Pages

Monday, 17 September 2018

ஒரு பெண்ணும் ஆறு ஆண்களும் (பெண்களுக்காக)



ஒரு பெண்ணும் ஆறு ஆண்களும் (பெண்களுக்காக)
சிறுகதை
மதுரை கங்காதரன்
     
"எங்கு மக்கள் சிறு தவறு  செய்வதற்குக்கூட  தயங்கும்படியானச் சட்டமும்  அதிகாரமும் இல்லாமல் இருக்கின்றதோமுக்கியத் தீர்ப்புகளைப் காலாகாலத்தில் தராமல்  இழுத்தடிக்கும் நீதிமன்றங்கள்  இருக்கின்றதோ அங்கு  நீதிநேர்மைதர்மம்நியாயம்ஒழுக்கம்நிம்மதி  ஆகியவை எப்போதும் கேள்விக்குறியாகவே  இருக்கும்

'சாதனாஎன்றப் பெண்தன்னைப் பலாத்காரம் செய்ய முயன்ற ஆறுபேரைக் கைத்துப்பாக்கியால்  குருவி சுடுவதைப்போல் சுட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கும் நாள் அன்றுதான்.

அச்சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகள் உருவாக்கியதோடு பல கட்சித்  தலைவர்களையும்தலைவிகளையும்சமூகஆர்வலர்களையும்பொதுமக்களையும் ஒருவித  மாறுபட்ட தீர்ப்போடு எதிர்பார்த்துக் காத்திருக்கவும் செய்திருந்தது. நிற்க...

சில தினங்களுக்கு முன்னால் 'பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை எவ்வாறு தடுக்கலாம்?' என்பது பற்றி விழிப்புணர்வு கொடுத்த பெண் சமூகஆர்வலர் ஒருவரின் விவாதத்துக்குரிய கண்டனத்துக்குரிய காரசாரமான பேட்டி கொடுத்ததன் செயல் வடிவம்தான் இந்த வழக்கோ என்று நினைக்கும்படி தோன்றச் செய்திருந்ததுஅவருடைய கருத்துச்செறிவு அனைவரும் பலவாறு விமர்சிக்கும் அளவிற்கு இருந்தது. அந்தப் பேட்டிக்கும்  இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கின்றதா? இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

"உங்கள் பார்வையில் எதனால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றதுஎன்ற கேள்வியோடு தொடங்கியது அந்தப் பேட்டி.  

"நானும் ஒரு பெண்இன்றைக்குப் பலபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எனக்கு நன்றாகத் தெரியும்.  இப்போது இருக்கும் சட்டத்தைப்பற்றிக் குறைச்சொல்ல விரும்பவில்லை. அதனை நடைமுறைப்ப்படுத்துவதில் சிக்கலும், நடவடிக்கை எடுப்பதில் தொய்வு இருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டேத் தீரூவார்கள். சரிஅது ஒருபுறம் இருக்கட்டும்ஆண்டாண்டு காலமாக அகிம்சையை மக்களின் இரத்தத்தில் ஊறச் செய்துவிட்டார்கள்அதுமட்டுமா? 'ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுஎன்பதையும் மக்கள் மனதில் ஆழப்பதித்து- விட்டார்கள்அந்தவகையில் பொறுமையைக் காத்ததால்தான் இன்று சர்வசாதாரணமாகத் திருடர்கள் பயமில்லாமல் கொள்ளையடிப்பதோடு கொலைகளும் செய்யுமளவிற்குத் துணிந்துவிட்டார்கள்போதாக்குறைக்கு தூங்கிவழியும் நீதிமன்றங்கள் வேறு! திருடர்கள் இதுநாள்வரையில் நகைக்காகபணத்திற்காககாதலுக்காகவரதட்சனைக்காககாமப்பசிக்காக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பெண்களைக் கொடுமைகள் செய்துப் பலவழிகளில் கொலைகள் நடந்தேறியச் சம்பவத்திற்குச் சட்டப்படி நீதிமன்றங்கள்எத்தனை பேர்களுக்கு என்னென்ன தண்டனை கொடுத்திருக்கின்றதுதீர்ப்புகள் காலதாமதம் ஆகாக குற்றங்கள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும்!"

"அடுத்த கேள்விபெண்கள் திருடர்கள்வெறிபிடித்தவர்களிடமிருந்து எந்தவகையில் எளிதாகத் தங்களைக் காத்துக்கொள்ளலாம்?" 

"இன்றைய காலகட்டத்தில் திருடர்கள் எதற்குக் கத்திஅரிவாள்ஆசிட்துப்பாக்கிபலவகைகுண்டுகள் வைத்திருக்கிறார்கள்கொடிய வேலைகளுக்குத்தானேஎந்த ஒரு சாதாரணப் பெண்ணிடமாவது இந்தமாதிரி ஏதாவது இருக்கின்றதாஆனால் பெண்கள் ஆண்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி மட்டும் பெறவேண்டுமாம்இந்தக்காலத்துக்கு இப்படிப்பட்டப் பயிற்சியெல்லாம் ஒத்துவருமா?  மீறியும் பயிற்சி எடுத்துக்கொள்வதாக இருந்தால் ஆண்களிடத்தில்தான்  செல்லவேண்டும். அத்தகையப் பயிற்சியின்போதே சில ஆண்கள் அவர்களிடம் தகாதமுறையில் நடப்பதோடு அவர்களைக் கொடுமை செய்யும் சம்பவங்கள் நாடெங்கும் சிலஇடங்களில் மெளணமாய் நடந்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஏன் கல்விவிளையாட்டுக் கூடங்களில் உட்படஅத்தகைய நிகழ்வுகளைச் சிலர் கைபேசியில் படமெடுத்து அவர்களை மிரட்டுதோடு பலத்தொல்லைகளும் தருவதை பல ஊடகங்கள் வெளிச்சம்போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கின்றதுஆகவே பெண்களுக்குத் தற்காப்புப்பயிற்சியைவிட அவர்களின் பெண்மையைக் பாதுகாத்துக் கொள்ளச்  சிறியரகக் கைத்துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம் என்கிற சட்டம் வந்தால்தான் நாட்டில் பாலியல் வன்முறைகற்பழிப்புபாலியல் கொடுமைசெயின் பறிப்பதுதனிமையில் இருக்கும் பெண்களைத் தாக்கிக் கொலைசெய்யும் நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்!"

"கடைசியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கலாம்?"

"பல சிங்கங்கள் ஒருமானை வேட்டையாடி ருசித்துக் கொல்லுமாம்ஆனால் சட்டமோ அவர்களை விடுதலை செய்யுமாம் அல்லது சொற்ப தண்டனை கொடுக்குமாம் ஏனென்றால் சாட்சி இல்லையாம்அத்தகையச் சாட்சிகளை மிரட்டி அழிப்பதும் அவர்கள்தானேமேலும் அவர்கள் பணக்கார இனமாக இருந்தால் சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவடுவதும் அல்லது தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கும் வேலைதானே நடக்கிறது. சமீபகாலமாக அவ்வாறு அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றதுஇனிமேலும் இத்தகைய அநியாயங்கள் நிகழாமல் இருக்கவேண்டுமானால்சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவேண்டுமானால் கட்டாயம் பெண்களுக்கு கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைச் சட்டமாக்க வேண்டும்பாரதி இன்றிருந்தால்..
தற்காப்பு பயிற்சிமட்டும் போதாது பாப்பா
துப்பாக்கி பயிற்சியும் வேண்டும் பாப்பா"
இவ்வாறு தனது கருத்துகளைப் இப்பேட்டியின் மூலம் பதிவு செய்திருந்தார் அந்தப் பெண் சமூகஆர்வலர்.

நீதிமன்றம் முன்னெப்போதும் கண்டிராதவழக்கமான வழக்கிற்குச் சற்று மாறாக இந்த வழக்கை விசாரணை செய்துகொண்டிருந்தைக் கண்ட அனைவருக்கும் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

"உங்கள் பெயர் … ?" என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தனது விசாரணையைத் தொடங்கினார்.
குற்றவாளிக் கூண்டில் இருந்தவள் "சாதனாஎன்று பதிலளித்தாள்அவள் கண்களில் பிரகாசமும்உடம்பெல்லாம் பூரிப்பும் இருப்பதைப் பார்க்கின்றபோது இக்கொலைச் சம்பவம் அவளுக்குப் பயத்தைத் தருவதற்குப் பதிலாக ஆத்மதிருப்தி அடைந்தவளாக இருந்தாள்

"அவர்களைச் சுட்டது நீதானா?" என்று குறுக்குவிசாரணையை ஆரம்பித்தார் வழக்கறிஞர்.

"ஆம்நான்தான் சுட்டேன்!" என்றுத் துணிவோடு ஆணித்தரமாகச் சொன்ன பதில் நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

"ஏன் அவர்களைச் சுட்டுக் கொலைசெய்தாய்?"

"என்னை அவர்கள் கொடுமைப்படுத்திப் பலாத்காரம் செய்யப்பார்த்தார்கள். அதற்குள் சுதாரித்து என்னிடத்தில் இருந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு தகுந்தநேரத்தில் அவர்களிடமிருந்து என் பெண்மையைக் காத்துக்கொண்டேன்"

"என்ன இருந்தாலும் சட்டத்தை உன் கையில் எடுத்துக்கொண்டுஅவர்களுக்கு ஒரேநேரத்தில் நீ ஏதேச்சையாக இத்தகையக் கொடூரமான மரணதண்டனை கொடுத்தது தவறுஎன்று சட்டத்தைப்பற்றி வழக்கறிஞர் எடுத்துச் சொன்னார்

"அப்படியாஒருவேளை நான் அவ்வாறு செய்திருக்காவிடில் அவர்கள் என்னை அணுவணுவாக பாலியல் துன்புறுத்தல் செய்து என்னை உயிரோடு கொளுத்தியிருந்தால் அது உங்கள் சட்டத்திற்கு திருப்தியாய் இருந்திருக்கும் அப்படித்தானேஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய துன்பங்கள் சந்தித்தாலும் பரவாயில்லைஏன்கொலையே செய்யப்பட்டாலும் சட்டத்திற்கு அதுபற்றிக் கவலையில்லைகுற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் சாகவிடக்கூடாதுமுக்கியமாக செல்வாக்குள்ள குற்றவாளிகள் சாகும் நிலையில் இருந்தால்கூட எப்படியாவது அரும்பாடுபட்டு பிழைக்கச்செய்வதோடு அவர்களை ஏதோ ஒருவகையில் விடுவித்து மென்மேலும் குற்றத்தைக் கூட்டுவதுதான் சட்டத்தின் நோக்கமாஎங்கே ஒரேஒரு வழக்குமட்டும் உள்ளக் குற்றவாளி நாட்டில் ஒருவராவது இருக்கின்றனராகாரணம் ஒரு தீர்ப்புச் சொல்லுவதற்குள் அக்குற்றவாளி பல குற்றங்கள் செய்துமுடித்திருப்பார்அதில் நகைப்புக்குரிய ஏமாற்று விசயங்கள் எவைகளென்றால்ஒரு குற்றவாளிக்கு 'சாகும்வரையில் தூக்குத்தண்டனைஇரட்டை ஆயுள்தண்டனைதருவதுஎல்லாவற்றிற்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள்தான் காரணம்!" என்று வழக்கறிஞரின் கேள்விக்குச் சூடுவைத்தது பதிலளித்தாள் சாதனா

"எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனை நீதிமன்றம்தான் கொடுக்கவேண்டும்பாதிக்கப்பட்டவர் கொடுக்கவேக் கூடாதுஏனென்றால் அவர்கள் கொடுக்கும் தண்டனை சுயநலத்திற்காகவும்தனிப்பட்டக் காரணத்திற்காகவும் இருக்கலாமல்லவா?"  என்று வழக்கறிஞர் தனது வாதத்தை வெளிப்படுத்தினார்.

"அதுவும் உண்மைதான்ஆனால் ஒன்று நிச்சயம்பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்டத்தை அறிந்தவர்களாகவோஅறிவாளியாகவோகல்வியறிவுஞாபகச்சக்தி உள்ளவர்களாகநடந்த சம்பவத்தைக் கோர்வையாக எடுத்துச்சொல்ல முடியாதவர்களாக இருக்கலாம்அப்படியிருக்கும்போது எவ்வாறு சட்டம் அவர்களுக்கு நீதிநியாயம் கொடுக்க இயலும்தன்னைக் காத்துக்கொள்ளுவதையே இந்த நீதிமன்றம் குற்றம் என்றுசொல்வது வேடிக்கையாக இருக்கிறது"

"அதற்குத்தான் குற்றவாளிக்கு உதவிசெய்ய வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்குற்றவழக்கை நன்கு விசாரித்து தண்டனை கொடுக்க சட்டம் இருக்கிறதுஅதை நிறைவேற்ற நீதிபதிகள் இருக்கிறார்கள்!"     

"ஆகா... நல்ல விசாரணைநல்ல தண்டனைவாய்தா கொடுத்தே பழகிப்போன நீதிபதிகள்ஒரே குற்றவாளிக்கு ஒரு நீதிமன்றத்தில் விடுதலைமற்றொரு நீதிமன்றத்தில் தண்டனைஇதுவா சட்டம்இதுவா நீதியின் இலட்சணம்தங்களின் வாழ்நாள் முழுவதும் நீதிநேர்மைக்காக அலைந்து ஓய்ந்து தங்களிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் துறந்து  நீதிமன்றத்தை வெறுக்குமளவிற்கு அல்லது மறக்கும் நிலைமையில் அல்லவா வசதியில்லாதப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்கண்களைக்கட்டியுள்ள நீதிதேவதையின் கையில் தராசு இருப்பதன் அர்த்தம்பாதிக்கப்பட்டவர் பக்கத்தட்டில் உயிர் பலி அல்லது பொருளிழப்பு!   மறுபக்கத்தட்டில் சொற்ப தண்டனை அதுவும் காலம் கடந்தபிறகுஅல்லது சாட்சியம் இல்லாததால் விடுதலைஅதாவது இழப்பும் இறப்பும் ஒருபக்கம்.  மறுபக்கத்தில் விடுதலையும் தண்டனையும்இதுதானா உங்களது 'சட்டம் என்பது அனைவருக்கும் சமம்என்பதன் அர்த்தம்ஒரு பெண்பலியானால் அந்த குடும்பமே பலியாவதற்குச் சமம்அவ்வாறு பலியான குடும்பத்தின் வாரிசு இந்த சட்டத்தால் திருப்பித்தர முடியுமாஅல்லது அந்தக் குடும்பத்தைச் சட்டம்தான் காப்பாற்றுமா?"

"சட்டத்தில் மக்களே குற்றவாளியைத் தண்டிப்பதற்கு இடமில்லை!"

"அப்படியென்றால் குற்றம் செய்வதற்கு மட்டும் சட்டத்தில் இடமிருக்கு அப்படித்தானேஆமையைப்போல் செயல்படும் சட்டமும்குற்றங்களைச் செய்யத் தூண்டும் சட்டமும் சமுதாயத்தில் இருந்தால் மக்களால் நிம்மதியாய் வாழமுடியுமா?" என்று ஆணியடித்தாற்போல் நச்சென்று பதில் சொன்னாள் சாதனா

"ஒருவன் குற்றம் செய்வதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம்அதை நீதிமன்றம்தான் வாதிபிரதிவாதி என்று இருதரப்பினர்களின் வாதத்தை ஏற்று அதில் எத்தரப்பில் உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து  அறிந்து சட்டப்படிதான் தீர்ப்பு சொல்லமுடியும்என்று நீதிபதியும் சட்டநடைமுறையினை மீண்டும் எடுத்துரைத்தார்

"நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகள் காலதாமதம் ஆவதால்தான் பல குற்றவாளிகள் சுதந்திரமாக வெளிவந்துப் பல தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்எங்கேஇதுநாள் வரை நீங்கள் கொடுத்தத் தீர்ப்புகளால் குற்றங்கள் குறைந்திருக்கின்றனவாமாறாக உங்களது இழுத்தடித்துக் கொடுக்கும் தீர்ப்புகளால் குற்றங்கள் அதிகமாகின்றதே தவிர குறைவதாகத் தெரியவில்லைஎன்று சவால்விட்டாள் சாதனா.

"இப்படிப்பேசுவதால் நீங்கள் செய்த கொலைகள் நியாயப்படுத்த முடியாதுஎன்று பதிலளித்தார் வழக்கறிஞர்.

"ஆதாரம் வைத்துக்கொண்டு எந்தக் குற்றமும் நடைபெறுவது கிடையாது அல்லது குற்றம் நடக்குப்போது உடனே யாருக்கும் எந்தத் தகவலும் சரியாக அளிக்கவும் முடியாதுஎன் வழக்கை எடுத்துக்கொண்டால் குற்றம் நடக்கும் இடத்தில் இருந்தது நான் மட்டும்! என்னைத் தாக்க வந்தவர்கள் ஆறுபேர்அந்தவேளையில் நான்தான் என்னைக் காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைதைரியத்தை வரவழைத்து என்னைக் காத்துக்கொள்ளத் துணிவோடுச் சட்டத்தை என்கையில் எடுத்துக்கொண்டேன்அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆறுபேரையும் என்னிடத்தில் இருந்தக் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றேன்என்னைப் பலாத்காரம் செய்யத் துணிந்த அந்த ஆறுபேரும் இறந்ததிற்காக நீதிமன்றம்  என்னமோ அவர்களைத் தியாகிகள்போல்  பரிதாப்படுகின்றதுஅவர்கள் பொறுக்கிகள்பெண்களைத் துன்புறுத்துவதேத் தொழிலாகக்கொண்ட அயோக்கியர்கள்!  ஒருவேளை நான் அந்த ஆறுபேர்களால் பலாத்காரம் செய்து துன்புறுத்தி கொல்லப்பட்டிருந்தால் இந்த நீதிமன்றமோ காவல்துறையோ என்மீது அனுதாபப்பட்டிருக்குமாஇருக்கின்ற ஒரேசாட்சியும் இறந்துவிட்டால் நீதிமன்றத்துக்கும்காவல்துறைக்கும் ஏது வேலைஅப்படிப்பட்டச் சூழ்நிலையில் அத்தகையக் குற்றவாளிகளுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்இன்னும் சொல்லப்போனால் அத்தகையச் சம்பவம் நடந்ததையே மறைத்திருப்பார்கள்என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் சாதனா

"அவர்கள் பொறுக்கிகள்அயோகியர்கள் என்று எப்படிச் சொல்கிறாய்இதற்குமுன் இவர்களைத் தெரியுமா?"

"நன்றாகத் தெரியும்இரண்டு மாதத்திற்கு முன்பு என் அக்காள் இதே ஆறு பேர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாள்நல்லவேளையாக இதோ இந்த இன்ஸ்பெக்டரின் கடமை உணர்வால் அன்று நடக்கவிருந்த விபரீதம் தடுக்கப்பட்டதுஎன்று ஒரு திருப்புமுனையாக அவள் பேசியபோது நீதிமன்றமே சற்று அதிர்ந்தது

சாதனா கைகாட்டிய அந்த இன்ஸ்பெக்டரை உடனே விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி.

"இந்தப் பெண் சொல்வது சரிதானா?" என்று வழக்கறிஞர் இன்ஸ்பெக்டரிடம் வழக்கமானக் கேள்வியிலிருந்து ஆரம்பித்தார்.

"ஆம். இவள் சொல்வது உண்மைதான்இரண்டு மாதத்திற்கு முன் நான் ரோந்து பணியில் ஈடுபட்டியிருந்தபோது ஒரு வீட்டிற்கு முன்னே எப்போதுமில்லாமல் விலையுயர்ந்த ஆறு மோட்டார் பைக்குகள் நின்றிருப்பதைப் பார்த்தேன்எனக்கு சந்தேகம் வந்ததுஅப்போதுதான் இவளால் சுடப்பட்ட ஆறுபேர் ஒரு பெண்ணை அதாவது இவளின் அக்காளை துன்புறுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்விரைவாக உள்ளே புகுந்து அப்பெண்ணைக் காப்பாற்றிப் பார்ப்பதற்குள் அந்த ஆறுபேர் தப்பித்துவிட்டார்கள்நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களைக் காட்டிக்கொடுக்க இவளுடைய அக்கா  முன்வரவில்லை.  காரணம் இந்த சமுதாயத்தைக்  கண்டு பயம்தனக்கு நேர்ந்த அவமானம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று எண்ணியக் காரணத்தினால் காவல்துறையை நாடவில்லை.  ஓர் உண்மை பிறகுதான் தெரிந்ததுசுடப்பட்டவர்கள் இவள் அக்காளை மிரட்டியிருக்கிறார்கள் என்றுமிரட்டலோடு விடவில்லைமீறி காவல்துறைக்குச் சென்றால் இவளையும்இவளின் அக்காவையும் கொன்றுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்என்று நடந்ததை இன்ஸ்பெக்டர் விவரமாகச் சொன்னார்.

"உனக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்ததுஅந்த விவரம் சொல்வில்லையேஎன்று சாதனாவிடம் கேட்டார் நீதிபதி.

"இந்தத் துப்பாக்கி அந்த ஆறு பேரில் ஒருவனுடையதுதான் இருக்கவேண்டும்அவர்கள் என் அக்காளைப் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது எதிர்பாராதவிதமாக  அங்கு நுழைந்த இந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்த மாத்திரத்தில் அவசரம் அவசரமாக அந்த ஆறுபேர் தப்பிக்கும்போது யாரோ ஒருவன் இந்தத் துப்பாக்கியை அங்கு விட்டுச்சென்றதாக என் அக்காள் என்னிடம் கொடுத்தாள்அவர்களால் எங்களுக்கு எப்போதுவேண்டுமானாலும் ஆபத்து வரலாம்அச்சமயத்தில் இந்தத் துப்பாக்கிப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான் என் அக்கா கொடுத்த அத்துப்பாக்கியை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லைமேலும் ஒரு பெண்னோட  தற்காப்புக்கு இதைவிடச் சிறந்த ஆயுதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லைநாட்டில் மனிதஉருவத்தில் நடமாடும் கொடியவிலங்குகளை பயமுறுத்தவும் தேவைபட்டால் வேட்டையாடி கொல்லவும் இது பயன்படலாம் என்று நானே வைத்துக்கொண்டேன்என்று நீதிபதியின் சந்தேகத்தை தீர்த்தாள் சாதனாஅதை ஆமோதிக்கும்வண்ணம்   

"இவள் சொல்வது உண்மைதான்அந்தச் சம்பவம் நடந்த மறுநாள் ஒருவன் எனது துப்பாக்கி காணவில்லை என்று புகார் கொடுத்தான்அநேகமாக அவன் அந்த ஆறுபேரில் ஒருவனாக இருந்திருப்பான் என்று நினைக்கிறேன்என்று தனதுதரப்பில் இருக்கும் ஆதாரத்தை விளக்கினார் இன்ஸ்பெக்டர்.

எல்லாவற்றையும் விசாரித்த நீதிபதி தீர்ப்பு சொல்லத் தயாரானார்மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்புசலசலப்பு நிலவியதுசாதனாவின் அக்காள்தான் மிகுந்த துயரத்தோடு இருந்தாள்தன்னால் தன்கூடப் பிறத்தத் தங்கைக்கு இக்கதி ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்து மனம் நொந்தாள்.

ஆர்டர்... ஆர்டர் என்ற குறலுக்கு நீதிமன்றம் அமைதி காத்தது.

"சாதனாஉங்களுடைய தைரியம் மற்றப் பெண்களுக்குப் பாடமாகவும்நீங்கள் ஆறுபேரைச் சுட்டது தவறு செய்பவர்களுக்கு பயத்தையும்தயக்கத்தையும் உண்டாக்கும் என்று நான் நம்புகிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்என்றும், 'தன் ஆயுதத்தாலே தனக்குச் சாவுஎன்பதையும் படித்திருக்கிறேன்ஆனால் அதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்உன் அக்காவின் சம்பவத்திலிருந்துத் தப்பித்த இந்த ஆறுபேர் தங்கள் தவறுக்காக வருந்தித் திருந்தியிருந்தாலோ,  சட்டத்தைப்பற்றிய பயம் இருந்திருந்தாலோ அவர்களுக்கு இக்கதி நேர்ந்திருக்காதுஆனால் நீங்கள் சொல்வதுபோல்  சட்டம் பலவீனமாக இருக்கின்ற காரணத்தால்ஒருதடவை தவறானச் செயலில் ஈடுபட்ட அந்த ஆறுபேரைக் காவல்துறை கடுமையாக எச்சரிக்காமல் விட்டதாலும்சாதனாவின் அக்காள் தனக்கு நேர்ந்தகதியை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவராததாலும் இவர்கள் இரண்டாவது முறையாகக் குற்றம் புரிந்து இப்போது அவர்களின் துப்பாக்கியாலே தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்சட்டம் இவர்களைப் பார்த்து அனுதாபப்படுவதற்குப் பதிலாக உன்னுடைய வீரமானச் செயலைப் பார்த்து பாராட்டுகிறதுபெண்களுக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஏன் தரக்கூடாதுஎன்கிற கேள்வியும் அரசுக்கு முன்வைக்கிறதுஎன்னுடைய இறுதித் தீர்ப்பாக இப்பெண்னின் செயல் நியாயம்தான் என்பதில் சந்தேகமே இல்லை

மேலும் மக்கள் பெருக்கம் அதிகமாகிக்கொண்டே வருகின்றக் காரணத்தினாலும்தொழில்நுட்பம் வளர்கின்ற காரணத்தினாலும் அரசோ,  காவல்துறையோநீதிமன்றமோ நாட்டிலுள்ள எல்லோருக்கும் எம்போதும் முழுமையாகப் பாதுகாப்பு அளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றுபொதுமக்களே விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும்எல்லோரையும் குருட்டாம்போக்கில் நம்பிவிடக்கூடாது என்றும், வெளுத்ததெல்லாம் பால் என்று இருந்துவிடக்கூடாது என்றும் முடிந்தவரை அவரவர் உயிர்களையும்உடமைகளையும்உறவுகளையும் அவர்களே சிரத்தையுடன் காத்துக்கொள்ளவேண்டும் என்று மக்களுக்குக் கூறிக்கொள்கிறேன்கொள்ளை நடப்பதை எச்சரிக்கும்உயிர்காக்கும் பல தொழில்நுட்பக் கருவிகள் தனியாகவும்கைபேசியிலே குறைந்தவிலையிலும்சிலவகைகள் இலவசமாகவும் கிடைக்கின்றதுமக்கள் அவைகளைப் பயன்படுத்தி தேவையற்ற பிரச்சனைகளையும் குற்றங்களையும் குறைக்க உதவலாம்

அதேநேரத்தில் இதுபோன்ற வழக்குகளைக் காலம்தாழ்த்தாமல் உடனே விசாரித்துத் தீர்ப்பு சொல்லவேண்டும் என்கிற நல்லெண்ணத்தினாலும்முன்மாதிரியாகவும் இருக்கவேண்டும் என்கிற காரணத்திலும்குற்றத்தின் தன்மை நீர்த்துப் போகக்கூடாது என்கிறக் காரணத்தினாலும் இனிமேலும் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளிப்போடாமல் ‘குற்றவாளி’ என்று குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சாதானாவை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றுத் தீர்ப்பளிக்கிறேன்இந்தத் தீர்ப்பினால் பலகுற்றங்கள் குறையும் என்கிற நம்பிக்கையும்பெண்களை இந்தக் காவல்துறையும்நீதிமன்றமும் மக்களுக்குப் பலவகைகளில் சலிக்காமல் உதவிசெய்யும் நண்பனாக இருந்துக்காக்கும் என்கிற உத்திரவாதமும் மக்களுக்கு நீதிமன்றம் சார்பில் நான் உறுதியும் அளிக்கிறேன்"  

அத்தீர்ப்பு அனைத்துத் தரப்பினர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதை எல்லா ஊடகங்களும் உறுதிசெய்திருந்ததுபெண்கள் புதுமைப்பெண்களாக இருந்தால்மட்டும் போதாதுபுரட்சிப்பெண்னாகவும் மாறவேண்டும்!   

*****************


Wednesday, 5 September 2018

படித்தவர்களின் சதவீதம் சரியப்போகும் அபாயம்..

படித்தவர்களின் சதவீதம் 
சரியப்போகும் அபாயம்..
கட்டுரை 
மதுரை கங்காதரன் 
இப்போது நடைமுறைக்கு வந்துள்ளப் புதியப்பாடத் திட்டம் - சமச்சீர் கல்வி ! எப்படி உள்ளதென்றால் 'புலியைப் பார்த்துப் பூணை சூடுபோட்டுக் கொண்டக் கதை' என்றே சொல்ல வேண்டும். அதாவது கொடுத்திருக்கும் பத்து திருக்குறள்களில் ஒரு திருக்குறளின் முழு அர்த்தம் (meaning) தெரியாமல் இருக்கும்போது அவர்களுக்கு முப்பது திருக்குறள் பாடமாக வைத்தால் எப்படி இருக்கும்? ஏதோ புதிய பாடத்திட்டமானது,  கதைகளைப் படிப்பது போல எளிதாகப் படித்துவிடலாம் என்று நினைப்பவர்களில் யாராவது, உங்களுக்குப் பிடித்தப் ஏதோ பாடத்தைப்  பத்து பக்கங்கள் படித்துப்  புரிந்து மனப்பாடம் செய்து பாருங்கள்? அப்போது தான் அப்பாடத்தின் கடினத்தன்மை விளங்கும். கற்கும் அனைவரையும் அறிவாளிகளாய் ஆக்க வேண்டுமென்றால்.. கற்றனவற்றைப் புரிந்துகொள்ளும் படி இருக்கச் செய்திடல் வேண்டும். அதைவிட்டு விட்டு அதிகமாகப் பக்கங்களைப் படித்து மனப்பாடம் (Memorize) செய்ய வைப்பதிலா அறிவு வளரும்? 

அதாவது பட்டப்படிப்பில் படிக்க வேண்டியதைப் பள்ளிப் படிப்பில் படிக்க வைத்தால் அறிவு பெருகுமா? ஏற்கனவே இருந்தப் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்யாமல் உருப்படியில்லாத, ஒன்றுக்கும் பயன்படாத, எளிதாய் மறந்துபோகும் பாடங்களைப் புகுத்தினால் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. இப்புதியப் பாடத்திட்டம் மாணவர்களை மேலும் முட்டாளாக்கவா? பெற்றோர்களை ஏமாற்றவா? ஆக்கப் பூர்வமான ஆராய்ச்சிகளைச் (research) செய்யவிடாமல் இருக்கச் செய்யவா? அல்லது நாட்டின் நலனைக் குறைக்கவா? என்பதேப் புரியவில்லை. பாவம் மாணவர்கள்! அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அரைகுறையாகக் (below standard) கற்ற ஆசிரியர்களைக் கொண்டு எப்படித்தான் பாடங்களைப் புரிந்து கொண்டுப் படிக்கப் போகிறார்களோ என்றுத் தெரியவில்லை. 

அதாவது பாடத்திட்டமானது திறமையை (skill) வெளிப்படுத்தவும் அறிவை வளர்ப்பதாகவும் செய்முறைப் பயிற்சிகள் (practicals) நிறைந்ததாகவும், அதனால் புதிய சிந்தனைகளை (thoughts) வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். வெறும் மனப்பாடப் படிப்பு எதற்கு உபயோகப்படும்? கிட்டத்தட்டப் பாடங்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதாவது ஒரு எலெக்ட்ரான் எடை (mass of electron) 9.109 X 10 -31 kg யாம். அதிலும் அணுக்களைப் பற்றிய ஆழமான விவரம் தருகின்ற பாடங்கள்! இதை கற்பனைப் பண்ணிப் பார்க்க இயலுமா? 

அதோடு கணக்குப் பாடத்தில் நூற்றுக்கணக்கானச் சூத்திரங்கள் (formulas), வேதியியலில் நூற்றுக்கணக்கான வினைகள் (reactions) மற்றும் பல கோட்பாடுகள் (laws), கணினியில் பல்வகை புரோகிராம்கள் (program), விலங்கியலில் வாயில் நுழையாத சொற்கள் (Zoological names), அதேபோல் தாவரவியலில் எளிதில் மனப்பாடம் செய்ய முடியாத ஆங்கிலச் சொற்கள் (botanical names), பௌதீகவியலில் பல செய்முறைகள், கோட்பாடுகள், சூத்திரங்கள்! இதைத்தவிர தமிழ், ஆங்கிலப் பாடங்கள்! 

ஒவ்வொரு பாடமும் சாதாரணமாகப் படிப்பதற்கே நாள் கணக்கில் ஆகும். பின் எப்படி அதனைப் புரிந்து கொண்டு பிறகு அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்கு எத்தனை நாட்களாகும்? அதோடு எப்படி குறுகியகாலத்தில் தேர்வினை எதிர்கொள்ள முடியும்? 

எதெற்கெடுத்தாலும் மாணவர்களை நீட் (NEET) தேர்வுக்காகத் தயார் செயகிறோம் என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஆரம்பம் முதலே மருத்துவம் பிடிக்காதவர்கள்  கலை அறிவியல் (Arts and science) துறையில் சேர விரும்பும் மாணவர்கள் ஏன் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்? அவர்கள் படிப்பதற்கு சாதாரணப் பாடத்திட்டம் இருக்கின்றனவா? அல்லது நீட் மதிப்பெண்கள் கொண்டு எல்லா கல்லூரிகளில் சேர்க்கை நடந்தாலும் பரவாயில்லை..அதாவது சில ஆயிரம் மருத்துவ இடத்திற்காக பல்லாயிரம் மாணவர்களை நீட் எழுத வைப்பது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மேலும் பாட அலகுகளில் (in units) பாடம் ஒன்றும் (one type) அதில் கேட்கப்படும் கேள்விகள் வேறொன்றும் (another type) சம்பந்தம் (matching) இல்லாமல் இருப்பது எந்த வகையில் நியாயமோ? அதில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூகுளில் (Google search) தேடி தேடித் தான் பெறவேண்டும். நாம் ஒரு பதிலை எதிர்பார்க்கும்போது கூகுள் பத்திற்கும் அதிகமானப் பதிலைத் தருகின்றது. அவற்றில் எதை எடுத்துக்கொள்வது என்பது ஒரே குழப்பம். அப்படிப்பெறும் பதில்கள் புரிவது மிக மிகக் கடினம். அவைகள் பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் உள்ளது. புரிவதற்கு நேரம் மிக அதிகமாகச்  செலவாகிறது. இவ்வளவு கடினமாகப் படித்தும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் ஒன்று மிக எளிமையாக இருக்கும் (அதாவது எல்லோரும் கண்டிப்பாக தேர்வு பெறவேண்டும் என்பதற்காக) அல்லது பாடத்தில் இல்லாத கேள்விகளாக (Out of syllabus)  இருக்கும் அல்லது தவறான கேள்விகளாக (wrong question) இருக்கும். எப்படியும் இரக்க மதிப்பெண்கள் (graze marks) அதிகமாக இருக்கும்.  

அடிப்படைக் கல்வியில் பல கோளாறுகள் உள்ளதைச் சரிசெய்யாமல் புதிதுபுதிதாகப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் எவ்வித பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுநாள் வரைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயச் தேர்ச்சி இருந்ததால் பாடத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனது. மேலும் படிப்படியாக கல்விச்சுமையை ஏற்றியிருந்தாலும் பரவாயில்லை. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் பாடத்திட்டத்தினை மாற்றாமல் இப்போது ஒரேயடியாக இமயமலை அளவுக்கு சுமை கொடுத்தால் மாணவர்கள் தாங்குவார்களா? ஒன்பதாவது வரை ஜாலியாக இருந்த மாணவர்களால் பத்தாவது, +1 மற்றும் +2 தேர்வில் எவ்வாறு பொறுப்பாகப் படிக்க முடியும். பொழுது பூராவும் படித்தாலும் இப்போதுள்ள புதிய பாடங்கள் மனப்பாடம் செய்வது கடினம். அப்படி படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது அதைவிடக் கடினம். மேலும் பாடத்தில் பின்புறம் கேட்கும் பொதுவான கேள்விகள் கூட ஆசிரியர்களால் விளக்க முடியவில்லை. புத்தகத்தைத் திறந்தவுடன் மாணவன் 'எப்போடா ஓடலாம்' என்கிற நினைப்புதான் அவனுக்கு வருகின்றது.   

கொடுக்கப்பட்டிருக்கும் பாடங்களில் ஒரு பாடப்பிரிவில் இரண்டு மூன்று அலகுகள் (units) கடினமாக இருந்தால் பரவாயில்லை. எல்லா அலகுகளும் கடினமாக இருந்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்? இப்பாடத்திட்டம் யாருக்குப் பொருந்தும் என்றால் யார் உயர் ஆராய்ச்சி (higher resercher) செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு உகந்தது. அதாவது அப்படி பள்ளிக்கல்லூரியைத் தாண்டி படிக்க விரும்புகிறவர்கள் மிகமிகச் சொற்ப சதவீதமே. இதற்காக எல்லா மாணவர்களையும் படிக்க வைப்பதில் நியாயம் உண்டா? 

இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் பாடத்திட்டம் மிகமிக உயர்வகையைச் சேர்ந்தது. அதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்வதற்கே மிகக் கடினமான காரியம். அப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு எங்ஙனம் புரியும்? இப்போது 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்குப் பொதுத்தேர்வு (public exam) என்று சொல்கிறார்கள். அப்போதும் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதல் சதவீதம் தேர்ச்சி காட்டுவதற்காக திருத்துவதில் தாராளம் காட்டுவார்கள். அதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களால் வேலைவாய்ப்புக்கானப் போட்டித்தேர்வில் (competitive exams) , நேர்முகத் தேர்வில் (direct interviews) சரியாகச் செய்ய முடிவதில்லை. அதாவது மனப்பாடக் கல்வியால் பலன் ஏதுமில்லை. அதிக வசதியுள்ள நகர்புறங்களில் உள்ள மாணவர்களுக்கே இந்நிலைமை என்றால் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் நிலைமை எப்படி இருக்கும்? 

இன்னும் அப்பட்டமாக புதிய பாடத்திட்டத்திற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அதாவது ஒருவர் ஒரு வண்டியை பாதுகாப்பான முறையில் ஓட்டிப்பழக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஏனென்றால் அதனால் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்கலாம். அப்போது என்ன சொல்லித்தரவேண்டும்? வண்டியை எப்படி இயக்குவது? எப்படி கவனமாகத் திருப்புவது? நிறுத்துவது? சாலைவிதிகளைக் கடைபிடிப்பது? எப்படி எரிபொருள் நிரப்புவது? எப்படி பராமரிப்பது? இப்படி சிலவற்றை ஆழமாகச் சொல்லித்தந்தால் போதுமானது தானே? அதைவிட்டுவிட்டு கார்புரேட்டர் எப்படி வேலை செய்யுது? எப்படி என்ஜின் வேலை செய்யுது? அதனுடைய விதி மற்றும் பார்முலா என்ன? எப்படி ஹெட் லைட் கனெக்ஷன் கொடுக்கவேண்டும்? வயர் எந்த அளவு இருக்க வேண்டும்? என்ன வயர் போட வேண்டும்? அதன் பார்முலா என்ன? பிரேம் எந்த தடிமானம் இருக்கவேண்டும்? உட்காரும் சீட் எப்படி எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்படி சொல்லி கொடுத்தால் எப்படி இருக்கும்? இப்படி யாருக்கு சொல்லி கொடுக்கவேண்டும்? வண்டியை பற்றி ஆராய்ச்சி செய்தால் பலன் இருக்கும். ஆனால் எல்லோரும் இப்படி தான் படித்து வண்டி பழக வேண்டுமென்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் புதிய பாடத்திட்டம் இருக்கிறது. ஆகமொத்தம் கடைசியில் வண்டி பழகுவதைத் தவிர மற்ற எல்லாம் அரைகுறையாக படிப்பது என்பதே உண்மை.  

இதில் கூத்து என்னவென்றால் பாடங்களை வலைதளத்தில் (website) இருக்கும் யூடியூப்பில் (youtube) பார்க்கலாம் என்கிறார்கள். அதில் ஒரு தலைப்புக்கு பலபேர், அவர்களின் புரிதலுக்கேற்பச்  சொல்லித் தருகிறார்கள். அவற்றில் யார் சொல்வது புரிகிறது? என்று கண்டுபிடிப்பது கடினம். மேலும் பள்ளி ஆசிரியர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே! 

இதன் விளைவுகள் எப்படி இருக்குமென்றால், எவ்வாறு பொறியியல் கல்லூரியில் (engineering college) சேர்க்கை குறைய ஆரம்பித்ததோ அதேபோல் பள்ளியில் கூட நடக்கும். இதனால் பள்ளி கல்லூரிகளில் இடை நிறுத்தம் (drop out) அதிகமாகும். இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் (child labour) அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் பாடத்திட்டம் படவிளக்கம் அதிகமாக இருந்தாலும் செய்முறை பயிற்சிக்கான உபகரணங்கள் (equipment) அனைத்தும் எல்லாப் பள்ளியில் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படி இருந்தாலும் அதனை இயக்கும் திறமை (operating talent) எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்குமா என்பதும் சந்தேகமே. 

இவ்வளவு படித்தும் வேலைவாய்ப்பு எளிதாகக் கிட்டுமா என்பதும் உத்திரவாதம் இல்லை. அதோடு புதியவைப் படைக்கும் ஆற்றல் (creativity), மற்றவர்களுக்குச் சொல்லித் தந்து புரியவைக்கும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லாதபோது மாணவர்களுக்கு எவ்வாறு அறிவு வளரும். கல்வி கற்பது பொழுதுபோக்குக்காக மற்றும் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோர் பத்து சதவீதம் இருக்கலாம். ஆனால் 90 சதவீதம் படித்தால் வேலை கிடைக்கும். அதனால் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்கிற எண்ணத்தில் தான் படிக்கின்றனர். எப்பேற்பட்ட படிப்பு படித்தாலும் வேலை எளிதாகக் கிடைத்தபாடில்லை என்பதே இன்றைய கல்வியின் லட்சணம். அதாவது வேலைவாய்ப்புக்குத் தகுந்தவாறு பாடத்திட்டம் இல்லை. வேலைக்கு மனப்பாடப் படிப்பு பயன்படாது. செயல்முறைப் படிப்பே உகந்தது. அப்படிபட்ட கல்வியைக் கொடுப்பதற்குக் கல்வித்துறை தயக்கம் காட்டி வருகின்ளது. இந்நிலை எப்போது மாறுகின்றதோ அப்போது படித்த அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வேலை உறுதியாகக் கிடைக்கும். 

அனைவருக்கும் கல்வி என்கிற தாரகமந்திரம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பயன்படாமல் அது வியாபாரமாக மாறிவிட்டது என்பது மிகக் கொடுமையான விசயம். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நல்ல கல்வி கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கு அது கானல் நீரே.  மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் திறமைக்கும் அறிவுக்கும் மட்டுமே இனி மதிப்பு இருக்கும். எனக்கு பல சூத்திரங்கள் தெரியும். கோட்பாடுகள் அத்துப்படி. பல நூல்களை கரைத்துக் குடித்திருக்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தால் எவ்விதப் பயனுமில்லை. இப்போது படித்தவர்களின் நிலை, அவர்கள் சொற்பமாகப் படித்தவர்களின் கீழ் வேலை செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இதுதான் கல்வி கொடுக்கும் இலட்சணமா? இப்போது பல பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் படிக்க வராததால் அதில் பணியாற்றும் பேராசிரியர்கள் (professors), முனைவர்களின் (doctrate) வேலை கேள்விக்குறியாக இருக்கிறது? அவர்களுக்கு செய்முறைப் பயிற்சி இல்லாததால் வேறு துறையில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு தான். 

இப்போது இருக்கும் போட்டித்தேர்வில் நான்கில் ஒன்று குறித்தால் போதுமாம் (aptitude test). இதனால் சொந்தமாக நான்கு வரிகள் பேசவோ எழுதவோ இயலாதவர்களும் கூட தேர்வு பெறும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்களால் என்ன பயன் விளையும்? தினமும் மாற்றங்கள் நிகழும்போது அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? எப்படி அறிவை பெருக்கிக் கொள்ள முடியும். ஆகவே புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதனை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் தரமும் உயர்த்த வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இனி கல்விக்கு மதிப்பு இருக்கும். இல்லையேல் நாளடைவில் படித்தவர்களின் சதவீதம் மிகவும் சரியும் வாய்ப்பு அதிகமே.

இன்றைய காலகட்டத்த்தில் உலகளவில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றிற்கு முக்கிய காரணம் கல்வி வளர்ச்சி. ஆனால் இன்றைய கல்விப் பாடங்கள் காலமாற்றங்களுக்கு ஏற்ப இருக்கின்றனவா என்றால் கட்டாயமாக இல்லை. அதாவது உங்களுக்கு எளிமையாய் புரிவதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அதாவது அன்றாட வாழ்க்கையில் சைக்கிளோ, பைக்கோ, காரோ ஓட்டி பழகவும்  எப்படி வேலை செய்கிறது போன்றவைகளை சொல்லித் தந்தால் தானே வாழ்க்கைக்கு உதவும்.  விட்டுவிட்டு ஏரோபிளேன், ஹெலிகாப்டர், ராக்கெட் எப்படி வேலைசெய்கிறது? அதை ஓட்ட கற்றுக்கொடுத்தால் எத்தனை பேருக்கு அது உதவும்.  அதாவது மேலை நாட்டவர்கள் எப்போதோ கண்டுபிடித்ததை புத்தக வடிவில் காசாக்கிக் கொண்டு இருப்பதே உண்மை. அதனால் ஒரு சர் சி.வி.ராமனோ,  கணித மேதை ஸ்ரீ ராமாநுஜமாகவோ அல்லது டாக்டர் அப்துல் கலாம் ஆகவோ முடியவே முடியாது. அவ்வாறு ஆக்கவேண்டும் வேண்டுமென்றால் கல்வி முறையில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும். சிறிய வயதிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினால் ஒழிய முடியாது.  
**************************************