Pages

Saturday, 3 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம். LEARN HOW TO SAFE YOURSELF?

உள்விதி மனிதன்  
சமமனிதக் கொள்கை 



மதுரை கங்காதரன் 
பாகம்: 28 நீ  தற்காப்புக் கலை கற்பது அவசியம்.
LEARN HOW TO SAFE YOURSELF?





ன் பிரிய மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் உனக்கு மேலும் எந்தெந்த வழிகளில் உதவி செய்கிறான் என்பதை இப்போது விளக்கமாகச் சொல்கிறேன் கேள். நீ கருவில் உருவாகும் முதல் பிறக்கும் வரையும், பூமியில் ஜனித்த பின்னர் நீ வாழும் வரையிலும் உனக்குப்  பலவழிகளில் உதவி செய்கிறேன். அதாவது உனது உடம்பிற்கு ஏதேனும் சிறிய கஷ்டமோ அல்லது நோயோ அல்லது உன் உடம்பிற்கு ஒவ்வாத செயலோ அல்லது தேகத்தில் கஷ்டமோ அல்லது தேக சௌகரியம் இல்லாமல் இருந்தாலோ நான் உடனே அதை பலவழிகளில் உனக்கு உணர்த்தி வருகிறேன். அதாவது உன் உடம்பின் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலமாக (காய்ச்சல்) அல்லது குறைப்பதன் மூலமாக (குளிர் , ஜுரம்), மூச்சு விடுவதில் கஷ்டம் (இளைப்பு )கொடுப்பதன் மூலமாக, அசதியை கொடுப்பதன் மூலமாகவும், சாப்பிட இயலாமலும், வேலையில் கவனக்குறைவு, தூக்கமில்லாமலும், பேசமுடியாமலும், நடக்க முடியாமலும், பார்க்க முடியாமலும் இன்னும் பல. அப்போது தானே உன் உடம்பிற்கு என்ன ஏது? என்று உடனே பார்கின்றாய்.



ன்பு மனிதா! எனது ஜீவ ஓட்டமே தடை பட்டாலும் நான் படும் கஷ்டங்கள் ஏதுமில்லை. ஆனால் அனைத்துத் துன்பங்களும், கஷ்டங்களும் நீ தான் அனுபவிக்கவேண்டும். உன் உடம்பு படும் கஷ்டத்தைப் பார்த்து என்னால் சும்மா இருக்க முடியும்! ஆனால் நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் உன் உடலில் ஓடும் எனது ஆன்ம ஓட்டம் உனது நன்மைக்காக, உனது மகிழ்ச்சிக்காகத் தான் ஓடுகின்றது. அதனால் உன் உடம்பிற்கு ஒன்றென்றால் துடிதுடித்து அந்தத்  துடிப்பை உன் உடம்பிற்கு தொந்தரவு ஏற்படுத்துவதன் மூலம் காட்டுகிறேன் என்பதை புரிந்து கொள்.

பண்புமிக்க மனிதா! எனது ஜீவ ஓட்டம், மூச்சு ஓட்டம் மற்றும் வெப்ப ஓட்டம் எல்லாமே உன் உடலை பாதுகாக்கத் தான். உன் உடல் நன்றாக இருந்தால் தான் என் ஓட்டங்கள் எல்லாமே ஒரே சீராக இருக்கும். அப்போது தான் உனது உடல் ஆரோக்கியதாகவும், புஷ்டியாகவும் இருக்கும். இவைகள் அனைத்தும் உன் கையில் தான் இருக்கின்றது. 

ரியாதையுள்ள மனிதா! உனது உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் தான் உனது வேலைகளை மற்றவர்களின் தயவின்றி நீயாகச் செய்யலாம். மேலும் உன்னைச் சுற்றி உடலால் கஷ்டப்படும் மனிதர்களுக்கு சிறந்த உதவிகள் செய்யவேண்டுமென்பதற்காகத் தான் இவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. உனது இந்த பிறப்பே உனது வேலைகளைச் செய்வதற்கும், முடியாமல் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதறகாகத் தான் என்பதைப் புரிந்துகொள். உனக்கு அதற்கான ஆற்றலும், அறிவும் தந்து கொண்டிருக்கிறேன்.



திப்புள்ள மனிதா! நிஜத்தில் அவரவர்கள் அவர்களுடைய வேலைகள் செய்வதற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அல்லது சோம்பேறித்தனம் காட்டுகிறார்கள். சிலர் உடம்பு வளையாமல் வாழ்கிறார்கள். ஆனால் எனது விதிப்படி அவர்கள் அவர்களுடைய வேலைகள் செய்யாததால் வாழ்கையில் கஷ்டப்படவேண்டும். அதற்காக அவர்களின் உடலை மிகப் பருமனாக்கி அல்லது வெகுவாக இளைத்து பலவாறு கஷ்டப்படுத்துகிறேன். அதன் பிறகு தானே அவர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேலைகளான வீட்டு வேலைகள் அல்லது அலுவலக வேலைகள் அவர்களே செய்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிறைய உடல் தொல்லைகளிலிருந்து தப்பித்திருக்கலாம். பலர் நேரம் காலம் தெரியாமல் அதிகமாக உழைக்கிறார்கள். அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லாம் பணத்திற்காக என்று சொல்கிறாய். இந்த பணத்தால் உனக்கு உடல் ஆரோக்கியம் வாங்கிவிட முடியாது.

பாசமுள்ள மனிதா! உனது வேலையில், செயலில் உனது மனதை ஒருமுகப்படுத்தி கவனமாக செய்தாலே உனது மனமும், உடலும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் தீய வழியில் தீய பழக்கத்திற்கு அடிமையாகி தங்களுடைய உடல் நலத்தைத் தாங்களே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்வது ஆரம்பத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் போகப்போக அந்த மகிழ்ச்சி நிரந்தரமில்லை என்று உணர்கின்றனர். ஆனால் அப்படி கெட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பின்னால் என்னிடம் முறையிட்டு என்ன லாபம்? நீ செய்த செயல், அதன் விளைவுகளை நீ தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் எனது இரக்ககுணத்தால் உன்னை உடனே அழிக்காமல் விட்டுவைத்திருக்கிறேன். முடிந்தளவு உன்னைக் காக்க முயற்சியும் எடுத்துக்கொள்கிறேன்.



ரக்கமுள்ள மனிதா! எல்லோரும் பொதுவாகச் சொல்வார்கள். மற்றவர்களுக்கு நீ  எப்படி இருந்தாலும் சரி உனக்கு நீ நல்லவனாக, நல்லெண்ணங்களுடன் நடந்துகொண்டால் போதும் என்று. அதைச்  சொல்வது எளிது. ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம் தான். இருப்பினும் உன்னை நீயே கெடுதலோ அல்லது  கொடுமையோ செய்ய கொள்ள முடியாது. அப்படியிருந்தாலும் அதைச் செய்பவர்கள் மிகவும் அரிது. அதுவும் இந்த உலகில் பல அட்டூழியங்களைப் பார்க்கச் சகிக்காமல், அநியாங்களை எதிர்க்கத் துணிவில்லாமல், அநீதி, சுய கௌரவத்திற்காக வெகு சிலர் தங்களுடைய ஆயுளை அவர்களே (தற்கொலை) முடித்துக்கொள்கிறார்கள். அவர்கள்  இந்த உள்விதி  மனிதனை நம்பாமல் இருப்பதாலும், என் உதவியை உதாசீனப் படுத்தியதாலும் நடப்பவை. அது அதிகம் போனால் 0.0001% இருக்கும். ஆனால் பெரும்பாலும் உனது அழிவு மற்றவர்களினாலும், தவறான வழிகளாலும், வயதாகிவிடுவதாலும், நோயினாலும் வருகின்றது. நீ எப்போதும் எந்த நேரத்திலும் நல்லவனாகத் தான் இருக்கின்றாய். ஆனால் அதைத் தக்க வைத்துக்கொள்வதில் தான் உனக்கு பிரச்சனை ஏற்படுகின்றது.



என் இனிய மனிதா! உனக்குள் இருக்கும் நான் கோடிக்கணக்கான வருட அனுபவமிக்கவன் என்று நான் ஏறகனவே சொல்லியிருக்கிறேன். நீ ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது நான் உனக்குப் பலவிதமான தீர்வுகளை எப்போதும் வழங்கிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றிச்  சிந்திக்காமல் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு நடக்கவே நீ மிகவும் பிரயாசைப்படுகிறாய். அதன்படி பல காரியங்களைச்  செய்கிறாய். மனிதா! நீ  நல்லவன். ஆனால் உன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் நல்லவர்களாக அல்லது தீயவர்களாக அல்லது இரண்டுமில்லாமல் இருக்கலாம். அதில் தீயவர்கள் உன்னைச் சுற்றி இருந்தால் அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது? அவர்கள் நல்லவர்களாக நடித்து உனக்குக் கெடுதல் செய்துகொண்டிருந்தால் எப்படி உனக்குத் தெரியும்?



பிரிய மனிதா! யார் உன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் நல்ல, நன்மையான செயலின் மூலம் 'தான் யார்?' என்று யாரொருவர் உணர்த்துகின்றாரோ அவர்களை நீ நம்பலாம். அவர்களால் உனக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைத்தால், உன் வாழ்வு மலந்தால் அவர்களின் பின்னே செல்லலாம். அதை விட்டுவிட்டு எந்த ஒரு செயல் செய்யாமல் வெறும் தேன் தடவிய பேச்சில் உன்னைப் புகழ்ந்தோ அல்லது சுயநலம் கருதியோ அல்லது உணர்ச்சி பொங்க பேசி அந்த உணர்ச்சியை தங்களுக்குச் சாதகமாக்கி உன்னிடத்தில் பணம் பறிப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பவே கூடாது. அவர்களிடமிருந்து நீ காத்துக்கொள். 

இனிய மனிதா! இப்போது புரிந்து கொண்டாயா! மற்றவர்களிடமிருந்து உன்னை காத்துக்கொள்ள நீ பலசாலியாக, ஆரோக்கியச் சிந்தனை மிகுந்தவனாக, அறிவுடன் வேலை செய்கின்றவனாக யார் உனக்கு செயலின் மூலம் உனது வளர்ச்சியை உயர்த்திக் கொடுக்கிறார்களோ அவர்களே என்வழி நடப்பவர்கள். அவர்களே நான். நானே அவர்கள். மனிதா! உனக்கு தற்காப்புக் கலை தெரியவேண்டும். நீ மட்டுமல்ல இந்த உலகம் முழுவதுமுள்ள மக்கள். உன்னைச் சுற்றி இருப்பவர்களையும், நடப்பதையும் நீ கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் உனக்கு வரும் தீய செயலிருந்து, அதன் தீய பலத்தை, அதன் தீய விளைவை அறிந்து அதனை வெல்லும் திறமை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போது உனக்கு எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொடுக்கிறேன். அதன் மூலன் நீ நல்ல பலனை அடைவாய். நான் அதன் மூலம் உனது ஆயுள் முழுவதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கிறேன். உனக்கு நிம்மதியாக வாழவைக்கும் எனது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறேன்.     

என் ஆசை மனிதா! சில சமயங்களில் உனக்கு உடல்நலம் குறைவாகவோ அல்லது தீராத வியாதியில் இருக்கும்போது நீ (உனது உடல்) அதிகமாக கஷ்டப்படுவது நான் உணர்கிறேன். அந்த சமயங்களில் நீ என்னை தீவிரமாக வேண்டிக்கொள்ளும்போது நான் உன் உடலை  சோதித்து அந்த வியாதியை போக்குவதற்கான முயற்சியும் எடுத்து, உன்னை நலமுடன் காக்க முடியும். நீ டாக்டரை பார்க்கும் முன் என்னிடம் முறையிட்டு என் உதவியை ஏற்றுக்கொண்டால் உனக்கு உண்டான சுகவீனம் பாதியளவு நீங்கி விடும். மீதி பாதி உனது டாக்டர் நீக்குவார். அந்த மாதிரியான சக்தி என்னிடத்தில் இருக்கின்றது. ஏனென்றால் என்னுடைய அனுபவத்தில் சிறிதளவு வைத்தியக் கலையும் கற்றுவைத்திருக்கிறேன்.



ல்ல குணமுள்ள மனிதா! ஒரு மனிதன் அவன் பரம்பரைக்கேற்பத் தான் கல்வியறிவு அல்லது வியாபார நுணுக்கம் அல்லது குறிப்பிட்டத் துறையில் தான் அனுபவம் இருக்கும் என்று தப்புகணக்கு போட்டுவிடாதே. இந்த உள்விதி மனிதனுக்கு எல்லாவற்றிலும் அனுபவம் இருக்கின்றது. நீ எதை விரும்புகின்றாயோ அதை நான் தரத் தயாராக இருக்கிறேன். ஒரு மனிதன் இதுவரை இவ்வுலகில் எத்தனை பிறவி எந்த எந்த மாதிரியான அறிவுடன் இருந்திருக்கின்றானோ அவைகளை ஒன்று திரட்டியே உன்னுள் இருக்கிறேன். உன்னுள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஆகையால் உனக்கு எந்த நோயானாலும் சரி அதை போக்கிட வேண்டும் என்கிற துடிப்பு எனக்கும் இருக்கும். என்னிடம் கூறும்போது உன் கஷ்டம் பாதியாக குறைக்க முடியும். பிறகு டாக்டரை பார்க்கும்போது பூரண குணம் சீக்கிரமே அடைந்துவிடுய்.   


     

தற்காப்புக் கலை!

உன்னைத்  தீயவர்களிடமிருந்து காக்கும்!     
எனது ஜீவ ஓட்டம் தொடரும்.....

Friday, 2 November 2012

உள்விதி மனிதன் பாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்- GOOD AND BAD TIME

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை  
மதுரை கங்காதரன் 

பாகம்:27 நீ கண் விழிக்கும் நேரம் நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்-
WHICH IS GOOD TIME AND BAD TIME


இனிய மனிதா! இந்த உள்விதி மனிதனைத் தொடர்வாய் என்று நம்புகிறேன். 'பொய்' எனபது குவி லென்ஸ் இல் ஊடுருவும் அனைத்து ஒளியை ஒன்று திரட்டி ஒரு புள்ளி வடிவில் குவிப்பது போன்றது. அது எதையும் எரிக்க வல்லது. அதாவது பொய் உன்னை அழிக்கவல்லது. ஆனால் 'உண்மை' என்பது விளக்கு திரியை பற்ற வைக்கும்போது அதிலிருந்து எல்லா இடத்திற்கும் ஒளி பரவி அதன் சுற்றியுள்ள இடத்தை பிரகாசம் கொடுத்து அனைவருக்கும் நன்மைகள் பல தருவது. அதாவது   சிலர் தேன் ஒழுகப் பேசுவார்கள். நீங்கள் நினைக்கும் காரியம் நிறைவேற அருள் செய்கிறேன். உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பொங்க வைக்கிறேன். ஐஸ்வர்யங்களை அள்ளி அள்ளித் தர வழிவகை செய்கிறேன் என்பவர்கள் எமாற்று மற்றும்  போலியானப் பேர் வழிகள். அவர்களே மேலும் உங்களிடத்திலிருந்து பணம் கறக்க வம்படியாக விடாமல்  'உங்கள் காரியம் வெற்றி பெற' அந்த யாகம் செய்யவேண்டும் என்றோ, இந்தப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றோ, தட்சணை இவ்வளவு வைக்கவேண்டுமென்றோ கூறுவார்கள். அவர்கள் பலவாறு ஆசைவார்த்தைகள் காட்டி உன்னிடம் என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு அதை அதிகபட்சமாகக் கவர்ந்து விடுவார்கள். அவர்கள் உங்களுக்காகச் செலவழிப்பதோ மிகவும் சொற்பமாக இருக்கும். அதவும் அவர்களுக்காகவும் இருக்கும். அப்படி செய்தும் உங்களுக்குப் பலன் கிடைக்காவிட்டால் அந்தப் பணத்தை உங்களுக்குத் திருப்பித் தருவார்களா? 

பிரியமுள்ள மனிதா! இன்னும் சில போலி ஆசாமிகள் ஒரு படி மேலே போய் உன்னைக் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் என்றும், உனது முன் ஜென்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்றும், உனது மூதாதையர்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றும், சொர்கத்தைக் காண்பிக்கிறேன் என்றும், உனது பாவத்தை போக்குகிறேன் என்று பலவாறு பேசுவார்கள். அப்படிச் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் அவர்கள் உனக்குப் பிடித்தாற்ப்போல் பேசுவதால் நீ மகிழ்ச்சி அடைகிறாய். அதனால் நீ பெறும் பலன் யாது? ஆனால் அந்த மகிழ்ச்சியால் உனக்கு உன் பணம் நஷ்டம் தானே!



பண்புமிக்க மனிதா! அப்படி யாராவது உன்னிடத்தில் கூறினால் உடனே என்னிடத்தில் சொல்லு. இந்த மாதிரி அவன் சொல்லுகிறானே ! அதற்கு கூலியாக அவனுக்கு எனது குடும்பச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை அல்லது  எனது குழந்தையின் படிப்பிற்காக வைத்திருக்கும் பணத்தை அல்லது  வைத்திய செலவிற்காக வைத்திருக்கும் பணத்தை அல்லது பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை அல்லது கடனாக வாங்கிய பணத்தை அவனுக்கு கொடுக்கலாமா? என்று என்னிடம் கேட்டால், அதற்கு நான் 'கொடு'  என்று சொல்வேன். ஆனால் ஒரு நிபந்தனை! நீ கொடுக்கும் பணத்தைவிட இருமடங்கு பலன் கைமேல் உனக்கு கிடைக்கும் பட்சத்தில்??!! ஆனால் அதனால் உனக்கு கிடைக்கும் பலனோ லட்சத்தில் ஒரு பங்கு கூட அதாவது ஒரு தூசு கூடக் கிடைக்காது என்பது தான் உண்மை. உனக்கு இந்த உள்விதி மனிதனின்றி வேறு யாராலும் அதிகமாக இலவசமாக நன்மைகள் செய்ய இயலாது. 



மதிப்புமிக்க மனிதா! அவனால் அத்தகைய வல்லமை இருந்தால் உன்னிடம் எதற்கு கேட்கவேண்டும்? மேலும் சில போலிகள் இதை இங்கு கட்டிக்கொள், வைத்துக்கொள், பூசிக்கொள், பலி கொடு, அந்தப்  படையல் செய், இந்தப் படையலுக்கு ஏற்பாடு செய் என்று சொல்ல்பவர்களை விட்டு ஒதுங்கியே நில். ஏனெனில் நீ தேடி வைத்திருக்கும் மிகச் சிறிய பணத்தை நீ அனுபவிக்காமல் எமாற்றுபவனிடத்தில் கொடுத்து மேலும் மேலும் ஏமாறாதே! உண்மையில் அவர்கள் நன்மை செய்பவர்களாக இருந்தால் நீ கொடுப்பதை வாங்கிக்கொண்டு சேவை செய்யவேண்டும்.



பண்புள்ள மனிதா! உண்மையில்  இவர்களெல்லாம் வருடக்கணக்கில் தவம் செய்தவர்களா? ஆசையைத் துறந்தவர்களா? மனிதர்களுக்கு உதவு செய்யும் சேவை மனப்பான்மை கொண்டவர்களா? மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுப்பவர்களா? அல்லது மனிதனுக்கு உபயோகமாகும் வாழ்க்கைக்கான தொழிலைக் கற்றுக் கொடுப்பவர்களா? மனித குலத்தின் மேல் அக்கறை கொண்ட குருக்களா? இல்லவே இல்லை. அவர்களாகவே ஒரு ஜால்ரா குழுவை அமைத்துப் பகட்டாக மக்களிடத்தில் காட்டி அதன்மூலம் ஏமாற்றுபவர்கள். அவர்களிடத்தில் ஜாக்கிரதையாக நடந்துகொள். இந்த மாதிரி போலி ஆசாமிகள் இருப்பதால் உண்மையில் சேவை மனப்பான்மை கொண்டவர்களை நீ  அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. ஆனால் சிலர் அவர்களின் கஷ்டகாலத்தில் வேறு வழி தெரியாமல் கேட்பார் பேட்சைக் கேட்டு அவசரம் அவசரமாக ஏமாற்றுப் பேர்வழிகளை அணுகி பொருள் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். போனது போகட்டும். இனி இந்த உள்விதி மனிதன் உனக்குத் துணையாய் இருப்பான்.



அன்பு மனிதா! உனது அறிவுக்கு எட்டாத, ஒவ்வாத, தெரியாத செயல்கள் ஒருவர் உனக்காக செய்யும்போது, அதை நன்றாக ஒன்றுக்கு பத்து தடவை ஆலோசித்து முடிவு எடு. அப்போதும்  உனக்கு குழப்பமாக இருந்தால் என்னிடத்தில் விட்டுவிடு. எனது உத்தரவு கிடைத்த பின்னர் தான் செய்ய வேண்டும். ஒருவேளை நான் உத்த்தரவு தராவிட்டால் அந்த செயல் செய்யவே கூடாது.



பாசமுள்ள மனிதா! சிலர் நல்ல நேரம் பார்த்துச் சொல்கிறேன் என்று நல்லசெயல்கள் கூடிவரும் வேலையை தள்ளிப்போட்டு, அவர்களுக்கு உகந்த நாளில் உனது வேலையைத் தொடங்கச் சொல்வார்கள். இந்த கொடுமையை யாரிடம் நீ சொல்வாய். மனிதா! நல்ல நேரம், கெட்ட நேரம் உனக்குத் தெரியாமலே உன்னிடத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னால் நீ நம்புவாயா? அதாவது உனது கண்கள் விழித்திருக்கும் நேரம் நல்ல நேரம். நீ தூங்கும் நேரம் கெட்ட  நேரம். இது தான் நல்ல நேர விதி. எல்லா நேரமும் நல்லநேரம் என்று சொன்னால் உனது மனம் ஒத்துக்கொள்ளாது. யாராவது ஒருவர் ஏதாவது காரணம் சொல்லி நல்ல நேரம் குறித்து அது சரியாக இல்லாத பட்சத்தில் ஏமாறுவது தான் உனது அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. அனைத்தும் இழந்த பிறகு தான் நான் உனக்குள் இருந்து உனக்காக துடிப்பது உணருகின்றாய். அதற்கு முன் நான் கரடியாகக் கத்தினாலும் உனது செவிகளில் அவ்வொலி கேட்காமல் இருக்கின்றது. அப்பயென்றால் அது யார் மீது தவறு!



மேன்மையுள்ள மனிதா! நீ சம்பாதிப்பது குறிப்பாக அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் சம்பாதிப்பது, பெரும்பாலும் நீ சில போலியான வலியோரிடத்திலும், உயர்ந்த பணக்காரரிடத்திலும், அரசியல்வாதிகளிடத்திலும், தீயவர்களிடத்திலும் ஏமாறுவதற்காகத் தான் போலும்! ஏனெனில்  அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று சொன்னாலும் அவர்களின் பகட்டு உடையில் மயங்கி, வெளி வேஷத்தில் மயங்கி, பேச்சில் மயங்கி ஏமாறுவது தான் உனக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ சொற்பமாக சேர்த்துவைத்த பணத்தை அவர்களிடத்தில் ஏமாந்து நடுக்கடலில் தத்தளிப்பதே உனது அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. அந்தச் சமயத்தில் இந்த உள்விதி  மனிதன் எவ்வத உதவியும் செய்யவில்லை என்று புலம்புகின்றாய். இனிமேல் இவ்விதம் நடக்கவிடாமல் நான் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். இனிமேல் யாரும் உன்னை ஏமாற்ற முடியாது..




இந்த உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் தொடரும்..


Thursday, 1 November 2012

உள்விதி மனிதன் பாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்- YOU ARE CREATED FROM POWERFUL CELL

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை 

பாகம்:26 நீ பேராற்றல் மிக்க 
அணுவிலிருந்து வந்தவன்-


YOU ARE CREATED FROM POWERFUL CELL 



என் இனிமையான மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றி இப்போது உணர்ந்துவிட்டாயா? இன்னும் சொல்வதை கேள். உன்னை எப்படிப்  படைத்திருக்கிறேன் என்று தெரியுமா? அதிலிருந்து உனது பலமும், ஆற்றலும் தெரிந்துகொள். உன்னை ஏனோ தானோவென்று படைக்கவில்லை. இலட்சக்கணக்கான அணுக்களில் எந்த அணு வீரியம் மிக்கதோ, வலிமை வாய்ந்ததோ எல்லாவற்றிலும், எல்லாவிதத்திலும் மேன்மையான இந்த உள்விதி மனிதனின் ஜீவ அணு தான் இப்போது நீ மனிதப் பிறவியாக மாறியிருக்கிறாய் என்பதை அறிந்து கொள்.

என் பாசமுள்ள மனிதா! நான் உன்னை உருவாக்கும்போதே உனக்கு அரிய பெரிய மகாசக்தியுடையவனாகவே படைத்துள்ளேன். அந்த அற்புத சக்தியின் மதிப்பை நீ உணராமல் உனது நேரத்தையும், ஆற்றலையும் உபயோகிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறாய். அந்த அளவுகடந்த சக்தியைக் கேட்பார் பேச்சில் மயங்கி, உனது சுயநலத்திற்காகவும், பிறரின் சுயநலத்திற்காகவும் சில சமயங்களில் உன்னை நீயே மற்றவர்களிடத்தில் அடகு வைக்கவும் தயங்கமாட்டேன் என்கிறாயே இது உனக்கே நியாயமா?

அன்பு மனிதா! நான் பரதேசிகளுக்கும், மகாபாவிகளுக்கும், பரம ஏழைகளுக்கும் நன்மை செயல் செய்வதற்கு ஒரு வழிகாட்டியாகவும், அவர்களுக்கு பணம் அல்லது செல்வம் அல்லது அறிவு படைத்தவர்களின் மூலம் பொருட்செல்வங்களை, அறிவுச் செல்வத்தை, ஞானச் செல்வத்தை உனக்கு இலவசமாகக் கொடுக்கச் செய்யவே உனக்குள் உட்கார்ந்துகொண்டு உனது மகா ஆற்றலையும் அறிவையும் உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். 

பிரியமுள்ள மனிதா! கல் நெஞ்சம் கொண்ட சிலர் எனது இந்த நன்மை தரும் செயலை நிராகரித்து இந்த உலகில் நிரந்தர நரகவேதனையில் சிக்கித்தவித்து, மானமிழந்து, அவர்களின் சந்ததியினருக்கு அவபெயரை ஏற்படுத்தி மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி என்னை பலவழிகளில் அலட்சியம் செய்து வருவதை இனிமேலும் பொறுக்க மாட்டேன். அவர்கள் திருந்தும் வரை, அவர்களின் செல்வங்கள் ஏழை எளியவர்களுக்கு சேரும்வரை ஓயமாட்டேன். அப்படிப்பட்ட எல்லோரிடத்திலும் நான் அவர்களுக்குள் இருந்து கொண்டு தினமும் அவர்களை உந்தி உந்தி அவர்களை மனிதப் பிறவியிலிருந்து தெய்வப்பிறவியராக்கி  புது உலகம் படைத்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இனிமேல் தீயசக்திகள் தலை தூக்காவண்ணம், தீயச் செயலை நடைபெறுவதை முற்றுப்புள்ளி வைக்க என் வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பண்புள்ள மனிதா! நீ குழந்தையாய் பிறக்கும்போது நீ கேட்காமலே இலகுவாக உனது வலிமைக்காக, ஆற்றலுக்காக எளிதாக ஜீரணிக்கக் கூடிய உனது தாயின் இரத்தத்தையல்லவா உனக்குப் பாலாக ஊட்டவைத்தேன். அதுமட்டுமா? அந்தத் தாய் பால் போதாது என்பதற்காக கன்றுக்கு கொடுக்கும் பசும் பாலல்வா உனக்கு கிடைக்கச் செய்கிறேன். இப்போதாவது உனது ஆற்றலை உணர்கிறாயா?



மேன்மையான மனிதா! இப்போதுள்ள போலியான மகான்கள் மக்களுக்கு ஆசிர்வாதம் தருகிறேன், கடவுளின் அனுகிரகம் தருகிறேன் என்று உன்னுடைய  செல்வங்களை வாங்கிக்கொண்டு அவர்களது பெயரில் பல பெரிய பெரிய கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், கல்விக்கூடங்கள் இன்னும் பல வழிகளில் 'மக்களுக்காக சேவை செய்கிறேன்' என்று கூறி உன்னை ஏமாற்றுவது புரிந்துகொண்டாயா? அது எப்படி இருக்கின்றதென்றால் உனது நோய்க்கு அவர்கள் மருந்து குடித்தால் உனது நோய் குணமாகுமா? உனது பசிக்கு அவர்கள் சாபிட்டால் உனது பசி தீருமா? உனக்கு கஷ்டம் என்றால் அவர்களா அதைத் தாங்குவார்கள்? உனது நோய், பசி, கஷ்டம் போன்ற எல்லாவற்றையும் நீ தான் அதற்குண்டான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்குத் தான் உனக்குள் இருக்கும் என்னை மறந்து என்னிடத்தில் முறையிடாமல் பலரிடம் ஏமாறுவது இனி நடக்காமல் நான் பார்த்துக்கொள்ளப் போகிறேன். அத்தகையவர்களை நான் அடையாளம் காட்டுகிறேன். அவர்களை அண்டாமல், ஏமாளியாய் அவர்களிடம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உனக்கு உதவுகிறேன். உனக்கு என்னசெய்வது என்று தெரியாமல் இருந்தால் என்னை கவனி. நான் சொல்லும் அறிவுரைகளை கூர்ந்து கேள். அதை ஏற்றுக்கொண்டு அதன்படி தைரியமாக காரியத்தில் இறங்கு. எப்போதும் வெற்றி தான். இந்த உள்விதி மனிதன் இருக்க பயமே வரக்கூடாது.

இனிய மனிதா! உனக்கு ஒருவரை பார்த்தமாத்திரத்தில் அவன் தர்மவானா அல்லது அயோக்கியனா என்று உன்னால் கூற இயலாது அல்லவா? அவன் உனக்கு நல்லது செய்யப் போகிறானா அல்லது தீமை செய்யப் போகிறானா என்று உனக்கு தெரியுமா? எல்லாம் பட்டபிறகு, இழந்த பிறகல்லவா உனக்கு அறிவு வருகின்றது. அப்போது வந்து என்ன பயன்? 



மதிப்புமிக்க மனிதா! பல போலி ஆசாமிகள் ஆன்மீகக் கூட்டத்தில் உங்களை  அப்படி உயர்த்திக்காட்டுகிறேன், பட்டினியைப் போக்குகிறேன், பணக்காரனாக்குகிறேன்,  செல்வங்களை அள்ளித்தருகிறேன்,  உனது கஷ்டத்தை நொடியில் விரட்டுகிறேன், தொழிலில் லாபமடையச் செய்கிறேன், எனக்குத் தெரிந்தவரின் மூலமாக வேலை வாங்கித் தருகிறேன் என்கிற வீரவசனம் பேசி,  கைத்தட்டல் வாங்கிக் கொண்டு கூடவே பணத்தை கரந்து உங்களை 'அம்போ 'என்று தெருவில் விட்டு, அலைகழித்து தீராத துன்பத்தில் ஆழ்த்தி ஏதும் அறியாது போல் இருந்துவிட்டு கடைசியில் 'எல்லாம் உன் விதி' என்று கூறும் ஆசாமிகளின் பக்கத்தில் நெருங்கவே நெருங்காதே!



அன்பு மனிதா! எவன் ஒருவன் தான் செய்யும் செயலுக்காக அளவுக்கு மீறி அதிக பொருட்கள் கேட்கிறானோ அவனை கண்டிப்பாக நம்பாதே! அவன் ஒரு பேராசைக்காரன். அவனிடமிருந்து தூர விலகி நில். ஆனால் எவன் ஒருவன் தன் சாப்பாட்டிற்காக அல்லது அன்றாடம் பிழைப்பிற்காக, கல்விக்காக பணம் கேட்பவனுக்கு உடனே உன்னால் முடிந்தளவு உதவிகள் செய். அந்த செலவுக்கான பணம் , நூறு மடங்காக மற்றொரு உருவத்தில் உனக்கு வந்து சேரவைப்பேன். நிஜமான நல்ல பெரிய பெரிய மகான்கள், ஆன்மீக வாதிகள் கூட 'மானிட சேவையே கடவுள் சேவை' என்று சொல்லியிருக்கிறார்கள். 

மேன்மையான மனிதா ! அப்படிப்பட்டப் போலிகளால் சிறு துரும்பு கூட அசைக்க முடியாது. உனது நல்ல சிந்தனைக்கேற்ப நல்ல செயலை உனக்கு செய்வதற்கு இந்த உள்விதி மனிதன் எப்போதும் துணையாய் இருப்பான். இப்போது உனக்கு ஒரு சந்தேகம் வரும். நேற்று வரை ஆண்டியாக இருந்தவர்கள் சிலர் குறுக்குவழியில் மக்களை, அரசை ஏமாற்றி ஏகப்பட்ட சொத்துகள் சேர்த்தவர்கள் மிக நன்றாக் இருக்கிறார்களே! ஆனால் நல்லவழியில் செல்பவர்கள் கஷ்டப்படுகிறார்களே ! அது ஏன்? என்று தெரியாமல் விழிக்கிறாய்!

இனிய மனிதா! அப்படிக் குறுக்குவழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு நான் அவர்களுக்கு பலசமயங்களில் திருந்தும் சந்தர்ப்பங்களைத் தருகிறேன். ஒருவேளை இன்னும் சிறிது கொடுத்தால் மனம் திருந்திவிடுவார்கள் என்ற எனது நப்பாசை பல சமயங்களில் பொய்த்துவிடுகின்றது. அவர்கள் மேலும் மேலும் பேராசைப்பட்டு செல்வங்களை சுமக்க சுமக்க அவனைச் சுற்றி இருப்பவர்களே அவர்களுக்கு எமனாக மாறிவருவதை அறியாமல் மென்மேலும் தவறுசெய்வதை உன் மூலம் தடுக்க புறப்பட்டு விட்டேன். சிலர் கடைசியில் அனைத்தையும் இழந்து மீண்டும் என்னை ஆரம்பத்தில் சந்தித்ததுபோல பழைய நிலைமைக்கு வந்து கஷ்டப் படுகிறார்கள். எனது இரக்க குணம் அவர்களையும் காத்து இரட்சிக்கச் சொல்கிறது. ஆகவே தீய வழியில் செல்லவே செல்லாதே! அதற்கு துணையும் போகாதே!  அந்தபக்கம் எட்டிக்கூட பார்க்காதே!

என் அருமை மனிதா! உன்னிடம் யாராவது குறுக்கு வழியில் உன்னை பணக்காரனாக்குகிறேன் என்று சொன்னால் அவனிடம் போகாதே! அப்போது நான் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். அதேபோல் எவன் ஒருவன் பேச்சை விட தனது செயலைக் கொண்டு நன்மை தரும் நல்ல காரியங்களை தொடர்ந்து மக்களுக்குச் செய்து 'நல்லவன்' என்று நிரூபிக்கிறானோ அவனை காலம் முழுவதும் நம்பு. அவன் கூடவே செல். சிலரின் வீண் பேச்சில் மயங்காதே! என் மூலம் உனக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்கும்.       


  உள் மனிதனின் ஜீவ ஓட்டம் தொடரும்...
          

உங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற பத்து நிமிடம் போதும். 10 MINUTES ENOUGH TO ACHIEVE YOUR GOAL

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உங்கள் எண்ணம் நிறைவேற 
பத்து நிமிடம் போதும்.    
10 MINUTES ENOUGH TO ACHIEVE YOUR GOAL


சிறு வயது குழந்தைகள் 'ரைம்ஸ் ' அழகாக சொல்கிறது. அது மட்டுமா? A,B,C,D...., Sunday, Monday... January, February.... 1,2,3,4.... சித்திரை, வைகாசி... ஞாயிறு, திங்கள்... அ , ஆ, இ , ஈ... என்று கட கட வென்று ஒப்பிகின்றது. மந்திரங்கள் நன்றாக உச்சரிகின்றது, பாடல்கள் இனிமையாக மழலையில் பாடுகின்றது. நெளிவு, சுளிவோடு டான்ஸ் ஆடுகின்றது.  மொபைல் லாவகமாக கையாள்கின்றது , கணினி யின் மவுஸ் ஸ்டைலாக நகர்த்துகிறது, டி .வி யின் ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சரியாக இயக்குகின்றது. இன்னும் அதிகமாக சைக்கிள், பைக் , கார் ஒட்டி அசத்துகிறார்கள். இவைகளை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது. 


ஆனால் அதே குழந்தைகள் வயது ஆக ஆக பள்ளிப்பாடங்களை படிக்கத் திணறுகின்றார்கள். எளிதான பாடங்களைக் கூட மனப்பாடம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 'படிப்பு ' என்றாலே அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 


சிறிய வயதில் அவர்களுக்கு தன்னார்வம் அதிகமாக இருக்கின்றது.  நாம் செய்யும்  செயல்களை அவர்களுக்கு புதிதாக இருப்பதால் மிக நுண்ணிப்பாக குழந்தைகள் கவனிக்கிறார்கள் . அதே போல் தன்னம்பிக்கையோடு விடா முயற்சியாக அந்த வேலையை செய்கிறார்கள். அவர்களின் மனதில் வேறு எந்தவிதமான எண்ணங்களும் இருப்பதில்லை. வெற்று மனம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது இருக்கின்றதோ அல்லது கிடைக்கின்றதோ  அதைகொண்டு  தன்னிச்சையாக , சுதந்திரமாக , எவ்வித கட்டுப்பாடு இன்றி , அவசரமில்லாமல் செயலைச் செய்கின்றது. சில நேரத்தில் தவறுகள் செய்து உதையும் வாங்குகின்றது. அதற்கும் சலிக்காமல் மீண்டும் அதே வேலையை தவறு இல்லாமல் செய்ய முயற்சி செய்கின்றது. 


இவற்றையெல்லாம் பார்த்து நாம் சும்மா இருக்கின்றோமா? குழந்தைகள் புதிதாக ஒன்று செய்யும்போது அதை ஊக்குவிக்கிறோம். மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லி உற்சாகப் படுத்துகிறோம். இடை இடையே முத்தம் கொடுத்து பாராட்டுகின்றோம். அதற்கு வேண்டியதை வாங்கித் தந்து மகிழ்ச்சி கொடுக்கிறோம்.


ஆனால் உயர் வகுப்பிற்கு செல்லும்போது அவன் எப்படிப் படிக்கிறான்? எப்போது படிக்கின்றான்? என்று கவனிக்கிறோமா? சதா நேரமும் அவனை படி படி என்று வாட்டுகிறோம். பெற்றோர்களாகிய நாம்  மட்டுமா? ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீடியாக்கள், போதாத குறைக்கு டியூஷன் ஆசிரியர்கள் இப்படி பலமுனை தாக்குதல் நடைபெறும்போது அவர்களுடைய விருப்பமான எண்ணங்கள் மனதிலே புதைந்து போகிறது. அவர்கள் நினைக்கும் ஒரு சிறு மகிழ்ச்சியான காரியங்கள் செய்வதற்கு கூட சுதந்திரமில்லாமல் 'படிப்பு ' என்கிற கயிற்றால் கட்டி உட்கார வைத்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களின் கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் அவர்களின் மனம் விளையாட்டிலும் அல்லது இதர விருப்பமான எண்ணத்திலும் லயித்திருக்கும். அதனால் இரண்டு காரியங்களும் நிறைவேறாமல் காலம் மட்டும் விரயமாவதே உண்மை நிலை . பலநேரங்களில் அவர்களுக்கு யார் சொல்வதை கேட்பது? யார் சொல்வதை செய்வது? என்கிற குழப்பமே அதிகம் இருக்கின்றது. அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உங்களுக்கு கோபம் வரவழைத்தாலும், அந்த கோபம் அவர்களிடத்தில் தான் பாயும். 

அவர்களை நீங்கள் நினைப்பது போல் நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் அவர்களின் விருப்பப்படி நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும். அதோடு இல்லாமல் சிறிய வயதில் யோகா, விளையாட்டு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வீட்டில் 'தியானம்' மற்றும் மூச்சுப் பயிற்சியை தினமும் ஐந்து அல்லது பத்து நிமிடமாவது கட்டாயமாக செய்ய வைக்க வேண்டும். அதுவும் விளையாட்டாக!. அதற்காக ஒரு பத்து நிமிடம் குழந்தைக்காக அவர்களுடன் சேர்ந்து நீங்களும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் ஒரு மாதம் செய்தாலே போதும். அதை அப்படியே அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவார்கள். அதோடு அவர்களை வார்த்தைகளால் பாராட்டுங்கள், உற்சாகப் படுத்துங்கள், அவர்களின் போக்கில் சென்று உங்கள் பக்கம் கொண்டுவாருங்கள். 


இந்த பத்து நிமிடம் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் , மன புத்துணர்ச்சியையும் தருகின்றது. அதோடு பொறுமை, மன வலிமை, ஒருமுக சிந்தனை, நிலையான எண்ணங்கள் , தன்னம்பிக்கை வருகின்றது. இதன் மூலம் அவர்கள் படிப்பு மட்டுமல்ல நினைத்த காரியத்தில் ஆழ்ந்து ஈடுபடும் ஆற்றல் வளருகின்றது. இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும். அதை சிறு வயதிலே சொல்லித்தாருங்கள். நிச்சயம் அவன் தன் படிப்பில் மட்டுமல்ல ,  வாழ்கையில் எல்லாவற்றிலும் பிரகாசிப்பார்கள்.


உங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற 


பத்து நிமிடம் போதும்.    

      

Wednesday, 31 October 2012

இவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக JOKES : IF THOSE ARE READ A NEWS..

இவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்.....
ஹி.....ஹி .....சிரிப்புக்காக  
JOKES : IF THOSE ARE READ A NEWS..
மதுரை கங்காதரன் 



நடிகை :


"நடிகையை செய்திய வாசிக்க கூப்பிட்டது தப்பா போச்சு "

"ஏன்? அதுக்கென்ன?"

" 'டப்பிங் 'க்கு ஆள் வேணும்னு அடம்பிடிக்கிறாங்க! "

"?   ?   ?   "

************************************************************************


கல்லூரி மாணவன்:

"செய்திகளை ஏங்க சின்ன பேப்பர்லே எழுதுறீங்க?"

" பிட் பேப்பர்லே எழுதினாத் தான் வாசிக்க வரும்ன்னு காலேஜ் பையன் கண்டிசன் போடுறான்!.."

*************************************************************************

பள்ளி ஆசிரியை :

" ஏன் மேஜை மேலே பிரம்பும் , ஆறு பசங்க இங்கிருக்காங்க?"

"கையிலே ஒரு பிரம்பும் இந்த பசங்க இருந்தாத்தான் செய்திகள் வாசிக்க முடியும்ன்னு சொல்லிட்டார்!"

**************************************************************************
பாடகர் :

" இது 'செய்திகள்' வாசிக்கிற நேரம் தானே. ஏன் 'மெல்லிசை ' நிகழ்ச்சி போல மியூசிக் வாத்தியக்காரங்க இருக்காங்க? "

" மியூசிக் பேக் - கிரவுண்ட் இருந்தாத்தான் அந்த பாடகருக்கு செய்தி வாசிக்க வருமாம்!"

****************************************************************************


டைரக்டர் :

"செய்திகள் வாசிக்கிறதுக்கு முன்னாடி 'சாட் ஒன் டேக் ஒன்' ன்னு சொல்றீங்க? "

"செய்திகள் வாசிக்க வந்தவர் ஒரு டைரக்டர் , அப்படி சொன்னாத் தான் செய்தியை வாசிக்க ஆரம்பிப்பார்! "

****************************************************************************


ரிடையர்டு ஜட்ஜ் :



"மர சுத்தியல் இங்கு ஏன் வச்ச்சிருக்கீங்க?"

"இப்போ செய்திகளை வாசிக்க கிடைச்சவர் ஒரு ரிடையர்டு ஜட்ஜ் . அந்த சுத்தியலாலே 'ஆர்டர், ஆர்டர் ன்னு ' மேஜை மேலே ரெண்டு தட்டு தட்டின பிறகு தான்  அவர் வாசிக்க ஆரம்பிப்பார்!"

****************************************************************************


நர்ஸ் :

"ஹலோ நர்ஸ் ! நிகழ்ச்சி அடுத்தது தானே ! இப்போதிலிருந்து இங்கே ஊசியும், தெர்மா மீட்டரும் எதுக்கு? "

" ஒண்ணுமில்லே! இன்னைக்கு செய்திய வாசிக்கப் போவது ஒரு நர்ஸ். அவங்களுக்கு இவைங்க இருந்தாத் தான் பயமில்லாம செய்தி வாசிக்க முடியுமாம்! "

****************************************************************************


டாக்டர்:

"நீங்களும் ஆப்ரேசன் செய்யலாம்' நிகழ்ச்சி அடுத்த வாரம் தானே. இப்போதே இந்த ஆப்ரேசன் செட் அப் எதுக்கு?"

" செய்தி வாசிக்க போறவர் ஒரு டாக்டராம். நல்லவேளை நோயாளி வேண்டுன்னு கேட்காம விட்டாரே!?"

****************************************************************************

பஸ் டிரைவர்:


" ஒவ்வொரு செய்தி 'பிரேக் ' கும் ஏங்க விசில் ஊதுறாங்க ? " 

"செய்தி வாசிக்கிறவரு ஒரு பஸ் டிரைவராம் . விசில் அடிச்சாத் தான் செய்தி வாசிக்கிறதை நிறுத்துரார் "

****************************************************************************

அரசியல்வாதி :


"இந்த சோடா பாட்டில் , பொன்னாடை எதுக்கு?"

"இது இருந்தாத் தான் செய்திய பேசுவேன்னு ஒத்த கால்லே நிக்கிறார்!"

****************************************************************************


குழந்தை:

"'சேட்டை செய்யும் மழலைகள் சமாளிக்க ' நிகழ்ச்சி இன்னும் முடிவாகள்ளே, இப்போ ஏன் ஐஸ் கிரீமும் ,சாக்லேட்டும் "

"அதுவா! இப்போ செய்தி வாசிக்கப் போறது ஒரு குழந்தையாம். அது அழாமே வாசிக்கிறதுக்கு!"

****************************************************************************