Pages

Saturday, 20 July 2013

21. ACT SPEED, STEADY AND SAFE - 21. வேலையில் சீரான வேகம் மற்றும் பாதுகாப்பு தேவை

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

21. ACT SPEED, STEADY AND SAFE
* Time , Arts and Science are indirectly playing in every human life. It is useful and also we like it. Somebody are calling this as GOD.

* You have named one dog as "Apple" and another dog as "Hunger". Then which dog will stay survive? Which dog you provide food only will survive. So there is No magic in the name.
* For smooth running of Machine has needed overhauling with Grease and oil. Likewise for smooth human relationship you have needed Gift, appreciation with positive motivation. 

* All are getting a chance to become CEO or good position. So be ready and qualify yourself. When time comes you will avail it without delay.
* In every work you must act speed, steady and safe.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

21. வேலையில்  சீரான வேகம் மற்றும் பாதுகாப்பு தேவை 
* நேரம், கலை மற்றும் அறிவியல் மறைமுகமாக ஒவ்வொரு மனித வாழ்விலும் விளையாடி வருகிறது.அவைகள் பயனுள்ளதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கின்றது.  சிலர் அவைகளை கடவுள் என்றும்  அழைக்கிறார்கள்.

* நீங்கள் ஒரு நாயின் பெயர் "ஆப்பிள்" என்றும் மற்றொரு  நாயின் பெயரை "பசி" என்றும் பெயர் சூட்டுகின்றீர்கள்.இதில் எந்த நாய் உயிரோடு இருக்கும்? நீங்கள் உணவு வழங்கும் நாய் மட்டுமே உயிர் வாழும்.. எனவே பெயரில் மந்திரம் எதுவும் இல்லை.
* இயந்திரம் சீராக இயங்குவதற்கு கிரீஸ் மற்றும் எண்ணெய் மூலம் பராமரித்தல் அவசியம். இதேபோல் மென்மையான மனித உறவு மலர நேர்மறையான ஊக்கம் கொண்ட பரிசும் , பாராட்டும் தேவை.
* எல்லோருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நல்ல பதவி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனவே எப்போதும் தகுதியோடு தயாராக இருங்கள். அப்போது தான் நேரம் வரும் போது நீங்கள் அதை பெற முடியும்.
* உங்களது எந்த வேலையிலும் வேகமாகவும், சீராகவும்  மற்றும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



Friday, 19 July 2013

20. ORDINARY AND PROFESSIONAL PEOPLE - 20. சாதாரண மக்கள் மற்றும் வல்லுனர்கள்

HAVE A NICE LIFE STEPS



MADURAI GANGADHARAN

20. ORDINARY AND PROFESSIONAL PEOPLE


* If you are not felt hunger, you hate even your favorite food. Likewise If you are not interested, you hate even your favorite work itself.

* You are growing means day by day every day you must feel better and better.

* Professionals only can produce good results even though they are not qualify.



* Extra ordinary system convert ordinary people skill to extra ordinary results.


* Image building is not to do it overnight. It is a continuous and a highly demanding exercise. 

Success steps continues next..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

20. சாதாரண மக்கள் மற்றும் வல்லுனர்கள் 


* பசியின்மை, எவ்வளவு பிடித்தமான உணவையும் வெறுக்கச் செய்யும். அதேபோல் ஆர்வமின்மை, எவ்வளவு பிடித்தமான வேலையையும் வெறுக்கச் செய்யும்.


* நீங்கள் வளருகின்றீர்கள் என்றால் ஒவ்வொரு நாளும்  நாளுக்கு நாள் நன்றாக மென்மேலும் இனிமையாக இருப்பதாக உணரவேண்டும்.



 * வல்லுநர்களால் மட்டுமே நல்ல முடிவுகளைதர முடியும் அவர்களுக்கு தகுதி இல்லை என்றாலும் கூட..



* அசாதாரண முறையினால் தான் சாதாரணமானவர்களின் திறமைகளினால் அசாதாரண முடிவுகளாக மாற்ற முடியும். 



* புகழ் பெறுவது  , ஒரே இரவில் அதை சாதிக்க முடியாது. இது ஒரு தொடர் மற்றும் மிகவும் வேட்கையோடு செய்யும் பயிற்சி.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, 18 July 2013

19. FALSE AND TRUE THINGS - 19. பொய் மற்றும் தவறான விசயங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

19. FALSE AND TRUE THINGS
* False things are always attractive and it will not serve your purpose. It shows only your status.True things are always hide in nature but you can realize it's worth. It will serve your purpose. For example People like water in Gold pot than in the mud pot. That is seeing status is materialism and water is spiritualism. We must realize that water only serve our purpose not gold.  


* If your action like seeing, thinking, eating , working etc., are deviated from nature then you will be affected by headache, tension, etc.,.

* Any action with concentration then you will not get any pain or tension.
*  Being good to others irrespective of the situation is the simplest way to peaceful living.

* Psychologists says that man is a product of conditioned responses.It is more difficult to change the man who is having deeper conditioning.

Success steps continues next...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

 19. பொய் மற்றும் தவறான விசயங்கள் 


* தவறான விசயங்கள் எப்போதும் கவர்ச்சிகரமாகவும் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யாததுமாகும். அது உங்களுடைய அந்தஸ்து மட்டுமே காட்டும். உண்மையான விசயங்கள் இயற்கையாகவே மறைவாக இருக்கும். அதனுடைய மதிப்பை அனுபவித்து உணரமுடியும். அது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதுமாகும். உதாரணமாக மண் பானையில் உள்ள தண்ணீரைக் காட்டிலும் தங்கத்திலான பானையிலுள்ள தண்ணீரைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். அதாவது அந்தஸ்து  பார்ப்பது பொருளை. தண்ணீரோ ஆன்மீகத்தை உணர்த்துகிறது. தண்ணீர் தான் நமக்குத் தேவை, தங்கமல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.


*, உங்களது அன்றாட செயல்களான பார்ப்பது, நினைப்பது, உண்ணுவது, வேலை செய்வது போன்றவைகள் எப்போதெல்லாம் இயற்கைக்குப் புறம்பாக நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம் நீங்கள் தலைவலி மற்றும் பதற்றத்திற்கு ஆளாவீர்கள்.

* ஆழமாக ஊன்றி செய்யும் செயல்கள் ஒருபோதும் வலியும் பதற்றமும் தராது.


* நாம் அமைதியாக வாழ்வதற்கு எளிய வழி , எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் நாம் நல்லபடியாக நடந்துகொள்வதாகும்.
* மனோதத்துவ நிபுணர்கள் , மனிதன் என்பவன் நிபந்தனையுடன் கூடிய அதிகாரத்தின் சேர்மம் தான் என்கிறார்கள். நிபந்தனையின் அதிகாரம் ஆழமாகும் போது அவனை மாற்றுவது மிகவும் கடினமாகின்றது என்கிறார்கள்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் தொடரும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Wednesday, 17 July 2013

18.MEANING OF DREAM, ACTION AND SUCCESS - 18. கனவு, செயல் மற்றும் வெற்றியின் அர்த்தங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

18.MEANING OF DREAM, ACTION AND SUCCESS 

* Dream means having Goal without action
  Activity means having action without Goal
  100% success means Goal with action.

* Aged mind always having same capacity without any improvement. Also they do to every work with careless, slow and less interest.
* Constructive thing will help for continuous improvement.


* A small hole enough to sink a big ship. Clever people arrest the hole when is in small. Likewise in your life, solve the problem when it is small.


* If you are a business man, then you must do every work with profit. Profit will improve your quality, experience and relationship.

Success steps continues next...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

18. கனவு, செயல் மற்றும் வெற்றியின் அர்த்தங்கள் 


* செயல் இல்லாத குறிக்கோள் கனவாகும்.
   குறிக்கோள் இல்லாத செயல் - செயல்பாடாகும்
   குறிக்கோளுடன் உள்ள செயல் - 100% வெற்றியாகும்.

* வயதான மனம் முன்னேற்றமில்லாமல் ஒரே மாதிரியான திறமை இருக்கும். மேலும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் கவனம் குறைவு, மெதுவாக மற்றும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.


* ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தொடர் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

* ஒரு சிறிய துவாரம் மிகப்பெரிய கப்பலை கவிழ்த்துவிடும். கெட்டிக்காரர்கள் சிறியதாய் இருக்கும்போதே அடைத்துவிடுவார்கள். அதுபோல் வாழ்கையில் பிரச்சனை சிறியதாய் இருக்கும்போதே தீர்த்துவிடவேண்டும்.


*  நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால் ஒவ்வொரு வேலை செய்வதிலும் லாபம் இருக்கவேண்டும். லாபம் உங்களுடைய தரத்தை உயர்த்துவதோடு அனுபவமும் , அணுகுமுறையும் உயர்த்தும். 

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, 16 July 2013

17. TODAY IS A GIFT FOR ENJOYMENT - 17. இன்றைய தினம் இன்பம் பெறுவதற்கான பரிசு.

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

17. TODAY IS A GIFT FOR ENJOYMENT 
* Life is not a Problem to be solved. It is a Gift to be enjoyed. So lets start to enjoy it with your family, friends, relations and work.

* If you want happy or success permanently, then do a few constructive activities on daily basis. Any day this absence of activities is not permitted under any circumstance.
* All success people are announcing their success after completion of their achievement. It is because if they release before, it must be discouraged and laughed by others.

* Those are making money are using their mind and those spending it are cooling their mind.


* If Planter take care of the roots and the tree will take care of itself to a very large extent. So if you take care of your daily life with happy and the future life will take care of itself with happy. 

Success steps continues next..

#####################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 

17. இன்றைய தினம் இன்பம் பெறுவதற்கான பரிசு.

* வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய  ஒரு பிரச்சனை அல்ல.அது அனுபவிக்கவேண்டிய ஒரு மகிழ்ச்சியான பரிசு. ஆகையால் இப்போதே உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவுகள் மற்றும் வேலை மூலமாக மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பியுங்கள்.


* நீங்கள் நிரந்தரமான மகிழ்ச்சி அல்லது வெற்றி பெற வேண்டுமென்றால், தினசரி அடிப்படையில் ஒரு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இத்தகைய  நடவடிக்கைகள்  இல்லாத நாளை அனுமதிக்கக் கூடாது.
*வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் சாதனை முடிந்த பிறகு தான் அறிவிக்கிறார்கள். அவர்கள் செய்யவேண்டிய  சாதனையை முன்னமே  வெளியிடாததன் காரணம் அதை கேட்டு மற்றவர்கள் அதைரியப் படுத்துவார்கள் மற்றும் கேலியாக சிரிக்கவும் செய்வார்கள் என்பதால்.

* பணம் சம்பாதிப்பதற்கு மூளையை பயன்படுத்திகிறார்கள். அதேபோல் மூளையை குளிர்விப்பதற்கு பணத்தை செலவு செய்கிறார்கள்.


* விவசாயி வேர்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டால், மரமானது தான் பெரிதாக வளர்வதற்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும். அதேபோல் நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொண்டால் எதிர்கால வாழ்க்கை உங்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

###################################################################################


16. WORKING MIND AND KEY - 16. வேலை செய்யும் மனமும் , சாவியும்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

16. WORKING MIND AND KEY

* Winning is improving yourself as well as you attain a new level of status. When you win, you must grow and feel good.
* If you listen good things then you will get advantages. If you talk good things others will get advantages.


* If you want success then you must be surrounded by talented people.


* Working mind and key are always in bright.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

16. வேலை செய்யும் மனமும் , சாவியும் 


* உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஒரு புதிய நிலையை அடைவதே வெற்றியாகும். நீங்கள் வெற்றியடையும் போது நீங்கள் வளர்வதோடு நல்லபடியாக உணரவேண்டும்.

* நீங்கள் நல்ல விசயங்களை கேட்பதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நல்ல விசயங்களை பேசுவதால் மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.


* நீங்கள் வெற்றி பெற விரும்பினால் கட்டாயமாக திறமையானவர்கள்  உங்களைச் சுற்றி இருக்கவேண்டும்.


* வேலை செய்யும் மனம் மற்றும் சாவி எப்போதும் பிரகாசமாக  இருக்கும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^