Pages

Monday, 12 November 2012

பாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம் (SWAMI VIVEKANANDA)



 விவேகானந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் - 
பாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்  



சுவாமி விவேகனந்தரின் இளைஞர்களைப் பற்றிய கனவை மெய்யாக்குவது தான் நமது பிரதான கடமை. இன்றைய இளைஞர்கள்  தங்களுடைய வருங்கால நல்வாழ்விற்கு கடினமாக உழைத்தே தீரவேண்டும். உடலில் சோர்வும் ,மனதில் பயமும் அறவே இருத்தல் கூடாது.  தன்னைப் பற்றிய விழிப்புணர்வும் , தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே கூடாது.  அவர்கள் நன்றாக அறிவு பெறவும், ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கு ஆன்மிகம் கண்டிப்பாக துணை செய்யும் என்பதை நம்பவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பலத்தைக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் அவலங்களை களைத்தெறிய பாடுபட வேண்டும்.



பொதுவாக இன்றைய இளைஞர்களின் ஆற்றலும், அறிவும் ஆடல், பாடல், சினிமா, டி . வி. , கணினி, இன்டர்நெட், மொபைல் என்பதில் அதிகநேரம் வீணாக்குகிறார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதில் மூலம் தான் இந்த மனித சமுதாயம் சிறப்பு பெறும். இப்போதும் இளைஞர்கள் விழிப்பு பெறாவிட்டால் இந்த  சமுதாயம் வருங்காலத்தில் பல துயரங்களில்  சிக்கித் தவிக்கும் ஆபத்து வரலாம். இதற்கு முன்னெச்சரிக்கையாக போர்க்கால அடிப்படையில் சிந்தனை சீர்த்திருத்தம் மேற்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக மற்றொரு விவேகனந்தர் அவதரிப்பார் என்பதை கருத்தில் கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் எல்லோரும் அவரின் பிள்ளைகள்! அவர்களுக்கு வழிகாட்டியாக அறிவால் உயர்ந்த அறிஞர்கள், தலைவர்கள் , அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் திகழவேண்டும் என்பதே ஒட்டு மொத்த விருப்பம். இன்றைய இளைஞர்கள் சுவாமி விவேகனந்தரின் கனவுகளை நனவாக்கும் சிந்தனைச் சிற்பிகள். இன்றே சபதம் கொள்வோம். இளைஞர்களை மாய வலையிலிருந்து (இன்டர்நெட்) மீட்போம். இப்போதே அணி திரள்வோம். நமது எண்ணமும், செயலும் இளைஞர்களை நல்வழிப் படுத்துவோம். இதோ புறப்பட்டோம். லட்சியம் கை கூடும் வரை ஓயாது உழைப்போம்.



இளைஞர்களை தயார் படுத்துவதில் நிறைய பொறுமையோடு , பொறுப்பும் இருக்கவேண்டும். அவர்களுடைய மனம் கண்ணாடி போன்றது. கடினமான சொற்களைக் (கற்களைக்) கொண்டு வீசினால் அவர்களின் மனம் உடைந்துவிடும். முதலில் அவர்களுக்கு மனவலிமை கொடுக்கவேண்டும். வெறும் புத்தகப் புழுவாக அல்லது கேளிக்கைகளின் ஈடுபடுத்தி விடாமல் 'சமசீர் இளைஞன்' ஆக உருவாக்க வேண்டும். அதாவது அன்றாடம் படிக்கும் கல்வியறிவோடு ஆரோக்கியம், மனவலிமை, தியானம், யோகா , உடல்பயிற்சி, மனப்பயிற்சி போன்றவை சிறிய பள்ளி வகுப்பில் முதற்கொண்டே பழக்கப் படுத்தவேண்டும். அவ்வாறு உருவாகும் மாணவ மாணவியர் சமுதாயம் அரசியலில், தொழிலில், தொண்டுகளில் சிறப்புடன் பணியாற்றுவார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.    


      

விவேகனந்தரின் இந்த 150 வது பிறந்தநாளில் இளைஞர் சமுதாயம் சிறந்த லட்சியக் கனவோடு விளங்கவேண்டும் என்பது எனது எண்ணம். எவ்வளவோ அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்கள் இருந்தபோதிலும் சுவாமி விவேகனந்தர் அவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டதன் காரணம் அவருக்கு இளைஞர்களின் மீதிருந்த அளவிலா நம்பிக்கை. அவர் ஒரு விதையாக மட்டும் இருந்திராமல் தன்னை பூமியில் புதைத்து அதன்மூலம்  தன்னைப் பல விதைகளை உருவாக்க வேண்டுமென்ற தணியாத தாகம் கொண்டிருந்தவர். அதற்காக தன்னையே புதைந்து கொண்டவர். ஆனால் பலன் தருமுன்னே அவரது ஆயுள் முடிந்தது நமது  துரதிர்ஷ்டம் தான். விட்டுப்போன அவரது பணிகளை தொடரவே இளைஞர் சமுதாயம் முன்வரவேண்டும். அவர்  கடைபிடித்த ஆன்மீக பலத்தின் மூலம் நாட்டில் நடக்கும் அவலங்களை, அநியாங்களை, அக்கிரமங்களை , லஞ்சம், ஊழல் போன்றவைகளை   அடியோடு அழித்து மனித சமுதாயத்தில் எழுச்சி மிகு  விழிப்புணர்வை தூண்டி சாதாரண இளைஞர்களை அவரது சொல், செயலாற்றலின் மூலம் அவர்களை வீர இளைஞர்களாக மாற்றி சிந்தனையில் ஏற்றமும் , நெஞ்சத்தில் உரமேற்றி, தூய்மையான நற்ச்செயல்களை துணிச்சலுடன் செய்து  காட்டும் மனப்பான்மையை உருவாக்குவதற்கு நாம் சபதம் மேற்கொள்ள வேண்டும்.  



ஆயிரமாயிரம் விதைகள் விதைத்தாலும் அதில் எதையும் தாங்கும் வலிமைமிக்க விதைகள் தான் வளர்ந்து, காய்த்து , கனிந்து , பூத்து குலுங்கி நல்ல பலன்களை கொடுக்கும் அழகிய மரமாக உருவெடுக்கும். அதைப்போல எத்தனை கோடி மனிதர்கள் இருந்தாலும் அல்லது வாழ்ந்து மறைந்து இருந்தாலும் அதில் வெகுசிலர் தான் அனைத்து சோதனைகளையும் கடந்து பிரச்சனைகளை மனவலிமையோடு எதிர்கொண்டு தங்களுடைய அறிவும் ஆற்றலளினால் நல்ல மனித சமுதாயத்தை உருவாக்கி அதில் சாதனைகள் பல செய்து வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சுவாமி விவேகனந்தர் ஆன்மீகத்தில் விவேகமுள்ள குருவாகவும், கல்வியறிவில் சிறந்த ஆசானாகவும் இன்றும் அவரது வீர முழக்கம் மனிதர்களிடையே முழங்கிக்கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மனோபலத்தை கொடுத்து அவர்களுக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும் வீறுநடை கொண்டு செல்வோம். வருங்கால இந்தியா நிச்சயமாக எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கும்.



அவரது கனவு மெய்யாக்கும் வண்ணம் இன்றைய முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களை நல்வழிகாட்டும் பணிகளை செய்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. அவரின் பிரம்மச்சரியமும் , அறிவும் ஆற்றலும் இளைஞர்களை அரவணைத்து  கொண்டு செல்லும் செயலும்,  இளைஞர்களின் எண்ணங்களில் 'நம் இந்தியா வருக்கின்ற 2020 ல் வல்லரசு இந்தியா' என்கிற விதையை விதைத்தவர் என்ற பெருமை அவர்க்கு உண்டு.  ஆனால் அன்றே சுவாமி  விவேகனந்தர் இளைஞர்களிடையே இந்திய சுதந்திர விதையை விதைத்தவர் என்று சரித்திரம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. அப்போதே அவர் "எனக்கு பத்து இளைஞர்களை தாருங்கள், அவர்களின் மூலம் சிறந்த இந்தியாவை  உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று வீர சபதம் செய்தவர். ஆகவே நாம் சரித்திரத்தை படிப்பதோடு நின்றுவிடாமல் சரித்திரம் படைக்க முன் வரவேண்டும் . சரித்திரம் படைக்கும் இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் தான் சுவாமிஜி நம்மிடையே மங்காத புகழுடன் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்க முடியும்...




பாகம் : 3 மேலும் தொடரும்...


சுவாமிஜியின் இளைஞர் விழிப்புணர்வு இன்னும் தொடரும்...  


Friday, 9 November 2012

அரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு

அனைவருக்கும் 2012 தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

அரசியல் வெடிகளின் கண் காட்சி -
 தீபாவளி ஸ்பெஷல் - 


அனுமதி - இலவசம் 
இடம் - இல்லாத இடமில்லை 
நோக்கம் - சிரிப்புக்கும் , சிந்தனைக்கும் 
நடத்துபவர்கள் - மத்திய, மாநில அரசுகளும் , மக்களும் 

                  

இப்போது கண்காட்சிக்குள் நுழைகின்றோம்.

வாங்க! வாங்க ! நான் தான் உங்களுக்கு வழிகாட்டி ....


                          

" முதலில் 'விலைவாசி வெடி ' யை பார்ப்போம்."

"அதுலே என்னங்க அப்படி விஷேசம் !"

" என்ன அப்படி கேட்டீங்க! சென்ட்ரலும் , ஸ்டேடும் சும்மா எகிறி, எகிறி , பறந்து, பறந்து போட்டி போட்டுட்டு வேடிக்கை காண்பிக்கும். "

**************************************************************************

                        

இரண்டாவது இப்போது புதுசா வந்திருக்கும் 'மின்சார வெடி '

" அடேயப்பா இதை தொட்டா 'சாக்' அடிக்குமா? "

"அட போங்க சார்! கரண்ட் வந்தாத்தானே 'சாக் ' அடிகிறதுக்கு. அது வேறே. இது வேறே! இந்த வெடியை  பத்தவச்சா எப்போ எப்போ வெடிக்கும்ன்னு சொல்ல முடியாது. பாதி நாளுக்கு மேலே வெடிக்காது."

" அப்போ தைரியமா குழந்தைங்களுக்கு கொடுக்கலாம்!!!"

=====================================================================

                      

மூன்றாவதா நாம பார்க்கப் போறது 'ஊழல் வெடி'

"இது தாங்க இருக்கிறதிலே பெரிய வெடி. இதுலேயும் 2ஜி , நிலக்கரி, கிரானைட்  வெடிங்க தான் ரொம்ப பேமஸ்."

"என்னங்க பேமஸ்?"

" முதல்லே பயங்கரமா வெடிக்கிறாப்லே ஆ.../ ஊ ..ன்னு குதித்து சீரும். கடைசியிலே புஷ்ஷுன்னு போய்விடும்."

"பாவ்லா காட்டுற வெடின்னு சொல்லுங்க !"

======================================================================
                              

நான்காவதா நாம தெரிஞ்சுக்க வேண்டிய வெடி 'லஞ்ச வெடி'

" ஆக இத வெடிக்கிறதுக்கும் லஞ்சம் கேட்குமோ??"

" அப்படியில்லீங்க! இதோ ரொம்ப ரொம்ப அளவுலே சின்னதா இருக்கே பரபரப்பாக பயங்கர சத்தத்தோடு வெடிக்கும். ஆனா அதோ மிகப் பெரிசா இருக்கே பத்திகிறதும் தெரியாது , வெடிக்கிறதும் தெரியாது. எல்லாம் கமுக்கமா வெடிக்கும். ஒருவகையிலே பெரிய மட்டத்தில் உள்ளவங்களுக்கு  அது 'சைலன்ஸ் ப்ரூப் வெடி சின்ன மட்டத்தில் இருக்கிறவங்களுக்கு பயங்கர சத்தத்துடன் வெடிக்கிற வெடி"

" ஆளப்பாத்து வெடிக்கிற வெடின்னு சொல்லுங்க!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                    

ஐந்தாவதா நாம பார்க்க இருப்பது......

"சீக்கிரம் சொல்லுங்க . ரொம்ப ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருக்கு! "

" பொறுங்க ! பொறுங்க ! இது தான் ...."

"என்னங்க இந்த வெடிமேலே ஒரு டப்பா இருக்கு."

" இதுக்கு பேரு தான் 'பிரதமர் வெடி' அதாவது இது தானாகவும் வெடிக்காது, உசுப்பேத்தினாலும் வெடிக்காது "

"அப்போ எதுக்குங்க 'வெடி' ன்னு பேரு வச்சிருக்கீங்க?"

" இந்த வெடியோட ஒரு டப்பா இருக்கா! அது தான் வெடியோட 'ரிமோட்" இத அம்மா கையிலே கொடுத்து அவங்க அமுக்கினாத் தான் வெடிக்கும். வேறு யார் அமுக்கினாலும் வெடிக்காது"

"ரொம்ப விசுவாசமான வெடின்னு சொல்லுங்க!"

----------------------------------------------------------------------------------------------------------------------

                         

ஆறாவதா நீங்க பார்க்கிறது 'ஜனாதிபதி வெடி '

" இதாவது நல்ல வெடிகுமா ?"

" இதோட விஷேசம், நல்லா வெடிக்குன்னு தெரிஞ்சும் 'என்னை வெடிங்க! என்னை வெடிங்கன்னு எல்லோரிடத்திலும் கெஞ்சும்.'"

" ரொம்பவே அடிபட்ட வெடிபோல இருக்கு "

............................................................................................................................................


                          

எழாவதா .............

" அது பார்க்கிறதுக்கு முன்னாடி ரொம்ப பசிக்குதே!"

" ஒருவேளை பசிக்கே உங்களாலே தாங்க முடியல்லே , இந்த வெடி 'ஹசாரே வெடி. பசியோட பத்தவச்சாத் தான் அது வெடிக்கும். முதல்லே ஒண்ணா இருக்கும். பிறகு ரெண்டா பிரியும். அதுலே ஒன்னு புஸ.. இன்னொன்று டுப் .. டுப்  ன்னு மெல்ல வெடிக்கும்."

" எந்த வெடி நம்புறதுன்னு தெரியல்லே!"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


                        

எட்டாவதா நீங்க ................

" என்ன வெடின்னு உடனே சொல்லிடுங்க. பார்க்காமே போனா என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு "

" இங்கே இருக்கிற வெடிங்க அவ்வளவு எப்பெக்ட் இருக்குன்னா பாத்துக்குங்க. சரி , இது தான் 'பெட்ரோல் வெடி'. இது ராத்திரியில் மட்டும் தான் வெடிக்கும். அதுவும் திடீர், திடீரென்று வெடிக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட வெளி நாடுங்க பத்தவெச்சா உள் நாட்டிலே தானா வெடிக்கும்."

" அப்படீன்னா இதோட ரிமோட் வெளிநாட்டுங்க கையில் இருக்குன்னு சொல்லுங்க."

" ரொம்ப சரியாச் சொன்னீங்க!"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

                            

ஒன்பதாவதா .....

" இருங்க, இருங்க ஒரு சந்தேகம் . இதுங்க லோக்கலா? அல்லது இறக்குமதி செஞ்சந்துங்களா ?"

" இது வரைக்கும் பார்த்தது லோக்கல். இப்போ நீங்க பார்க்கிறது 'சில்லறை வர்த்தகம் வெடி'. இதுங்க அந்நிய முதலீடு தயாரிப்பு ! இது தான் லேட்டஸ்ட் ரிலீஸ். ரொம்ப சஸ்பென்சா இருக்கிற வெடி. எங்களுக்கே எப்படி வெடிக்கும்ன்னு தெரியாது. அத தெரிஞ்சுகிறதுக்கு எங்களுக்கும் ரொம்ப ஆவலா இருக்கு"

" எங்களுக்கும் தான். பொறுத்துப் பார்ப்போம் !!!"

###############################################################################

                         

பத்தாவதா 'தங்க வெடி'

" அப்படின்னா, இது பணக்காரங்க வெடின்னு சொல்லுங்க "

" சரியாச் சொன்னீங்க. இது விஷேச நாள்லே சரமாறியா வெடிக்கும். ஆனா இதப்பாருங்க .."

" என்னங்க ஆச்சரியமா இருக்கு! அதே போல இருக்கு. இது என்னங்க!"

" அது பணக்காரங்க வெடின்னா , இது ஏழைங்க வெடி. இதுக்கு பேரு 'கவரிங் ' வெடி."

" பரவாயில்லையே! "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


                    

பதினொன்றாவதா இது தான் ' எம்.எல். ஏ  வெடி '

" இந்த வெடியோட மகிமை என்னவோ ?"

" இந்த வெடி தன்னோட தொகுதி பக்கம் தல காண்பிக்காது. ஏன்னா தன்னோட தொகுதியிலே வெடிக்காது. சில சமயம் தாவித் தாவி வெடிக்கும்!"

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


                

பன்னிரெண்டாவதாக ' ஓட்டு வெடி'

" என்னது "

" ஆமாங்க. ஒரு தடவை பத்தவச்சா , அஞ்சு வருஷம் பத்தவச்சவங்களை பாஞ்சு பாஞ்சு வெடித்து கஷ்டம் கொடுக்கும்."

" ரொம்ப பயங்கரமான வெடி போல இருக்கு.!"

" நல்லா சொன்னீங்க. வெடிக்கிறதுக்கு முதல்லே காசு கொடுப்பாங்க. ஆனா பலமடங்கு பணம் நம்ம கிட்டே இருந்து பிடிங்கிடுவாங்க."

_______________________________________________________________________________

                       

அடுத்து..... ....

" போதுங்க... இப்போதே தலை பட்  பட்டுன்னு வெடிக்கிறாப்பிலே இருக்கு. மீதியை அடுத்த தடவை வந்து பார்க்க வருகிறோம்."

" இருங்க இன்னும் அரிசி வெடி, பேருந்து கட்டண வெடி, டீசல் வெடி, பால் வெடி, பள்ளிக் கட்டணவெடி , காய்கறி வெடி, எல்.பி.ஜி வெடி, வாக்குறுதி வெடி ..... "

" போதுமடா சாமி! இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தா நானே வெடிச்சுடுவேன்  போலிருக்கு. உங்களுக்கு ரொம்ப நன்றி.."

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||



இன்னும் தொடரும் .....

Thursday, 8 November 2012

என்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்? WHO IS FOLLOWING ME?

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 
என்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்?
WHO IS FOLLOWING ME?


என்னைப்பற்றிப் பற்றி சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் விழிப்புடன் செயல்படுபவன். இப்படியிருந்தும் எண்ணப் பின் தொடர்ந்தது ஒரு உருவம். எதைக்கண்டும் பயப்படாதவன் நான். அந்த உருவத்தை அலைக்களிப்பதற்க்கு அங்கு இங்கு சென்று போக்கு காட்டினேன். அந்த உருவம் அசரவில்லை. கடைசியாக நானே பணிந்தேன்.


"நீ யார்? ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறாய்?"


"நானா, நான் தான் கனவு அல்லது கற்பனை என்று சொல்வார்கள்!!"

"கனவா? கற்பனையா? சற்று புரியும்படி சொல்லேன்.! நீ எப்போது யாரிடம் வருவாய்?"


"நான் சோம்பேறிகளிடத்தில் தூங்கும் போது கனவாகவும் , முன்னேறத்துடிக்கும் சுறுசுறுப்பானவர்களிடத்தில் விழித்துக் கொண்டிருகும்போது கற்பனையாகவும்  வருவேன். நீ விழித்துக் கொண்டிருக்கிறாய். ஏதோ என்னைப் பற்றி கற்பனை செய்கின்றாய் . அதனால் உனக்கு உதவி செய்ய வந்துள்ளேன்."


"நான் எனது இலட்சியத்தில் வெற்றி பெற விரும்புகிறேன். அதை அடைவதற்கு வழி சொல்லவேண்டும்."

" அப்படியா? சொல்கிறேன், கேள்.  "

"இந்த கற்பனையை உனது ஆழ்மனதில் ஆணித்தரமாக பதிந்து விடு. அதாவது ஆழமான கடலில் தான் மதிப்புமிக்க அழகிய நன்முத்துகள் விளையும். எப்படியென்றால் முத்துச் சிற்பி, அது  நல்ல முத்துக்கள் கொடுப்பதற்கு ஒருதுளி தூய நீர் இருந்தாலே போதும். அதுவே முத்துக்களாக மாற்றிவிடும்.  உனது மனமும் ஒரு ஆழமான கடல். உனது இந்த கற்பனை என்கிற சிற்பி தான் உனது வெற்றிக்கு உதவும் ."

"அப்படியா ! கொஞ்சம் இரு. எனது இலட்சியத்தை என்மனதில் ஆழமாக பதித்துவிட்டேன். பிறகு?"

" பிறகென்ன, உன் கண்களுக்கு உனது லட்சியத்தின் வெற்றிக்கொடி பறப்பது தெரிகின்றதா!"

"அதோ, அதோ, நன்றாக் பறப்பது தெரிகின்றது."

"அப்படியென்றால் இது தான் உனது வெற்றிப்பாதை, தொடரு உனது வெற்றிப் பயணத்தை!"

"இப்போது எனது மனம் வெற்றி இலக்கை அடைந்துவிட்டதாக உணருகின்றது. அதனால் மனம் மகிழ்ச்சி அடைகின்றது."

" இதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை! அது தான் ஒவ்வொரு வெற்றியாளனுக்கு முதலில் தேவையான ஓன்று!"


" அது மட்டும் போதாது. வெற்றி அடைவதற்கான அறிவும் செயல் திறமையும் வேண்டும். அதை நீயாகவும் தேடித் பெறலாம். அல்லது ஏற்கனவே அதை அடைந்தவர்களிடத்தில் கேட்டோ அல்லது அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தோ அல்லது தேவைபட்டால் அதற்கான பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். அதற்க்கு சற்று சிரமப்படவேண்டும். வெறியும் இருக்கவேண்டும். (கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது) அதைப் பெற காலம், நேரம் பார்க்காது முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்."

" சரி, அதைப் பெறுவதற்கு என்னை நானே தயார் படுத்திக்கொண்டேன். பிறகு?"

"அதை கடின உழைப்பின் மூலம் நடைமுறைப் படுத்த வேண்டும்"

"கடின உழைப்பு என்னிடம் நிறையவே இருக்கின்றது. நடைமுறைப் படுத்துகிறேன். வெற்றி பெறுகிறேன் !"

" இங்கே தான் நீ அவ்சரப்படுகிறாய். அதனால் தவறும் செய்கிறாய்! ஒரே தடவையில் உனக்கு வெற்றி கிடைக்குமென்று எப்போதும் நினைத்துவிடாதே! உனது செயல் ஒருவேளை தோல்வி அடைவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் உனது மனம் துவண்டுவிடக் கூடாது. எண்ணத்தில் உறுதி இருக்கவேண்டும். தொடர்முயற்சி அவசியம் வேண்டும். தோல்வி உனக்கு நல்ல அனுபவத்தையும், மன வலிமையையும் கொடுக்கும். அதோடு அன்பு, பொறுமை, புதுப்புது சிந்தையும் வரும்  "

"தோல்வியை தவிர்க்க ஏதேனும் வழியுண்டா?"


"இருக்கின்றது! முதலில் வெற்றிக்கு பல வழிகளில் திட்டங்கள் போடவேண்டும். அதில் நடைமுறை சிக்கலில்லாத , நேர்மையான, குறைந்தகாலத்தில் முடிக்கக்கூடிய திட்டத்தை தேர்வு செய்யவேண்டும். அதை செயல் படுத்தும் தகுந்த நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்."  


" சரி, அதன்படி செய்கிறேன். இப்போது வெற்றி கிடைக்கும் தானே? "

"தொடர் அல்லது விடாமுயற்சி தான் உனது வெற்றியை உறுதிசெய்யும்."

"இதோ இப்போதே புறப்பட்டுவிட்டேன். மீண்டும் உங்களை எப்போது  சந்திப்பது?"

" நான் கற்பனை முதல் வெற்றி வரை கடக்க உதவுபவன். உனது இந்த வெற்றி அடைந்துவிட்ட பிறகு அடுத்த வெற்றிக்கு உதவி செய்யவருகிறேன். உனது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்."

"நன்றி "


இது போல் வெற்றி உங்கள் வாழ்வில் தொடரட்டும்....

பாகம் : 1 விவேகானந்தர் - அவரது ஆயுள் நீண்டிருந்தால். VIVEKANANDA - SPIRITUAL NEWTON




விவேகானந்தர் - அவர் ஆன்மீக நியூட்டன் - 
பாகம் : 1 அவரது ஆயுள் நீண்டிருந்தால்....



VIVEKANANDA - LIKE NEWTON BUT IN SPIRITUAL  
  
150 வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை 



பாகம்: 1

சுவாமி விவேகனந்தர் அவர்களின் சரிதை, ஆன்மீக சொற்பொழிவுகள், சிந்தனைகள், பொன் மொழிகள், விழிப்புணர்வு கட்டுரைகள், இளைஞர்களுக்கு அவர் சொன்ன அறிவுரைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் போன்ற பலவிதமான தொகுப்புகள் இருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். சிறிய வயதில் அவர்களின் மறைவு என்பது ஆன்மீகத்திற்கும், மக்கள் சமூகத்திற்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பேரிழப்பு என்பது தான் உண்மை. அவருக்கு ஆன்மிகம் ஒரு கண்ணாக இருந்தாலும் மறு கண்ணாக அவருக்கு இளைஞர்களை நல்ல வழியில் நடத்திச் செல்லும் அளவிற்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ன்பதே அவருடைய மேலான குறிக்கோளாக இருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் பல மதங்களுக்கிடையே நடைபெறும் போட்டியை அறவே நீக்கி மதங்களினால் மக்களுக்குன்டாகும் நன்மைகளை எடுத்துச் சொல்லி மதங்களிடையே ஒருமைபாட்டை வளர்த்து மக்கள் சமுதாயத்தை மேன்மையடைய மிகுந்த பாடுபட்டார்.  



அவரின் ஆயுள் ஒருவேளை நீண்டிருந்தால்... என்னென்ன  அவர் மனித சமுதாயத்திற்கு சொல்லியிருப்பார். இளைஞர்களுக்கு எப்படி வழிகாட்டியாக இருந்திருப்பார். மதஒற்றுமையை எவ்வாறு மக்களிடையே பரப்பியிருப்பார். நமது இந்தியாவின் சுதந்திரத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் அவர் எவ்வாறு முன்னோடியாக இருந்து பாடுபட்டிருப்பார்  என்பதை விளக்கவே இந்த கட்டுரை. பாரதி எவ்வாறு 'புதுமைப் பெண் 'ணுக்கு முன்னோடியாக இருந்தாரோ, அதுபோல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் 'இளைஞர்களின் ஆன்மீக விழிப்புணர்வு' க்கு முன்னோடியாக திகழ்ந்திருப்பார் என்பதே மறுக்கமுடியாத உண்மை.



சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆன்மீகவாதிகளுள் சற்று வேறுபட்டு , ஆன்மிகம் மட்டுமில்லாமல் அனைவரின்  சமூக நலனில் அக்கறையோடு  இரண்டும் கலந்த ஒரு ஆன்மீகவாதி. அவரை 'ஆன்மீக நியூட்டன்' என்று சொன்னாலும் மிகையாகாது. சர் ஐசக் நியூட்டன் ஒரு அறிவியல் மகாமேதை. அவரின் தத்துவங்கள் இன்றளவிலும் நிலையாக இருப்பதோடு, மற்ற தத்துவங்களுக்கு அடிப்படையாகவும் இருக்கின்றது. அதிலும் அவரது 'புவியீர்ப்பு தத்துவம் ' கொடுத்த அனுபவம் எல்லோருக்கும் தெரியும். அதாவது அவர் ஒருநாள் ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஆப்பிள் தனது தலையில் விழுந்ததைப் பற்றி சாதாரணமாக எண்ணாமல் அதனுள்ளே இருக்கும் மிகப் பெரிய தத்துவம் அவர் சொல்லித்தான் இந்த உலகுக்கு தெரிந்தது. அவர் தலையில் மட்டுமா ஆப்பிள் விழுந்திருக்கும். அதற்கு முன் பலபேரின் தலையில் விழுந்திருக்குமல்லவா ? அவர்களுக்கு எட்டாத விஷயம் அவரது தலைக்கு (மூளைக்கு) எப்படி எட்டியது?



அதுபோல இதுநாள் வரை எத்தனையோ பேர்கள் கோவில்களுக்குச் சென்றிருப்பார். அங்குள்ள தெய்வத்தை தரிசனம் செய்திருப்பார். கடவுளைப் பற்றிய  புத்தகங்களை பலவகையில் படித்திருபபார்கள். கடவுளின் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருப்பார். இவ்வளவு இருப்பினும் சுவாமி விவேகனந்தரின் 'எனக்கு கடவுளைக் காட்டமுடியுமா?' என்ற ஒரு ஆணித்தரமான கேள்வி பல முனிவர்களையும், மகான்களையும், அறிஞர்களையும் அதிர்ச்சி தந்ததோடு கடவுளைப் பற்றிய சிந்தனையை அறிவதற்கு பலருக்கு தூண்டுகோலாக இருந்தது என்னவோ உண்மை தான். கிட்டத்தட்ட அனைவராலும் தீர்க்கப் படாத ஒரு வினாவாகவும் இருந்தது. அதற்கான விடையைத் தேடியும் புறப்பட்டார். கடைசியாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற உண்மை குருவால் அதற்கான விடையை அறிந்துகொண்டார். கடவுளை அறிந்து கொண்டார். அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் தன்னைப்போல இருக்கும் இளைஞர்களுக்கும் தனக்கு கிடைத்த அந்த அனுபவத்தை கொடுக்கவேண்டுமென்று பிரயாசைப் பட்டார். அதற்காக அக்கால இளைஞர்களிடையே கடவுளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பலவிதத்தில் அதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டார். 



கடவுளை அறிய முக்கியமான ஒன்று, தன்னையே முதலில் அறிந்து கொள்ளும் 'தியானக் கலை' மற்றும் யோகா. இந்த கலைகளை  தினமும் பயிற்சி செய்வதால் மட்டுமே எளிதில் கிட்டும் என்பதை உணர்ந்தார். இந்த தியானம், சாதி, மதம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் மனித சமுதாயம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் அதன் மூலம் ஆன்மீக ஆற்றலும், உடல்பலமும், மனப்புத்துனர்ச்சியும், ஆழ்ந்த அறிவும், எதையும் சாதிக்கும் மனத்திடமும் கிடைப்பதை உணர்ந்தார். இந்த உணர்வு இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா பிரிவினருக்கும்  கிடைக்குமென்பதை மக்களுக்கு தெளிவு படுத்தினார். இதன் மூலம் எதையும் பகுத்தறியும் சக்தி கிடைகிறது என்றும் அந்த சக்தியை மக்களுக்கு இளைஞர்களின் மூலமாக கொடுக்கும்போது நாடு எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகளுக்கு நல்லவிதமான தீர்வுகள் கிடைக்கும் என்கிற சிந்தனைகளை வளர்த்தார்.  



அவருடைய அனுபவத்தில் அனைத்து தீர்வுகளும் ஆன்மீகத்தால் மட்டுமே கிடைக்காது என்பதை உணர்ந்ததோடு எல்லாவித துயரங்களை ஆன்மீகத்தால் துரத்தமுடியாது என்பதில் உறுதியோடு இருந்தார். மனிதனுக்கு வாழ்கையில் முன்னேற்றம் எனபது மிகவும் அவசியம். அந்த முன்னேற்றம் கடின உழைப்பினால் மட்டுமே கிட்டும். அந்த உழைப்புக்கு ஆற்றலும், அறிவும் தேவை. அதற்கு ஒருமுக சிந்தனையும், நேர்கொண்ட பார்வையும் அவசியம். அதை கொடுப்பது தியானம் மற்றும் யோகா. அந்த யோகா மற்றும் தியானத்திற்கு ஆன்மீக சிந்தனை நிச்சயம் வேண்டும். அதை வளர்ப்பது இளைஞர்களின் கையில் இருக்கின்றது. அவர்களுக்கு இடைவிடாமல் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிபட்ட இளைஞர்களை வழிநடத்துவதற்கு தன்னை தயார் செய்துகொள்ள வேண்டுமென்பதற்காக தியானத்தையும், அரிய பெரிய நூல்களையும் குறிப்பாக இந்த உலகம் முழுவதும் தன்னுடைய ஆன்மீக எழுச்சி பயணம் தொடர ஆங்கில மொழியை கற்று அதில் நன்கு புலமை பெற்றார்.

வெறும் பேச்சால் மட்டுமே இளைஞர்களை வழிநடத்திச் செல்லமுடியாது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்காது என்பதை கருத்தில் கொண்டு தனது எண்ணங்களை செயலின் மூலம் வெளிப்படுத்தினார். இளம் வயது முதற்கொண்டே குழந்தைகளுக்கு நேர்வழியில், நன்மைதரும் செயலைச் செய்யப் பழக்கிவிட்டால் இந்த மனித சமுதாயம் சிறந்து விளங்கும். ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனைகளுள்ள இளைஞர்களால் மட்டுமே இந்திய தேசத்தை உலகத்தில் தலைசிறந்த நாடாக மாற்றமுடியும் என்று மிகவும் நம்பினார்.



மதம் ஆன்மீகத்திற்கு உதவ வேண்டும். அந்த ஆன்மிகம் மனித சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமென்பதற்கு அவரே முன்மாதிரியாக திகழ்ந்தார். மத நல்லினத்திக்காக , மத ஒற்றுமைக்காக சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்து மத மகாநாட்டில் கலந்துகொண்டு ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றினார். அவருடைய சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே மதங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக பலத்தரப்பட்ட மதத்தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் 'சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். இந்த ஆரம்பம் நமது இந்திய நாட்டிற்க்கு புகழையும், ஆன்மீகத்தில் நாடு கொண்ட நம்பிக்கையும் அன்று உலகுக்கு எடுத்துரைத்தார். அவர் பேசிய ஒலி அலைகள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது சொற்ப்பொழிவு  மூலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள் (அதாவது கடவுளின் பிள்ளைகள்) . இதில் ஜாதி, பேதங்கள் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஒருவருக்கொருவர் அன்பு, கருணை, நேசம், பாசம் காட்டவேண்டும். பிறரின் துன்பம் தனது துன்பம் போல கருதவேண்டும். அவர்களுக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த ஆன்மீகவாதி என்பதை அறிவுறுத்தினார். இளைஞர்களை நல்வழிப் படுத்துவதன் மூலம் தான் இந்த நாட்டை அழிவுப் பாதைக்குச் செல்லாமல்  ஆக்கப்பூர்வமான பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை ஆணித்தரமாக நம்பினார்.          



அவர் இளைஞர்களைப் பார்த்து ..

ARISE, AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED 

அதாவது 

எழுமின், விழிமின் குறிக்கோளை அடையாது ஓயாது உழைமின்!  


  பாகம் : 2 தொடரும்... அடுத்த பகுதியில்..