Pages

Friday, 7 December 2012

பணப்பெட்டி அரசியல் கொள்கை CURRENCY POLITICS POLICY புதுக்கவிதை

பணப்பெட்டி அரசியல் கொள்கை 
CURRENCY POLITICS POLICY 
புதுக்கவிதை 



காற்றில் பறக்கின்றன 
கட்சிக் கொடிகள் மட்டுமல்ல 
அவர்களின் 
வாக்குறுதிகளும் 
கொள்கைகளும்.



பாம்பு படமெடுத்தால் 
படையும் நடுங்கும் 
பணப்பெட்டி திறந்து காட்டினால் 
கொள்கைகளும் மயங்கும்.

மக்கள் போடுவது ஓட்டு 
அவர்கள் வைப்பதோ வாழ்வில் வேட்டு 
பணப்பெட்டி மாறியதால் 
சவப்பெட்டியிலும் ஊழல்.



லஞ்சம் ஊழல் தெரியாமல் செய்வார் 
தெரிந்துவிட்டால் நிரூபி என்பார் 
நிரூபித்தால் வழக்கை 
சந்திக்க தயார் என்பார்.

விசாரணை குழு அமைப்பர் 
விசாரணை கமிஷன் உருவாக்குவர் 
வழக்குகள் போடுவார் 
வாய்தா வாய்தா கேட்டே 
வழக்குகளுக்கு வயதாகி விடும் அவலம் 
வெள்ளிவிழா பொன்விழா 
கொண்டாடும் வழக்குகளும் உண்டு.



வேட்பாளர்கள் 
பொதுதரிசனம் கொடுத்தவர்கள் 
சிறப்பு தரிசனம் மட்டுமே கொடுப்பார்கள் 
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு.

குடிகாரன் பேச்சு 
விடிஞ்சாலே போச்சு 
மேடைக்கரர்கள் பேச்சு 
இறங்கினாலே போச்சு.



தேர்தலில் நிற்கும்போது ஒரு பேச்சு 
ஜெயித்த பிறகு ஒரு பேச்சு 
பதவிக்காக ஒரு பேச்சு 
ஆட்சியில் அமர ஒரு பேச்சு 
அவர்களுக்குத் தெரிந்த ஒரே பேச்சு 
ஏழை நடுத்தர மக்களை 
ஏமாற்றும் பேச்சு.
அதன் மூலம் பணம் 
சம்பாதிப்பதே உயிர் மூச்சு.



ஐந்தாண்டு பதவிக்கு 
ஆளாய் பறப்பார்கள்.
படிப்பறிவு பட்டம் வேண்டாம் 
பணப்பெட்டி ஒன்றே போதும் 
பதவி பெறுவதற்கு!
ஆண்டியாய் இருந்தவனும் 
அரசனாய் மாறுவான்
தலைவரின் பார்வை விழும்போது.



ஆயுள் முழுவதும் 
ஏமாறுவதற்கு 
மக்கள் தரும் உத்திரவாதம் 
ஐந்தாண்டுக்கு ஒரு முறை 
போடும் ஓட்டு மட்டுமே!



நூறு கோடி மக்களின் 
தலைஎழுத்தை 
முன்னூறு பேர்கள் 
நிர்ணயிக்கும் கூத்து.



தலைவரின் சொல்லை 
தட்டாமல் செய்பவன் 
பிசகாமல் தலையாட்டுபவன் 
தவறாமல் குடை பிடிப்பவனுக்கு 
தலை சிறந்த உயர் பதவி.
இதற்கு பட்டம் அறிவு வேண்டுமா?



தவறாமல் ஓட்டு போட வேண்டுமாம் 
நேர்மை தவறி நடப்பவர்களுக்கு.
அடிதடி சண்டைகள் அரங்கேறும் 
கூச்சல் குழப்பங்கள் தொடரும் 
பள்ளியில் அல்ல 
சட்டமன்றத்தில் 
பாராளுமன்றத்தில் 
அவர்கள் மேல் தவறில்லை 
பாதி தவறு தலைவரின் மேல் 
மீதி பாதி மக்களின் மேல்.
பள்ளிக்கூடம் சென்றிருந்தால் 
ஒழுக்கம் அமைதி தெரிந்திருக்கும்.



சட்டங்கள் எல்லாம் 
சாதாரண குடிமக்களுக்கு.
அரசியல் பதவி 
செல்வாகுள்ளவர்களுக்கு 
விதி விளக்கு.



ஏழை பங்காளன் என்பான் 
விலைவாசியை குறைப்பேன் 
அதைச் செய்வேன் 
இதைச் செய்வேன் என்பான் 
வாய்ஜாலம் காட்டி 
மக்களை மயக்குவார்.



ஆயிரம் போதாதென்பார் 
லட்சத்தை துச்சமாக மதிப்பர் 
கோடியை நோக்கி ஓடுவர் 
கோடான கோடிக்கு குறிவைப்பார்.

காகிதத்தின் தன்மை 
இரும்புக்குத் தெரியுமா?
ஏழையின் கஷ்டம் 
அரசியல்வாதிகளுக்குத் தெரியுமா?



விலைவாசி நெருப்பு 
லஞ்சம் ஊழல் வேள்வியில் 
பொசுங்குவது காகிதம் மட்டுமே 
இரும்பல்லவே.



மக்கள் குடித்துக் கெட்டாலும் 
பரவாயில்லை 
புகை பிடித்து அழிந்தாலும் 
பரவாயில்லை 
பசியால் வாடி செத்தாலும் 
பரவாயில்லை 
உயிருள்ளவரை பதவி சுகம் 
வேண்டுமாம்.



சொகுசாய் பதவித் தேரில் 
பவனி வர 
மக்களை மாடாய் மதிப்பர்.
போதாதற்கு சுமை சுமத்துவர் 
வரிச்சுமை விலைவாசி சுமை 
வருடம் முழுவது மாறி மாறி.

கோடிக்கணக்கில் ஊழல் 
செய்தவர்களுக்கு நீதிமன்றத்தில் 
சிவப்பு கம்பள வரவேற்ப்பு. 

ஆயிரம் ஐநூறு 
லஞ்சம் பெற்றவர்களுக்கோ 
உடனே தண்டனை.

அனைவருக்கும் 
திருப்தி செய்ய முடியாது தான்!



அரசாங்கம் கொடுக்கும் 
இரு கைகள் நிறைய சம்பளம் போதாதா?
லஞ்சம் தடுக்க முடியாதா?
ஊழலை ஒழிக்க முடியாதா?
கடமையைச் செய்ய இயலாதா?
சட்டத்தை மதிக்க முடியாதா?
நேர்மையாக கடைபிடிக்க இயலாதா!
சத்தியத்தை தவறாமல் இருக்க முடியாதா?
மக்களுக்காக ஆட்சி கிடையாதா?

மக்கள் வாழ்வு மலர 
மக்கள் ஏக்கம் தடுக்க 
மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க 
என்று விடிவுக்கு வரும் 
பணப்பெட்டி கலாச்சாரம்.





Monday, 3 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான் - INNER MAN WILL CARRY YOUR WORRIES


உள்விதி மனிதன்  

சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 



பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்
INNER MAN WILL CARRY YOUR WORRIES



பிரியமுள்ள மனிதா! ஆதிகாலம் முதல் இந்தக் கணினி யுகம் வரையில், இன்னும் நீ மாறப்போகும் சூழ்நிலை, அந்தந்த சமயத்தில் உனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் மிகவும் எளியமுறையில் உலகத்தில் எங்கேயாவது மூலைமுடுக்குகிலிருந்து இந்த உள்விதி மனிதனை உடைய ஒருவனால் அல்லது ஒரு சிலரின் முயற்சியால் உனக்குத் தவறாது கொடுத்துக்கொண்டு வருகிறேன். உனது உயிர் ஓட்டத்திற்குப் பயன் தராததை நான் பெரும்பாலும் உனக்கு எளிதாகத் தெரியாதவாறு ரகசியமாக புதைத்தோ அல்லது மறைத்தோ வைத்திருக்கிறேன். எனது நோக்கம் முதலில் உனது அகத்தின் தேவைகளை ஒரு குறையுமில்லாமல் நானாக கொடுத்து பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு புறத்திற்கு தேவையானதை நீயாக உனக்கு தேவைப்படும் நேரத்தில் தேடித்தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்.



என் இனிய மனிதா! உனது உயிர் ஓட்டத்திற்குத் தேவையானவைகள் நீ ஜனித்த பிற்பாடா வந்தவை. இல்லவே இல்லையே. உனது பிறப்பிற்கு முன்னால் உனக்குத் தேவையானவற்றை மிகக் கவனமாக திட்டமிட்டு எல்லா நேரத்திலும் எல்லாக் காலத்திலும் எனது மனித படைப்பின் பெருமையைக் குறைக்காத வண்ணம் இந்த உலகில் நீ எல்லாவற்றையும் அனுபவிக்கும் வண்ணமே எற்படுத்தியவை. உணவும் அதற்குத் தேவையான மலை, காற்று, சூரிய ஒளி , நிலம், ஆகாயம் எல்லோருக்கும் எளிதாக கிட்டத்தட்ட சமமாக கிடைக்கும் வண்ணம் அதே சமயத்தில் மனித சக்திக்கு அடங்காதவாறு  மிகவும் உதவியாக  படைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் யாருக்கும் அடிமையாகாத வண்ணமும் கூட.



பெருமை கொண்ட மனிதா! இவ்வளவு ஏன்? பெண்ணிற்கு மார்பில் இரு தனங்களை அவளுள்ளே ஒரு ஜீவன் வளர்வதற்கு முன்னமே ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் வளர்த்து, குழந்தை பிறந்தவுடன் அதிலிருந்து சத்தானப் பாலை சுரக்கச் செய்து குழந்தையான உனக்குப் பசி தெரியாதவாறு சரியான நேரத்தில் திட்டமிட்டுச் செய்துள்ளேன். அதை இந்த உள்விதி மனிதனைத் தவிர வேறு யாரால் செய்யமுடியும்?     



சக்தி மனிதா! ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள். தங்கம், வைரம் போன்றவைகளை அதிகமாகவும், எளிதாகவும் கொடுத்து, உணவு வகையறாக்களை உனக்குத் தெரியாதவாறு நான் புதைத்து வைத்திருந்தால்  உனது வாழ்க்கை என்னாவது? எனது ஜீவ ஓட்டத்திற்குச் சக்தி ஏது? இதிலிருந்து உனது ஜீவ விருத்தி மற்றும் படைப்பின் பெருமையை அறிகிறாயா? அப்படி செய்யாதற்கு என்ன காரணம் இப்போது புரிகின்றதா? அவைகளெல்லாம் பொக்கிஷம் அல்ல. ஒருவகையில் அதுவும் விஷம் தான். அவைகள் அரிதாக கிடைப்பதினால் அவைகளுக்கு மதிப்பு அதிகம் என்று நினைக்காதே! அவைகளை நீ வெளியே கொண்டுவந்து உன்னால் மதிப்பு தரப்பட்டது. அவைகள் நீ உயிர் வாழ்வதற்கு கொஞ்சம் கூட பிரயோசனம் இல்லாதது. இப்போது உனது ஆன்ம ஓட்டம் மற்றும் அது தரும் உணவின் மகத்துவம் புரிந்துகொள். எனது நல்ல எண்ணங்களை அறிந்து கொள்.



பெருமை மிக்க மனிதா! யார் ஒருவர் உனது ஜீவ ஓட்டத்திற்குத்  துணையாக சுத்தமான உணவுக்கு வழிவகை செய்து இந்த உலகை செழிக்க வைக்கிறார்களோ அவர்களே நாங்கள். இந்த உள்விதி மனிதன் ! மனிதா! தன்னால் செய்ய முடியாத சில செயல்கள் பிறர் செய்யும்போதும், அதைப் பற்றிச் சொல்லும்போதும் மிகவும் பரவசப்பட்டு அவர்களிடம் உனது உடமைகளை இனாமாகக் கொடுத்து இழக்கவும் செய்கிறாய். அவர்களே உன் வாழ்வுக்கு அடைக்கலம் தருபவர் என்று எண்ணுகிறாய். அவர்கள் போலிகள். அவர்களை ஒரு போதும் நம்பாதே!



மேன்மை குணமுள்ள மனிதா! எல்லோருக்கும் எல்லாவகையான ஆற்றலை இந்த உள்விதி மனிதனால் படைக்கப் பெற்றிருக்கிறார்கள். உனக்குள் ஏராளமான பொக்கிஷப் புதையல்கள் இருக்கின்றன. யார் எதைத் தேடுகிறார்கள்? யாருக்கு எது விருப்போமோ அவைகளையெல்லாம் கடின உழைப்பு, முயற்சி கொண்டுத் தேடி அவர்கள் அடைகிறார்கள்! உன்னால் செய்ய முடிந்ததை ஒருவேளை பிறரால் செய்ய முடியாது. மற்றவர்களால் செய்ய முடிந்ததை ஒருவேளை உன்னால் செய்ய முடியாது. ஆனால் எல்லாமே ஒருவரால் செய்ய இயலாது. அவ்வளவு ஆற்றல் இந்த உலகில் யாருக்கும் இல்லை.



மகிழ்ச்சி கொண்ட மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு உனக்குத் தேவையாவற்றை செய்யவைக்கிறேன். அதுமட்டுமா? உனது குழந்தை குட்டிகளுக்கு தேவையானவை, குடும்பத்திற்குத் தேவையானவை, உனது வாழ்க்கை சந்தோஷத்திற்கு எது தேவையோ அதைச்  செய்ய வைக்கிறேன். மனிதா! வருங்காலத்தில் மனிதனின் பேராசையினால் ஒரு குறிப்பிட்ட தலைகளுக்குக் கீழ் இந்த உலகம் இயங்கும். அப்போது அவர்கள் 'இந்த உலகத்தில் எங்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் யாருமில்லை ' என்று கொக்கரிப்பார்கள். 'கடவுளை அதாவது இந்த உள்விதி மனிதனை மதிக்காமல் பல இழி செயல்களைச் செய்வார்கள். எல்லோரும் தங்களுக்கு அடிமைகள் என்பது போல நடந்து கொள்வார்கள். 

பெருமை கொண்ட மனிதா ! நீ என்ன தான் தலைகீழாக நடந்தாலும் உன்னால் ஒரு சில செயல்கள் தான் செய்ய முடியும். உன்னால் தூக்க முடிகின்றளவிற்குத்  தான் பாரம் தூக்க முடியும். அளவுக்கு மிஞ்சிய பாரத்தை தூக்க நினைத்தால் அல்லது அனுபவிக்க நினைத்தால் உன் கதி என்னவாகுமென்று உணர்ந்து கொள். அளவுக்கு அதிகமான சொத்துக்கள், பொருட்கள் இருப்பவர்களிடத்தில் எப்படி அந்த அளவு பொருட்கள் சேர்ந்தது? உன்னைப் போல பலரும் அவர்களிடத்தில் ஏமாந்ததால்! ஆரம்பத்தில் எல்லோருக்கும் கொடுத்த சம பங்கை அவர்கள் பலவிதத்தில் உனக்கு ஆசை காட்டி அபகரித்துக் கொண்டவர்கள். இனிமேலாவது உனது பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள் ! என்று எச்சரிக்கவே உனக்குள் உள் மனிதனாக வந்துள்ளேன்.



சக்தி கொண்ட மனிதா  ! நீ எப்போதும் விழித்துக் கொள்ளாமல் இந்த உள்விதி மனிதனை பலவிதத்தில் கஷ்டப் படுத்துகிறாய்! என்னால் உனக்கு உதவி செய்ய முடியாதபடி உனது வீணான எண்ணங்கள் தீயசெயலில் ஈடுபடுகின்றது. முடிவில் அளவில்லா துன்பத்தைச் சந்தித்து மகிழ்ச்சியை இழக்கிறாய்! உன் பொருட்களை உனக்காகவும், உனது சந்ததியினருக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யாமல் என்னைப் பலவழியில் அவமதித்து பேராசை மற்றும் சுயநலத்திற்காக தகாத செயல்களைச் செய்கின்றாய். நீ அவ்வாறு செய்யாமல் நீ இழந்ததை மீட்டு உன்னிடத்தில் கொடுத்து உனது குடும்பவாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். 

ஆற்றல் கொண்ட மனிதா! என்னை மதி! உன் வாழ்வு செழிக்கும். மனிதா! அனைத்தும் இழந்த பிறகு தான் என்னை உணருகிறாய்! உனது தீய செயலைப் பற்றி கவலைகொள்கிறாய் ! உன்னை மன்னிக்குமாறு என்னிடம் மன்றாடுகிறாய்! மனிதா! நான் உனது தீய செயலுக்கு மன்னிக்கத் தயார்! ஆனால் உன் செய்கையால் பாதித்தவர்களை யார் இரட்சிப்பார்கள்! நீ செய்த தீய செயலுக்குப் பிராயச்சித்தமாக அவர்களுக்கு இன்றிலிருந்து நல்ல, நன்மை தரும் செயலைச் செய்து நீ செய்த பாவத்தை கழுவிக்கொள்! உனக்கு வரப்போகும் பெரும் தண்டனையிலிருந்து காத்துக் கொள்..!



உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...


Friday, 30 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 34 என்னை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! LOVE IS ENOUGH

உள்விதி மனிதன்  
சமமனிதக்  கொள்கை  
பாகம்: 34 உள்விதி மனிதனை வெளியில் தேடாதே! பொருள் கொடுத்து ஏமாறாதே! 
அன்பு மட்டுமே போதுமானது!    
LOVE IS ENOUGH!


பாசமுள்ள மனிதா! உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லா சொந்தங்களையும், பந்தங்களையும் துறந்தால் தான் உனக்குப் பிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்கிற எண்ணத்தை இனிமேல் மாற்றிக்கொள். ஏழை, பணக்காரன், இருப்பவன் , இல்லாதவன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று நீ இரக்கமில்லாமல் பாகுபாடு கொண்டு வகுத்து இருப்பதைப் போல 'முக்திக்கு தகுந்தவன், தகுதி இல்லாதவன்' என்பது எனது அதிகாரத்தில் இல்லை. மனித பிறந்த யாராக இருந்தாலும் தன்  கடமை தவறாது நேர்மையாக நடக்கும் எவருக்குமே முக்தி பதவி அளிப்பேன். தூய்மையான அவனது ஜீவ ஓட்டத்தில் கலந்து அதற்கு ஒத்துழைப்பேன். மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பலவிதத்தில் வடிவமைத்தாய். தினமும் பூஜிக்கிறாய். ஆனால் உனது சுயநலத்திற்காக, நீ அனுபவிப்பதற்காக என்னைக் குஷி படுத்துவதாகச் சொல்லி தினமும் என்னை அலங்கரிக்கின்றாய்! தங்கம் மற்றும் வைரத்தால் ஆபரணங்கள் செய்து அணிவிக்கின்றாய். வித விதமான படையல்களைப் படைக்கிறாய். மக்களுக்கு அர்த்தம் தெரியாத மந்திரங்களால் அர்ச்சனை செய்கின்றாய்!



இனிய மனிதா! ஓரிடத்தில் இவைகளெல்லாம் பிரமாண்டமாக செய்கின்றாய். ஆனால் அதேபோல இருக்கும் வேறொரு இடத்தில் என்னை கேட்பாரற்று கிடக்கச் செய்கிறாய். ஏன் இந்த பாகுபாடு? அதனால் எனக்கென்ன லாபம்? என்னை உணர இலவசமாய் கிடைக்கும் அன்பு ஒன்றே போதுமானது. அன்பு ஒன்றே என்னைச் சேர்ந்தது. அன்பு ஒன்றுக்குத் தான் நான் கட்டுப்படுவேன். எனது ஆன்ம ஓட்டத்திற்கு துணையாய் இருப்பது. வேறு எது இருந்தாலும் அது இந்த உள்விதி  மனிதனின் பேரைச்சொல்லி உன்னை ஏமாற்றும் செயல் தான். அந்தப்  பகட்டு வலையில் அகப்பட்டு உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே ! பணம் படைத்தவர்கள் அவைகள் செய்யட்டும். நீ வேடிக்கை பார். அன்பு மனம் கொண்ட உனக்கு அது தேவையில்லை. அன்புக்கு இணை எத்தனை கோடி செல்வங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. அதை எப்போதும் நினைவு கொள்.

பாசமுள்ள மனிதா! உனது தூய்மையான அன்புடன் உறவுகளைப்  புதுப்பித்துக்கொள். உன்னைப் பலவழிகளில் காக்க, உதவி புரியவே அவைகளை உணர்வோடு கலக்கச் செய்திருக்கிறேன். அந்த உணர்வு உள்விதி மனிதன் தான்! எனது ஜீவ ஓட்டம் தான். அதற்காகவே உனக்கு தாய், தந்தை, மனைவி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று பலவாறு சொந்தங்களையும், இரத்த சம்பந்தங்களையும் படைத்ததன் ரகசியம் உனது அன்பை அவர்களிடத்தில் காட்டி அன்பு உணர்வை பெருக்குவதற்காகவே !

சாந்தமுள்ள மனிதா! நீ சந்தோஷமாக இருப்பதற்காக எனது படைப்புகளை அனுபவிக்க என்னென்ன செயல்கள் நான் செய்திருக்கிறேன். அதற்கு பிரதிபலனாக உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். அது தான் சத்தியமான அன்பு ஒன்றே. அதற்காக நீ எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பேன். மனிதா! காலம் காலமாக இந்த உள்விதி  மனிதன் உனக்குள் இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டிப்படைக்கிறேன். அந்த நாடகத்தில் என்னைப் பற்றி எதை எதையோ அவர்கள் இஷ்டப்படி சிலர் கதை கட்டி உண்மையை மறைத்து தங்களுக்குச் சாதகமானவற்றைப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உலகத்தைப் படைத்த எனக்கு ஏதாவது தேவைப்படுமா என்பதை நினைத்துப் பார்! அதை உனக்கு தெளிவு படுத்தவே நான் இப்போது வந்துள்ளேன்.

பேராற்றல் கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனை எல்லோரும் புகழந்து பேசவேண்டும், பாடவேண்டும், ஆடவேண்டும் என்பது மட்டும் அல்ல. அவ்வாறு செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைவிட நான் விரும்புவது உனது செயல்கள் ஒவ்வொன்றும் இந்த உலகில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியூட்டி செழுமையுடன் வாழவைக்க வேண்டுமென்பதே எனது ஆசை. வீண் பேச்சுகளை பேசிக்கொண்டிருக்காமல்  நல்ல எண்ணகளுடன் ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய். அதைத் தான் இந்த உள்விதி மனிதன் உன்னிடத்தில் காலம் காலமாக எதிர்ப்பார்க்கிறான்.

என்னை நம்பும் மனிதா! உன்னுள் இருக்கும் ஆன்ம ஓட்டத்தில் எப்போதும் நல்ல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கட்டும். உன்னைச் சார்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அன்புடன் நேசி. உலக மக்களை நேசித்தாலே என்னை நேசிப்பதற்குச் சமமாகும். மனிதா! நான் உனக்குள் எப்படியிருக்கிறேன் என்று உனக்கு ஓரளவு தெரிந்திருக்கும். என்னை கண்களுக்குத் தெரியாத காற்றாக நினைத்தாலும் சரி, உள்ளுக்குள் பரவியிருக்கும் உணர்வாக மதித்தாலும் சரி அல்லது ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகளாக நினைத்தாலும் சரி அல்லது மிகமிகக் குறைந்த உயிர்மின்னோட்டத்தால் இயங்கும் இயந்திர மனிதனாக நினைத்தாலும் சரி அவைகளெல்லாம் உன்னையன்றி வேறு யாராலும் காட்ட முடியாது.

சக்தியுள்ள மனிதா! நான் உனக்குள் உன் கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் உன் அனுமதி பெற்று உனக்குள் ஜீவ வித்தாக (விதையாக) உனக்கு ஆன்ம ஓட்டம் கொடுத்து உன் உடலின் பாரம் தெரியாமல் உன்னைச் சுமந்தும் ,  நான் உன்னைத் தாங்கி கொண்டிருப்பதை இப்போது உணர்கிறாயா! இந்த உள்விதி மனிதனைக் காற்றாக நீ நினைத்துக் கொண்டால், அந்தக் காற்றைக் கொண்டு  உன் உடல் பாரம் உனக்குத் தெரியாதவாறு உன் பெரிய உடல் எடையை எவ்வாறு தாங்குகின்றேன்? என்று எண்ணிப் பார்த்தாயா? அந்த நன்றி உன்னிடத்தில் இருக்கின்றதா! அப்படியென்றால் என் பராக்கிரமத்தை, ஆற்றலை உணர்கிறாயா! ஒரு பேச்சுக்காக உன் எடையளவில் பாதி பாரத்தை ஒரு நாளோ அல்லது ஒரு மணிநேரம் சுமந்து பாரேன். நீ எவ்வளவு நிமிடம்? எவ்வளவு மணிநேரம்? சுமக்கிறாய் என்று பார்ப்போம்.



திறமை கொண்ட மனிதா! உன்னைக் காக்க இந்த உள்விதி மனிதன் உன்னைச் சுற்றி இரத்த ஓட்டமாக, மன ஓட்டமாக, ஆன்ம ஓட்டமாக வலம் வருவதோடு மட்டுமில்லாமல் நீ இடும் கட்டளைகளைப் பணிந்து ஒரு அடிமைபோலல்லவா செய்து வருகிறேன். மனிதா! எனது இந்தச்  செயலால் என்னை நீ அடிமை என்று நினைத்து, அலட்சியப்படுத்தி தீய காரியங்களைச் செய்ய நினைத்தால் உனக்குள் இருக்கும் என் மூச்சு காற்று 'சூறாவளியாக' மாறி உன்னைச் சின்னா பின்னமாக்கி அழித்துவிடுவேன். ஆனால் அதுவே அனைவருக்கும் நன்மைதரும் நல்ல செயலாக இருந்தால் இந்தக் காற்று உனக்குத் தென்றலாய், குளிர்ச்சியாய், இனிமையாய் எப்போதும் இருக்கும்.



அன்பு மனிதா! இந்த உலகில் உள்ள படைப்புகள், பொக்கிஷங்கள், உயிரினங்கள், மரம், செடி, கொடி  மற்றும் பல அற்புதங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றாயே  அவைகளெல்லாம் எனது ஒரு கைபிடி அளவே ஆகும். இன்னும் ஏராளமான அதிசயங்கள் கொடுக்கப்போகிறேன் உனது வாயிலாக! உன்னை காக்கும் விதமாக எப்போது எது தேவையோ அவைகளை உன்னைக்கொண்டே தந்து கொண்டிருக்கிறேன்.

பிரிய மனிதா! இப்போது நீ உபயோகிக்கும் மூளையின் அளவு ஒரு குண்டூசி முனையளவு மட்டுமே! இன்னும் அதிகம் அதிகம் உபயோகிக்க வேண்டிய நேரம் வரும்போது இந்த உள்விதி மனிதனின் அளவில்லா ஆற்றல் தெரியவரும். மனிதா! சரித்திரத்தை புரட்டிப் பார்! நீ இருக்கும் நாட்டில் இதற்கு முன் எப்படி இருந்தது தெரியுமா? எப்போதும் சண்டை , சச்சரவுகள் தான் இருந்தது. மக்களுக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை, தினம், தினம் செத்து பிழைக்கும் ஜீவனம். அதற்குக் காரணம் சுயநலம், பேராசை. இப்போது சண்டை சச்சரவுகள் வெகுவாக இல்லாமல் ஓரளவிற்கு குறைந்து விட்டது. அதற்கு காரணம் இந்த உள்விதி மனிதன் உனக்குள் இருந்துகொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்து நல்ல செயல்கள் செய்து வருவதால் தான். ஆனால் தனிப்பட்டவர்களின் சுயநலத்திற்காக உன்னைப் போன்றோர் என்ன செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டு வருகிறார்கள்.

பெருமை கொண்ட மனிதா! இந்த உள்விதி மனிதனின் அடுத்த இலக்கு, பேராசை மற்றும் சுயநலக்காரர்களை அவர்கள் செய்த தீய செயல்களை மன்னித்து, நன்மை தரும் செயல்களைச் செய்ய வைத்து உன்னைப் போன்றோர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி வாழ்க்கை வாழவைப்பதற்கு உதவி செய்யவே உன் முன் நிற்கிறேன். இனிமேல் போர்கள், கலவரங்களை மேலும் குறைக்க அனைத்து உயிரினங்களில் நான் இருப்பதை தெரியப்படுத்தியும், எனது மகிழ்ச்சி தரும் நோக்கத்தை உணர்த்தி உலகத்திற்கு வரப்போகும் பேரழிவிலிருந்து காப்பதற்கு உறுதிகொண்டுள்ளேன். இதைப்  பறைசாற்றுவதின் மூலம் உலகத்தில் மூலைமுடுக்கில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன். பறை சாற்றவும் ஆரம்பித்துவிட்டேன். உனக்குக் கேட்கின்றதா?



இரக்கமுள்ள மனிதா! இனிமேல் என்னைப் பற்றிய ரகசியங்களை உன்னின் மூலமாகச் சாதரணமாக மனிதனுக்கும் தெரியப்படுத்தி, அவனுள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றியச் சிந்தனைகளை வளர்த்து நான் படைத்த இந்த உலகில் அவனுக்குச் சேரவேண்டிய பங்குகளை வாங்கிக்கொடுத்து என்றும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி நல்வாழ்வு தரப்போகிறேன். வெகுவிரைவில் இந்த உள்விதி மனிதனின் சக்தி எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. எனது கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது.

மேன்மை தங்கிய மனிதா! இதுவரை மனிதனை நல்வழிப் படுத்தும் வழிகளையும், அதன் கலைகளையும் தான் சொல்லிவந்துள்ளேன். ஆனால் உனக்கு உன்னை மற்றவர்களிடமிருந்து காத்துக்கொள்ளும் கலையை கற்றுத்தரப் போகிறேன். மனிதா! நீ மட்டும் தர்மவானாக இருந்தால் போதாது. மற்றவர்களும் தர்மவானாக இருந்தால் உலகில் எப்போதும் யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒருவேளை நீ அதர்மவானை எதிர்கொண்டால் உனது தர்மசிந்தனை அவனிடத்தில் செல்லுபடியாகாது. ஆகவே அவனுக்குத் தர்ம பாடம் புகட்டவே உனக்கு என் அனைத்து சக்திகளையும் கொடுத்து எதையும் சந்திக்கும் பராக்கிரமசாலியாக மாற்றி அனைவரையும் காக்கும் வீரனாக்கப்  போகிறேன். இனிமேல் எல்லோர் வாழ்விலும் வளர்பிறை தான்.



பண்புள்ள மனிதா! ஒரு காலத்தில் மனிதனை மனிதன் தீண்டத் தகாதவனாக இருந்தபோது நான் மட்டும் அனைவரிடத்தில் சமமாக எனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்தை உனக்குத் தடையீல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனே அது எதற்காக..?? மனிதா! நான் சுத்தத்தை விரும்புகிறவன் தான். புற சுத்தத்தை விட அக சுத்தம்  தான் எனக்கு பிரியம். நீ செய்ய நினைக்கும் தீய செயல்களை அழித்து நான் தேடும், நான் விரும்பும் நல்ல மனோபாவத்துடன் உன் வாழ்வு அமைய வேண்டும் என்பதே எனது தீராத ஆசை. மனிதா ! என்னைக் கண்டு நீ பயம் கொள்ளத் தேவையில்லை. எனக்கு பொருள் வேண்டாம். உனது அன்பு ஒன்றே உன்னிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அனைவர்களிடத்தில் எதிர்ப்பார்ப்பது அதுவே!



இனிமேலும் பணம் கொடுத்து ஏமாறாதே!
அன்பு மட்டும் கொடுத்து உள்விதி மனிதனைக்  
கை கொள் !