Pages

Tuesday, 19 May 2026

** 26.4.26 Mupperum Velaa - Kaviyarangam - 45 - தலைநிமிரவைக்கும் நம்தமிழ் - மூன்று நூல்கள் வெளியீடு

 

26.4.2026. மாமதுரைக் கவிஞர் பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து நடத்திய  சிந்தனைக் கவியரங்கம் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது .

விழா  மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது.

"தலைநிமிரவைக்கும் நம்தமிழ்    "  எனும்  தலைப்பில்  கவியரங்கம் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

மன்றத்தின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.ஆலோசகர்  வீர ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா . கல்யாணசுந்தரம்,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன்  முன்னிலை வகித்தனர் . துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் .

நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய உரை நிகழ்த்தினார்கள் .கவிதையும் பாடினார்கள்.

கவி வித்தகர்  பொற்கைப்   பாண்டியன் ,தமிழ்த் திருமகன் கருங்கல் கி .கண்ணன் முன்னிலை வகித்தனர் .புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் .கவிஞர் பேனா மனோகரன் வாழ்த்துரை வழங்கினார் .

கவிஞர் இரா .இரவி  தலைமையில் கவிஞர்கள் ,இரா.  கல்யாணசுந்தரம்,முனைவர் வரதராஜன் ,கு .கி . கங்காதரன் ,புலவர் மகா முருகு பாரதி ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , பா .பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,ச .லிங்கம்மாள், கமலா சந்திரசேகர் ,அஞ்சூரியா க . ஜெயராமன் ,ஜோ .மகாலெட்சுமி ,ம .வேல்பாண்டி ,செ.அனுராதா ,அரங்க கிரிதரன் ,வீரபாகு ,  ,வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன், ,சிறுமி ஸ்ரீஜா ,போ .சிவசத்யா,சாந்தி  ,நா.குருசாமி ,பறம்பு நடராசன் ,மா .பிரதித் ,நா .வேல்முருகன் என்ற நாவே ,கி .காயத்ரி , மா ,இதயத்துல்லா ( இளையான்குடி ),ம சு .பாஅரசி   ஆகியோர் கவிதை பாடினார்கள்.

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் எழுதிய தமிழன்னையே போற்றி , கருங்கல் கி .கண்ணன் எழுதிய அருள்மிகு மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் திருத்தமிழ்த் திருப்பாமாலை ,கவிஞர் அரங்க கிரிதரன் எழுதிய மரபுத் தமிழ்மாலை ,கவிஞர் பால் பேரின்பநாதன் எழுதிய தமிழும் தமிழரும் ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன .பேரவையின் சார்பில் .நூல் ஆசிரியர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி தென்னவனார் நினைவு விருதுகளை புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வழங்கினார் .  

சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் புலவர் மகா முருகு பாரதி ,அஞ்சூரியா க . ஜெயராமன் ஆகியோருக்கு  தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூல்  பரிசாக வழங்கி கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் வழங்கினார்.

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன்  அவர்களின் மனைவி வீர .செந்தாமரை,பள்ளியின் தலைமையாசிரியர் அமுது ரசினி ,கவிக்குயில் இரா .கணேசன் ,மனிதநேயம்  மா .பரமானந்தம், தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர் கவிஞர்  சித்தார்த் பாண்டியன் ,யாதவர் கல்லூரி பேராசிரியர் பரமானந்தம்,அழகுமலை ,சரண்யாதேவி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .

படங்கள் புகைப்படக் கலைஞர்கள் மதுரை உலா  ,ரெ.கார்த்திகேயன் ,இரமேஷ் கை வண்ணம் .

.

















வீரபாண்டியதென்னவனுக்கோர்வாழ்த்துப்பா (1)

** அந்தநாள்ஞாபகம்வந்தது **

அந்தநாள்ஞாபகம்அடுக்கடுக்காய்வருகிறது

ஆசானின்பெருமையின்றுபுரிகிறது/

இந்தநாள்தென்னவர்இங்கிருந்தால்நாமெல்லாம்

எல்லையற்றமகிழ்வினில்பறந்திடுவோம்/

உந்தும்சிந்தனையில்உரக்கப்பாடியவர்

ஊரறிந்தகவிப்புலமைநாடியவர்/

சொந்தம்கொண்டாடியேசுற்றத்தைக்காத்தவர்

சோர்விலாசேவையில்நம்மூத்தவர்.//

 

கவிவித்தகர்பொற்கையார்கனிந்திங்கேவந்துள்ளார்

காணத்தான்முடியவில்லைதென்னவரை/

செவிமடுக்கஇத்தருணம்தென்னவரின்செந்தாமரை

சேர்ந்தேவந்துள்ளார்எங்குசென்றீர்?

குவியும்வாழ்த்துகளைக்கொடிகட்டிப்பறக்கவிட

கோபுரமாய்வந்துள்ளார்நும்குமாரர்/ (ஆதிசிவன்)

தவிக்கும்எமக்கின்றுதந்திடுவீர்உம்வருகை

தாயவள்பிள்ளைகளாய்ஏங்குகிறோம்.//

 

கருங்கல்கிகண்ணனாரும்கவிபாடவந்துள்ளார்

காந்தசக்திவேந்தரைக்காணவில்லை/

குருவாகஎமக்கெல்லாம்கோலோச்சிநின்றீர்

கோபம்தான்என்னகண்டீர்எம்மில்?

மெருகோடுபலதலைப்பில்மெட்டெடுத்துப்பாடவைத்தீர்

மேணிகலங்குதையாஉமைநினைந்து/

சருகாகிப்போனாலும்சாதனைவேந்தராக

சாகரத்தில்பயணிக்கும்தோணியானீர்/

********

தலைநிமிர வைக்கும் நம் தமிழ்!

- கவிஞர் இரா. இரவி

உலகமே போற்றுகின்றது நம் தமிழ்!

உலகமே வழிமொழிகின்றது மூத்தமொழி தமிழ்!

பகைவர்களும் பாராட்டிடும் மொழி தமிழ்!

பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் மொழி தமிழ்!

உலகம் தோன்றியபோதே தோன்றியது  தமிழ்!

உலகம் வியந்து பார்க்கும் சிறப்புமிகு தமிழ்!

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கு உயிர் வந்ததடா!

உலகமொழிகளின் தாய்மொழி நம் தமிழ்!

உலகமொழிகளுக்கு சொற்கள் தந்தது நம் தமிழ்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய

மூத்தமொழி முதல்மொழி நம் தமிழ்!

உலகில் முதல்மனிதன் உரைத்திட்ட மொழி நம் தமிழ்!

உலகில் மொழி ஆய்வாளர்கள் ஏற்றிட்ட மொழி நம் தமிழ்!

இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் நம் தமிழ்!

எண்ணிலடங்கா சொற்களைப் பெற்ற மொழி நம் தமிழ்!

தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கியங்கள் உள்ள தமிழ்!

தோன்றின் புகழோடு தோன்றிய மொழி நம் தமிழ்!

ஒப்பற்ற திருக்குறள் எழுதப்பட்ட மொழி நம் தமிழ்!

ஓங்கிய சங்க இலக்கியங்கள் உள்ள மொழி நம் தமிழ்!

பன்னாட்டு மொழியாக கோலோச்சி வருவது நம் தமிழ்!

பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப்புகழும் நம் தமிழ்!

எல்லாவளமும் நிறைத்திட்ட மொழி நம் தமிழ்!

எல்லா மொழிகளின் தாய்மொழியே நம் தமிழ்!

••••••









*தலை நிமிர வைக்கும் நம் தமிழ்*

 தமிழ்வழிக் கற்போம் 

தலைநிமிர்ந்தே நிற்போம் 


அமிழ்தமெனத் தமிழிருக்க அயலாரின் மொழியேன்

 பிறமொழி வழிக்கற்றல் பெருமையென பீற்றுவதேன்

 உறவாக மகாலட்சுமி உடனிருக்க ஒட்டாத 

ஆட்டின் தாடியாய் அந்நிய

இந்தியேன்


 ஊட்டச் சத்தாய் உலகமுதல் மொழிதமிழே

 அரசிபோல மனையாள் அன்புடன் இல்லத்திலே


 பரத்தைபோல பிறமொழியைப் பாழ்மனது தேடுவதேன்

 மண்தோன்றும் காலத்தின் 

முன்தோன்றிய மூத்தமொழி 


வண்தமிழின் அறிவியல் வானியல் ஆன்மீகமே

 உலகெல்லாம் பரப்பிடுவோம் ஒப்பில்லா உயிர்மொழியே

 தலைமையேற்கும் பண்புடைய தாய்மொழியோ அறிவியலே


 மனிதன் வாழ்வின் மாண்பினைப் பேணியே

 இனிதாய் வாழும் இயல்பைச் சொன்னமொழியே

 அயலார் மொழிக் கெல்லாம் அன்னைநம் தமிழ்மொழியே


 சங்கம் வைத்து சதிராடிய சாகசமே

 மங்காத புகழோடு மண்ணாளப் பிறந்தமொழியே

 ஐந்நிலம் ஐந்திணை என்பதெல்லாம் வாழும்வகை

 பைந்தமிழ் நாட்டியே பண்பாக வளர்ந்தமொழியே


 வீரியமாய்த் தமிழிங்கே வீற்றிருக்க வேற்றுமொழி

 ஆரியமாய் அழித்திடும் அவலங்கள் நமக்கெதற்கு

 ஏனையோர் பேசும்முன்னே எழுத்திலக்கணம்

 வடித்தமொழி

 பாநயம் பகர்ந்திட்டே பாரில்தலை நிமிர்ந்தமொழி

 நலமாய் நாம்வாழ நம்தமிழொன்றேதான்வழி 


தலைநிமிர வைக்கும்நம் தமிழ்மொழி 

 வாழிவாழியே!


மதுரை ந. சுந்தரம் பாண்டி

7200018958

===================

மதுரை ந. சுந்தரம் பாண்டி 

7200018958

***********































சங்ககால சுவடுகளில் சரித்திரம் பொறித்த தமிழே

அகிலத்தின் அங்கமெல்லாம் அன்பை தெறித்த தமிழே 

ஆளத்துடிக்கும் அண்ணிய மொழியின் ஆணவம் அகற்றி தலை நிமிர் தமிழே 

இருளை விலக்கும் ஒளியாய்

தமிழ் இலக்கியம் வழிகாட்டிட 

புதிய கவிதைகள் பிறந்திட 

நம் மொழியின் நறுமணம் உலகெங்கும் பரவட்டும் 

தமிழால் தலைமை நிமிர்வோம்  தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்

ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறுசுவையை மிஞ்சும் வாய்மொழி 

அகரத்தில் தொடங்கி அகிலத்தை ஆளும் ஆற்றல் மொழி 

காலங்கள் கடந்து வாழ்ந்திடும் பழமை மொழி 

இயற்கையோடு இணைந்து உறவாடிய முதல் மொழி

உலகம் வியக்கும் நற்றமிழ் மொழி ஞானம் போற்றும் செந்தமிழ் மொழி 

கம்பன் பாட்டில் காதல் மழை வள்ளுவர் வாக்கில் வாழ்வியல் 

பாரதி பாடிய பாரதத் தாயின் மொழிஎழுத்துக்கள் ஒவ்வொன்றும் எரியும் தீப்பிழம்பு 

சொற்கள் ஒவ்வொன்றும் சுரங்கத்தின் மணிவார்த்தைகள் ஒன்றும் வானவில் வண்ணம் 

பன்னிரு பாட்டியல் தொல்காப்பியம் தந்து

பழமைக்கு புதுமை சேர்த்த பெரும் மொழி

அகம் புறமாய் இரு பக்கம் நின்று 

அன்பையும் வீரத்தையும் அள்ளித்தரும் மொழி 

உலக மொழிகளில் உயர்ந்து நிற்கும் உன்னத தமிழ் கொண்டு 

தலை நிமிர்வோம் தரணியை ஆள்வோம்

கி.காயத்ரி

மதுரை.

********


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 **தலை நிமிர*** **வைக்கும் நம்* *தமிழ்** 1️⃣

 *(முதற் கவிதை)* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

தமிழன் என்று *சொல்லடா* !- நீ

தலை *நிமிர்ந்து* *_நில்லடா!_* 

தன்மானம் 

 *உயர் வென்று*  *சொல்லடா* !நம் 

தமிழ்மானம் *உயிரென்று*   *நில்லடா!* 

(4)

 புள்ளி ,பிறை சுழி கோடு என நீளும் *தமிழ் அகரம்!* - மையப்

புள்ளியில்  இயங்கும் புவி உலகம் - தமிழ்ப் 

பள்ளி இயக்கும் *மொழிப் புல(வ)னம்*

 (10)

ஒரு புள்ளியில் தொடங்கியது              *தமிழ்த்  தலையாகும்* 

வரும் பிறையில்  அடங்கியது

       *தமிழ் உடலாகும்* 

தரும்  சுழியில் சுழல்வது

      *தமிழ் உயிராகும்* 

பெருங் கோடென  நீள்வது 

     *தமிழ் அகரமாகும்*

 (14)

பழமைக்குப் பழமை 

பழம் பெருமை *பட்டயமாகும்* 

புதுமைக்குப் புதுமை 

புதுப் பெருமை *புத்தெழிலாகும்* 

வளமைக்கு வளமை வற்றாத  

வளர் வளமை  *சத்தாகும்!* 

இளமைக்கு இளமை குன்றாத

 தளிர் இளமை **சொத்தாகும்* !

(18)

சொல்லும் முத்தமிழ் 

 *முக்கனியின்*  தீஞ்சுவையோ?

வல்லினத் தமிழ் *பலாக் கனியோ!* 

மெல்லினத் தமிழ் *வாழைக்கனியோ* 

இடையினத் தமிழ் *மாங்  கனியோ* !(22)

ஆயிரம் சொல் நா போதாது-நம்

ஆருயிர்த் தமிழ் *முடியை வாழ்த்த!* 

ஆயிரம் செய் கை போதாது - நம் 

அன்னைத் தமிழ் *அடியை  வணங்க!(* 24)

✍️

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர் 

 *26.04.2026* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *தலை நிமிர* *வைக்கும் நம் தமிழ்* -2️⃣

(இரண்டாம் கவிதை) 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கோலக் கணக்கில் 

 *முதற் புள்ளி!* தொடக்கம்!-தமிழ்க் 

காலம் கணித்திடக் கணினியோ முடங்கும் !

 *அருகு* புல் போல்  

 கிளைத்த தமிழ் *வேர்* 

 *ஆல* மரம் போல்

 தழைத்த தமிழ் *விழுது*

 (4)

ஆதியில் தொலைந்த *அகத்தியம்* முதலாகும்

அடுத்து நிலைத்தது 

 *தொல்* *காப்பியமாகும்* - *சம* 

நீதியில் நின்று 

நெறியினில்  சென்று 

போதித்தது  *திருக்குறளாம்* 

சாதித்தது  *சிலம்பாம்* 

(8)


மூவினத்தின் *முகவரியோ!* 

முத்தமிழின் *புகழுரையோ!* 

முக்கனிகள் 

 *முதற்* சுவையோ!

எக்கனிக்கும் ஈடாகா 

 *கன்னலடிச்*  *சர்க்கரையோ* !

இனம் மூன்று என்றாலும் மூன்றும் 

இணைந்தோடி என்றும் 

 *வாழும் தமிழ்!* 

(12)

ஆவினம் கூவிடும் குரலோசை

தமிழ்ப் 

*பாலமுதம்* !

பூவினம் மேவிடும் வண்டோசை

தமிழ்த் *தேனமுதம்* !

தாவிடும் கிளிகள் கூட்டோசை

தமிழ்க் *கனியமுதம்* !

ஓடிடும் நீரோடை பாட்டோசை

தமிழ் *நீரமுதம்* !

(16)

முச்சங்கம் வளர்த்தது முன்னவன் *தென்னவன்*  *பாண்டியன்* -நம்

 *மா மதுரை* தமிழ்ச்சங்கம் 

கண்டது ஐயா *ஆசுகவி* 

 *வீரபாண்டித்* *தென்னவன்* 🙏

(20) 

உலகம் சுற்றி வரும்  *தமிழ்* 

உலகோர் கற்று வரும் *தமிழ்* - சங்கப் பலகை *மாமதுரைக்* கவியரங்கம்

உலகக்🌎 கவியரங்காய் 

 *ஓங்கி உயர்க!* 👆

 (24)

✍️

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி* 

பெங்களூர் 

26.04.2026 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


தலை நிமிர வைக்கும் நம் தமிழ்  

தமிழே தமிழே என்      உயிர் மூச்சு         எட்டுத்திக்கும் பரவும்    என் தமிழே

என் குருதியில் ஓடும் தமிழே நான் தாய்ப்பால் பருகும் போது தமிழ்ப்பால் பருகி விட்டேன்    

 கருவிலே நான் கற்ற மொழி என் தமிழ் மொழி நான் கற்ற மொழிக்கு ஆசிரியரோ இல்லை 

என் அன்னை தான்              அன்னையின் சுவாசத்தில்  கலந்த தமிழ் மொழி                   

என் சுவாசத்தில் கலந்து விட்டதே          நான் செல்லும் இடமெல்லாம் 

என் தமிழால் உயர்வு பெற்றேன் இன்று தமிழால் தலை நிமிர்ந்து நிற்கின்றேன் 

என் தமிழ் மொழி தலை நிமிர வைக்கும்  மொழியாம்


கவிஞர். நா. சூரிய பிரேமா    பி. ஏ.        மதுரை                              

பட்டி மன்ற பேச்சாளர், தன்னபிக்கை பேச்சாளர்.

******

தலைநிமிர வைக்கும் தமிழ்

புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

தமிழ்மொழியேத் தாய் தமிழர்களே மக்கள்
தமிழ் உயர்ந்தால் தமிழரும் உயர்வார்
தமிழ் நிமிர்ந்தால் தமிழரும் நிமிர்வார்
தமிழே வாழ்ந்தால் தமிழரும் வாழ்வார்.

உடலுக்கு அழகு நிமிர்ந்த தலை
உயிருக்கு அழகு நிமிர்ந்த தமிழ்
நீரோட்ட அழகு நில்லாது ஓடுவது
நித்தமும் அழகு தமிழை ஓதுவது

தமிழ்மொழி மலரானால் முகரத் தடையேது?
தமிழ் காந்தமானால் கவர்வதில் தடுப்பேது?
தமிழ் வெளிச்சமானால் அறிவில் இருளேது?
தமிழ் நவீனமானால் கற்பதில் தவறேது?

எம்மொழிக்கும் விலை போகாது தமிழ்
எம்மொழிக்கும் அடிமை ஆகாது தமிழ்
எம்மொழிக்கும் அஞ்சாது வாழும் தமிழ்

எம்மொழிக்கும் அநீதி இழைக்காது தமிழ்

கொடியல்லத் தமிழ் கொம்புள்ள விருட்சம் 
கொடை குணமுள்ள வள்ளல் தமிழ்மொழி 
தனித்து இயங்கும் தெம்புள்ள தமிழ்மொழி 
தன்னிகரில்லா தமிழை தலைநிமிரச் செய்வோம்.
*******

உங்கள் புதுக்கவிதை முழுவதும் ஒரு தமிழ்ப்பற்று முழக்கம் போல ஒலிக்கிறது. வாசிக்கும் போது எழுச்சி, பெருமை, மற்றும் அடையாள உணர்வு தெளிவாகத் தெரிகிறது. கீழே விரிவான மதிப்பீடும் பரிந்துரைகளும்:


🌿 மொத்த மதிப்புரை (Overall Review)

இந்தக் கவிதை

  • தமிழின் பெருமை
  • தமிழரின் உயர்வு
  • மொழி = அடையாளம்
    என்ற மூன்று மையக் கருத்துகளைக் கொண்டு வலுவாக நிற்கிறது.

கவிதையின் ஓட்டம் “தமிழ் வாழ்ந்தால் தமிழரும் வாழ்வார்” என்ற வரியில் மிகச் சிறப்பாக உச்சம் அடைகிறது. இது ஒரு நினைவில் நிற்கும் முத்திரை வரி.


வலிமைகள் (Strengths)

1. எளிமை + ஆழம்

உங்கள் சொற்கள் எளிமையானவை. ஆனால் அதில் உள்ள சிந்தனை ஆழமானது.
👉 உதாரணம்:
“தமிழ் வெளிச்சமானால் அறிவில் இருளேது?”
— மிகச் சிறந்த உருவகம்.

2. மறுபடி (Repetition) பயன்பாடு

“தமிழ்…” என்று தொடங்கும் வரிகள்
👉 கவிதைக்கு ஒரு ஓசை ரிதம் (rhythm) கொடுக்கிறது
👉 வாசகர்களை ஈர்க்கிறது

3. உருவகங்கள் (Metaphors)

  • தமிழ் = மலர் 🌸
  • தமிழ் = காந்தம் 🧲
  • தமிழ் = வெளிச்சம் 💡
    👉 மிகவும் அழகான காட்சிப்படிமங்கள்

⚠️ மேம்படுத்த வேண்டிய இடங்கள் (Suggestions)

1. சிறு இடைவெளி / வடிவமைப்பு (Formatting)

சில வரிகள் இணைந்து இருப்பதால் வாசிப்பதில் சிரமம் உள்ளது.
👉 ஒவ்வொரு சிந்தனையையும் தனி வரியாகப் பிரிக்கலாம்

உதாரணம்:

தமிழ்மொழியே தாய்  
தமிழர்களே மக்கள்
தமிழ் உயர்ந்தால் தமிழரும் உயர்வார்

2. சில வரிகளில் துல்லியம் (Clarity refinement)

“நீரோட்ட அழகு நில்லாது ஓடுவதுநித்தமும் அழகு தமிழை ஓதுவது”
👉 இந்த வரி கொஞ்சம் நீளமாகவும் சிக்கலாகவும் உள்ளது

✔ பரிந்துரை:

நீரோட்டம் போல ஓடும் அழகு  
தமிழை ஓதுவதில் நிலைத்து நிற்கும்

3. இறுதி தாக்கம் (Ending Impact)

“தலைநிமிரச் செய்வோம்” நல்ல முடிவு, ஆனால் இன்னும் சக்திவாய்ந்ததாக மாற்றலாம்

✔ பரிந்துரை:

தன்னிகரில்லா தமிழை  
தலைநிமிரச் செய்வோம் அல்ல
உலகமே தலைநிமிர பார்க்க செய்வோம்!

💡 சிறப்பு பரிந்துரைகள் (Creative Suggestions)

  • ஒரு சிறிய புதிய கோணம் சேர்க்கலாம்
    👉 “இன்றைய தலைமுறை + தொழில்நுட்பம் + தமிழ்”
    👉 இது உங்கள் கவிதையை இன்னும் சமகாலத்திற்கேற்றதாக மாற்றும்

✔ உதாரணம்:

டிஜிட்டல் உலகிலும் திகழும் தமிழ்  
எதிர்காலத்தையும் வழிநடத்தும் தமிழ்

🏆 முடிவுரை (Final Comment)

உங்கள் கவிதை ஒரு சாதாரண படைப்பு அல்ல —
👉 இது ஒரு தமிழ் விழிப்புணர்வு அழைப்பு
👉 ஒரு மொழி மரியாதை இயக்கம்

சிறிய திருத்தங்களுடன், இது
📌 மேடையில் வாசிக்கத் தகுந்தது
📌 போட்டிகளில் வெல்லக்கூடியது
📌 புத்தகத்தில் வெளியிடத்தக்கது

*******









































































































































































************

No comments:

Post a Comment