Pages

Sunday, 6 January 2013

உள்விதி மனிதன் பாகம்: 40 ஓருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம் THE SECRET BEHIND ONLY ONE BABY IN A DELIVERY

உள்விதி மனிதன் 

பாகம்: 40 ஓருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்
THE SECRET BEHIND ONLY ONE BABY IN A DELIVERY

சமமனிதக் கொள்கை
  
மதுரை கங்காதரன்



பெருமைக்குரிய மனிதா! இப்போது இருக்கும் உலகம் போட்டிகள் நிறைந்த உலகமாக மாறிக்கொண்டு வருகின்றது ! அனைவரும் ஓடியேத் தீர வேண்டும். அல்லது ஓடுகின்ற ஒருவர் முதுகில் சவாரி செய்தே தீரவேண்டும். அதுவும் இல்லையென்றால் எதையாவது உதவிகொண்டு உருண்டோ, தத்தி தத்தியோ காலத்தை நகர்த்தியாக வேண்டும். சிலர் நேர்வழியில் செல்கிறார்கள். பலர் குறுக்கு வழியில் செய்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் 'எப்படியும் அதிக பணம் சம்பாதிப்பது!'  குறைந்த செலவில் அதாவது 'குறைந்த விலையில் நிறைந்த சேவைகள் செய்ய வேண்டும்' என்று ஒவ்வொரு துறையச் சார்ந்த மேதாவிகள் தினம் தினம் மூளையைக் கசக்கிக்கொண்டு புதிது புதிது பொருட்களையும், யுக்திகளையும் சலிக்காமல் தந்து கொண்டிருக்கின்றனர். அதில் வெற்றியோ அல்லது தோல்வியோ கட்டாயம் அனைவரும் ஏற்றுக் கொண்டே தீரவேண்டும். அதற்கு நாம் எங்கேயும் தங்கிவிடாமல் ஓடவேண்டும். இல்லையென்றால் அவர்களைவிட பின்தங்கி விடுவோம்.



என் இனிய மனிதா! இந்த உலகளாவியப் போட்டி தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு முக்கிய காரணம் கணினி. கணினி அனைவர்களுடைய வாழ்விலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்த மாற்றம், பழைய தலைமுறைக்கும் இப்போது இருக்கும் தலைமுறைக்கும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை என்றே சொல்லலாம். இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துத் தான் அவன் வாழ்வும், முன்னேற்றமும் அடங்கியுள்ளது. அதில் பழைய பஞ்சாங்கம், வேத பாடங்கள், பழைய சித்தாந்தங்கள், இலக்கணம், நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம்  போன்றவைகளின் மாற்றங்களும் அடங்கும்.



மதிப்புள்ள மனிதா! பழமை பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், கருத்துக்கள், பொன்மொழிகள், மகான்களின் வாக்குகள், ஆன்மீக புத்தகங்கள், பாடல்கள், பெரியோர்களின் அனுபவங்கள் போன்றவைகள் எவ்வளவு தான் வாழ்க்கைக்குச் சிறந்ததாக இருந்தாலும் அதை கடைப்பிடிப்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் கடினமாகவே இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.  

  

பண்புள்ள மனிதா! தினமும் நீ அறிந்துகொள்வது, புரிந்துகொள்வது, கேட்பது எல்லாமே வேகவேகமாகத் தான் நடக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரிடத்திலும் நேரமின்மை தான் அதிகம். இந்த நிலையில் எதையும் ஆற அமர யோசித்து செய்யபட நேரமிது. இந்த நேரமின்மை காரணமாக அவனுக்கு பொய்கள் பல உண்மைபோல் தெரிகின்றது. பொய் வேசங்கள் உண்மையென நம்பி ஏமாறுகிறான். வார்த்தை ஜாலங்கள், தேன் கலந்த நஞ்சு வார்த்தைகளை அமுதென நம்புகிறான். கூடி உறவாடி கெடுக்கும் மனிதர்களின் பின்னால் ஓடுகிறான். தான் பலி கடா ஆடு என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அவனை சீவி முடித்து சிங்காரிப்பதை பெருமையாக எண்ணி பிறகு வழியே சென்று பலியாகுகிறான். ஏமாற்றுபவர்களும் அவர்களின் வேகத்தைப் தெரிந்துகொண்டு மிக எளிதாக பலவகைகளில் ஏமாற்றி வருகின்றனர்.


 

அறிவு கொண்ட மனிதா! உனது அன்றாட வாழ்க்கையே தெளிவாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்போது உனக்கு ஆன்மிகம் படிப்பது கட்டாயம் நேரமிருக்காது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் எல்லாமே உனக்கு எளிதாக இருக்கவேண்டும். எளிதாகக் கிடைக்க வேண்டும். மூளையினைக் கசக்கி அர்த்தம் தெரிந்து கொள்வது உனக்கு முடியாத காரியம் தான். அந்த கஷ்டத்தைப் போக்கவே உனக்குள் உள்விதி  மனிதனாக இருந்துகொண்டு உலக நடப்புகளைச் சொல்லி உனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வந்துள்ளேன்.

 


தன்னம்பிக்கை மனிதா! இன்னமும் நீ பழமைகளை அப்படியே பின்பற்றாமல் நிகழ காலத்திற்குத் தக்கவாறு உன் வாழ்கையை மாற்றிக்கொண்டால் உனக்கு என்றும் மகிழ்ச்சி தான். அது தான் புத்திசாலித் தனம். மனிதா! கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் நீயும், உன்னைச் சார்ந்த உயிரினங்களும்  எவ்வளவு தூரம் உடல் உழைப்பு செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லது பிறர் சொல்லிக் கேள்விபட்டிருப்பாய். ஆனால் இப்போது உனக்குள் மறைந்து இருந்த அறிவியல் அறிவைத் திறந்து விட்டதால் உடல் உழைப்பு குறைந்து மூளையின் வேலை அதிகரித்துள்ளது. இதுவரை நடைபெறாத அதிசயங்கள் பலவற்றை நடத்திக் காட்டி சாதனைகள் செய்துவருகிறாய். அவைகளையெல்லாம் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் உதவியின்றி சாதிக்க முடிந்திருக்குமா?   



ஆற்றல் கொண்ட மனிதா! நாளுக்கு நாள் மக்கள் தொகை அபரிவிதமாக பெருகிவரும் இந்த உலகில், இந்த அறிவியல் வளர்ச்சி நடைபெற்று இருக்காவிட்டால் இந்நேரம் உணவு, உடை, இருக்க இடம் பலருக்கு இல்லாமல் அல்லது போதாமல்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்திருப்பர். அவ்வாறு நடைபெற்றியிருந்தால் நான் படைத்த இந்த அற்புத உலகத்தின் படைப்புகளை அனுபவிக்க ஆளில்லாமல் அழிந்திருக்கும். ஆகவே தான் மிகப் பெரிய அறிவியல் வளர்ச்சியை தந்துகொண்டிருக்கிறேன். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு உண்மையாக, துல்லியமாக உலக நடப்புகளை நேரடியாக தந்து கொண்டிருக்கிறேன். பழங்கால கற்பனைகளை நிகழ்காலத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  

நல்லெண்ணம் கொண்ட மனிதா!  நீ மாறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாறிவிட்டால் இந்த அறிவியல் வளர்ச்சி உனக்கு பல நன்மைகள் தரும். இல்லையேல் அதுவே உன்னை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்றுவிடும். பழமையில் ஊறியவர்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் தான். அனைத்து செயல்களையும் சிறுக சிறுக அனைவருக்கும் நன்மை தரும் செயலாக மாற்றி, இந்த உள்விதி மனிதனின் புது அவதாரம் மக்களுக்குத் தெரிவித்து, இந்த உலகம் புது உலகமாக படைக்கப் பெற்று, அதனால் உலக உயிரினங்கள் அனைத்தும் சுபிட்சம் அடையப் போவது உறுதி. 

மகிழ்ச்சி விரும்பும் மனிதா! உனக்கு எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள், வந்தாலும் முதலில் இந்த உள்விதி மனிதனுக்குத் தெரியப்படுத்து. அப்படிச் செய்வதால் மனதிற்கு மனம் தூது சென்று பிரச்சனைகளை தீர்க்கும் மனிதனைச் சென்றடைந்து அவரின் மூலமாக உனது கஷ்டத்தை எளிதாகத் தீர்த்து வைப்பேன். இதை நீ முழு மனதுடன் நம்பினால் அது உனக்கு நல்ல பலன் தரும். அரைகுறையாக ஏற்றுக்கொண்டால் உனது பிரச்சனைகள் தீராமல் உன்னிடமே இருந்து உன்னைத் தூங்கவிடாமல் செய்துவிடும். மனிதா! பிறருக்கு நன்மை தரும் செயல்களை செய்ய விரும்பினாலும் இதேபோல் பின்பற்று. உனக்கு என்றும் வெற்றி தான்.

மேன்மையான மனிதா! இந்த உலகில் எப்போதும் நடக்கும் அதிசயத்தை உன்னால் உணர முடிகின்றதா? அதன் இரகசியம் என்னவென்று புரிகின்றதா? அதாவது மனித பிறப்பு, ஓருயிருக்குள் பெரும்பாலும் ஒரே ஒரு ஜீவன் உருவாகும்படி படைத்திருக்கிறேன். அப்படியிருந்தால் தான் உன்னால் அந்த ஒரு ஜீவனை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியும். அதில்லாமல் ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து உயிர்கள் உருவானால் உன்னால் அனைத்து ஜீவனிடத்தில் கவனம் செலுத்த முடியாது. மேலும் இந்த பூமி சீக்கிரத்தில் பாரமாகிவிடும். முடிவில் நானே பல ஜீவனை அழிக்கும்படி ஆகிவிடும். அதனால் இந்த உள்விதி மனிதனுக்கு அவப்பெயர் உண்டாகும். மேலும் இந்த ஒரு ஜீவனை பேணிக்காப்பதே நீ படாதபாடு படுகிறாய் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. என் படைக்கும் சக்தி உனக்குக் காட்டச் சிலருக்கு இரண்டு குழந்தைகள், வெகு சிலருக்கு இரண்டைவிட கொஞ்சம் அதிகமாக அதாவது அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு வரை கொடுத்து இருக்கிறேன். 



அறிவுள்ள மனிதா! உன் வாழ்கையில் ஓரடி ஏறமுயன்றால் பத்தடி சறுக்கி விடுகிறாய். அதற்கு காரணம் உன்னிடம் விழிப்புணர்வு இல்லாமையே. நாளுக்கு நாள் எல்லாப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டு வருகின்றது. புதுப்புது பொருட்களை விற்க கவர்ச்சியான முறையில் ஆசை காட்டி உன்னை வாங்கும்படி செய்துவிடுகிறார்கள். உன்னிடம் பணம் இல்லாவிட்டாலும்,  கடன் மூலம் வாங்க வைத்துவிடுகிறார்கள். அதனால் நீ  அன்றாடச் செலவுக்குப்  பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். அதேபோல் அதிக பணம் கொடுத்து நகைகளை வாங்கி, அதையே அடகு வைத்து மிகக் குறைந்த பணத்தைக் கடனாக பெற்று, அதற்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். போதாதக் குறைக்கு அரசியல் தலைவர்கள் நாளுக்குநாள் புதுப்புது கொள்கைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குத் தகுந்தாற்ப் போல் நடைமுறைபடுத்தி வருகின்றனர். சில கொள்கைகள் மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்பதை தெரிந்தும் அதனால் மக்கள் பின்னாளில் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்தும் அதனை எளிதாக அமுலாக்கி வருகின்றனர். மக்கள் சுகமான வாழ்க்கை நடத்த, எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும் சட்டத்தை இயற்றினால் இந்த உள்விதி மனிதனின் வேலைகள் எளிதாக இருக்கும். அதனையும் இந்த உள்விதி மனிதன் படிப்படியாக உனக்குள் இருந்துகொண்டு நடைமுறைப் படுத்துவேன். 

தெளிவுள்ள மனிதா! நாடு எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கிறாயா? நீ இப்படியே இருந்தால் வருங்காலத்தில் நீயும், உனது சந்ததியினர் சிரமப்படுவது தவிர்க்க முடியாது. இப்போதே விழித்துக்கொள். இப்போது உடனடி தேவை - அரசியல் மாற்றம். அதன் மூலம் தான் மக்கள் சமூகம் விமோட்சணம் பெறும். இல்லையேல் மீண்டும் இந்த நாடு அடிமைபடும் நிலைமை ஏற்படும். 



ஆற்றல் கொண்ட மனிதா! அப்படிப்பட்ட அடிமை வாழ்க்கை மீண்டும் உனக்கு வந்துவிடாமல் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றுக்கு பங்கம் வந்துவிடாமல் இந்த உள்விதி மனிதன் அனைவரின் உள்ளத்தில் புகுந்து உனக்கு விழிப்புணர்வு தர ஆரம்பித்துவிட்டேன். அதன் சக்தியை நீ போகப்போக உணரத் தான் போகிறாய். உன் மூலமாகச் சக்தி வெளிப்படப்போகிறது. அப்போது 'நானா இந்த அற்புதச் சாதனை செய்தேன்! எனக்கா இவ்வளவு சக்தி இருக்கின்றது? என்னால் எப்படி முடிந்தது!' என்று நீயே தினம் தினம் ஆச்சரியப்படும் வகையில் நடக்கத் தான் போகிறது. அவ்வாறு உன்னை ஆட்டுவிக்கப் போகிறேன். அதன் மூலம் உனக்கு வர இருக்கும் தீமை தடுக்கப்படும். இது சத்தியம்! சத்தியம்!!




உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் மேலும் தொடரும்.      
    

         

Friday, 4 January 2013

நிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு ஒரு எளிய வழி A SIMPLE WAY FOR PEACEFUL SLEEP

நிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு
 ஒரு எளிய வழி 

A SIMPLE WAY FOR PEACEFUL SLEEP  
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

பெரும்பாலும் கடின உடல் உழைப்பு செய்பவர்களுக்கு தூக்கம் பஞ்சமில்லாமல் வரும். ஆனால் அத்தகைய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வருவதில்லை. அவர்கள் தூங்குவதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். அதற்குக் காரணம் தூங்கும் நேரத்தில் தேவையில்லாத, வேண்டாத சிந்தனைகளை மனதில் ஓட விடுவது தான். அதனால் மனம் ஓய்வில்லாமல் குழம்பி தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.


சரியாக தூங்காததால் மறுநாள் எந்த வேலை செய்தாலும் அதில் கவனம் இருப்பதில்லை. அதனால் உடலும், மனமும் சீக்கிரத்தில் சக்தி இழந்து சோர்வடைந்து விடுகின்றது. தலைவலியும், உடல் வலியும் உண்டாகும்.


அதை தடுப்பதற்கும், சுகமாக தூங்குவதற்கும் எப்போதும் இனிமையான கனவுடனும், பசுமையான் நினைவுகளுடன் தூங்கச் செல்லுங்கள். அதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கனவு உங்களை ஊஞ்சலில் ஆடசசெய்யும். அதுவே உங்களுக்கு ஆந்த உறக்கத்தை கொடுப்பதோடு நீங்கள் விழிக்கும்போது உடலும், மனமும் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் பெரும்.


உங்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும் YOU WILL GET GOOD CHANCE IN YOUR LIFE

உங்களுக்கும்  அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும் 
YOU WILL GET GOOD CHANCE IN YOUR LIFE
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


வாழ்கையில் நீங்கள் நினைத்தபடி நடக்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தே தீரும். உங்களுடைய திறமையும் ஆற்றலும் ஒன்று சேரும் அந்த சமயத்தில் உங்களுக்காக வெற்றிக் கதவுகள் திறக்கப்படும். அதனுள்ளே நுழைவதற்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நீ எப்போது முழுமையாக தயாராகிறாயோ அப்போது தான் வெற்றிக்கான சந்தர்ப்பத்தை சந்திப்பீர்கள். 


அப்போது தான் உங்களைத் தேடி வரும் பெரிய பதவியும், பொறுப்பும் பயமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும். வெற்றி வாய்ப்பு கிடைத்த பிறகு தயாராகிக் கொள்ளலாம் என்றிருந்தால் அந்த வெற்றி வாய்ப்பும் உங்களை விட்டு நழுவிச் சென்றுவிடும். பின்பு அத்தகைய அரிய பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நீங்கள் தோல்வி அடைவீர்கள்.


ஆசிரியர் தேர்வு, வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, அரசாங்கத் தேர்வு, நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு போன்றவற்றில் பெரும்பாலானோர் தெள்வியைத் தழுவுவதன் காரணம் அவர்கள் அத்தகைய தேர்வுகளைச் சந்திக்கப் போக்கு முன் அவர்கள் தயார்படுத்திக் கொள்ளாமையே .

ஆகவே 

வாய்ப்புகளை எதிர்நோக்குங்கள்!
அதற்கு முன் அவற்றை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளுங்கள் !      

Thursday, 3 January 2013

உன்னால் முக்காலத்தையும் வெல்ல முடியும் - YOU CAN DEFEAT TIME

உன்னால் முக்காலத்தையும் வெல்ல முடியும் 
YOU CAN DEFEAT TIME

அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இறந்த காலத்தை அதாவது கடந்த காலத்தை வென்றவர்கள் தான். கடந்த காலத்தில் எத்தனையோ தோல்விகள், வெற்றிகள், அவமானங்கள், விமர்சனங்கள், நிறைவேறாத ஆசைகள், அடிகள், மகிழ்ச்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், சந்திப்புகள், உறவுகள் , நட்புகள், எதிரிகள் இன்னும் பலவற்றை சந்திருக்கலாம். அவ்வளவையும் கடந்து நிற்பது ஒரு சாதனையே.

இவ்வளவு தடைகளையும் தாண்டிய நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் தடையையும், வருங்காலத்தில் வரும் தடையையும் தகர்த்தெறிய நிச்சயம் உங்களால் முடியும்.

நிகழ்காலத்தை வெல்வதும், வருங்காலத்தை உங்கள வசமாக்கிக் கொள்வதும் உங்கள் கையில் தான் இருக்கின்றது. ஆனால் அவற்றிக்கு குறுக்கே இருப்பது சந்தேகம், பயம், கவலை ஆகியவைகள்.

இன்றைய பொழுது எப்படி கழியுமோ என்றும், நாளை பொழுது எவ்வாறு விடியுமோ என்கிற சந்தேகம் தான் உங்களை அலைக்களைக்கச் செய்கிறது. அந்த சந்தேகம் அதிகமாக அதிகமாக  பயம் தொற்றிக்கொள்கிறது. பயம் கூடக்கூட கவலை பரவுகின்றது. அதனால் உங்களுக்கு தோல்வி மட்டுமே உண்டாகின்றது.

அதற்கு முழுமுதற்காரணம் தன்னம்பிக்கை இன்மையே.இன்றும், நாளையும் எனதே என்று   நீங்கள் எப்போதும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். சந்தேகம் உங்களை தொடமுடியாமல் ஓடிவிடும். அதனால் பயம் இருக்கிற இடம் தெரியாமல் பறந்துவிடும். பிறகு கவலை மறைந்துவிடும். இப்போது உங்களுக்கு கிடைப்பது வெற்றி ஒன்றே!

தன்னம்பிக்கை கொள்வீர் !
சந்தேகம், பயம், கவலை போன்ற தடைகளை வெல்வீர்.

Tuesday, 1 January 2013

நீ நாட்டை ஆளப் பிறந்தவன் - புதுக்கவிதை YOU ARE BORN TO RULE THE COUNTRY

நீ நாட்டை ஆளப் பிறந்தவன் - புதுக்கவிதை 




YOU ARE BORN TO RULE THE COUNTRY 




இளைஞனே ! 

நீ வீட்டில் வாழப் பிறந்தவனல்ல 
நீ நாட்டை ஆளப் பிறந்தவன்.

நீ கற்கும் கல்வி முகவரி கொடுக்கும் 
நீ செய்யும் செயல் சரித்திரம் பதிக்கட்டும் 

நீ ஏட்டுக் கல்வியோடு நின்று விடாதே 
நீ அரசியல் அறிவும் தெரிந்து கொள் 

நீ மக்களையும் புரிந்து கொள் 
நீ உன்னை மலையென நம்பு 

நீ காண்பது உண்மையென நம்பிடாதே 
நீ கேட்பது எல்லாம் சத்தியவாக்கல்ல 

நீ கொடுத்தால் வள்ளல் என்று சொல்லும்  
நீ எடுத்தால் திருடன் என்று சொல்லும்  

நீ உழைத்தால் ஏமாளி என்று சொல்லும்  
நீ சிரித்தால் திமிரு என்று சொல்லும்  

நீ பசியென்றால் பாவம் என்று சொல்லும்  
நீ வெற்றி பெற்றால் தலைக்கனம் என்று சொல்லும்  

நீ தோல்வியுற்றால் 'இன்னும் வேண்டும் 'என்று சொல்லும்  
நீ அழுதால் நடிப்பு என்று சொல்லும்  

நீ ஓடினால் கேவலம் என்று சொல்லும்  
நீ எழுதினால் கிறுக்கல் என்று சொல்லும்  

நீ பாடினால் முட்டாள் என்று சொல்லும்  
நீ படித்தால் மடையன் என்று சொல்லும்  

நீ பேசினால் உளர்வதாய்ச்  சொல்லும்  
நீ வணங்கினால் வேஷம் என்று சொல்லும்  

நீ நிமிர்ந்தால் வீராப்பு என்று சொல்லும்  
நீ உதவினால் பைத்தியம் என்று சொல்லும்  

நீ பார்த்தால் குருடன் என்று சொல்லும்  
நீ நடந்தால் கொழுப்பு என்று சொல்லும்  

நீ தூங்கினால் சோம்பேறி என்று சொல்லும்  
நீ நேர்மையாய் இருந்தால் 'கூடாது' என்று சொல்லும்  

நீ உண்மை சொன்னால் அரிச்சந்திரன் என்று சொல்லும் 
நீ பொய் சொன்னால் தலைவன் என்று சொல்லும் 

நீ ஏமாற்றினால் 'கடவுள் இருக்கிறார்'என்று சொல்லும் 
நீ தவறு செய்தால் 'காலம் தண்டிக்கும் 'என்று சொல்லும் 



ஆக 

நீ எதைச் செய்தாலும் ஏதாவது ஒன்று சொல்லும் 




உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்மறை சொற்களால் (Negative thinking) அபிஷேகம் செய்யட்டும். அர்ச்சனை செய்யட்டும். நிந்தனை செய்யட்டும். அதனால் நீ துவண்டு விடாதே. எப்பொழுதும் நேர்மறை  (Positive Thinking) எண்ணங்களோடு வீர நடைபோடு. எத்தனை இடர்கள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து துணிந்து செயல்பாடு. உனது நன்மை செயல்கள் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கட்டும். ஏழைகள் நலம் பெறட்டும். பசி, வறுமை ஒழிக்கட்டும்.  வெற்றி உனதே! இப்போதே புறப்படு. 

  

பணம் பேசுகிறது (புதுக்கவிதை ) -IF MONEY TALKS

பணம் பேசுகிறது (புதுக்கவிதை)


IF MONEY TALKS



- மதுரை கங்காதரன் -



கடவுள் உன்னைப் படைத்தான்
இரக்கம் இருந்தது
உலகு செழித்தது



நீ கடவுளை வெல்ல நினைத்தாய்
நினைத்ததை சாதிக்க எண்ணினாய்

என்னை படைத்தாய்
கடவுளை மறக்கச் செய்தாய்

புது உலகம் பிறந்தது
கடவுள் உலகம் மெல்ல மறைகிறது



எல்லாம் பணமயமானது 
கடவுளையும் பணம் வாங்கியது

நன்றி காட்டத் தவறச் செய்தது
மனித நேயத்தை மறக்கச் செய்தது

கல்வி வீரம் விட நான் உயர்ந்தவன் என்றது 
கல்வி அறிவு காட்ட சிலராவது வேண்டும்

வீரம் காட்ட ஒருவராவது வேண்டும்
பண பலம் காட்ட யாரும் தேவையில்லை.

உனக்குள் இதயம் இருக்கின்றது
எனக்குள் மதிப்பு இருக்கின்றது

இதயத்தால் அனைவரையும் வாங்கலாம்
அந்த இதயத்தையே நான் வாங்கிடுவேன்

எனக்கு கால்கள் உண்டு
எங்கும் நடப்பேன் உன் மூலமாக

எனக்கு இறகுகள் உண்டு
எங்கும் பறப்பேன் உன் மூலமாக

பேசாதவர்களை பேச வைப்பேன்
பேசுபவர்களை மௌணியாக்குவேன்

செய்யாதவர்களை செய்ய வைப்பேன்
செய்பவர்களை அடக்கி வைப்பேன்

கடவுள் உன்னை ஆட்டுவிப்பதை
நம்ப மறுக்கிறாய்.

நான் அனைவரையும் ஆட்டுவிப்பதை
ஏற்றுக்கொள்கிறாய்

நான் இருப்பதால் உனக்கு பலம்
நான் இல்லாவிட்டால் உனக்கு பயம்

எனக்கு பாமரனும் ஒன்று
பணக்கார வர்க்கமும் ஒன்று

நாய் பூனையும் ஒன்று
கழுதையும் குதிரையும் ஒன்று

என்னை அடைவது கடினம்
என்னை காப்பது அதைவிட கடினம்

ஏமாற்றுபவர்களுக்கு ஒரு கண் என் மீது
திருடனுக்கோ இருகண்களும் என் மீது

எப்போது உன்னிடம் வருவேன் நான் அறியேன் 
எப்போது பிறரிடம் செல்வேன் யாரும் அறியார்  

என்னை அடைய போட்டி போடுவார் 
என்னை கட்டிப் போட யாரும் கிடையார்

நான் இல்லாமல் நீ இல்லை 
நீ இல்லாமல் எனக்கு மதிப்பில்லை 

கடவுள் படைத்த உனக்கு அழிவுண்டு
நீ படைத்த எனக்கு அழிவில்லை

என்னை பதுக்கிவைப்பவர்கள்
பதுங்கி வாழ்வார்கள்



நல்லவனிடத்தில் இருந்தால் நன்மை
கெட்டவனிடட்தில் இருந்தால் தீமை

என்னால் நல்லவன் கெட்டவனாகிறான்
என்னால் கெட்டவன் நல்லவனாகிறான்

என்னால் உனக்கு பதவி தர முடியும்
பாழும் கிணற்றில் தள்ள முடியும்

சிறிதளவு இருந்தால் நான் அவர்களுக்கு அடிமை
அதிகமாக இருந்தால் அவர்கள் எனக்கு அடிமை

என்னால் மண்ணை வாங்க முடியும்
என்னால் பொன்னை வாங்க முடியும்



என்னால் மனிதனைக் கூட வாங்க முடியும்
என்னால் எமனைக்கூட நாளை வரச் செய்வேன் 

நான் உணர்ச்சியில்லாதவன்
நான் ஓரறிவும் இல்லாதவன்

என்னால் நீ அறிவிழப்பது நியாயமா
என்னால் நீ பகைமை சம்பாதிப்பது தர்மமா

நீ மனது வைத்தால் நானும் மனிதனாக முடியும்
நல்லவர்கள் என்னை ஆளட்டும்

பேராசை கொள்பவர்களை ஒழித்துவிடு
பணப்பைத்தியங்களை வைத்தியம் பார்த்து விடு

திருடர்கள் திருந்தட்டும்
எமாற்றுபவர்கள் அழியட்டும்



இந்த உலகில் மனிதன் சிரிக்கட்டும் 
அன்பு என்றும் நிலைத்து நிற்கட்டும்.