிழ்ச்சி பங்கை வெகுசீக்கிரத்தில் கிடைக்குபடி செய்கிறேன். அதற்கான செயல்கள் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.



பாசமுள்ள மனிதா! எனது ஆற்றல் ஓட்டம், ஜீவ ஓட்டம், விதி ஓட்டம், இரத்த ஓட்டம் உனக்கு இலவசமாகவே கொடுத்திருக்கிறேன். என்னை வெளியில் தேடி உனது ஆற்றல், அறிவை வீணாக்கி விடாதே! எவரிடத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கின்றதோ அதுவே என் ஓட்டம், என் ஆற்றல். அதுவே பலவித சக்திகளாக மாற்றும் வல்லமை கொண்டது. அப்படி சந்தேகம் இருந்தால் உன்போன்ற ஓட்டம் மற்றவர்களிடத்தில் இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள் அல்லது கேட்டு தெரிந்துகொள். அதுவே அழியா சக்தி. அதுவே உன் ஜீவ சக்தி.

பிரியமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் எனது ஓட்டம் சீராக நடைபெற வேண்டுமென்றால் எனக்கு வேண்டியவை நல்ல எண்ணங்கள், நல்ல உணவு, நல்ல செயல்கள். அதுவே எனக்கு போதுமானது. நான் வேண்டும்போதேல்லாம்  அவைகளை நீ எனக்குக் கொடுத்துவிட்டால் நான் உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தருவேன். அது என் கடமை. அப்படி இல்லாவிட்டால் உனக்கு பல கஷ்டங்கள் கொடுக்க நேரிடும் ஜாக்கிரதை!



அன்புமிக்க மனிதா! உன்னை படைக்கும்போதே எனது ஜீவ ஓட்டத்திற்கான அனைத்தையும் படைத்துவிட்டேன். நீ இந்த உலகத்தில் உள்ள பலவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனாகிய நான் உன் மூலம் காணவேண்டுமென்கிற ஆசையால் உனக்குள் வந்துள்ளேன். எக்காரணம் கொண்டும் உனது ஏமாற்றும் குணத்தால் அல்லது திமிர்த்தனத்தால் அல்லது வீண் ஜம்பத்தால் இழந்துவிடாதே.


இனிமை மனிதா! தீய வழியில் பணம் சேர்த்த சிலர், அதிகமான, அனைத்து வசதிகள் இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளமுடியாமல், அனுபவிக்க முடியாமல் மரண அவஸ்தைகள் படுவதை என்னால் உணரமுடிகின்றது. அதற்கு நான் என்ன செய்யமுடியும். நீ செய்யும் தவறுகள், எனக்கு செலுத்தும் கடன். நல்ல செயல்கள் நான் உனக்கு கொடுக்கும் மகிழ்ச்சியானச் செல்வம். என் பேச்சை கேட்காமல் உனது மமதையால் அல்லது உனது பேராசையால் அல்லது உனது சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஜீவ ஓட்டத்தை இழந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அந்த மாதிரியான எண்ணத்தை தடுத்து உனக்கு மன்னித்து என்னால் ஆன நன்மை தரவே வந்துள்ளேன்.



மரியாதை மிக்க மனிதா! நீ தீய செயலில் ஈடுபடும்போதெல்லாம் எனது ஜீவ ஓட்டத்தைப் பலவழிகளில் தடையாக அல்லது அதிவேகமாக ஓடச் செய்து உன் உடலை உண்டு இல்லையாக்கிக் கொண்டிருக்கிறேன். எதனால் என்றால் உனக்காக கொடுத்த குடும்ப கடமைகளை செய்ய மறந்து, என்றோ நீ பிறர்க்குத் தீமைகளைச் செய்ததால் அதன் பலனை நீ இப்போது அனுபவிக்கிறாய். அப்படி அனைத்து தவறுகளையும் உணர்ந்து பாவமன்னிப்பு கேட்க நினைத்தால் இன்று முதல் நான் எந்த ஒரு பாவத்தையும் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு எனது ஜீவ ஓட்டத்தில் கலந்து கொள். நான் உன்னையும் , உன்னைச் சேர்ந்தவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வேன் ! இது உறுதி!


அன்பு மனிதா!


தீயதை தவிர்த்திடு!


நல்லதை செய்திடு!


எனது ஜீவ ஓட்டம் உனக்கு மகிழ்ச்சி தரும்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

மனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் ?- SUCCESS OF HUMAN IS BEHAVE LIKE A HUMAN ?

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


மனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் ?-
SUCCESS OF HUMAN IS BEHAVE LIKE A HUMAN ?


மனிதன் சமீப காலமாக கற்பனைக்கு எட்டாத பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்துக் கொண்டும் தன்னுடைய ஆற்றலையும், திறமையும் பல வழிகளில் நிரூபித்து வருகிறான் என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ஏன்? ஒவ்வொரு மனிதனும் தான் எதாவது ஒரு வகையில் சாதனைபுரிய வேண்டுமென்று ஒரு குறிக்கோளுடன் இருக்கின்றனர்.


அதனால் ஒரு சிலர் அகிலம் போற்றும் விஞ்ஞானியாக திகழ்கின்றனர். ஒரு சிலர் உலகை ஆளும் கணிப்பொறியை உருவாக்குகின்றனர். மிகப் பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரர், சிறந்த நிர்வாகி, அரசியல்வாதி, ஞானி, ஆன்மீகவாதி ஏன் ஒரு சிலர் தெய்வங்களாக மாறி மனிதகுலத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். இன்னும் மிகைபடுத்தி சொல்லவேண்டுமென்றால் அவன் மிருகமாகவும் மாறிவிட்டான்.


அவனுடைய அறிவும், ஆற்றலும் பூமியில் பாதாளம் முதல் விண்ணிற்கும் வரையிலும் தன்னுடைய சாதனைகளை விரித்துக் கொண்டு வருகிறான், இவ்வளவு சாதனைகள் செய்தாலும் அவனால் செய்ய இயலாத சாதனை ஒன்றே ஓன்று தான்! அது என்னவென்றால் மனிதன் மனிதனாக இருப்பது தான் !?  


மனிதனுக்கு பகுததறிவோடு ஆறறிவு இருப்பதை ஏற்றுக் கொண்டாலும் மனிதன் உருவில் இருக்கும் மனிதன் எப்படி மனிதனுக்குரிய  குணத்துடன் மாறுவது ? என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறான். மனிதப் பண்புகள் என்னவென்றால் எப்போதும் 


பிறரிடத்தில் அன்பு செலுத்துவது, 
அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவிகள் செய்வது, 
இரக்கத்தை காட்டுவது, 
மனிதர்களுடைய கஷ்டத்தை போக்கி சுகத்தை கொடுப்பது, 
சத்தியமான வழிகளில் நடப்பது, 
இருப்பதை பகிர்ந்து கொடுப்பது, 
நேர் வழியில் நடப்பது, 
அறியாமையை அகற்றுவது, 
வாழ்க்கைக்கான கல்வி வழங்குவது, 
சிறிய தவறுகளை மன்னிப்பது, 
பொறாமை போக்கி பொறுமை காப்பது, 
கோபத்தை அழிப்பது ????


மேற்கூறியவற்றில் மனிதன் யாராவது சாதனை படைத்தால் தான் உண்மையான சாதனையாக ஏற்றுக்கொள்ளலாம்.

இன்று முதல் மனிதனாக மாற புதிய சபதம் எடுத்துக் கொள்வோம்.


வாழ்க மனிதன் !


வளர்க மனித சமுதாயம் !

  
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com