Pages

Monday, 10 December 2012

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு - BLACK MONEY - FULL OF JOKES

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு 



BLACK MONEY - FULL OF JOKES 





" இருந்தாலும் நம்ம தலைவரு 
இந்த மாதிரி தேர்தல் வாக்குறுதி 
கொடுத்திருக்கக் கூடாது "

"அப்படி என்னங்க சொல்லிட்டாரு "

" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு 
முழுவதும் 'சுவிஸ் ' வங்கி கிளைகளை 
திறக்கச் செய்வேன் என்கிறார் "

" ???  ...  ????   " 
*************************************************



"நம்ம தலைவரோட கேள்விக்கு 
யாராலேயும் பதில் சொல்ல முடியலே!"

"அப்படியா?"

"பின்னே, கறுப்பு மனிதர்களை ஆதரிக்கும் 
அரசாங்கம் ஏன் கறுப்பு பணத்தை 
ஆதரிக்கவில்லை?"

"??? ......??? .... ????"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++



"நம்ம தலைவரு இந்த மாதிரி கோரிக்கையை 
வைத்திருக்கக் கூடாது "

" அப்படி என்ன கோரிக்கையோ? "

"கலர் கலரா பணத்தை அச்சிடும் ரிசர்வு வங்கி 
கறுப்பு பணத்தையும் அச்சடிக்க வேண்டும் 
என்று அடம்பிடிக்கிறார்!"

==============================================



"இருந்தாலும் பட்டிமன்றத்திற்கு 
இந்த மாதிரி தலைப்பு கொடுத்திருக்கக் கூடாது?"

"என்னங்க அந்த தலைப்பு?"

"மக்கள் விரும்புவது கறுப்பு பணமா?
வெள்ளை பணமா?"

#####################################################



" என்கிட்டே கறுப்பு பணம் இருக்கிறது 
என் பையனுக்கு தெரிஞ்சு போச்சு "

"அதுக்கென்னங்க!"

" கறுப்பு போயி எல்லாரும்  'கலர் சினிமா, 
கலர் டி.வி , கலர் போன்' னு மாறிட்டாங்க , இந்த 
கறுப்பு பணத்தை தூக்கி எறிங்க ன்னு சொல்றான்! "

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 
ஏழைகளும் 'சுவிஸ் ' வங்கியில் கணக்கை 
தொடங்க ஏற்பாடு செய்வேன்!"

"???? ....????  >>> ?????" 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



"அந்த 'பேங்க் கேசியர்' ரொம்ப மோசம் "

" எதனாலே அப்படி சொல்றீங்க ?"

" என்னோட 'செக்' கு கறுப்பு பணமா கேட்டேன் 
அது தராம வழக்கமா கொடுக்கிற நோட்டை 
கொடுக்கிறார்!"

********************************************************



"நம்ம தலைவருக்கு விவரம் பத்தாது "

"எதனாலே ?"

"எவனோ ஒருவன் நல்ல நோட்டை வாங்கிட்டு 
கறுப்பு காகிதத்தை 'கறுப்பு பணம்' ன்னு சொல்லி, ஒரு 
வாரம் கழித்து அது வெள்ளை பணமா மாறிடும் என்பதை
அப்படியே நம்பி ஏமாந்துட்டார் ! "

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



" போலீஸ் வருது 'பிளாக் மணியை' ஒளிச்சு வை ன்னு 
சொன்னேயா ?"

"ஐயா! என்னோட நாய் பேரு 'கறுப்பு மணி ' செல்லமா 
'பிளாக் மணி' ன்னு கூப்பிடுவோம். அதுக்கு போலீஸ் 
டிரஸ் பார்த்தா ரொம்ப அலர்ஜி, உடனே கடிச்சு கொதறிடும்! !
 அதனாலே அப்படி சொன்னேன்! "

(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



"நம்ம தலைவரு கேட்ட சின்னத்தை தரமாட்டேன்னு 
சொல்லிட்டாங்கலாமே , என்ன சின்னம் தான் கேட்டாரு?"

"'கறுப்பு பணம் ' சின்னம் தான் "

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////



" தலைவருக்கு என்ன கலரு பிடிக்கும் "

" கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ்வளவு 
ஏன் ? வெள்ளை பணம் வாங்கவே மாட்டேன். ஆனா 
'கறுப்பு பண்ம்' ன்னா உடனே வாங்கிடுவேன்!"

??????????????????????????????????????????????????????????????????



"ஐயா! கறுப்பு பணம் ன்னா என்னாங்கையா?

" தெரிஞ்சு வச்சிருந்தா 'வெள்ளை பணம் ' தெரியாம 
வச்சிருந்தா 'கறுப்பு பணம் ' "

" ஐயா! என்கிட்டேயும் 'கறுப்பு பணம் பத்து ரூபா '
இருக்கு ! இது யாருக்கும் தெரியாது?"

" ?.......? ..........?   ......?"

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



" எதிர் கட்சிங்க 'கறுப்பு பணம் ' வைத்திருப்போர் 
பட்டியல் வெளியிடாம இருக்கிறதுக்கு நம்ம தலைவரு
எப்படி சமாளிச்சார்? "

" முதலில் 'வெள்ளை பணம்' வைச்சிருப்போர் பட்டியல் 
தயாராகட்டும் . அதன் பிறகு அதை பார்ப்போம் ன்னு 
கறாரா சொல்லிட்டார்!"

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



Friday, 7 December 2012

பணப்பெட்டி அரசியல் கொள்கை CURRENCY POLITICS POLICY புதுக்கவிதை

பணப்பெட்டி அரசியல் கொள்கை 
CURRENCY POLITICS POLICY 
புதுக்கவிதை 



காற்றில் பறக்கின்றன 
கட்சிக் கொடிகள் மட்டுமல்ல 
அவர்களின் 
வாக்குறுதிகளும் 
கொள்கைகளும்.



பாம்பு படமெடுத்தால் 
படையும் நடுங்கும் 
பணப்பெட்டி திறந்து காட்டினால் 
கொள்கைகளும் மயங்கும்.

மக்கள் போடுவது ஓட்டு 
அவர்கள் வைப்பதோ வாழ்வில் வேட்டு 
பணப்பெட்டி மாறியதால் 
சவப்பெட்டியிலும் ஊழல்.



லஞ்சம் ஊழல் தெரியாமல் செய்வார் 
தெரிந்துவிட்டால் நிரூபி என்பார் 
நிரூபித்தால் வழக்கை 
சந்திக்க தயார் என்பார்.

விசாரணை குழு அமைப்பர் 
விசாரணை கமிஷன் உருவாக்குவர் 
வழக்குகள் போடுவார் 
வாய்தா வாய்தா கேட்டே 
வழக்குகளுக்கு வயதாகி விடும் அவலம் 
வெள்ளிவிழா பொன்விழா 
கொண்டாடும் வழக்குகளும் உண்டு.



வேட்பாளர்கள் 
பொதுதரிசனம் கொடுத்தவர்கள் 
சிறப்பு தரிசனம் மட்டுமே கொடுப்பார்கள் 
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு.

குடிகாரன் பேச்சு 
விடிஞ்சாலே போச்சு 
மேடைக்கரர்கள் பேச்சு 
இறங்கினாலே போச்சு.



தேர்தலில் நிற்கும்போது ஒரு பேச்சு 
ஜெயித்த பிறகு ஒரு பேச்சு 
பதவிக்காக ஒரு பேச்சு 
ஆட்சியில் அமர ஒரு பேச்சு 
அவர்களுக்குத் தெரிந்த ஒரே பேச்சு 
ஏழை நடுத்தர மக்களை 
ஏமாற்றும் பேச்சு.
அதன் மூலம் பணம் 
சம்பாதிப்பதே உயிர் மூச்சு.



ஐந்தாண்டு பதவிக்கு 
ஆளாய் பறப்பார்கள்.
படிப்பறிவு பட்டம் வேண்டாம் 
பணப்பெட்டி ஒன்றே போதும் 
பதவி பெறுவதற்கு!
ஆண்டியாய் இருந்தவனும் 
அரசனாய் மாறுவான்
தலைவரின் பார்வை விழும்போது.



ஆயுள் முழுவதும் 
ஏமாறுவதற்கு 
மக்கள் தரும் உத்திரவாதம் 
ஐந்தாண்டுக்கு ஒரு முறை 
போடும் ஓட்டு மட்டுமே!



நூறு கோடி மக்களின் 
தலைஎழுத்தை 
முன்னூறு பேர்கள் 
நிர்ணயிக்கும் கூத்து.



தலைவரின் சொல்லை 
தட்டாமல் செய்பவன் 
பிசகாமல் தலையாட்டுபவன் 
தவறாமல் குடை பிடிப்பவனுக்கு 
தலை சிறந்த உயர் பதவி.
இதற்கு பட்டம் அறிவு வேண்டுமா?



தவறாமல் ஓட்டு போட வேண்டுமாம் 
நேர்மை தவறி நடப்பவர்களுக்கு.
அடிதடி சண்டைகள் அரங்கேறும் 
கூச்சல் குழப்பங்கள் தொடரும் 
பள்ளியில் அல்ல 
சட்டமன்றத்தில் 
பாராளுமன்றத்தில் 
அவர்கள் மேல் தவறில்லை 
பாதி தவறு தலைவரின் மேல் 
மீதி பாதி மக்களின் மேல்.
பள்ளிக்கூடம் சென்றிருந்தால் 
ஒழுக்கம் அமைதி தெரிந்திருக்கும்.



சட்டங்கள் எல்லாம் 
சாதாரண குடிமக்களுக்கு.
அரசியல் பதவி 
செல்வாகுள்ளவர்களுக்கு 
விதி விளக்கு.



ஏழை பங்காளன் என்பான் 
விலைவாசியை குறைப்பேன் 
அதைச் செய்வேன் 
இதைச் செய்வேன் என்பான் 
வாய்ஜாலம் காட்டி 
மக்களை மயக்குவார்.



ஆயிரம் போதாதென்பார் 
லட்சத்தை துச்சமாக மதிப்பர் 
கோடியை நோக்கி ஓடுவர் 
கோடான கோடிக்கு குறிவைப்பார்.

காகிதத்தின் தன்மை 
இரும்புக்குத் தெரியுமா?
ஏழையின் கஷ்டம் 
அரசியல்வாதிகளுக்குத் தெரியுமா?



விலைவாசி நெருப்பு 
லஞ்சம் ஊழல் வேள்வியில் 
பொசுங்குவது காகிதம் மட்டுமே 
இரும்பல்லவே.



மக்கள் குடித்துக் கெட்டாலும் 
பரவாயில்லை 
புகை பிடித்து அழிந்தாலும் 
பரவாயில்லை 
பசியால் வாடி செத்தாலும் 
பரவாயில்லை 
உயிருள்ளவரை பதவி சுகம் 
வேண்டுமாம்.



சொகுசாய் பதவித் தேரில் 
பவனி வர 
மக்களை மாடாய் மதிப்பர்.
போதாதற்கு சுமை சுமத்துவர் 
வரிச்சுமை விலைவாசி சுமை 
வருடம் முழுவது மாறி மாறி.

கோடிக்கணக்கில் ஊழல் 
செய்தவர்களுக்கு நீதிமன்றத்தில் 
சிவப்பு கம்பள வரவேற்ப்பு. 

ஆயிரம் ஐநூறு 
லஞ்சம் பெற்றவர்களுக்கோ 
உடனே தண்டனை.

அனைவருக்கும் 
திருப்தி செய்ய முடியாது தான்!



அரசாங்கம் கொடுக்கும் 
இரு கைகள் நிறைய சம்பளம் போதாதா?
லஞ்சம் தடுக்க முடியாதா?
ஊழலை ஒழிக்க முடியாதா?
கடமையைச் செய்ய இயலாதா?
சட்டத்தை மதிக்க முடியாதா?
நேர்மையாக கடைபிடிக்க இயலாதா!
சத்தியத்தை தவறாமல் இருக்க முடியாதா?
மக்களுக்காக ஆட்சி கிடையாதா?

மக்கள் வாழ்வு மலர 
மக்கள் ஏக்கம் தடுக்க 
மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க 
என்று விடிவுக்கு வரும் 
பணப்பெட்டி கலாச்சாரம்.





Monday, 3 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான் - INNER MAN WILL CARRY YOUR WORRIES


உள்விதி மனிதன்  

சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 



பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்
INNER MAN WILL CARRY YOUR WORRIES



பிரியமுள்ள மனிதா! ஆதிகாலம் முதல் இந்தக் கணினி யுகம் வரையில், இன்னும் நீ மாறப்போகும் சூழ்நிலை, அந்தந்த சமயத்தில் உனது ஜீவ மற்றும் ஆன்ம ஓட்டத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் மிகவும் எளியமுறையில் உலகத்தில் எங்கேயாவது மூலைமுடுக்குகிலிருந்து இந்த உள்விதி மனிதனை உடைய ஒருவனால் அல்லது ஒரு சிலரின் முயற்சியால் உனக்குத் தவறாது கொடுத்துக்கொண்டு வருகிறேன். உனது உயிர் ஓட்டத்திற்குப் பயன் தராததை நான் பெரும்பாலும் உனக்கு எளிதாகத் தெரியாதவாறு ரகசியமாக புதைத்தோ அல்லது மறைத்தோ வைத்திருக்கிறேன். எனது நோக்கம் முதலில் உனது அகத்தின் தேவைகளை ஒரு குறையுமில்லாமல் நானாக கொடுத்து பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு புறத்திற்கு தேவையானதை நீயாக உனக்கு தேவைப்படும் நேரத்தில் தேடித்தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்.



என் இனிய மனிதா! உனது உயிர் ஓட்டத்திற்குத் தேவையானவைகள் நீ ஜனித்த பிற்பாடா வந்தவை. இல்லவே இல்லையே. உனது பிறப்பிற்கு முன்னால் உனக்குத் தேவையானவற்றை மிகக் கவனமாக திட்டமிட்டு எல்லா நேரத்திலும் எல்லாக் காலத்திலும் எனது மனித படைப்பின் பெருமையைக் குறைக்காத வண்ணம் இந்த உலகில் நீ எல்லாவற்றையும் அனுபவிக்கும் வண்ணமே எற்படுத்தியவை. உணவும் அதற்குத் தேவையான மலை, காற்று, சூரிய ஒளி , நிலம், ஆகாயம் எல்லோருக்கும் எளிதாக கிட்டத்தட்ட சமமாக கிடைக்கும் வண்ணம் அதே சமயத்தில் மனித சக்திக்கு அடங்காதவாறு  மிகவும் உதவியாக  படைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் யாருக்கும் அடிமையாகாத வண்ணமும் கூட.



பெருமை கொண்ட மனிதா! இவ்வளவு ஏன்? பெண்ணிற்கு மார்பில் இரு தனங்களை அவளுள்ளே ஒரு ஜீவன் வளர்வதற்கு முன்னமே ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் வளர்த்து, குழந்தை பிறந்தவுடன் அதிலிருந்து சத்தானப் பாலை சுரக்கச் செய்து குழந்தையான உனக்குப் பசி தெரியாதவாறு சரியான நேரத்தில் திட்டமிட்டுச் செய்துள்ளேன். அதை இந்த உள்விதி மனிதனைத் தவிர வேறு யாரால் செய்யமுடியும்?     



சக்தி மனிதா! ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள். தங்கம், வைரம் போன்றவைகளை அதிகமாகவும், எளிதாகவும் கொடுத்து, உணவு வகையறாக்களை உனக்குத் தெரியாதவாறு நான் புதைத்து வைத்திருந்தால்  உனது வாழ்க்கை என்னாவது? எனது ஜீவ ஓட்டத்திற்குச் சக்தி ஏது? இதிலிருந்து உனது ஜீவ விருத்தி மற்றும் படைப்பின் பெருமையை அறிகிறாயா? அப்படி செய்யாதற்கு என்ன காரணம் இப்போது புரிகின்றதா? அவைகளெல்லாம் பொக்கிஷம் அல்ல. ஒருவகையில் அதுவும் விஷம் தான். அவைகள் அரிதாக கிடைப்பதினால் அவைகளுக்கு மதிப்பு அதிகம் என்று நினைக்காதே! அவைகளை நீ வெளியே கொண்டுவந்து உன்னால் மதிப்பு தரப்பட்டது. அவைகள் நீ உயிர் வாழ்வதற்கு கொஞ்சம் கூட பிரயோசனம் இல்லாதது. இப்போது உனது ஆன்ம ஓட்டம் மற்றும் அது தரும் உணவின் மகத்துவம் புரிந்துகொள். எனது நல்ல எண்ணங்களை அறிந்து கொள்.



பெருமை மிக்க மனிதா! யார் ஒருவர் உனது ஜீவ ஓட்டத்திற்குத்  துணையாக சுத்தமான உணவுக்கு வழிவகை செய்து இந்த உலகை செழிக்க வைக்கிறார்களோ அவர்களே நாங்கள். இந்த உள்விதி மனிதன் ! மனிதா! தன்னால் செய்ய முடியாத சில செயல்கள் பிறர் செய்யும்போதும், அதைப் பற்றிச் சொல்லும்போதும் மிகவும் பரவசப்பட்டு அவர்களிடம் உனது உடமைகளை இனாமாகக் கொடுத்து இழக்கவும் செய்கிறாய். அவர்களே உன் வாழ்வுக்கு அடைக்கலம் தருபவர் என்று எண்ணுகிறாய். அவர்கள் போலிகள். அவர்களை ஒரு போதும் நம்பாதே!



மேன்மை குணமுள்ள மனிதா! எல்லோருக்கும் எல்லாவகையான ஆற்றலை இந்த உள்விதி மனிதனால் படைக்கப் பெற்றிருக்கிறார்கள். உனக்குள் ஏராளமான பொக்கிஷப் புதையல்கள் இருக்கின்றன. யார் எதைத் தேடுகிறார்கள்? யாருக்கு எது விருப்போமோ அவைகளையெல்லாம் கடின உழைப்பு, முயற்சி கொண்டுத் தேடி அவர்கள் அடைகிறார்கள்! உன்னால் செய்ய முடிந்ததை ஒருவேளை பிறரால் செய்ய முடியாது. மற்றவர்களால் செய்ய முடிந்ததை ஒருவேளை உன்னால் செய்ய முடியாது. ஆனால் எல்லாமே ஒருவரால் செய்ய இயலாது. அவ்வளவு ஆற்றல் இந்த உலகில் யாருக்கும் இல்லை.



மகிழ்ச்சி கொண்ட மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு உனக்குத் தேவையாவற்றை செய்யவைக்கிறேன். அதுமட்டுமா? உனது குழந்தை குட்டிகளுக்கு தேவையானவை, குடும்பத்திற்குத் தேவையானவை, உனது வாழ்க்கை சந்தோஷத்திற்கு எது தேவையோ அதைச்  செய்ய வைக்கிறேன். மனிதா! வருங்காலத்தில் மனிதனின் பேராசையினால் ஒரு குறிப்பிட்ட தலைகளுக்குக் கீழ் இந்த உலகம் இயங்கும். அப்போது அவர்கள் 'இந்த உலகத்தில் எங்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் யாருமில்லை ' என்று கொக்கரிப்பார்கள். 'கடவுளை அதாவது இந்த உள்விதி மனிதனை மதிக்காமல் பல இழி செயல்களைச் செய்வார்கள். எல்லோரும் தங்களுக்கு அடிமைகள் என்பது போல நடந்து கொள்வார்கள். 

பெருமை கொண்ட மனிதா ! நீ என்ன தான் தலைகீழாக நடந்தாலும் உன்னால் ஒரு சில செயல்கள் தான் செய்ய முடியும். உன்னால் தூக்க முடிகின்றளவிற்குத்  தான் பாரம் தூக்க முடியும். அளவுக்கு மிஞ்சிய பாரத்தை தூக்க நினைத்தால் அல்லது அனுபவிக்க நினைத்தால் உன் கதி என்னவாகுமென்று உணர்ந்து கொள். அளவுக்கு அதிகமான சொத்துக்கள், பொருட்கள் இருப்பவர்களிடத்தில் எப்படி அந்த அளவு பொருட்கள் சேர்ந்தது? உன்னைப் போல பலரும் அவர்களிடத்தில் ஏமாந்ததால்! ஆரம்பத்தில் எல்லோருக்கும் கொடுத்த சம பங்கை அவர்கள் பலவிதத்தில் உனக்கு ஆசை காட்டி அபகரித்துக் கொண்டவர்கள். இனிமேலாவது உனது பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள் ! என்று எச்சரிக்கவே உனக்குள் உள் மனிதனாக வந்துள்ளேன்.



சக்தி கொண்ட மனிதா  ! நீ எப்போதும் விழித்துக் கொள்ளாமல் இந்த உள்விதி மனிதனை பலவிதத்தில் கஷ்டப் படுத்துகிறாய்! என்னால் உனக்கு உதவி செய்ய முடியாதபடி உனது வீணான எண்ணங்கள் தீயசெயலில் ஈடுபடுகின்றது. முடிவில் அளவில்லா துன்பத்தைச் சந்தித்து மகிழ்ச்சியை இழக்கிறாய்! உன் பொருட்களை உனக்காகவும், உனது சந்ததியினருக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யாமல் என்னைப் பலவழியில் அவமதித்து பேராசை மற்றும் சுயநலத்திற்காக தகாத செயல்களைச் செய்கின்றாய். நீ அவ்வாறு செய்யாமல் நீ இழந்ததை மீட்டு உன்னிடத்தில் கொடுத்து உனது குடும்பவாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். 

ஆற்றல் கொண்ட மனிதா! என்னை மதி! உன் வாழ்வு செழிக்கும். மனிதா! அனைத்தும் இழந்த பிறகு தான் என்னை உணருகிறாய்! உனது தீய செயலைப் பற்றி கவலைகொள்கிறாய் ! உன்னை மன்னிக்குமாறு என்னிடம் மன்றாடுகிறாய்! மனிதா! நான் உனது தீய செயலுக்கு மன்னிக்கத் தயார்! ஆனால் உன் செய்கையால் பாதித்தவர்களை யார் இரட்சிப்பார்கள்! நீ செய்த தீய செயலுக்குப் பிராயச்சித்தமாக அவர்களுக்கு இன்றிலிருந்து நல்ல, நன்மை தரும் செயலைச் செய்து நீ செய்த பாவத்தை கழுவிக்கொள்! உனக்கு வரப்போகும் பெரும் தண்டனையிலிருந்து காத்துக் கொள்..!



உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...