Pages

Tuesday, 1 January 2013

உள்விதி மனிதன் பாகம்: 39 நீ தான் பூமி, உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்? YOU THE EARTH, FIND WHO ARE AROUND YOU

உள்விதி மனிதன்
 

பாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்?




YOUR ARE THE EARTH, 
FIND WHO ARE ALL AROUND YOU!

சமமனிதக் கொள்கை



மதுரை கங்காதரன்



என் அன்புக்குரிய மனிதா! இந்த உள்விதி மனிதன் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். இன்றைய நிலவரப்படி உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி பேர். ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறு சிந்தனைகள். வேறு வேறு செயல்கள். வேறு வேறு குணங்கள். வேறு வேறு உருவங்கள். இப்படி  எல்லா விதத்திலும் மாறுபட்ட மனிதர்கள் நிரம்பி இருக்கிறார்கள். இதில் யார் யார் இது வரை என்ன செய்தார்கள்?இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நாளை என்ன செய்யப்போகிறார்கள்? எனபதை எளிதாக ஒருவர் கண்காணிக்க முடியுமா? என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அது முடியாத காரியமாகும். 



என் இனிய மனிதா! உனது கண்களுக்குத் தெரிவது கடல் நீரில் ஒரு சில துளி தான். மக்களுக்கு எது கண்ணுக்குத் தெரிகின்றதோ அவைகளைத் தான் கண்காணிக்க முடியும். அதுவே சில சமயங்களில் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகில் என்ன செய்கிறார்கள்? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது! ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் பெரும்பாலும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது சிந்தித்திக்கொண்டும், ஏதாவது செய்துகொண்டும் தான் இருப்பார்கள். அவர்கள் செய்வது  நல்லதா? தீயதா? என்று கூட தெரியவாய்ப்பில்லை! அவர்களின் செயல்கள் நன்மை தரும் நல்ல செயலாக இருந்தால் நீண்ட காலம் கழித்துத் தான் அவைகள் உலகுக்குத் தெரிகின்றன. அதுவும் ஒரு சில நல்லது மட்டுமே. ஆனால் தீயவை வெகுசீக்கிரத்தில் தெரிந்து விடுகின்றது. உலகத்தில் இப்போதுள்ள நிலைமை இது தான். இப்படி இருக்கும்போது கடவுளால் ஒவ்வொரு மனிதனையும் கண்காணிக்க இயலுமா? அதனால் இந்த உள்விதி  மனிதனை உயிராகப் படைத்து உனக்குள்புகுந்து இருக்கிறேன். 



பெருமையுள்ள மனிதா! பல நாடுகள் கொண்ட இந்த உலகில், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சட்டத்தைக் கொண்டு ஆண்டு வருகின்றார்கள். அதிலும் ஒரு சில நாடுகளில் சட்டம் கடுமையாகவும் நன்றாகவும் வேலை செய்கின்றது. சில  நாடுகளில் சட்டம் இருந்தும் அவைகள் செயலற்று இருக்கின்றது. நாட்டிற்குள்ளும் ஒரு சிலருக்கு நிறைந்த சலுகையும், உரிமையும் கிடைக்கின்றது. சிலருக்கு அதுவே மறுக்கப் படுகின்றது. தீவிரவாதம் சில நாடுகள் ஆதரிக்கின்றன. சில நாடுகள் தடுக்க முயற்சி செய்கின்றன. இப்படி இருக்கும்போது 'மக்கள் சட்டம்' அடிப்படையே உலகம் முழுவதும் சமமாக இல்லாதபோது இந்த உலகம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்று மார்தட்டிக் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கின்றதா?  



பிரியமுள்ள மனிதா! பலர் நான் எல்லோருக்குள்ளும் இந்த உள்விதி  மனிதன் இருப்பதை மறந்து  சிலர் தீய எண்ணங்களுடன், தீய செயல்களில் ஈடுபட்டு பலருக்கு அதிக துன்பத்தையும், கஷ்டத்தையும் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி மென்மேலும் பல தவறுகளை  தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்து வருகின்றனர். மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்று முன்னமே விளக்கியுள்ளேன். அதுபோல் நான் தான் அனைத்து ஜீவராசிகளின் உள்ளிருந்து அவர்களின் ஜீவ ஓட்டத்தை ஓட வைத்துக்கொண்டிருக்கின்றேன். அப்படியிருக்கும் போது நீ செய்யும் தவறுகள் எனக்குத் தெரியாமலா இருக்கும்?



சக்தியுள்ள மனிதா! உனது நிழல் போல் உன்னைப் பின்தொடர்ந்து வருவதை நீ எப்போதும் கவனிக்கத் தவறுகிறாய். அவ்வப்போது நான் உனக்கு கொடுக்கும் எச்சரிக்கைகளையும் நீ கேட்காமல் இருக்கின்றாய். உனது உயிராய் இருப்பவன் நான். என்னை மீறி செய்யும் எந்த ஒரு காரியமும் உனக்கும் உனது பரம்பரைக்கும் பெரிய கரையாய் இருக்கும் என்பதை உணர்ந்து கொள். மனிதா! நீ செய்யும் தவறுக்கு மற்றவர்கள் அதிக லாபம் பெறுவார்களே ஒழிய, ஒருபோதும் நீ செய்த தவறுகளை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனுநீதி படி யார் தீய செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்களே அதன் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.



ஆற்றல் கொண்ட மனிதா! இந்த உலகத்தில் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல், பயங்கரவாதம், கொடுமைகள், அக்கிரமங்கள் போன்றவைகள் நடைபெற்று வருகின்றன. அதற்குக் காரணம் பேராசை, பதவி ஆசை, உலகை தன் கைக்குள் அடக்கி எல்லோரையும் அடிமைபடுத்த ஆசை. அதற்கு காரணம் நீ தான்.        

தன்னம்பிக்கை கொண்ட மனிதா! நான் திரும்ப திரும்ப கூறுவது என்னவென்றால்  நீ பிறக்கும்போது உனக்குத் தேவையான, உனது வாழ்க்கைக்கு உகந்த அனைத்து வசதிகளையும் கொடுத்தேன். ஆனால் உனது மூதாதையோர் அதை சரிவர காத்துக்கொள்ளாமல் இருந்ததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் நீ இப்போது பலவிதத்தில் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாய். நீ இழந்ததையும், உனது முன்னோர்கள் இழந்ததையும் மீட்டு உன்னிடத்தில் கொடுப்பதற்காகவே உள்விதி மனிதனாக உன்னிடம் இருக்கிறேன். அதற்குத் தேவையான திறமை, அறிவு, தன்னம்பிக்கை, துணிவு  கொடுத்து இனிமேலும் நீ ஏமாறாமல் இருக்க உனக்குத் தேவையான விழிப்புணர்வு கொடுத்து மேலும் உனது செல்வத்தை இழக்காதவாறு நான் பார்த்துக்கொள்ளவே உனக்குள் வந்திருக்கிறேன் .


    

 மென்மையான மனிதா! ஒருவன் திடீரென்று பல 'கோடிகளுக்கு அதிபதி'  ஆகிறான். இருக்கும் கோடீஸ்வரர்களோ மேலும் பல கோடிகளுக்கு அதிபதி ஆகிறார்கள். அந்தச் செல்வம்,  பணம் எங்கிருந்து வந்தது? உன்னைப் போன்றவர்களிடத்திலிருந்து பலவழிகளில் புதிது புதிதாக ஏமாற்றியதால் அவர்களிடத்தில் சேர்ந்ததுள்ளது என்பதை இப்போதாவது உணர்ந்து கொள். மனிதா! பல கோடிகள் பணம் வைத்துள்ளவர்கள் எப்போதாவது சில கோடிகளை உன் போன்ற ஏழைகளுக்கோ, பட்டினியால் வாடுபவர்களுக்கோ கொடுத்துள்ளார்களா? இல்லவே இல்லை என்றே சொல்லலாம். அவர்களின் ஆசை, பேராசை மற்றும் எப்போதும் உலக பணக்காரர்களில் முதலாவதாக வரவேண்டும் என்பதின் சுயநலம் தான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.    

அறிவுள்ள மனிதா! அளவுக்கு மிஞ்சி வைத்திருப்பவர்களிடம் மேலும் அவர்களிடம் ஏமாறுவதை நிறுத்திக் கொள். பணம் உள்ளவர்கள் உனக்கு உதவ முன் வந்தால் அவர்கள் உனக்கு உதவி செய்வதற்காக அல்ல. உன்னிடம் இருக்கும் கொஞ்சனஞ்ச பணத்தையும் அபகரிக்கத் தான் என்பது தெரிந்து கொள். அந்த சமயத்தில் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயல்பாடு. இல்லையேல் உனக்கு தூசி அளவு தந்துவிட்டு அவர்கள் இருகைகள் அளவு எடுத்துக்கொள்வதோடு உன்னைப்  படாதபாடு படுத்திக்கொண்டிருப்பார்கள்.



இரக்கமுள்ள மனிதா! அவர்கள் எல்லா சட்டதிட்டங்களையும், மனித தர்மங்களையும் மீறி எந்த செயல்களையும் துணிந்து செய்யும் பலம் கொண்டவர்கள். பணம் கொண்ட அவர்களின் காலடியில் நீதி, நியாயம், நேர்மை, அரசியல்வாதிகள், படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரும் மண்டியிட்டு கிடப்பதால் அவர்கள் மென்மேலும் பல தவறுகள் செய்து கோடிச் செல்வத்தில் மிதக்கிறார்கள். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


     

பொறுப்புள்ள மனிதா! ஒன்பது ராசிக்கல், நவ தானியம், நவரசம், நவகிரகம் (கோள்கள்), நவ் ரங்க் (ஒன்பது வர்ணம்) என்பது இருப்பது உனக்கு நன்றாகவே தெரியும். அதில் நவகிரகம் (வீடு) ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் உள்ளது என்று உன்னிடம் சொல்லி நம்பவைத்து பலர் பணம் பறிப்பதை உன்மூலம் தெரிய வருகிறது. அதோடு நிற்காமல் நவகிரகங்கள் என்னவென்றே தெரியாமல், அது எங்கே, எப்படி இருக்கின்றது என்று அறியாமல், அது இந்த இடத்தில் இருந்தால் இந்த பலன், அந்த இடத்தில் இருந்தால் அந்த பலன் என்று கூறியும் வருகிறார்கள். மேலும் அதன்படி தான் உனது விதி நடக்கிறது என்று சொல்லி சிலரை நம்பவைத்து வருகிறார்கள். அதேபோல் நவரசம் என்றும் அதாவது மனிதரில் ஒன்பது பாவனைகள் இருக்கிறது என்கிறார்கள். எல்லா ஒன்பதுகளுக்கும் என்ன ஒற்றுமை என்று உனக்கு தெரிவதற்கு நியாமில்லை. இப்போது தெரிந்து கொள்.

பேரன்பு கொண்ட மனிதா! பல வருடங்களுக்கு முன்பே வான சாஸ்திர வல்லுனர்கள் ஒன்பது கிரகங்கள் பூமியைச் சுற்றி வருகின்றது என்றும் ஆனால் அறிவியல் வல்லுனர்கள் சூரியனைச் சுற்றித் தான் மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றது என்று நிரூபித்துள்ளார்கள். பின் ஏன் இந்த அடிப்படை முரண்பாடு? உண்மை தெரிந்த பிறகும் பூமியை மையமானத்தை வைத்து கணித்ததை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள். அப்படியென்றால் என்ன உண்மை சொல்ல வருகிறார்கள். அதன் விளக்கம் இதோ!

பாசமுள்ள மனிதா! மனிதன் தான் பூமி. அவனைச் சுற்றும் கிரகங்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன் , புதன், செவ்வாய், ராகு, கேது, சனி மற்றும் குரு. உண்மையில் பூமி என்பது பூமியில் வாழும் மனிதனைப் பற்றி கூறுகிறார்கள். அவனைச் சுற்றி ஒன்பது விதமான மனிதனைத் தான் சங்கேத அடையாளத்திற்காக ஒன்பது கிரகங்கள் என்று  கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டிலோ அல்லது சுற்றியோ இருக்கலாம். அந்த ஒன்பது வகையான மனிதர்கள் இதோ. மகிழ்ச்சியான மனிதர்கள், வேடிக்கையான மனிதர்கள், கருணையுள்ள மனிதர்கள், கோபமிக்க மனிதர்கள், வீரமிக்க மனிதர்கள், பயமுறுத்தும் மனிதர்கள், பொறாமை மனிதர்கள், அற்புதமான (விந்தையான) மனிதர்கள் மற்றும் அமைதியான மனிதர்கள் தான் ஒன்பது கிரக மனிதர்கள். 



இனிய குணம் கொண்ட மனிதா! இப்போது உங்களுக்கு எப்படிப்பட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரிகிறதல்லவா? அல்லது எந்த மனிதனை அணுகினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிகின்றதல்லவா! இன்னமும் தெளிவாக விளக்குகிறேன். உனது நல்வாழ்விற்கு உன்னிடத்தில் மற்றும் உன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி, வேடிக்கை, கருணை, வீரம், அற்புதம் மற்றும் அமைதியான மனிதர்களின் இடத்தைத் தேடி பிடித்துக் கொள். ஒருவேளை உன்னைச் சுற்றி கோபம், பயமுறுத்தும் மற்றும் பொறாமை மனிதர்கள் இருந்தால் உடனே உனது இடத்தை மாற்றிக்கொள். அல்லது அவர்களை உனக்கேற்றவாறு மாற்றி விடு. அவர்கள் உனது அழிவுக்காக உள்ளவர்கள். அமைதி, அற்புதம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய மனிதர்கள் உனது நல்வாழ்வுக்கு உதவுபவை. கருணை, வீரம், வேடிக்கை போன்றவைகள் உனது வாழ்வைக் காக்க தேவைபடுபவை. 

அன்பு மனிதா! உனக்கு கஷ்டம், சுகம் மனிதர்களால் மட்டுமே வரக்கூடியவை. கிரகங்களால் அல்ல. அழிவு மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் உடனே வேறு வீட்டிற்கு செல் என்பார்கள். நல்ல மனிதர்கள் இருந்தால் உங்களுக்கு நல்லகாலம் என்பார்கள். விளையாட்டாக தொல்லை கொடுக்கும் மனிதர்களைப் பார்த்து 'வந்துட்டான்யா ஏழரை' என்பார்கள். அதாவது சனி குணமுள்ள மனிதன் இதற்குப் பொருள். சிலரைப் பார்த்து 'குரு ' என்பார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்கையில் உதவுபவர்கள். சிலரைப் பார்த்துக் 'காமடியன்' என்றும், 'அறிவாளி 'என்றும், 'பலசாலி 'என்றும், 'கருணாமூர்த்தி' என்றும் கூற கேள்விபட்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் தான் பூமி. உங்களை சுற்றும் ஒன்பது வகையான மனிதர்களை அடையாளம் காணுங்கள். உங்கள் வாழ்வு சிறக்க இப்போதிலிருந்தே உங்களச் சுற்றி இருக்கும் மனிதர்களின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள். 


     


உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும். 

           

                                   

உள்விதி மனிதன் பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் - A PRAY FOR AS YOU WISH

உள்விதி மனிதன்  



பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி  மனிதன் கூறும் பிராத்தனை 


A PRAY! TO GET AS YOU WISH 
சமமனிதக் கொள்கை 


மதுரை கங்காதரன் 


இனிமையான மனிதா! மீண்டும் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். நான் உனக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான மனிதப் பிறவி எங்கிருந்து வந்தது தெரியுமா? ஒரு அணுவிலிருந்து வந்தது என்கிற உண்மையை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளது. இந்த தருணத்தில் ஒன்றை மட்டும் எண்ணிப் பார். உனது பிறப்பு ஒரு 'அணு ' வாகவே இருந்திருந்தால் அதாவது பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஏதாவது ஒரு நுண்ணுயூயிரி போல் படைக்கப்பட்டிருந்தால் என்னுடைய அதிசய படைப்புகளை யார் அனுபவிப்பது? யார் இந்த உலகத்தைக் காப்பது? அல்லது இந்த உலகம் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்.

பாசமுள்ள மனிதா! இவ்வளவு பரந்த பெரிய உலகத்தில் விதவிதமான படைப்புகளை விதவிதமான வடிவத்தில், பலதரப்பட்ட நிறத்தில், பலவிதமான அசைவுகளில், எண்ணற்றச் செயல்களில், எல்லாவித சூழ்நிலைகளில் வாழும் பல ஜீவராசிகளைப் படைத்திருக்கிறேன். படைத்துக்கொண்டும் இருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் இல்லாத அதிசயமானதை இந்த உலகில் உனக்காக நிகழ்த்திக் கொண்டு வருகிறேன். இந்த ஜீவ அதிசயம் நீ வாழும் இந்த உலகில் தவிர இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலோ, மற்ற கோள்களிலோ இன்னும் வேறு எந்த இடத்திலோ, மூலைமுடுக்குகளிலோ இருக்க முடியாது. அப்படி உருவாக்கவும் முடியாது. ஒருவேளை அவ்வாறு யாராவது சொல்வார்களேயானால் அதில் உண்மை இருக்காது. வெறும் கற்பனை மற்றும் ஊகத்தில் அடிப்படையில் தான் இருக்கும். ஒரு வகையில் அது மக்களை ஏமாற்றும் செயலும் ஆகும். அதை நம்பவே நம்பாதே!

இரக்கமுள்ள மனிதா! நான் உன்னை படைத்திருப்பதன் மகிமை விளங்கிவிட்டதா? அதாவது நானோ அல்லது என்னைப்போல மனமுள்ளவர்களோ உன்னிடமிருந்து வாங்குவதைக் காட்டிலும் உனக்கு பன்மடங்கு கொடுப்பதில் தான் பேரானந்தம் இருக்கும். அதாவது உன்னிடத்தில் தட்சணையாக, காணிக்கையாக பணம், நகை கேட்கும் எவரும் ஆசாமிகள் தான். அவர்களிடத்தில் உன்னிடம் இருக்கும் சிறு செல்வத்தை கொடுத்து ஏமாந்துவிடாதே. 



மென்மையான மனிதா! ஒரு 'செல்' ஆன்ம உயிரிலிருந்து இந்த உலகத்தை அனுபவிக்கத் தக்க ஜீவ ஓட்டமுடைய மனிதனாக மாற்றியிருக்கிறேனே அந்த வித்தையை நீ கோடிக்கணக்கான வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் அதன் சூட்சமம், ஜீவ ரகசியம் உனக்கு எட்டாது. உனக்கு தெரியவும் வராது. உனக்கு வெளியே கோடிக்கணக்கான கிலோமீட்டருக்கப்பால் இருக்கும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ உன்னால் காணமுடியும். ஆனால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனை காண்பதற்கு அல்லது  இந்த ஜீவ ஓட்டத்தின் ரகசியத்தை அறிவதற்கு உன்னால் முடியவே முடியாது. ஆனால் அதற்கும் வழி இருக்கின்றது.



மதிப்புக்குரிய மனிதா! இதோ எனது ஜீவ ரகசியம் அறிய உதவும் வழி. மனிதா, இந்த மனிதன் எப்போது மண், பொன், பொருள், பணம் மீது மோகம் கூடியதோ அல்லது  அவைகளுக்கு நீ எப்போது அடிமையானாயோ அன்றிலிருந்து நான் உன்னடமிருந்து விலக ஆரம்பித்து இப்போது கண்காணாப் பொருள் போல ஆகிவிட்டேன். உனது சுயநலம் அதிகமாகி பொதுநலம் குறைந்துவிட்டது. அதாவது சுயநலம்  எப்போது இந்த பூமியிலிருந்து விடை பெறுகின்றதோ அன்றிலிருந்து நான் உனது கண்ணுக்குத் தெரிவேன். நீ நினைத்த படி அனைத்தும் நடக்கும். உனது ஆயுளும் கூடும். எனது படைப்புகளத்தனையும் நீ அனுபவிக்கலாம். அதுவரை என்னை காட்டுவதாக யார் சொன்னாலும் அது உண்மை இல்லை. 



மரியாதையுள்ள மனிதா! நான் சுயநலம் கருதாது உனக்காக அனைத்தும் கொடுத்தது போல் நீயும் சுயநலம் மனதில் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நல்லவழியில் வாரி வாரி கொடுத்து காக்கவேண்டும் என்று தான் உனக்குள் புகுந்துகொண்டு நான் ஆன்ம ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். 



இந்த பிரார்த்தனையை  தினமும் செய்தால் 
நன்மைகள் உண்டாகும் 


பிரியமுள்ள மனிதா! தினமும் என்னை கவனி. எனது ஜீவ ஓட்டத்தை உணர்ந்து கொள். ஒருவேளை நீ என்னை வேண்டி பிரார்த்தனை செய்ய பிரியப்பட்டால் அல்லது எனக்கு நன்றிக்கடன் செலுத்த ஆசைப்பட்டால் இவ்வாறு பிரார்த்தனை செய். உனக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்தும், உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டும் இருப்பேன்.


பிரார்த்தனை வரிகள் 

எனக்குள் இருக்கும் உள் மனிதனே! எனக்கு எவ்வித பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள். அப்படி வந்தாலும் அதை சுமூகமாகத் தீர்க்கும் அறிவையும், பலத்தையும் எனக்குக் கொடு. எல்லோருக்கும் நன்மை செய்யும் செயல்களைச் செய்ய என்னுடன் துணையாய் இரு. பலருடைய வாழ்வைக் காப்பாற்றும் வல்லமையும், பாக்கியமும் கொடு. அனைவருக்கும் உடல் ஆரோக்கியமான உடல் நலத்தைக் காத்திட எனக்கு நல்லவழி காட்டு. வறுமையால் வாடுபவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் கொடுப்பதற்கு அருள் செய். ஓயாமல் எனது ஜீவனுக்காக என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் இதயமே! ஒவ்வொரு வினாடியும் எனது நலத்திற்க்காக பாடுபடும் இந்த ஜீவ உடம்பே! நீ உள்ளே இருந்துகொண்டு எனக்கு அனைவருக்கும் உதவிகள் செய்யும் ஆற்றலும், துணிவும் கொடு. தீமைகளை தீயிலிட்டுப் பொசுக்கி நன்மைகளைப் பெருக்கி புதிய உலகம் செய்வதற்கு என்னைப்  போல அனைவருக்கும் வழிகாட்டு. தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிபடுத்தி, அவர்களுக்குள்ளே இருக்கும் உயிர் ஓட்டத்திற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு புது வாழ்வும் கொடு. அனைவரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்கு எப்போதும் துணைபுரிவாயாக! நன்றி.



நன்மை தரும் மனிதா! இந்த உலகில் எத்தனையோ நல்ல புத்தகங்கள், பல நல்ல விசயங்கள் பலவித வடிவில் நிறைந்துள்ளன. அனைத்தையும் படிப்பதற்கு உனது ஆயுள் போதாது. அப்படியிருந்தும் ஏன் அனைவரும் நல்லவர்களாக இருக்கவில்லை. ஏனென்றால் கெட்டவர்களால் மட்டுமே மக்களுக்குப் பிடித்தாற்போல் பலவித வேசங்களைப் போட்டுக்கொண்டு மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடுவார். அதற்குக் கவர்ச்சிகள் அதிகம். அதனால் அதில் மயங்கி ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள். ஏன்? அழிபவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் கெட்ட செயல்கள் தாங்களாகவே ஈடுபடுவது கிடையாது. அப்படி ஈடுபட்டாலும் அவருக்கு பலன் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அதிக பலன் தரும் தீய செயல்கள், அதை செய்பவருக்கு சொற்பமான பலனையும் அதை ஏவுபவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையான பலனையும் தரும். ஏனென்றால் அதை ஏவுபவர்கள் பெரிய பதவியில், அந்தஸ்தில், பணபலத்தில் அதிகம் இருப்பவர்களாகவே இருப்பார்கள். மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பழிகள் மற்றும் தண்டனைகளிருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் தெரியும். 



தன்னம்பிக்கை கொண்ட மனிதா! உனக்குப் பொதுவாக யார் என்ன நல்லது சொன்னாலும், எத்தகைய மாமனிதர்கள் தன் இனிய அன்பான வழியில் நல்லவற்றை உன் மண்டையில் ஏற்ற நினைத்தாலும், பல புத்தகங்களைப் படித்துக் காட்டினாலும், பலவாறு விசயங்களைத் தெரிந்து அவைகளைச் சொன்னாலும் அவைகள் எல்லாம் உனக்குள் நுழைந்துவிடாது. செயலும் செய்து விடாது. அதாவது மனிதா! எந்த ஒரு வேலையும் அல்லது செயலும் நீ மனது வைத்தால் தான் உன்னால் செய்யமுடியும். அதுவும் சாதாரணமாக ஒரு முறை நினைத்தால் உன்னால் அச்செயல் செய்ய முடியாது. முதலில் அச்செயல் செய்வதற்கு உனது மனம் ஆசை படவேண்டும். பிறகு ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்வதற்கு ஆர்வம் வேண்டும். அதற்கு அறிவு, ஆற்றல், துணிவு ஏற்படவேண்டும். அதன் பிறகு தன்னம்பிக்கையும் , உந்து சக்தியும் இருந்தால் அச்செயல் வெற்றி பெறும். அப்படிச் செய்யும் செயல் பலருக்கு நன்மை தரும் செயலாக இருப்பின் அனைவருக்கும் நலம்.



ஆற்றல் கொண்ட மனிதா! அப்படி இருக்கும்போது வெறும் பணத்திற்காகவும், பேராசை, சுயநலம் மற்றும் பிறரை பழிவாங்குவதற்கு எந்த ஒரு செயலையும் செய்துவிடாமல் உன் மனதைப் பார்த்துக் கொள். ஒரு சிலர் உனது நல்ல எண்ணகளுக்கு தீய பாடம் சொல்லுவார்களேயானால் அவர்களிடமிருந்து விலக்கிக்கொள். அல்லது துணிச்சலோடு அவர்களை எதிர்கொண்டு திருத்துவதற்குப் போராடு. உனது வெற்றிக்கு இந்த உள்விதி மனிதன் எப்போதும் துணையிருப்பான்.



சக்தி கொண்ட மனிதா! எந்த ஒரு செயலும் உன்னால் செய்து முடிக்க இயலும். அத்தகைய வல்லமை உன்னுள் இருக்கின்றது. அதுவும் இந்த உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்ட செயலில். அதை நல்ல முறையில் பலருக்கு நன்மை தரும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதை உனக்குள் இருந்துகொண்டு உன்னை நல்லவழியில் நடத்தி மற்றவர்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழ வைக்கவே உனக்குள் எனது ஜீவ ஓட்டம் ஓடுகின்றது. எனது ஆற்றல் காட்டும் நேரம் வந்துவிட்டது. நீ நினைக்கும் காரியம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. அதற்கு நல்லதை செய்! அதுவும் இன்றே செய்.




உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் இன்னும் தொடரும்.