Pages

Thursday, 14 February 2013

வான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது ? RAIN , RAIN WHAT HAPPEN TO YOU?

வான் மழையே ! உனக்கென்ன ஆகிவிட்டது ?
               
RAIN ! RAIN ! WHAT HAPPEN TO YOU?

                

                     புதுக்கவிதை 
               மதுரை கங்காதரன் 

 
நேரத்தை கடைப்பிடிப்பதில் 
மனிதர்களை மிஞ்சி விட்டாய்!
அவர்கள் தான் சொன்ன நேரத்தில் 
சொன்ன இடத்தில் வராதவர்கள்!

உனது கடமை செய்வதில் 
அரசியல்வாதிகளையும் முந்தி விட்டாய்!
அவர்கள் எல்லோரும் தன வேலைகளை 
சரியான நேரத்த்தில் செய்யாதவர்கள்!

வான் மழையே நீ மாறிவிட்டாய் 
உனது கடமையை மறந்துவிட்டாய் 
உனது கொடை குணத்தை இழந்துவிடாதே 
மக்களை துயரத்தில் தள்ளிவிடாதே 

மழையே மழையே வா வா !
காலம் தவறாமல் பெய்து வா !
தண்ணீர் பிரச்சனை தீர்க்க வா !
உலகை காக்க விரைந்து வா !

      

வான்வெளியில் தோன்றும் கருமேகங்கள் 
தேனை உடைய தேன்கூடுகள் 
மழைத் துளிகளோ தேன் துளிகள் 
மக்களுக்கோ அது ஜீவாதாரம்.

மழையில் நனைவது மகா சந்தோசம் 
அதிகமானால் வருவது ஜலதோஷம் 
மரம்,செடி,கொடி செழிப்பது மழையாலே 
'நைட்ரஜன் சுழற்சி' நடப்பது அதனாலே!

சிப்பியில் ஒரு மழைத்துளி 
முத்தாய் மாற்றும் சக்தி கொடுக்கிறாய் 
பூமியில் நீ தரும் பலத் துளி சேர்ந்த மழை 
மனித வாழ்க்கையை  முத்தாய் மாற்ற வா வா! 

  

மழையில்லையேல் பசுமை இல்லை 
பசுமையில்லையேல் உயிர்கள் இல்லை 
உயிரில்லையேல் உலகில்லை 
ஆதலால் மழையே மழையே வா வா!

மக்கள் மனம் குளிர்விக்க 
புவி வெப்பமாவதை தடுக்க 
அனைத்து ஜீவராசிகள் உயிர் வாழ 
காலம் தவறாமல் பெய்து வா வா!

                     நன்றி 
   

                 வணக்கம்.

  

பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை / வாங்கும் சந்தை - OLD GOLD, SILVER JEWELRIES BUY / SALES BAZAAR

பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் 
வாங்கும் சந்தை -
OLD GOLD, SILVER JEWELRIES BUY / SALES BAZAAR.
இப்படியும் நடக்கலாம் எதிர் காலத்தில்
ஒரு சமயத்தில் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வேண்டுமென்றால் வருடக்கணக்கில் காத்திருந்தோ அல்லது அதிக விலை கொடுத்தோ வாங்க வேண்டும். நாளடைவில் புதிய பொருளாதாரக் கொள்கை படி பலவித நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அதிக உற்பத்தி செய்து சந்தையில் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் குறைவாக இருந்த வாகனங்கள் போக போக விலை அதிகமாகியது. அதோடு நில்லாமல் தவணை முறை விற்பனையாலும்  விலையை அதிகமாக்கிவிட்டது என்று சொல்லலாம். மேலும் தினம் தினம் புதிது புதிதாக வரும் மாடல்களை  வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆகையால் கையில் இருக்கும் வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்க ஆரம்பித்தனர். 



பெரிய நிறுவனங்களைப் போல் 'ஷோ ரூம்' வைப்பதற்கு பணமில்லாதவர்கள் 'செகண்ட்ஸ் சேல்ஸ்' என்று தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அதிலும் அவர்கள் பழைய வாகனத்தை புதிய வாகனத்தைப் போல் மாற்றி விற்கின்றனர். தரமாக , குறைவான சரியான விலையில் வாகனங்கள் கிடைப்பதால் மக்களுக்கும் திருப்தி தான்.  
இதேபோல் இப்போது தங்கத்திற்கு வருவோம். தங்கத்தை தாங்காதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம். அதை விரும்பாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம். அது அந்த காலம். இப்போது மக்கள் தங்கத்தை தேவை இருந்தால் மட்டுமே வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். ஏனென்றால் அதன் விலை. நேற்றைய விலை போல் இன்றில்லை. ஒரு நேரத்தில் அதன் விலை விறு விறுவென்று ராக்கெட் வேகத்தில் ஏறி கிராமுக்கு 3150 ரூபாய் தொட்டது. உடனே மீடியாக்கள் அதன் விலை வெகுவிரைவில் கிராம் ரூபாய் 5000 க்கு தொடும் என்றனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதற்கு மாறாக இப்போது கிராம் ரூபாய் 2850 க்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட கிராமுக்கு ரூபாய் 300 குறைவு. மேலும் சிலர் அப்போதைய விலையில் கிராம் ரூபாய் 160 க்கும் குறைவாக விற்று வருகிறார்கள்.
இது எதனால்? மக்களுக்கு தங்கம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதைத் தான் காட்டுகிறது. அதற்கு முக்கியமான காரணம் விலைவாசி தான். ஒரே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் , போக்குவரத்து செலவு, பால் மின் கட்டணம், வாடகை, கேளிக்கை செலவு, கல்வி போன்றவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. இப்படியே போனால் யார் தங்கத்தை வாங்குவார்கள்? வயிற்றுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கவே மக்கள் திண்டாடுகிறார்கள்?!
இந்த விலையேற்றம் எதனால் ஏற்பட்டது? சில வருடத்திற்கு முன் தங்கம் விலை சீராக இருந்தது. அதேபோல் ஏறுவது இறங்குவது குறைவாகவே இருக்கும். ஆனால் எப்போது ஊக வணிகத்தில் தங்கம் போன்ற பலவகைகள் நுழைந்ததோ அப்போதிலிருந்து ஏறுமுகம் தான். தங்கம் கிராமுக்கு ரூபாய் 600 இருக்கும்போது பல பெரிய நிறுவனங்கள், முதலாளிகள், பணம் படைத்தவர்கள், வங்கிகள் போன்றவர்கள் வாங்கி குவித்தனர். ஏனெனில் தங்கம் நமது நாட்டு மக்களின் அந்தஸ்து அடையாளம். எப்படியும் ஏறத்தான் செய்யும் என்கிற உறுதியான நம்பிக்கை. அதே போல் அதன் விலையும் சிகரத்தை தொட்டது. அதற்குத் தகுந்தாற்போல் மீடியாக்களும் நிறைய 'பில்ட் அப்' செய்து தங்கத்தை எட்டாத விலைக்கு வைத்துவிட்டார்கள். 
அதனால் ஏராளமான சிறிய நகை கடை மற்றும் ஆசாரிகள் இப்போதும் சிரமப் பட்டு வருகின்றனர். தங்கத்தை வாங்காமல் இருக்க முடியாது. இன்றைய சூழ் நிலையில் தங்கத்தை வாங்குபவர்கள் மிக மிக குறைவு தான். அதை அடகு வைத்து வீணாக வட்டி கட்டும் சூழலில் தான் இப்போது மக்கள் இருக்கின்றனர். இதனால் அடகு கடைகள் அதிகமாக முளைத்து விட்டனர். சிறிது பணத்திற்கு அதிகமான நகைகள் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். மேலும் அதை திருப்புவது அவ்வளவு எளிதாகவும் இல்லை. அதோடில்லாமல் பல அடகு கடை தங்கத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி ஓடிவிடுகின்றனர். அவர்களை பிடிப்பது குதிரைக் கொம்பு தான்.
இப்படி இருக்கும்போது இனி வரும் காலத்தில் 'எக்ஸ் ஷோ ரூம் தங்க நகைகள் விற்பனைக்கு' என்று வருவதற்கு வெகுதூரத்தில் இல்லை. ஏராளமான நகை கடைகள் இருப்பதாலும், மேலும் அவர்களால் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட முடியாத்தாலும்  பழைய தரமான 916 நகைகளை பாலிஷ் செய்து குறைந்த விலையில் கூலி, சேதாரம் இல்லாமல் விற்கும் நிலை உருவாகும். மக்கள் ஒரு சாரார் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் ஒரு சாரார் நல்ல விலைக்கு விற்கவேண்டுமென்று விரும்புகின்றனர். அடகு வைத்து வட்டி காட்டுவதற்கு பலர் தயாராக இல்லை. அதில் நம்பிக்கையும் குறைந்து வருகின்றது. ஆகையால் நெட்டையோ குட்டையோ விற்பதில் விருப்பம் காட்டி வருகின்றனர். 
தங்கம் விற்பதற்கு அவர்களுக்கு தெரிந்த  நம்பிக்கையானவர்கள் ஒரிருவர்கள் தான் இருப்பதால் சற்று கஷ்டப் பட்டு வருகின்றனர். அவர்களிடத்தில் அவ்வளவு இருக்குமா என்பது சந்தேகமே? ஆனால் இதேபோல் தரமான நம்பிக்கையான நகை வியாபாரிகள் பலர் இருந்தால் பல வாடிக்கையாளர்களுக்கு  கூலி, சேதாரம் இல்லாமல் குறைந்த விலையில் தரமான நகைகள் கிடைக்குமல்லவா? 

அதேபோல் வரும் நாட்களில் உலகத்தில் இதுநாள் வரை நடை பெறாத வியாபாரம் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் 'பழைய நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை' என்று வரும். அதில் பெரிய நிறுவனம் முதல் சிறிய வியாபாரிகள் வரை கலந்து கொளவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த சந்தை அனாவசியமாக யாரும் நுழையாத வண்ணம் அவர்களும் இருப்பிட முகவரி, போட்டோ மற்றும் அனுமதி பெற்ற நம்பிக்கையான தங்க நகை புரோக்கர், ஆசாரிகள்  அல்லது ஏஜென்ட் அல்லது நகை கடை உரிமையாளர் மூலமாக வியாபாரம் நடைபெறும். சந்தையில் தங்கம் தரம் பார்ப்பவர்களை கூட நியமிக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகை கட்டடித் தான் கலந்து கொள்ளவேண்டும். இதில் நல்ல பயனும் , வியாபாரமும் இருக்கும். இதனால் சிறிய தங்க நகை வியாபார்கள் புத்துயிர் பெறுவார்கள். அவர்களின் வாழ்கையும் மலர்ச்சி பெறும் . பலருக்கு நன்மை உண்டு. 
இதில் காணப்படும் சிறப்பு அம்சங்கள்:

1. நம்பிக்கையான வியாபாரத்தின் மூலம் உடனே பணம் கிடைக்கிறது.

2. அன்றைய விற்பனை விலையிலிருந்து மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். (அது வாடிக்கையாளரின் அவசரம் மற்றும் நிதானம் பொருத்து விலை மாறும்)

3. கூலி , சேதாரம், கல் போன்றவற்றின் விலை இல்லாமல் வாங்கலாம்.

4. வரிகள் கிடையாது.

5. 916 தங்கம் தரம் கிடைக்கும்.

6. பழைய டிசைன்கள் இப்போது அதிக கிராக்கி. உறுதியும் கூட.

7. தங்கம் மட்டுமில்லாமல் வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்றவைகளும் விற்கலாம். 

8. அடகு வைக்கும் வட்டி பணம் குறைகிறது.   

9. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறிய கொலுசு, மோதிரம் , தோடு போன்றவைகளை எளிதாக வாங்க உதவிடும். (அவர்கள் பெரிய நகைக்கடைக்கு போக தயங்குவார்கள்)

10. மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரும் அற்புத முயற்சி.

11. இறக்குமதி குறைக்கவும், இந்திய நாணய மதிப்பை கூட்டுவதற்கும் பயன்படும்.

வந்தால் வரவேற்போம்!
அது வருகின்ற நாளை எதிர்பார்ப்போம். 

நன்றி!

வணக்கம்.

Tuesday, 12 February 2013

பிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள் - .. HAVE CONFIDENT TO SOLVE YOUR PROBLEM YOURSELF

பிரச்சனை தீர்க்க முடியும் என்று 
தன்னம்பிக்கை கொள் - 
.. HAVE CONFIDENT TO SOLVE YOUR PROBLEM YOURSELF 
தன்னம்பிக்கை கட்டுரை 
மதுரை கங்காதரன் 
எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், குருவாக இருந்தாலும் அவர்களால் உனது குறைகளையும், கஷ்டங்களையும் கேட்க முடியுமே தவிர உனது குறைகளை தீர்க்க முடியாது. அதுவும் நீ எவ்வளவு லட்சம் கொடுத்தாலும் நடக்காது. அதாவது உனது பசியை போக்குவதற்கு அவர்களுக்கு அறுசுவை உணவும், முக்கனியும், பொன்னும் , பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. உனக்கு பசியென்றால் நீ சாப்பிட்டால் தான் உன் பசி அடங்கும்.

                 
உனது கஷ்டத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யாராலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எவரேனும் உனது கஷ்டத்தை தீர்க்கிறேன் என்று சொன்னால் அதற்காக பணம் கேட்டால் கட்டாயம் அவர்கள் போலி ஆசாமிகள். அவர்கள் உன்னிடம் பணம் இருக்கும் வரை கறந்துவிட்டு டாட்டா காட்டி 'எஸ்கேப்' ஆகிவிடுவார்கள். அந்த நிலையில் உனக்கு கூடுதல் கஷ்டம் வந்து சேரும்.

உனக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் நிதானமாக யோசி. உடனே யோசிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் அப்போது நீயே பெரும் குழப்பத்தில் இருப்பாய். உனது மனம் தெளிவகாவும், யோசிக்கின்ற நிலையிலும் இருக்காது. சிறிது நேரம் விட்டு அல்லது ஓரிரு நாட்கள் தள்ளியோ பிரச்சனையின் ஆழத்தைப் பொறுத்து நேரம் எடுத்துக்கொண்டு யோசித்தால் மிகவும் நல்லது.


பிரச்சனைக்கான காரணம் நீயா ? அல்லது வெளியிலா? என்பதை உறுதிபடுத்திக்கொள். உன்னால் என்றால் பிரச்சனையை மேலும் வளரவிடாமல் சமாதானமாகவோ அல்லது அதனின்று விலகியோ அல்லது துண்டித்தோ விடு. அதை கண்டும் காணாமல் இருந்து விட்டால் அந்த பிரச்சனை விதை உன் கண்ணுக்குத் தெரியாமலே நெடு நெடுவென்று வளர்ந்து வெட்ட முடியா பெரிய மரமாக வளர்ந்து உன் முன் தினமும் தோன்றி பேயாட்டம் ஆடிவரும். நாளடைவில் அதுவே உனக்கு எமனாகவும் மாறி உன்னை அழித்துவிடும் ஜாக்கிரதை!
                
பிரச்சனை எழும்போது உன் பவீனத்தை பயன்படுத்தி கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி விடுவார்கள். அல்லது தேனாக பேசி உன் பக்கத்தில் மிகப் பெரிய குழியை தோண்டி விடுவார்கள். அப்போது உனது உறவையும் (மனைவியும், பிள்ளைகளையும்), நீ தேடி வைத்த செல்வங்களையும் பத்திரமாக நினைவில் வைத்துக் கொள். எனென்றால் பல போலி ஆசாமிகள் உனது பிரச்னையை போக்குகிறேன் என்று சொல்லி முதலில் உன்னையும் உனது உறவுகளையும் பிரிப்பார்கள். அப்போது தானே உன்னிடமிருந்து பணத்தை பிடுங்குவது எளிதாக இருக்கும். உன்னுடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் கொண்டு போக கொண்டு போக பிரச்சனை பெரிதாக்குமே ஒழிய பிரச்சனைகள் தீராது. அதுவும் ஒரு சிறிய பிரச்சனை நூறு பிரச்னைக்கு வழிவகுத்து விடுவார்கள். மேலும் பிரச்சனை தீக்க வேண்டும் என்கிற வேகத்தில், அல்லது எண்ணத்தில் பணத்தை தண்ணீராய் செலவு செய்வீர்கள். கடைசியில் பிரச்சனை தீராது. பணமும் இருக்காது.
உதாரணமாக பல பிரச்சனைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றது. குறித்த நேரத்தில் தீர்க்க முடிகின்றதா? இவ்வளவுக்கும் படித்தவரும், சட்டத்தைக் கரைத்து குடித்தவர்கள் தான் பிரச்சனை தீர்க்க வாதாடுகிறார்கள். இதற்கும் மேலாக நீதிபதியோ தீர்ப்பை கூறாமல் ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பதிலிருந்து உனக்கு புரிகின்றதல்லவா! ஏனெனில் உனது பிரச்சனை தீர்ப்பதில் அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் அக்கறை இல்லை என்றே கூறலாம்.
ஆக உனது பிரச்சனைகளை உன்னால் தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள். சிக்கல்களை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க முயற்சி செய். கட்டாயம் எந்த பிரச்சனையும் நீ தீர்த்து விடலாம்.
ஆக உனது கஷ்டத்தைப் போக்க தன்னம்பிக்கையுடன் வழி தேடு. நிச்சயம் வழி தெரியும். அதில் பயணம் செய். தொலைந்த மகிழ்ச்சி மீண்டும் உன்னிடம் ஒட்டிக்கொள்ளும். வழிகள் உனக்கு உதவி செய்யும் நட்பாகவோ, உறவாகவோ, இரக்கம் படைத்த மனிதர்களாகவோ இருக்கலாம்.
               
நன்றி 
                      
வணக்கம்.
          


Monday, 11 February 2013

அது கிடைத்து என்ன? கிடைக்காவிட்டாலும் என்ன? - WHAT'S USE IF ALL GET BY LATE - PUTHU KAVITHAI

 அது இப்போது கிடைத்து என்ன?
   கிடைக்காவிட்டாலும் என்ன?

              

WHAT'S USE IF ALL GET BY LATE

              

                         புதுக்கவிதை 
                    மதுரை கங்காதரன் 

இருக்கும் போது கிடைக்காத புகழ்
இறந்த பிறகு கிடைத்து என்ன லாபம்?

தீர்ப்பு நேரத்தில் வெளிவராத உண்மை
தண்டனை முடிந்த பிறகு தெரிந்து என்ன பயன்?

வாழ்கின்ற போது கிடைக்காத அமைதி
உயிர் போகும்போது கிடைத்து என்ன செய்ய?

               

படிக்கின்ற போது கிடைக்காத பாடம்
வேலை தேடி அலையும்போது கிடைத்து என்ன பிரயோசனம் ?

ஆபத்து காலத்தில் உதவாத நட்பும் உறவும்
அது முடிந்த உடன் வந்து சேர்வதால் நன்மை ஏது ?

கண்கள் இருந்தபோது தேடித் பெறாத ஞானம்
கண்கள் குருடான பிறகு வந்தால் எதற்கு பயன்படும்?

குழந்தையாய் இருக்கும்போது காட்டாத அன்பு
பெரியவனாய் வளர்ந்த பிறகு காட்ட மனம் வருமா?

காதலிக்கும் போது சொல்லாத சம்மதம் 
திருமணமான பின்னே நினைத்து என்ன பயன்?



மலர்ந்து இருக்கும்போது தலையில் சூடாத பூக்கள்
அது வாடி வதைந்த பின்னர் சூடிக்கொள்வதில் என்ன பயன்?

செல்வம் கிடைத்த போது தேடி வைக்காதவன் 
அது செலவழித்த பிறகு அழுவதில் என்ன லாபம்?

இருக்கின்றபோது கிடைக்காத நீதி
இறந்த பின்னே கிடைத்தால் யாரைக் காப்பாற்றும்?

எமாற்றுபவனிடம் கொடுத்த சொத்தும் பணமும்
அவனிடம்  இழந்த பிறகு புலம்புவதில் என்ன பயன்?

வாய்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளாதவன்
அது நழுவிய பின்னர் விழிப்படைந்து என்ன பிரயோஜனம்?

ஒருவரின் தாமதம் மற்றவருக்குச் சாதகம்.
மற்றொருவரின் தாமதம் வேறொருவருக்கு பாதகம்.

சாதகமும் பாதகமும் அவரவர் செய்த செயல் படியே  
எப்போதும் எல்லோருக்கும் நன்மைதரும் செயலைச் செய்.

உனக்கு என்றும் எப்போதும் சாதகம்.
பாதகம் என்கிற பேச்சே உனக்கு இல்லை.


                                             நன்றி
                            

                                        வணக்கம்.

                                

Friday, 8 February 2013

LIVE YOUR LIFE AT THE MAXIMUM HAPPY - ஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு


ஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு -


LIVE YOUR LIFE AT THE MAXIMUM HAPPY
PUTHU KAVITHAI 
மதுரை கங்காதரன் 

முன் பின் 'தெரியாது' கள் ஆயிரம் நடுவில் 
இன்றைய வாழ்க்கை ஓடுகிறது.

நாளை காய்கறிகளின் விலை எப்படி இருக்கும்?
தெரியாது!

நாளை ரயில், பஸ் , விமான கட்டணம் கூடுமா?
தெரியாது!

நாளை பெட்ரோல் விலை கூடுமா? குறையுமா?
தெரியாது!

நாளைய பிரதமர் இவர் தான் இருப்பாரா?
தெரியாது!

நாளைக்கு இந்த அமைச்சர் பதவியில் இருப்பாரா?
தெரியாது!

நாளைக்கு சட்ட, பாராளுமன்றம் ஒழுங்காக நடக்குமா?
தெரியாது!

நாளை இந்த கட்சித் தலைவர் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா?
தெரியாது!

நாளைக்கு கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்குமா?
தெரியாது!

நாளைக்கு கல்விக்கட்டணம் இதுபோல் இருக்குமா?
தெரியாது!

நாளைக்கு நுழைவுத் தேர்வு நடக்குமா? நடக்காதா?
தெரியாது!

நாளைக்கு அரசு ஊழியர்களின் வேலை நிலைக்குமா?
தெரியாது!

நாளைக்கு தங்கம், ஷேர், ஊக வணிகம் ஏறுமா? இறங்குமா?
தெரியாது!

நாளைக்கு புதுச் சட்டம் அமுலுக்கு வருமா? வராதா?
தெரியாது!

நாளைக்கு இந்த வழக்கு முடியுமா? முடியாதா?
தெரியாது!

நாளைக்கு அரசு கொள்கை மாறுமா? மாறாதா?
தெரியாது!

நாளைக்கு அந்த தலைவர் இந்த அணியில் தான் இருப்பாரா?
தெரியாது!

நாளைக்கு நிவாரணம் கிடைக்குமா? கிடைக்காதா?
தெரியாது!

நாளைக்கு  காவேரி தண்ணீர் வருமா? வராதா?
தெரியாது!

நாளைக்கு இந்த அணி ஜெயிக்குமா? தோற்குமா/
தெரியாது!

நாளை உலகம் இருக்குமா ? அழியுமா?
தெரியாது!

இன்னும் 'தெரியாது' கள் எவ்வளவோ!
ஏன் என்று புரியவில்லை பலருக்கு?

'தெரியாது' கள் பற்றி கவலை கொள்ளாதே!
ஆடும் வரையில் நீ மகிழ்ச்சியுடன் ஆடு.

பாடும் வரையில் நீ கவலை மறந்து பாடு 
வாழும் வரையில் சந்தோசமாக வாழு!

        

நன்றி 
வணக்கம்.