Pages

Saturday, 25 January 2014

தலைப்பு : தமிழா! நீ பேசுவது தமிழா! ஆய்வரங்கம் - கவியரங்கம்

19.1.2014 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை 
                                      
               அவர்களால் ஏற்பாடு செய்திருந்த 

                    ஆய்வரங்கம்  - கவியரங்கம் 


            நிகழ்ச்சியில் நான் பாடிய புதுக்கவிதை 

                           மதுரை கங்காதரன் 



               தலைப்பு : தமிழா! நீ பேசுவது தமிழா!

தமிழா !  தமிழ் மொழியில் அந்நிய மொழியை கலந்து பேசுகின்றாயே !
உன் பெயரை தமிழ் பாதி அந்நிய மொழி பாதி கலந்து எழுதுவாயா?

வானவில்லின் அழகு பலவண்ணங்கள் தனித்தனியே இருப்பது தான் 
அறுசுவையின் மகிமையே தனித்தனியாக ருசி தருவதினால் 

நவரசங்களின் அழகு , பாவனைகள் தனித்தனியே காட்டுவதினால் 
நவரத்தினங்களின் அழகு அவைகள் தனித்தனியே பிரகாசிப்பதினால் 

உலக அதிசயங்களின் அழகு அவைகள் தனித்தனியே இருப்பதினால் 
முக்கனிகளின் சுவை அவைகள் தனித்தனியே ருசிப்பதினால் 

மொழிகளின் அழகு அவைகள் தனித்தனியே பேசுவதினால் 
மனிதர்களின் அழகே ஆணும் பெண்ணும் தனித்தனியே இருப்பதினால் 

தனித்தனியாக இருந்தால் தான் முழுமை காண முடியும் 
எல்லாமே கலந்திருந்தால் அரைகுறையாக முடியும் 

பாலில் சிறிதளவு தண்ணீர் கலந்தாலே சுவை குன்றிவிடும் 
அதே பாலில் சிறிதளவு மோர் கலந்தால் என்னவாகும்?

தவறான தாளங்களினால் புதுமையான ஒலிகள் எழும்பலாம் 
காதால் கேட்டு ரசிக்கும்படி இனிமை இருக்குமா?


குயில் என்றாவது காக்கை போல் கரைந்து கலந்து கூவுகின்றதா ?
சிங்கம் என்றாவது மயில் போல் அகவுவதோடு கர்ஜிக்கின்றதா ?

தமிழா! நீ விட்டில் பூச்சியாக இருக்காதே ! அந்நிய மொழி பிரகாசத்தில் மயங்காதே !
அது உன்னை பொசுக்க வந்திருக்கும் 'தீ ஜுவாலை ' என்று மறவாதே !

தமிழா! நீ இலக்கண சுத்தமாக பேசவேண்டாம் ! தமிழ் சொற்களில் பேசலாமே!
தமிழ் மொழி உனக்கு தமிழனாக தமிழ் தாய் கொடுத்திருக்கும் அடையாளம்!

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! பேசுக தமிழ் சொற்களில்!

நன்றி ..  வணக்கம்...


*******************************************************************************************************************

 

Monday, 13 January 2014

77. CAN YOU READY EXPLAIN THIS ? 77. இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

77. CAN YOU READY EXPLAIN THIS ?
* Are you ready to explain this ? Many people do not remember the good things as well as do not keep it 's details in their mind . But remember the bad things are good ! That is, people remember their enemy well rather than friends.  
* God created the ups and downs because of we compare each other for the sake of comfort and get satisfaction !
* Answers are very easy to read . But the question within it, is very difficult to establish . Microscopic knowledge person only can able to do it properly 


* You can memorize Many books. But it is difficult to give the suitable answer for the given questions? 
* There is no use in Self pride and talking that 'my language is best' like that. A person in the highest place does not need to advertise . A person in the lowest place , ' here I am ', like the advertisement is mandatory .

* Success life steps continues next...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

77. இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?


* இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தயாரா?  பலர் நல்ல விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் கெட்ட விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்கிறார்கள்! அதாவது ஒருவனின் நண்பர்களைப் பற்றிய விவரங்களைக் காட்டிலும் அவனின் எதிரியின் விவரங்களை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


* கடவுள் நம்மில் ஏற்ற தாழ்வுகளைப் படைத்திருப்பது நாம் ஒருவரை ஒருவர் பார்த்துத் திருப்தியும் ஆறுதலும் அடைவதற்காக!


* பதில்களைப் படிப்பது மிகவும் எளிது. ஆனால் அதைக்கொண்டு கேள்வி உருவாக்குவது மிகவும் கடினம். நுண்ணிய அறிவுள்ளவர்கள் மட்டுமே அதைச் சரியாக செய்ய முடியும்.


* புத்தககங்களை பலர் கண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்துவிடுகின்றனர். ஆனால் அதிலிருந்து கேள்விகளைக் கேட்கின்ற போது விடை தெரியாமல் முழிக்கின்றனர்.


* தான் , தன் மொழி உயர்ந்தது என்று தற்பெருமையாக பேசிகொண்டிருப்பதால் எவ்வித பயனும் இல்லை. அதாவது உயர்ந்த இடத்தில் இருப்பவனுக்கு தான் இருக்கும் இடத்தைப் பற்றிய விளம்பரம் தேவையில்லை. தாழ்ந்த இடத்தில் இருப்பவனுக்குத் தான் 'நான் இங்கிருக்கிறேன்' என்கிற விளம்பரம் கட்டாயம் தேவை.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




76. WHO WILL GET SECRET OF TREASURE ? 76. யார் புதையலின் ரகசியம் அடைவார்கள் ?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

76. WHO WILL GET SECRET OF TREASURE ?
* A cruel thing in this present world is, even we tell the 'secret of treasure' to some people, many of them try it as 'just like that' . very few people would dig it and get that successful treasure.
* When riding your car 'up' direction of the bridge in land , ensure a small stone in  the back wheel because it will be helpful If a situation of break failure that small stone will prevent to slide down. Likewise , when you are climbing up , that time, you find any stone (even small) in front of the wheel you must remove it and through it way or break it into powder. Because it will give trouble during your journey. The life lesson is, even if you are facing a small barrier (even small) in front of you then you must break it in to pieces  then only there will be a progress in your life. At the same time, if some well-wisher give a small advice that may be helpful in your difficult times .
* You can't expect today's once character will be continued tomorrow also. The chance is only fifty percent !
* It is very difficult to change once birth-Character. But it is possible only by doing hard work and applying concentration.
* You can't know once real behavior merely by talking daily with him. How he behaves in various situations that might be accounted.



* Success life steps continues next...

*********************************************************************************************
வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

76. யார் புதையலின் ரகசியம் அடைவார்கள் ?
* இப்போதுள்ள உலகில் கொடுமையான விஷயம்  என்னவென்றால்  புதையல் இருக்கும் ரகசியத்தைச்  சொன்னாலும் அதைத் தேடி சிலரே செல்கிறார்கள். அதிலும் வெகுசிலரே அதை தோண்டி எடுத்து வெற்றிகொள்கிறார்கள்.  
* உனது வாழ்க்கை வண்டி மேலே ஏறும்போது பின்புற சக்கரத்தில் எப்போதும் சிறிய கல் இருப்பது நல்லது. ஏனெனில் நீ கீழே இறங்கும் சூழ்நிலை வந்தால் அந்த கல் உன்னை இறங்க விடாமல் தடுக்கும். அதேபோல் நீ மேலே ஏறும் போது அதே சிறிய கல் முன் சக்கரத்தில் இல்லாமல் பார்த்துக்கொள். ஏனெனில் உன்னை அது முன்னேறவிடாமல் செய்துவிடும். அதுபோல நீ முன்னேற வேண்டுமென்றால் சிறிய தடை வந்தாலும் அதை தகர்த்து எறி. உனது முன்னேற்றம் தடை படாது. அதே சமயத்தில் உன்னைக் காக்கும் சிறிய ஆலோசனையை தவிர்க்காமல் உன்னுடன் அழைத்துக் கொள். ஏனெனில் உனது கஷ்டமான காலத்தில் அது உதவும்.
* மனிதனின் இன்றிருக்கும் குணம் போல நாளையும் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்பிக்கை. ஆனால் அதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே!
* பிறவிக்குணத்தை மாற்றுவது என்பது எட்டாக்கனியாக இருந்தாலும் முயற்சி மற்றும் கவனம் இருந்தால் அதை நல்ல திசையில் மாற்றி வாழ்கையில் வெற்றி பெறலாம்.
* தினமும் ஒருவனிடத்தில் பேசுவதினால் மட்டுமே அவனின் உண்மை சுயரூபம் தெரிந்து விடாது. அவன் பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்தே  ஓரளவு தெரியவரலாம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

*********************************************************************************************************************************