Pages

Tuesday, 30 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.- DON'T FORGET INNER MAN AND AVOID PROBLEM


உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை  
பாகம்: 25 உள்விதி மனிதனை மறக்காதேஅவதிப்படாதே.-
DON'T FORGET INNER MAN AND AVOID PROBLEM


என் அன்பிற்குப் பாத்திரமான மனிதாஇந்த உள்விதி மனிதனின் படைப்-பாற்றலைப் பற்றி என்ன நினைக்கின்றாய்இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்- கின்றாயே கோடிக்கணக்கான ஜீவராசிகள்விதவிதமான வண்ணங்களின் படைப்புகள்ஒரு செல் உயிரினம் முதல் ராட்சச டைனோசர் (இப்போது இல்லை), இப்போது இருக்கும்திமிங்கிலம்ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம்நீரில் வாழ்வானஊர்வனபறப்பனநிலத்தில் வாழ்வானபுல் , பூண்டு மரம் செடிகொடிபாக்டீரியாவைரஸ் இன்னும்  மனிதன் கண்டுபிடிக்காத உயிரினங்கள் எல்லாமே எனது படைப்பாற்றலால் வந்தவை.  இவைகள் உனக்காக எனது பல ஆண்டு அனுபவத்தால் பார்த்துப் பார்த்து    படைக்கப்பட்டவை


என் இனிய மனிதாஉன்னிடத்தில் 'நான் ' என்னும் அகம்பாவம் மற்றும் உலகில் உள்ள அனைத்தையும் அடையத் துடிக்கும் பேராசை காரணமாக எனது படைப்பாற்றலின்  மகிமையை உனது கண்கள் மறைக்கின்றதுநன்மையான எண்ணங்கள் பல தந்தும் நீ  தீய எண்ணங்களை நினைகின்றாய்அதனால் எனது படைப்பாற்றலின் நன்மைகள்  உனக்கு முழுமையாக கிடைபதில்லைஅதற்காக இனிமேல் நான் படைக்க விரும்பும் செயல்கள் அனைத்தும் உன் மூலமாகப் படைத்திட  நினைக்கிறேன்அதனால் இந்த உலகம் நன்மைகளைக் கொண்டிருக்கும் நல்லபுது   உலகமாக மாறட்டும்


பாசமுள்ள மனிதாநீ இது நாள் வரை அறிந்திருப்பதைஅறியவிரும்புவதைஅறிய வேண்டியதை இந்த உள்விதி மனிதன் மூலமாக உனக்குத் தந்து அதன்மூலம் பல  சாதனைகள் இந்த உலகில் நிகழ்த்த உனக்குத் துணைபுரிய வந்துள்ளேன்இனி உனது  எண்ணங்கள் அனைத்தும் ஏறு முகம் தான்நன்மை வழியில் செல்லும் நல்ல முகம் தான்எல்லா மனங்களை ஆட்கொள்ளும் ஆசைமுகம்தான்எல்லாப் பண்புகளைவெளிப்படுத்தும் அன்புமுகம் தான்.

மதிப்புமிக்க மனிதாஎனது எண்ணங்கள் கரடு முரடானவையோ  அல்லது மிகவும் கஷ்டமானதோ அல்லஅவைகள் மிகவும் எளிமையாகவும் எப்போதும் உண்மையாகவும் இருக்கும்அதை பின்பற்றுவது மிகவும் எளிது


பிரியமுள்ள மனிதாஇன்னது இதற்காக! என்று தெளிவாக புரிந்து கொள்ளாமல்  மற்றவர்களுக்குப் புரியாத மற்றும் தெரியாத மொழிகளில் உள்ள பாடல்கள்ஸ்லோகங்கள்மந்திரங்கள்உபநிடங்கள்சொற்பொழிவுகள் போன்றவைகளைக்  கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து பலரின் முன்னால் அனைத்தும் தெரிந்த அறிவாளி  போல் பேசுவதால்பாடுவதால்படிப்பதால் கேட்பவருக்கு என்ன லாபம் கிடைக்கும்? அப்போதைக்கு மனம் மகிழ்ச்சி அடையும். ஆனால் உடனே உன்மனம் பழைய நிலைமைக்கு வந்துவிடும். பேசுபவர்கள் கேட்பவர்கள் புரியும் மொழியில்பேசினால் தானே, அவர்    என்ன சொல்லவருகிறார் என்று தெரியும்.  வெறும் காசுக்காக,   கைத்   தட்டலுக்காக எதை வேண்டுமாலும் பேசுவதை நிறுத்திக்கொள். பலரின் பொழுதைப் போக்க நீ பேசுவதை நிறுத்திக்கொள்இந்த உள்விதி  மனிதனுக்கு அவைகள்  தேவையில்லை. யாருமே  அழகான ஆபத்தான   பூக்களை சூடிக்கொள்வதில்லைஅழகாக மற்றும்எளிதில் கிடைப்பதால் நஞ்சு தன்மையுள்ள உணவுப் பொருட்களை  சாப்பிடுவதில்லைஅதுபோல நீயும் ஆபத்தான எண்ணங்களை மக்கள் விதைக்க  விரும்பாதே


பண்பு மிக்க மனிதாஅதிகாரம் உனது கையில் கிடைக்கும்போது 'நான்என்கிற  ஆணவம் எங்கிருந்து வருகின்றது?நான் சொல்லும்படி   தான் எல்லாம்   நடைபெற  வேண்டும்என்கிற அரக்கத்தனமான கட்டளை எப்படி முளைத்தது?  இப்படித்  தலைகால் தெரியாமல் கும்மாளம் போட்டுக் கொக்கரித்தால் அதுவே உனது அழிவுப் பாதைக்கு கொண்டுபோய் விடும் என்பதை மறந்துவிடாதே! ஏனென்றால்  அவ்வாறான அகம்பாவச் செயல்கள் என்னை மதிக்காமல்உண்மைக்குப்  புறம்பாக  நடைபெற்றால் அவைகள் சரியாகச் செயல்படா!  


பெருமை கொண்ட மனிதாஒவ்வொரு செயலைச் செய்யும்போது எனக்கு கீழ் வரும்  கேள்விக்கு பதிலளித்த பின்னரே செய்யத் தொடங்குஅதாவது சொல்பவர் யார் எப்படிப்பட்டவர்?  என்ன குணம் கொண்டவர்?   நம்பிக்கைக்கு உரியவரா?   நல்ல  எண்ணங்களை கொண்டவராபணம் கொடுத்தால் தான் காரியம் செய்பவராஅன்பு,  இரக்கம் கொண்டவராஎனபதைப் பார்த்துத் தான் செயலில் ஈடுபட வேண்டும்

இனிய மனிதாமற்றவர்களுக்குத்  தீமை கொடுக்கும் தவறான வேலைகளை  எப்போதும் செய்யாதேஉனது வாழ்கையை அழிக்கச் செய்யும் சோம்பேறித்தனத்தை  அறவே விட்டொழிஇதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்குழப்பமானவேலைகளை என்னிடத்தில் விட்டுவிடுதெளிவானகுழப்பமில்லாத வேலைகளை நீ சரியாகச் செய்து விடு


பணிவுள்ள மனிதாஉனக்கு அவ்வப்போது ஏற்படும் உடல் வலிதலைவலிஉறக்கமின்மைகைகால் அசதிபசியின்மைகுடும்பம் மற்றும் உறவினர்களால்  ஏற்படும் பிரச்சனைகள்தாம்பத்திய விவகாரம் ஆகியவை அனைத்திற்கும் நீ தான்  காரணம்இருப்பினும் உனக்குள் நான் இருப்பதால் இவைகளை நான் தீர்த்து  வைக்கிறேன்ஆனால் இனிமேல் நீ நன்மை தரும்செயலன்றி வேறு செயலில் ஈடுபடக்கூடாதுஅதைப்பற்றிய கவலையை விட்டுத் தள்ளுநான்பார்த்துக் கொள்கிறேன்.

இனிய மனிதாநீ ஓய்வெடுத்தாலும் எனது ஆன்ம ஓட்டம் ஓய்வெடுக்காமல்  உன்னையேச் சுற்றிசுற்றி வருகிறேன்நீயே என் கோவில்உள்ளே இந்த உள்விதி   மனிதனே தெய்வம்உன் உடலே எனது பாதுகாப்புக் கோட்டைஅதை காப்பதே என்  லட்சியம்உனது உடலில் நோய் அண்டவிடாமல் காக்கவும்,  தீய சக்திகளைத்  தடுக்கவும் உன்னை எப்போதும் புத்துணர்வோடு வைத்திருக்கவே நான் உனக்குள்  உள்ளேன்.


மதிப்புமிக்க மனிதாநான் சரியாக இயங்க உனக்குக் கவலைகள் ஏதும் இருக்கக் கூடாதுஅதற்கு நீ சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடவேண்டும்உடல்  ஆரோக்கியத்திற்குத் தினமும் உடற்பயிற்சிதியானம்யோகாமூச்சுப் பயிற்சிஒழுக்கத்தை கடைபிடித்தல் போன்றவைகளால் எனது ஜீவ ஒளி உன்னைச் சுற்றிலும்   பரவும்அதுவே உனது முகம் வாடாமல் புதுப்பொலிவுடன் எப்போதும் முகமலர்ச்சியை இருக்கச் செய்யும்நீ செய்யும் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும்நன்மை  தருவதாய் இருக்கவேண்டும்.  


உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகைவார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

உள்விதி மனிதன் பாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு - DO GOOD THINGS AS A LEADER


உள்விதி மனிதன்  


சம மனிதக்  கொள்கை. 

பாகம்:24 நன்மை செய்யும் 
தலைவனாக இரு !

AS A LEADER DO GOOD THINGS 

என் இனிய மனிதா! சென்ற அத்தியாயத்தில் உனக்குள் இருந்துகொண்டு உன் அக உடலைச்  சுத்தமாக வைத்துகொண்டு இருப்பதைப் பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் என்னால் அவ்வளவு எளிதாக உன் மனதை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. அந்த தோல்வியை நான் ஒத்துக் கொண்டேத்  தீரவேண்டும். உனது மனம் அடிக்கடி சஞ்சலப்படுகிறது. நிலையாக இல்லாமல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, மனிதர்களுக்குத் தகுந்தவாறு, செயலுக்குத் தக்கவாறு திடீர் திடீரென்று மாற்றிக்கொள் கிறாய். உன்னுடைய எண்ணங்களை என்னால் அவ்வளவு எளிதாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் இனிமேலும் நான் தோல்வி அடையத் தயாராக இல்லை. உன் மனதைத் தூய்மைபடுத்தி உலகத்தைப்  புதுஉலகமாக மாற்றி, உன்னை அனைவருக்கும் நன்மை செய்யும் மனிதனாக ஜொலிக்கச் செய்வதே எனது அடிப்படையான நோக்கமாகும்.


என் பிரிய மனிதா! உனக்குள் இருக்கும் நான் கோடிக்கணக்கான வருடங்கள்  அனுபவமுள்ளவன் என்று முன்னமே சொல்லியிருந்தேன். அதாவது புலியின் வீரம், நரியின் தந்திரம், எறும்பின் உழைப்பு, குயிலின் இனிமை, மயிலின் நடனம், யானையின் பலம், சிங்கத்தின் கம்பீரம், போன்றவற்றைக்  கொண்டுள்ளேன். அவைகளை ஒன்று திரட்டி  உனது எண்ணக்கிடங்கில் இதுநாள் வரையில் நீ செய்த கெட்டவைகளை வெளியே எட்டிப் பார்க்காதவாறு அடிபாதாளத்தில் புதைத்தும், நல்லவைகளை எளிதில் கிடைக்கும்படி மேலேயும் வைத்துள்ளேன். ஆனால் நீயோ சில நேரங்களில் என் அனுமதி பெறாமல், நான் தடுத்தும் கேளாமல் தீய காரியங்களை செய்துவிடுகின்றாய். பிறகு கஷ்டப்படுகின்றாய். உன்னால் நானும் கஷ்டப்படுகிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்படி ஒரு அணுவாக இருந்து, கருவாக மாறி, மனிதப்பிறவி என்னும் உருவத்தை அடைந்து பாதுகாப்பாய் பிறக்கின்றாய். அந்தச் செயல்களையெல்லாம் நீ நினைத்துப் பார்க்கிறாயா! சொல்லப்போனால் உன்னை நானே விரும்பி உருவாக்கியவன்! அதற்காக நீ எனக்கு எவ்வளவு கோடி கொட்டிக்கொடுத்தாய்? எல்லாமே இலவசமாகத் தானே உனக்குத் தருகிறேன். நான் மிகவும் இரக்கத்துடன் இருப்பதால் தானே நீ அலட்சியமாக இருக்கின்றாய். நீ இப்போது எடுத்த இந்த  ஜென்மத்தில் நான் சொன்ன கடமைகளை மறந்து என் அனுமதியின்றி பலவித தீய செயலுக்கு செய்யத்துணிந்ததால் இப்போது நீ கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கின்றாய்.


மதிப்புள்ள மனிதா! நீ கொண்டிருக்கும் இந்த உயிர் தாங்கிய உடல், உருவம் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் பலன். என்னைத் தவிர, என் துணையில்லாமல் உன்னால் ஒரு துரும்பு கூட எதையும் படைக்க முடியாது. அதற்கு நீ இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் உழைக்கவேண்டும். ஆகையால் உனக்கு இருக்கும் சிறிய ஆயுளில் என்னில் கைபோட்டுக் கொண்டு என் பின்னால் நடந்து வந்தால் நீ நன்மை அடைவாய்!


இரக்கமுள்ள மனிதா! சிலர் உன்னை அவர் முன்னே உட்கார வைத்துக்கொண்டு உனக்காக அவர்கள் நன்மை தரும் செயல்கள் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதும் செய்யாமல் சும்மா ஏதோ ஆழமாக ஏதோ யோசனை செய்வதுபோல் பாவனை செய்து 'உனக்கு அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன், அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று வீண் ஜம்பம் பேசி, வாயில் ஏதோ முணுமுணுத்து உன்கையில் ஏதோ ஒன்றைக் கொடுக்க, நீயும் அதை பயபக்தியோடு வாங்கிக் கொள்கிறாய். அதற்குப் பரிகாரமாய் உன்னிடத்தில் இருக்கும் பாடுபட்டு நீ உழைத்த செல்வத்தை அவர்களைப் போன்றோர்களுக்கு இனிமேலும் அள்ளிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவேன். எங்கே எத்தனை முறைகள் இப்படிப் போன்றோர்களுக்குச் செல்வத்தைக்  கொடுத்திருப்பாய். அப்படி இருக்கும்போது நீ கஷ்டப்படும்போது அவர்கள் உனக்கு ஏதாவது உதவி செய்தார்களா? நீ அவர்களிடத்தில் கொடுத்த செல்வங்கள் ஒருவழிப் பாதைப் போல! அங்கே போனால் திரும்ப வராது என்று இப்போது தெரிந்து கொண்டாயா? உன்னைப் போன்றவர்களிடத்தில் வாங்கிய செல்வங்களை அவர்களின் சுய தேவைக்காக அல்லவா பூர்த்திசெய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து முதலில் தூரவிலகிக் கொள். உன் தீய எண்ணங்களுக்கு அவர்களும் ஒரு காரணமாகும். நீ நினைத்து வந்த காரியம் நல்லது, கெட்டது எதுவென்று தெரியாமலே உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்தக் காரியத்தை செய்யத் தூண்டுபவர்களாயிற்றே! 

நட்பு கொண்ட மனிதா! எனது உலகம் இருள் சூழ்ந்தது. எனது ஜீவ ஓட்ட ஆற்றல் இருளில் இயங்கினாலும் எந்த ஒரு தடையும் இல்லாமல் ஒழுங்காக இயங்குகின்றது. உனது ஆற்றலோ  வெளிச்சத்தில் இயங்குகின்றது. எப்படி என்று புரிகின்றதா! உனது இரு கண்களை மூடிக்கொள். இருள் சூழ்ந்து இருக்கின்றதல்லவா! ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொள். உன் சுட்டு விரலை மெல்ல மெல்ல உன் நெற்றிக்கருகில் கொண்டுவந்து தொடு. இப்போது என்ன உணர்கின்றாய்! உன் தொடுதலால் எனது ஆற்றல் அதிகப்படுகின்றது. அந்த ஆற்றலை உனக்கு திரும்பவும் தருகிறேன். இந்த தொடுதல் மூலம் உனக்கும் எனக்குமுள்ள உறவு புதுப்பிக்கப் படுகின்றது. இப்படியே எனக்காக தினமும் சில நிமிடங்கள் பயிற்சி எடுத்துக்கொள். புத்துணர்ச்சி பெறுவாய். பலம் அடைவாய்!



பண்புள்ள மனிதா! எத்தனை வருடம் தவம் புரிந்த முனிகள், ரிஷிகள் என்றாலும் அவர்களின் தவவலிமையை அவ்வளவு எளிதாக மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. அதை பாக்களினால், மந்திரங்களினால் உனக்குக்  கொடுத்தாலும் உனக்கு முழு பலன் கிடைக்காது. அறிவும், புத்தியும், உழைப்பும், முயற்சியும் உனக்குள் இருந்தாலும் நீ பயன்படுத்தும் முறையில்  பொறுத்துதான் பலன் கிடைக்கும். ஆனால் அவ்வளவு கஷ்டம் நீ படத் தேவையில்லை. அவ்வளவு நேரம் நீ செலவழிக்கத் தேவையில்லை. அத்தனையும் மொத்த உருவமாக உனக்குள் நான் இருக்கிறேன். இந்த உலகம் சென்ற சில வருட காலமாக  அபரிவிதமான மாற்றங்கள் அடைந்துள்ளது. இனிமேலும் மாற்றங்கள் பல காணும். அதனைத் தடுத்த நிறுத்த முடியாது. உனக்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. மாற்றங்கள் என்கிற போர்வையில் தீய சக்திகள் உன்னை வாட்டிவதைக்க வந்து கொண்டிருக்கின்றன. நீ ஏமாறும் சமயம் அல்லது மயங்கும் சமயத்தில் உன்னை சாய்க்க வலம் வந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நேரத்தில் அப்படிப்பட்ட செயல்களின் வருகையை தெரிந்து கொண்டால்  பலவித கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். ஆகையால் நீ செய்யும் காரியங்களை ஒன்றுக்குப் பத்து முறை யோசித்து என்னிடம் ஆலோசித்து முடிவுகொள். ஒரு செயல் செய்யும்போது உனது உடல் சாதாரணமாக, மனம் படபடப்பாக இல்லாமல் இருந்தால் நான் 'சரி ' என்கிற உத்தரவு தந்துள்ளேன் என்று அர்த்தம். உன் உடலில் ஏதேனும் மாறுதல் உண்டானால் 'அது தவறு' என்றும் அப்படிச் செய்வதாக இருந்தால் நன்றாக பலமுறை யோசித்துச் செயல்படு. எக்காரணம் கொண்டும் அவசரமாகச்  செயல்படாதே! அது கட்டாயம் தவறாய் முடியும்.


என் அருமை மனிதா! வெற்றிக்குப்  பலவழிகள் இருக்கின்றன. உனக்குத் தேவை நிரந்தர வெற்றி. அதனால் பலருக்கு நன்மை கொடுக்கும் நல்ல வழியில் செல். மற்றவர்களைக் கெடுத்து அல்லது ஏமாற்றி வெற்றி பெற ஒருபோதும் நினைக்காதே! அது நிரந்தரமான வெற்றி அல்ல. உனது வெற்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அது மற்றவர்ககளை அழித்துவிட கூடாது. ஒரு மனிதன் தனியாக நின்று வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமான காரியம். அப்படி அடைந்தால் அது சிறிய வெற்றியாக இருக்கும். ஆனால் உனது பெரிய வெற்றிக்கு பல நல்ல மனிதர்களின் நட்பை ஏற்படுத்தித் தருகிறேன். அவர்களை உன்னுடன் இணைத்துக் கொள். அதன் ஆற்றல் பலமடங்கு பெருகும். அதன் வெற்றி இமாலய வெற்றியாகும். 

பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் காரண கர்த்தாவாகவும், தலைவனாக அவர்களை நல்ல வழிகாட்டி நடத்திச் செல்பவனாக இரு. அதற்கு வேண்டிய அறிவையும், ஆற்றலையும் உனக்குத் தருகிறேன். எளிதில் வெற்றி அடைவாய்.

ஒரு காரியம் செய்யும்போது உனக்கு நுணுக்கமான அறிவு தேவைபடுகின்றது. அதேபோல் அந்த செயலின் தன்மையை உயரே பறக்கும் பறவையைப் போல் கழுகுப் பார்வை போல் முழுமையாகத்  தெரிந்து கொள்ளவேண்டும். அந்தச்  செயலின் விளைவுகளை கடைசிவரை கற்பனை செய்து அதில் வெற்றி கிட்டுவதுபோல் இருந்தால் மட்டுமே அந்தச் செயலை செய்யத் தொடங்கவேண்டும். அதில் ஏதேனும் தவறு இருப்பதாக நீ உணர்ந்தால், அந்தக் காரியத்தை உடனே தள்ளிப் போட்டு மீண்டும் செயலில் மாற்றம் செய்து வெற்றி கிட்டும்வரை (கற்பனையில்) மாற்றம் செய்யப்படவேண்டும். அப்படிச் செய்யும்போது உனக்கு தோல்வியே அண்டாது.

என் இனிய மனிதா! நான் உனது எண்ணங்களின் மூலம் வழிகாட்டுகிறேன். அதன் மூலம் உனது வாழ்வில் முன்னேறும் சக்தி தானாக வரும். அதுவே நீ தலைவனாக மாற்றும் சக்தி என்பதை தெரிந்துகொள். நான் உனக்குக்  கற்பனையில் தன்னம்பிக்கை கொடுத்து உதவுபவன். அதை வைத்துக் கொண்டு செயலாற்றினால் உனது நல்ல குறிக்கோளை இலகுவாக அடையலாம்.

என் பிரியமுள்ள மனிதா! நீ எப்போதும் குறைவாக பேசு. நிறையகேள். கேட்பதில் நானும் அதிகமாக பங்குகொள்ள முடியும். எனது உணர்வின்மூலம் நீ செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறேன். என் உணர்வோடு கலந்த உன் செயலால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நன்மையையும் கூட வரும். சில மனிதர்கள் சீக்கிரம் எப்படியாவது சம்பாதித்து மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக துடிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகின்றனர். அவைகள் அத்தனையும் ஒரு ஊசிமுனையளவு கூட உனது ஜீவ ஓட்டத்திற்குப் பயன்படாது. எனது ஆன்ம ஓட்டத்திற்குச் சுத்தமான காற்றும், உணவும் வேண்டும். அவ்வளவே. உன் சிறிய வயிறு தான் எனது ஜீவ வீடு. அதில் எரியும் தீபம் உனக்கு அதிக சக்தி கொடுக்கும். 

பண்புள்ள மனிதா! ஒருவேளை அளவிடமுடியாதச்  செல்வத்தை நீ சேமித்தோ அல்லது பதுக்கியோ வைத்திருப்பது போல் அளவுக்கு அதிகமாக உணவையும் சேமிக்கும் சக்தி உனக்கு கொடுத்திருந்தால் இந்த உணவு, தனி மனிதக்கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். அதனால் அனைவருக்கும் உணவு கிடைக்காத சூழ்நிலை உண்டாயிருக்கும். அதற்காகத்தான் உணவின் ஆயுளை மிகவும் குறைத்திருக்கிறேன்.. எனக்கு சுத்தமான உணவு வேண்டுமானால் அதை நீண்ட நாட்களுக்கு வைக்கவிடாமல் உடனே பிறர்க்கு கொடுக்கச் செய்கிறேன். அல்லது கெட்டுப்போக வைக்கிறேன். அதன் மூலம் மனித ஜீவன்களை  ஆரோக்கியமாகவும் அதேவேளையில்  அழிவிலிருந்துக்  காக்கும்படிச் செய்கிறேன்.   

பிரியமுள்ள மனிதா! உன்னை நீயே நிர்வாகித்தால் தான் உன் திறமை அதிகரிக்கும். அதன் மூலம் சிறந்த தலைவனாகவும் மாறமுடியும். அதற்கு பொறுமை, பொறுப்பு, சுயமுயற்சி, ஈடுபாடு, புதுமையை அறிந்து ஏற்றுக்கொள்ளுதல், மற்றவர்களின் உணர்வை மதித்து நடத்தல், 'தான்' என்ற ஆணவம் இல்லாமல் இருத்தல், நன்மை தரும் நல்ல எண்ணங்களை வளர்த்தல் ஆகிய நற்குணங்கள் தேவை. தலைமுறை இடைவெளியை அறிந்துகொண்டு நடக்கும் தன்மை, காலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப செயலாற்றும் தன்மை, பொறாமை இன்மை, மற்றவர்களை வழிநடத்தும் தன்மை, மற்றவர்களை மரியாதையாய் ஏற்றுக்கொள்ளும் தன்மை, இரக்க குணம், மனித நேயம் கடைசியாக என் ஜீவ ஆற்றல் அனைத்தும் உனக்கு வந்து சேரும். அவ்வாறு செய்வதினால் நீ மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத்  திகழ்வதோடு வழிகாட்டியாகவும் இருக்கச் செய்கிறேன். 

பெருமை மிக்க மனிதா! 'பாஸ்' என்கிற அதிகார தோரணை விடத் தலைவராக நல்லெண்ணம் கொண்டு நன்மை செய்பவராக இருப்பதற்கு நான் உனக்கு வேண்டிய அளவு உதவி செய்கிறேன். உனது சர்வாதிகாரம் மற்றவர்களுக்கு அச்சத்தைத் தரும். அதனால் உறவுகள் சுமூகமாக இல்லாமல் போய்விடும். ஆனால் தலைவனால் மட்டுமே சுமூகமான உறவுகளை ஏற்படுத்த முடியும். நான் உனக்குள் இருப்பது எனது வயிற்று பிழைப்பிற்காக மட்டும் இருக்கவில்லை. உனக்குள் இருக்கும் திறமைகளைப்  பயன்படுத்தி நான் படைத்த உலகத்தைக் காப்பாற்றி அனைவருக்கும் நன்மை செய்து அதன்மூலம் உனக்கு மனநிறைவு மற்றும் நிம்மதியான பெருவாழ்வு தரவே உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து கொண்டு உன்னை இயக்குகிறேன். நான் சொல்வது எனக்காக அல்ல. உனக்காக. ஊராரின் நன்மைக்காக.


மேன்மையான மனிதா! நான் உனக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கைத்  தத்துவத்தை இப்போது சொல்கிறேன் கேள். 

மலரும் மலர்கள் வாசனையும் அழகும் உனக்காக அன்றி மலர்களைத் தாங்கிய செடிகளுக்கில்லை. அனைத்தும் உனக்காக மலர்ந்தவை.

மழை நீர் முழுவதும் பயிர்களுக்கு மட்டுமின்றி உனக்காகவும் கொடுக்கப்பட்டவை.

பசுவின் பால் முழுவதும் கன்றுக்கு இல்லை. பெரும்பகுதி உனக்காகத்தான் படைக்கப்பட்டவை.

மரத்தின் கனிகள் அனைத்தும் மரத்திற்கு இல்லை. பெரும் பங்கு உனக்காக நான் தந்தவை.

நெல், கோதுமை மணிகள் அனைத்தும் நிலத்திற்கு செல்வதில்லை. உனக்காக உருவானவை.

இயற்கையின் அழகு உனக்காக படைக்கப்பட்டதேயன்றி வேறு ஒருவருக்கும் இல்லை.

அன்பு கொண்ட நல்ல உள்ளங்கள் உனது நன்மைக்காக மட்டுமே கொடுத்தவை.

இந்த உள்விதி மனிதன் உனது வாழ்வு சிறக்கவே அன்றி எனது சுயநலத்திற்கு அல்ல.

நான் படைத்த அனைத்தும் பிறர்க்கு கொடுக்கவேயன்றி எனது பிழைப்பிற்காக இல்லை என்பதை புரிந்து கொள்.

உன் கடமைகளை  சரியாக செய்!

நன்மைகள்  தானாக வரும்!

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்...


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
---------- Forwarded message ----------

Friday, 26 October 2012

'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம். A LIFE LESSON FROM SUGARCANE


அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம்.
A LIFE LESSON FROM SUGARCANE


வாழ்க்கை சிலருக்கு இனிக்கின்றது. சிலருக்கு கசக்கின்றது. ஏன்? எதற்கு இந்த வேறுபாடு! அதாவது ஆசை கொண்ட வாழ்கை அனுபவித்து முடிந்தவுடன் அடங்கிவிடுகின்றது. அதன் பிறகு வாழ்கை கசந்துவிடுகின்றது. ஆனால் அக்கறையுள்ள வாழ்க்கை ஆயுள் முழுவதும் இனிமையாக அனுபவிக்கச் செய்ய உதவுகின்றது.


வாழ்க்கை சிலர் மேலிருந்து கீழாக ஆரம்பிப்பார்கள். சிலர் கீழிருந்து மேலே செல்வார்கள். என்ன புதிராகத் தெரிகின்றதா? இங்கு தான் 'கரும்பு ' நமக்கு வாழ்கை பாடத்தை உணர்த்துகின்றது. அதாவது  சிலர் கஷ்டமான (கசப்பான) செயல்களான கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையை கையில் கொண்டு வாழ்க்கையை கரும்பின் மேலே கசப்பிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கீழே வர வர 'வெற்றி ' என்ற இனிப்பை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கிறார்கள். பலர் கேளிக்கை, வெட்டிப்பேச்சு, சிரிப்பு , கேலி, கூத்து, கும்மாளம் என்பவற்றில் கவனம் செலுத்தி வாழ்கையை கரும்பின் கீழ்பகுதி இனிப்பிலிருந்து துவங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை போக போக கசந்து  வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு உதாரணம், படிக்கும் இளைஞர்கள் பலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா, பாட்டு, கேலி பேசி பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் போது  சில இளைஞர்கள் மட்டும் தீவு போல் தனியே பொறுப்புடன் படித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கும் வெட்டி பேச்சு, அரட்டை அடிக்கவேண்டுமென்று நினைப்பு வராதா! ஆனால் அவர்களின் மனதில் 'இப்படி அரட்டை அடிப்பதற்கு இது சமயமல்ல!' என்று நன்றாக உணர்ந்தவர்கள். படிக்கும் வாய்ப்பை இப்போது விட்டுவிட்டால் பரீட்சையில் தேறும் வாய்ப்பு  பிரகாசமாக இருக்காது. அதன் பிறகு வாழ்கை முழுவதும் முன்னேறும் வாய்ப்பு பறிபோய்விடும். ஆகவே படிப்பு கசந்தாலும் போக போக இனிப்பான பல வெற்றிகள் கிடைக்கும் என்று உறுதிகொண்டவர்கள்.

அலுவலகத்தில் சிலர் தங்களுடைய வேலை முடிந்த பிறகும் பக்கத்தில் உள்ளவர்கள், எதிரில் உள்ளவர்கள் என்னென்ன வேலை செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். விளையாட்டாய் ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட வேலைகள் , பின்னாளில் அதுவே அவருக்கு ஒரு சிறந்த மேலாளராக ஆகும் வாய்ப்பு கிடைக்கின்றது. அவர்கள் நினைத்திருந்தால் பத்தோடு பதினொன்றாக இருந்துகொண்டு பொழுதை கழித்திருக்கலாம். அவர்களுக்கு வாழ்கையில் முன்னேறவேண்டுமென்ற அக்கறை இருப்பதால் இது கசப்பாக இருந்தாலும் அவர்களின் ஆர்வம் செய்யச் சொல்கின்றது. வருங்காலத்தில் கிடைக்கப்போகும் இனிப்பான வாழ்க்கைக்கு அவர்கள் தங்களை இப்போதிலிருந்து தயார்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றியும் காண்கிறார்கள்.


வாழ்கையில் முன்பகுதியை அனுபவிக்க நினைப்பவர்கள் பின் பகுதியில் பத்து மடங்கு கஷ்டப்பட நேரிடும்.

ஆனால் முன்பகுதியில் கஷ்டப்படுபவர்கள் பின்பகுதியில் நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்பார்கள்.

நீங்கள் உங்களுக்குள்ள கரும்பான வாழ்கையை கீழிருந்து மேலாக செல்லப் போகிறீர்களா? அல்லது மேலிருந்து கீழாக வரப்போகிறீர்களா?

முன் கஷ்டம் (கசப்பு)! பின் சுகமா? (இனிப்பா?)     

அல்லது 

முன் சுகம் (இனிப்பு) பின் கஷ்டமா? (கசப்பா?)


(கரும்பு) முடிவு உங்கள் கையில்.
இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Tuesday, 23 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 23 உள் உடலைத் தினமும் சுத்தம் செய்வது யார்? WHO IS CLEANING YOUR INNER BODY?



உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 

பாகம்: 23 உன் உள் உடலைத்  தினமும் 
சுத்தம் செய்வது யார்?
WHO IS CLEANING YOUR INNER BODY?



என் இனிய மனிதா! எனக்கு இருக்கும் ஆதங்கம், அவசரம், ஆசை என்னவென்றால் உனது ஜீவ ஓட்டம் நிற்ப்பதற்கு முன்னே நான் உனக்களித்தச் செல்வங்களை பத்திரமாக மீட்டு உன்னிடம் கொடுப்பது தான். என்னென்ன செல்வங்கள் என்று கேட்கிறாயா! இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். 

* ஆரோக்கியமான உடல் மற்றும் மனம், 
* எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பது மூலம் உன்னை என்றும்     
   இளமையாக  வைத்திருத்தல்,
* அன்பான குடும்பமும், உறவும்,
* பேர் சொல்லும் நன்மக்கட்செல்வமும்,
* எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமும்,
* மானம் காக்கும் உடையும்,
* சகாதாரமான இருப்பிடமும்,
* பசியறியாமல் இருக்க உணவும்,
* பசுமை மாறாத இயற்கை வளமும்,
* நல்ல நட்பை நாடும் நண்பர்களும்,
* வாக்கு தவறாத குணமும்,
* பிறர்க்கு அள்ளித் தருவதற்குச் செல்வமும்,
* தடைபடாத உனது இளமையின் கல்வி,
* செல்வங்களை சேர்க்கும் நல்ல தொழிலும்,
* துன்பம் இல்லாத பெருவாழ்வும்,
* சான்றோர்களை மதிக்கும் குணமும்,
* பெரியவர்களின் நல்லாசியும் 
* நிறைந்த ஆயுளும் 
* என்னை மறக்காமல் இருக்கும் மனம் 

பிரியமுள்ள மனிதா! இந்த செல்வங்களில் இப்போது உன்னிடத்தில் என்னென்ன இருக்கின்றது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னிடத்தில் பாதிக்கும் கீழ் உள்ளது தான் என்னை பாதித்த விஷயம். அனைத்தையும் உனக்கு கொடுப்பதற்குத் தான் இத்தனை படாதபாடு படவேண்டியுள்ளது. உன்னை என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வருமாறு கூறுகிறேன். இப்போதாவது என் வாக்கு உன் மனதில் பிரதிபலிக்கின்றதா! இன்னமும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் நம்பிக்கை இழக்கவில்லை! உன்னை ஜெயிக்க வைப்பதே என் குறிக்கோள் கூட.

பாசமுள்ள மனிதா! நீ மூச்சு இழுத்துவிடும் போது என்ன நடக்கிறது என்று தெரியுமா! சுத்தமான காற்று உள்ளே உடலுக்குள் இழுத்து அசுத்த காற்றை வெளியே தள்ளுகிறேன். அப்போது ஏதேனும் சிறிய தூசி இருந்தால் உடனே தாமதிக்காமல் உன்னிடம் கேட்காமல்  இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியே தள்ளி விடுகிறேன் எனபதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். காற்று சுத்தமாக தான் இருக்கவேண்டும் என்று ஏன் நான் அடம்பிடிக்கிறேன் - விரும்புகிறேன் - பிடிவாதம் பிடிக்கிறேன் - மறைமுகமாக கட்டளையிடுகிறேன் ஏனென்றால் சுத்தமான காற்று ஒன்றினால் தான் உன் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும். அந்தக் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உனது ஜீவ ஓட்டத்தின் ஆயுள் கெட்டியாக இருக்கும். காற்று தான் என் முதல் ஜீவ நாடி. அதேபோல் நீ உண்ணும் உணவும், நீரும் கூட சுத்தமாக இருக்கவேண்டும். அப்போது தான் உன்னை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். கெட்ட அல்லது அசுத்தமான காற்று அல்லது உணவு எனது ஆன்ம ஓட்டத்தை பாதிக்கச் செய்து உன்னை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ அழித்துவிடும். பிறகு நான் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். 

மதிப்புமிக்க மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு என்ன செய்கிறேன்? என்னால் உனக்கு என்ன லாபம்? உள்விதி மனிதன் என்று யாருமில்லை! அவன் தயவுத் தேவையில்லை என்று ஒரு இளைஞன்  என்னுடன் விவாதம் செய்தான்.அதற்கு நான் அவனிடம் கோபப்படவில்லை. 

"அப்படியா, உன்னைப்போன்ற ஒருவனைத் தான் இதுநாள் வரை தேடிக்கொண்டு இருந்தேன்" என்றேன்.
  
"எதற்காக ?" என்று கேட்டான்.
"அறுசுவை உணவுகொண்டு உனக்கு பரிமாற !" என்று சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினேன்.

"மூன்று நாட்கள் தான் உங்களுடன் தங்குவேன்" என்று கண்டிப்பாகச்  சொன்னான்.
"அதுவே எனக்கு அதிகம்" என்று அவனை உட்கார வைத்து மரியாதையாக அனைத்தையும் பரிமாறினேன்.

சாப்பிட்டுக்கொண்டே "என்ன தான் நீங்கள் அன்பாக உபசரித்தாலும் நான் அசர மாட்டேன். எனது எண்ணத்தை இந்த உள்விதி மனிதனால் மாற்றமுடியாது " என்று என்னை எச்சரித்தான்.
நானும் "ம் .." என்று தலையாட்டினேன்.


சும்மா சொல்லக்கூடாது அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிமுடித்தான். 
"ரொம்ப திவ்யமாக இருக்கின்றது" என்று எனக்குச் சான்றிதழ் கொடுத்தான்.
"சும்மாவா, அனைத்தும் தனி நெய்யினால் தயாரித்தவை " என்றேன்.
"அப்படியா!" என்று கைகழுவ சென்றான். கழுவுகிறான், கழுவுகிறான் கழுவிக்கொண்டே இருந்தான்.


"என்னப்பா! இன்னும் கை கழுவி முடிக்கவில்லையா ? " 
"எண்ணெய் கையில் ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. சோப்பு இருந்தால் கொடுங்களேன் "
நானும் அவனுக்கு சோப்பு கொடுத்தேன். கையை சுத்தமாக கழுவிமுடித்தான். சோப்பை என்னிடத்தில் திரும்ப கொடுத்தான். நான் வாங்கிக்கொள்ள மறுத்தேன். காரணம் தெரியாமல் முழித்தான். நானே அதற்கான விளக்கத்தைச் சொன்னேன்.


"இளைஞனே, வெளியே உன் கையில் ஒட்டிய எண்ணெயை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்தாயே ! உனக்குள்ளேயும் இதே எண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்குமல்லவா! அதை யார் சுத்தம் செய்வது. இந்தா இந்த சோப்பை முழுங்கு! தானாக சுத்தம் ஆகிவிடும் " என்றேன்.
முதல் முறையாக அவன் ஏதோ உணர்ந்தவனாய் , "இது நாள் வரை நான் என் உடலுக்குள்ளே சுத்தம் செய்யவில்லை. ஆனால் இன்றளவும் அது சுத்தமாக இருக்கின்றது.. எப்படி என்று தெரியவில்லை? என்று என்னிடத்தில் கேள்விகுறியோடு பதில் சொன்னான்.


"இப்போது தெரிந்து கொள் ! உனக்குள் இருக்கும் நான் எவ்வித சோப்புத் துணை இல்லாமல் நீ சாப்பிடும் போது, ஏதாவது குடிக்கும்போதும் உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டு வருகிறேன் என்று இப்போதாவது தெரிந்ததா!" என்றேன்.

"தெரிந்தது . பாதியளவு நீ இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். முழுமையாக இல்லை! " என்றான். இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் வந்தது. இன்றைக்கு என்ன விருந்தோ என்று ஆசையுடன் இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் அவனுக்கு முன் முதல் நாள் ஆஹா...ஓஹோ..என்று சாப்பிட்ட சாப்பாட்டை அவனருகில் வைத்தேன். மூக்கைப் பொத்திக்கொண்டு ..

" இவ்வளவு நாற்றம் அடிக்கின்றது. இதை யார் சாப்பிடுவது?" என்று சண்டை போடாத குறையாக கேட்டான். நானும் விடாமல் 
"இதைத்தானப்பா இரண்டு நாளுக்கு முன் நன்றாக இருப்பதாகச்  சொன்னாய்.!"
"ஆமாம் சொன்னேன். இப்போது கெட்டுவிட்டது. அதை சாப்பிட முடியுமா!"

"இது தானே இப்போது உன் உடலில் இருக்கும். அது எப்படி கெடாமல் எவ்வித துர்நாற்றமும் இல்லாமல் யார் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?" என்றேன். இப்போது எவ்வித பதிலும் பேசாமல் பிறகு சிறிது நேரம் சிந்தித்து "இப்போது எல்லாம் புரிந்தது. என் உடல் சுத்தம், எண்ணத்தின் சுத்தத்திற்குக் காரணம் தாங்கள் தான் என்று இப்போது ஒத்துக்கொள்கிறேன். இனிமேலும் இந்த மாதிரியான சந்தேகம் வரவே வராது" என்று என்னைப் பற்றி முழுமையாக இப்போது உணர்ந்தான். நீங்களும் இந்த உள்விதி மனிதன் உங்கள் உடலுக்குள் என்னென்ன வேலைகள் செய்கிறான் என்று புரிந்ததா? புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com