Pages

Monday, 20 July 2015

DOING WRONG METHODS, WILL SPOIL QUALITY

DOING WRONG METHODS, WILL SPOIL QUALITY
Awareness Article
Madurai Gangadharan
  
Even though we have provided good quality of rice, groceries, vegetables, oils etc., we will get the taste only depended upon the method of cooking. Small change in the quantity of food stuff will cause huge impact in the taste. Slight change in heating will alter the food’s quality. This is not only applicable for cooking, also for business, industries, service and education too. If this kind of some small changes is happened in the business, industries, service and education, that will cause big effect. How is it that you ask? Take an example, during production, merely supply of good quality of raw materials are not at all enough. The concerned workmen should know the method of process thoroughly. Apart from process, it requires experienced guidance and suitable resources. Interest and involvement helps to maintain the quality standard permanently. 

EXPERT solutions, Madurai is an organization functioning in Madurai. Our manthra is to change from SIMPLE to SIGNIFICANT'. For that we have short listed some of the emerging industries and interact with them. We will visit in person and conduct various studies in consultation with the management. On the basis of the audit and analyzed the data we have suggested development activities with professional guidelines. We also discuss the grievances of the workers which are brought to the attention of the Management to resolve them amicably with the quality as well as acting as a bellwether. We have provided different techniques; guide for improvement the chances, appropriate procedure with enough training to Industry, businesses, educational institutions. Not only giving recommendations also help them to complete it successfully by initiating all activities.

In this competitive world, most of the owner / MD are not having time to analyze what is exactly going on inside as well as outside what they have thought. Without dipping, consistently managing of existing business is a challenge-able one. We EXPERT solutions, Madurai are ready to solve which is giving hindrance for the development. We are always welcome for that. 


தவறான செய்முறைகள் தரத்தை கெடுத்துவிடும் !
விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன்

உதாரணமாக சமைப்பதற்கு என்னதான் நாம் நல்ல தரமான  அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய்கள் போன்றவைகளை வழங்கினாலும் அவைகளைக் கொண்டு  எந்த வகையில் நாம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து தான் உணவின் ருசி இருக்கும்.  ஏனெனில் உள்ளீடுப்பொருட்களின்  அளவுவில் சிறிய மாற்றம்  இருந்தாலும் உணவின் ருசியில் மாற்றம் தெரியும்சிறிதளவு சூடு கூடினாலோ அல்லது குறைந்தாலோ கூட பெரிய அளவில் உணவின் தரத்தை மாற்றிவிடும்இது சமையலுக்கு மட்டும் பொருந்துவது கிடையாது.  இது மாதிரியான சில சிறு மாற்றங்கள் வியாபாரம், தொழிற்சாலை,சேவை மற்றும் கல்வி நிறுவனத்திலும் நிகழ்ந்தால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்உதாரணமாக ஒரு பொருளைத் தரமாகத் தயாரிப்பதற்கு அதற்கான மூலப்பொருட்கள் எல்லாமே தரமாக இருந்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யும் தொழிலாளிகள்  அதன் செய்முறையினை தெளிவாக தெரிந்திருப்பது அவசியம். செய்முறையோடு அனுபவமுள்ள வழிகாட்டிகள்பொருத்தமான வளங்களும் வேண்டும். தரம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் வேலையில் ஆர்வமும் ஈடுபாடும் பெருமளவில்  உதவும்

எங்கள் எக்ஸ்பெர்ட் சொலுஷன் , மதுரை - யில் இயங்கும் ஒரு நிறுவனம். எங்களுடைய தாரக மந்திரம்  'சாதாரணமாக இருப்பதை உதாரணமாகத் திகழ வைப்பதேஅதற்காக நாங்கள்  சிறந்த முறையில் செயல்படத் துடிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளை  தொடர்பு கொள்வோம். அங்கு நேரில் சென்று நிர்வாகத்தினர்களிடம் கலந்துரையாடி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வோம். அதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தொழில் அபிவிருத்தி செய்யும் வழிமுறைகளை பரிந்துரைக்கின்றோம். மேலும் அங்குள்ள தொழிலாளர்களிடம் கலந்து பேசி அவர்களின் குறைநிறைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவைகளை சுமூகமான முறையில் தீர்த்து தரத்துடன் உற்பத்தி பெருக்கத்திற்கு அடித்தளமாக செயல்படுகிறோம்தொழிலுக்குத்  தேவையான அல்லது பொருத்தமான  செய்முறையுடன் கூடிய பயிற்சிகளை தந்து கொண்டு வருகிறோம்தொழிற்சாலைக்கு, வியாபாரங்களுக்கு , கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில் நுணுக்கங்களையும் , முன்னேறும் வாய்ப்புகளின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறோம். வெறும் பரிந்துரைகளோடு நின்றுவிடாமல் அதனை செயல்படுதுவதற்கு உறுதுணையாய் இருந்து வெற்றிகரமாய் முடிக்க உதவுகிறோம்.     

இந்த போட்டியுலகில் பெரும்பாலாலான குறுந்தொழில் நிர்வாகத்தினர்களுக்கும் / முதலாளிகளுக்கும்   தொழிற்சாலையில் உள்ளே, வெளியே தாங்கள் நினைத்தவாறு நடக்கின்றதா என்பதை துல்லியமாக ஆராய்வதற்கு நேரமில்லாமல் இருப்பதே உண்மை. அத்தகைய சூழ்நிலையில் தொய்வில்லாத வியாபாரத்தை நடத்துவது பெரிய சவாலே. தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக  இருக்கும் அனைத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு  எக்ஸ்பெர்ட் சொலுஷன் , மதுரை -  பலவழிகளில் உதவி செய்யக் காத்திருக்கின்றது. தொழில், வியாபாரம். சேவை ,கல்வி முதலியவைகளான முன்னேற்றத்திற்கு எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.  


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Thursday, 18 June 2015

XPERTZ SOLUTIONS HELPS VALUE ADDITION - 'மதிப்பு கூடுதலு' க்கு உதவும் 'எக்ஸ்பெர்ட் சொலுஷன்'

'XPERTZ SOLUTIONS' HELPS VALUE ADDITION BUSINESS OR SERVICE
AN AWARENESS ARTICLE
MADURAI GANGADHARAN


It is an immense pleasure to me that I have got an opportunity to meet all of you through this. In fact everyone likes Quality in all aspects but they are not interested themselves to be as quality. Why the people like Quality, because of its durability and commitment. False commitment is never help in the long run business.

Nowadays, in any field, sustain or continuous improvement is somewhat difficult due to high competition. The gap in relationship between Government and Industry, Owner and Worker, People and their Life, Earning and Expenditure etc., are very much increased due to more expectations each other. One thing we have to accept that all of us are customers to someone. Each one wants satisfaction.     

We know that there is ‘No business or service without Customers’. Conversion of people to customers is a great technique in business or service. Somebody is doing it well but many of us are not doing so well. It needs some accountability in experience, determination, decision, quick action etc., you may ask to me that what are the things behind in every successful business or service?
·       Study on Market potential & Market survey.
·    Identify the customer’s pulse.
·       Customer’s satisfaction
·       Smart in communication.
·       Competitive in offer
·       Serve on time with superior quality.

We know that 1000 rupee is bigger than 500 rupee. Diamond is more valuable than gold. Today is more valuable than tomorrow. Then how can you say that I am more valuable than others? My business is more valuable than others! It is only depend upon the value addition that also people should accept it.

XPERTZ solutions take this opportunity to help value add in your business or service by providing guidance on profitable business, quality product, cost cutting, re-engineering, decentralization, motivational training, capacity utilization of resources including human etc.,

XPERTZ solutions are not just saying the above but give commitment for every action step up step with steadily. You can feel free come and express your thoughts about your business or service. We will take care your dream and help you for realization.  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



 'மதிப்பு கூட்டுதலு' க்கு உதவும் 'எக்ஸ்பெர்ட் சொலுஷன்'
விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 


இந்த  மின் புத்தகம் வாயிலாக உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒவ்வொருவரும் தரத்தை விரும்புகின்றனர். ஆனால் தங்களை தரமாக உயர்த்திக் கொள்ள சிலர் அக்கறை கொள்வதில்லை. எதற்காக மக்கள் தரத்தினை விரும்புகின்றனர்? அதனுடைய குணம், இஸ்திரத்தன்மை மற்றும் அதன் நம்பகத்தன்மையும் ஆகும். பொய்யான நம்பகத் தன்மை, நீண்ட காலம் வியாபாரம் செய்வதற்கு உதவாது.  

பெரும் போட்டி கொண்ட இன்றைய நாளில் எந்த ஒரு துறையிலும் தங்கள் வியாபாரத்தை தக்க வைத்திருப்பதோ அல்லது தொடர் முன்னேற்றம் அடைவதோ என்பது மிகவும் கடினமான செயலாகும். மேலும் அரசுக்கும் தொழிலுக்கும் , முதலாளிக்கும் தொழிலாளிக்கும், மக்களும் வாழ்க்கைக்கும், வரவுக்கும் செலவுக்கும் உள்ள தொடர்பின் இடைவெளி ஒருவருக்கொருவரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் கூடுதலாக இருக்கின்றது. ஆனால் நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஒருவகையில் வாடிக்கையாளர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் திருப்தியை தான் விரும்புகிறார்கள்.     

வாடிக்கையாளர்கள் இல்லாமல் வியாபாரமோ அல்லது சேவையோ இல்லை என்பது நமக்குத் தெரிந்ததே. இந்த வியாபாரம் அல்லது சேவை யில் மக்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவது என்பது நுணுக்கமான கலையாகும். சிலர் அதை செம்மையாக செய்கிறார்கள். ஆனால் பலர் அதை நன்றாக செய்வதில்லை. இதற்கு தகுந்த அனுபவம், எதிர்நோக்குதல், சரியான முடிவு எடுத்தல் , துரித செயல் போன்றவைகள் தேவைபடுகின்றது. ஒரு வியாபாரமோ அல்லது சேவையோ வெற்றிகரமாக செய்வதற்கு என்னென்ன தேவைபடுகின்றது என்று நீங்கள் கேட்கலாம்.

* ஒட்டு மொத்த சந்தையின் மதிப்பு மற்றும் சந்தையின் ஆய்வு 
* வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறியும் திறமை 
* வாடிக்கையாளர்களின் திருப்தி 
* நேர்த்தியான பரிமாற்றம் 
* போட்டி விலை 
* உயர்ந்த தரம் மற்றும் குறித்த நேரத்தில் சேவை  

ஐநூறு ரூபாயை விட ஆயிரம் ரூபாய் மதிப்பு அதிகம். தங்கத்தை விட வைரம் விலை மிக்கது. நாளைய பொழுதை விட இன்றைய நாள் அதிக மதிப்பு மிக்கது. பிறகு நீங்கள் எவ்வாறு நான் 'மதிப்பு மிக்கவன்' என்றும் 'என்னுடைய வியாபாரம்' மற்றவர்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கது என்றும் சொல்ல முடியும்?  இது மக்கள் ஒத்துக்கொண்ட 'மதிப்பு கூட்டுதல்' பொறுத்தே ஆகும். 

உங்களுடைய வியாபாரம் அல்லது  சேவையில் 'மதிப்பு கூட்டுதலு' க்கு  உதவியாக இருக்கும்  லாபகரமான வியாபாரம், தரமிக்க பொருள், செலவின குறைப்பு, மறு கட்டமைப்பு, வேலை பரவலாக்கம், ஊக்கம் கொடுக்கும் பயிற்சி, வளங்களை குறிப்பாக மனித வளத்தை திறமையாக கையாளுவது போன்றவற்றிற்கு உங்களுக்கு வழிகாட்டுவதை நம் 'எக்ஸ்பெர்ட் சொலுஷன் ' ஒரு வாய்ப்பாகவே எடுத்துக்கொள்கிறது.   

'எக்ஸ்பெர்ட் சொலுஷன் ' வெறும் வாய் சொல்லோடு இருந்துவிடாமல் அர்பணிப்போடு  உங்களுடனே இருந்துகொண்டு ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான செயலையும் சீராக செய்து வருகின்றது. நீங்கள் உங்களுடைய வியாபாரம் அல்லது சேவை பற்றிய எண்ணங்களுடன் பகிர்ந்து கொண்டால் எங்களின் கைதேர்ந்த நிபுணர்களின் மூலம் மதிப்புமிக்க தீர்வு கிடைக்கும். உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம் என்று இதன் மூலம் நாம் உறுதியளிக்கிறோம்.

*********************************************************************************************************************

Sunday, 17 May 2015

அவனை ஏமாற்றிய 'வாட்ஸ் அப்' HOW HE IS CHEATED BY 'WHAT'S UP'

அவனை ஏமாற்றிய 'வாட்ஸ் அப்'
HOW HE IS CHEATED BY 'WHATS APP'
சிறு கதை
மதுரை கங்காதரன்

'எப்படியும் இந்தத் தேர்வில் நான் முதல் மதிப்பெண் எடுக்காமல் விட்டாலும் பரவாயில்லை! இப்போது முதல் ரேங்க்கில் இருக்கும் அமுதன் கட்டாயம் மீண்டும் முதல் மதிப்பெண் வாங்கவிடக் கூடாது' என்று இரண்டாம் ரேங்க் இல் இருக்கும்பாண்டியன் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டான் .  

எப்படி இதை வெற்றிகரமாய் செய்து முடிப்பது? என்று நினைக்கும் வேளையில் திடீரென்று அவனுக்குப் பொறி தட்டிற்று. அதாவது அமுதன் பரிட்சை இருந்தாலும் தினமும் அரைமணி நேரமாவது ஐ.நெட், .மெயில், ஃபேஸ் புக்,வாட்ஸ் அப் (இப்போது இது இலவசம்) போன்றவற்றில் வலம் வருவான். அதில் அதிக நேரம் செலவழிக்கும் 'வாட்ஸ் அப்' நுழையும் நேரம் பார்த்து தானும் நுழைந்து அதில்அவனைப் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து புகழ்ந்து  தள்ளிக் கொண்டிருந்தால் அதில் மயங்கி 'வாட்ஸ் அப்' யிலேயே நேரத்தைப் போக்கிடுவான். பிறகு அன்றைய படிப்பு அம்போ தான். மறுநாள் பரிட்சை 'கோவிந்தா கோவிந்தா' தான். இப்படி நினைக்கையில் பாண்டியன் மனம் ஆனந்தப்பட்டது.

நாளை முதல் முழு ஆண்டுத் தேர்வு ஆரம்பமாகிறது. இன்றைக்கு திட்டமிட்டபடி நடக்க வேண்டுமென்ற நப்பாசையில் இருந்தான். அவன் நினைப்பு வீண் போகவில்லை. அன்று அமுதன் வாட்ஸ் அப் இல் நுழைய பாண்டியனும் நுழைந்து இரவு வரை பொழுதைக் கழித்தான். பாண்டியனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒவ்வொரு தேர்விலும் தன் எதிரியான அமுதனைப் படிக்கவிடாமல் வாட்ஸ் அப் இல் பிடித்துக் கொண்டோம் என்று!

இப்படியாக தேர்வுகள் முடிந்தது. முடிவும் வந்தது. பாண்டியனின் மதிப்பெண் வெகுவாகக் குறைந்ததென்று அவன் ஆசிரியர் கோபம் கொண்டார். ஆனால் உள்ளுக்குள் சிரித்தான். எனக்குள்ள கதி தானஅமுதனுக்கும் வரும் என்று நம்பினான்.
"அடுத்தது அமுதனின் மதிப்பெண்" என்று சில வினாடிகள் மௌனம் காக்க அந்த இடம் அமைதியானது. ஆசிரியர் என்றைக்குமில்லாமல் மிக மகிழ்ச்சியாக " அமுதன் அனைத்துப் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றதோடு மூன்று பாடத்தில் நூறு சதவீதம் எடுத்து வழக்கம் போல் அவன் தான் முதல் ரேங்க்" என்று அறிவித்ததோடு அவனை மிஞ்ச ஒருவரும் கிடையாது என்று பாராட்டினார். இதைத் கேட்ட பாண்டியன் அதிர்ச்சியடைந்தான்.

தன் சந்தேகத்தை அவனிடமே கேட்டான் பாண்டியன். "அமுதா! தேர்வுகளின் போது தினமும் நீ என்னுடன் வாட்ஸ் அப் இல் பொழுதைக் கழித்தாய். இருந்தாலும் நீ எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாய் என்று சிறுபிள்ளைத்தனமாய் கேட்டான்.

".... அதுவா! தினமும் உன்னுடன் 'வாட்ஸ் அப்' இல் என் பெயரில் தொடர்பு கொண்டது என் தூரத்து உறவுக்காரப் பையன். அவனுக்குப் பொழுது போகாததால் நான் உன்னுடன் சிறிது நேரம்  வாட்ஸ் அப் இல் இருந்த பின் தொடர்ந்து அவன் தான் தினமும் உன்னோடு பொதைக் கழித்தான். அதனால் அவனுடைய தொல்லையில்லாமல் நான் படித்தேன். வழக்க்தை விட அதிக மதிப்பெண்கள் பெற்றேன். அதற்கு மறைமுகமாக நீ உதவி செய்ததற்கு நன்றி" என்று பதில் கூற பாண்டியனுக்குத் தலை சுற்றியது. அவனுக்கு 'கெடுவான்! கேடு நினைப்பான்" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது!
********************************************************************************************