Pages

Monday, 13 January 2014

72 . who are the real preachers / religious leaders ? 72. உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் ?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

72 . who are the real preachers / religious leaders  ?
* The real preachers / leaders, who are wishing without offering money and anythings from the people. Because real preachers are all apart from desire and enjoyment. So be careful from cheating preachers. 
* If you follow self cooking then your food cost will be reduced by half and you can save  another half. So learn how to cook ? It will always helpful in your life.
* Confident with one and cheated by one are not avoided in every human's  life. 
*  He, who will fight with people's everyday issues and getting win will be praised by all and very soon he will become a famous leader.  
* The strange thing is that some genius people are act as fools and some fools are act as wise men. 
* Scientists are saying , human's nature and behavior are depend upon  their 'genes'. They are giving examples : the son of Doctor become a Doctor, a  politician 's son become a  politician. But nowadays  villager also becoming a scientist  or a genius in music or a doctor or an engineer ! Now you tell to me ! what is the relationship between you and genes? What I want to say, everything is in your hands !

Success steps continuous next ...

******************************************************************************************

இனிய வாழ்க்கையின்  வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 


72.  உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் ?
* உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் என்றால் பொருள் வாங்காமல் அருள் வழங்குபவர்கள். ஏனெனில் அவர்கள் ஆசையும் , ஆடம்பரத்திற்கும் அப்பாற்ப்பட்டவர்களா -யிற்றே!  ஆகையால் போலிகளைக் கண்டு  ஏமாறவேண்டாம்.
* நீங்களே சமைத்து சாப்பிட்டால் சாப்பாட்டு செலவு சுமார் பாதிக்கு பாதி குறைகிறது. மீதம்  பாதி நீங்கள் சேமிக்கலாம். ஆகவே சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ! அது எப்போதும் உங்களுக்கு வாழ்கையில் கை கொடுக்கும். 

* மனித வாழ்கையில் ஒருவரிடம் நம்பிக்கை வைத்தல் மற்றும் ஒருவரிடம் ஏமாறுதல் இரண்டும் இல்லாமல் இருக்காது.
* யார் மக்களின் பொது பிரச்சனைகளை முன் வைத்து போராடி வெற்றி பெறுகிறவரே விரைவில் மக்கள் போற்றும் தலைவராகிறார். 
* மனிதர்களில் அதிசயம் என்னவென்றால் சில அறிவாளிகள் முட்டாள்களாகவும், சில முட்டாள்கள்  அறிவாளிகளாகவும் நடந்து கொள்வது தான்.


* அறிவியல் அறிஞர்கள், மனிதனின் குணம் மற்றும் நடத்தைகளுக்குக் காரணம் 'ஜீன்கள்' என்று கூறுகிறார்கள். அதாவது டாக்டரின் மகன் டாக்டராகிறான். அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகிறான். ஆனால் இப்போதெல்லாம் ஒரு கிராமத்துவாசி விஞ்ஞானியாக , இசைமேதையாக , டாக்டராக , பொறியியல் வல்லுநராக ஆகிறான். இப்போது நீங்களே சொல்லுங்கள் ! இவர்களுக்கும் ஜீன்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றனவா? அதாவது நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாமே உன் கையில் இருக்கின்றது! 

வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Saturday, 14 December 2013

71. WHEN WILL YOU NEED GOD'S HELP? - 71. இறைவனின் உதவி உனக்கு எப்போது வேண்டும் ?

HAVE A NICE LIFE STEPS 

MADURAI GANGADHARAN

71. WHEN WILL YOU NEED GOD'S HELP?
* Your life extreme situation or chaotic situations only you want to think God or approach to God. 

* A hundred years is not enough to fully understand human's organ and it's functions. 

* Instead of comprehend written of hundred pages, doing same thing in a minute of time that better, easier knowledge also. 
* When someone admire you that time you feel that you are flying like an eagle in the sky . Also it is a nice way to express your thoughtfulness and gratitude.

* Your quality (character) and fault will reflect on your face. Also your sincere efforts produces results and rewards.

LIFE STEPS CONTINUOUS NEXT...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


 இனிய வாழ்க்கைக்கான  வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
71. இறைவனின் உதவி உனக்கு எப்போது வேண்டும் ?

* யாரிடமும் உதவி கிடைக்காதபட்சத்திலும் , குழப்பமான  சூழ்நிலைகளில் மட்டுமே மனிதன் இறைவனை நினைக்கிறான் அல்லது இறைவனை நாடுகிறான்.
* மனிதனுடைய ஒவ்வொரு உறுப்பின் செயல்களையும், வளர்ச்சிகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு நூறு ஆண்டுகள் போதாது.

* நூறு பக்கங்கள் எழுதி புரிந்துகொள்ளும் அறிவின் நேரத்தை விட அதை ஒரு நிமிடம் செய்து காட்டும் அறிவு மேலானதும், எளிமையானதாகும். 
* ஒருவர் உன்னைப்  புகழுகின்ற போது நீ வானத்தில் கழுகு போல் பறப்பது போல உணருவாய். மேலும் அது நல்ல சிந்தனை மற்றும் நன்றியை தெரிவிப்பதாகும்.

* உனது தரமும் (குணம்) தவறும் உன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும். மேலும் உன்னுடைய தவறாத முயற்சி நல்ல முடிவையும், புகழ்ச்சியும் பெற்றுத் தரும்.  

வெற்றிப்படிகள் இன்னும் ...உயரும்.  


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நல்லாட்சி மலர தேவை அரசியல் விழிப்புணர்வு! - NEED POLITICAL AWARENESS !

நல்லாட்சி மலர தேவை  அரசியல் விழிப்புணர்வு!
NEED POLITICAL AWARENESS !

 இன்றைய   தேர்தல் புதுக்குறள் 
வலைதளத்தில் வலம் வருவோரே தேர்தலில் வெற்றி கொள்வர் 
மற்றவர்  டெபாசிட் இழந்து தோற்பர்.
  
சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 'ஆம் ஆத்மி கட்சி'  என்கிற சமீபத்தில் உதயாமான புது கட்சி இரு பெரும் தேசியகட்சிகளை எதிர்த்து அவர்களுடைய பணபலம்,   அதிகாரபலத்தையும்   தாண்டி எளிய மக்களைக்கொண்டு மிகக்குறைந்த காலத்தில் பெரிய சரித்திர வெற்றியைப் பதித்ததற்குக் காரணம் அவர்களின் அணுகுமுறை தான். அதாவது எல்லாமே வெளிப்படையாகவும், மக்களை மூளை முடுக்குகளில் சென்று நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளை அதாவது அரசியலில் மலிந்து கிடக்கும் லஞ்சம் ஊழல்,  மின்சாரம், குடிநீர் போன்றவைகளை தேர்தல் சமயத்தில்  மட்டுமில்லாமல் அதற்கு முன்னமே கேட்டறிந்து மக்களின் ஒட்டுமொத்த குரலாய் அவர்கள் ஓங்கி ஒலித்த அந்த ஒலி ஒவ்வொரு மக்கள் காதில் விழுந்து அதுவே அவர்களுக்கு ஒட்டு போடவைத்தது. அதுவும் டெல்லி சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.  இவர்களுக்கு உதவியாக சில மீடியாக்கள் இருந்ததென்னவோ உண்மை. 
இத்தகைய அந்த செயல்முறைகள் மற்ற கட்சிகளுக்கும் பெரிய கிலி ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இனிமேல் தொகுதிக்கு வராமல் / படுத்துக்கொண்டே யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது. யார் தினமும் மக்களை சந்தித்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்குத் தான் வெற்றியைத் தருவார்கள்.மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேர்மையாகவும், ஊழல்,லஞ்சத்திற்கு எதிராகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறார்கள். அது தவிர வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்களையும் வலைதளத்தில் வெளியிட வேண்டு மென்று  நினைக்கிறார்கள். தலைவராக பார்த்து தேர்தலில் நிறுத்துவதை மக்கள் அறவே மறுக்கிறார்கள். மக்களே தகுதியுள்ளவர்களை  பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இப்போது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வந்துவிட்டது என்று கருதலாம். ஒருவேளை இவற்றிற்கெல்லாம் மசியாது பழைய பத்தாம்பசலித்தணமாய் தேர்தலில் சந்தித்தால் பலன் கண்டிப்பாக பூஜ்யம் தான் கிடைக்கும். தோற்ற பிறகு அவர்களின் செயல்முறைகளை மாற்றிக்கொள்வதோ, காரணம் கண்டுபிடிப்பதோ , ஆராய்வதோ ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் இதுநாள் வரை என்ன நடந்துள்ளது. இனி எப்படி நடந்து கொண்டால் அரசியல் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.  
இதுவரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் தலைவர்கள் / தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் இஷ்டம் போல் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதை கவனித்திருக்கிறோம் ! பார்த்தும் இருக்கிறோம்! ஆனால் வெற்றி பெற்றவுடன்  வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு அவர்களின் வருமான வேலைகளை சரியாக செய்து சொத்து மேல் சொத்து சேர்த்து வருவதை சில ஊடகங்கள், மீடியாக்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் சில வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் தலைவைத்து கூட  படுப்பதில்லை. மேலும் சட்டசபைக்கு தவறாமல் செல்வதில்லை. சென்றாலும் மக்கள் குறைகளை பேசுவதில்லை. அன்றாடம் மக்கள் சந்தித்துவரும் குடிநீர், மின்சாரம், சாக்கடை, ஆக்கிரமிப்பு, கல்வி, போக்குவரத்து, சாலை, ரேசன் விநியோகம், விலைவாசி, வெள்ளம், வறட்சி, தொழில், கடன், வேலைவாய்ப்பு போன்ற சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் கூட அந்த தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பியோ  தலைகாட்டுவதில்லை.  ஆனால் தினமும் தலைவர்கள் தவறால் ஏதாவது ஒரு பிரச்சனை / பல பிரச்சனைகளைப் பற்றி பேசி வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் தலைவர்களுக்கு அந்த தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிகம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. 

தினசரியில் படிக்கிறோம். வெறும் தலைவர்கள் மட்டும் பேசினால் போதுமா? தொகுதி வேட்பாளர்கள தொகுதி மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்? என்னென்ன வசதிகள் செய்து தருகிறார்?  மக்களின் அன்றாட பிரச்சனைகள் (குடிநீர், மின்சாரம், கல்வி போன்றவை)  எவ்வாறு தீர்க்கிறார் என்கிற விவரம் மக்களுக்குத் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. மேலும் சொந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களே தங்கள்  தொகுதிக்குச் செல்வதில்லை. வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் எப்படி அந்த தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைத் தீர்ப்பார்கள்? பல தொகுதி பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட மனிதன் தான் கவலை படுகிறார்கள். அதன் பலனாக ஒரு சில குறைகள் தீருவதென்னவோ உண்மை தான்,
ஆனால்  சும்மா சொல்லக் கூடாது. பொது தேர்தலோ அல்லது இடைத்தேர்தல் வரும்போது அரசியல் தலைவர்கள் சரி, அமைச்சர்கள் சரி மற்றும் தொகுதி வேட்பாளர்கள் சரி எல்லோரும் மக்களைச் சந்திக்கத் தவறுவதில்லை! தேர்தல் முடிந்துவிட்டால் மக்களை 'அம்போ' என்று விட்டு விடுவார்கள்!   

அதற்கெல்லாம் ஒரே காரணம் மக்கள் ஒட்டு போடும்போது நல்லாட்சி கொடுக்க விரும்பும் வேட்பாளர்களைப்   பற்றிய எல்லா விவரங்கள் தெரியாவிட்டாலும் குறைந்தபட்ச விவரமாவது ஓட்டு போடும் மக்களுக்குத் தெரியவேண்டுமல்லவா? ஆனால் வேட்பாளர்களை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் நேர்முகம் காணல் மூலம் அவர்கள் நினைக்கும் தகுதி உள்ள வேட்பாளர்களைத்  தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். அதாவது வேட்பாளர்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு தகுதியாக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு விசுவாசகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தான் இது நாள் வரை கடைபிடிக்கிறார்கள். ஏன்? சில ஊடங்கங்கள் , சில மீடியாக்கள் , அரசு அதிகாரிகள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள்  பலவற்றை மறைத்து வருகிறார்கள்.
மக்களுக்காக சேவை செய்ய  விரும்புகிறவர்கள் நேர்மையாகவும், ஒளிவுமறைவில்லாமல்,  சாதி மத இன வேறுபாடில்லாமல்  பாரபட்சமின்றிநடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லையே? அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகள் கொஞ்சனஞ்சமா?  ராஜமரியாதை அல்லவா கிடைக்கிறது! வெறும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தை மட்டும் வைத்து மக்கள் கண்மூடிக்கொண்டு இதுநாள் வரை ஓட்டு போட்டுவருகிறார்கள். அதைப் பார்க்கும்போது முன்பு வாரிசு இல்லாத நாட்டில் ராஜா / ராணியைத் தேர்ந்தெடுப்பதற்கு பட்டத்து யாணை தும்பிக்கையில் மாலை கொடுத்து  ஒருவரை அதாவது அவர் ஆண்டியானாலும் சரி , செல்வந்தர் ஆனாலும் சரி , முட்டாளாக இருந்தாலும் சரி, கோழையாக இருந்தாலும் சரி  அவர் தான் நாட்டையும்  நாட்டு மக்களையும்  ஆளவேண்டும். அதிலும் ஒரு நல்லது இருக்கின்றது. அதாவது நாட்டை ஆள்பவர்களுக்கு கண்டிப்பாக வீரம் இருக்கவேண்டும். வீரம்  இருந்தால் தான் யாணையின் முன்னால் நிற்க முடியும். அது போடும் மாலையை ஏற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய இளைஞர்கள் கையில் தான் எல்லாமே இருக்கின்றது என்று சொல்லலாம். சமீபத்தில் நடக்கும் பல மாற்றங்களுக்கும் அவர்களே முக்கிய காரணம். அவர்களின் ஓட்டு தான் பல வெற்றியின் தலை எழுத்தை மாற்றிவிடுகின்றது. அவர்கள் பெரும்பாலும் கணினி மற்றும் வலைதளங்களில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அரசியல் கட்சி தலைவர்கள், தொகுதி வேட்பாளர்கள் வலைதளத்தில் வலம் வந்தால் அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதில் தங்களின் விமர்சனங்களை தருகிறார்கள். கேள்வியும் கேட்டு பதிலும் பெறுகிறார்கள். ஆக இன்றைய மக்கள் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை ஏதாவது ஒரு வலைதளத்தின் மூலம்  வேட்பாளர் எப்படிப்பட்டவர்? அவரின் நோக்கம் என்ன? எதிர்கால மக்களுக்கு அவர்  செய்யபோகும் திட்டங்கள் எவை எவை? அவரின்  படிப்பு , தொழில், சொத்து போன்ற விவரங்கள் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள ஆசைபடுகிறார்கள். அவ்வாறு மக்களுக்குத் தெரிந்தால் தானே  சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்.  எதுவுமே தெரியாமல் ஓட்டுப்போடுவது பாழும்கிணற்றில் நாமே விழுவதை போன்றதாகும் என்று நினைக்க ஆரம்பித்து வருகிறார்கள்.  அதைவிடக் கொடுமை வேட்பாளர் தான் வெற்றி பெற்ற தொகுதி தனது சொந்த தொகுதி இல்லையென்று ஜெயித்த பின் மக்களுக்குத் தெரியவருகிறது. பின் எப்படி அந்த வேட்பாளர் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்துவைப்பார்? இன்றைய இளைஞர்கள் வேட்பாளர் மனுதாக்கல் செய்தவுடனே அவர் கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து அவர் நிற்கும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்தில் ஒட்டிவைக்க வேண்டும் என்றும்  மேலும் வலைதளத்தில் வெளியிடவேண்டும் விருப்பப்படுகிறார்கள்.

இதோ இந்த படிவத்தின் மாதிரி (இதில் எது தேவை இருக்கின்றதோ அவைகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்)


1.  வேட்பாளர் பெயர்         :                       வேட்பாளர் புகைப்படம் 
2.  தற்போதைய முகவரி  :
3.  நிரந்தர முகவரி             :
4.  வயது    
5.  படிப்பு                               : 
6.  பொழுது போக்கு           :
7.  ஆரோக்கியம்                 :  
8.  குடும்ப உறுப்பினர்கள் :
9.  போட்டியிடும் சின்னம் :
10. சொந்த தொகுதியின் பெயர் :
11. குடும்ப உறுப்பினர் / உறவினர் தற்போது அரசியலில் இருக்கின்றனரா? 
12. தொழில் / பதவி பெயர் :
13.  தொழில் வரி / வருமான வரி கட்டுபவரா?
14. சொத்து / சமபளம்        :
15. குற்றப்பின்னணி  (ஏதேனும் இருந்தால்) விவரம்:
16. நிலுவை வழக்கு  (ஏதேனும் இருந்தால்)       :
17. பொது சேவை விவரம் (ஏதேனும் இருந்தால்)
18. தேர்தலில் நிற்பதன் நோக்கம்:
19. தொகுதியில் வருங்காலத் திட்டங்கள்:
20. இதற்கு முன் எம்.எல்.ஏ / எம்.பி உறுப்பினரா ?
21. எத்தனை ஆண்டுகள் :
22. சட்ட / பாராளுமன்றத்திற்கு சென்ற சதவீதம் :
23. மக்களுக்காக பேசியது எத்தனை முறை         :
24. தொகுதிக்குச் எத்தனை முறை சென்ற விவரம்:
25. மக்களுக்காக என்ன சேவை / வசதிகள் செய்துகொடுத்த விவரம்:
26. போராட்டத்தில் கலந்து கொண்ட முறைகள் :

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மையே. ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ஒருவேளை நான் பதவியில் இருந்தால் அப்பதவியை ராஜினாமா  செய்கிறேன். மேலும் நான் ஊழல் செய்ய மாட்டேன். லஞ்சம் வாங்கமாட்டேன். மக்களுக்கு பிரச்சனை கொடுக்கும் எந்தவகையான குற்றச்செயல் மற்றும் போராட்டத்தில்  ஈடுபடமாட்டேன். அப்படி ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் நான் என்  பதவியை ராஜினாமா செய்வேன். சட்ட / பாராளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பேன். தவறாது கூட்டத்திற்குச் சென்று மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லி அவற்றை தீர்த்து வைப்பேன்.அரசு கொடுக்கும் சலுகைகளை தவறாக உபயோகிக்க மாட்டேன். அரசு சொத்துக்களை காப்பேன்.

                                                                           இப்படிக்கு 
சாட்சிகள் :                               போட்டியிடும்  வேட்பாளர் கையெப்பம் 


இளைஞர்கள் இவற்றை கேட்பது எதற்காகவென்றால் வெற்றிபெற்ற வேட்ப்பாளர்கள் பலர் தாங்கள் பதவியில் இருப்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்துவிடுகிறது. சத்தமில்லாமல் 5 / 10 / 15 வருடங்களை பதவியில் இருந்துகொண்டு கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வளம் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை . சிலர் ஏதோ பிரச்சனையில் மாட்டும்போது தான் அவரின் உண்மையான பின்னணி அதாவது படிப்பறிவு இல்லாதவர் , குற்றப்பின்னணி உள்ளவர் என்று தெரியவருகிறது. 

எல்லாத்தையும் விட கூட்டணி பேரம் நடத்தும்போது மக்களை முட்டாளாகவே நினைக்கிறார்கள். மக்கள் விரும்பாத கட்சியில் கூட்டணி வைத்துகொள்ளும் சம்பவம் அதைவிட மக்களுக்குச் செய்யும்   துரோகம் வேறு எதுவுமில்லை.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமல்லவா? எத்தனைக் காலம் தான் இப்படியே ஆட்டுமந்தைகள் போல் ஆதிகாலத்து முறையைப் பின்பற்றுவது? ஓட்டு போடுவதில் மட்டும் மாற்றம் செய்வதோடு நில்லாமல் வேட்பாளரின் விவரங்களை அறியும் விதத்திலும் மாற்றம் மற்றும் விழிப்புணர்வு வேண்டும். 


ஆகவே மக்களே எல்லோரும் நலம் பெற , நல்லாட்சி பெற்றிட  இன்றே நாம்  அரசியலில் விழிப்புணர்வு பெறுவோம். நாட்டை லஞ்சம் ஊழல் இல்லாமல் புனிதமாக்குவோம். உலகத்தில் சிறந்த நாடு என்று பெயர் எடுப்போம்.

  நன்றி , வணக்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
                           

தமிழ் எழுத்துகள் மட்டுமே தமிழைக் காக்கும் ! READ TAMIL AND WRITE TAMIL !

8.12.13 அன்று மதுரையில் 'மாமதுரை கவிஞர் பேரவை' நடத்திய பாரதியார் கவிதைப் போட்டியில் நான் வாசித்த புதுக்கவிதை 

 

தமிழ் எழுத்துகள் மட்டுமே தமிழைக் காக்கும்



                                            மதுரை  கங்காதரன்  


 திராவிடக் குடும்பத்தின் முதன்மை மொழி தமிழ் 
 எளிமையான ஏராளமான கலைச் சொற்கள் கொண்ட மொழி தமிழ் 

 எட்டு கோடி மக்கள் பேசும் சிறப்பு மிக்க மொழி தமிழ் 
 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொன்மை மொழி தமிழ் 

 கல்வெட்டு பனை ஓலைகளில் எழுத்துகள் ஆதாரமுள்ள மொழி தமிழ் 
 இலங்கை சிங்கபூர் மலேசியாவில் பரவி இருக்கும் மொழி தமிழ் 

 வீரமா முனிவர் பெரியாரால் எழுத்துகளில் சீர்திருத்தம் கண்ட மொழி தமிழ் 
 அகத்தியரால் இலக்கணம் வரையறுக்கப்பட்ட செம்மை மொழி தமிழ் 

 இன்று அந்நிய மொழியில் மருத்துவம் பொறியியல் கணினி படிப்பு பயில்கிறாய் 
 அதில் தேர்ச்சி பெற்று வெளிநாடு சென்று புகழும் அடைகிறாய் 

 எம்மொழி பேசினாலும் எந்நாட்டில் இருந்தாலும் உன்னை ஏற்றிவிட்ட ஏணி தமிழ் 
 பெற்ற தாய்க்குச் சமமாக மற்றவர்கள் அன்புகாட்ட முடியுமா?

 தமிழ் மொழிக்குச் சமமாக மற்ற மொழிகளில் உணர்வுகளைத் தர முடியுமா?
 திருக்குறளும், பாரதி கவிதைகளும் எழுத்துகளாய் கிடைத்தது தமிழுக்குப் பெருமை 

 சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எழுத்து விதைகள் தமிழுக்கு மரமாய் நிற்கின்றன 
 அந்த தமிழ் எழுத்துகள் உலக நல்வாழ்வுக்கு வழிகாட்டும் தடங்கள் 


 விண்கலம் ஏவி சாதித்தவரும் ஆஸ்கார் நாயகனும் தமிழர்களே 
 கணினி வலைதளத்தில் தமிழ் எழுத்துகள் பலவடிவில் உள்ளவரை தமிழ் அழியாது 

 உன்னை அடையாளம் காட்ட தமிழ் மொழியில் ஒன்றையாவது படைத்து விடு 
 நாம் சிறந்து வாழ தமிழ் வாழ எல்லாமே தமிழ் எழுத்துகளில் எழுது !


வாழ்க தமிழ் !

வளர்க தமிழ் !!

நன்றி , வணக்கம் !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பலவித கொள்ளைக்காரர்கள் ! - DIFFERENT KINDS OF ROBBERS!

பலவித கொள்ளைக்காரர்கள் !



DIFFERENT KINDS OF ROBBERS!

                  புதுக்கவிதை 

            மதுரை கங்காதரன் 

பாசத்தினால் தன் பிள்ளைகளின் அன்பைக் 
கொள்ளையடிப்பவள் தாய்.

தியாகத்தால் குடும்பத்தின் உறவுகளை 
கொள்ளையடிப்பவள் மனைவி.

குடும்பத்திற்காக சம்பாதித்து அன்பை 
கொள்ளையடிப்பவன் கணவன்.

பெற்றோர்களுக்கு தனது கடமை பாசத்தை 
கொள்ளையடிப்பவர்கள் பிள்ளைகள். 


நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களைக் 
கொள்ளையடிப்பவன் நடிகன்.

ஆபத்து சமயத்தில் உதவி நட்பை 
கொள்ளையடிப்பவன் நண்பன்.

சோதனைகளைச் செய்து பக்தர்களின் மனதை 
கொள்ளையடிப்பவர் இறைவன்.

மக்களின் செல்வங்களைத் தெரியாமல் 
கொள்ளையடிப்பவன் திருடன்.


மக்களை தனது பேச்சினால் 
கொள்ளையடிப்பவர் பேச்சாளர்.

செவிகளை தன் இசை பாடல்களால் 
கொள்ளையடிப்பவன் இசைக் கலைஞன்.

உடல் அசைவினால் பார்பவர்களை மயக்கி 
கொள்ளையடிப்பவன் நடனக் கலைஞன்  


தொண்டர்களின் உழைப்பை கொள்கையினால் 
கொள்ளையடிப்பவன் அரசியல்வாதி.

மக்களின் உரிமைகளை ஓட்டுகளின் மூலம் 
கொள்ளையடிப்பவர் அரசியல் தலைவர்.

வியாபரத்தை வாடிக்கையாளர்களை லாப முறையில் 
கொள்ளையடிப்பவன் பணக்காரன்.

மக்களை பலவழிகளில் ஏமாற்றிக் 
கொள்ளையடிப்பவன் அறிவாளி.


சேவைகள் மூலம் மக்கள் மனங்களை 
கொள்ளையடிப்பவன் சமூக சேவகன்.

அன்பின் மூலம் இதயத்தை 
கொள்ளையடிப்பவகள் காதலர்கள். 

இலக்கியம் மூலம் மக்களின் உணர்வுகளைக் 
கொள்ளையடிப்பவன் கவிஞன்.

***************************************************************************************



யாருக்கு என்ன முதலீடு வேண்டும் (பணம் தவிர) - WHO NEED WHAT ? (EXCEPT MONEY)

யாருக்கு என்ன முதலீடு வேண்டும் (பணம் தவிர)
WHO NEED WHAT ? (EXCEPT MONEY)
                                            
 புதுக்கவிதை
                                     
  மதுரை கங்காதரன்  


டாக்டர்களுக்கு நோயாளிகள் முதலீடு 
வியாபாரத்திற்கு வாடிக்கையாளர்கள் முதலீடு 

வக்கீல்களுக்கு வழக்குகள் கொடுப்பவர்கள் முதலீடு 
ஆசிரியர்களுக்கு கல்வி கற்க வருபவர்கள் முதலீடு 

அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போடுகிறவர்கள்  முதலீடு 
திரைப்படத்திற்கு கவர்ச்சி முதலீடு 

சின்னத்திரைக்கு தொடர்கள் முதலீடு 
பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகள் முதலீடு 

அறிவியல் அறிஞர்களுக்கு கண்டுபிடிப்பு முதலீடு 
கல்வி கற்றவர்களுக்கு பட்டம் ஒரு முதலீடு 


பொறியியலாளர்களுக்கு கைத்திறன் முதலீடு 
கலைஞர்களுக்கு கலைகள் முதலீடு 

போலீஸ்காரர்களுக்கு திருடர்கள் முதலீடு 
கவிதை எழுதுபவர்களுக்கு காதல் முதலீடு 

எழுத்தாளர்களுக்கு கதை,கட்டுரைகள் முதலீடு 
பதவியில் இருப்பவர்களுக்கு தொண்டர்கள் முதலீடு 

முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் முதலீடு 
பெற்றோர்களுக்கு குழந்தைகள் முதலீடு 

நாட்டிற்கு வளங்கள் முதலீடு 
உலகிற்கு மனிதர்கள் முதலீடு  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் ! - HAPPY AND SORROWS

மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் !

HAPPY AND SORROWS
                                                

புதுக்கவிதை 
               
     மதுரை கங்காதரன் 

விட்டுக்கொடுத்தல் இருக்கும் வரை சீண்டிப்பார்பவர்கள் இருப்பார்கள் 
ஆட்டுவிப்பவர்கள்  இருக்கும் வரை ஆடுபவர்கள்   இருப்பார்கள் 

பசி இருக்கும் வரை பஞ்சம்   இருக்கும்  
இரக்கம்  இருக்கும் வரை  தவறுகள் நடக்கும் 

நல்லவர்கள்  இருக்கும் வரை  கேட்டவர்கள்  இருப்பார்கள் 
அறிவாளிகள்  இருக்கும் வரை   அறிவுரை சொல்பவர்கள் இருப்பார்கள் 

நீதிமன்றம்  இருக்கும் வரை  வழக்குகள்  இருந்துகொண்டிருக்கும் 
காவலர்கள் இருக்கும் வரை திருடர்கள்   இருப்பார்கள் 

 நாடுகள் இருக்கும் வரை  சண்டைகள் இருந்து கொண்டிருக்கும்  
 மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் 


 காதல்  இருக்கும் வரை   சாதலும் இருக்கத் தான் செய்யும்  
 மிதவாதம் இருக்கும் வரை   தீவிரவாதம் இருக்கும்  

 பரிசுகள் இருக்கும் வரை அதிர்ஷ்டம் இருக்கும்  
 எல்லைகள் இருக்கும் வரை  அதை  மீறுதலும் இருக்கும் 

 நல்ல மனம் இருக்கும் வரை பொறாமை உடையவர்களும்   இருப்பார்கள் 
ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகம் இருக்கும்  

 ஆக்கம் இருக்கும் வரை அழிவுகள் இருக்கத் தான் செய்யும்  
 படித்தவர்கள் இருக்கும் வரை முட்டாள்கள்  இருப்பார்கள் 

 பணக்காரர்கள் இருக்கும் வரை ஏழைகள்  இருப்பார்கள் 
 பகல் இருக்கும் வரை   இரவு என்று ஒன்று இருக்கும் 

 ஏற்றங்கள் இருக்கும் வரை   இறக்கங்கள் இருப்பார்கள் 
 சாதிகள் இருக்கும் வரை  சச்சரவுகள்  இருப்பார்கள் 

 லாபம் இருக்கும் வரை   நஷ்டம் என்று இருக்கும் 
 உண்மை இருக்கும் வரை பொய் என்று ஒன்று இருக்கும்  

அழகு  இருக்கும் வரை  அசிங்கங்களும் இருக்கும்  
 நியாயங்கள் இருக்கும் வரை அநியாயமும் இருக்கும் 

 நட்பு இருக்கும் வரை  பகையாளிகளும் இருப்பார்கள் 
அரசியல்வாதிகள்  இருக்கும் வரை  லஞ்சம், ஊழல் இருக்கும்  

வெள்ளை  இருக்கும் வரை   கருப்பு இருக்கும் 
டாக்டர்கள் இருக்கும் வரை நோயாளிகள் இருப்பார்கள் 

ஆண் பெண் இருக்கும் வரை  குடும்பம் என்று ஒன்று இருக்கும் 
நல்லநேரம் இருக்கும் வரை கெட்டநேரம் இருக்கும்  


ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை   ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் 
சப்தம்  இருக்கும் வரை  அமைதியும் இருக்கும் 

உழைப்பவர்கள் இருக்கும் வரை  சோம்பேறிகளும்  இருப்பார்கள் 
சரித்திரங்கள் இருக்கும் வரை  தரித்திரங்களும் இருக்கும்   

காரியம் இருக்கும் வரை   காரணங்களும் இருக்கும் 
பலசாலிகள் இருக்கும் வரை கோழைகள் இருப்பார்கள் 

அரசியல் இருக்கும் வரை ஓட்டு போடுபவர்கள் இருப்பார்கள் 
உலகம் இருக்கும் வரை   மனிதர்கள் இருப்பார்கள் 

உறவுகள்  இருக்கும் வரை பிரிவுகள் இருக்கும்  
அன்பு இருக்கும் வரை தண்டனை கொடுப்பவர்கள்   இருப்பார்கள் 


######################################################################################