Pages

Friday, 6 October 2023

24 .9.2023 மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் 15 - விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்- முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு

நாள் 24 .9.2023. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் 'விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம் "என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் ம .ஆறுமுகம் ( தென்காசி ) ,இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், புலவர் .முருகுபாரதி ,கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், செ.அனுராதா , மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,சாந்தி திருநாவுக்கரசு, மு .இராம.பாண்டியன், அழகையா, எம் .வேல்பாண்டியன் ஆகியோர் கவி பாடினார்கள் .முனைவர் வரதராசன் எழுதிய "கவிபாடும் காதலும் கிராமியமும் " கவிதை நூல் வெளியிடப்பட்டது.   

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .











 .


விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்!
                      கவிஞர் இரா. இரவி

அப்துல் கலாம் தொடங்கி வீர முத்துவேல் வரை
அனைவருமே தமிழர்கள் வானில் சாதித்தார்கள்
கோவை அருகே உள்ள கோதவாடி கிராமத்திற்கு
கீர்த்திகள் பெற்றுத்தந்தவர் மயில்சாமி அண்ணாத்துரை

சந்திரனுக்கு சந்திரயான் அனுப்பி ஆராய்ந்து
சந்திரனில் தண்ணீர் உண்டு என்று அறிவித்த தமிழர்
அப்பாவின் பெயரான அண்ணாத்துரையை
அன்றுமுதல் இன்றுவரை இணைத்துக் கொண்டவர்

அறிவியல் கட்டுரைகள் வடித்திட்ட பண்பாளர்
அறிவார்ந்த உரை நிகழ்த்திடும் பச்சைத்தமிழர்
விண்வெளி நடுவத்தின் இயக்குநராக இருந்தவர்
வியக்க வைத்த தமிழர் கைலாசவடிவு சிவன்

முப்பத்திமூன்று ஆண்டுகளாக செயற்கைக்கோள்களில்
முத்தாய்ப்பான பணிகளை ஆற்றியவர் சிவன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
முதலில் முடித்து பின்னர் சென்னையில் பயின்றவர்

நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளை
நாயகனாக உதித்து வளர்த்தவர் தமிழர் சிவன்
சந்திரயான் மூன்று உலக சாதனையை தமிழர்
சத்தமில்லாமல் நிகழ்த்தியவர் வீர முத்துவேல்

விண்கலத்தின் மின்னணு அதிர்வுகள் பற்றிய
வியக்க வைக்கும் கட்டுரை வடித்து புகழ்பெற்றவர்
திட்டமிட்டு நேர்த்தியாக செயல்பட்டதால்
திட்டஇயக்குநராக பதவிக்கு உயர்த்தியது

தமிழ்வழியில் ஆரம்பக்கல்வி பயின்று வந்தால்
தரணியில் சாதிக்கலாம் மெய்ப்பித்த தமிழர்கள் வாழ்க!
                                        ************












புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

அணு  தொடங்கி அண்டம் வரையில்  
நிலம் தொடங்கி நிலவு வரையில்  
அறிவியல் தொடங்கி ஆன்மிகம் வரையில்  
அற்புதமான செயல்கள் எத்தனை எத்தனை! 

எத்துறையிலும் காணலாம் தமிழர்களின் எழுச்சி  
அத்துறைகளில் இருந்திடும் அசாத்திய வளர்ச்சி   
விண்வெளித்துறையிலும் தமிழர்களின் புரட்சி     
விண்ணளவுக்கு வெற்றிகளைக் குவித்ததே சாட்சி     

இசுரோவின் சந்திராயன் மூன்று விண்ணில் பாய்ந்தது      
உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது
நிலவின் தென்துருவத்தில் ரோவர் இறங்கியது 
உலகிலேயே முதல் நாடென்று சரித்திரம் படைத்தது 
  
இசுரோவுக்கு கிடைத்த வெற்றி மூன்றாவது முயற்சியில்
முதலில் சந்திராயன் 1 நிலவை சுற்றியதோடு நின்றது  
இரண்டாவது சந்திராயன் 2 நிலவைத் தொடத் தவறியது 
மூன்றாவது சந்திராயன் 3 துல்லியமாய்த் தரை இறங்கியது  
  
இசுரோவில் பணியாற்றும்  விஞ்ஞானிகள் 
ஈடில்லாப் பெருமை சேர்க்கும் வித்தகர்கள்    
அளப்பரிய ஆற்றல் கொண்ட மேதைகள்   
அயராது கடினமாக பாடுபடும் அறிவாளிகள்  

இசுரோவின் பணி இத்தோடு ஓயவில்லை 
ஆதவனை ஆராயும் பணியும் தொடர்கிறது 
இசுரோ தமிழர்களை இருகை கூப்பி வணங்குவோம் 
இனிமேலும் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம் 
*************************** 

Friday, 15 September 2023

27 .8.2023 மாதுரைக் கவிஞர் பேரவை -14 - தாய்மொழிக் கெல்லாம் தாய்மொழி தமிழே! - முனைவர் இரா.வரதராசன் - புத்தக வெளியீடு

 






நாள் 27 .8.2023. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துனைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் 'தாய்மொழிக் கெல்லாம் தாய்மொழி தமிழே!' "என்ற தலைப்பில், மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அஞ்சூரியா க .செயராமன், மு .இதயத்துல்லா, புலவர் .முருகுபாரதி, பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,சாந்தி திருநாவுக்கரசு, இராம.பாண்டியன், நா .குருசாமி, எம் .வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை படித்தனர். . துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன் எழுதிய 'மணக்கும் கவிதை பூக்கள்' நூல் வெளியிடப்பட்டது . புதுவை கவியரங்கில் " கலைஞர்" பற்றிய கவிதை பாடி நூலும், பாராட்டு சான்றிதழும் பெற்ற மாமதுரை கவிஞர் பேரவையைச் சேர்ந்த கவிஞர்பேராசிரியர் சக்திவேல் ,கவிதாயினி ச .லிங்கம்மாள், கவிஞர்மு .இதயத்துல்லா, கவிஞர்அஞ்சூரியா க .செயராமன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர் .ஊடகத்துறையில் தமிழ் விருது பெற்ற கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசும் பாராட்டுப் பெற்றார் .படங்கள்: நன்றி புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன் .



தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!
- கவிஞர் இரா. இரவி
*****
தாயின் வயிற்றிலிருக்கும்போதே கற்கும் மொழி
தாய்மொழி போல் மற்ற மொழி புரிவதில்லை!
தாய்மொழியில் சிந்தித்தால் சாதனைகள் புரியலாம்
தாய்மொழியில் படித்தவர்கள்தான் சாதனையாளர்கள்!

மயில்சாமி அண்ணாத்துரை படித்தது தாய்மொழியில்
மட்டற்ற அறிவியலாளர் சிவன் பயின்றதும் தாய்மொழியே!
மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தாய்மொழியில்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தமிழ் பயின்றால் !

உலகமொழிகளில் அனைத்திலும் தமிழ்சொற்கள்
உலகிற்கு சொற்கள் தானம் தந்த மொழி தமிழ்மொழி!
ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்
அந்நிய மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்கள்!

சந்திரயான்களின் சாதனையாளர்கள் பயின்றது தாய்மொழி
சாதிக்க உற்றுளி உதவியது உன்னத தாய்மொழி!
வனிதா சுப்பையா, அருணன். வீர.முத்துவேலன்
வழிவழியாக பயின்றது ஆரம்பக்கல்வி தமிழில் !

சந்திரயான் சாதனைகளுக்கு காரணம் தமிழ்மொழி
சகலரும் அறிந்திடுங்கள் அற்புத மொழி தமிழ்மொழி!
உலகில் எல்லா மூலையிலும் ஒலிப்பது தமிழ்மொழி
ஒரு நாடு கூட தமிழ் ஒலிக்காத நாடே இல்லை!

உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலமாக விளங்குவது தமிழ்மொழி!
தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே முதன்மை
தாயைப்போல காத்திடுவோம் நம் செம்மொழி தமிழை!

*****************













தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

நதிகளுக்கெல்லாம் தாய்நதி யாதென
நாம் யாவரும் அறியார் 
தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழென
தரணியில் யாவரும் அறிவர்.

நடைபெறும் தொல்பொருள் அகழ்வாய்வு
நற்றமிழே தொன்மைக்கு ஆதாரம் 
அறிஞர்களின் பன்மொழிக்கூறு ஆய்வில்
அருந்தமிழின் வேற்சொற்கள் ஏராளம் .

ஆதித்தமிழ் அர்த்தமுள்ள மொழி
எளிய உச்சரிப்புள்ள எளிய மொழி
அழகு வடிவமுள்ள அழகு மொழி
இனிமை ஒலியுள்ள இனிய மொழி

செம்மொழி தரத்தில் வளர்ந்த தமிழ்
சிறப்பு இழந்து தேய்ந்து வருகின்றதே 
தமிழின் உச்சரிப்பும் கலப்பும் கேலியாகுதே 
தமிழுக்குத் தமிழனே எதிரி ஆகலாமா? 

கண்டுகொள்ளாத மொழிகள் பற்பல
காலாவதியாகி காலத்தில் புதைந்தனவே
கவனித்தில் கொண்டு தமிழைக் காப்பாற்று
கொஞ்சமேனும் தமிழின்பால் அக்கறை செலுத்து...
                                           ***************