Pages

Tuesday, 3 September 2013

எளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்

எளிதான புழக்கமாகும் பொருட்கள்  - 


வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம் 
EASY LIQUIDITY BUSINESS IS VERY STRONG AND EVER GREEN ONE
விழிப்புணர்வு கட்டுரை 


எது எளிதான புழக்கம் ( EASY LIQUIDITY ) எதில்  இருக்கின்றதோ அதற்கு எப்போதும் அழிவு என்பதே இருக்காது. அந்த வகையில் எந்த பொருள் அதிகமாக விற்கப்படுகின்றதோ அதனுடைய விலை குறைவாகத் தான் இருக்கும். அதன் மூலம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். மேலும் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களும் வாங்குவதால் அதற்கு தனி மரியாதை உண்டு எனலாம். அதாவது எந்த ஒரு பொருள் மலிவாக கிடைகின்றதோ அதில் ஓரளவு லாபமும் இருக்கும். வியாபாரத்திற்குக் குறைவில்லாமலும் இருக்கும். அதேபோல் வாங்கு -வதற்கும், மறுவிற்பனை அல்லது பழையது விற்பதற்கு எளிதாகவும்  இருக்கும்.


ஆனால் எந்த ஒரு பொருள் விலை அதிகமாக இருக்கின்றதோ அந்த பொருள் உண்மையில் அதிகமாக புழக்கத்தில் இருக்காது. உடனேயோ அல்லது சிலமாதம் கழித்து திரும்ப மறு விற்பனை விற்கப் போகும்போது அடிமாடு விலைக்குத் தான் போகும். உதாரணமாக ஒரு கார் புதிதாக வாங்கி ஒரு மாதத்தில் விற்கப் போக நேர்ந்தால் லட்சம் ரூபாய் வரை குறைவாகத் தான் விலை போகும். அதேபோல் தங்கம், வீடு, பிளாட் . அவைகளை ஆசைப்பட்டு வாங்கி பிறகு தவணை கட்ட முடியாமல் அதிக வட்டி கட்டியும், முடிவில் அசலும் பொருளும் கை விட்டுப் போகும்போது தான் அதன் வலிமை தெரியும்.


அதற்குக் காரணம் நப்பாசை ! பேராசை! எல்லோரும் வாங்குகிறார்கள் நாமும் வாங்கினால் என்ன? என்று ஆழம் தெரியாமல் காலை விடுபவர்கள் ஏராளம் பேர். ஆனால் அந்த ஆசை வாழ்க்கையையே அழிக்க முயன்றால் என்ன செய்வது? ஆசை காட்டத் தான் செய்வார்கள்! ஆஹா .. ஓஹோ .. என்று புகழுவார்கள். இன்னும் சிலர் இதை வாங்கினால் இன்னும் சில மாதங்களில் அவ்வளவு ரூபாய்க்குப் போகும்! இவ்வளவு ரூபாய்க்குப் போகும் ! என்று சும்மா அள்ளிவிட்டு ஆசை விதையை விதைப்பார்கள். அதுவும் போதாமல் அதைப்பற்றி பெருமையாகப் பேசுவார்கள். 

           

இன்னும் சில விளம்பரத்தில் 'இது போல் உலகத்தில் ஏதுமில்லை. இனி மேலும் வராது. இது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்கிற வசனத்தை நடிக, நடிகையர்களை , மாடலிங் உள்ளவர்களைக் கொண்டு பேசவைப்பார்கள். அனேகமாக எல்லோரையும் பேச்சில் , பகட்டான விளம்பரத்தில் கவரப்பார்ப்பார்கள். மேலும் இதுவரை இத்தனை பேர் சேர்ந்து இவ்வளவு பயனடைந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்துடன் புருடா விடுவார்கள். அதற்குச் சாட்சியாக சிலரை பணம் கொடுத்து பேசவைப்பார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு மோசம் செய்யாமல் 'ஆமாம்! நான் இதில் முதலீடு செய்தேன். இவ்வளவு லாபம் கிடைத்தது என்று அளப்பார்கள். துருவித் தோண்டி பார்த்தோமானால் அவைகள் எல்லாமே கப்சா என்பது தெரியவரும். அஞ்சுக்கும் பத்திற்கும் பொய் சாட்சி சொல்வதுபோல் பொய்யாய் பேசி புழுகுவார்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனென்றால் கடினமாக உழைத்து, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் இதன் மூலம் ஏமாறாமல் இருப்பது நல்லதல்லவா?

                          

அதாவது ஒரு சில  விளம்பரங்கள் வெகுகவர்ச்சியாக , வெகு ஆடம்பரமாக, முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு வியாபாரம் செய்யப் படுகின்றதோ அவைகள் பெரும்பாலும் தரம் குறைந்தும், எதிர்பார்த்த பலன்கள் இல்லாமலும், சில சமயத்தில் எதற்கும் லாயக்கற்றதாக இருக்கும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அத்தகைய விளம்பரம் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரையில் தான் இருக்கும். பிறகு காணாமல் போய்விடும்.அதாவது ஒரு பெயரில் ஏமாற்றிவிட்டு அடுத்த மாதத்தில் வேறொரு பெயரில் புதிதாக விளம்பரப் படுத்துவார்கள். எப்படித் தான் சிலர் அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகின்றனர். பலரும் ஏமாந்து கொண்டும் வருகின்றார்கள். தொடர்ந்து விளம்பரம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள்.

            

அதேபோல் பத்து ரூபாய்க்கு விற்கவேண்டிய பொருளை ரூபாய் நூறு வரை விளம்பரம் செய்து விற்பார்கள். அதாவது இதுவும் ஒரு வகையில் ஒரே விலையில் ஏலம் அதிகம் விடுவது போலத் தான்.உதாரணமாக இரண்டு நாட்கள் ஓடாத படத்தை ஆஹா .. ஓஹோ ..என்று பில்டப் செய்து விளம்பரப் படுத்துவார்கள். அதேபோல் தங்கம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகியவைகளின் விலை ஒரு நாள் சரிந்தது என்று விளம்பரப் படுத்துவார்கள். மறுநாள் விலை ஜிவ்வென்று உயர்ந்தது என்று மீடியாக்கள் சொல்லும். ஆக விலை அதிகமான அல்லது தொடர்ந்து விலை ஏறும் பொருட்களை உடனே வாங்காமல் தூரத்தில் நின்று வேடிக்கை பாருங்கள். அதன் உண்மை நிலை உங்களுக்கே தெரிய வரும்.


விளம்பர மோகம் வேண்டாம் ...


வீண் விரயம் , நஷ்டம் அடைய வேண்டாமே!


*********************************************************************************** 



   

42. PERFORMANCE OF GREAT WORKS - 42. அசாதாரணமான செயல்களின் செயல்பாடுகள்

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
42. PERFORMANCE OF GREAT WORKS


* You may notice that people who shows speed in action are the once who are most organized and efficient.


* Setting time frame helps improve one's efficiency and gives meaning to actions.


* If you want to achieve ! sometimes you have to work hard.


* Great works are performed not by strength but by perseverance.


* 9/10 of wisdom is appreciation. Go and give your hand and squeeze it whenever there's time.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
42. அசாதாரணமான செயல்களின் செயல்பாடுகள் 


* யார் ஒருவர் செயல்களில் வேகம் காட்டுகிறார்களோ அவர்கள் முறையாகவும் திறமையாகவும் செயல்படுவதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.


* கால அளவை நிர்மாணித்துக் கொள்வது  ஒருவரது திறமையை மேம்படுத்த உதவுவதோடு அவர்களின் செயல்களுக்கு அர்தத்தைத் தருகிறது.


* நீங்கள் வெற்றி அடைய விரும்பினால்! சில நேரங்களில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.


* அசாதாரணமான வேலைகள் வலிமையால் நடைபெறுவதில்லை. ஆனால் விடாமுயற்சியால் மூலம் தான் நடைபெறுகின்றன.


* அறிவு என்பது பத்தில் ஒன்பது பங்கு (9/10) பாராட்டில் உள்ளது. ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கை குலுக்குவதை மேற்கொள்ளுங்கள்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


Monday, 2 September 2013

41.ALWAYS DON'T USE 'NO' IS AN ANSWER ! 41. எப்போதும் 'இல்லை' என்கிற பதிலை சொல்லக் கூடாது!

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
41.ALWAYS DON'T USE 'NO' IS AN ANSWER !


* Success people not only dream big but also they taught their team to do so too.


* All professionals are not use 'NO' is an answer.


* Don't say it is difficult and impossible. Always you must say it is difficult but possible.


* In the critical situation , you must find or discover in your family or in an organization where the cost cutting can be possible? and take necessary action without delay.  


* If the cost of product is high in your business, then you will be in trouble and cost is less in your business others (competitors) will be in trouble.

Success steps continues next...

*****************************************************
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
41. எப்போதும் 'இல்லை' என்கிற பதிலை சொல்லக் கூடாது!


* வெற்றி பெற்றவர்கள் தாங்கள் மட்டும் பெரிய கனவுகளோடு இருப்பதில்லை. அவர்கள் தங்கள் அணியில் உள்ளவர்களையும் அவ்வாறு இருக்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.


* மேதைகள் ஒருபோதும் 'இல்லை' என்கிற பதிலை உபயோகிப்பதில்லை.


* எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்னால் கடினமாக மற்றும் சாத்தியமற்றது என்று சொல்லாதே. எப்போதும் நீங்கள் கடினம் தான் ஆனால் சாத்தியம் என்று சொல்ல வேண்டும்.


* இக்கட்டான சூழ்நிலையில், உங்கள் குடும்பத்திலோ அல்லது ஒரு நிறுவனத்திலோ செலவு குறைப்பதற்கு வேண்டிய வழியை நீங்கள் தான் கண்டுபிடிக்க அல்லது கண்டறிய வேண்டும்? மேலும் தாமதம் இல்லாமல் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .


* தயாரிப்பு செலவு உங்கள் வியாபாரத்தில் அதிகமாகஆகிறதென்றால் , நீங்கள் பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்றும் , தயாரிப்பு செலவு குறைவாக இருக்கின்ற தென்றால் உங்கள் போட்டியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது அர்த்தம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

***********************************************************************************

Thursday, 29 August 2013

40.DREAM WITH OPEN EYES ! - 40.விழித்துக்கொண்டு கனவு காணுங்கள் !

HAVE A NICE A LIFE STEPS
MADURAI GANGADHARAN
40.DREAM WITH OPEN EYES !


* Dream big ! not with closed eyes but with open eyes. Then only you can make a History.


* Don't stop when you are facing impossible situation. You are not for that ! Go on, to achieve the impossible too.

* If you want to be a good leader or good boss to your company ! Then you must be a safety net for your team.


* All successful people shows them-self like a small man and they are not usually inspired by big words.


* Most of the people are never used charity as a platform to gain publicity.

Success steps continuous next..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
40.விழித்துக்கொண்டு கனவு காணுங்கள் !


* பெரிதாக கனவு காணுங்கள் ! கண்களை மூடிக்கொண்டல்ல ! அதாவது விழித்துக் கொண்டு கனவு காணுங்கள் !  அப்போது தான் நீங்கள் சரித்திரம் படைக்க முடியும். 


* நீங்கள் சாத்தியமற்ற நிலைமையை எதிர்கொள்ளும் போது நின்றுவிட வேண்டாம். அதற்காக நீங்கள் இல்லை! ஓடுங்கள் ! சாத்தியமில்லாதவற்றையும் அடைய !


* நீங்கள் ஒரு நல்ல தலைவராக  அல்லது  நிறுவனத்திற்கு நல்ல முதலாளியாக  இருக்க விரும்பினால்! பின்னர் நீங்கள் உங்கள் அணிக்கு  ஒரு பாதுகாப்பு வலையாக இருக்க வேண்டும்.

 

* வெற்றி பெற்ற எல்லோரும் தங்களை ஒரு சிறிய மனிதனாக காட்டிக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் வழக்கமாக பெரிய வார்த்தைகளால் ஈர்க்கப்படுவதில்லை.


* பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் விளம்பரம் பெற தொண்டு செய்வதை ஒரு களமாக பயன்படுத்திவதில்லை.

வெற்றி படிகள் இன்னும் உயரும்..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

39.LIFE IS NOT A 'ZEE BOOM BA'! - 39. வாழ்க்கை என்பது 'ஜீ பூம் பா' அல்ல!

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
39.LIFE IS NOT A 'ZEE BOOM BA'!


* If you want to create a record in your life, you should pass in your life test as well as it needs hard work, knowledge and experience.


* Life is not a 'Zee Boom Ba' or 'Andaa ka Kasam , Abu Ka Kusum' what are all you thinking that to happen? The effort required is trying with hard work. 


* Coconut and palm tree, whenever a branch of leaf is falling from the tree, it creates a sign. Likewise, at the time of leaving your life you must create any good living sign.


* 'Kalki' a beautiful statue carved her statue herself. Likewise make your beautiful life by Hard work with good knowledge. It is foolishness to wait that somebody will create your life.


* if a teeth in the Cycle chain is weak, then it will not run properly. Likewise if any weakness in the family or in the organization then ti is difficult to run smoothly.

Success life steps continues next...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன் 
39. வாழ்க்கை என்பது 'ஜீ பூம் பா' அல்ல!   


* வாழ்கையில் முழுமனிதனாக மாறி சாதனை படைக்க விரும்பினால் உனக்குத் தேவை பலப்பரீட்சை, கடின உழைப்பு, அறிவு மற்றும் அனுபவம் போன்றவை.




* வாழ்க்கை என்பது 'ஜீ பூம் பா' அல்லது 'அண்டா கா கசம், அபு கா குசும்' அல்ல. நினைப்பதெல்லாம் நடப்பதற்கு. அதற்குத் தேவை முயற்சியும், உழைப்புமாகும்.


* தென்னை,பனை மரத்திலிருந்து ஒவ்வொரு மட்டை விழுகின்ற போதெல்லாம் ஒரு அடையாளம் விட்டுச் செல்கின்றது. அதுபோல உனது வாழ்க்கை விட்டுச் செல்லும்போது நீ இருந்ததற்கான ஏதாவது நல்ல அடையாளமிட்டுச் செல்.


* 'கல்கி' சிலையானது தன்னைத் தானே செதுக்கி அழகான சிலை உருவாக்குவது போல உழைப்பு, அறிவு கொண்டு உன்னை நீயே அழகான வாழ்கையை அமைத்துக் கொள். மற்றவர்கள் உன்னை செதுக்குவார்கள் என்று காத்திருப்பது முட்டாள்தனம்.


* சைக்கிள் செயினில் ஒரு பல் பலவீனமாக இருந்தால் கூட வண்டி சரியாக ஓடாது. அதுபோல குடும்பத்திலும், நிறுவனத்திலும்  ஒரு இடத்தில் பலவீனமாக இருந்தால் சரியாக செயல்படுவது கடினமே.    

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^