Pages

Thursday, 17 January 2013

விட்டில் பூச்சி மனிதர்கள் -DON'T GO TO DANGER WAY. BE SAFE YOUR SELF-PUTHU KAVITHAI

விட்டில் பூச்சி மனிதர்கள் 

DON'T GO TO DANGER WAY. BE SAFE YOUR SELF

PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன் 



புயல் அடிக்கும் உனக்குத் தெரிகிறது 
பயணம் தொடரலாமா?
புயல் ஓயும் வரை பொறுமையாய் இரு.



அவன் வீரன் உனக்கு புரிகிறது 
சண்டைக்கு போகலாமா? 
அவனுக்கு நிகர் வீரம் வளர்த்துக் கொள்.



மூடன் என்று உனக்கு தெரிகிறது 
அவனிடம் வாதாடலாமா?
அமைதியாக இரு.



உன்னுடைய எதிரி என்று தெரிகிறது 
அவனிடம் நட்பு கொள்ளலாமா?
விலகிக் கொள்.



பாரம் அதிகம் என்று தெரிகிறது 
தனியே தூக்கி சிரமப்படலாமா?
உறவையும், நட்பையும் சேர்த்துக் கொள்.



ஏமாற்றுபவன் என்று தெரிகிறது 
பணமுதலீடு செய்து ஏமாறலாமா?
பலமுறை யோசித்து செயல்பாடு.



தீயவன் என்று தெரிகிறது 
அவனிடம் சவகாசம் கொள்ளலாமா?
ஒதுங்கிக் கொள்.



பணமாசை கொண்டவன் என்று தெரிகிறது 
பழக்கம் வைத்துக்கொள்ளலாமா?
பணம் இருப்பதை அவனிடம் காட்டாதே !



தவறான பாதை என்று தெரிகிறது 
அதில் பிரயாணம் செய்யலாமா?
சரியான பாதையை அறிந்து கொள்.



மயக்கம் தரும் பழக்கம் என்று தெரிகிறது 
வழக்கமாக கொள்வது வாழ்க்கைக்கு நல்லதா?
நீ அடிமையாகுமுன்னே விட்டுவிடு.



சுயநல அரசியவாதி என்று தெரிகிறது 
அவன் பேச்சை நம்பலாமா?
உன் சொந்தக்காலில் நிற்கப் பழகு.



ஆழம் இருப்பது தெரிகிறது 
காலைவிட்டு அவதிபடலாமா?
தற்காப்புடன் காலை விடு.



கொழுந்துவிட்டு எரியும் சுடரில் 
மடியும் விட்டில் பூச்சியாய் இராதே!
தன்னுள் ஒளி உள்ள மின்மினியாய் இரு.



நன்றி 

வணக்கம் 



  

Wednesday, 16 January 2013

இருக்கும் போது இல்லாது போல் இரு IF YOU HAVE, ASSUME YOU DON'T HAVE PUTHU KAVITHAI

இருக்கும் போது இல்லாது போல் இரு 

IF YOU HAVE, ASSUME YOU DON'T HAVE

PUTHU KAVITHAI 
மதுரை கங்காதரன் 


பறக்கும் வசதி இருக்கும்போது 
நடக்கவும் செய் 
உனது நிலைமை மாறினாலும் 
ஒன்றும் தெரியாது.



பணம் இருக்கும் போது 
சிக்கனம் கடைபிடி.
பணம் இழக்கும் போது
உனக்கு வலி தெரியாது.



பதவியில் இருக்கும்போது 
சாதாரணமாய் இரு 
பதவி பறிபோகும் போது 
நீ தளராமல் இருக்கலாம்.


முதல் தேதியில் சம்பளம் கிடைத்தாலும் 
மத்தியில் எடுத்து செலவழி.
முதல் தேதியில் தவறி கிடைத்தாலும் 
நீ சமாளித்து விடலாம்.

அறுசுவை உணவு கிடைக்கும்போது 
பத்தியத்தையும் தெரிந்து கொள்.
ஒருவேளை அறுசுவை இல்லாதபோது 
உனக்கு வித்தியாசம் தெரியாது.

புகழ் உச்சியில் இருக்கும்போது 
இயல்பாய் இருந்து பழகு.
புகழ் மறையும்போது 
நீ கேலிக்கு ஆளாகமாட்டாய்.



மாளிகை வாழ்க்கை வாழும்போதும் 
அவ்வப்போது எளிமை மேற்க்கொள் 
கோலம் மாறினாலும் 
நீ நிம்மதி பெறுவாய்.



வெற்றியடையும் போதும் 
தோல்வியை நினைவில் கொள் 
வெற்றி கிட்டாதபோது 
உனக்கு மனவலிமை கொடுக்கும்.

நினைத்தது கிடைக்காதபோது 
கிடைத்ததை ஏற்றுக்கொள் 
திருப்தி என்ற எண்ணம் 
உனக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.



ஓடி ஓடி உழைக்கின்ற போதும் 
தேவையான ஓய்வு எடுத்துக்கொள் 
ஓடி ஓய்ந்த பிறகு 
உனக்கு மனஅமைதி கொடுக்கும்.



மகிழ்ச்சி வரும்போது 
முகத்தில் அமைதி காட்டு 
ஒருவேளை உனக்கு துக்கம் வந்தால் 
உனது இதயம் உடைந்து விடாது.

உறவுகள் இருக்கும்போது 
தனிமையையும் கற்றுக்கொள்.
உறவுகள் பிரியும்போது 
நீ துன்பப்படமாட்டாய்.



நினைப்பது நடக்காதபோது 
நடந்தது நன்மையென எண்ணு
அந்த அளவான ஆசை உள்ளம் 
உனக்கு வாழ்கையில் தெளிவை தரும்.



இருக்கின்றபோது இல்லாது போல் இரு 
இல்லாத போது இருக்கின்றது போல் இரு 
உனக்குள் எல்லாமே இருக்கிறது 
எல்லாமே உனக்குள் இல்லை.

ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE PUTHU KAVITHAI

ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 

'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE

PUTHU KAVITHAI 
மதுரை கங்காதரன் 


ஒரு புன்னகை முகத்தின் மலர்ச்சி 
ஒரு பார்வை இதயத்தில் குளிர்ச்சி 

ஒரு வார்த்தை மனதில் கிளர்ச்சி 
ஒரு ஸ்பரிசம் உடலில் எழுச்சி 

ஒரு அன்பு வாழ்கையில் வளர்ச்சி 
ஒரு அழகு உடலில் கவர்ச்சி 

ஒரு நம்பிக்கை செய்ய வைக்கும் முயற்சி 
ஒரு அறிவு வென்று விடும் சூழ்ச்சி 

ஒரு சுறுசுறுப்பு போகச்செய்யும் தளர்ச்சி 
ஒரு அனுபவம் கொடுக்கும் முதிர்ச்சி 

ஒரு பொறுமை தவிர்க்கச் செய்யும் அதிர்ச்சி 
ஒரு உழைப்பு வாழ்கையில் கிடைக்கும் புகழ்ச்சி 

ஒரு அன்பு மறையச் செய்திடும் இகழ்ச்சி 
ஒன்றிருந்தால் வாழ்கையில் உண்டாகும் மகிழ்ச்சி   

 

Tuesday, 15 January 2013

அடிமைகள் பலவிதம் நீங்கள் ... புதுக்கவிதை - TYPES OF SLAVES BUT YOU.. PUDHU KAVITHAI

அடிமைகள் பலவிதம் நீங்கள் ...
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 
TYPES OF SLAVES BUT YOU..
PUDHU KAVITHAI 

  

பெற்றோருக்கு குழந்தைகள் அடிமை 
அண்ணனுக்கு தம்பி அடிமை 
அக்காவுக்கு தங்கை அடிமை 
கணவனுக்கு மனைவி அடிமை 



சமூகத்திற்கு உறவுகள் அடிமை 
காதலனுக்கு காதலி அடிமை 
ஆசிரியருக்கு மாணவன் அடிமை 
தலைவனுக்கு தொண்டன் அடிமை 



சீரியலுக்கு மாந்தர்கள் அடிமை 
டாஸ்மாக் கு குடிமக்கள் அடிமை 
டி.வி க்கு மக்கள் அடிமை 
கல்விச்சாலைகள் பணத்திற்கு அடிமை 

உடலுக்கு உயிர் அடிமை 
முதலாளிக்கு தொழிலாளி அடிமை 
பணக்காரனுக்கு ஏழை அடிமை 
கடவுளுக்கு பக்தன் அடிமை 

வலியோருக்கு எளியோர் அடிமை 
பூனைக்கு எலி அடிமை 
பணத்திற்கு பதவி அடிமை 
அன்புக்கு உயிர்கள் அடிமை 

அன்னியனுக்கு நாம் அடிமை 
மக்கள் அரசுக்கு அடிமை 
அதிகாரத்திற்கு ஏழ்மை அடிமை 
கவர்ச்சிக்கு அறிவு அடிமை 



நன்றாக யோசி !
அடிமை சுகமா? கணமா ?
அடிமையினால் சுதந்திரம் இழக்காதே 
அடிமையினால் உரிமைகளை மறவாதே 

அன்புக்கு அடிமையில் தவறில்லை 
அடிமைப்பட்டு அறிவை இழக்கலாமா 
அடிமைப்பட்டு திறமைகளை புதைக்கலாமா 
அடிமைப்பட்டு தன்னம்பிக்கை இழக்கலாமா 



அடிமைப்பட்டு விடாமுயற்சி விடலாமா 
அடிமைப்பட்டு வளத்தை தாரைவார்க்கலாமா 
அடிமைப்பட்டு விவசாயத்தை அழிக்கலாமா 
அடிமைப்பட்டு தொழிலை நசுக்கலாமா 

  

அடிமை வாழ்வு போதும் 
உனக்குள்ளிருக்கும் அடிமை சங்கிலி அறுபடட்டும் 
அடிமைபடுத்தும் ஆட்சி ஒழியட்டும் 
சுதந்திர எண்ணம் வெற்றிக்கொடி பறக்கட்டும் 

 

அடிமை பயம் விலகட்டும் 
அன்புமயம் பெருகட்டும் 
அடிமைகளை மீட்போம் 
ஆரோக்கியமான வழியை காட்டுவோம்.

 

Friday, 11 January 2013

பதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை -PONGAL VIZHA - PUTHU KAVITHAI

பதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை -
  
புதுக்கவிதை - 
PONGAL VIZHA - PUTHU KAVITHAI
   
மதுரை கங்காதரன் 

அதிகாலையில் கதிரவனை வணங்கச் செய்யும்
மங்கயர்களை அழகிய கோலங்களை இடச் செய்யும்
மாடு கன்றுகளுக்கு அலங்காரம் பண்ணச் செய்யும்
அனைத்து உறவுகளையும் அழைக்கச் செய்யும்

கரும்பின் இனிமையை கடித்து சுவைக்கச் செய்யும்
ருசியாக சர்க்கரைப் பொங்கலை பொங்கச் செய்யும்
வீரக்காளைகளை அடையாளம் காட்டும்
உழவர்களின் உழைப்பைப் போற்றச் செய்யும்

தொழிலில் லாபத்தை பெருகச் செய்யும்
செய்யும் வேளையில் புத்துணர்ச்சி கொடுக்கும்
அமுது கொடுக்கும் பூமியை நன்றி காட்டச் செய்யும்
பழையது கழித்து புதியதை கூட்டச் செய்யும்

என்றும் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கச் செய்யும்
கஷ்டங்கள், கவலைகளை மடியச் செய்யும்
உங்கள் கனவுகளை நனவாகச் செய்யும்
உலகில் வாழ் தமிழர்களை வாழ்த்துக்களைச் சொல்லும்

மொத்தத்தில் பதினாறு செல்வங்கள் பெற்று
பெருவாழ்வு கொடுக்கும் இந்த பொங்கல் திருநாளில்

இல்லறங்கள் நல்லறமாய் சிறக்க 
எல்லோர் இதயங்கள் தூய்மை பெற 
ஏற்ற இறக்கமில்லா சமவாழ்வு வாழ 
வாழ்வு கரும்பின் மேலிருந்து நுனிவரை இனிமை கூடுவது போல 

  

எல்லோருக்கும் உள்ளம் கனிந்த 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  

நன்றி 
 
வணக்கம்.