Pages

Friday, 14 August 2015

MULTI FACES OF BHARATHI DASAN - பாரதிதாசனின் பன்முகம்

              MULTI FACES OF BHARATHI DASAN  
                     பாரதிதாசனின் பன்முகம்
                                       புதுக்கவிதை
                       மதுரை கங்காதரன்

                       
                       

பாரதிதாசரே!
நீவீர்  புதுவை சிப்பிக்குள் பிறந்த முத்தான தமிழர்
புதுக்கவிதைத் தேரை வடம் பிடித்து இழுத்தவர்
பெண்விடுதலைக்கு பாரதிக்கு நிகராய் நின்றவர்
'பாவேந்தர்' பட்டத்திற்குச் சொந்தக்காரர்.

வாசிப்புக்கு இதமான கவிதைகள்
சுவாசிக்க வைக்கும் துடிப்புகள்
நேசிக்கச் செய்யும் நடைகள்
சிந்திக்க வைக்கும் பல படைப்புகள்.

ஈராண்டில் பட்டப் படிப்பை முடித்த அறிவுச் சுடர்
விடுதலை வேட்கையை கவிகள் மூலம் தணித்தவர்
அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியவர்
அமுதான தமிழை வளமான நடையில் தந்தவர்.

பாரதி வழியில் புதுக்கவிதைக்கு முகவரி கொடுத்தவர்
தமிழ் கவிதைகளை உயிர் மூச்சாய் சுவாசித்தவர்
கவிதைகளை திரைப்படத்தில் ஒலிக்கச் செய்தவர்
பட்டிதொட்டி மக்களையும் கவிதையை நேசிக்க வைத்தவர்.

பாடல்களை அமுதாக உயிருக்கு நேராக படைத்தாய்
பாலிற்கும் மேலான சுவை தேனினினும் மேலான இனிமை
பூக்களை மிஞ்சும் மணம் இடியாய் முழங்கிடும் சாட்டையடி வரிகள்
பாரதிக்கு வாரிசாய் மாறினாய் தமிழுக்கு காவலாக இருந்தாய்.

பாரதி கனவுகளை நனவாக்க அரும்பாடுபட்டாய்
சாதி சண்டையில்லா சமுதாயம் ஓங்கிட
அரசியலிலும் ஆதிக்கம் செய்து சாதனைகள் புரிந்தாய்
கவிதைகள் மூலம் சீர்திருத்த சிந்தனைக்கு வித்திட்டாய்.

வளரும் கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பவர்
தேய்ந்து வரும் தமிழ் படைப்புகளால் வளர்த்தவர்
உலகெங்கும் அவர் தமிழ் பற்றை பரப்புவோம்
தமிழ்மொழியின் பெருமையை நிலைநிறுத்துவோம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



Monday, 20 July 2015

வெள்ளை முடி காதல் - சிறு கதை - WHITE HAIR LOVE

வெள்ளை முடி காதல்
சிறு கதை
மதுரை கங்காதரன்

"உண்மையிலே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? எம்மேலே உங்களுக்கு இருக்கிறது ஆசையா? அன்பா?" என்று கேள்வி கேட்டாள் கீதா.

"என்ன அப்படி சொல்லிட்டே கீது. இதையே நான் திருப்பி உன்கிட்டே கேட்டா அதுக்கு நீ என்ன பதில் சொல்லுவாயோ அது தான் என்னோட பதில்!" என்றான் ராஜேஷ்.

"இல்லே, நாளைக்கு நமக்கு கல்யாணமாகி என்கிட்டே ஒரு சின்ன குறையிருந்து அதையே ஒரு சாக்காக வைச்சுட்டு என்னை ஒதுக்கிடமாட்டீங்களே"

"இதுக்கும் உன்னோட பதில் எதுவோ அது தான் என்னோட பதில்"
நான் எதனாலே சொல்றேன்னா, காதலிக்கிறப்போ பெரிய பெரிய பிரச்சனை கூட சின்னதாய்த் தெரியும். ஆனா கல்யாணமான பின்னே சின்ன சின்ன பிரச்சனைங்க கூட பெரிசாத் தெரியும். அப்படி ஒரு சின்ன பிரச்சனை கூட உங்களுக்கு பூதாகரமாய்த் தெரியும். அதனாலே என்கிட்டே பிரியம் காட்ட  மறக்கமாட்டீங்களே!"

"இதே கேள்வியை நான் உன்கிட்டே திருப்பிக் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவாயோ அது தான் என் பதில்!"

"அதெல்லாம் போகட்டும்! இப்போ நான் என் கிட்டே உள்ள ஒரு குறையைச் சொல்லப் போகிறேன். அதை கேட்ட உடனே உங்கிட்டேயிருந்து சூடா ஒரு பதில் வரும்னு நான் எதிர் பார்க்கிறேன்"

"புதிர் போடாதே! எங்கே சொல்லு பார்ப்போம்"

"அது வந்து ..... வந்து ..... நீங்க ஆசையா தொட்டு வர்ணீப்பீங்களே! என்னோட கூந்தல்லே முன்னாலே இருக்கிற தலைமுடி ... "

"மேலே சொல்லு"

"சொன்னா கோபிக்கமாட்டீங்களே..."

"கோபிக்கமாட்டேன். சும்மா சொல்லு"

"முன்னாலே இருக்கிற தலைமுடி.. உண்மையான கருப்பு இல்லே! கொஞ்சம் 'டை' போட்டு கருப்பாக்கியிருக்கிறேன். இதனாலே நீங்க என்னை வெறுப்பீங்களா?" அவன் பதிலுக்காக ஏங்கினாள்.

அவனோ கண்களை அகல விரித்து புருவங்களை உயர்த்தி, "இதே கேள்வியை நான் உன் கிட்டே திருப்பிக் கேட்டா...."

அதை கேட்டு இன்ப அதிர்ச்சியோடு "நீங்க .... என்ன சொல்றீங்க! உங்களுக்கும் முன்னாலே இருக்கிற தலைமுடி வெள்ளைங்களா?"

அவன் பலமாய்த் தலையாட்ட, இருவரும் சிரிப்பில் மூழ்கினர்.

"இதிலே கூட நமக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்க! உண்மையிலே நாம் தான் தெய்வீகக் காதலர்கள்" என்று சொல்லி ஆனந்தமடைந்தனர்.


YOU CAN EARN MILLION ... - பணக்காரராக சில வழிகள்

புதிய தென்றலில் வெளியான எனது கட்டுரை :
பணக்காரராக சில வழிகள் 
YOU CAN EARN MILLION... 
மதுரை கங்காதரன்  




எழுத்தெல்லாம் தூயதமிழ் எழுத்தாகுமா? புதுக்கவிதை


 எழுத்தெல்லாம்  தூயதமிழ்  எழுத்தாகுமா?
                                        புதுக்கவிதை
                                  மதுரை கங்காதரன்

தமிழ்மொழியின் தலையெழுத்து சரியில்லையோ
எழுதும் தமிழில் வடமொழி எழுத்துக்கள் கலப்படம்
பேசும் தமிழில் அந்நியமொழியின் ஆதிக்கம்
தமிழ்மொழியோ தனித்தன்மை இழந்துவருகிறதே.

பணத்திற்கு ஆசைபட்டு தன்மானத்தை இழக்கலாமா?
பறப்பதற்கு ஆசைபட்டு இருப்பதை இழக்கலாமா?
பதவிக்கு ஆசைபட்டு செல்வங்களை இழக்கலாமா?
அந்நிய மொழிக்கு ஆசைபட்டு தூயதமிழை மறக்கலாமா?

முப்பாட்டனுக்கு முன் வந்த மூத்த மொழி தமிழை
முச்சந்தியில் நிறுத்த சம்மதிக்கலாமா?
தமிழனுக்கழகு தூயதமிழில் பேசுவதல்லவா?
தமிழுக்கழகு தூயதமிழ் எழுத்துகளல்லவா?

தமிழ்மொழி எழுத்துகளில் எந்த சிறப்புகளில்லை ?
தூயதமிழ் எழுத்துகள் இயற்கையின் ஒலிகளே
தமிழ் எழுத்துகளை உச்சரிக்க இலக்கணமுண்டு
பலமொழிகளின் வேர்சொற்கள் தமிழிருந்து பிறந்ததே!

பூக்களில் பூசைக்கேற்ற பூக்கள் இறைவனடி சேரும்
சொற்களில் அமுதான சொற்கள் இனிமை தரும்
தன்னலமற்ற செயல்கள் நன்மைகள் தரும்
தூயதமிழ் எழுத்தகள் தமிழ்மொழியைக் காக்கும்.

தூயதமிழ் எழுத்துகளே தனித்தமிழை வளர்க்கும்!
                 தமிழ்மொழியைக் காக்கும்!!

####################################################################################