Pages

Saturday, 13 December 2014

தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே! TAMIL LANGUAGE IS ALIVE?


தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே!
TAMIL LANGUAGE  IS ALIVE?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 
மாமதுரை கவிஞர் பேரவை மற்றும் உலகத் தமிழாய்வு சங்கம்
நடத்திய கவிதை அரங்கம்

நாள்: 7.12.14   இடம்: மகாஜன மேன்சன், மதுரை.

 
தமிழ் மொழி தெரிந்தவர்கள்  எல்லாம் தமிழர்களா?
தமிழ்நாட்டில் வாழ்பவர்களெல்லாம் தமிழர்களா?
தமிழை உதட்டளவே உச்சரிப்பவர்   தமிழர்களா?
தமிழ் மொழியை கலப்பில்லாமல் பேசி வளர்ப்பவர்களே தமிழர்கள்!

 முக்கடல் சங்கமத்தில் பிறந்த மொழி தமிழ்
முச்சங்கம் போற்றி வளர்த்திட்ட உன்னத மொழி தமிழ்
முத்தமிழைக் கொண்ட முத்தான மொழி தமிழ்
மூவரசர்கள் கட்டிக் காத்த மொழி எங்கள் தமிழ்

 
தமிழ் அமுதமாய் அனைவருக்கும் விருந்து படைத்தது அன்று
தமிழ் பாலாய் மகழ்ச்சி பொங்கச் செய்த்து அன்று
தமிழ் அட்சயப் பாத்திரமாய் அள்ளி அள்ளத் தந்தது அன்று
தமிழ் பிற மொழி பிறப்பதற்கு ஆதாரமாய் இருந்தது அன்று


இன்றோ தமிழ் எழுத்துக்கள் எத்தனை? எனக்கேளுங்கள்!
'மூன்று' எனச்சொல்லி உயிர் மூச்சை நிற்கச் செய்திடுவான்!
தமிழிலில் தாலாட்டு பாடினால் தூங்கலாம்
தழிழில் பாடம்  நடத்தினால் தூங்கலாமா?

தாய்மையின் அடையாளமாய் அறிவிப்பது குழந்தைப்பேறு
மலரின் அடையாளம் தென்றலில் மிதக்கும் மணம்
தமிழனின் அடையாளம் தமிழ் மொழி
தமிழ் மொழியின் அடையாளம் தமிழ் எழுத்தே! 


மனிதனுக்கு அறிவு ஓராறு
தமிழுக்கு உயிரெழுத்து ஈராறு
அஃதோடு மெய்யெழுத்து மூவாறு
உலகமே தமிழின் வரலாறு!

அறுசுவை ஆறாய் பெருக்கெடுக்க
தனித்தமிழ் பேசுவோம்
தமிழை வளர்ப்போம்
தமிழைக் காப்போம்!

444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444



பாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் ! TIME MANAGEMENT !

தொழில் நிர்வாகத் தொடர் ... தொடர்ச்சி 
பாகம் : 11  நினைப்பது நடக்க நேரமே முக்கியம் !
TIME MANAGEMENT !
நமது அன்றாட வாழ்வில் உண்பது, உழைப்பது, உறங்குவது என்ற இம்மூன்று செயல்கள் முக்கியமானதாகும். பொதுவாக இம்மூன்று செயல்களும் சரியான நேரத்தில் நடக்கவேண்டும் என்று  எல்லோரும் ஆசைபடுகின்றனர். அதாவது இம்மூன்றும் நேரம் தவறி நடக்கும் நாளில் மனதளவில் ஒருவித குழப்பமும், உடலளவில் ஒருவித சோர்வும் ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். இப்படி ஒரு நாள் மட்டும் நடை பெற்றால் பரவாயில்லை,  மறுநாள் ஓரளவு அதை சமாளித்துவிடலாம். ஆனால் தினமும் இதே பிரச்னை தொடர்ந்தால் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்குமா? அல்லது முன்னேற்றம் தான் இருக்குமா? 
ஆக நாம் செய்யும் செயல்கள் எல்லாமே முறைப்படி நடக்க வேண்டும் என்றும் , அப்படி நடந்தால் தான் அந்நாள் நாம் நினைத்தது போல் எல்லாம் நடக்கும் !  என்பது உறுதி. அது வாழ்கையில் மட்டுமல்ல! ஏன் ? சாலையில் நடக்கும் போதும் கூட! நாம் ஏதேனும் ஒரு வண்டியில் பிரயாணிக்கும் போது, ஏதாவது ஒரு சிறிய இடையூறு நேர்ந்துவிட்டால் நமக்கு எவ்வளவு சினம் உண்டாகின்றது? 'யாருமே சரியில்லை' என்று புலம்புவோம் இல்லையா? 

அதுபோலத் தான் ஒரு தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யும்போதும் அல்லது பொருட்களின் சேவை கொடுக்கும் போதும் ஒரே ஒரு செயல் மூலம் நடைபெறுவதில்லை. உதாரணமாக மதுரையிலிருந்து சென்னை செல்ல ஒரே ஒரு தாண்டுதல் மூலம் அடைய முடியுமா? அதற்கு எவ்வளவு செயல்களை மேற் கொள்ள வேண்டும்? வீட்டிலிருந்து பேருந்து அல்லது இரயில் நிலையம் செல்லவேண்டும். சரியான வண்டியின் தேர்வு செய்யவேண்டும். பிறகு சரியான வழியில் ஒவ்வோர் ஊரைக் கடந்த பிறகு தான்  நாம்  செல்ல நினைத்த ஊர் வரும். 


அதுபோலத் தான் பொருட்களின் உற்பத்தியும் பல செயல்களின் மூலம் தான் வாடிக்கையாளர்களிடம் போய்ச் சேருகின்றது. அப்படிப்பட்ட செயல்கள் ஒவ்வொன்றும் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்திலும் , அதை சிறிதும்  தவறில்லாமல், முறையாக, சிறந்த தரத்துடன் பலவிதங்களில்  வாடிக்கையாளர்களை கவரும்படி இருக்க வேண்டும் . முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை கொடுப்பவர்கள் அவர்களுக்குப் பிடித்தவாறும்,  பொறுமையை கடைபிடித்தும், இனிமையான முறையில் அவர்கள் மனம் கோணாமலும் தனது பொறுப்பை நன்கு உணர்ந்து தரமான சேவைகளைக் கொடுக்கும்போது தான் வியாபாரம் உயரும். லாபமும் அதிகம் கிடைக்கும்.

ஒரு நிறுவனத்தில் வெற்றி தாங்கள் தயாரிக்கும் தரமான பொருட்களில் இருப்பதோடு அதில் பணிபுரியும் திறமையான பணியாளர்களைப் பொருத்தும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதுமையான முறையில் வியாபார யுக்தி கொண்டு சந்தைபடுத்தும் திறமையில் தான் இருக்கின்றது. அதாவது நிறுவனத்தின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையில் அவர்கள் தத்தம் வேலைகளை பொறுப்பாக செய்திடல் வேண்டும்.
ஒரே மாதிரித் தொழிலாக இருந்தாலும் அதை பலவித வழிமுறைகளில் செய்து வருகிறார்கள். உதாரணமாக ஒரு இடத்திற்குச் செல்வதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மிதிவண்டி, பேருந்து, விமானம், கார் போன்றவற்றில் செல்கின்றனர். அதாவது சிலர் அதிக செலவு செய்து பிரமாண்டமாக வியாபாரம் செய்கின்றனர். பலர் குறைந்த செலவு செய்து மிகச் சாதாரணமாக வியாபாரம் செய்து வருகின்றனர். எப்படி நடத்தினாலும் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் அல்லது கொடுக்கும் சேவைகள் தரமாகவும், குறித்த நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் படியும் அதே நேரத்தில் விலை மலிவாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்காதவாறும் இருக்கவேண்டும்.


இன்றைய வியாபாரத்தில் சமாளிக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலைகள்: 

1. எந்த விற்பனை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிக அளவு போட்டிகள் (பெரிய மற்றும் அந்நிய நிறுவனங்கள் உட்பட)

2. கணிக்க முடியாத மூலப்பொருட்களின் விலையேற்றம் 

3. அவ்வப்போது மாறிவரும் ஏற்றுமதிக்கான தர நிபந்தனைகள் 

4. வாடிக்கையாளர்களின் அதிக தர எதிர்பார்ப்பும், புதுவரவும் 

5. பலவித இன்னலுக்கிடையில் குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்புதல் 

6. விலைகளின் ஏற்றத்திற்கேற்ப நிதி நிலைமை  


உலகத்தில் எந்த நாடும் , எந்த தொழிலையும் அல்லது சேவையினையும் சிறந்த தரத்துடன் முறையான வழியில் நடைமுறை பின்பற்றத் தான் ISO 9001:2008 என்கிற சர்வதேச தர நிர்ணய அமைப்பு இருக்கின்றது. அவற்றில் கூறியிருப்பது யாதென்று அடுத்த பாகத்தில் பார்ப்போம். 


**********************************************************************************************************************************



Wednesday, 19 November 2014

TAMIL LANGUAGE IS HONEY - தேனினும் இனிய செந்தமிழ் - புதுக் கவிதை

       தேனினும் இனிய செந்தமிழ் 
                       
          TAMIL LANGUAGE IS HONEY

                    புதுக் கவிதை

                 மதுரை கங்காதரன் 


தேனினினும் இனிய செந்தமிழ்   
தேடினும் கிடைக்காத கருத்துகளும்   

வயதினும் மூத்த மொழியும் 
வாழ்த்தினும் அழியாத தவமும் 

       

பாடினும் சுரக்கும் அமுதமும் 
கேட்டினும் தெவிட்டாத இனிமையும் 

ஆடினும் அசைகின்ற அழகும்
ஓடினும் நிற்காத உவகையும்  

அள்ளினும் குறையாத ஊற்றும்
கில்லினும் மங்காத புகழும் 

         
சொல்லினும் எட்டாத படைப்புகளும்  
எண்ணினும் முடியாத அளவும் 

பழகினும் வருகின்ற எளிமையும் 
படிப்பினும் திகட்டாத சுவையும்  

அழைப்பினும் அணைக்கின்ற தாயும் 
தழைப்பினும் வருகின்ற செழுமையும் 

காண்கினும் கவருகின்ற மகிமையும்   
கண்டினும் பிரியாத மனமும் 

எங்கினும் இல்லாத புதுமையும் 
தங்கினும் உண்டாகும் பரவசமும் 

பிறப்பினும் அழியாத காவியங்களும்  
இறப்பினும் அறியாத முத்தமிழும் 

நோக்கினும் எட்டாத உயரமும் 
நுகரினும் இன்பமான மணமும் 

பருகினும் மறவாத நவரசமும்
வாழ்வினும் கிடைக்காத பாக்கியமே. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@