Pages

Sunday, 13 April 2014

87 . Time 's Hide and Seek Game - 87. காலம் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN
 
87 . Time 's Hide and Seek Game

 

* As long as you have a thing within that time that thing you may not be required . But after you give / sell it then you will really need it. That time You could buy it back at a higher price . Sometime  you buy to whom did you sell or give it.

 

* When you want to rush to work that time you may not get any help.But many come to help you when you are free.


* What do you think that will not be happened. When do you not think that will happen.

 

* You are not get it when are you wanted. But you will get when are you not wanted it. 

 
* You want to die when you are wanted to live. You want to live when you are in the edge of death .

 
* Time will see you when you are not seen the Time. Time will not see You when you are seen the Time. 
 
Success steps continuous next......


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

 

87. காலம் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு

 

* ஒரு பொருள் உன்னிடம் இருக்கும் வரை உனக்கு அவசியமில்லாமல் இருக்கும். ஆனால் அதுவே உனது கைவிட்டுப்  போனவுடன்  மிகவும்  தேவையாக இருக்கும். அதை நீ மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். சில சமயம் கொடுத்தவரிடமே வாங்க நேரிடும்.

 

* நீ அவசரமாக வேலை முடிக்க நினைக்கும்போது உனக்கு உதவி கிடைக்காது. ஆனால் வேண்டாதபோது உதவிகள் செய்ய பலர் வருவார்கள்.

 

* நீ இது இப்படி நடக்கும் என்று நினைக்கும்போது அது நடக்காது. நீ நினைக்காத போது அது நடக்கும் 
 
* நீ கேட்கும்போது கிடைக்காது . நீ கேட்காதபோது கிடைக்கும்.

 

* நீ வாழ நினைக்கும்போது சாகத் தோன்றும். சாவின் முனையில் இருக்கும்போது வாழத் தோன்றும்.

 

* நீ பார்க்காத போது காலம் உன்னைப் பார்க்கும். நீ காலத்தைப் பார்க்கும்போது அது உன்னைப் பார்க்காது.    
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 

100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி - WAY TO 100% ELECTION POLLING

100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி 
WAY TO 100% ELECTION POLLING

 

விழிப்புணர்வு கருத்து

 

மதுரை கங்காதரன்

          

காலம் காலமாகவே மக்களை ஓட்டு போட வைப்பதற்கு அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் பலவிதமான யுக்திகளை கையாண்டு வருகின்றது. பொதுவாக சில கட்சிகள்  ஓட்டு  போட்ட  மக்களுக்கு பிரியாணி விருந்து. சில கட்சிகள் பணம் பட்டுவாடா (தெரியாமல்) செய்கிறது. சில கட்சிகள்  இலவசங்களை  அள்ளித் தருகிறது.  அதையெல்லாம்  தாண்டி  இப்போது புதுப்புது யோனைகள்  முளைத்திருக்கின்றன. அதாவது ஓட்டு போட்டால்  ஒரு  ஹோட்டலில்   அவருக்கு  ஐம்பது சதவீதம் தள்ளுபடி. சிலர் கட்சிகள் கைபேசியில் 'ரீ-சார்ஜ்' செய்கின்றனர். சில  கட்சிகள்  வாங்கும்  பெட்ரோலில் சில ரூபாய் தள்ளுபடி. இன்னும்  இந்த பட்டியல்  நீண்டு கொண்டே போகலாம்.
         


சரி இது தான் வழியா? வேறு ஏதாவது வழி இருக்கின்றனவா ? என்று யோசிக்கும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஓட்டு போடும் போது அவர்களுக்கு 'தேர்தல் குலுக்கல் பரிசு எண் '  தேர்தல் முடிவு வெளியானவுடன் ஒரு குறிப்பிட்ட நாளில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு  தொகுதியிலும்  மூன்று அதிர்ஷ்ட நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்த பரிசை  ஒவ்வொரு  தொகுதி  வெற்றி பெற்ற வேட்பாளர் கையால் வழங்க வேண்டும் . அதை டி.வி யில் நேரடியாக ஒளிபரப்ப  வேண்டும்.  


      

முதல் பரிசு ஒரு லட்சம். (அரசு ஊழியராக இருந்தால்)
 
இரண்டாவது பரிசு  ஐம்பதாயிரம்  (அரசு ஊழியராக இருந்தால்)மற்றும் 
 
மூன்றாம் பரிசு இருபத்தைந்தாயிரம் (அரசு ஊழியராக இருந்தால்).
 
அரசு ஊழியராக இல்லையென்றால் வெற்றிபெற்ற  மூன்று நபர்களுக்கு மட்டும் கல்வித் தகுதி / அனுபவம் இருப்பின் குறைந்தபட்ச அரசாங்க வேலை தரலாம்.

மூத்தகுடிமகன்களுக்கு / ஐம்பது வயது கடந்தவர்களுக்கு அரசு ஓய்வூதியம் தரலாம்.
 
 
இப்படி செய்யும்போது மக்களுக்கு தானாகவே முன் வந்து ஓட்டுப் போடும் ஆர்வம் வரும். 100% வாக்குப்பதிவு கட்டாயம் நடக்கும்!
 
                


இது எப்படி இருக்கு?   
உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாமே?  
நன்றி ... வணக்கம் !!
**************************************************************************************************************************

86. Excellence characteristics of an Industrialist - 86. நீங்கள் ஒரு சிறந்த தொழிலதிபரா?

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN


86. Excellence characteristics of an Industrialist 

The most needed Excellence characteristics of an Industrialist is as following :


1 . During the administration will be able to solve small problems promptly without any delay. If in doubt consult with the experienced people probably asking right now, should resolve and take a decision accordingly.

2 . Profit / Loss occurs in the administration must be informed to the workers  
and always keep them vigilant.

3 . Develop the habits to adjust and handle everyone without discrimination.

4 . Care should be taken not in any lull in business.

5 . The cost of waste should be avoided.


* Lack of efficiency and integrity ' of fortune ' power keep you a few hours or some few days you will be keeping them in peak. After that LUCK pushed you down.


Having luck with efficiency and integrity's power will keep you in the height and hold you in the  peak  forever.

Success steps continuously next......


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

86. நீங்கள் ஒரு சிறந்த தொழிலதிபரா? 

சிறந்த தொழிலதிபருக்கு கீழ்கண்ட குணநலன்கள் மிகவும் அவசியம் :


1. நிர்வாகத்தின் போது வரும் சிறிய சிறிய பிரச்சனைகளைத்  தள்ளிப்போடாமல் உடனுக்குடன் தீர்த்துவைக்கும் திறமை இருக்கவேண்டும். ஒருவேளை சந்தேகம் இருப்பின் அதில் அனுபவமிகுந்தவரிடம் ஆலோசனை கேட்டு உடனே அதன்படி முடிவு எடுத்து தீர்த்து விடவேண்டும்.

2. நிர்வாகத்தில் ஏற்படும் லாபநஷ்டங்களை தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி செய்தல் வேண்டும்.

3. எல்லோரையும் பாகுபாடு பார்க்காமல் அனுசரித்துச் செல்லும் பழக்கம் கொள்ள வேண்டும் 

4. வியாபாரத்தில் எதிலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள  வேண்டும்.

5. வீண் செலவை தவிர்க்க வேண்டும்.


* திறமையும் நேர்மையும்  இல்லாத 'அதிர்ஷ்டத்தின்' சக்தி  உன்னை சில மணிநேரமோ அல்லது சில நாட்களோ உச்சத்தில் கொண்டு போய் வைத்து விடும். பிறகு உன்னை கீழே தள்ளி மிதித்துவிடும்.


திறமையும்  நேர்மையும் இருப்பவர்களுக்கு 'அதிர்ஷ்டம்' அவர்களை எப்போதும் உச்சத்தில் வைத்துகொள்ளும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^