Pages

Sunday, 14 July 2013

15. BURNING MIND AND COOLING MIND - 15. எரியும் மனமும் , குளிர்ச்சியான மனமும்


HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

15. BURNING MIND AND COOLING MIND


* Our mind is having two parts. One is always burning and another one is always cooling. Because, send all your problems, sorrows, failures, dislikes to burning area and help to destroy it. Like that, send all your good things, good actions, relations, happy , success to cooling area and help to preserve it. 

* Some people avoid to ask some which they don't know. If you ask, something you gain and nothing to loose. ASK means - Acquire Some Knowledge.

* You will meet problem, if your emotion goes beyond the limit. 
* Where confident is there, there will have No fear. Where fear is there, there will have No confident.

Success steps continues next..

}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

15. எரியும் மனமும் , குளிர்ச்சியான மனமும் 


* நமது மூளையில் ஒரு பகுதி அதிகமான ஜுவாலையோடு எரிந்து கொண்டு வெப்பமாகவும்  , மறுபக்கத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கின்றது. அது எதனானென்றால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கவலைகள், தோல்விகள், வெறுப்புகளை அவ்வப்போது எரியும் பகுதிக்கு அனுப்பி அவைகளை அழிப்பதற்கும் , நல்ல எண்ணங்கள், செயல்கள், வெற்றிகள், உறவுகள், சந்தோசங்களை குளிர்ச்சியான பகுதியில் பாதுக்காக்கவும் இருக்க உதவி செய்கிறது. 

* சிலர் தங்களுக்குத் தெரியாததை கேட்டுத் தெரிந்து கொள்ள தவிர்க்கிறார்கள். நீங்கள் கேட்பதனால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்குமே தவிர அதனால் இழப்பது  ஒன்றுமில்லை. அதாவது கேளுங்கள் - சில அறிவை பெற.


* உங்கள் உணர்ச்சிகள் எல்லையை தாண்டும் போது தொல்லைகளை  சந்திப்பீர்கள்.


* நம்பிக்கை எங்கு இருக்கின்றதோ அங்கு பயமில்லை. பயம் எங்கு இருக்கின்றதோ அங்கு நம்பிக்கை இருக்காது.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தமிழ் காக்கும் கவசமெது? (புதுக்கவிதை)

14.7.13 அன்று காமராஜர் பிறந்த நாள் ஒட்டி மாமதுரை கவிஞர் பேரவை, மதுரை. நடத்திய கவிதைப் போட்டியில் 
தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதை.


தமிழ் காக்கும் கவசமெது?
(புதுக்கவிதை)

முதலில் தமிழ் மொழியைக் காக்க வேண்டிய அவசியமேது?
அழிவு இருந்தால் தானே அதை காக்க வேண்டிய அவசியம்!

சாகா பலம் பெற்றது செம்மை மொழி தமிழ் படைப்புகள்
தமிழுக்கு கவசம் வேண்டுமா? சிரிப்பான் பாரதி!

துணிவிருந்தால் என் கவிக்கு எதிர் கவி பாட வாரும் என்பான்!
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்று பறை சாற்றிய நாள் எங்கே?

ஒழியும் தமிழ்! அழியும் தமிழ்! என்று சொல்வதை இனி ஒழிப்போம்
எங்கே பாரதி? எங்கே பாரதி? என்று தேடி அலைய வேண்டாம்

இங்கே பாரதி! இங்கே எல்லோரும் பாரதிகள் என்றே அறிவிப்போம்.
புதுக்கவிதைகள் தந்து தமிழுக்குப் புண்ணியம் சேர்த்தார் பாரதி!

இங்கே முழங்கிடும் கவிதைகள் கவசமாய் காத்திடுமே தமிழை!
தமிழின் கவசமே அதில் புதைந்திருக்கும் பொக்கிசம்

அள்ள அள்ள குறையாத வளமை ! படிக்க படிக்க திகட்டாத இனிமை!
பார்க்க பார்க்க தெவிட்டாத புதுமை! எழுத எழுத சலிக்காத எளிமை!

தமிழனின் உடல் பொருள் ஆவியாய் கலந்திருப்பது தமிழ்
கத்தி கண்டு பயப்படாது! அணுகுண்டு போட்டாலும் அழியாது தமிழ்!

வாழையடி வாழையாய் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வரும் தமிழ்
தமிழ் மக்களுக்கு கெளரவம் கொடுத்த செம்மை மொழி

அன்னிய மொழிகள் பூச்சாண்டி காட்டினாலும் கவர்ச்சி காட்டி இழுத்தாலும்
கன்னித் தமிழ் மொழிக்கு தமிழ் மக்கள் நாம் கவசமாய் இருப்போம்!

- ஆக்கியோன்

கவிஞர் கு.கி. கங்காதரன்

***********************************************************************************

Saturday, 13 July 2013

14. ORGANIZATION AND ITS SUCCESS SECRETS - 14. நிறுவனம் மற்றும் அதன் வெற்றியின் இரகசியங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
14. ORGANIZATION AND ITS SUCCESS SECRETS 

* Organization is like a Olympic torch light. It is carrying by it's leader. Who want light (Salary and other benefits) they must travel along with light (that is leader). You will loose light if you go behind or go forward.


* The right Manager can play a important role in training you and guiding you to success for your carrier and organization growth. The wrong manager can damage morals and carrier development.

* Talent people get experience from others. But foolish people get their experience from them-self.


* If you want to try to do your big project your self, it will take long time . Some time it may be failed. But doing it by team work, it will be finished fast and easy. 

Success steps continues next..

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன்   
14. நிறுவனம் மற்றும் அதன் வெற்றியின் இரகசியங்கள் 


* நிறுவனம் என்பது ஒலிம்பிக் ஜோதி போல. அதை அதன் தலைவர் ஏந்திச் செல்லும்போது யாருக்கு ஒளி தேவையோ (சம்பளம் மற்றும் இதர சலுகைகள்) அவர்கள் அதன் ஒளியோடு சேர்ந்து பயணம் செய்யவேண்டும். ஒளியை விட்டு பின் தங்கினாலோ அல்லது முன்னே சென்றாலோ அதன் பலனை இழந்துவிடுவீர்கள்.


* ஒரு சிறந்த மேலாளர் உங்களுக்கு வேலைக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலமாக உங்களுடைய பணி மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிக்கிறார். அதே சமயம் தவறான மேலாளர் உங்களுடைய ஒழுக்கம் மற்றும் பணி வளர்ச்சியை சேதப்படுத்துகிறார்.   

* புத்திசாலிகள் மற்றவர்களின் அனுபவத்த்திலிருந்து பாடம்  பெறுகிறார்கள். ஆனால் முட்டாள்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடங்களை கற்கிறார்கள்.


* உங்களுடைய பெரிய திட்டம் சுயமாக முயற்சி செய்ய விரும்பினால், அது நீண்ட நாட்கள் ஆகும். சில நேரம் அது தோல்வியடையலாம். ஆனால் குழுவாக வேலை செய்வதன் மூலம் அதை வேகமாகவும் எளிதாகவும்  முடித்துவிடலாம்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் தொடரும்..

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Friday, 12 July 2013

13. HAVE YOU WORRIED ABOUT YOUR DEATH EVERYDAY? - 13. உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?

 HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

13. HAVE YOU WORRIED ABOUT YOUR DEATH EVERYDAY?
* Have you worried about your death everyday ? Then why are you worried about day to day problem which are you facing? One thing you must remember, living every day means you are defeating death. Where did you get that much of strength and action? That is due to your self confident.So you don't afraid of any problem. You can solve it. Awake, Go and defeat it.
* Like a cool water reservoir we are having a reservoir of emotions in our heart. Controlling of our emotions which will help us to think and act clearly which in turn help us to stay cool. 

* If humanity like a cloud in our heart then rain will fall from the eyes.
* If you postpone your decision, don't stop to act ! Try it until the road ahead is clear and free.

Success life steps continues next...

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன்  
13. உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?  
*உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?  பிறகு ஏன் நாளுக்கு நாள் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கவலைபடுகிறீர்கள் ? நீங்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மரணத்தை தோற்கடித்திருக்க்றீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய வலிமை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அது தான் தன்னம்பிக்கை!  ஆகையால்  நீங்கள் பிரச்சனை கண்டு பயப்பட வேண்டாம், உங்களால் அவைகளை தீர்க்க முடியும். விழித்துக்கொள்! ஓடு ! பிரச்சணையை தோற்கடி!
* குளிர் நீர் தேங்கிய தொட்டி போல் நம் இதயத்தில் உணர்வுகளின் தேக்கம் உள்ளது. நமது உணர்வுகளை கட்டுப்படுத்தும் போது நாம் நன்றாக யோசிக்கவும், தெளிவாக செயல்படவும்  நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.


* நம் இதயத்தில் மனிதாபிமான மேகம் இருந்தால் நமது கண்களிருந்து கண்ணீர் மழை தானாக வரும்.

* நீங்கள் உங்கள் முடிவை ஒத்திவைத்தாலும் உங்கள் செயலை நிறுத்த வேண்டாம்! அது தெளிவாகவும் விடுபடும் வரை உங்கள் முயற்சியை கைவிடக் கூடாது.

வாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

12. (Story) DOING NEW THINGS IS ALWAYS DIFFICULT AT FIRST - 12. புதிய முயற்சி என்றுமே முதலில் கடினம் தான்.

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

12. (Story) Doing New thing is always difficult at first !

Before flying, all birds were having a capacity to walk only as like human. Day by day Birds wanted to fly freely in the sky. Also they wanted to see all the wonders in the world from the sky as well as to fly any where as they wish. So that they had approached  a powerful sage and explained their wish.

Sage promised to give flying capacity for presently  walking of birds. He attached two wings in their two sides and said to them " Now you oscillate both wings powerfully and flying miracle will happen and you will fly freely in the sky." 

Birds tried to fly with the help of attached wings. At last, all their strength had exhausted but unable to fly. They seemed that the attached wings were a big burden to them. They went back to the sage: "we don't want to fly, remove the wings and we wish to walk as usual," they complained.

But sage asked to them " Your goal to fly is appreciated one. It can be achieved by you only . Try it with your full involvement and definitely it will be fulfilled your desire," he told them.

They tried again and again. At the end, their desire had fulfilled. Yes! they could able to fly.

They replied "Sage ! as you said , we had tried again and again to fly. As as result, we had succeeded. Initially the attached wings were seem to be a burden for us. But afterwards it would become very easy and we were enjoying its benefit" Said.


Sage: "See! from this you must understand that if you try for any new things, at first it will be very difficult. But after some times it will give very much happy to you. So don't give up at any time." said to them.  

Success Steps continues next...

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
12. புதிய முயற்சி என்றுமே முதலில் கடினம் தான். 


பறவைகள் பறப்பதற்கு பலம் கிடைப்பதற்கு முன்னால் எல்லாம் போல அவைகள் நடக்கத் தான் செய்தது. நாளாக நாளாக அதற்கு வானத்தில் சுதந்திரமாக பறக்கவேண்டும்! உலகில் உள்ள எல்லா அதிசயங்களை பார்க்கவேண்டும்! நினைக்கின்ற போது போக வேண்டுமென்ற இடத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைத்து சக்தி வாய்ந்த ஒரு முனிவரிடத்தில் சென்றது.

முனிவரும் அதைக் கேட்டு நடக்கின்ற பறவைகளுக்கு இரண்டு பக்கத்தில் இறக்கையினை ஒட்டிவிட்டு "இந்த இறக்கைகளை பலமாக அசையுங்கள். நீங்கள் சுதந்திரமாக பறக்கும் அதிசயம் நடக்கும் " என்று கூறிவிட்டுச் சென்றார்.

பறவைகளும் இறக்கைகளை அசைத்துப் பறக்கப் பார்த்தது. ஆனால் பறக்க முடியாமல் கடைசியில் சோர்வடைந்தது. இறக்கைகள் அவைகளுக்கு பாரமாகத் தெரிந்தது. மீண்டும் முனிவரிடம் சென்று "எங்களுடைய இறக்கைகளை எடுத்துவிட்டு பழையபடி நடக்கும்படி செய்துவிடுங்கள்" என்று முறையிட்டது.

ஆனால் முனிவரோ " பறப்பது என்பது உங்களது பெரிய லட்சியம். அது உங்களால் மட்டுமே முடியும். மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள். கட்டாயம் உங்கள் ஆசை நிறைவேறும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.


மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது. முடிவில் ஆசை நிறைவேறியது.

பறந்தே முனிவரை பார்த்தது. "முனிவரே! நீங்கள் சொன்னபடி விடாமுயற்சி கொண்டோம். முடிவில் வெற்றி பெற்றோம். பாரமாக இருந்த இறக்கைகள் இப்போது பழகிவிட்டது. மேலும் அதன் பலனையும் அனுபவிக்கிறோம்." என்றது.


முனிவர் " பார்த்தீர்களா! புதிய முயற்சி செய்யும்போது புதிய சேர்க்கைகள் (மாற்றங்கள்) முதலில் பாரமாக அல்லது கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக அது சந்தோசமாக மாறும்" என்றார்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



    

Thursday, 11 July 2013

11. COMPLICATION AND FOOLISH PEOPLE - 11. சிக்கல்களும் முட்டாள் மனிதர்களும்

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

11. COMPLICATION AND FOOLISH PEOPLE

* Your attempt may fail. But never fail to make an attempt. Identify false boundaries and limitations created by the past. Overcome this. Tomorrow will be yours.

* Making simple to complicated is very common. But making complicated to simple is a creativity. Sophistication needs Simplicity.
*  A peaceful mind can watch and think better than a working up mind. Everyday a few minutes allow your mind as silence and realize how effectively it helps you to set your happy life.

*  Always be careful. Never argue with  foolish people. They will drag you down to their level slowly and then spoil your status.

Success life steps continue next..

-----------------------------------------------------------------------------------

இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
11. சிக்கல்களும் முட்டாள் மனிதர்களும் 

* உங்கள் முயற்சி தோல்வி அடையலாம். . ஆனால் ஒருபோதும் முயற்சி செய்வது தவறக் கூடாது. கடந்த நாட்களில் கிடைக்கப் பெற்ற பொய்யான எல்லைகள் மற்றும் வரம்புகளை அடையாளம் கண்டு வெற்றி கொள்ளுங்கள் . பிறகென்ன? நாளைப் பொழுது உங்களுடையதே!

* எளிதாய் உள்ளதை சிக்கலாக்குவது மிகவும் பொதுவானது. ஆனால் சிக்கலாக உள்ளதை எளிமையாக்குவதற்கு படைப்பாற்றல் தேவைபடுகிறது. சௌரியங்களை அனுபவிக்க எளிமை தேவைபடுகிறது.


* வேலையில் இருக்கும் மனதை விட அமைதியான மனது நன்றாக கவனிக்கவும், யோசிக்கவும் செய்யும். தினமும் சில நிமிடங்கள் உங்கள் மனதை அமைதியாக இருக்கும்படி செய்யுங்கள். அது எவ்வாறு உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்று உணருங்கள்.

* முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்யாமல் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மெதுவாக உங்களை கீழ் மட்டத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள்.  பின்னர் உங்கள் கௌரவத்தையும் கெடுத்துவிடுவார்கள்.

வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

---------------------------------------------------------------------------------------------------------------------

10. WONDERFUL LIFE TIPS - 10. அற்புதமான வாழ்க்கைக்கான குறிப்புகள்

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN

10. WONDERFUL LIFE TIPS

* Small right steps taken consistently at right time, can produce wonderful results.


* Where is growth happened there changes are automatic. If you fear to change how can expect growth.


* In life, without Aim is a sin. But many of us doing this sin in their life.


* If you to go advance in your life, be sure that your desire don't allow in advance.


Success life steps continue next... 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
10. அற்புதமான வாழ்க்கைக்கான குறிப்புகள் 

* சரியான நேரத்தில் தொடர்ந்து எடுக்கும் சிறு சிறு சரியான வழிமுறைகளால்  அற்புதமான முடிவுகளை உருவாக்க முடியும்.


* எங்கே மாற்றங்கள் நிகழ்கின்றதோ அங்கே வளர்ச்சி என்பது தானாக நடக்கும். மாற்றங்களுக்கு அஞ்சினால் பின் எப்படிவளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்?


* வாழ்க்கையில், குறிக்கோள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பாவம். ஆனால் நம்மில் பலர் தங்கள் வாழ்வில் இந்த பாவத்தை தினமும் செய்துவருகிறார்கள்.


* நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், உங்கள் பேராசையை உங்களை விட முன்னேறிச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் .

இனிமை வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~