Pages

Monday, 19 November 2012

பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் ' - BHARATHIYAAR NEW SONG - மதுரை கங்காதரன்


பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '



மதுரை கங்காதரன் 



பாரதியே! உனக்கு
பெண் சுதந்திரத்தில்
நம்ம்பிக்கை இல்லை போலும்!
'புதுமைப் பெண் ' படைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் !



வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை
தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை
ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை
குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை
உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் !
அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்!



சேவல் கூவும் வேளையில் எழுந்து
எறும்பாய் தினமுழைத்து
மாடாய் குடும்பபாரத்தை இழுத்து
கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது
படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து
பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து
சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை
பாரதியே! உன் கவிச் சாவியால் தானே
சிறையினைத் திறந்தாய்!
சுதந்திரப் பறவையாய்
பறக்க வழி செய்தாய்!



கோலங்கள் போட அவள் தான்
சுடுநீர் சாப்பாட்டுக்கு அவள் தான்
பலசரக்கு காய்கறிக்கு அவள் தான்
சமைப்பது அவள் தான்
சோரூட்ட அவள் தான்
பள்ளி இதரவேலைக்கு அவள் தான்
வீட்டுக் காவலுக்கு அவள் தான்
எல்லாவற்றுக்கும் அவள்
வேண்டும் ! வேண்டும்!



குடும்பத்திற்கு சம்பளமில்லா
வேலைக்காரியாய்
கணவனுக்கு காலம் காலமாய்
கொத்தடிமையாய்
குழந்தைக்கு தாய் உரிமையில்லா
ஆயாவாய்
மொத்தத்தில் அழகுள்ள
பொம்மையாய்
பாரதியே! ஜடமாக நடமாடியவளை உன்
கவியால் உயிரைக் கொடுத்தாய்!



தானாக கிடைக்காத மகிழ்ச்சி
கடனாக கிடைக்குமா ? ஏங்கியவள்
தினமும் விடிந்த பொழுதுகளை பார்த்து
தனது விடிவுக்காக ஏங்கியவள் 
பாரதியே! ரௌத்திரமுள்ள கவியால்
அவளது ஏக்கத்தை தனித்தாய்!



அவனுக்கு சுதந்திரமாம் இவளோ அடிமையாம் 
அவனுக்கு மகிழ்ச்சியாம் இவளுக்கு துக்கமாம் 
அவனுக்கு சுகமாம் இவளுக்கு கஷ்டமாம் 
அவனுக்கு அமுதாம் இவளுக்கு நஞ்சாம் 

அவனுக்கு வரவாம் இவளுக்கு செலவாம் 
அவனுக்கு உணர்வாம் இவளோ ஜடமாம் 
அவனுக்கு ஆட்சியாம் இவளோ அடங்கியவளாம் 
அவனோ கௌரவமாம் இவளோ அவமானமாம் 

அவனுக்கு உரிமையாம் இவளுக்கு வெறுமையாம் 
அவன் தெய்வமாம் இவளோ பக்தையாம் 
பாரதியே! உன் புதுமைப் பெண் கவியால் 
அவனுக்கு இவள் சமமென்று புதுவிதி கொடுத்தாயே!



அன்று 
பெண்னென்றால் இழிவாய் பேசியவர்கள் 
இன்று 
பெருமை கொண்ட 
புதுமை பெண்ணாக மறுஜென்மம் 
பெற்றுவிட்டாள் !



அவள் பூமாதேவி தான்
பொறுமை மிக்கவள்  தான்
பூப்போல் இதயம் கொண்டவள்
குடும்பத்தை பொறுப்பை நடத்தியவள்
தன சுகத்தை தொலைத்து நின்றவள்
பாரதியே! உன் சக்திமிக்க கவியால்
பெண்ணை எழுச்சி பெறச்செய்தாய்!



ஆணுக்கு நிகர் பெண் 
உன் கனவு பலித்துவிட்டது 
இறக்கை கொண்ட 
கூண்டுப் பறவையாய் இருந்தவள் 
சுத்ந்திரப் ப்றவையாக உலகை 
வலம் வருகிறாள் 
உன் கவியல்லவோ  
அவளுக்கு இறக்கை இருப்பதை உணர்த்தியது 
பறக்கும் சக்தியைக் கொடுத்தது.



ஆண் பார்க்கும் வேலைகள் 
பலவும் அவள் பார்க்கிறாள் !
பெண் பார்த்த வேலைகளை 
ஆண் பார்க்க வேண்டுமல்லவா!
கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் 
பொதுயென்றாய்
வேலைகளும் உணர்வுகளும் 
பொதுவென்று சொல்ல மறந்தாயே!



புதுமைப் பெண்ணுக்கு 
பழமை ஆண் 
மனப் பொருத்தம் இல்லையே!
பழமையில் ஊறிய ஆணுக்கு 
புதுமை ஆண் விதியை  யார் வகுப்பது!



புதுமை பெண்ணுக்கு 
புதுமை ஆண் தானே வேண்டும் !
பாரதியே! நீர் இருந்தாலும் 
புதுமை ஆண் கட்டாயம் கொடுத்திருப்பாய்!
உன்னை மனதில் எண்ணி 
புதுமை ஆண் வெள்ளோட்டம் விடுகிறேன்.



இவன் புள்ளி வைக்க அவன் கோலம் போட வேண்டும் 
இவன் பால் வாங்கிவர அவள் காபி போட வேண்டும் 
இவன் தண்ணீர் பிடிக்க அவள் சுடுநீர் போட வேண்டும் 



அவள் காய்கறி வாங்கிவர அவன் நறுக்கித் தரவேண்டும் 
அவள் துணி துவைக்க அவன் காயப் போடவேண்டும் 
அவளை மகிழ்விக்க அவன் அன்பு காட்டவேண்டும் 



அவளிடம் பழக அவன் நட்பாய் மாறவேண்டும் 
அவள் சுதந்திரத்திற்கு அவன் ஆதரவு தர வேண்டும் 
அவள் செய்யும் வீட்டு வேலைக்கு அவன் உதவ வேண்டும் 



அவள் பூவானால் அவன் மணமாய் மாறவேண்டும் 
அவள் தேனானால் அவன் இனிமையாக வேண்டும் 
அவள் உடலானால் அவன் உயிராய் இருக்கவேண்டும் 


அவள் மலரானால் அவள் வண்டாய் இருக்கவேண்டும் 
அவள் கொடுக்கும் குழந்தைக்கு அவன் அரணாக வேண்டும் 
அவளை ஆயுள் முழுதும் காக்க அவன் உறுதி கொள்ளவேண்டும் 



அவள் கண்கலங்காமல் இருக்க அவன் இரக்கம் கொள்ளவேண்டும் 
அவளை தன பாதியாக அவன் நினைக்க வேண்டும் 
அவளின் இதயத்திற்கு அவன் துடிப்பாய் இருக்கவேண்டும் 



அவளின் தூய்மை அன்புக்கு அவன்  பொய் கலவாமை வேண்டும் 
அவளைத் தன வாழ்க்கைக்கு எற்றமாய் அவன் நினைக்க வேண்டும் 
அவள் இல்லாமல் நான் இல்லை என்று அவன் உணரவேண்டும் 



அவளை அமுதசுரபியாக அவன் நினைக்கவேண்டும் 
அவள் செல்வம் தரும் பொக்கிஷமாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தன பிரச்சனைக்குத் தீர்வாய் அவன் நினைக்கவேண்டும் 



அவளை தன குடும்பத்திற்கு குத்துவிளக்காய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை வாரிசு கொடுக்கும் வள்ளலாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தனது வாழ்க்கைக்கு ஆலமரமாய் அவன் கருதவேண்டும் 
அவளை எல்லாம் கொடுக்கும் காமதேனுவாய் அவன் கருதவேண்டும் 



அவளுக்கு இவன் உயிராய் 
இவனுக்கு அவன் உயிராய் 
ஈருயிரும் ஓருயிராய் 
எந்நாளும் இணைந்தே வாழ 
புதுமை ஆணாக புரட்சி வேண்டும்.



குடும்ப சச்சரவுகள் களைய 
வேண்டாத் குழப்பங்கள் நீங்க 
சந்தேக பிசாசை விரட்டியடிக்க 
சரிநிகராக மதிப்பளிக்க 



வரதட்சணையை வேரறுக்க 
புரிதலை ஓங்குவிக்க 
விவாகரத்து சாத்தானை விரட்ட 
இருவரும் ஓருயிராய் மாற 

 

வேண்டும் வேண்டும் 
புதுமை ஆண் வேண்டும் வேண்டும் 
புதுமைப் பெண் கொடுத்த பாரதிக்கு 
புதுமை ஆண் பரிசாக தருவோம்.



வையகம் வாழ்த்தும்
புதுமை ஆண் புரட்சி படைப்பான்..



நன்றி 



வணக்கம்.




------------------------------------------------------------------------------------------------------------


'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை

'தெய்வப்பெண்' மறந்த பாரதி  
புதுக்கவிதை 





காணுமுன்னே தோன்றி 

கண்ணெதிரே மறைந்தவள் 

பாரதி படைத்தான் 
புதுமை பெண் 
இவன் படைப்பதோ 
தெய்வப் பெண் 



ஈடில்லா அன்பு 
அளவில்லா பொறுமை 
அசராத உறுதி 
பார்ப்பதில் குளுமை 
பழகுவதில் இனிமை 
தோற்றத்தில் எளிமை 
அவளே தெய்வப் பெண் 

வார்த்தையின் கணம் 
படிக்கும் போதும் 
நட்பின் கணம் 
பிரியும் போதும் 
உறவின் கணம் 
இழக்கும் போதும் உணரும்.

வாழ்க்கை ஒரு புதிர் 
நிறைந்த பயணம் 
இறந்த காலம் தெரிந்த விடை 
எதிர்காலமோ தெரியாத விடை 
நிகழ காலம் புரியாத விடை.



அன்புக்கு உதாரணம் 
தாய்.
பேரன்புக்கு 
தெய்வப் பெண்.

புதுமைப் பெண்ணாய் 
இருக்கும்போது 
ஓரெழுத்து கூட எழுதாதவன் 
ஒரு வரி கூட படிக்காதவன் 
எதையும் சிந்திக்காமல் 
இருந்தவன்.



தெய்வப் பெண்ணாய் 
மாறிய பிறகு 
வண்டி வண்டியாக எழுத வைத்தவள் 
பலவற்றை படிக்க வைத்தவள் 
புதிது புதிதாக சிந்திக்க வைத்தவள் 
எல்லாம் 
எனக்குள் அவள் விதைத்த விதைகள்.



வாழ்க்கைக்கு புது இலக்கணம் 
கற்றுக் கொடுப்பவள் 
புதுமைப் பெண்ணுக்கு 
புது விதி தந்தவள்.



அவள் இருக்கும்போது 
எழுத நேரமில்லாதவன் 
படிக்க நேரமில்லாதவன் 
சிந்திப்பதற்கு நேரமில்லாதவன் 
அவள்  நினைவு 
என் பேனாவில் நுழையும் போது 
ஆஹா...அற்புத படைப்புகள் 
எழுதியது நானா?
இல்லை அந்த தெய்வப் பெண்ணா?



அணுஅணுவாக ரசிப்பவள் 
அக்கறையோடு செதுக்குபவள் 
அளவில்லா இன்பத்தை தருபவள் 
ஆரோக்கிய வாழ்வு கொடுப்பவள் 
அன்பை கொட்டி தீர்ப்பவள் 
அவளஅல்லவோ தெய்வப் பெண்.




அவளில்லாமல் என்னை நினைக்காதவன் 
அவள் இருக்கும்போது சுகமாய் உணர்ந்தவள் 
நொடிபொழுது கூட கவலை தராதவள் 
கவலைப்படத் தெரியாமல் காப்பவள் 
எப்போதும் புத்துணர்வு தருபவள் 
மாறாத புன்சிரிப்பை உதிர்ப்பவள் 
அவள் பெயர் தெய்வப் பெண்ணோ?



நல்லதை கற்கச் சொல்பவள் 
நன்மை தரும் செயலை செய்பவள் 
அழக் கற்றுக்கொடுக்காதவள் 
அன்பே வடிவமாய் ஆனவள் 
அவளே தெய்வப் பெண் 



வாழ்க்கைக்கு வலிமை கொடுப்பவள் 
செயலில் தன்னம்பிக்கை தருபவள் 
சிந்தையில் புதுமை உருவாக்குபவள் 
எதையும் செய்யும் துணிச்சல் தருபவள் 
வெற்றிகளை குவிக்கும் ஆசி கொடுப்பவள் 
தெய்வப் பெண்ணே 
நீ என்றும் வாழ்கவே பல்லாண்டு.



நீ கண்ட கனவு 
நிச்சயம் மெய்படும்.
புதுமை பெண்ணுக்கு இணையாய் 
அனைவருக்கும் துணையாய் 
வாழ்கையில் நம்பிக்கை 
தருவாள் 
இந்த தெய்வப்பெண்!




பாரதி படைக்க மறந்த படைப்புகள் 




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன்

 பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன் 




காலம் (ன் ) மட்டும் காத்திருந்தால் 
கதாநாயகன் ஆயிருப்பாய் !
உம இலட் சிய கனவின் 
உண்மை சொருபத்தை பார்த்திருப்பாய் !

உமக்குத்  தெரியுமா ? பாரதி !
நம்மை ஆண்ட வெள்ளையன் 
நம்மை விட்டு வெளியேறிவிட்டான் !
அனறு 
'வந்தேமாதரம் ' சொன்னால் 
சிறையில் தள்ளப்பட நாங்கள் 
இன்று 
எல்லா சுதந்திரத்தையும் 
பெற்றுவிட்டோம் 

நீர் கண்ட புதுமை பெண்கள் 
அணுக்கு நிகராக 
ஆட்டோ முதல் ராக்கெட் வரை 
இய்க்குகின்றனர் !

கண்ணமாக்களும் , சக்திகளும் 
இன்று ஆட்சி கூட செய்துவருகின்றனர் 


'பாஞ்சாலி சபதம் ' படைத்த நீ 
சுதந்திர இந்தியாவில் இருக்கும் 
"தமிழாட்சி' காவியத்தை தந்திருப்பாய் 

உன் எழுச்சி கவிதைகள் மூலம் 
இன்றைய தலைமுறைக்கு புத்துயிர் 
தந்திருப்பாய் !
உன் சுதந்திர கனவு நனவாக்கிய 
வித்தையை கற்று கொடுதிருப் பாய் 

இளையதலையினருக்கு 
அவர்களின் கனவை  எப்படி நனவாக்கும் 
ரகசியத்தை சொல்லியிருப்பாய 

உன் கவிதை வெள்ளி திரையிலும் 
டி .வி சீரியலிலும் 
வெப் சைட்டிலும்  இண்டர்நெட்டிலும் 
மொபைலிலும் எதிரொலித்து 
இந்த  உலகை வலம்  வந்திருக்கும் 

உன் கவிதை வரிகளை 
கண்ணதாசனும் , வைரமுத்தும் 
இன்னும்  தற்போதுள்ள கவிஞர்களும் 
சிறிய பெரிய திரைகளில் 
கொடுத்து உன் புகழ் பரப்புகின்றனர்..

கவலை  வேண்டாம் பாரதி !
நீ ஏந்திய லட்சிய கவிதை ஜோதியை 
என் போன்றவர்களும் 
கவிஞர்களும் அறிஞர்களும் 
எப்போதும  அணையாமல் 
எந்திவருகின்றோம்   

வெகுவிரைவில் உலகம் முழுதும் 
உம்மை விழா எடுக்கும் 
அப்போது அக்னி குஞ்சுகளாக 
உயிர்தெளுவோம் 
என்றும் 
புதுகவிதை ஜோதியை காப்போம்..

-----  ஆக்கியோன் - கங்காதரன்  .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



பாரதி விரும்பிய புதுமை பெண் - கவிதை - மதுரை கங்காதரன்

பாரதி விரும்பிய புதுமை பெண்  

கவிதை - மதுரை கங்காதரன் 



காலம் செய்யாததை 
கவி மூலம் செய்த 
மகாகவி பாரதிக்கு நன்றி 


அடிமை பெண்ணிலிருந்து 
புதுமை பெண்ணாய் மாற்றியதற்கு.

கொலு பொம்மையாய் இருந்தவளை 
கோபுரத்தில் ஏற்றியதற்கு .

சமையலறையில் தவமாய் இருந்தவளை 
சாதனைகள் பல செய்பவளாய் மாற்றியதற்கு.

வீட்டு கூண்டில் அடைபட்டு கிடந்தவளை 
ரெண்டு இறக்கை கட்டி பறக்கச் செய்ததற்கு.    

பிரசவ ஆஸ்பத்திரியை குத்தகை எடுத்தவளை 
பிறவி பயன் பெற்றவளாய் மாற்றியதற்க்கு.

பல துறையில் அவளின் முன்னேற்றத்தின் காட்சி 
பள்ளி தேர்ச்சி விகிதமே சாட்சி.

பூப்பெய்தும் வரை தான் கல்வி என்பதை மாற்றி 
பூமியை தாண்டி விண்ணுக்கு பயணித்ததற்கு.

அன்பால் உலகை திரும்பி பார்க்கச்செய்த்த பெண் 
அதரவற்றோருக்கு அடைக்கலம் தந்த பெண் 


அனைத்து விமர்ச்சனங்களையும் தாண்டி 
ஆசைகளை தியாகம் செயத பெண் 

ஆண்டவனாய் அனுப்பிய தெய்வப் பெண் 
அன்னை தெரசா என்ற நோபல் விருது பெண் 


ஆணுக்கு அடிமையாய் கிடந்த பெண் 
அவனுக்கு நிகராய் வளரும் பெண் 

அலங்கார பதுமையாய் இருந்த பெண் 
ஐ.ஏ.எஸ் படித்து ஆளும் பெண் 


பெண்ணுக்குள் உறங்கி கிடந்த 
பல புதுமைகளை கொடுக்கும் பெண் 


திறமைகளை வளர்த்து 
தரணியை ஆளும் பெண் 

பெண்ணில்லாமல் ஆணில்லை 
இருவர் இல்லையேல் உலகில்லை 

பெண்ணிற்கு உரிமை பல கொடுப்போம் 
பெண் குலத்தை போற்றுவோம் .



வாழ்க பாரதி !
வளர்க புதுமை பெண்!









Friday, 16 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 30 நிறைவாய் வாழ உள்விதி மனிதனை நினை! - ALWAYS THINK INNER MAN



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை  

பாகம்: 30 நிறைவாய் வாழ உள்விதி மனிதனை நினை!  

ALWAYS THINK INNER MAN, HE WILL TAKE CARE!
  

பெருமையுள்ள மனிதா!   இந்த மானிட உலகில் ஒரு சிலர் சம்சார பந்தம் மிகவும்       கொடுமையானதாகவும்     அது       எப்போதும்        கஷ்டத்தைக்  கொடுப்பதாகவும்   அந்த   சம்சாரக்       கடலை   விட்டுவிட்டோ   அல்லது  அதை       தவிர்த்தால்    தான்   பக்தி   நெறியில்   ஈடுபட்டு, வாழ்க்கையில்    முக்தி அடைய  முடியும்  என்று பரவலான எண்ணம் சிலரிடம் இருக்கின்றது.  அப்போது  தான்  மனநிம்மதி ஏற்படும்    என்பது    உண்மையா?  என்று சிலருக்குச் சந்தேகம் வரலாம்.    இந்த    மாதிரி யெல்லாம்  சொன்ன     காலமும், சூழ்நிலையும் நாம் சற்று     சிந்தித்துப்  பார்க்கவேண்டும். அப்போது எல்லாவற்றிற்கும்    காலம்,     நேரம்       தாரளமாக     இருந்தது.  போட்டி, பொறாமை  இல்லாத காலம். பொய், ஏமாற்று , பித்தலாட்டம்,  சூது வாது, வஞ்சகம் இல்லாத காலம். அரசன் முதல் ஆண்டி வரையிலும் நீதிக்கும், உண்மைக்கும்,     சத்தியத்திற்கும்   கட்டுப்பட்ட   காலம்.    கடவுளுக்கும், ஆன்மீகத்திற்கும் பயந்த காலம். 



இந்த காலம் அப்படியா? கோவில் சொத்துகளைக் கொள்ளையடிக்கிறனர், கோவில் உண்டியல் உடைத்து பணம், நகைகளைத் திருடுகின்றனர், இவ்வளவு  ஏன் ? கோவில் சிலைகளை, விக்கிரகங்களை திருடி விற்கின்றனர். கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வருகின்றனர். அந்த மாதிரி செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனே  தெய்வமே தண்டிப்பதில்லை. ஆகவே தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கை சற்று குறைந்து இருக்கின்றது. ஆனால் 'எப்போதும் தெய்வம் நின்று (நிதானமாகத்) தான் தண்டனை கொடுக்கும்.' அதற்குக் காரணம் திருடன் விதிவசத்தால் திருடுகிறான். அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருவோம் என்று  தெய்வம் நினைக்கிறது என்பது தான் உண்மை. அப்போதும் திருந்தவில்லையென்றால் அவன் அழிவது தவிர வேறு வழியில்லை. 



என் இனிய மனிதா! இன்றைய சூழ்நிலை! உனக்கு எதையுமே பொறுமையாக சிந்திப்பதற்கு நேரமில்லை. எல்லோரும் இயந்திரமாய் இயங்குகிறார்கள். இதில் இந்த உள்விதி மனிதனைப் பற்றிய சிந்தினை எப்படி இருக்கமுடியும்? மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஜீவ ஓட்டம் உண்டு. இந்த உயிர் ஓட்டத்திற்குக் காலாகாலம் 'உணவு' கொடுத்தே தீரவேண்டும். இது தான் காலத்தின் கட்டாயம். இந்த ஒரு காரணத்திற்காகத் தான் இந்த உலக மக்கள் பயந்து ஓரளவு ஒழுங்காக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. மின்சாரம், பணம் போன்றவை மட்டுமே போதும் என்றிருந்தால் இந்நேரம் உலகம் அழிந்திருக்கும். பெரிய கோடிஸ்வரனுக்கும், ஏழைக்கும் உணவு அவசியம் வேண்டும். அதை வியர்வை சிந்தி பாடுபட்டால் தான் கிடைக்கும். பணக்காரன் உடல் உழைப்பதற்குத் தயாராக இல்லை. அதை ஏழைகளால் மட்டுமே செய்ய முடியும். அதனால் அவர்களை அழிக்க முடியாது. இப்போது புரிகின்றதா? ஏழைகளை ஏன் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று!



என் பாசமுள்ள மனிதா! இந்த ஜீவ ஓட்டம் ஒழுங்காக இருந்தால் தான் நீ விரும்பியதை அனுபவிக்க முடியும். அதனால் தான் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கின்றனர். சிலர் பேராசையினால் குறுக்குவழியில் அளவுக்கு அதிகமாக செல்வங்களை தலைமுறை தலைமுறையாய் அனுபவிக்கச் சேர்த்து வைத்து வருகின்றனர். அதனால் தலைக்கணம் கொண்டு இந்த உள்விதி மனிதனையும் மற்றவர்களையும் மதிக்காமல் நடந்துகொண்டு வருவதை நான் கவனித்துக்கொண்டு வருகிறேன்.

மனிதா! உலகச் சரித்திரத்தைச் சற்று புரட்டிப் பார்! உலகாண்ட மாவீரன் நெப்போலியனின் வாரிசுகள் எங்கே? ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரின் வாரிசுகள் எங்கே? ஒரு காலத்தில் உலகம் பாதியளவு ஆண்ட ஆங்கிலேயர்களின் வாரிசுகள் எங்கே? சரித்திரம் அப்படியிருக்க, 'இது  என் நாடு? நான் தான் ஆளுவேன்! எனக்கடுத்து எனது வாரிசு ஆளவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கும்  தலைவர்களின் எண்ணம் நிறைவேறுமா? தவறான வழியில் செல்வம் சேர்த்தால் அவர்களின் வாரிசுகள் ஒருநாள் முகவரி தெரியாமல் வீதிக்கு வரத்தான் செய்வார்கள். பிறரை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சேர்த்திருக்கும் பெரிய பணக்காரரின் வாரிசு ஒரு நாள் ஏழையாக மாறும் காலம் வரும்! அதை வருங்கால சரித்திரம் உனக்கு எடுத்துச் சொல்லும். அதிக ஆட்டம் போட்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு இது தான் கதி! 



இரக்கமுள்ள மனிதா! அவர்களுக்குள்ளும் நான் தான் இருக்கிறேன். அவர்களிடத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான செல்வங்கள் யாவும் அவர்களுடையது இல்லை. அதனால் தான் அதை வெளியே சொல்லமுடியாமல், திருட்டுப் பொருட்கள் போல மற்றவர்களுக்குத் தெரியாதவாறு மறைத்து, மனதில் ஒருவித பயத்துடன், மடியில் கணத்துடன், சொந்த உறவுகளையும் நம்பாதவனாய், நிம்மதியில்லாமல், எந்நேரமும் தூக்கமில்லாமல், சோறு தண்ணீர் கூட ஒழுங்காய் சாப்பிட முடியாதவனாய் அவதிக்குள்ளாகிறானே அதிலிருந்து உனக்குத் தெரியவில்லையா? அவனுக்குள் இருக்கும் நான் அவனின் இந்த தீய செயலுக்காக எப்படி ஆட்டிப்படைக்கிறேன் என்று!

பிரியமுள்ள மனிதா! நல்லவன் தான் இந்த உலகில் சுதந்திரமாக வாழ்வான். அவனுக்குத் தான் நான் கொடுத்த செல்வங்கள் அனைத்தும் வெளிப்படையாக, ஒளிவுமறைவில்லாமல் அனுபவிக்கும் உரிமை இருக்கின்றது. அதன் மூலம் தான் அவன் தன்னுடைய  காலத்தை எந்தவித பயமில்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். மனிதா! உனது வயிறு காயாமல் இருக்க நீ  உழைக்க வேண்டியிருக்கின்றது. மற்றவர்களுக்கு அனுசரித்து நடக்கவேண்டிய சூழ்நிலையும், கட்டுப்பாடும் மற்றும் பயத்துடன் ஒழுங்காக நடந்து வாழ்ந்து வரவேண்டியிருக்கின்றது. மனிதா! ஆண்டி முதல் மகான்கள் வரையில் இந்த சிறு வயிறுக்குத் தகுந்தவாறு சாப்பாடு கொடுக்காவிடில் அவனின் ஆன்ம ஓட்டத்திற்குக் கஷ்டம் கொடுத்துவிடுவேன். அதனால் தான் சொல்கிறேன் 'உன் வயிறை நன்றாக பார்த்துக்கொள் ' என்று. 



நலமுள்ள மனிதா! இந்த உலகில் இன்று உள்ள சூழ்நிலையில் கேட்பார் பேச்சை கேட்டு உன்னிடத்தில் இருக்கும் செல்வத்தை ஏமாற்றிப் பெறுவது யார், எத்தகையர்? என்று தெரியாமலே உனது செல்வத்தை செல்வம் சேருகின்ற  இடத்திலேயே கொடுத்து ஏமாந்து வருகிறாய். மனிதா! இந்த உலகில் நீ வந்ததன் நோக்கம் என் படைப்புகளை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பதற்காகத் தான். அதை உன் கண்ணெதிரே உன் செயலில் மூலம் நடத்தி உனது பிறவிப் பெரும்பயனை அடைவாயாக! அதில்லாமல் மற்றவர்களின் செல்வத்தை ஏமாற்றி அதை அடைய நினைத்தால் அது மாபெரும் தவறு. 

நன்மை தரும் மனிதா! நீ உழைத்து சம்பாதித்த சிறு செல்வத்தை  தீய எண்ணங்கள் கொண்ட பிறரிடம் தானமாகவோ, தர்மமாகவோ, அன்பளிப்பாகவோ கொடுத்து ஏமாறாதே. நீ எந்த நோக்கில் கொடுத்தாயோ அதுபோல் அவர்கள் நடந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்களது சொந்த நலனுக்காகவே அதை உபயோகிப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கொஞ்சம் கூட தானமாகத் தரமாட்டார்கள். ஒன்று கேட்கிறேன்! பெரிய பணக்காரர்கள், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், அரசாங்கத்திற்கில்லாத அக்கறை உனக்கேன் வருகின்றது? அப்படிச் செய்து ஏமாந்துவிடாதே!  



பாசமுள்ள மனிதா! உன் நெஞ்சைத் தொட்டுச் சொல். உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனை ஒரு நாளைக்கு எத்தனை தடவை அல்லது எவ்வளவு நிமிடம் நினைக்கிறாய்? அப்படி நினைப்பதற்கு உனக்கு நேரம் இருக்கின்றதா! அப்படி ஒருவேளை சதா என்னை நினைப்பதால் உனக்கு என்ன பயன் கிடைக்கும்? நீ என்னை எப்படி நினைத்தாலும் உனது வயிற்றுப் பசியை ஒரு வேளைக்கு தள்ளியோ, ஒரு நாளைக்குத் தள்ளியோ, ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு நிச்சயம் தள்ளிப் போடமுடியாது. அப்படிப்பட்ட செயலை என்னைத் தவிர வேறு யாராலும் செய்ய இயலாது. ஆனால் அந்த செயல் நடந்தே தீரவேண்டுமென்று தான் உயிரினங்களுக்கு நான் வகுத்து வைத்திருக்கும் விதி. அதை யாராலும் வெல்லமுடியாது. அப்படியும் யாராவது ஒருவர் உனது வயிற்றுப் பசியை ஒரு நாளைக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கிறேன் என்று சொன்னால் அவர் தான் என்னை விட அதிக வல்லமை படைத்தவர். அது வரை இந்த உலகம் எனது கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.




இனிமையான மனிதா! நீ இளமையாய் இருக்கும்போது என்னை எள்ளளவும் நினைக்காமல் உன்னைப் பற்றியும், உனது சந்தோசத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் நினைக்கிறாயே, அதற்கு மட்டுமல்ல உனது படைப்பு! நீ உனது உறவுகளையும், சுற்றியிருப்பவர்களையும் நல்வழியில் சந்தோசப்படுத்தி அவர்களை ஒரு குறையுமில்லாமல் வைத்துக்கொண்டால் நான் மிகவும் ஆனந்தப்படுவேன். ஏனெனில் அவர்களுக்குள்ளும் எனது பரிசுத்த ஜீவ ஓட்டம் தான் ஓடுகின்றது. அதை ஒரு குறையுமில்லாமல் செய்வதே உனது பிறவிக்கடன்.




நன்றியுள்ள மனிதா! ஒருவர் ஒருவேலையும் செய்யாமல் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டுமென்று, வேளாவேளைக்கு அவர் உணவு உட்கொண்டு சதா என்னைப் பற்றியே நினைப்பதில் எந்தவித பலனும் கிடைக்காது. உனக்குள்ள கடமைகளையும் நீ தவறாமல் செய்து கொண்டே இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரே ஒரு நிமிடம் என்னைப் பற்றி நினைத்தாலே போதும். எப்படியென்றால் உன்னிடம் அன்புமிக்கவர்களை நீ தினமும் 24 மணிநேரம் நினைத்துக்கொண்டா இருக்கிறாய். சரி அப்படியே ஒரு நாள், அதிகம் போனால் ஒரு வாரம் நினைக்கலாம். இன்னும் அதிகமாக நினைப்பாயானால் உனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். இது தான் உண்மை. இதை உன்னால் மறுக்க முடியுமா? மேலும் நீ சற்று வசதியாக இருந்தால் என்னை கண்டும் காணாமல் போய்விடுகிறாய். அப்படித்தானே! மனிதா! எப்போதும் எந்நேரத்திலும் உன்னால் முடித்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து தவறவே தவறாதே! அல்லது அவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்கிற மனோபாவமாவது  வளர்த்துக் கொண்டாலே போதும். நீயோ அந்த உதவியை பகட்டு மேனி கொண்ட போலியான மகானிடத்தில் காட்டி உனக்கு முக்தியும், மோட்சமும் கிடைக்குமென்று நம்பி ஏமாந்து வருகிறாய் ! ஜாக்கிரதை!  



உள் மனிதனில் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்..
               

Wednesday, 14 November 2012

பாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்


 விவேகனந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் -
பாகம்: 4  நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 
அவரின் அற்புத செயல்கள்


சுவாமி விவேகனந்தரின் ஆன்மீக சொற்ப்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்காரணமாக அவருக்கு 1893 இல் அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் 'உலக மதங்களின் பாராளுமன்றத்தில்' சொற்பொழிவு ஆற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவரது சாந்தமான முகம், எளிமையான தோற்றம், நல்லொழுக்கமுள்ள பேச்சு அனைவரையும் வியக்கச் செய்தது. இதுநாள் வரை யாருமே எந்த ஒரு கூட்டத்தில் ஆரம்பித்து பேசாத வார்த்தையை பேசினார். அதாவது 'சகோதர சகோதரிகளே !' என்று ஆரம்பித்தார். அவரது அந்த தொடக்கம் அவருக்கு முடிவில்லா பெரும் புகழை பெற்றுத் தந்தது. அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அங்கு அவரின் சிலையை நிறுவி அதில் '  A LIGHT FROM EAST' என்று அதாவது 'கிழக்கிலிருந்து வந்த ஒளி' என்று வார்த்தையை பொரித்து நம் இந்திய ஆன்மீகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெருமையை தேடித் தந்தார்.


இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றைகள் கட்டிக் காத்து நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு உலகநாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு காற்றடிக்கும் திசைகளில் பறந்து, கால் போகும் திசைகளில் நடந்தீர்களேயானால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல பெயர் கிடைக்காது. 


அமெரிக்காவில் சமய சொற்பொழிவாற்றச் சென்றிருந்த போது அவர் நேரத்தை வீணாக்காமல் அங்கிருக்கும் நூலகத்திற்கு தினமும் சென்று வந்தார். காலையில் அவர் தான் முதல் ஆளாக நுழைவார். ஆனால் கடைசி ஆளாகத்  தான் வெளியேறுவார். இப்படி இருக்கும் சமயத்தில் நூலக பொறுப்பாளருக்கு அவரின் நடவடிக்கைகள் சற்று சந்தேகத்தை வரவழைத்தது. அவர் சுவாமிஜீயிடத்தில் சற்று கடினமாக "நீங்கள் இங்கு வருவது பொழுது போக்கிற்காக என்று நினைக்கிறேன்" என்றார். சுவாமிஜி சற்றும் தாமதிக்காமல் கையில் இருக்கும் புத்தகத்தை அவர் கையில் கொடுத்து "நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள ஒரு வரியைச்  சொல்லுங்கள். அந்த பக்கத்தில் உள்ளதை ஒன்று விடாமல் முழுவதும் பாராமல் சொல்கிறேன் " என்றார். சுவாமிஜியை அவமானப் படுத்தவேண்டுமென்று நினைத்து 'ஒரு பக்கத்தில் உள்ள ஒரு வரியைச் சொன்னார்.' ஆனால் என்ன ஆச்சரியம், அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் ஒன்று விடாமல் பாராமல் விறுவிறுவென்று வாயிலிருந்து சொல்லருவிபோல கொட்டினார். அந்த நூலகப் பொறுப்பாளர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதோடு சுவாமிஜிக்கு வேண்டிய புத்தககளை அவரே எடுத்துக் கொடுக்கும் சேவையினை மேற்கொண்டார். 


இதிலிருந்து இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் , புத்தகங்கள் படிக்கும்போது கவனம் சிதறவிடாமல் ஒருமுக மனதோடு ஆழ்ந்து படித்தால் மனதில் நன்றாக பதியும் என்பதை உணர்ந்து கொளவேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதை செயலில் நடத்திக் காட்டவேண்டும். படிப்பது என்பது காகிதத்தில் வரைந்த பழங்களின் படம் போல. அதை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும், பேசினாலும் அதன் உண்மையான சுவையை அனுபவிக்க முடியாது. ஆனால் செயல் என்கிற உண்மையான பழம் ஒரு முறை சுவைக்கும்போது அதன் முழுமையான இன்பத்தை ஆயுள் முழுக்க அனுபவிக்கலாம். இளைஞர்களே! பேசுவதோடு உங்கள் வேலை முடிந்துவிடவில்லை. செய்து காட்டவேண்டும். 


ஒருமுறை அவருக்கு 'துப்பாக்கி சுடும் போட்டி' நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று விழா அமைப்பாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் அங்கு சென்றார். அப்போது போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் யாரும் குறிபார்த்து சரியாகச் சுடவில்லை. அப்போது சில போட்டியாளர்கள் கிண்டலாக சுவாமிஜீயை சுட அழைத்தனர். அவர் சற்றும் தயங்காமல், அமைதியாக, தன்னம்பிக்கையோடு மனதை ஒருமுகப்படுத்தி தனது முழு கவனத்தையும் துப்பாக்கியில் கொண்டுவந்து சரியாக குறிபார்த்து சுட்டார். அனைவரும் சுவாமிஜியின் ஆற்றலைக்கண்டு வியந்து பாராட்டினர்.


இளைஞர்களே! ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் முடியாதது ஏதுமில்லை. நீங்கள் மனது வைத்தால் எல்லோரும் மூக்கில் விரலை வைக்குமளவிற்கு சாதனை படைத்து வெற்றி பெற முடியும். 'முடியும்' என்று உங்களை நீங்களே நம்புங்கள்.


இன்றைய இளைஞர்களுக்கு இத்தகைய உதாரணங்கள் மிகவும் தேவை. ஏனென்றால் போட்டி, பொறாமை நிறைந்த இந்த உலகில் ஒருவருக்கொருவர் ஏமாற்றும்  செயலில் ஈடு[படுவதை தவிர்க்க வேண்டும். பேராசை கொண்டு மனித குலத்தையும், மாசில்லா இயற்கையான சுற்றுப்புற சூழ்நிலைகளை அழித்து வருவதை தடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்கு வழிகாட்டியாக நாம் இருப்போம். 


இன்றைய வல்லரசு தலைவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறதென்றால்  தங்கள் நாடு மட்டும் மாசு படாமல் தூய காற்று கொண்டு இருக்கவேண்டும். தங்கள் மக்கள் அனைத்து செல்வங்களும் வசதிகளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவேண்டும், தன்னுடைய புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டுமென்று நினைக்கின்றனர். ஆனால் ஒன்றை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அனைவரும் ஒரே உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஒரு நாட்டில் அளவில்லா மாசு ஏற்படுதல் , ஒரு நாட்டில் நடக்கும் தீவிரவாதம், ஒரு நாட்டின் உள்நாட்டுப் போர், இரு நாட்டிற்க்கிடையே நடக்கும் போர் , உள் நாட்டின் அராஜகம், ஒரு நாட்டின் ஊழல், லஞ்சம் போன்றவை என்பது பக்கத்து வீடு தீப்பற்றி எறிவது போல. அதை   தகுந்த சமயத்தில் விரைவாக அணைக்க முயற்சிக்காவிடில் அந்த தீ இப்போது வல்லரசு நாட்டிற்கும் பரவும்  காலம் வெகுவிரைவில் இல்லை. உதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளை பாதிக்கவில்லையா?  ஆகவே வருங்கால உலகம் தூய்மையாக விளங்க இளைஞர்களின் கையில் தான் உள்ளது.


எதையும் பார்த்த மாத்திரத்தில் மனிதில் ஏற்றுக்கொண்டு விரைவாக புரிந்துகொள்ளும் தன்மை இளைஞர்களிடத்தில் இருப்பதால் அவர்களை நல்லவழியில் செலுத்தி, சேவை மனப்பான்மையோடு மக்களுக்கு பல நன்மைதரும் காரியங்களை செய்யச் செய்து இந்த உலகுக்கு எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்தை அடியோடு ஒழித்து புதிய உலகம் படைத்து சுவாமி விவேகனந்தர் கண்ட கனவை நாம் நிறைவேற்ற இன்றே சபதம் மேற்கொள்ளுவோம். 


ஆன்மிகம் கடைபிடிப்போம் !

இயற்கை வளங்களை காப்போம்!

நாட்டை அழிவிலிருந்து மீட்போம்!

இளைஞர்கள் சிக்கியுள்ள மாயவலையை அறுப்போம்!


இளைஞர்களைக் கொண்டு புது உலகத்தை படைப்போம்.! 

சுவாமி விவேகானந்தர் கண்ட கனவை நனவாக்குவோம் !


நன்றி ! வணக்கம் !!






பாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும் (SWAMI VIVEKANANDA)

 விவேகனந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் - 
பாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க
இன்றைய தேவையும் 


சிறப்பு வாய்ந்த  மனித பிறப்பு பெற்ற பலர் பூமிக்கு பாரமாக இருந்துவிட்டு , நீர்க்குமிழி போல வாழ்ந்து மறைந்துவிடுகின்றனர். ஆனால் வெகுசிலர் மனிதகுலத்திற்கு  புனிதத்தைத் தேடிக்கொடுத்து இந்த பூமியை தங்களால் இயன்ற அளவிற்கு புண்ணியபூமியாக மாற்றி மனிதகுலம்  கஷ்டம் என்னும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லாமல் இருக்க அவர்களுக்கு உதவும்  பாலமாகவும், பிறவிக் பெருங்கடலை கடப்பதற்கு தோணியாகவும்  தங்களை அர்பணித்துக் கொண்டதோடு, என்றும் தங்களுடைய நினைவுகளின்  மூலமாக மனிதர்களுடைய நெஞ்சில் நிரந்தரமாக  இடம் பிடித்து அவர்களது வாழ்க்கைக்கு நல்வழி காட்டுகின்றனர். அந்த வகையில் சுவாமி விவேகனந்தரின் பிறப்பு மனிதகுலத்திற்கு குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக வாழ்ந்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.



அவர் கல்கத்தாவில் 1863 ம்  ஆண்டு ஜனவரி மாதம் 12 ம்  நாள் பிறந்தார். 'நரேந்திரநாத்' என்பது அவருடைய இயற்ப்பெயர். பின்னரே அவர் 'சுவாமி விவேகானந்தர் 'ஆக மாறினார்.   இயல்பாகவே அவர் ஆன்மீகத்தில் நாட்டமுடையவராக இருந்தார். அவர் பி.ஏ  பட்டதாரி ஆவார். அவர்  பேசுவதிலும் பாடுவதிலும் நன்றாக தேர்ச்சி பெற்றவர். சிறுவயது முதற்கொண்டே  அவருக்கு 'கடவுளைக் காணவேண்டும்' என்கிற ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்து வந்தார். அதற்காக அவர் பல மகான்களையும், முனிவர்களையும், ஆன்மீகப் பெரியவர்களிடத்தில் கடவுளைப் பற்றிய  பல கேள்விகளை கேட்டும் அதற்கான விடைகளையும் தெரிந்து கொண்டுவந்தார். அதில் அவர் முதலில் பின்பற்றியது 'தியானம்'. அவர் பல மணிநேரம் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மறந்து தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார்.



வயது ஆக ஆக அவருக்கு தங்கு தடையின்றி தியானம் செய்யவேண்டுமென்று நினைத்தார். அதற்கு தகுந்த இடம் தமிழ்நாட்டின் தென்முனையில் முக்கடல் சங்கமமாகும் 'கன்னியாகுமரி' யை தேர்ந்தெடுத்தார். அதற்கு மற்றொரு காரணம் இடைவிடாது கடல் அலைகள் எழுப்பும் சப்தம் அவருக்கு புத்துணர்ச்சியையும், மனவலிமையும், ஊக்கத்தையும் கொடுத்தது என்று சொல்லலாம். அதுவுமில்லாமல் இடைவிடாது மனதில் தோன்றும் நிரந்தரமில்லாத எண்ண அலைகளை தியானத்தின் மூலமாகத் தான் அடக்கமுடியும் என்றும் அதன் மூலம் மனோபலம் பெறமுடியும் என்றும் நம்பினார்.


தான் எண்ணியவாறு தென் முனையை அடைந்தார். அங்கு அவர் சற்று தூரத்தில் ஓயாமல் பலமாக அடித்துக்கொண்டிருக்கும் உயர்ந்த அலைகளுக்கு நடுவே எதற்கும் அசையாமல் இருக்கும் ஒரு பாறையைப் பார்த்தார். அங்கு தனது தியானத்தை தொடர உத்தேசித்தார். அந்த இடத்தை அடைய அங்கு இருந்த மீனவ படகோட்டிகளிடம் தன்னை அந்த பாறைக்கு  செல்ல உதவிடும்படி வேண்டினார். ஆனால் அந்த மீனவர்களோ பணம்  தராமல் அழைத்துச் செல்ல முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர். துறவிகளிடத்தில் எது பணம்? அதற்காக அவர் சற்றும் மனம் தளரவில்லை. இனிமேலும் யாருக்காக காத்திராமல், யர்ர் உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிகையுடன் நொடிப்பொழுதில் சற்றும் தாமதிக்காமல் ஆபத்து உள்ள அந்த அலைகடலில் குதித்து அந்த பாறையை நோக்கி நீந்தி அடைந்தார். அந்த அலைகளின் சப்தத்திற்கிடையே தியானம் செய்தார். இது அவரது மனோவலிமைக்கும் , துணிச்சலுக்கும் ஒரு சிறந்த உதாரணம்.  



இதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். எடுத்தபின் தயங்காமல் , பயப்படாமல் துணிச்சலுடன் செய்யுங்கள். அதன்மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கையும் , மனவலிமையும் பெறுவீர்கள். அதனால் நினைத்த காரியம் எளிதாகவும், வேகமாகவும் கைகூடும்.



சுவாமிஜியின் சொற்ப்பொழிவுகள், கோழையாக இருக்கும் இளைஞனை வீர இளைஞனாக மாற்றும் வல்லமை கொண்டது. அவரது வாழ்க்கை எக்காலத்திலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும். 



மனிதகுலத்திற்கு ஒழுக்கம் இன்றியமையாதது. அதனால் மனம் மனத்தூய்மை பெறும் . உடல் சுத்தியும் , ஆரோக்கியமும் உண்டாகும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒருவன் வாழ்கையில் வெற்றி பெற 'குறிக்கோள்' தேவை என்றார். அந்த குறிக்கோளை அடைய மனம் ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் அவசியம் என்று அறிவுறுத்தினார். 'தியானம்' ஒரு மனிதனுக்கு அறிவையும், ஆற்றலும் தருகின்றது. துணிந்து செய்யும் மனவலிமை உண்டாக்குகின்றது. 



'உங்களால் எனக்கு கடவுளைக் காட்டமுடியுமா' என்ற கேள்வி, அவருக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் ஆன்மீகத்தில் கடவுளைப் பற்றிய விளக்கங்களை தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. அவருடைய இரட்டைக் குழல் துப்பாகியான ஆன்மீக சிந்தனையும், சமுதாய கடமையும் மக்கள் மனதில் தோட்டாக்களாக துளைத்துள்ளது என்பது இப்போது உங்களுக்கு கண்கூடாக தெரிய வரும்.



பாகம் : 4 .... சுவாமிஜியின் அற்புத செயல்கள் தொடரும்..