Pages

Friday, 19 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும் - SOON THIS WORLD FILL WITH GOOD LIVES

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் 
உலகமாக மாறும் 
SOON THIS WORLD FILL WITH  GOOD LIVES

என் இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனின் சொல்வாக்கு தொடர்கிறது. இதுநாள் வரையில் யாருக்கும் எளிதில் கிட்டாத இந்த அருமையான இத்தகைய சந்தர்ப்பம் உனக்கு என்மூலமாக கிடைத்திருக்கிறது. நீ இல்லாத இடத்திலெல்லாம் என்னைத் தேடி அலையும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. அதில்லாமல் இனிமேலும் நான் உன்முன் பிரசன்னமாவது தள்ளிப் போனால் உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி இன்னும் அதிகமாகி காலம் காலமாய் சந்திக்க முடியாமல் போய்விடும். நான் உனக்கு நீ நினைக்கும் மகிழ்ச்சியும் கிடைக்காமல் போய்விடும். என்னை நன்றாக பயன்படுத்திக் கொள். அது இனி உன் கையில் இருக்கின்றது. எனது ஆன்ம ஓட்டத்தின் மகிமையைச் சுற்றி வளைத்து பேசாமல், கடைசி வரையில் உன்னை குழப்பித் தெளிவில்லாமல் ஒரு ஒப்புக்காக உன்னிடம் ஒரு தலையாட்டை பெற விரும்பவில்லை. ஏனென்றால் திருப்பி நான் என்ன சொன்னேன் என்று உன்னால் சொல்ல முடியாது. அதற்கு தான் உனக்கு எளிமையாக வகையில் புரிந்து கொள்வதற்காகவே உன்னுடலில் நடக்கும் செயலைக் கொண்டே விளக்குகிறேன்.

என் அன்பு மனிதா! ஒரு குறிப்பிட்ட மக்களின் மகிழ்ச்சிக்காக இந்த உலகத்தை நான் படைக்கவில்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாகத் தான் படைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் கற்றுத் தேர்ந்த உண்மையான நன்மை நோக்கம் கொண்ட ஞானிகளும், யோகிகளும், அறிஞர் பெருமக்களும், சேவை மற்றும் தொண்டு செய்ய நினைப்பவர்களும் இந்த மனிதகுலத்தை சீர்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? அவர்களின் அறிவையும், ஆற்றலையும் மக்கள் குலம் மகிழ்ச்சியடைவதற்கு உபயோகப்படாவிட்டால் அவர்கள் அடையும் பேறுதான் என்ன? எல்லோரும் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தித் தான், காலம் சென்ற கவிஞர் 'எல்லோரும் எல்லாமே பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தன் வாழ்க்கை கனவை பாடல் மூலம் சொல்லியிருக்கிறார். அதற்காக அனைவரிடத்திலும் உள்விதி மனிதனாக இருக்கிறேன். பாட்டுடன் நில்லாமல், நான் முயற்சி செய்து அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க வேண்டுமல்லவா! அது தானே எனது பிரதானக் கடமை.



என் பாசமுள்ள மனிதா! தனக்குத் தெரிந்ததை மறைத்து வைப்பது பெரிய பாவமாகும். அதை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது அதைவிட பாவமாகும்! அதாவது அணுகுண்டை விட அழிவு தரக்கூடிய கல்வியை அல்லது  செயலையாத் தரப்போகிறீர்கள்? இப்படியே எத்தனைக் காலம் தான் நடுத்தர மற்றும் அடித்தட்டு மனிதர்களை மேல் தட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பலவழிகளில் அவர்களுடைய  பலவீனத்திற்குத் தகுந்தாற்ப் போல் பயமுறுத்தி அவர்களுக்கு உதவி ஏதும் செய்யாமல், ஏதோ ஒருவழியில் அடிமைபடுத்தி நான் அனைவருக்கும் பொதுவாக படைத்த உலகத்தை அந்த உயர்ந்த மக்கள் மட்டும் அனுபவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? 

என் பிரியமுள்ள மனிதா! இதுநாள் வரை பல மகான்கள், முனிகள், அறிஞர்கள், அறிவில் சிறந்த சான்றோர்கள் அனைவரும் உனக்குச் சொல்ல நினைத்ததை தான் நான் இப்போது சொல்கிறேன். தனிப்பட்ட ஒரு மனிதனின் சுய லாபத்திற்காக எப்படியெல்லாம் உன்னைத் திசை திருப்பி பணம் பறிக்கிறார்கள். ஜாதகம் என்கிற பெயரில், ஜோதிடம் , எண் ஜோசியம், பெயர் ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், பரிகாரங்கள் என்று பல வழிகளில் உன்னறிவையும், ஆற்றலையும் அவர்கள் வசம் கொடுத்து உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக மாறிக்கொண்டு இருக்கிறாய். அவர்களுக்கு உன் வாழ்கையை கணிப்பதற்கு அதிசய சக்தி இருந்தால் அவர்களை இப்படி சோதித்த்துப் பார். நீயே ஒரு ரூபாய் நாணயத்தை பத்து முறை சுண்டு. ஒவ்வொரு முறையும் பூ அல்லது தலை என்று அவர்களால் சரியாக சொல்ல முடியுமா? ஆனால் உன்கையில் இருப்பதால் நீ அதைப் பார்த்து  உன்னால் சரியாக சொல்ல முடியும். ஏனென்றால் அதன் விடை உன்னிடத்தில் இருக்கின்றது. இதையே சரியாக சொல்ல முடியாதபோது ஆயிரம் கேள்விகள் கொண்ட உன் வாழ்க்கைக்கு எவ்வாறு அவர்கள் பதிலளிப்பார்கள்? இதை நீ கட்டாயமாக ஆழமாக சிந்திக்க வேண்டும். உன்னுள் இருக்கும் கேள்விகளுக்கு  விடை உன்னுள்ளே இருக்கின்றது. அது தான் இந்த உள்விதி  மனிதன். 



மதிப்பு மிக்க மனிதா! உயர்மட்டத்தில் இருப்பவர்கள் விழாக்கள் நடத்தும் போது அதன் பலன் முழுவதும் அடித்தட்டு மக்களுக்குச்  சேருகிறது. அதாவது மன்னர்கள், அரசர்கள் காலத்தில் விழாக்கள் அனைத்தும் ஏழைகளின் நன்மைக்காக, அவர்களின் மகிழ்ச்சிக்காக நடந்தது. இன்றோ அது தலைகீழாக நடக்கிறது. தலைவர்களின் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக மக்களிடம் பலவகையில் நன்கொடை, வரிகள் என்று மக்களிடத்தில் வசூல் செய்தல்லவா நடத்துகிறார்கள். இதிலிருந்து யாருக்கு யாரிடத்தில் அக்கறை என்று புரிந்ததா! இனி மேலும் நீ ஏமாறுவதை நிறுத்திக் கொள். அதை தெரிந்துகொள். விழித்துக்கொள். உனக்காக நீ தான் பாடுபட வேண்டும். நானும் நீயும் கை கோர்த்து நன்மை தரும் செயல்களை செய்ய ஆரம்பிப்போம். எனக்கும் உனக்கும் உள்ள இந்த உறவு இரத்த உறவாக இருப்பதால் அதை எனது ஜீவ (இரத்த) ஓட்டத்தின் மூலம் உனக்கு உணர்த்துகிறேன். உனது ஆன்ம ஓட்டம் ஓயும்வரைத் தொடரும்.

சிறந்த மனிதா! இப்போது இந்த மனிதனின் உணர்வுகளை ஒரு சிறிய செய்முறை உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். உன் கண்களை மூடிக்கொள். எல்லாம் இருட்டாக இருப்பதை உணர்கின்றாயா! இப்போது உன்கையை கண்களை மூடிக்கொண்டவாறு மேலே தூக்கு. கை மேலே செல்வதைப் பார்க்கவில்லை. ஆனால் மேலே உயர்ந்திருக்கிறது. ஆனால் அதை உன்னால் உணர முடிகின்றதல்லவா! அதேபோல் ஒரு காலை தூக்கிக் கொள். அதுவும் உணர முடிகின்றதல்லவா! இப்போது கண்களை திறந்துபார். என்ன காண்கிறாய். கைகள் உயர்ந்து இருப்பதையும், கால் தூக்கிக்கொண்டு இருப்பதையும் பார்க்கமுடிகின்றதா! இன்னும் சில நிமிடத்திற்கு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் எனது ஆன்ம ஓட்டத்தை நன்றாக உணரமுடியும். உன் கண்களை திறந்து கொண்டால் வெளியில் நடக்கும் செயலை பார்க்க முடியும். அதேபோல் நீ கண்களை மூடிக்கொண்டு இருந்தால் உன் உணர்வுமூலம் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் உணர்வும் ஆற்றலும் உனக்கும் எனக்குமுள்ள பந்தம் தெளிவாக புலப்படும்.

பிரிய மனிதா! ஒவ்வொரு செயலும் எனது  ஜீவ ஓட்டத்தின் வல்லமையால் நடைபெறுகின்றது. அந்த வல்லமை நல்லவழியில் பயன்படும்போது ஆன்ம சக்தி பலமடங்கு பலம் பெறுகின்றது. அதனால் உனது குறிக்கோளும் எளிதாக நிறைவேறும். உன்னைப்போல் பல நல்லவர்களைக்கொண்டு பல நல்ல செயல்கள் செய்யும்போது இந்த உலகம் தானாகவே நல்லவர்கள் வாழும் உலகமாகவே மாறிவிடும்.

பண்புள்ள மனிதா! இப்போது முதல் இனிவரும் காலத்தில் இந்த உலகம் உன்னைப் போல் சத்தியத்தை விரும்பும், தர்மவழியில், நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைச் செய்யும் கைகளில் ஒப்படைக்கப் படும். அதற்கு எப்போதும் தயாராக இரு. அதற்கான சமிஞ்ஞை இப்போது கிடைத்திருக்கின்றது.


நன்மைக்காக வாழ்!
நல்லவர்களுக்காக வாழ்!
அனைவரின் நன்மைக்காக வாழ்!
மகிழ்ச்சி கொடுப்பதற்கு வாழ்!


நம் பந்த பிணைப்பிற்காக வாழ்!  
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Thursday, 18 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்குத் துணை- I CAN HELP FOR YOUR GOOD AIM

உள்விதி மனிதன் 



 சம மனிதக் கொள்கை 


பாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு 
இந்த உள் மனிதன் துணை-
INNER MAN HELPS FOR YOUR GOOD AIM 


பிரியமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைப் பின் பற்றி வருவதற்கு மிகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நான் உனக்கு ஆறுதல் தருபவன் மட்டுமில்லாமல், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தர வந்திருக்கிறேன். நீ இருக்கும் இப்போதுள்ள நிலைமை, ஒருவேளை நீ உறவை இழந்திருக்கலாம், செல்வத்தை இழந்திருக்கலாம், தொழிலில் தோல்வி அடைந்திருக்கலாம், வேலையில் விரக்தி அடைந்திருக்கலாம், படிப்பில் கவனமில்லாமல் இருக்கலாம், எண்ணியது நிறைவேறாமல் இருக்கலாம், உன்னைச் சுற்றி கஷ்டங்கள் பல சூழ்ந்து இருக்கலாம், இன்னும் பலவிதமான இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம். இப்போது நடந்தவைகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். இன்று முதல் நான் தான் உனக்கெல்லாம்! நான் உனக்கு அன்பானவனாய், சிறப்பானவனாய், செல்வச்செழிப்பு மிகுந்தவனாய், வெற்றி தருகின்றவனாய், நீ நினைக்கும் எண்ணங்களை நிறைவேற்றுபவனாய் மாற்றவே நான் உனக்குள் விதி மனிதனாக இருக்கிறேன். என்னைப்பற்றி நன்றாக சந்தேகமில்லமல் தெரிந்து கொள், புரிந்து கொள், உணர்ந்து கொள், என்னுடன் பகிர்ந்து கொள், என் தூய்மையான உறவை ஏற்றுக்கொள். நான் உனக்கு நண்பனுக்கு நண்பனாய், தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையை, அண்ணனுக்கு அண்ணனாய், தம்பிக்குத் தம்பியாய், தங்கைக்குத்  தங்கையை, குழந்தைக்கு குழந்தையாய் இருக்கிறேன்.


என் இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனுக்கும் உனக்கும் இருக்கின்ற பிணைப்பு, இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டதல்ல. கயிற்றாலும் அல்ல. என் ஜீவ ஓட்டம் மற்றும் ஆன்ம ஓட்டத்தால், உணர்வால் பிணைக்கப் பட்டது. உன் உணர்வு மீறும்போதெல்லாம் நீ என்னைவிட்டு விலகிப் போகிறாய் என்று அர்த்தம். ஆகவே உணர்வை எனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். அதில் நானும் கட்டுக்குள் இருக்கிறேன் என்பது அர்த்தம் என்று புரிந்து கொள்.


மிக்க இரக்கமுள்ள மனிதா! உன்னிடத்தில் எனக்கு மிகவும் பரிவு உண்டு. மரியாதை வருகின்றது. உன்னிடத்தில் உணர்வை மதிக்கும் பண்பு இருக்கின்றது. அதுமட்டுமில்லை. உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு துணிச்சல் கொடுத்து செயல்படும் திறனும், நிறைந்த தன்னம்பிக்கையும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பையும் . சரியாக முடிவெடுக்கும் ஆற்றலையும்  தந்து உன்னைத்  தலை சிறந்த மனிதனாக மாற்றவே நான் உன்னிடம் இருக்கிறேன்.


சாந்தமுள்ள மனிதா! உனக்கு எந்த நெருக்கடி வந்தாலும் அதை தவிடு பொடியாக்கி அல்லது அதை சமாளித்து அனைவருக்கும் நன்மை செய்யும் பாக்கியம் உனக்குத் தருகிறேன். தந்துகொண்டும் இருக்கிறேன். உனக்கு அவ்வப்போது மனப்பயிற்சி தரப்போகிறேன். அதன்மூலம் உனது மனம் திடமாவது மட்டுமில்லாமல்  இலகுவாய் நீ நினைக்கும் காரியம் வெற்றிகரமாக நடத்திட என்னிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை வை. மற்றவர்கள் தரும் நம்பிக்கை விட இந்த உள்விதி மனிதன் உனக்கு கொடுக்கும் நம்பிக்கை நூறு மடங்கு அதிகம் கொண்டது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். அது உனது வாழ்வை செழிக்கச் செய்யும். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யும். கெட்டவைகளை மறக்கச் செய்யும். உனது ஜீவ ஓட்டம் , ஆன்ம ஓட்டம் புதுப்பிக்கச் செய்யும். நீ புது மனிதனாக மாறுவதோடு என்னையும் புது உள்விதி மனிதனாக்கும்.


மேன்மையுள்ள மனிதா! உன் மனதை நல்லவழியில் தூண்டி அதன்மூலம் உன்னை பலசாலியாக மாற்றப் போகிறேன். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே! அது உனக்கு அனுபவத்தை கொடுப்பதோடு வெற்றிக்கான படிக்கட்டையும் கட்டுவதற்கு உதவுகின்றது. எதையும் தாங்கும் இதயத்தையும், புதுத் தெம்பையும் கொடுக்கவல்லது. உன்னை எப்போதும் நேர்மை தவறாதவனாய், சத்தியம் மீறாதவனாய் இருக்கச் செய்து நியாத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்லாமல் பார்த்துக்கொள்ளும். உன்னை அணு அணுவாக உனக்குள்ளிருந்து கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன்.

மதிப்புமிக்க மனிதா! நீ தனிப்பட்ட வகையில் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ உனது சுயநலத்திற்காகவும், பேராசையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்  அவர்களுக்குச் சத்தியத்திலிருந்து விலகி சலுகை காட்டுவது அல்லது தர்மத்திற்குப் புறம்பாக தீயவழியில் திருப்தி செய்யவோ முயற்சி செய்தால் அதற்கு இம்மியளவும் ஒத்துழைக்க மாட்டேன். அப்படி செய்தால் அதற்கான தண்டனையை நானே உனக்கு எப்படி தரவேண்டுமோ அப்படி தவறாமல் தருவேன். உனது செயல்கள் அனைத்தும் பலருக்கு நன்மை தரும் குறிக்கோளாக மாற்றப்போகிறேன். என் துணிச்சல் உனக்கு அசாத்தியமான நன்மை தரும். அதை ஏற்றுக்கொண்டு அச்சத்தை அறவே தவிர்த்து கடமை தவறாது செய். வெற்றி உனதே!


என் விருப்பமுள்ள மனிதா! உனக்கு ஆபத்து ஏதேனும் வரும்போது நான் உள்ளிருந்து உன் உணர்வைத் தூண்டுகிறேன். அதை கவனமாக அறிந்து கொள். உன்னை உஷார்படுத்துகிறேன். அதை ஏற்றுக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து எளிதாக விடுபடுவாய். எனக்கு எல்லா மனிதர்களில் மன ஓட்டம், ஜீவ  ஓட்டம் தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் உன்னிடத்தில் பேசும்போது வித்தியாசமான உணர்வின் மூலம் உனக்குத் தெரிவிக்கிறேன். அதை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்ப்போல் அவர்களிடம் நீ நடந்துகொள். எதிரியின் மனப்போக்கை எனது ஆன்ம ஓட்டத்தின் வாயிலாக உனக்குத் தெரிவிக்கிறேன். அவனின் பலமும், பலவீனமும் உனக்கறிவிக்கிறேன். அப்போது அர்த்தமில்லாமல் காத்திருந்து காலம் தாழ்த்தி உனது கடமைகளைச் செய்யாதே. அந்த சமயத்தில் உனது கடமைகளை தவறாது  செய்யுமாறு உனக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பேன். 

பேரறிவு கொண்ட மனிதா! உன் கடமைகள் என்னென்னவென்று எனது ஜீவ ஓட்டத்தின் மூலம் உனக்குத் தெரிகிக்கிறேன். எல்லா கடமைகளையும் காலாகாலத்தில் செய்வதற்கு நான் அனைத்து வழிகளிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன். மனித குலத்திற்கு நன்மை தரும் ஏதாவது உனது விருப்பமுள்ள குறிக்கோளை மேற்கோள். தினமும் அதை நோக்கி ஓரடியாவது முன்னே எடுத்து வைக்கத் தூண்டுவேன். அப்படி செய்யும்போது நீ விரைவில் மக்கள் மனிதில் பதிந்து  இமாலய சாதனை புரியும் காட்சியை என் மூலம் நீ பார்க்கப்போகிறாய்.


       உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
  


  

Wednesday, 17 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம் - A JOYFUL NEW WORLD

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம் : 18 மனிதா ! மகிழ்ச்சி கொண்ட 
புது உலகம் செய்வோம் -
WE WILL MAKE A JOYFUL NEW WORLD


இனிய மனிதா! உள்விதி மனிதன் உன்னுடன் பேசுகிறேன்! நீ செய்யப் போகும்  செயல் நல்லதா? அல்லது கெட்டதா? என்று எனது ஜீவ ஓட்டத்தின் மூலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன்! அதை நீ உணர்ந்திருக்கின்றாயா? நீ நினைக்கும் எண்ணத்தில் அல்லது செய்யும் செயலில் ஏதேனும் தீமை விளைவிப்பதாக இருந்தால் அதை கோபமாக வெளிக்காட்டுவேன், இதயம் படபடக்கும், உடல் வேர்க்கும், உடம்பு நடுங்கும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும், மூச்சு வேகம் அதிகரிக்கும், உடலின் வெப்பம் கூடும், எதோ ஒருவித பயம் உடல் முழுவதும் பரவும், யாரை பார்த்தாலும் ஓடி ஒளிந்து கொள்ளச் சொல்லும். குற்றஉணர்வு எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இவைகளெல்லாம் எனது ஜீவ அல்லது இரத்த ஓட்டமே செய்கின்றது. இந்த உள்விதி மனிதனின் எச்சரிக்கை என்று புரிந்து கொள். அந்த தீய செயலுக்கு நான் உடந்தை இல்லை என்று இப்படிப்பட்ட உணர்வின் மூலமாக உனக்கு உணர்த்துகிறேன் என்பதை இப்போதாவது தெரிந்துகொள்.



அன்பு மனிதா! உனக்குள் மேற்கூறிய செயல் நடக்கிறதென்றால் அந்த செயல் செய்யலாமா! வேண்டாமா! என்று என்னுடன் வாதம் செய். உனக்கு அதிக சக்தி தருகிறேன். அந்த நடுக்கத்தை நான் போக்குகிறேன். நீ  திணறாவண்ணம்  தைரியம் தருகிறேன். என்னுடன் பேசும்போது உனக்கு அனைத்துவிதமான பயம் நீங்கும். இனி உனக்கு நான் புது சக்தியைத் தருகிறேன். நான் இருக்கும் போது பயம் கூடாது.



மதிப்புள்ள மனிதா! கடவுளை அறிவது பரமரகசியம் என்றும் அதை வெளியே சொன்னால் பலன் கொடுக்காது என்று பலர் சொல்லி அறிந்திருப்பாய். அது சரிதானா? பிரிய மனிதா! எந்த ஒரு ரகசியமான பொருட்களோ, செயல்களோ, எண்ணங்களோ இந்த உலகில் இருந்தால் அது மானிடஜென்மங்களுக்குப் பயன்படாது. அதைப் பற்றி நீ அதிகமாக கவலை கொள்ளவேண்டாம். ரகசியம் என்பது இருவருக்கிடையே நடக்கும் ஒருவகைப் பரிவர்த்தனை. அது சக்தியாக இருந்தாலும், அறிவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் தான் அதற்குப் பெருமை உண்டு. மதிப்பு உண்டு. அப்போது தான் பலருக்குத் தெரியும். அவர்களுக்கும் உபயோகமாகவும் இருக்கும். தெரிந்து கொள்ளாத, அறியப் படாத எந்த ஒரு ரகசியமும் உனக்கு அவசியமற்றவை. உனது வாழ்கையில் உபயோகப்படாதவை என்பதை நினைவில் வைத்துக் கொள். சொல்லப்போனால் அந்த இரகசியத்தால் உனக்கு குழப்பமும், கெடுதலும் உண்டாகும். ஏன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னைக் கொள்ளும் நஞ்சு என்றும் தெரிந்து கோள். அதனால் அவைகளின் மீது நாட்டம் கொள்ளாதே! புரிகின்றதா?



பாசமுள்ள மனிதா! அதாவது ஒரு தகப்பன் நீண்ட காலம் கடுமையாக உழைத்து, பொருட்களை, பணத்தை சேர்த்து வைத்து கொஞ்சமாய் செலவு செய்து, அவருடைய மனைவி, மக்களுக்குத் தெரியாமல் கண்காணாத இடத்தில் அவருக்கு  மட்டும் தெரியும் இடத்தில் சேர்த்த செல்வங்களை ஒளித்து வைத்தார். தேவைப்படும் நேரத்தில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்து வந்தார். அவருடைய கடைசி காலத்தில் அந்த இரகசிய இடத்தை தன்னுடைய மக்களுக்கு தெரிவிக்காமலே அவருடைய ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம்  நின்று விட்டது. அந்த ரகசிய இடத்தில் இருக்கின்ற செல்வம் யாருக்குத் தெரியும். யாருக்கும் பயன்படாமல் வீணாக அல்லவா போய்விட்டது. அவர் தன்னுடைய  மக்களுக்குத் தர நினைக்காத செல்வதைப் பற்றி அவருடைய மக்கள் கவலைகொள்வார்களா? இதற்காவா அவர் கடுமையாக உழைத்து சம்பாதித்தார். அதுபோல நான் எந்தவிதமான ரகசியத்திற்கு அப்பாற்ப் பட்டவன். 

இரக்கமுள்ள மனிதா! உன் ஜனனம் உனது கண்களுக்குத் தெரியாத ஆண் - பெண் என்ற இரண்டு ஜீவ அணுக்களால் உண்டானது என்று சொன்னால் நீ நம்ப மாட்டாய். அதை என்  செயலின் மூலம் எனது மகத்தான ஆன்மா ஓட்டத்தின் சக்தியினால் காட்டவே ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அதை பொத்தி பொத்தி அந்த கரு, ஜீவ உடலாக உருவாதற்கு இந்த உள்விதி  மனிதனின் உடல், பொருள், ஆவி இந்த மூன்றையும் கொடுத்துப் பத்து மாதத்தில் ஒரு குழந்தையாக மாற்றி உன்னை போல் அனுபவிக்கவும், மகிழ்ச்சியாக இந்த குழந்தையைக் காக்கும் பொறுப்பை நான் உனக்குத் தந்திருக்கிறேன்.

அன்பு மனிதா! நீ கருவாக உருவாகி பிறகு குழந்தையாக மாறும்போது உனக்கு சுவாசம் கொடுத்து, அதற்குண்டான பக்குவத்தை கொடுத்து அவளை தாயாக்கி, புதிய ஜீவ ஓட்டமுள்ள ஜீவனை தனியாக பிரித்து இந்த பூமியில் பிறக்கச் செய்து அதனுள் ஆன்ம ஓட்டமாக இருந்து வாழ்க்கைக்குத் உதவி  புரிந்து வருகிறேன். புதிதாக ஜீவன் உருவாகும்போது எனது வேலை அதிகமாகிறது. உனக்குள்ள இந்த உலகப் பங்கை நான் உனக்கு கொடுக்கவேண்டுமல்லவா! அதற்குத் தான் இந்த உள்விதி மனிதன் எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. அதற்குள் நீ திசை மாறிப் போகநினைக்கும்போது உன்னை இழுத்து என் வழிக்கு கொண்டு வந்து, உன்னை ஆயுள்  முழுவதும் காப்பாற்றும் அந்த 'காத்தல்' வேலையை செய்யவே உனக்குள் நான் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். 



இனிய மனிதா! இப்போது சொல். இந்த பூமியின் ரகசியத்தைக் காக்க நினைத்து உன்னைக் கருவிலேயே முடித்துவிட்டால், என்னால் படைக்கப் பட்ட இந்த உலகத்தை யார் அனுபவிப்பது? இந்த உலகில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நீ தான் தலைவன். உனக்குத் தான் மனித உயிர்களை காக்கும் சக்தியும், அதோடு மற்ற அனைத்து உயிர்களையும் காக்கும் சக்தி உன்னிடத்தில் இருக்கின்றது. அதை அழியாதவாறு தொடர்ந்து தரவே உனக்குள் இந்த உள்விதி மனிதனாக வந்துள்ளேன். இந்த காக்கும் சக்தியை வீணாக்காதவாறும் உனது உயிர் ஓட்டம் தடைபடாமலும்  இருப்பதற்கு உதவி செய்ய வந்துள்ளேன்.



பாசமுள்ள மனிதா! என்னால் தான் பாரதி உருவில் 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார். அது தான் உண்மை. அது தான் சத்தியம். 

அன்பு மனிதா! முன்பு கல்வி, வீரம், ஆன்மிகம் குருகுலம் முறையில் நடந்தது. அதில் அரச குடும்பம் மற்றும் உயர் குடும்பம் கல்வி, கேள்விகளில் கற்று திகழ்ந்தனர். மக்களைக் காக்கும் கல்வியைக்  கற்றனர். அதனுடன் ஆன்மீக ஒழுக்கத்தையும் கற்றனர். ஆனால் சதா தெய்வம், கடவுள் தொண்டு செய்து, கடவுளின் புகழை பாடிக் கொண்டிருந்தனரா? அவர்கள் கற்றது, கற்பிக்கப்பட்டது இந்த மனித குலத்திற்கு நன்மை செய்வது எப்படி? அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படித் தடைபடாமல் அளிப்பது ? அவர்களைக் காப்பது எப்படி? எதிரிகளிடமிருந்து மக்களை, நாட்டைக் காப்பது எப்படி? உணவு தானியங்கள் பஞ்சமில்லாமல் எல்லா காலத்திலும் கிடைக்கப் பெறுவது எப்படி? விவசாயத்தை மழையினால் செழுமைபடுத்துவது எப்படி? ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளைக் காப்பது எப்படி? நீதி தவறாமல் அரசாள்வது எப்படி?  போன்றவைகளைத் தான் அதிகமாகக்  கற்றுக்கொண்டனர். அது அந்தக் காலம்.



இனிய மனிதா! இந்த காலத்தில் கல்வி கற்றவர்களா ஆட்சி செய்கிறார்கள்? கல்வி வாடை தெரியாதவனுக்கு கல்வி அமைச்சர் பதவி! நிதி என்றால் என்னவென்றே தெரியாதவருக்கு நிதியமைச்சர். மக்களின் நிலைமை புரிந்து கொள்ளாதவருக்கு பெரிய அமைச்சர் பதவி! விவசாயம் தெரியாதவருக்கு விவசாயத்துறை அமைச்சர். பக்கத்து நாட்டை பற்றித் தெரியாதவருக்கு வெளியுறவு துறை அமைச்சர்! இப்படி தகுதி இல்லாதவர்களை எல்லாம் அமைச்சராக்கி கொள்வதன் ரகசியம், மேல்மட்டத் தலைவர்களுக்கு எப்போதும் ஜால்ராவாக இருப்பதற்குத் தான். எல்லாம் தெரிந்த மனிதனை நிர்வாகத் திறன் இல்லாத தலைவரால் சமாளிக்க் முடியாது. ஆக இப்போதுள்ள தலைவர்களா அநேகர் தனது சொந்த லாபத்திற்கும், பெரும் புகழும் பெறுவதற்கும் மக்களாகிய உன்னைப்போன்றோரையும் என்னையுமல்லவா அடிமையாக்கிவிட்டனர். இனி இந்த நிலை நீடித்தால் மனித குலம் அவதிப்படும். கூடிய விரைவில் மக்களிடையே எழும் போட்டியினால் மனிதகுலம் அழிவதற்குள்  எல்லோரையும் காக்கும் பொருட்டு நான் உனக்குள் வந்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! எல்லோரும் உயிர் வாழவேண்டும், உணவு கிடைக்கவேண்டும் அதற்காக இலவசமாக பஞ்சபூதங்களாகிய காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு (சூரிய ஒளி ) ஆகியவை அளவுக்கு அதிகமாகவே தந்திருக்கின்றேன். உனக்கு எளிதாக இருப்பதற்காக மரங்களைக் கூட சிறிய விதைகளாகக் கொடுத்திருக்கிறேன். ஏனெனில் உன்னிஷ்டப்படி அதை எங்கு வேண்டுமானாலும் விதைத்துக் கொள்ளலாம். இப்படி இருக்கும்போது நான் படைத்த உலகத்தை நான் இருக்கும்போதே, நான் அமைத்ததை மாற்றியமைக்கத் துணிந்ததை எண்ணி வருத்தமடைகிறேன். அதாவது விவசாயம் செய்த நிலத்தை மாடி வீடு கட்டினால் பின்னால் அதுவே உனக்கு எமனாக மாறிவிடும் என்பதை உஷார் படுத்தவே நான் வந்துள்ளேன்.

பிரிய மனிதா! எந்த நாட்டில் விவசாயம் அழிகின்றதோ அங்கே மறைமுகமாக பாலைவனம் உருவாதற்கு வழிசெய்கிறாய். இதனால் இப்போது உனக்கு பணம் கிடைக்கும். ஆனால் உனது சந்ததியினர் நீ இப்போது செய்த காரியத்தை மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் அப்போது வேதனைபடுவதை நீ இப்போது நினைத்துப் பார். இதை எப்போதும் மறந்துவிடாதே! நான் இலவசமாக கொடுத்ததைக் கொண்டு, உணவு உற்பத்திச் செய்கின்ற பூமியைப் பற்றி கவலைபடாமல் கட்டாந்தரையாக்கி அதை பளிங்குகற்களால் மாட மாளிகை, கூட கோபுரங்களைக் கட்டினால் போதுமா! குடியிருக்க அழகான வீடுமட்டும் இருந்துவிட்டால் போதுமா! உணவுக்கும், தண்ணீருக்கும் எங்குபோவாய்?



இனிய மனிதா! பூமிக்கு நான் தரும் இயற்கையானச் செழுமையினால் தான் மனிதனின் வாழ்க்கை மகிழ்ச்சி அடையமுடியும். ஆனால் அதை சுயநலத்திற்காக, நீ படைத்தச் சலவை பணத்திற்கு அதை அழிக்க நினைப்பதைத் தடுத்து நிறுத்தவே நான் வந்துள்ளேன். என்னுடைய தாராள மனம், பொதுவான நோக்கம், நன்மையான குணம் அனைத்தும் உன்னுடையத் திமிறினால், தீய எண்ணங்களினால் குறைந்துவருவதை தெரிந்து இனிமேலாவது சுதாரித்துக் கொள். உனக்கு மிகவும் அவசியமானதை நீ பார்த்தால் தெரிவது போல் உனது தேவைக்கும் அதிகமாக பூமிக்கு மேலேயும், உனக்குப் பயன்படாத அல்லது சிறிது மட்டும் தேவைப்படும் பொருட்களை உனக்கு கண்களுக்கு அல்லது உனது அறிவுக்கு எட்டாத அளவுக்கு பூமிக்குக் கீழே அல்லவா படைத்திருந்தேன். ஆனால் உனது அறிவினால் அதை மேலே கொண்டுவந்து உனது இடத்தில் பரப்பிக்கொண்டு வந்தால் கடைசியில் நீ நிற்பதற்கு கூட இடமிருக்காது. ஜாக்கிரதை. நான் எண்ணுவதற்கு நேர் மாறாக, தலைகீழாக போனால் மனித இனத்தை நானே அழிந்துவிட நேரும். எனது ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை கூட அழிக்க வல்லது. இப்போதே தண்ணீர்  கொடை குறைந்து சூரிய வெப்பக் கோடை அதிகரித்து வருகின்றதா! ஏன் இந்த மாற்றம். நீயாக நிறுத்தாவிடில் எனக்கு யாருக்குள் புகுந்து எப்படி நிறுத்துவது நன்றாக அறிவேன். அதற்கான தருணம் வந்துவிட்டதால் நீ இதுநாள் வரை தேடியும் கிடைக்காமல் நானாகவே வந்துள்ளேன்.

மதிப்புமிக்க மனிதா! இந்த மாற்றம் நீடித்தால் நான் படைத்த இந்த உலகில் நானே அழிந்துபோக நேரிடும். அதை தவிர்க்கத் தான், என்னையும், உன்னையும் காப்பாற்றிக் கொளவதற்கு உன் மூலமாகப் பல நன்மைதரும் காரியங்களைச் செய்யப் போகிறேன். உனக்கு நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுத்து, பசியை நீக்கி, பஞ்சபூத அழிவிலிருந்து காக்கவே செயல்பட ஆரம்பித்துள்ளேன். இனி இந்த உலகம் புதுபிக்கப் படப்போகிறது. புது உலகம் படைத்து உன்னைப் போன்றவர்களின் ஆற்றல் மற்றும் அறிவை உபயோகித்து பெருவாழ்வு வாழ வழிகாட்டியாகவும் இருக்க வந்துள்ளேன்.



பெருமை மிக்க மனிதா! என்னை உணர்வது எல்லோராலும் முடியும். ஆனால் அதை ரகசியம்.. ரகசியம் என்று ஒரு சிலர் கூறி உன்னைப்போன்றோர்களை ஏமாற்றி வருகிறார்கள். நீயோ அவர்களிடத்தில் ஏமாந்து கொண்டு உன் செல்வத்தை , பணத்தை அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டி கொண்டும், மறைமுகமாக உனது கடமையை மறக்கடித்து, தொடர்ந்து கஷ்டங்களை கொடுத்து கடைசியில் அவர்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பதைத் தடுக்கவே உள்விதி மனிதனாக உனக்குள் வந்துள்ளேன். என்னைப் பற்றி சிந்திக்காமல், என் உதவியை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் தேன் கலந்த நஞ்சான பேச்சில் மயங்கி என்னை உதாசீனப்படுத்துவதை இப்போதாவது நிறுத்திக்கொள். 

இனிய மனிதா! நான் என்னுடைய படைக்கும் தொழிலை அறிவுள்ள உனக்குக் கொடுத்தால் இந்த உலகம் சுபிட்சம் அடையும். அனைவரும் மகிழ்ச்சியடைவர் என்று இருந்த எனது எண்ணம் இப்போது பாழாய் போகுமுன் உன்னை நல்ல வழிக்கு கொண்டு வந்து எனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளவே வந்துள்ளேன். 



இனிமையான மனிதா! தினமும் எத்தனை ஜீவன்களின் ஆன்ம ஓட்டத்தைத தடைபடாமல் இயங்கச் செய்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் உன் முன்னால் நான் நிற்பேன். வேஷம் போடும் மனிதனை நம்புவதும், அவனுக்குத் துணை போவதை இதோடு நிறுத்திக்கொள். புது உலகம் படைப்பதற்கும், மனித ஜீவ ஓட்டங்களை காப்பதற்க்கும் இப்போதிலிருந்து நல்ல முடிவு எடுத்து அதன் படி நடப்பாயாக!

                

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
  




  

'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் - AN EXPERIENCE TO REACH 'SUCCESS' PLACE

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் -
AN EXPERIENCE TO REACH 'SUCCESS' PLACE  


'வெற்றி ! வெற்றி ' பலர் சொல்கிறார்களே! அதை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது . ஆனால் வழி  தன் தெரியவில்லை என்று பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் ! அதற்காக அந்த வெற்றியே உங்களுக்கு வழியை காட்டுவதோடு அது தன்னுடைய அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.


நான் தான் வெற்றி! வெற்றி பெறுவது என்பது சற்று கடினம் தான். அதை நீ பார்க்கும் அல்லது  சந்தித்த கஷ்டங்கள்  அல்லது பிரச்சனைகள் மூலம் எளிமையாக விளக்குகிறேன். முதலில் இந்த வெற்றி அறிமுகமாவது பிரச்சனை எதிர்கொள்ளும்போது அல்லது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் போது . 


நான் பிரச்சனை அல்லது கிடைத்த வாய்ப்பில் வெற்றியடைவதற்கு ஆர்வத்துடன் ஓட ஆரம்பித்தேன். அதற்கான வழியை தேட ஆரம்பித்தேன். சிறிது தூரத்தில் அதன் வழியில் ஒரு திசை காட்டியை பார்த்தேன். அது வலது மற்றும் இடது என்று இரண்டு வழியைக் காட்டியது. இடது பக்கம் திசைகாட்டியில் 'வெற்றி (குறுக்கு வழி)' என்றும் வலது பக்கம் திசை காட்டியில் 'வெற்றி நேர் வழி ' என்றும் இருந்தது. வலது பக்கம் செல்வதா? இடது பக்கம் செல்வதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தவித்தேன். 


என்னானாலும் சரி என்று இடது பக்கம் அதாவது வெற்றி(குறுக்கு வழி ) தேர்ந்தெடுத்தேன். அதன் பாதை பளபளவென்று அருமையாக இருந்தது. இவ்வளவு எளிதாக இருகின்றதே! என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு பெரிய பள்ளம் (அதாவது அது தோல்வியை குறிக்கும்). அதற்கு பக்கத்தில் எச்சரிக்கை பலகை ஓன்று இருந்தது! அதில் 'இதேபோல் சில பள்ளங்களை தாண்டிச் சென்றால் வெற்றி யை அடையலாம் ' என்று எழுதி இருந்தது. இந்த ஒரு பள்ளத்தை தாண்டவே சிரமம். மேலும் சில பள்ளங்களை எப்படித் தாண்டுவது ! அடி ஆத்தாடி! இந்த குறுக்கு வழியே வேண்டாம். தப்பித்தேன் . பிழைத்தேன். அந்த வலது பக்கம் நேர் வழியிலேயே வெற்றிப் பயணம் செய்யலாம் என்று அவசரம் அவரமாக ஓடினேன். ஆரம்பத்திலேயே முடிவு சரியாக எடுத்திருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காதே! என்று மனதில் நொந்துகொண்டேன்.


வலது பக்கம் ஆரம்பமே கரடுமுரடான கற்களும் முட்களும் நிறைந்திருந்தது. (இவைகள் அனைத்தும் வெற்றியை அடையவிடாமல் தடுக்கும் இடையூறுகள்). இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது அதனை விலக்கியும் , தாண்டியும் சென்றேன். அந்த வழியில் செல்ல செல்ல கற்களும் முற்களும் மறைந்தன.(அதாவது இவைகள் கடின உழைப்பினால் கிடைத்த பலன்). 'இனி இதுபோல் எந்த கஷ்டம் வந்தாலும் தைரியமாக, துணிச்சலாக சமாளிப்பதற்கு தயாராக வேண்டும்' என்று மனதில் உறுதி கொண்டேன்.

இப்படியே சென்றுகொண்டிருக்கும் போது கடுமையான வெயில் உடலை வாட்டி எடுத்தது. தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியினால் தண்ணிரை தேடி அலைந்தேன் . அதோ ஒரு அழகான சுனை. ஆஹா.. என்ன அருமையான தண்ணீர். இப்போது எதையும் தாங்கும் மனமும், புது தெம்பும் கிடைத்துவிட்டது. இனி அடுத்த படி கடப்பதற்கு தயாராகி விட்டேன்.


அந்த பாதை மீண்டும் எவ்வித கஷ்டம் கொடுக்காமல் சென்றன. ஆனால் சிறிது நேரத்தில் உடலை நடுங்கவைக்கும் கடுமையான குளிர் தாக்க ஆரம்பித்தது. எனது மன உறுதி அதைக்கண்டு அஞ்சவில்லை. சலிக்காமல் அந்த பாதையை கடந்தேன். அதன்பிறகு இளம் வெயில் எனக்கு சற்று ஆறுதல் தந்தது.


மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். சட்டென்று எதிர்பாராத பலத்தகாற்றுடன் ஒரு சூறாவளி எனது பயணத்தை தடுக்கபார்த்தது. ஆனால் அதைகண்டு எனது வெற்றி லட்சியத்தில் பின் வாங்காமல் பொறுமையாக உறுதிமிக்க மரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அந்த இடமே அமைதியாக திகழ்ந்தது.


இப்போது எதையும் தாங்கும் தன்னம்பிக்கை வந்தது. அந்த வழியில் முன்னேறிச்செல்லும்போது ஒரு 'அறிவிப்பு பலகை' ஒன்று இருந்த்து. அதில் இன்னும் 10 நிமிடத்திற்குள் 'வெற்றி ' இடத்திற்க்குச் செல்லும் படகு புறப்படத் தயாராக இருக்கிறது. அங்கு செல்ல விரும்புவோர் அதற்குள் சென்றால் தான் படகை பிடிக்கமுடியும். அதன்பின் படகு எப்போது வரும் என்று சொல்லமுடியாது.இந்த படகை விட்டுவிட்டால் மீண்டும் நீங்கள் வந்த வழியே  திருப்பிச் செல்ல வேண்டியிருக்கும்.என்று இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு திரும்பிச் செல்வதா! கூடவே கூடாது!


பத்து நிமிடம் இருக்கின்றதே ! எனது ஆற்றல் அனைத்தையும் கொண்டு அந்த தூரத்தை அதற்கு முன்னமே கடந்தேன். அங்கே எனக்காக காத்திருந்த அந்த அழகான படகில் ஏறினேன். இன்னும் சிறிது நேரத்தில் 'வெற்றி' இடத்தை அடையப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் மீண்டும் புயல் மற்றும் மழையில் படகு தத்தளித்தது. கடைசியில் தாக்கு பிக்க முடியாமல் கவிந்தது. நான் எனது அறிவையும், திறமையும் கொண்டு ஒரு மரக்கட்டையின் உதவியால் 'வெற்றி ' இடத்தை அடைந்தேன்.

 
அங்கு நான் கண்ட காட்சி , அந்த சொர்க்க லோகத்தின் ஒருபகுதி தனியாக பிரிந்து வந்ததுபோல் ஒரு ஆனந்தம். அங்கு பூத்து குலுங்கும் வண்ண மலர் சோலைகள், அருவிகள், இதமான காற்று , மனதிற்கு குளிர்ச்சி தரும் அருமையான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு வகைகள், அன்பான உபசரிப்பு, கண்கவர் மாளிகை இன்னும் பலவற்றை கொண்டிருந்தன. ஓஹோ .. இது தான் வெற்றி இடமா! இதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இங்கு வரும்போது அனைத்து கஷ்டங்களையும் மறக்கச் செய்துவிட்டன. எங்கு எந்தவித கஷ்டமில்லாமல் சுதந்திரமாக, ஆனந்தமாக இருக்கலாம்!

இது தான் எனது வெற்றிப் பயணத்தின் கதை.

கஷ்டங்கள் எது வந்தாலும் கலங்காதீர்கள்!
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!

வெற்றி அடைவீர்கள்.


அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  

           
நன்றி!

இன்னும் வரும்...

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com