Pages

Monday, 22 October 2012

உள்விதி மனிதன் பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடி வருடம் INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS



உள்விதி மனிதன் 

 சம மனிதக் கொள்கை 
பாகம்:22 உள்விதி மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம் 
INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS

பிரிய மனிதா! இந்த உள்விதி மனிதன் சொல்வது அனைத்திலும் உனக்கு உடன்பாடு இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு மனிதன் மேல் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதன் பகையாளியாக பார்க்கிறான். எதனால்? எல்லாமே பேராசை மற்றும் புகழுக்காக! இந்த பூமி இதைவிடப்  பேராசை பிடித்தவர்களும், புகழுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களும் வாழ்ந்து அழிந்த சரித்திரத்தை  இன்றும் மக்கள் மறக்கவில்லை என்றே சொல்லலாம். அவர்கள் போட்ட 'பகைமை' விதை, நாட்டிற்கு நாடு பகையைத் தூண்டிவருகின்றது. அதன் மூலமாக  ஒரு நாட்டைப் பிடிக்கும் ஆசை, அங்குள்ள செல்வங்களைக்  கொள்ளையடிக்கும் பேராசை, பணியாவிட்டால் மக்களை வதைக்கும் செயல் இன்னும் இவ்வுலகில் ஒரு சில நாடுகளில் தொடர்கின்றது. அது ஒருவழியாக குறைந்துவிட்டது எனலாம். ஆனால் அதுவே வேறுவிதமாக  ஒரு நாட்டின் தலைவர் மக்களிடத்தில் பலவழிகளில் கொள்ளை அடிக்கும் நிலைமையை இன்று காண்கிறோம். அதுவும் நிலைமாறி நாட்டுக்கு நாடு பகை என்று போய் இன்று அந்த தொத்து வியாதி மாநிலத்திற்கு மாநிலம் பகையாக உருமாறியும், வீடுகளுக்குள்ளேயும் பகைமை விதை வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கின்றது. இப்படியே இருக்கவிட்டால் உன்னில் இருக்கும் எனக்கும், உனக்கும் அந்த பகைக்கு ஆளாகி இந்த உலக மக்களை அழிப்பதோடு நில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்குச் சொர்க்மாகத் திகழும் இந்த பூமியையே அழித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 



என் இனிய மனிதா! இதன் காரணமாகத் தான் நானாக சிவனே என்று இருந்த இந்த உள்விதி  மனிதனான நானே உனக்கு மீண்டும் அறிமுகம் செய்து, மக்கள் இழந்த சந்தோஷத்தை, நிம்மதியை, மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பதற்கு வந்துள்ளேன். உன் மூலமாக அதை நிறைவேற்றும் காரண கர்த்தாவாகவும் மாறிவிட்டேன். இனி என் விருப்பபடி, உன் துணை கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து இந்த உலகத்தின் சுபிட்சதிற்க்காக உன்னுள் அடிக்கல் நாட்டிவிட்டேன். 



பிரியமுள்ள மனிதா! 'உனக்கு என்ன என்னைவிட  அதிகமாக  திறமை மற்றும் அனுபவம் இருக்கின்றதா?' என்று என்னைப்பார்த்து எள்ளி நகையாடலாம் அல்லது சந்தேகமாகவும் இருக்கலாம்! எனது பிறப்பு, எனது ஆயுள், எனது அனுபவம் இன்றும், இனிமேலும் யாராலும் கணக்கிடமுடியாது. நான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டேன். நான் தான் இறப்பற்றவன். ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு செல்பவன். அப்படியென்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் பயணம் இதற்குமுன் எங்கெங்கெல்லாம் இருந்து வந்திருப்பேன், நான்  அவர்களிடத்திலிருந்து எவ்வகையான அனுபவங்களைப் பெற்றிருப்பேன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! பற்ப்பல அறிஞர்கள், பெரியோர்கள், மகான்கள், முனிகள், ரிஷிகள், அரசர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் சிந்தனைச்சிற்பிகள், அறிவியல் மேதைகள், பொருளாதார நிபுணர்கள், வியாபாரமேதைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் இப்போது பிறக்கும் குழந்தைகள் கற்கால குழந்தையாக இல்லாமல் செல்போன்களைக்கூட எளிதாக கையாள்கிறது. அதற்குப் பிறப்பிலே அத்தனை அறிவு, திறமை எங்கிருந்து வந்தது. பலவகையான மொழிகள் பேசுகின்றன. அவைகளெல்லாம் என் அறிவு, என் ஆற்றல் படி , எனது சொல்படி, எனது அனுபவப்படி நடப்பதால் தானே வந்திருக்கின்றது.

என்பாசமுள்ள மனிதா! இறப்பவர்களுடைய ஜீவ ஓட்டம் நின்றாலும், அந்த ஜீவன் அந்த உடலை விட்டுவிட்டு புதிதாகப் பிறக்கப் போகும் ஜீவனை இயக்கவல்லது. அதற்கு ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொடுக்க வல்லது. அந்த ஓட்டம் தான் உன்னுடைய உடம்பில் இரத்த ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. என்னுடைய முன் ஜென்ம எண்ணங்கள், திறமைகள், ஆற்றல் எல்லாமே உனக்குள் புதைந்து இருக்கின்றன. உனக்குத் தேவையானதை நீ இந்த உள்விதி மனிதன் மூலமாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அவைகளைக் கொடுத்து உன்னை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது குறிக்கோள். 



பண்புள்ள மனிதா! அனைவருக்குள்ளும் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்கள் ஒளிந்து இருக்கின்றன என்று இப்போதாவது புரிந்து கொண்டாயா! அந்த அற்புதச் சக்தியினால் தான் முட்டாள்களும் திடீரென்று மேதையாகின்றனர். இயற்கையில் ஒரு கூழாங்கல் வைரமாக மாறாது. ஆனால் மனிதனில் அந்த அற்புதங்கள் நடக்கும். நேற்று வரை ஏழையாய் இருந்தவன் திடீரென்று பணக்காரனாக மாறுக்கிறான். எல்லாம் இந்த உள் மனிதனின் செயலால் தான். ஆனால் எல்லாவற்றையும் நான் கொடுத்திருந்தாலும் நீ அதிலிருந்து கொஞ்சம் தான் எடுத்துக் கொண்டிருக்கின்றாய். இன்னும் இருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை எடுத்துக்கொள்ள மறுக்கிறாய்.

இரக்கமுள்ள மனிதா! அதனுள் பெரியோர்களின் நீதிபோதனைகள், வற்றாத செல்வங்கள் அடையும் வழிவகைகள், நாட்டுத் தலைவர்களின் அதிகாரங்கள் மற்றும் நீதிமான்களின் சட்டங்கள், பல அரசர்களின் வெற்றிவழிகள், வீர தீரச் செயல்கள், உலக கல்விகள், மக்களுக்காக நேர்வழியில் உழைத்த தலைவர்களின் எண்ணங்கள், விஞ்ஞான அறிஞர்களின் அறிவியல் சாதனைகள், தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் கலைகளில்  சிறந்தவர்கள், விவசாயிகள், பலத்தரப்பட்ட தொழிலாளர்களின் கஷ்ட நஷ்ட அனுபவங்கள், முதலாளிகளின் எண்ணங்களும் செயல்களும் இவைகள் அனைத்தும் அடங்கும். உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.   

மதிப்புமிக்க மனிதா! சில மனிதர்கள் பல நூல்கள் கற்று கல்விமானாக ஆவதும், கடின உழைப்பில் செல்வச் சீமானாக விளங்குவதும், நாடு போற்றும், மக்கள் போற்றும் தலைவராக ஜொலிப்பதும், அரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகுக்கு கொடுக்கும் அறிஞராக போற்றுவதும், சத்திய வழியில் ஆன்மீக குருவாக மக்களுக்கு பல நன்மைகள் செய்வதும், சில நாட்டுத்தலைவர்கள் நல்லாட்சி நடத்துவதும் எப்படி ஏற்படுகின்றது. இவைகளெல்லாம் எனது அனுபவ அறிவை தந்து அதன் ஆற்றலை வெளிப்படுத்துவதால் தான் என்பதை தெரிந்து கொள்.

இனிய மனிதா! இவர்கள் இப்படியிருக்க சிலர் கெட்ட வழியை தேர்ந்தெடுத்து உலகத்தையும், உலக மக்களையும் மாசுபடுத்துகின்றனர். அந்த மாதிரியான எண்ணங்களை அழிக்கவே எல்லோரிடத்திலும் உள்விதி மனிதனாக வந்திருக்கிறேன். நல்ல மனிதர்கள் சிலர் இருப்பதனால் தான் ஓரளவாவது மழை பெய்கின்றது. பூமி நனைகின்றது. மக்களின் வயிறு நிறைகின்றது. ஓரளவு மகிழ்ச்சி கிடைக்கின்றது. 

இனிமையான மனிதா! நீ எப்படி முன்னேறினாலும், எதைப்  படைத்தாலும், எதைக் கண்டுபிடித்தாலும் என்னைவிட அதிகமாக முன்னேறிவிடமாட்டாய். ஆகவே உனது முன்னேற்றங்களை நல்லவழியில் பயன்படுத்தி மக்களுக்குப் பல நன்மைகள் கொடுத்து வாழ்க்கையைச் சிறப்படையச் செய்யவே உனக்குள் இருக்கிறேன்.


உள்மனிதனின் கோடி ஆண்டு அனுபவம் உனக்குக்  கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் ! 
    உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்- IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்-
IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR 


பணம் ஒரு மிகப்பெரிய ஆயுதம். அது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். கடவுள் படைத்த இந்த அற்புத உலகில் மனிதன் சக்தி வாய்ந்தவன் என்று சொன்னால், மனிதன் படைத்ததில் மிக மிக சக்தி வாய்ந்தது 'பணம் ' என்று சொன்னால் மிகையாகாது.


பஞ்சபூதத்தில் இதை ஆறாவதாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதை ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதாவது 'தீ ' விளக்காக இருக்கும் வரையில் அது மற்றவர்களுக்கு ஒளி தந்து உதவுகிறது. அதுவே பெரிய நெருப்பாக பற்றி எரியும் போது , தீ உருவான இடத்தையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் அழிக்கவல்லது. பணம் அளவோடு இருக்கும் வரையில் அது அமைதியாக இருக்கச் செய்கிறது. அளவுக்கு அதிகமாகும் போது அது தனது விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்கின்றது. பணம் நீ கையாளுவதை பொறுத்து தெய்வமாக கருணை காட்டும். அதுவே சாத்தானாக மாறி தீமையை உண்டாக்கும்.

பணம் நமது மனப்பான்மை , நம்பிக்கை மற்றும் ஐடியாக்களை வளர்க்கிறது. ஆனால் எப்போதும் பணம் இருக்கும்போது உன்னைப்பற்றியும், பணத்திற்கும்  உனக்குமுள்ள உறவை பற்றியும் தெளிவாக மனதில் வைத்துகொள். பணம் தேவையான அளவு இருந்தால் நாம் சொல்வதை பணம் கேட்கும். தேவைக்கு அதிகமாக இருந்தால் அது சொல்வதை நாம் கேட்கவேண்டியிருக்கும். 


பணம் அமைதியை கெடுக்கவல்லது. குணத்தை மாற்றவல்லது. உறவுகளை எதிரியாக நினைக்கச் சொல்கிறது. நட்பை பகையாய்  பார்க்கச் செய்கிறது. அன்பை அரக்கத்தனமாய் நினைத்துப் பார்க்கிறது. மரியாதை உள்ளவர்களை அவமதிக்கிறது. 'நான்' என்கிற அகந்தையும் , தலைக்கணமும் வளர்க்கிறது.  ஆசையை பேராசையாக மாற்றி அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. பையில் பணம் கூடக்கூட மனதில் 'கணம் ' கூட ஆரம்பித்து விடுகின்றன.


பணத்தைக் கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கமுடியும். ஆனால் குணத்தை வாங்க முடியாது. அதாவது அன்பு, கருணை, பாசம், நேசம், இரக்கம் , கல்வி மற்றும் வீரம் முதலியவைகள் . 

பணம் நமக்கு அடிமையாக இருக்கவேண்டுமென்றால்.... 


* எண்ணத்தில் கவனம் இருக்க வேண்டும்.

* காட்டுகின்ற உணர்வில் உண்மை இருக்கவேண்டும்.

* செயல்கள் சத்தியப் பாதையில் இருக்கவேண்டும் 

* செயல்களின் விளைவுகள் நன்மை தரக்கூடியதாய் இருக்கவேண்டும்.   

பணம் இருக்கும் போது நீ எதைப் பார்க்கிறாயோ அதைக்கொண்டு தீர்ப்பு சொல்லாதே. சிந்தித்து செயல்பாடு. எப்போதும் உன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் விழிப்புடன் இரு. வாழ்கையில் நீ முன்னேறும்போது உனது குணம் மிளிர்கின்றதா என்பதை உறுதி செய்துகொள். 


பணம் உன்னிடம் ஒட்டியிருக்கும் வரை மற்றவர்கள் உன்னிடம் ஒட்டியிருப்பார்கள். பணம் உன்னைவிட்டு விலகி விட்டால் நீ மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். 

பணத்தின் மீது நமது கவனம் கூடக் கூட அது போகும் திசையிலெல்லாம் நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


மனிதன் 'நார் ' என்றால் பணத்தை  'பூ ' என்று என்று சொல்லலாம். அதாவது மனிதனுக்கு மதிப்பு பணத்தால் மட்டுமே வருகின்றது. 


பணமுள்ளவனிடத்தில் குணமும் இருப்பது தான் மிகவும் சிறப்பு. அது தான் மனிதனை தெய்வமாக காட்டும்.

'பணம்' சம்பாதிப்பது 'மரம் ' நடுவதற்க்குச் சமமாகும். அதாவது நட்டவனுக்கு பலன் தருவதைக்காட்டிலும் மற்றவர்களுக்கு அதிக பலன் கொடுக்கின்றது. 


பணத்தை சம்பாதிக்க வேண்டும்!


அதேசமயத்தில் குணத்தை இழக்காமல்!

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Saturday, 20 October 2012

உள்விதி மனிதன் பாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் - THE EXPIRY OF THIS EARTH

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம்:21 உள்விதி மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் -




THE EXPIRY OF THIS EARTH 

இன்று எல்லோரும் பபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் செய்தி.. இந்த பூமி 21.12.12 அன்று அழியும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? அல்லது பொய்யா? அப்படியென்றால் உலகம் எப்போது அழியும்? இதோ உள்விதி மனிதன் கணிக்கும் உலகத்தின் வயதும் அதன் விளக்கமும் படிக்க..

பிரியமுள்ள மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு உனக்கு உதவி செய்கிறேனா அல்லது இல்லையா? என்கிற சந்தேகம் இருக்கும். உன் உடல் நன்மைக்காக எவ்வளவு தூரம் பாடுபடுகின்றேன் என்பதை சிறிய உதாரணம் மூலம் விளக்குகிறேன். அதாவது ஒருவர் உன்னை அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மெல்ல அடித்தால் அதை பற்றிக் கவலை படாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பாய். சற்று பலமாக அடித்தால் உன் கை அடிபட்ட இடத்திற்க்குச் செல்கின்றது. இன்னும் பலமாக அடித்தால் ஆ..ஊ ...என்று அலறித் துடிக்கிறாய். எதற்காக நீ கத்துகிறாய். யார் உனக்கு கத்த சொல்லி ஆணையிட்டார்கள், அதை சிந்தித்துப் பார்த்தாயா? எல்லாமே உன் உடல் சிறிது கூட சேதமடையக் கூடாது என்கிற எச்சரிக்கைக்குத் தான். 


என் இனிய மனிதா! உன் உடலின் இரத்த ஓட்டமே எனது ஜீவ ஓட்டம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதன் மூலமாவது தாக்குதலுக்கு உட்பட்டால் அதை பார்த்து என்னால் சும்மா இருக்கமுடியாது. நீ நல்லவிதமாக இருக்கும்போது நானும் நன்றாக இருப்பேன். அந்த சமயத்தில் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். ஆனால் உன் உடலில் ஒரு தாங்க முடியாத கஷ்டமோ அல்லது மனக்கஷ்டமோ வரும்போது என்னுடைய இயலாமையை 'வலி' மூலம் உனக்கு உணர்த்துகிறேன். அப்படி செய்தால் தான் நீ ஏதாவது செய்து வலியைப்  போக்குவாய். ஏனென்றால் வலி தொடர்ந்து இருந்தால் உடம்பு தாங்காது. உனக்குள் இருக்கும் நானும் தாங்கமாட்டேன். அந்த வலி அதிகமாகுமுன்னே மற்றும் வந்த வலி போகும்வரை நான் உன்னை சும்மா விடமாட்டேன். அதைப்போக்குவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ, தேவைபட்டால் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அத்தனையும் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு கட்டளையிடுவேன். சில சமயங்களில் அதற்காக உன்னை தூங்க விடாமல் மன உளைச்சலையும் தருவதற்கும் தயங்கமாட்டேன். மீறி கவனிக்காமல் இருந்தால் அதைவிட ஒருபடி மேலே போய் உன்னை சாப்பிடாமலும் செய்துவிடுகிறேன். ஏனென்றால் உனது உடல் ஆரோக்கியம் எனது ஆரோக்கியம். நீ அதைப்பற்றி கவலை படாவிட்டாலும் அதை சரியாக வைத்துக் கொள்வது எனது பிரதான கடமையாகும்.

பண்புள்ள மனிதா! உன்னை எதற்காக படைத்திருக்கிறேன்? நீ பல சாதனைகளை சாதிக்க வல்லவன். மக்கள் குலத்திற்கு நன்மையையும், மகிழ்ச்சியையும் கொடுக்க பிறந்தவன், பலஜீவ ராசிகளின் துயரை துடைக்கவே இந்த பூமியில் அவதரித்தவன். மனிதனை தெய்வமாக்கி உனது பெயரழியாப் பெருவாழ்வு கொடுக்கவே படைத்திருக்கிறேன். அதை மறந்து நீ எனக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யும்போது உன்னை நீயே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு வருவதோடு என்னையுமல்லவா அழிக்க நினைக்கிறாய். இந்த மாதிரியான செயல்களை உன்னைச் செய்யவிடாமல் தடுக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன்.


மேன்மையான மனிதா! பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும்போது நீ என் பேச்சுகளை, போதனைகளை, உன் கடமைகளை, நீ யார் என்பதையும், எதற்காக இந்தப் பிறவி  எடுத்துள்ளாய் என்பதையும் அமைதியாக கேட்டாய். என் வாக்குப்படி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தாய். ஆனால்  நீ பூமியில் வந்த பிறகு, உனக்கு வயது ஏற ஏற , நல்லது கெட்டது தெரியத்தெரிய உனது செய்கைகள் தடம் புரண்டு மாறிவரும்போது அது என்னை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது.    


பாசமுள்ள மனிதா! உனக்கு வயது ஆக ஆக உன் அறிவும் ஆற்றலும் வளர வளர என் செயலை அலட்சிய படுத்திவிட்டு 'நான் தான் எல்லாம்' என்கிற மமதையில் நீ செய்ய வேண்டிய கடமையை மறந்து உன்னிஷ்டப்படி சுயநலத்திற்காக பல செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். அந்த செயல்களை அறவே அழித்து  மனிதகுலத்திற்கு நன்மை தரும் செயல்களை செய்யத் தூண்டவே உனக்குள் வந்துள்ளேன். 


இரக்கமுள்ள மனிதா! எனக்கென்று தனியாக எவ்வித ஆசையும் கிடையாது. எனக்குள்ள ஒரே கொள்கை மக்கள் இந்த உலகில் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும். அவர்கள் எவ்வித கஷ்டமின்றி சந்தோஷமாக வாழவேண்டும். அதைப்போல் நீயும் 'என்னால் பிறர் கஷ்டப்படக் கூடாது' என்ற கொள்கையினைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கவே உள்விதி மனிதனாக இருக்கிறேன். 


சாந்தமுள்ள மனிதனே! இன்றைய நிலையில் இந்த உலகில் மனிதனுக்கே மனிதனைப் பற்றிய நல்லெண்ணம் இல்லை! மனிதனுக்குண்டான குணங்களை குழிதோண்டி புதைத்துவிட்டான். மனிதன் இப்போது மாறிவிட்டான். அதற்கு நீ மட்டும் பொறுப்பல்ல. உனக்குள் இருக்கும் நானும் அதற்கு பொறுப்பு. ஒன்று தெரியுமா ? நான் ஐந்தறிவு கொண்ட உயிர்களிடத்திலும் இருக்கிறேன். ஆனால் அவைகள் எனது கட்டளைபடி என்னோடு இணைந்து செயல்படுவதால் அவைகளுக்கு நான் கொடுத்த கட்டளையான 'மற்றவர்களுக்கு உதவி செய்வதே  கடமையாகக்' கொண்டு  வாழ்ந்து வருகின்றது. இதுநாள் வரை அவைகள் மாறவில்லை.

சக்தியுள்ள மனிதா! உன் கெட்ட எண்ணங்களால்  நீயும் அழிந்து, நான் படைத்த இந்த உலகத்தையும் அழித்துவிடுவாயோ  என்று எண்ணி உனக்குள் புது அவதாரம் எடுத்துள்ளேன். அது உண்மையாக்கும் வண்ணம் இன்றைய மனிதர்கள் பூமியின் அழிவை பலவாறு கணித்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த கணிப்பில் இந்த உலகம் இந்த வருடத்தில் (2012) அழியப் போகிறது என்று மக்களை பயமுறுத்தி வருவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அவ்வளவு எளிதில் இந்த உலகத்தை அழிய விடமாட்டேன். இன்னும் சொல்லப் போனால் இந்த உலகிற்கு அழிவில்லை. 


                                      சராசரி மனிதனின் வயது X மக்கள் தொகை X புவியீர்ப்பு விசை 
பூமியின் ஆயுள் : --------------------------------------------------------------------------------------------
                                                        மனிதனின் சராசரி வேகம் 


சராசரி மனிதனின் வயது                                 : 50

(2012) மக்கள் மக்கள் தொகை                          : சுமார் 700 கோடி 

புவிஈர்ப்பு விசை                                                  : 9.8 மீட்டர் / நொடி 

மனிதனின் சராசரி வேகம்                               : 1.0 மீட்டர் / நொடி  


இதில் எவ்வளவு வருகின்றதோ அதுவே பூமியின் ஆயுள். கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

இதை யாராவது மறுத்தால் அதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.


ஆனால் தீய எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் இன்னும் திருந்தாவிட்டால் அவர்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. உலகை அவர்கள் பிடியில் சிக்கிக்கொண்டு அழிவைத் தடுத்தேத்  தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரையும் நல்லவர்களாக்கி அவர்களை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

உன்னை உயர்த்திக் கொள்ள 'தகுதி' என்ற மூன்றெழுத்தின் சூத்திரம் - LIFE'S GROWTH FORMULA

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உன் தகுதியை உயர்த்திக் கொள்ள 'தகுதி' 
என்ற மூன்றெழுத்தின் சூத்திரம் -
LIFE'S GROWTH FORMULA  

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கின்றது . அதற்காக அவன் பலவிதத்தில் முயற்சி செய்துவருகிறான். 'தகுதி ' என்ற மூன்றெழுத்தில் என்னதான் ரகசியம் இருக்கின்றது. இதோ அந்த சூத்திரம்..


தகுதி என்ற மூன்றெழுத்தில் 

த - தரம் என்ற மூன்றெழுத்து 

கு - குணம் என்ற மூன்றெழுத்து 

தி - திடம் என்ற மூன்றெழுத்து 

தரம்:

தரமுள்ள மனிதன் என்றுமே தாழ்ந்து போனதாக சரித்திரம் இல்லை. பளிங்கு கல் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும் அது வைரத்திக்கு ஈடு இணையாகுமா? போலியான தரம் உண்மையான மதிப்புக்கு சமமாகாது!

தரம் என்பது பல திறமைகள் சரியான விகிதத்தில் கலந்து இருப்பது. அதாவது ஒரு வார்த்தையின் தரம், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்தலில் இருக்கின்றது. ஒரு பாடலில் இனிமை, தரமான அழகிய இராகங்களை கலந்து கொடுப்பதில் இருக்கின்றது. ஒரு தோட்டத்தின் அழகு, தரமான அழகிய பூச்செடிகளை பொறுத்து இருக்கின்றது. தரம் எந்தகாலத்திலும் நிரந்தரம்.

குணம்:

தண்ணீர் ஒரு தங்க பாத்திரத்தில் அல்லது வெள்ளி பாத்திரத்தில் அல்லது மண்பாத்திரத்தில் இருந்தாலும் அதன் குணம் மாறுவதில்லை. அதுபோல  உன்னுடைய நிலை உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் மனிதனின் குணமான அன்பு, கருணை, பாசம், இரக்கம் , பொறுமை போன்ற குணங்களை மாறாமல் கடைப்பிடித்தல் அவசியம்.

திடம்:


தரம், குணம் இவைகள் இருந்தால் 'திடம் ' தானாக வந்துவிடும். இங்கு திடம் என்பது உன்மீதுள்ள உறுதியான நம்பிக்கை.

இதைத் தவிர வாழ்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:


1. நீங்கள் வாழ்கையில் எதற்கு வேண்டுமானாலும் காத்திருங்கள். ஆனால் அது வீணாக போய்விடக்கூடாது.

2. நமது எண்ணங்களினால் தான் நாம்  இன்று இந்த நிலைமையில் இருக்கின்றோம்.  

3. நீங்கள் வாழ்கையில் எந்த வேலை வேண்டுமானாலும்  செய்ய நினைக்கலாம். ஆனால் அதை ஆரம்பிபதில் தான் அதன் வெற்றி இருக்கின்றது.

4. நமது 'வருங்காலம்' என்கிற பாறையை செதுக்கும் சிற்பி நாம் தான். அது நன்றாக செதுக்குவதும் , மட்டமாக செதுக்குவதும் நம் கையில் தான் இருக்கின்றது.

5. உங்களுக்கு எதற்கும் நேரம் கிடைக்காது. உங்களுக்குத் தேவையான நேரத்தை நீங்கள் தான் ஏற்ப்படுத்திக் கொள்ளவேண்டும். அவசியமான வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது மூலம் சாத்தியப்படும்.

வாழ்கையில் உங்கள் 'தகுதி'யை 
உயர்த்திக் கொள்ளுங்கள்!


மூன்றெழுத்து மூல மந்திரத்தின் உதவியினால்!  

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


Friday, 19 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும் - SOON THIS WORLD FILL WITH GOOD LIVES

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் 
உலகமாக மாறும் 
SOON THIS WORLD FILL WITH  GOOD LIVES

என் இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனின் சொல்வாக்கு தொடர்கிறது. இதுநாள் வரையில் யாருக்கும் எளிதில் கிட்டாத இந்த அருமையான இத்தகைய சந்தர்ப்பம் உனக்கு என்மூலமாக கிடைத்திருக்கிறது. நீ இல்லாத இடத்திலெல்லாம் என்னைத் தேடி அலையும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. அதில்லாமல் இனிமேலும் நான் உன்முன் பிரசன்னமாவது தள்ளிப் போனால் உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி இன்னும் அதிகமாகி காலம் காலமாய் சந்திக்க முடியாமல் போய்விடும். நான் உனக்கு நீ நினைக்கும் மகிழ்ச்சியும் கிடைக்காமல் போய்விடும். என்னை நன்றாக பயன்படுத்திக் கொள். அது இனி உன் கையில் இருக்கின்றது. எனது ஆன்ம ஓட்டத்தின் மகிமையைச் சுற்றி வளைத்து பேசாமல், கடைசி வரையில் உன்னை குழப்பித் தெளிவில்லாமல் ஒரு ஒப்புக்காக உன்னிடம் ஒரு தலையாட்டை பெற விரும்பவில்லை. ஏனென்றால் திருப்பி நான் என்ன சொன்னேன் என்று உன்னால் சொல்ல முடியாது. அதற்கு தான் உனக்கு எளிமையாக வகையில் புரிந்து கொள்வதற்காகவே உன்னுடலில் நடக்கும் செயலைக் கொண்டே விளக்குகிறேன்.

என் அன்பு மனிதா! ஒரு குறிப்பிட்ட மக்களின் மகிழ்ச்சிக்காக இந்த உலகத்தை நான் படைக்கவில்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாகத் தான் படைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் கற்றுத் தேர்ந்த உண்மையான நன்மை நோக்கம் கொண்ட ஞானிகளும், யோகிகளும், அறிஞர் பெருமக்களும், சேவை மற்றும் தொண்டு செய்ய நினைப்பவர்களும் இந்த மனிதகுலத்தை சீர்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? அவர்களின் அறிவையும், ஆற்றலையும் மக்கள் குலம் மகிழ்ச்சியடைவதற்கு உபயோகப்படாவிட்டால் அவர்கள் அடையும் பேறுதான் என்ன? எல்லோரும் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தித் தான், காலம் சென்ற கவிஞர் 'எல்லோரும் எல்லாமே பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தன் வாழ்க்கை கனவை பாடல் மூலம் சொல்லியிருக்கிறார். அதற்காக அனைவரிடத்திலும் உள்விதி மனிதனாக இருக்கிறேன். பாட்டுடன் நில்லாமல், நான் முயற்சி செய்து அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க வேண்டுமல்லவா! அது தானே எனது பிரதானக் கடமை.



என் பாசமுள்ள மனிதா! தனக்குத் தெரிந்ததை மறைத்து வைப்பது பெரிய பாவமாகும். அதை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது அதைவிட பாவமாகும்! அதாவது அணுகுண்டை விட அழிவு தரக்கூடிய கல்வியை அல்லது  செயலையாத் தரப்போகிறீர்கள்? இப்படியே எத்தனைக் காலம் தான் நடுத்தர மற்றும் அடித்தட்டு மனிதர்களை மேல் தட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பலவழிகளில் அவர்களுடைய  பலவீனத்திற்குத் தகுந்தாற்ப் போல் பயமுறுத்தி அவர்களுக்கு உதவி ஏதும் செய்யாமல், ஏதோ ஒருவழியில் அடிமைபடுத்தி நான் அனைவருக்கும் பொதுவாக படைத்த உலகத்தை அந்த உயர்ந்த மக்கள் மட்டும் அனுபவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? 

என் பிரியமுள்ள மனிதா! இதுநாள் வரை பல மகான்கள், முனிகள், அறிஞர்கள், அறிவில் சிறந்த சான்றோர்கள் அனைவரும் உனக்குச் சொல்ல நினைத்ததை தான் நான் இப்போது சொல்கிறேன். தனிப்பட்ட ஒரு மனிதனின் சுய லாபத்திற்காக எப்படியெல்லாம் உன்னைத் திசை திருப்பி பணம் பறிக்கிறார்கள். ஜாதகம் என்கிற பெயரில், ஜோதிடம் , எண் ஜோசியம், பெயர் ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், பரிகாரங்கள் என்று பல வழிகளில் உன்னறிவையும், ஆற்றலையும் அவர்கள் வசம் கொடுத்து உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக மாறிக்கொண்டு இருக்கிறாய். அவர்களுக்கு உன் வாழ்கையை கணிப்பதற்கு அதிசய சக்தி இருந்தால் அவர்களை இப்படி சோதித்த்துப் பார். நீயே ஒரு ரூபாய் நாணயத்தை பத்து முறை சுண்டு. ஒவ்வொரு முறையும் பூ அல்லது தலை என்று அவர்களால் சரியாக சொல்ல முடியுமா? ஆனால் உன்கையில் இருப்பதால் நீ அதைப் பார்த்து  உன்னால் சரியாக சொல்ல முடியும். ஏனென்றால் அதன் விடை உன்னிடத்தில் இருக்கின்றது. இதையே சரியாக சொல்ல முடியாதபோது ஆயிரம் கேள்விகள் கொண்ட உன் வாழ்க்கைக்கு எவ்வாறு அவர்கள் பதிலளிப்பார்கள்? இதை நீ கட்டாயமாக ஆழமாக சிந்திக்க வேண்டும். உன்னுள் இருக்கும் கேள்விகளுக்கு  விடை உன்னுள்ளே இருக்கின்றது. அது தான் இந்த உள்விதி  மனிதன். 



மதிப்பு மிக்க மனிதா! உயர்மட்டத்தில் இருப்பவர்கள் விழாக்கள் நடத்தும் போது அதன் பலன் முழுவதும் அடித்தட்டு மக்களுக்குச்  சேருகிறது. அதாவது மன்னர்கள், அரசர்கள் காலத்தில் விழாக்கள் அனைத்தும் ஏழைகளின் நன்மைக்காக, அவர்களின் மகிழ்ச்சிக்காக நடந்தது. இன்றோ அது தலைகீழாக நடக்கிறது. தலைவர்களின் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக மக்களிடம் பலவகையில் நன்கொடை, வரிகள் என்று மக்களிடத்தில் வசூல் செய்தல்லவா நடத்துகிறார்கள். இதிலிருந்து யாருக்கு யாரிடத்தில் அக்கறை என்று புரிந்ததா! இனி மேலும் நீ ஏமாறுவதை நிறுத்திக் கொள். அதை தெரிந்துகொள். விழித்துக்கொள். உனக்காக நீ தான் பாடுபட வேண்டும். நானும் நீயும் கை கோர்த்து நன்மை தரும் செயல்களை செய்ய ஆரம்பிப்போம். எனக்கும் உனக்கும் உள்ள இந்த உறவு இரத்த உறவாக இருப்பதால் அதை எனது ஜீவ (இரத்த) ஓட்டத்தின் மூலம் உனக்கு உணர்த்துகிறேன். உனது ஆன்ம ஓட்டம் ஓயும்வரைத் தொடரும்.

சிறந்த மனிதா! இப்போது இந்த மனிதனின் உணர்வுகளை ஒரு சிறிய செய்முறை உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். உன் கண்களை மூடிக்கொள். எல்லாம் இருட்டாக இருப்பதை உணர்கின்றாயா! இப்போது உன்கையை கண்களை மூடிக்கொண்டவாறு மேலே தூக்கு. கை மேலே செல்வதைப் பார்க்கவில்லை. ஆனால் மேலே உயர்ந்திருக்கிறது. ஆனால் அதை உன்னால் உணர முடிகின்றதல்லவா! அதேபோல் ஒரு காலை தூக்கிக் கொள். அதுவும் உணர முடிகின்றதல்லவா! இப்போது கண்களை திறந்துபார். என்ன காண்கிறாய். கைகள் உயர்ந்து இருப்பதையும், கால் தூக்கிக்கொண்டு இருப்பதையும் பார்க்கமுடிகின்றதா! இன்னும் சில நிமிடத்திற்கு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் எனது ஆன்ம ஓட்டத்தை நன்றாக உணரமுடியும். உன் கண்களை திறந்து கொண்டால் வெளியில் நடக்கும் செயலை பார்க்க முடியும். அதேபோல் நீ கண்களை மூடிக்கொண்டு இருந்தால் உன் உணர்வுமூலம் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் உணர்வும் ஆற்றலும் உனக்கும் எனக்குமுள்ள பந்தம் தெளிவாக புலப்படும்.

பிரிய மனிதா! ஒவ்வொரு செயலும் எனது  ஜீவ ஓட்டத்தின் வல்லமையால் நடைபெறுகின்றது. அந்த வல்லமை நல்லவழியில் பயன்படும்போது ஆன்ம சக்தி பலமடங்கு பலம் பெறுகின்றது. அதனால் உனது குறிக்கோளும் எளிதாக நிறைவேறும். உன்னைப்போல் பல நல்லவர்களைக்கொண்டு பல நல்ல செயல்கள் செய்யும்போது இந்த உலகம் தானாகவே நல்லவர்கள் வாழும் உலகமாகவே மாறிவிடும்.

பண்புள்ள மனிதா! இப்போது முதல் இனிவரும் காலத்தில் இந்த உலகம் உன்னைப் போல் சத்தியத்தை விரும்பும், தர்மவழியில், நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைச் செய்யும் கைகளில் ஒப்படைக்கப் படும். அதற்கு எப்போதும் தயாராக இரு. அதற்கான சமிஞ்ஞை இப்போது கிடைத்திருக்கின்றது.


நன்மைக்காக வாழ்!
நல்லவர்களுக்காக வாழ்!
அனைவரின் நன்மைக்காக வாழ்!
மகிழ்ச்சி கொடுப்பதற்கு வாழ்!


நம் பந்த பிணைப்பிற்காக வாழ்!  
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com