Pages

Friday, 10 March 2023

26.2.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 8 - அருந்தமிழே நம் அடையாளம் மற்றும் நூல்கள் வெளியீடு

 

மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்.

                                தலைப்பு : அருந்தமிழே நம் அடையாளம்

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில், கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், ச.லிங்கம்மாள், அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம .சமயக்கண்ணு, ம.ஜெய்சங்கர், கோ.சங்கரநாராயணன், மு.இதயத்துல்லா, .அழகையா, புலவர்.முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, இராமபாண்டியன், பொன்.பாண்டி, பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி " நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார்.






                      



அருந்தமிழே நம் அடையாளம்!

கவிஞர் இரா. இரவி

உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழே!

உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன் தமிழன்
உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை

இணையத்தில் கொடிகட்டி பறக்கும் தமிழ்
ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழே இணையத்தில் உச்சம்

அறம்வழி நல்வழி கற்பிக்கும் தமிழ்
அன்பை அகிலத்திற்கு பறைசாற்றிடும் தமிழ்

அகமும் புறமும் இலக்கியத்தில் பாடிய தமிழ்
அகத்திணை புறத்திணை அற்புதமாக உணர்த்திடும் தமிழ்

ஈடில்லா திருக்குறளை ஈந்திட்ட நம் தமிழ்
எங்கும் அறிந்திட்ட திருக்குறள் தந்த தமிழ்

உலக மனிதநேயத்தை உணர்த்திட்ட தமிழ்
உலகிற்கு பண்பாட்டை பயிற்றுவித்திட்ட தமிழ்

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ்
ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ்

போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ்
போரில் அநீதியை என்றும் விரும்பிடாத தமிழ்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமுள்ள தமிழ்
பண்டைக்காலம் தொட்டே சிறந்து வரும் தமிழ்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாடு
சமஉரிமையை மானிடற்கு கற்பித்த தமிழ்

அகிலம் அறிந்திட்ட அற்புத மொழி தமிழ்
அருந்தமிழே நம் அடையாளம் உணர்ந்திடுக!

















அருந்தமிழே நம் அடையாளம்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

தலையே  மனிதனின் அடையாளம்
தமிழே தமிழர்களின் அடையாளம்
தலையில்லா மனிதனுக்கு மதிப்பேது?
தமிழில்லாத் தமிழனுக்கு பெருமையேது?

அந்நிய மொழிகளைப் பேசினால் மகிழ்கிறாயே
ஆடிப்பாடி கைத்தட்டி புகழ்ந்து ஆராதிக்கிறாயே
பகட்டுக்கு உதவலாம் அந்நிய மொழிகள்
பழந்தமிழை மறக்கலாமோ பச்சைத் தமிழா!

குயில் கூவுவதை மறக்கின்றதா?
காக்கை கரைவதை வெறுக்கின்றதா?
குயில் கரைவதை ரசிப்பாயா?
காக்கை கூவுவதை விரும்புவாயா?

ரோசாவுக்குக் காப்பு முள்ளிருக்கு 
ராசாவுக்குக் காப்பு படையிருக்கு 
தேளுக்குக் காப்பு விசமிருக்கு 
தமிழுக்குக் காப்பு தமிழனே 

செம்மொழி கௌரவம் தமிழுக்கு உண்டு
செவ்வனே தொண்டாற்று தமிழுக்கு நன்று
தமிழே மூச்சென பாசாங்கை விட்டுவிடு
தெய்வத்திற்கு இணையாய் தமிழை மதித்துவிடு

*********************************************

  

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில், கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், ச.லிங்கம்மாள், அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம .சமயக்கண்ணு, ம.ஜெய்சங்கர், கோ.சங்கரநாராயணன், மு.இதயத்துல்லா, .அழகையா, புலவர்.முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, இராமபாண்டியன், பொன்.பாண்டி, பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி " நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார்.



************


தன்மானத் தமிழ் போற்றி! - முனைவர் இரா. வரதராசன் - நட்புரை : கவிபாரதி கு.கி.கங்காதரன்

 






தன்மானத் தமிழ் போற்றி! 

நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் 

நட்புரை  : கவிபாரதி கு.கி.கங்காதரன் 

ஜோஷிகா பதிப்பகம், 2/677 ஏ, நல்லசிவன் குறுக்குச்சாலை, வைகை சதுக்கம், வி.பி. சிந்தன் நகர், வேடர் புளியங்குளம், மதுரை. 

பக்கங்கள் : 74, 

விலை : ரூ.100 

********************




Tuesday, 14 February 2023

29.1.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 7 ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்

 


மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது .




மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10.00 மணிக்கு கவியரங்கம் நடந்தது 




மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது. 

செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் "ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும் " என்ற தலைப்பில் கவிஞர்கள் முனைவர் இரா. வரதராசன்,  இரா .கல்யாண சுந்தரம், மகா .முருகுபாரதி குறளடியான், கு.பால் பேரின்பநாதன், இதயத்துல்லா, இராமபாண்டியன், முனியாண்டி, அழகையா, ஆ.தனசிங், கவிதாயினிகள் ச .லிங்கம்மாள், நா.அனுராதா, சாந்தி திருநாவுக்கரசு, மு.ரித்திகா ஸ்ரீ ஆகியோர் கவிதை படித்தனர்.

கவிஞர் மு .இராம பாண்டியன் எழுதிய " உலகின் முதல்மொழி தமிழே " என்ற கட்டுரை நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய "பிறை நிலவுகள் " என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன. வருகை தந்த அனைவருக்கும் நூல்களின் ஆசிரியர்கள் நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள் . 

படங்கள் நன்றி இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் நன்றி.தினமலர் நாளிதழ்.29.1.2023

























ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!

-    கவிஞர் இரா. இரவி

உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்று
உரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று

எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்
உழவுத் தொழில் அழிந்தால் உலகம் இருக்காது

உயிர் வளர்க்கும் உணவு தரும் தொழில்
உயிர்கள் இன்றி உலகம் இருந்து என்ன பயன்?

தொழில்களில் எல்லாம் தலையாய தொழில் உழவு
தரணி முழுவதும் போற்றிப் புகழும் உழவு

தரணி செழிக்க உயிர்கள் வாழ உழவு
தன்னிகரில்லா மட்டற்ற உயர் தொழில் உழவு

ஒரு நாற்றால் வளர்வது ஒப்பற்ற பல மணிகள்
உழைத்தால் உயரலாம் உணர்த்துவது உழவு

விளைநிலங்களை எல்லாம் வீட்டடி மனைகள் விற்பனை
விளைச்சலுக்கு மூடு விழா நடத்துவது மூடத்தனம்

கரும்பு வயல் எல்லாம் கட்டடங்கள் முளைத்தன
கழனி எல்லாம் கற்சுவர்களாக உயர்கின்றன

நெல் விளைந்த நிலங்களில் நீண்ட நெடிய கட்டடங்கள்
நெல் இன்றி உணவின்றி வாடும் நிலை வருவது உறுதி

போற்றிட வேண்டிய உழவை மதிக்காத காரணத்தால்
பொன்மன உழவன் நொந்து நிலம் விற்கிறான்

அலைபேசியை உண்ண முடியாது உணருங்கள்
அலைபேசியை விட உண்ண உணவு அவசியமாகும்

நவீனம் என்ற பெயரில் நாகரீகம் என்ற பெயரில்
நல்ல நிலங்களை எல்லாம் அடுக்ககம் ஆக்குதல் முறையோ?

உயிர் வாழ உதவிடும் உணவு தரும் உழவை
உலகம் போற்றி கொண்டாடி மகிழ் வேண்டும்!

&&&&&&&&&&&&&&&

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

விதையில்லாமல் உழவில்லை 
உழவில்லாமல் உணவில்லை 
உணவில்லாமல் உயிரில்லை 
உயிரில்லாமல் உலகில்லை 

உழவே மண்ணைக் காக்கும்
மண்ணே பசுமையைக் காக்கும்
பசுமையே உயிரைக் காக்கும்
உயிர்களே உலகைக் காக்கும்

பசியைத் தீர்ப்பது உணவு
நோய்க்கு மருந்து உணவு
உடல் சக்திக்கு உணவு 
உலகைக் காப்பதும் உணவு  

உணவில்லா உடலோ சக்தியில்லா சவமாகும்
ஈடில்லா உழவே என்றென்றும் பலமாகும்
மாட்டுப் பொங்கலே தமிழருக்கு திருநாளாம் 
மட்டற்ற மகிழ்ச்சியே வாழ்வில் கொண்டாட்டமாம்.   

########################