Pages

Wednesday, 23 January 2013

'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள் - WEAR 'CONFIDENT' GLASS AND DEFEAT THE WORLD


'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் ! 
உலகை வெல்லுங்கள்!! -
WEAR 'CONFIDENT' GLASS AND DEFEAT THE WORLD
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


 

அது என்னங்க? புதுசா நம்பிக்கை கண்ணாடி! அது எங்கே கிடைக்கும்? என்று கேட்பது எனக்கு கேட்கிறது! அதாவது நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி எந்த நிறத்தில் இருக்கின்றதோ அந்த நிறத்தில் தான் உங்கள் காட்சிகள் தெரியும். நீங்கள் பச்சை கண்ணாடியை அணிந்து கொண்டால் உங்களுக்குத் தெரிவது எல்லாமே பச்சையாகத் தான் தெரியும். நீங்கள் நீல நிறக் கண்ணாடியை அணிந்துகொண்டால் உங்களுக்கு எல்லாமே நீல நிறத்தில் தெரியும்.
  
உலகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அது குல தெய்வமாக இருக்கலாம். மந்திரமாக இருக்கலாம். மனிதர்களாக, கடவுளாக, சென்டிமெண்டாக, வார்த்தைகளாக, படமாக, எண்ணமாக ஏன் சுயமாக இன்னும் பல விதத்தில் இருக்கலாம். அந்த மாதிரியான நம்பிக்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்கிறார்கள். சில சமயங்களில் சிலர் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை நிறைவேறாமல் இருக்கும் சமயத்தில் வேறு மாதிரியான நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள். எது இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் நம்பி காலத்தை தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

 
உதாரணமாக, இரு இளைஞர்கள் ஆற்றின் மறுகரையில் இருக்கும் அவர்களின் வீட்டிற்க்குச் செல்ல நினைத்தார்கள். ஆனால் அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததை கவனித்தார்கள். அவர்களுக்கு நீச்சல் நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்குள் பயம் இருந்தது. என்ன செய்வது அறியாமல் சுற்றும் முற்றும் பார்க்கும்பொழுது தூரத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் சென்று, "ஐயா! நாங்கள் இருவரும் ஆற்றைக் கடக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்" என்று  வேண்டினார்கள்.
   
அதற்கு முனிவரும் செவி சாய்த்து தன்னிடம் இருந்த இரு பொட்டலங்களை கையில் எடுத்து எதோ சில மந்திரங்களை உச்சரித்து ஆளுக்கு ஒன்றை கையில் கொடுத்தார். அதோடு " இந்த பொட்டலத்தில் மிகப் பெரிய சக்தியை உள்ளடக்கி வைத்திருக்கிறேன். இவற்றை வைத்துக்கொண்டு நீந்துங்கள். இவைகள் உங்கள் கையில் இருக்கும் வரையில் உங்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் வராது. ஆனால் ஒரு நிபந்தனை. ஆற்றை கடந்து முடியும் வரையில் இந்த பொட்டலத்தை எக்காரணம் கொண்டும் திறந்து பார்க்கவே கூடாது" என்றார். இருவரும் அதை ஏற்றுக்கொண்டு ஆற்றை கடக்க புறப்பட்டார்கள்.

  
அவர்கள் அந்த பொட்டலத்தை கையில் வாங்கியவுடன் ஏதோ ஒரு சக்தி உடம்பினுள் புகுவதை  உணர்ந்தார்கள். அவர்கள் நீந்த ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம் ! அவர்கள் பயமில்லாமல் நன்றாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.  பாதி வழியை மிக இலகுவாக கடந்தார்கள். இருவரில் ஒருவனுக்கு அந்த பொட்டலத்திற்குள் என்ன சக்தி இருக்கின்றது என்பதை அறிய ஆவலாக இருந்தான். முனிவரின் நிபந்தனையை மீறி அந்த பொட்டலத்தை திறந்து பார்த்தான். அதற்குள் ஒரு சிறிய 'கல்' இருந்தது. உடனே அவன் மனதில் 'இந்த சிறிய கல்லையா நம்பி ஆற்றில் இறங்கினேன்.ஐயையோ நான் என்ன செய்வேன்?' என்று நினைக்க நினைக்க நீந்துவதை விட்டான். சீக்கிரமே அவனை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மற்றொருவனோ பிரித்து பார்க்காமல் முனிவரின் வார்த்தையை நம்பினான். எளிதாக கரை சேர்ந்தான். அன்று முதல் எந்த செயலை செய்ய நினைத்தாலும் அந்த பொட்டலம் அவனுக்கு எல்லா செயலிலும் வெற்றியைத் தர ஆரம்பித்தது.


இது தான் வாழ்க்கை வெற்றியின் ரகசியம். எந்த காரியம் செய்தாலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை கொண்டு செய்யுங்கள். அந்த காரியம் இனிதே நடக்கும். உங்களிடமும் ஒரு 'நம்பிக்கை' கண்ணாடி இருக்கின்றது. அதை எப்போதும் அணிந்துகொண்டு செய்யுங்கள். நினைத்தது நடக்கும். மற்றவர்கள் உங்களை திசை திருப்ப அவர்கள் அணிந்து கொண்டிருக்கும் கண்ணாடியின் நிறம் தான் காட்சியாக தெரிகிறது' என்று உங்களைக் குழப்புவார்கள். நீங்கள் குழம்பாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறம் காட்சியாகத் தெரிந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். இந்த நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதித்துக்கொண்டால் உலகை வெல்லலாம்.

'நம்பிக்கை' கண்ணாடி அணிவீர்!
உலகை வெல்வீர்! 
  

Saturday, 19 January 2013

'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை 'UNDERSTANDING' GIVES HAPPY AND SUCCESSFUL LIFE

'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை 
'UNDERSTANDING' GIVES HAPPY AND 
SUCCESSFUL LIFE
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 
சுமூகமான வாழ்க்கைக்கும் , வெற்றி வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது 'புரிதல்' என்பதில் சந்தேகமே இல்லை. வீட்டிலும் சரி, வியாபாரத்திலும் சரி, தொழிலும் சரி, வேலையிலும் சரி, சேவையிலும் சரி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டால் வாழ்கையே இனிமையாக இருக்கும். எவ்வளவு வேகமாக ஒருவரை புரிந்து கொள்வீரோ அவ்வளவு வேகமாக அவர்களின் மூலம் மகிழ்வு பெறுவீர்கள். 
ஒவ்வொரு வினாடியும் மாறும் இந்த உலகத்தில் மனிதனின் மனமும் மாறும் தன்மை பெற்றுவிட்டது. அப்படியிருக்கும் போது மனிதர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் கடினமான வேலை தான். மனிதன் நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இருப்பது சந்தேகம் தான். மனிதனை சுற்றியிருக்கும் சூழ்நிலை அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு ஒருவரை , உறவுகளை, சுற்றங்களை, சமூகத்தினரை, உலகத்தை புரிந்துகொள்ள முடியும். மாறும் மனதிற்கேற்றவாறு உங்களுடைய 'புரிந்து கொள்வதிலும்' மாற்றம் தேவைபடுகிறது. 
நேற்றைய விலை இன்று இல்லை. நேற்றைய இடத்தில் இன்று இருப்பதில்லை, நேற்று வாங்கிய இடத்தில் இன்று வாங்குவதில்லை. நேற்று போல் அரசாட்சி இன்று இல்லை, நேற்று இருந்தது இன்று இல்லை, நேற்று இருந்தவன் இன்று இல்லை. இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். பேசி பேசி புரிந்துகொள்ளுதலை அதிகப்படுத்த முடியாது. பெரும்பாலும் நம்பிக்கையின்மையின் காரணமாக எல்லாவற்றையும் மேலோட்டமாகவே பேசுவதால் 'புரிதல்' சற்று கடினமாகிறது. ஒருவேளை வெளிப்படையாக பேசிவிட்டாலோ,  அதுவே பலவீனமாக எடுத்துக்கொண்டு அவர்களை  கைபொம்மையாய் மாற்றிவிடுகின்றனர்.
'புரிதல்' அதிகப்படுத்த உங்களுக்குள் இருக்கும் இரகசியங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குணத்தை மட்டும் தெளிவாக காட்டுங்கள். தேவையான , பொதுவானவற்றை  மட்டும் தெளிவாக பேசினால் போதும். உங்கள் குணத்தை முன்னமே பேசினால் நல்லது.
புரிதலுக்கு முட்டுக்கட்டையாக பலகாரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது உங்களது எண்ணங்களையும், விருப்பங்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதாலும், முழுமையாக பகிர்ந்து கொள்ளாததாலும் ஆகும். பெரும்பாலோர் தங்கள் எண்ணங்களை வெளியில் சொல்லாமல் மனதிற்குள் புதைத்தும், விட்டுகொடுத்தும், மற்றவர்களை அனுசரித்தும் வாழ்கின்றனர். அவைகளை கடைபிடிக்கும் வரையில்  புரிதல் நன்றாக செயல்படுகின்றது. ஒரு கட்டத்தில் அதன் அளவு மீறும்போது 'விரிசல்' விழுகின்றது. அதுவே உறவு முறிவிற்கும் , தோல்விக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. அனுசரிப்பு இருக்கவேண்டியது தான். ஆனால் அதை சொல்லிவிடவேண்டும். 'எனக்கு இது பிடிக்காது. ஆனால் உங்களுக்காக இதை இப்போது செய்கிறேன். மீண்டும் செய்யமாட்டேன்' என்று சொல்லும்போது மீண்டும் அத்தகைய நிகழ்வு தவிக்கப் படுகின்றது. அதனால் புரிதல் மேம்படுகின்றது. மேலும் சிலவற்றை மாற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. 

கோபம் :

கோபம் வருவதிற்கு முக்கிய காரணம் ஆணவம், அகங்காரம், ஈகோ. 'நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்' என்கிற உணர்வு அதிகமாகும்போது 'புரிதல்' குறைகின்றது. கோபம் சுயநலத்தின் வெளிபாடு. எதிரில் உள்ளவர்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் செயல்படுவதும், பழிக்குப்பழி நோக்கம், உயர்ந்தவன் என்பதை திமிராக காட்டுவதாகும். அப்படி நீங்கள் இருந்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. ஆனால் கோபம் அன்பாக மாறும்போது இருவருக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை உண்டாகின்றது. மகிழ்ச்சி கிடைப்பதுடன் வெற்றியும் பெறலாம்.

விருப்பு வெறுப்பு:

உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அதை பிடிவாதமாக செய்யச் சொல்வது அதிக பிரச்சனைகளைத் தரும். இங்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விட்டால் இருவருடையை எண்ணங்களும் ஈடேறும். இருவரும் நன்மை பெறுவீர்கள்.

தெளிவு இல்லாமை:

சொல்லவேண்டியதை தெளிவாகச் சொல்லாமலும், செய்ய வேண்டியதை சரியாக செய்யாமலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழம்பும்போது உங்களை யாரும் நம்பமாட்டார்கள். அதற்கு சிறந்த ஆலோசகரை நியமித்தோ அல்லது அவர்களை கலந்து ஆலோசித்து அதன்படி சொல்லும்போது சொல், செயல் இரண்டும் ஒத்துப் போகும். அந்த நம்பிக்கை உங்களுக்கு வெற்றி கொடுக்கும்.

பொறாமை:

பொறாமை என்பது தீர்க்கமுடியாத ஒரு மனோவியாதி. அதற்கு இயலாமையும், முயலாமையும் காரணமாகும். அதற்கு உங்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மனவலிமை, ஆற்றல், திறமை தேவை. 'அவன் முன்னேறிவிட்டான். அவனின் முன்னேற்றத்தை தடுத்து அழிக்க வேண்டும்' என்கிற எண்ணங்களை எக்காரணம் கொண்டும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. பொறுமையுடன் உங்கள் திறமையை அதிகப்படுத்திக்கொண்டால்  உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி.

அலட்சியம்:

எதையுமே அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயல்பட்டால் எல்லோருமே உங்களை மதிப்பர். உங்களிடம் அன்பு காட்டுவர். கெட்ட எண்ணம் இல்லாமல் நல்ல எண்ணங்களோடு இருக்கும் உங்களை நன்றாக புரிந்துகொண்டு உதவிகள் பல செய்வதால் உங்கள் வாழ்க்கை சுவையாக மாறும்.

இதைதவிர உங்களுக்கு பகையுணர்வு அறவே இருக்கக்கூடாது. ஒற்றுமையோடு செயல்படவேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கவேண்டும். 
இனி உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை தான்.        
நன்றி 
வணக்கம்.

Thursday, 17 January 2013

நம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை CONFIDENT AND LESS CONFIDENT LIFE PUTHU KAVITHAI

நம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை 

CONFIDENT AND LESS CONFIDENT LIFE
PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன் 


தந்தைக்கு மகனிடத்தில் நம்பிக்கையில்லை 
மகனுக்கு தந்தையினிடத்தில் நம்பிக்கையில்லை 
வாழ்க்கை ஓடுகிறது 

கணவனுக்கு மனைவியின் மேல் நம்பிக்கையில்லை 
மனைவிக்கு கணவன் மேல் நம்பிக்கையில்லை 
குடும்பம் நடக்கிறது 


மக்களிக்கு அரசியவாதியின் மேல் நம்பிக்கையில்லை 
அரசியல்வாதிகளுக்கு மக்களிடத்தில் நம்பிக்கையில்லை 
ஆட்சி நடக்கிறது.

ஒருவனுக்கு தன நண்பனிடத்தில் நம்பிக்கையில்லை 
நண்பனுக்கு அவனிடத்தில் நம்பிக்கையில்லை 
நட்பு தொடர்கிறது. 


வியாபாரத்தில் பங்குதாரரின் மேல் நம்பிக்கையில்லை 
பங்குதாரர்களிடையே நம்பிக்கையில்லை 
வியாபாரம் நடக்கிறது.

காதலனுக்கு காதலியிடத்தில் நம்பிக்கையில்லை 
காதலிக்கு  காதலனின் மேல் நம்பிக்கையில்லை 
காதல் தொடர்கிறது.

முதலாளிக்கு ஊழியரிடம் நம்பிக்கையில்லை 
ஊழியருக்கு முதலாளியினிடத்தில் நம்பிக்கையில்லை 
தொழில் நடக்கிறது.


கடன் கொடுப்பவன் அதை வாங்குபவனிடம் நம்பிக்கையில்லை 
வாங்குபவன் கொடுப்பவன் மேல் நம்பிக்கையில்லை 
வட்டி தொழில் நடக்கிறது.

பக்தனுக்கு கடவுளின் மேல் நம்பிக்கையில்லை 
கடவுளுக்கு பக்தனின் மேல் நம்பிக்கையில்லை 
வழிபாடு தொடர்கிறது.

நிரபராதிக்கு நீதிபதி மேல் நம்பிக்கையில்லை 
நீதிபதிக்கு நிரபராதி மேல் நம்பிக்கையில்லை 
நீதிமன்றம் இயங்குகின்றது.

நம்பும் வாழ்க்கை வசந்தம் தரும் 
நம்பாத வாழ்க்கை வாழ்வில் புயல் வீசும் 
ஒரு நிலையில் இருக்கவிடாது.

நம்பாமல் வாழும் வாழ்க்கை 
துடுப்பு இல்லாத படகு 
நூலறுந்த பட்டம்.


ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை 
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் 
வாழ்வை வளப்படுத்தும்.


நம்பிக்கை அதிகமாகும்போது அன்பு தானாக வரும் 
சந்தேகப்பேயை துரத்தியடிக்கும் 
அதிர்ஷ்ட தேவதையை அழைத்துவரும்.

உங்களை நீங்களே நம்புங்கள் 
மற்றவர்கள் உங்களை எளிதாக நம்புவர்.
நம்பினால் நினைக்கும் வாழ்க்கை உங்கள் கையில்.

நன்றி 

வணக்கம்.