Pages

Wednesday, 14 September 2016

அக்கறை, ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு…



அக்கறை, ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு
12.9.16 அன்று நிகழ்திய உரையின் சாராம்சம்
மதுரை கங்காதரன்

பொதுவாக இளைஞர்கள் என்றாலே எந்நேரமும் கையில் கைபேசி வைத்துக் கொண்டு பேசிக்கொண்டோ அல்லது சமூக வலைதளத்தில் மூழ்கியபடியே இருப்பார்கள். டி.வி, திரைப்படம் பார்ப்பார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு வீட்டைப் பற்றிய அக்கறையோ, வாழ்க்கைப் பற்றிய எண்ணமோ இருக்காது  என்கிற மனோபாவமே எல்லோர் மனதிலும் உண்டு. அக்கறையும், ஆர்வமும் கொண்ட இளைஞன் பொறுப்போடு வேலை செய்கிறான். குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். அக்கறை இல்லாத இளைஞன் ஊர் சுற்றுகிறான். ஆர்வம் இல்லாத இளைஞனோ குடுப்பத்திற்கு பாரமாக இருக்கிறான். மனிதப்பிறவி என்பது அரிய பிறவி. அதிலும் இளைஞர் பருவம், விதைக்கின்ற பருவம். இந்தப் பருவத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான் பின்னாளில் நன்றாக அறுவடை செய்ய முடியும்.

பல இளைஞர்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சையாகத் தெரியும். அதாவது இன்ஜினியரிங் இளைஞர்களுக்கு டாக்டர் வேலை நன்றாக இருப்பதாகத் தெரியும். அதேபோல் டாக்டர்  இளைஞர்களுக்கு இன்ஜினியரிங் வேலை நன்றாக இருப்பதாகத் தெரியும். ஆனால் அக்கறையும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களுக்கு எக்கரையும் பச்சையாகும்அதாவது எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதனை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்கள். வாழ்க்கை என்னும் கடலில் இ்க்கரையைக் கடந்து அக்கரையை அடைய வேண்டுமென்றால் அக்கறையும், ஆர்வமும் வேண்டும்.

ஒரே கல்லூரி, ஒரே வகை மாணவர்கள், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாய் பழகிய பழக்கம், திடீரென்று முடியும் போது மனமானது ஒருவித குழப்பமும், அமைதியின்மையும், வெறுமையும் எதிர்கொள்ளும்போது அதனை ஜீரணிப்பதற்கு சிரமமாகத் தான் இருக்கும். அடுத்து எங்கே போகப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்? என்கிற பயம் எட்டிப் பார்க்கும். அடிக்கடி கல்லூரியில் நடந்த இனிமையான சம்பவங்கள் திரும்பத் திரும்ப அசை போடும். மெல்ல மெல்ல தம்முடன் படித்த நண்பர்கள் விலகிப் போவதை உணரும்போது உள்ளம் சற்று தடுமாற்றம் அடையும். 'உறவும் பிரிவும்' நிறைந்தது வாழ்க்கை என்று அப்போது தான் மனம் ஒத்துக் கொள்ளும்.

பாதுகாப்பாய், நிம்மதியாய் கழித்த பத்துமாதக் குழந்தை, கருவறையிலிருந்து வெளிவரும் நிலைமையும், படித்து பட்டம் பெற்று 'வேலை' என்கிற பெயரில் வெளி உலகத்திற்கு அறிமுகமாகும் இளைஞனின் நிலைமையும் ஒன்றே. 'வேலை' யினை அடையும் பயணம் பட்டென்று முடியலாம் அல்லது பாடாய்ப் படுத்தலாம். நாலாபக்கமும், 360° கோணத்தில் வரும் போட்டியை சமாளித்து வெற்றி பெறுவது என்பது தன்னம்பிக்கையும், அறிவையும், ஆற்றலையும், பொறுமையும் சோதிக்கும் ஒரு விளையாட்டுக்களம் என்று நினைக்க வேண்டும்.

ஒரு இளைஞனுக்கு 'வேலை' கிடைத்து விட்டால் அதோடு கடமை முடிந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. உண்மையில் அப்பொழுதிலிருந்து தான் கடமையே ஆரம்பமாகிறது. வீட்டையும், சமூகத்தையும் தாண்டி நாட்டையும் காக்கும் பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இளைஞர்கள் கல்வியும், அறிவையும் பொறுத்து பல்வேறு தரப்பட்ட விதைகளாக மாறுகிறார்கள். அந்த விதை எங்கே விழுகின்றதோ அதன் இடமும், சூழ்நிலை பொறுத்தே எத்தகைய வளர்ச்சி பெறும் என்பதை அனுமானிக்க முடியும். அவர்கள் தனியார் வேலை, அரசாங்க வேலை அல்லது சொந்தத் தொழில் சார்ந்த சூழ்நிலையில் வளரலாம். அது சொந்த நாடாக இருக்கலாம் அல்லது அந்நிய நாடாக இருக்கலாம். எந்த இடமாக இருந்தாலும் கடமையைச் செய்து, அதில் வெற்றி பெற்று பேரும், புகழும் அடைவதற்கு இளைஞர்களே! உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில விதைகள் கட்டாந்தரையில் விழுத்து வீணாகிப் போவது போல, சில இளைஞர்கள் மாயவலையில் சிக்கி வீணாகிப் போவதும் உண்டு.    

இப்போதுள்ள புள்ளி விவரம் 'உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள்' என்று கூறுகின்றது. ஆகவே இளைஞர்களின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இளைஞர்களே வேலைகளில் உங்களின் அக்கறையும், ஆர்வத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.  

இளைஞனே! உனக்குள் இருக்கும் அறிவையும் திறமையும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளாதே! கல்வியறிவு குறைவாக இருக்கும் இளைஞனுக்கு கடினமாக உழைக்கும் திறமை இருக்கும். அதேபோல் கல்வியறிவு அதிகமாக இருக்கும் இளைஞனுக்கு உழைக்கும் திறமை குறைவாக இருக்கும். ஆனால் இரண்டுமே இருக்கும் இளைஞர்களே சாதனை சரித்திரம் படைக்கிறார்கள் என்பதே உண்மை. மொத்ததில் எந்த ஒரு இளைஞனும் சோடையாய்ப் போவதில்லை. அவர்களுக்கு 'சிறந்த வழிகாட்டி' மட்டும் கிடைத்துவிட்டால் நிலத்தில் ஓடுவார்கள், விண்ணில் பறப்பார்கள், நெருப்பில் பிரகாசிப்பார்கள், காற்றில் பரவுவார்கள், நீரில் நீந்துவார்கள் என்பது உறுதி.

பறவைகளின் அக்கறை குஞ்சுகளைக் காக்கும் கூட்டில் இருக்கிறது
தேனீக்களின் அக்கறை தேன் சேகரிக்கும் கூட்டில் இருக்கின்றது
மரங்களின் அக்கறை அது கொடுக்கும் காய் கனிகளில் இருக்கின்றது
பசுக்களின் அக்கறை அது கொடுக்கும் பாலில் இருக்கின்றது

இளைஞனே உனது அக்கறை!
வீட்டையும், சமூகத்தையும் காப்பதில் இருக்க வேண்டும்.    

இளைஞனே! வாழ்கை என்பது சமமான நேரான பாதையல்ல! வளைவுகள், மேடு பள்ளங்கள், கல்லும், முள்ளும் நிறைந்த பயணம். விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

நிறைவாக ஓட்டையான பாத்திரத்தில் எதுவுமே தங்குவதில்லை. அடித்தளம் ஓட்டை கொண்ட கப்பல், தனது பயணத்தை முடிப்பது அரிது. அத்தகைய ஓட்டைகளை அடைப்பதற்கு அக்கறையும், ஆர்வத்தால் மட்டுமே முடியும்.    
***************************





Wednesday, 31 August 2016

தமிழ் காக்கும் தகுந்த வழி - புதுக்கவிதை



           தமிழ் காக்கும் தகுந்த வழி
                 புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன்

         தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழர்கள் தள்ளிவிடுவதால்
தள்ளாடும் தமிழ்மொழியினை
தாங்கிப் பிடிக்க பல கரங்களைத்
தருவாய் தமிழ்த்தாயே!

தமிழென்ன கண்காட்சிப் பொம்மையா?
தமிழர்களிடமே கூவி கூவி விற்பதற்கு!
தன்மானம் இழந்திடும் தமிழர்களை
தமிழ்த்தாயே காத்திடுவாயாக!

           தமிழ் காக்கும் தகுந்த வழி

பேச்சில் எழுத்தில் தனித்தமிழ் வாசனை இல்லை
நடையில் உடையில் தமிழனின் அடையாளம் இல்லை
ஊடங்கங்கள் அனைத்திலும் ஆங்கிலமொழிக் கலப்பு
தமிழர்கள் தருவதோ சிவப்புக் கம்பள வரவேற்பு 
 
விழியில்லாருக்கு வழி காட்டுவது அறிவுடைமை
விழி உள்ளோர் வழி தவறுவது மடமை தானே
சொர்க்கமாய் தமிழ்வீட்டு முகவரி இருக்க
சொந்தமில்லா ஆங்கிலவீட்டில் அடிவைக்கலாமா?  

அந்நிய மொழிக் காட்டுத்தீயில் கருகுது தமிழ்
அலைபேசி கணினி சுனாமியில் மூழ்குது தமிழ்
இணையதளத்தில் அதிகப் படைப்பில்லாதத் தமிழ்
.மெயிலில் தகவல் பரிமாற்றமில்லாதத் தமிழ்

அன்று ஆமையான தமிழ், ஆங்கில முயலை வென்றது
இன்று ஆங்கில முயல் தமிழ் ஆமையை வெல்கிறது
கணினி விழிப்புணர்வு தமிழனுக்கு தந்திட வேண்டும்
கணித்தமிழ் வளர்க்க அரசு அக்கறை காட்ட வேண்டும்

கணினித் தமிழை எளிதாக்கிட வேண்டும்
கணித்தமிழை தமிழறிஞர்கள் கற்றிட வேண்டும்
பள்ளியில் கணித்தமிழை புகுத்திட வேண்டும்
படைப்புகள் பல இணையதளத்தில் தந்திட வேண்டும்

கணினி இல்லாதது அந்தக் காலம்
கணினி உருவானது இந்தக் காலம்
கணினி மயமாகும் வருங்காலம்
கணித்தமிழ் கற்பதே நல்ல காலம்

உலகம் சுற்றும் தமிழாக 
உருவாகுமே கணினித் தமிழாலே
கணித்தமிழை வளர்த்தாலே
காக்கப்படுமே தமிழ்மொழி!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி

28.8.16 ஞாயிற்றுக் கிழமை அன்று மாமதுரைக் கவிஞர் பேரவை, மணியம்மை மழலையர் பள்ளி, மதுரையில் நடத்திய எழுச்சிக் கவியரங்கத்தில் எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சியின் சில மின் படங்கள் இதோ..






என்னுடைய இந்தப் பாராட்டை, உலக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


**************

Sunday, 28 August 2016

கவிஞர்களின் புத்தகப் படைப்புகள்

மாமதுரை கவிஞர் பேரவையில் உள்ள சில கவிஞர்களின் புத்தகப் படைப்புகள் இதோ...

நீங்களும் படித்து பயன் பெறுவீர்...















Monday, 22 August 2016

NEW DOUBLE SIDE STICKER LABLE IDEA

NEW DOUBLE SIDE STICKER LABLE IDEA
புதிய இரு பக்க ஸ்டிக்கர் லேபிள்
மதுரை கங்காதரன்
இப்போது இருக்கும் ஸ்டிக்கர் லேபிளானது,
ஒரே ஒரு பக்கத்தில் தான் லேபிள் ஸ்டிக்கர்
இருக்கின்றதல்லவா! அதை இரண்டு 
பக்கங்களிலும் இருப்பதற்கான புது யோசனை.



இப்போது இருக்கும் ஸ்டிக்கர் லேபிளானது
ஒரே ஒரு பக்கத்தில் தான் லேபிள் ஸ்டிக்கர்
இருக்கின்றதல்லவா! அந்த ஒரு ஸ்டிக்கர்
லேபிளில் நான்கு வகையான பொருட்கள்
இருக்கின்றன.

1. விடுவிக்கப்படும் வீணாகப்படும் அடி பேப்பர்
2. அதன் மேல் தடவப்பட்ட சிலிகோன் அல்லது மெழுகு பொருள்
3.  அதன் மேல் ஒட்டியுள்ள லேபிள் பேப்பர்
4. அதற்குக் கீழ் தடவப்பட்ட பசை  
புதிய இரு பக்க ஸ்டிக்கர் லேபிளின் நர்லிங் பிளாஸ்டிக் பேப்பர்
(சிலிகோன் அல்லது மெழுகு தடவப்பட்ட பேப்பருக்கு பதிலாக)

இந்த இருபக்க நர்லிங் பாலிதீன் சீட்டுக்கு மேல் பசை தடவிய ஸ்டிக்கர் லேபிளை அதன் முன் பின் இருபக்கத்தில் ஒட்ட வேண்டும்.


பிறகு இருபக்கமும் வழக்கம் போல் ஸ்கோரிங் செய்ய வேண்டும். இப்போது இதனால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். 



மேலும் விவரங்களுக்கு எங்களை இ.மெயில் gangadharan.kk2012@gmail.com அல்லது கைபேசி 9865642333 மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 
******************



Friday, 19 August 2016

AN EASY WAY TO DETECT MISSING FLIGHT IN THE SEA…

AN EASY WAY TO DETECT 
MISSING FLIGHT IN THE SEA…
கடலில் காணாமல் போகும் விமானங்களை எளிதாகக் கண்டுபிடிக்க
விழிப்புணர்வுக் கட்டுரை

மதுரை கங்காதரன்

தகவல் தொழிநுட்ப வளர்ச்சி அபரிதமாக முன்னேற்றமடைந்து இருக்கும் கணினி யுகத்தில், சமீபமாக விமானங்கள் கடலைக் கடக்கும் போது காணாமல் போவது மட்டுமில்லாமல் அவைகள் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போவது என்பது பெரிய ஏமாற்றத்தைத் தருவது ஒன்றாகும். அது நம்முடைய அறிவுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகின்றது.
ஏனென்றால் 2014 ல் 227 பயணிகளுடன் 8 மார்ச்  2014 ல் 227 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய ஏர் லைன்ஸ் 370 விமானம் கடலில் விழுந்துக் காணாமல் போனது. அதேபோல் இந்த வருடம் 22 ஜூலை 2016ல் 29 பேருடன் ஆன்டனோவ் ஏ-என் 32 என்கிற இந்திய இராணு விமானம், வங்காள விரிகுடா கடல் பகுதியில் பறக்கும் போது அதில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து காணாமல் போனார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது இது வரையில் அறிந்திடாத புதிராக இருக்கின்றது.
இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்திலும் தொடராது என்பது என்ன நிச்சயம்? அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அதற்கான தீர்வு இருக்கின்றதாநிலத்தில் விமானம் விழுந்தால் எப்படியேனும் கண்டுபிடித்துவிடலாம். அதாவது நிலத்தில் விழும் நொறுங்கிய பாகம் நம் கண்ணிற்கு தெரிந்துவிடும். அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தால் விமானத்தின் 'கறுப்புப் பெட்டி' (Black Box) கட்டாயம் கிடைக்கும். அதன் மூலமாக விமான விபத்துக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். ஒரு விமானம் கடலைக் கடக்கும்போது விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதன் இடத்தைக் கண்டுபிடிப்பது?

பொதுவாக இந்த மாதிரிப் பிரச்சனை ஏற்பட்டால் தொழில்நுட்ப வல்லுனர்னர்கள் (Technical Experts) கொடுக்கின்ற தீர்வானது மிக எளிமையாக அதே சமயத்தில் மிகவும் துல்லியமாக இருப்பதோடு, அதிக செலவாகாமல் உடனே எல்லா விமானத்தில் செயல்படுத்த முடியுமாறு இருக்க வேண்டும். அந்த வகையில் இணையதளத்தில் (Internet) தேடும்போது, இதற்கு மூன்று தீர்வுகளைக் கொடுத்திருப்பது தெரியவந்தது. அதனைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், முதலாவது தீர்வு, விமானம் கடலில் மூழ்கியவுடன் 'கறுப்புப் பெட்டி' தானாக இஜக்ட் (Eject) ஆகி மேலே வரும்படி செய்ய வேண்டும். இரண்டாவது தீர்வு, விமானம் மூழ்கியவுடன் விமானத்திலிருந்து அல்ட்ரா சோனிக் ஒலி சமிஞ்ஞை (Ultra Sonic Signal) எற்படுமாறு செய்திட வேண்டும். மூன்றாவது தீர்வுமேலே பறக்கின்ற ஒவ்வொரு விமானங்கள் மற்ற விமானங்களுடன் தொடர்பில் (Inter flight links) இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விமானம் பிரச்சனையில் இருப்பது தெரியவந்தால் அதை சம்பந்தப்பட்ட கண்ட்ரோல் ரூமுக்கு (Control room) அந்த தொடர்பில் இருக்கும் விமானம் தெரியப்படுத்த வேண்டும். இவைகளை நடைமுறைப் படுத்துகின்ற சாத்தியக் கூறுகள் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது போகப்போகத் தெரியும்.

என்னுடைய எளிய யோசனை:
ஒவ்வொரு விமானத்தில் உயரம் காட்டும் கருவி இருக்கின்றது. விமானம் விபத்துக்குள்ளானால் அது கட்டாயம் மிகக் குறைந்தளவு உயரத்தில் (Minimum Height)  அல்லது  பூஜ்யம் (Zero) அளவுக்கு பறந்திருக்க வேண்டும். அந்த குறைந்த அளவு உயரத்தில் பறக்கும் போது, அந்த சமயம் ஒரு 'சென்ஸார்' (Sensor) உணர்ந்து விமானத்தின் கீழ்பகுதியிலிருந்து மிதக்கும் ஒளியூட்டும் (Fluorescent) தன்மையுடைய பந்துகள் (Balls), குச்சிகள் (Sticks) தானாக வெளிவரச் செய்ய வேண்டும். அவைகள் மரத்தாலானதோ (Wooden), ரப்பர் (Rubber), பிளாஸ்டிக் (Plastics), மெல்லிய உலோகத்தாலும் (Light Metals) இருக்கலாம். அதன் மேல் கட்டாயம் விமானத்தின் பெயரும், எண்ணும், வேறு பல தகவல்கள் அதாவது தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் அச்சடிக்கப்பட்டோ அல்லது ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டோ இருக்க வேண்டும். 

கடலில் ஒரு விமானம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது குறைந்தபட்ச உயரத்தில் பறக்கும் போது ஒரு சென்ஸார் அதை உணர்ந்து , தானாக ஹைட்ராலிக் முறையில் (Hydraulic) இயங்கும் கதவு உடனே திறக்கச் செய்ய வேண்டும். அதன் வழியாக மிதக்கும் பொருட்களை வெளியில் விழும்படி செய்திட வேண்டும். விமானம் கடலில் மூழ்கினாலும் அந்த மிதக்கும் பொருட்கள் விழுந்த இடத்தை எளிதாகக் காட்டிவிடும். அவ்வளவு எளிதாக, வேகமாக மிதக்கும் பொருட்கள் கரையினை அடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.    

ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் விமானம் கடலுக்குள் மூழ்கியோ அல்லது நிலத்திலோ விழுந்ததை அல்லது காணாமல் போனது தெரியுமானால் இந்த மிதக்கும் பொருட்கள் அதன் இடத்தைக் காட்டிவிடும். ஒரு சில நிமிடத்தில் அங்கு சென்றால் அனைவரையும் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்குமல்லவா! அதே சமயம் சரியாக விமானம் தரையிறங்கினால் இந்த தானியக்கியை அணைத்துவிட வேண்டும்.      
            
உங்களுக்கு இது போன்ற யோசனை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாமே!  
*********************************