Pages

Wednesday, 17 May 2017

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 18.5.2017 கவியரங்கில் கவிஞர்களின் மின்படங்கள்..


மதிப்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே!
நமது அருமைக் கவிஞர்களின் இனிய கவிகளைச் செவி சாய்த்து விழாவினைச் சிறப்பாக நடைபெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 18.5.2017 அன்று நடந்த 
கவியரங்கில் கவிஞர்கள் கவி பாடும்போது எடுத்த சில மின்படங்கள் இதோ ..

எனது கவிதை இதோ ....
        தலைப்பு: தேமதுரத் தமிழோசை

தமிழ் வளர்க்கும் உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ் பாடும் உலகக் கவிஞர்களின் சங்கமம்
தமிழ்நாடு உலகின் முதன்மை அங்கம்
தமிழ் மொழி உலக மொழிகளில் தங்கம்.

அறிவுக்கு  விருந்தளிக்கும் நம் தமிழ்
உடலுக்கு மருந்தளிக்கும் நம் தமிழ்
வாழ்வுக்கு வளமளிக்கும் நம் தமிழ்.
வையகத்திற்கு உயர்வளிக்கும் நம் தமிழ்.

எட்டுத்திசைகளில் ஒலிக்கும் இசைத்தமிழ்
எட்டாத உயரத்தில் நிற்கும் இயற்றமிழ்
சொட்டும் தேனாய் இனிக்கும் நாடகத்தமிழ்
கிட்டாத புகழ் தரும் முத்தமிழ்.

கலையானாலும் தமிழில் வளர்ப்போம்
கவியானாலும் தமிழில் பாடுவோம்
கதையானாலும் தமிழில் உரைப்போம்
காதலானாலும் தமிழில் பகிர்வோம்.

தமிழ்க்காற்று தென்றலாய் வீசட்டும்
தமிழ் மழை அருவியாய்க் கொட்டட்டும்
தமிழ் நிலம் பசுமையாய்ச் செழிக்கட்டும்
தமிழ் விருந்து எந்நாளும் படைக்கட்டும்.
 
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!!
















































































































நன்றி , வணக்கம்...

Tuesday, 2 May 2017

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும் - பாரதிதாசன்

30.4.17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்க நிகழ்ச்சியின்போதுக் கலந்துகொண்ட கவிஞர்கள் மற்றும் அனைத்துப் பெரியோர்களுக்கும் எனது சிறப்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்தங்களது தமிழ்ப்பணி சிறக்கவும்வாழ்வில் வெற்றியும் வளமும்பெற எனது வாழ்த்துக்கள்.

30.4.17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்க நிகழ்ச்சியின்போது எடுத்த சில மின்படக்காட்சிகள் இதோ...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாக் கவியரங்கம்
மதுரை கங்காதரன்
நிகழ்ச்சியின்போது நான் வாசித்தக் கவிதை


தலைப்பு:
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச்
       செய்வதுவும் வேண்டும் -                              பாரதிதாசன்

சுடராய் ஒளிர்கின்ற செந்தமிழ்
சுவையாய் இருக்கின்ற தேன்தமிழ்
அகிலமே புகழ்கின்ற அருந்தமிழ்
அனாதையாய் அலைகின்றது செம்மொழியாய்.

மண்ணைப் பொன்னாக்கவும்
மனிதனைத் தெய்வமாக்கவும்
செந்தமிழைச் செழுந்தமிழாக்கவும்
செய்வதன்றோ தமிழர்கள் கடமை.

மலர்ந்த மலர் உதிரலாம்
முளைத்த மரம் வீழலாம்
உயிர்த்த மனிதன் இறக்கலாம்
உயிரானத் தமிழ் அழியலாமா?

காவியமாய்த் திகழ்ந்த நேற்றையத் தமிழ்
காட்சியாய் மாறிவிட்ட இன்றையத் தமிழ்
கனவாய்க் கலைந்திடுமா நாளையத் தமிழ்!
காணாமல் மறைந்திடுமா வருங்காலத் தமிழ்?

கல்லில் எழுதினால் புதைந்துபோகலாம்
காகிதத்தில் எழுதினால் கிழிந்துபோகலாம்
கணினியில் எழுதினால் காற்றிலும் வாழும்
காலமெல்லாம் தமிழ் அழியாமல் நிலைக்கும்.
             *************















































            *************